மலர் -26

மலர் -26 

“எனக்காகத்தான் வந்துருக்கியா ? எனக்காக அழுதியா வரு ?”

அவள் முகத்தை ஆராய்ந்தான். அவள் பதில் சொல்லவில்லை. நகர்ந்து போனவள் கையை பிடித்துக் கொண்டான். “சொல்லு வரு”

“சார்! கையை விடுங்க சார்” 

விட்டு விட்டான். அவள் பதில் சொல்லவில்லை என்றாலும் அவனுக்குத்தான் பதில் தெரியுமே ?

புது போனுடன் பீ ஏ அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றார். 

அவரிடம் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தான். இவளுக்கு தலை வலியே வந்து விடும் போல இருந்தது. 

“சார்! நீங்க டிபன் சாப்பிடணும்.”

“இதோ வரேன்! இதோ வரேன்!” இப்படியே ஒரு மணி நேரம் ஆக்கி விட்டான். அருண் வந்ததால் இவள் தப்பித்தாள் .

அவனுக்கு இடது கையால் உண்ண வரவில்லை. இவளே ஊட்டி விட்டாள் . இவள் முகத்தை அவன் ஆராய்ந்துக்கொண்டிருந்தான். தாத்தா பாட்டி வந்தார்கள். 

தனக்கு ஒன்றும் இல்லை என்று அவர்களை  தேற்றி அனுப்பினான். அவன் மனைவியே அவனை  கவனித்துக் கொள்வதால் அவர்களும் வீட்டிற்கு செல்ல முடிந்தது. ஒரு வரம் அவன் அங்கு இருக்கும்படி இருந்தது. 

 

   மனசு சரியில்லை என்று இரு சக்கர வண்டியில் நெடு தூர பயணம் சென்று திரும்பியபோது எதிரில் ஒரு நாய் வந்ததால் சட்டென பிரேக் போட்டதில்  நிறுத்த முடியாமல் சறுக்கி விழுந்தான்.  இதோ ஆனந்த் மருத்துவமனைக்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வலது கை எலும்பு முறிந்திறுந்தது. வண்டியின்  வேகமும் கணமும் தாங்காமல் இடது கால்  சதை பிய்ந்திறுந்தது. இடது பக்கம் முகமும் தரையில்  தேய்த்து  நல்ல அடி.

ஆனால்  இந்த நான்கு  நாட்களில் அவனிடம் உடலளவளிலும் சரி மனதளவிலும் சரி நிறைய  மாற்றங்கள்  வந்திருந்தன. ஏனோ இப்போதெல்லாம் அமிர்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனின் குறு குறு பார்வை இவளுக்கும் பிடித்திருந்தது. கல்லூரி நாட்களில் அனுபவிக்காத ஏதோ ஒரு உணர்வு. ‘அவர் என்ன பாக்கறாரா ?’ மனம் அவ்வப்போது யோசித்தது. தானாகவே கைகள் உடையை சரி படுத்திக் கொண்டன. அடிக்கடி கண்ணாடி பார்க்க வேண்டும் போல இருந்ததது. பல பேரின் குறு குறு பார்வையை கடந்து வந்தவள்தான். ஆனால் இது புதியது. இன்னும் இன்னும் வேண்டும் போல இருந்தது. பார்த்தான் என்றால் அவஸ்தையாக இருந்தது. பார்க்கவில்லை என்றால் “எப்ப பார்ப்பாரு ? ஏன் பாக்கல? மூஞ்சி அசிங்கமா  இருக்கா? எண்ணெய்  வழியுதா?’ மனம் ஏதேதோ யோசித்தது. 

எந்த தப்பும் தவறும் இல்லாமல் அவனின் ரிப்போர்ட்டை எழுதுவதே பெரும்பாடாக இருந்தது. இரவு நேரத்திற்கு வரும் நர்ஸ் சற்று  வயதானவர் என்பதால் இவர்களின் காதல் விளையாட்டை  அவரும்  சற்று ஆர்வமாகவே பார்க்க ஆரம்பித்தார். இளம் காதல் ஜோடிக்கு வழி விட்டு அவர் அந்த பிளோரின்  ரிசெப்ஷனில் அமர்ந்து  கொண்டார்.

“அக்கா! இந்த ரிப்போர்ட் கொஞ்சம் சரியா இருக்கான்னு பாருங்களேன்.”

“ஏன் அம்ரு? நீதான் எல்லாத்தையும் கரெக்ட்டா செய்வியே ?”

வேண்டுமென்றே ஒன்னும் தெரியாதது போல கேட்டார்.

“இல்ல இருந்தாலும் ஏதாவது தப்பு இருக்குமான்னு..”

ஒரு சில சின்ன தவறுகளை சரி படுத்தினாள் .

“ரொம்ப தேங்க்ஸ் கா!”

“புருஷன் இவ்ளோ ரொமான்டிக்கா பார்த்தா யாருக்குத்தான் தப்பு வராது ?”

அவளின் சிவந்த கன்னத்தில் லேசாக தட்டினாள்  பெரியவள். 

வெட்கத்துடன் அறைக்கு ஓடி வந்து விட்டாள் .

மனம் படபடத்தது. அவங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம் ?  மனக்  குதிரை தறி கேட்டு ஓடியது. அவள் அதை இழுத்து பிடிக்க விரும்பவில்லை. அவள் அதை ரசித்தாள். அவளை அவன் ரசித்தான்.

 

முதல் சில நாட்கள் இவள் தான் அவனுக்கு லுங்கி மாற்றி விட்டாள். வீறு யாaரும் தன்னைத் தொடக் கூடாது என்பது மகாராஜாவின் கட்டளை . அவள் அவனுக்கு உதவி செய்யும்போது, வேண்டுமென்றே அவள் முகத்திற்கு அருகில் வந்து நிற்பான். 

“வயத்துல கிஸ் பண்ணிடாத வரு. நான் ரொம்பப் பாவம் “

“ஆக்சிடன்ட் ஆனதுல இவருக்கு மண்டைல ஏதாவது ஆகிடுச்சா?”

“பாதிப்பு மண்டைல இல்லடி. மனசுல.

 பெருமூச்சு விட்டு நிமிர்ந்தவள் கன்னம் தாங்கி , ” நீ இனிமே மனசுல நினைக்கறதுக் கூட எனக்கு தெரிஞ்சுடும்” குறும்புக்காரனாக கண் சிமிட்டினான். 

 இப்போதெல்லாம் தானாகவே லுங்கி மாற்ற ஆரம்பித்திருந்தான். ஆனால் சட்டை போட்டுக் கொள்ள இவள் உதவி கட்டாயம் தேவை. அவள் அருகே  வந்து உடை மாற்றி விடும்போது  இவன் மனம் காற்றில் பறந்தது. அவளின் மூச்சுக்காற்று  இவன் மூச்சில் கலந்தது. 

“என்னடி இவ்ளோ கிட்ட வர ?”

“வேற எப்படி கை மாத்தி சட்ட போடறது ?” சொல்லிக் கொண்டே சற்று நகர்ந்து கொண்டாள் . 

“வரு நீ மூச்சு விட்டா  தென்றலா இருக்கு  நகர்ந்து போகாதடி” அவள் கையை பிடித்து அருகில் இழுத்துக் கொண்டான். 

அவனின் முதல் தீண்டல். கேட்கவும் வேண்டுமா ? மங்கையவள் மேனி சிலிர்த்தாள். 

இருப்பினும் அவனின் பிடியில் அன்று இவள் அடி  வாங்கிய சம்பவம்தான் தவறான நேரத்தில்  நினைவுக்கு வந்தது. 

“யாரு மூச்சு விட்டாலும் கார்பன் டை  ஆக்சைடுதான் வரும். தென்றல் வராது”

அவளின்  பதிலை ரசித்தவன் முகத்தில் இருந்து என்னை பார் என்று மீசை தாடிக்குள் இருந்த முத்து  பற்கள் பளீரென பல்லைக் காட்டியது.

சற்று நேரம் கழித்து அவனுக்கு முகத்தில் அடி  பட்டிருந்ததில் மெதுவாக மருந்தை தடவினாள் .

“வலிச்சா சொல்லுங்க சார்”

“ஏன் கிஸ்  பண்ணுவியா ?”

சொன்னவன் சட்டென அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“என்ன சார் இது?” அதட்டலாக அவள் சொன்னாலும் அவனுக்கு காமெடி போலீசாக தான் தெரிந்தாள்

“எதுக்கு என்ன திட்டற? உன்னோட கன்னம் தான் வந்து அன்னிக்கு என்னை அடிச்சியே இப்ப எனக்கு கிஸ் பண்ணுன்னு கேட்டுச்சு. அதான் முடியாதுன்னு சொல்ல முடியல “

இந்த திடீர் தாக்குதலில் அவள் கைகள் ஒரு நொடி நின்று பின் மீண்டும் வேலையை செய்தது. 

முதலில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அமிர்தா  தன்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தாள். இதற்கு மேல் எந்த ஏமாற்றத்தையும்  அவளால் இனி தாங்க முடியாது. காதல் கணவனா? ஆனந்தனா ? என்றுமே நடக்காது. அவன் சொன்ன படியே அவனின் காதல் என்றுமே ரெஜிதா தான். இளகி இருந்த மனதை அவனுக்கு எதிராக திருப்புவதற்கு அவள் படாத பாடு பட்டாள் .   

சில நேரம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விடாதா என்று மனம் ஏங்கத்தான் செய்தது. சில நேரம், கெட்ட நேரம் வரும்போது வரட்டும் இப்போதைக்கு இதை மகிழ்வுடன் அனுபவிப்போம் என்று தோன்றியது. 

முரளியிடம் சொல்லி சற்று நல்ல  துணிகளாகவே அடர் நிறங்களில் கொண்டு வரச் சொன்னாள் .  அவனுக்கு புடவை கட்டினால்தான் பிடிக்கும். பாட்டியின் வாய்  மொழி மூலம் அறிந்த செய்தி. அதனால் புடவையை கட்டிக் கொண்டாள் .

“என்ன வரு டெயிலி புடவையை கட்டிக்கற ? எனக்காகவா ? “

“இல்லை!” என்று காண்பிக்க மறுநாள் சுடி கொண்டு வரச்  சொன்னாள் . காட்டன் துணியோ துவைத்ததில் டைட்  பிட்டிங்காக மாறி போய் இருந்தது. அது அவளின் அங்க அடையாளங்களை அழகாக எடுத்துக் காட்டியது.

“வரு நீ புடவை கட்ட வேணாம் இந்த மாதிரி சுடியே போடு”

ஏன்? குரல் கோபத்தை காட்டினாலும் கண்களும் உதடுகளும் ரசனையையே காட்டின. 

“பின்ன வெளில வாசல்ல  போனா கண்ணுக்கு விருந்தா நாலு பொண்ணுங்கள பாக்கலாம். இங்க நீ மட்டும்தானே ? கிடச்சத  அனுபவிக்கலான்னுதான் “

“அதானே நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களே?”

“புருஷன திருத்தறது பொண்டாட்டி கைலதான் இருக்கு”

கன்னங்கள் சூடானது. மனதை திருப்பிக் கொண்டு வேலைச் செய்வது போல பாவ்லா  செய்தாள் .

நடுவில் ஒரு நாள் பவித்ரா வந்தாள் . 

கை  நிறைய பூக்களுடன் வந்தாள் . 

“வா! வா! இப்போதான் நா ஒருத்தன் இருக்கறதே  ஞாபகம் வந்ததா ? “

“டேய் சாரி டா! வேர்ல்ட் எக்கனாமிக் போரம்  மீட்டிங் போய்ட்டேண்டா ?”

“தனியாவா?”

“இல்ல நானும் மதனும்..”

“ஓ ! “அந்த ஓ  வில் நிறைய அர்த்தம் இருந்தது.

“மீட்டிங்காக போனியா இல்ல மதனுக்காக  போனியா?”

“என்னடா வாய்  நீளுது”

“எல்லாம் எங்களுக்கு தெரியும் அடங்குடி.”

“ஏன் நீ மட்டும் இங்க பொண்டாட்டியோட ரொமான்ஸ்  பண்ணறது எங்களுக்கு தெரியாதோ ?”

“இங்க என்னடா நடக்குது?” என்று அவர்கள் இருவரையும் அமிர்தா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேறு ஒரு சமயம் அவள் அவனுக்கு கைகளில் ட்ரெஸ்ஸிங் மாற்றிக் கொண்டிருந்தாள். இப்போதும், அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 

மறு கையை கன்னத்தில் ஊன்றி பார்த்துக் கொண்டிருதவனிடம், 

“சார்! கொஞ்சம் வலிக்கும், பொருத்துக்குங்க” என்றாள் . அவனுக்கு காதில் எதுவும் விழுந்ததாகவே தெரியவில்லை. 

அழகிய நெற்றி அதில் உச்சியில் குங்குமம் வைத்திருந்தாள் . ஏனோ அதில் தான் குங்குமம் வைத்து நெற்றியில் முத்தமிட வேண்டும் போல இருந்தது. செயற்கை முறையில் புருவங்களை வில்லாக ட்ரிம் செய்திருந்தார்கள். நடுவில் பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் அழகிய வட்ட பொட்டு . அதன் கீழ் சிறியதாக கலர் சாந்தில் ஒரு சின்ன டாட்.

“உன்னை குத்தி விடுவேன்” என்று கூறிய மூக்கு. “நான் உனக்குத்தான்” என்றது  கண்ணுக்கு கீழ் இருந்த குட்டி மச்சம். வேகத்திலும் விவேகத்திலும் என்னை மிஞ்ச முடியாது என்றன இங்கும் அங்கும் அசைந்த  கரு வண்டு  விழிகள். 

“இதழில் கதை எழுதும் நேரமிது”

நேரம் கெட்ட  நேரத்தில் சினிமா வரிகள் காதில் வந்து தொலைத்தது.

கண்ணுக்கே தெரியாத குட்டி கம்மலில் குட்டி ஜிமிக்கி., நான் அழகா இருக்கேனா? என்று கேட்டது. 

“வலிக்குதா சார்” படபடப்பாக கேட்டாள் .

“நீ எவ்ளோ அழகா இருக்க அமிர்தா ?”

சம்மந்தமே இல்லாத பதிலில் கடுப்பானவள் “ம்ம் அது இப்போதான் தெரியுதா ?”

“அது சரி நான் அப்பவே ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரம் நமக்கு ஹனி மூன் முடிஞ்சு குட்டி பாப்பா வந்துருக்கும்.” 

“ம்!” பெரு மூச்சு விட்டான். 

“அதனால ஒன்னும் இல்ல. இப்பவும் நான் ரெடிதான். டிஸ்சார்ஜ் ஆனதுக்கு அப்புறம் எங்க போகலாம் நீயே  சொல்லு”

“என்னமா என்ன சொல்லறான் என் பேரன் ?” கேட்டுக் கொண்டே வயதானவர்கள் உள்ளே வரவும் பேச்சு மாறிப் போனது.

 அவனின் பேச்சு இவளுக்கு மூச்சானது. இனிய கற்பனைகளில் வலம் வந்து கொண்டிருந்தாள். இவனுக்கு பிடித்த உணவுகளை அன்னையிடம் செய்ய சொன்னாள் . வழக்கம்போல ரசமும் பருப்பு துவையலும் முரளி கொடுத்திருந்தான். அவள் டப்பாவை திறந்ததுமே  மெதுவாக கீழே இறங்கி வந்தவன் அவளிடம் இருந்து பிடுங்கித் தின்ன தொடங்கினான். “அசோ நான் எச்சல் பண்ணிட்டேன்” அவள் சொன்னது  அவனுக்கு எங்கே காதில் விழுந்தது? ஒன்றுமே நடக்காதது போல தண்ணீரை குடித்துவிட்டு பெரியதாக ஒரு ஏப்பத்தை விட்டு அமைதியாக கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

மறு  நாள் தேங்காய் சாதம் . அதையும் இவன் காலி செய்து விடுவான் என்று எதிர் பார்த்தாள் .

“நீங்க  வேண்ணா  இதை சாப்பிடுங்க உங்களுக்கு வர்ற சாப்பாடை நான் எடுத்துகிறேன்”

“ப்ச்! வேணாம் நீயே  சாப்பிடு”

“ஏன் புடிக்காதா ?”

என்ன சொல்லியிருப்பான்..

முள் மலரும் …

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!