மலர்-37

 

 

மலர் -37

“ரொம்ப டயர்டா இருப்ப. வா தூங்கலாம்”

  இவளுக்கு ஏதோ ஒரு ஏமாற்றம் . கோபமும் இயலாமையும் அழுகையும் முட்டிக் கொண்டு வந்தது. அதை அவனிடம் காண்பிக்கவும் முடியாது. இன்னமும் அவளுக்கு அவன் மீது பயம்தான். 

 சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருந்தாள். சற்று நேரத்தில் அவனை ஒட்டி  படுத்துக் கொண்டாள் . அவனின்  மூச்சின் சத்தம் கேட்டது. திரும்பி அவன் முகம் பார்த்தாள் . கண் மூடி இருந்தான்.

 தூங்கறாரா ? மெதுவாக அவன் கையை எடுத்து தன் இடுப்பை கட்டிக் கொண்டாள் . இனியும் அவனை பிரிந்து அவளால் இருக்க முடியாது. அவன் உள்ளமும் வேண்டும். உடலும் வேண்டும். 

இவள் ஸ்பரிசம் பட்ட அடுத்த நொடி  அவளின் இடுப்புடன் சேர்ந்து மொத்த  உடலும் அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

“எதுக்கு அப்போ போய்  தூங்குன்னு சொன்னீங்க?” பயத்துடனே கேட்டாள் .

“சும்மா வம்பிழுக்க”  கண்களை சிமிட்டினான்.

“நான் என்னனென்னவோ நினச்சுட்டேன் தெரியுமா?” பயத்தில் இப்போதும் வார்த்தைகள் வரவில்லை.

“இவ்ளோ அழகா இருக்கற பொண்ண யாராவது விடுவானா ?அதுவும் பஸ்ட்  நைட்டுல?அன்னிக்கு என்ன சொன்னேன். உன்னோட பர்மிசன் இல்லாம உன்ன தொட மாட்டேன்னு சொன்னனில்ல? அதுக்குத்தான். 

கிட்ட வந்து ஒட்டி உரசி சித்ரவதை பண்ணறியா ? இருக்குடி உனக்கு.”

வேகமாக எழுந்தவன் ,

அவள் காலில் பழைய கொலுசிற்கு பதில் புதியதாக ஒன்றை மாட்டி, அப்படியே அவள் பாதங்களில் இதழ் ஒற்றினான் . 

ஒரே நொடியில் உடலில் ஹார்மோன்கள் துள்ளி குதித்தன . மெதுவாக அவள் உடலை  முத்தங்களால் குளிப்பாட்டினான் . பெல்ட்டால் அடித்த இடங்களில் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தான். இன்பத்தில் இருவரும் ஊறி  திளைக்க  ஒரு கேள்வி கேட்டாளே  பாக்கணும். 

“என்னங்க நான் உங்கள ஒன்னும் கேக்கணும்”

“ம்!”  அவன் வேலையை அவன் நிறுத்தவில்லை.

“நான் உங்கள கட்டிக்கவா ?”

வந்த கோபத்தில் அவள் கன்னத்தை அழுத்தி கடித்து விட்டான். 

“இந்த நேரத்துல கேக்கற கேள்வியாடி இது?”

“இன்னும் நீங்க பதில் சொல்லலியே? இது என்னோட ரொம்ப நாள் ஆசை. ப்ளீஸ்.”

“போடி தத்தி… இதுக்கெல்லாம் இப்போ டைம்  வேஸ்ட் பண்ண முடியாது, நீ கட்டிக்கோ கடிச்சுக்கோ என்ன வேண்ணா  பண்ணிக்கோ” அதற்கு மேல்  பேசி அவன் நேரத்தை வீணடிக்கவில்லை.

அவன் அவள் மீது படர்ந்தான். அவளுக்குள்  தன்னை செலுத்தினான். முள்ளாக இருந்தவன்  அவளுக்கு வலிக்காமல் மலராக மாறினான். முள் என்று நினைத்தவள் பூ மாலையாக அவனை கட்டிக் கொண்டாள் . 

செயின் போட்டிருந்த அவனின் கழுத்துக்கும் உரம் ஏறிய மார்புக்கும் அவள் எத்தனை நாள் ஏங்கி இருக்கிறாள். 

ஆனந்துக்கு மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம், அமைதி சந்தோஷம்.  களைப்பாக

நெஞ்சில் சாய்ந்தவளுக்கு நெற்றியில் முத்தமிட்டான். 

“ரொம்ப தேங்க்ஸ் டீ “

“எதுக்கு?”

“என்னோட கற்ப  சரியான இடத்துல கொண்டு வந்து சேர்த்தத்துக்கு ?”

“ஓ! அதுக்குத்தான் என்ன ஓட ஓட விரட்டினீங்களாக்கும்?”

“ஏய்! உன்கிட்ட ஒரு உண்மையா சொல்லட்டுமா?”

“ம்!”, அவனின் உடற் படிக்கட்டுகளில் கையை வைத்து எண்ணிக் கொண்டிருந்தாள்.

 “எனக்கு உன்ன பார்க்கும்போதெல்லாம் எங்க அம்மாவை பாக்கற மாதிரியே இருந்துச்சு. என்னோட வீட்டுக்கு வர்றவங்க யாருகிட்டயும் முத்துவும் வைரணும் ஒட்டிக்க மாட்டாங்க. ஆனா அவங்கள  கூட நீ ஈஸியா கவர் பண்ணிட்ட. என்னோட தாத்தா பாட்டி  யாருன்னே உனக்கு தெரியாது. ஆனா அவங்ககிட்ட அதீத அன்பு காண்பிச்ச . அஃப்கோர்ஸ்! அன்னிக்கி நீ விக்ரம் கிட்ட நெருங்கி நின்னு பேசினபோதும் அதேதான். நான் ரெஜிதாகிட்ட மயங்கினது என்னமோ உண்மைதான். ஆனா அது வெறும் உடல் கவர்ச்சி மட்டும்தான். அவ கிஸ் பண்ண வரும்போதும் எனக்கு கம்பர்டபிளாவே இருக்காது. ஏனோ லிப்ஸ்டிக் போட்ட அவளோட உதட்டுல உன்னோட மேக்கப் இல்லாத அழகான உதடுகளைத் தான் தேடி இருக்கேன். அந்த உண்மை எனக்கே இன்னிக்குத்தான்  தெரிஞ்சுது”

அவன் சொன்னதில் வெட்கத்தினால் அவன் கழுத்திலேயே முகம் புதைத்தாள். தன்னால் ஏற்பட்ட வெட்கத்தை மனைவி தன்னிடமே மறைத்தால்  எந்த ஆணுக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது?

“ஏ! எங்கிட்ட என்னடி வெட்கம்” விடாமல் அவள் முகத்தை நிமிர்த்தி இதழில் தேன் குடித்தான். இதோ இதழின் ரசத்தில் தேன்  உண்டு என்பதை அவள் அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு மூச்சு திணறும் என்று மெதுவாக அவளை விடுவித்தான்.

“அன்னிக்கு ரெஜிதா வந்து அப்படி பண்ணும்போது நீங்க என் வந்து எங்கிட்ட பேசல? நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். எப் போய்ட்டேன். ரொம்ப அசிங்கமா இருந்துச்சு.”

“சாரி வரு! அதுக்கு நான் இந்தக் காரணமும் சொல்ல முடியாது. என்னோட திமிருன்னு வேணுன்னா சொல்லலாம் .

“ஆமா! நீ ஏன் என்ன விடாமலேயே இருந்த வரு?”

“ம்! உங்க அம்மா மட்டும்தான் உங்க டிராயிங்  பார்த்து மயங்குவாங்களா? நாங்கல்லாம் மயங்க மாட்டோமா? அதுவும் குட்டி பொண்ணா இருக்கும்போதுலேர்ந்தே பாக்கறவரை? வயசுக்காலத்துல கூட யாரையும் நான் பார்த்ததில்லை. உங்க உருவம்தான். நீங்க  ஆஸ்பத்திரில நடந்துகிட்ட விதம் ரொம்ப எரிச்சலாதான் இருந்துச்சு. ஆனாலும் ஏதோ ஒரு அட்ராக்ஷன். உங்க ரூமுல  உங்களோட சின்ன  வயசு போட்டோவை அன்னிக்கு பார்த்த போதுதான் அது நீங்கன்னு தெரிஞ்சுது. அப்பவும் உங்க மேல ஏதோ ஒரு ஈடுபாடு அவ்ளோதான். ஆனா அன்னிக்கு கடன் கேட்டு வந்தவங்க கிட்டேர்ந்து என்ன மூணு பேரையும் காப்பாத்தினீங்களே அப்போதான் நீங்க முழுசா என்னோட மனசுக்குள்ள வந்தீங்க”

“தெரியும்”

“எப்படி” இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

” அதுவா நான் ஆஸ்பத்திரில இருந்த போது இனியாதான்  சொன்னா . என்னமோ பணத்துக்காக வந்தவன்னு சொன்னீங்களாமே? அவ ஒன்னும் பணத்துக்காக வரல. நீங்க குடுத்த பாதுகாப்புக்காகத்தான் உங்களோட உருப்படாத கான்ட்ராக்ட்டுக்கு மண்டைய  ஆட்டிகிட்டு வந்தா. அந்த நிமிஷம் அவ மனசுக்குள்ள நீங்க  போனதுனாலதான் அவளை நீங்க என்ன பண்ணாலும் பொறுத்துகிட்டு இருக்கா. அவளை மாதிரி ஒரு பூவோட மனசுல உட்கார உங்களுக்கு தகுதியே இல்ல அது இதுன்னு வச்சு விளாசிட்டா. பட்! ஒன்னு நிச்சயம். அவ்ளோ போல்டா எனக்கு அவ சொல்லி இருக்கலைன்னா நான் உன்ன புரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கவே மாட்டேன். 

 அதுக்கு அப்புறம்தான் நான் உன்ன மனைவியா இல்ல இல்ல காதலியா பாக்க ஆரம்பிச்சேன். இந்த பூவோட மனசுல நாந்தான் இருக்கனுன்னு  ஒரு வெறி. திரும்ப திரும்ப நான் உன்கிட்ட வந்தேன். என்னால உன்ன விட முடியல. அட் தி சேம்  டைம்  என்ன விட எங்க அம்மாதான் உனக்கு முக்கியமான்னு அவ்ளோ கோபம்.  

 நான் உன்ன வீட்டை விட்டு துரத்தும்போது கூட இல்ல நீங்கதான் வேண்ணுன்னு என்ன வந்து கட்டி புடிக்க மாட்டியான்னு மனசுக்குள்ள ஒரு நப்பாசை. நீ என்ன தொட்டா அந்த செகண்டே உன் கால்ல  விழுந்துடுவேன்னு ஒரு பயம். அதனாலதான் நீ என்னோட ரூமுக்குள்ள வரக் கூடாது, என்ன தொடக்கூடாதுன்னு ஏதேதோ பைத்தியக்காரத்தனமான காண்ட்ராக்ட். அப்போ அவ்ளோ சீரியஸா இருந்த விஷயம், இப்ப சில்லியா இருக்கு. அவளை அழுந்த கட்டிக் கொண்டான். இனிமே நீ இல்லாம என்னால ஒரு செகண்ட் கூட இருக்க முடியாதுடி”

“ம்க்கும் நீங்க  பாட்டுலும் என்ன அடிச்சு துரத்திடீங்க. உங்கள பாக்க கூட முடியாது. எவ்ளோ தவிச்சு போய்ட்டேன் தெரியுமா?” குறையாக சொன்னாள் .

“ரொம்ப சாரிடி! நான் உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன். இனிமே உனக்கு நான் அடிச்சதே நினைவுக்கு வரக் கூடாது” சொன்னவன் தான் அடித்த தழும்புகளில் மீண்டும் மீண்டும் மருந்திட்டான். உதடுகளால். அப்போதும் வலியால்  துடித்தவள் இப்போது தாங்க முடியாத இன்பத்தில் திளைத்தாள். அப்போதும் வேண்டாம் வேண்டாம் என்று கதறியவள் இப்போதும் வேண்டாம் வேண்டாம் என்றாள் . ஆனால் இந்த வேண்டாமிற்கு  அர்த்தம் வேண்டும் என்பதை அவன் அறிவான். அடுத்தது அடுத்தது என்று இருவருக்கும் இரவு கடந்தது தெரியவில்லை. காலை விடியும்போதுதான் நேரம் போனதே தெரிந்தது. 

 அடுத்தது அடுத்தது என்று இருவருக்கும் இரவு கடந்தது தெரியவில்லை. காலை விடியும்போதுதான் நேரம் போனதே தெரிந்தது.

” என்னங்க  இது? எழுந்திருக்கவே முடியலையே? அம்மாவுக்கு டிபன் குடுக்கணுமே ?”

” நீ படு. நான் போய் குளிச்சுட்டு குடுக்கறேன், அவனை விடவே மனமில்லாதவளாக அனுப்பி வைத்தாள் .

“ஏய் பொண்டாட்டி! மாமனை இப்டி மயக்கினா நா எப்படிடி போவேன்?” அவனும் அழுது கொண்டே சென்றான்.

 கண்கள் சிவக்க சிவக்க வந்தவனின் முகத்தை பார்த்ததுமே தாத்தாவுக்கு புரிந்து போயிற்று. 

கயலும்  மற்றவர்களும் இருந்ததால் யாரும் எதையும் பேசவில்லை. அன்னைக்கு உணவு கொடுத்தவன், மனைவிக்கும் தனக்கும் சேர்த்தே தன் அறைக்கு எடுத்துக் கொண்டு போனான். 

அவளை எழுப்பினால் அவன் மீதே தூங்கி வழிந்தால். ஜில்லு ! பட்டு! லட்டு! வித விதமாகக் கொஞ்சி கெஞ்சி அவளை பல் தேய்க்க வைத்தான். காபி குடித்தபின் சிறிது தெம்பு வந்தது. அவள் குளித்து விட்டு வந்ததும்  இருவரும் சேர்ந்தே காலை சிற்றுண்டியை எடுத்துக் கொண்டனர். தலைக்கு  குளித்து விட்டு வந்தவளின் முகத்தில் ஏதோ ஒரு பிரகாசம். அவனுக்கு அவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. கீழே சென்று  பெரியவர்களையும் சிறியவர்களையும் பார்த்து விட்டு வந்தாள் . 

பாட்டி தலையை வருடி, “சந்தோசமா இருந்தீங்களா தங்கம்?” வாஞ்சையுடன் கேட்டார்.

“ம்!” வெட்கத்துடன் பதில் வந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் அமிர்தா”

“பெரியவங்க நீங்க எதுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு?”

“இல்லம்மா! கோதையோட விஷயம் நடந்ததும் அப்புறம் அவன் ரொம்ப மனசு ஒடஞ்சு போய்  இருந்தான். எந்த படிப்பு, காசு, பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் ஒரு மனுஷன் ஒரு நல்ல கணவனா , நல்ல அப்பாவா மாறும்போதுதான் அவனோட வாழ்க்கையே முழுமை அடையும் . அவன் ரெஜிதா கல்யாணம் பண்ணி இருந்தா அவனோட முகத்துல இவ்ளோ சந்தோஷம் நிச்சயம் இருந்திருக்காது. எங்க எல்லாரையும் சிரிக்க வைக்க நீ எவ்ளோ அழுதுருக்கன்னு எங்களுக்கு தெரியும். நீங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும். இனிமே நீங்க  ரெண்டு பேரும்  வாழ்க்கை பூரா சந்தோசமா இருக்கனும். “பெரியவர்களின் காலை தொட்டுக் கொண்டாள் .

தீர்க்க சுமங்கலியா இரும்மா. பெரியவர் தலையில் தொட்டு ஆசிர்வதித்தார். 

பாட்டி அமிர்தாவிடம்,

” உன்ன அவன் அடிச்சு விரட்டினப்போ பெரிய தப்பு பண்ணிட்டோமேன்னு நான் கவலை பட்டேன் . உங்க அம்மாவை கொண்டு போன போது  என் குழந்தையை இப்டி விட்டுடீங்களேன்னு கேட்ட  மாதிரி இருந்துச்சு.  நான் உங்க அம்மாகிட்ட தலை நிமிர்ந்து உங்க பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு  சொல்லணும். நான் சொன்ன வாக்கை காப்பாத்திட்டேன்னு சொல்லணும்.   தன்னோட உயிர் போனதுக்கு அப்புறமும் உங்க அம்மா உன்னை சந்தோஷமா வாழ வழி காட்டினா. அவ ஆத்மா சாந்தி அடையனும். அதுக்கு நீங்க  ரெண்டு பேரும் அடுத்த நிலைக்கு போகணும். அவளுக்கு மத்த பசங்க பத்தி கவலை இல்லை. ஏன்னா நீ அவங்களை கரை சேர்த்துடுவ . நீ என்ன ஆகிடிவியோன்னுதான் பெத்தவளுக்குக் கவலை. உங்க அம்மா கவலைய போக்க வேண்டியது நீங்க தான்.”

“பாட்டி நீங்க  சொல்லறது புரியல”

“ஆனந்து வெளில பாக்க சாதாரணமா  இருந்தாலும் அவனோட மன  அழுத்தங்கள் போகறதுக்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும்.  எல்லாமே ஒடனே நடக்கனுன்னு நாம் எதிர் பார்க்க முடியாது. அவனோட கடந்த  காலங்கள் நிகழ்வுகள் அப்டி.  சீக்கிரமா நீங்க  அம்மா அப்பா ஆகணும். எதுக்காகவும்  குழந்தை பெத்துக்கறத தள்ளி போடாதீங்க.  இதெல்லாம் நாங்க உங்ககிட்ட பேச கூடாது.  ஆனா வரப் போகற  குழந்தை கூட அவனுக்கு நல்ல  மருந்தா இருக்கலாம்.  

 இப்ப நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கற இந்த நேரத்துல உங்களை மீறி எல்லாம் நடக்கும் . அப்ப சட்டுனு கிளிக் ஆகிடும் தள்ளிப் போட தள்ளிப் போட உடனே குழந்தை வந்துடுன்னு சொல்லிட முடியாது. பார்த்து செய்ங்க. இதை பத்தி அவன்கிட்ட பேச முடியாது”

“அதுக்காக நீங்க என்ஜாய் பண்ண வேண்டான்னு சொல்லல. வந்தா அத ஏத்துக்கோங்க . நீ எல்லாம் தெரிஞ்சவ. உனக்கு எதுவும் சொல்ல வேண்டியது இல்ல. “

“சரி பாட்டி.”

“ரெண்டு பேரும்  சாப்பிட்டீங்களா?”

“ம்! ஆச்சு பாட்டி “

“ஆ! அப்புறம் இன்னொரு விஷயமா அமிர்தா. கோதையை பார்த்துக்க ஒரு நல்ல ஆளா போடணும்” எல்லா  சமயத்துலையும் நீங்களே அவளை பார்த்துக்க முடியாது. சின்னஞ்சிறுசுங்க. வெளில வாசல்ல போகணும். இன்னும் போக போக தேவைகள் அதிகமாகிட்டே போகும்.

” சரி பாட்டி”

“போடி கண்ணா. போய்  ரெண்டு பேரும்  நல்லா  தூங்குங்க. ரொம்ப அசதியா இருக்கும்.  மதியம் சாப்பாடுக்கு வந்தா போதும் .  தலை கோதியவர் , ப்ரிட்ஜில் இருந்து மல்லிகையை எடுத்து கொடுத்தார். போ! போய்  தலை வாரி வச்சுக்கோ. எப்பவும் அவனுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணு . பளிச்சுனு இருக்கணும். முக்கியமா  அவன் ஆபிஸ் விட்டு வரும்போது” முகம் சுற்றி திருஷ்டி கழித்தார்.

“போதும் விடுடி ! அவளை மொக்கை போட்டுக்கிட்டு. அங்க என் பேரன் தவிச்சுக்கிட்டு இருப்பான். ” தாத்தாவின் செல்ல கோபத்துக்கு பாட்டி ஸ்ட்ராங்கா முறைத்தார்.

“உங்க பேரன் வேற எப்படி இருப்பான்? ” 

சிறியவர்கள் காதல் ஒரு மாதிரி என்றால் வயதான காலத்தில் வேறு மாதிரி. அவர்களைப் போல செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் வயதான வரு, ஆனந்தை கற்பனை செய்துக் கொண்டே மாடி ஏறி வந்தாள்.

 

மலர்ந்த முள்ளின் அட்டகாசம் தொடரும் …

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!