மலர் 38

மலர் 38

 

“போதும் விடுடி! அவளை மொக்கை போட்டுக்கிட்டு. அங்க என் பேரன் தவிச்சுக்கிட்டு இருப்பான். ” தாத்தாவின் செல்ல கோபத்துக்கு பாட்டி ஸ்ட்ராங்கா முறைத்தார்.

“உங்க பேரன் வேற எப்படி இருப்பான்? ” 

சிறியவர்கள் காதல் ஒரு மாதிரி என்றால் வயதான காலத்தில் வேறு மாதிரி. அவர்களைப் போல செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் வயதான வரு, ஆனந்தை கற்பனை செய்துக் கொண்டே மாடி ஏறி வந்தாள்.

மாடி ஏறி வந்தவளுக்கு பெரியவர்கள் சொன்னது பல விஷயங்கள் புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

ஆனந்த்  அங்கே அலுவலகத்திற்கு பேசி கொண்டிருந்தான். பாட்டி  சொன்னது போலவே தலை வாரி பூ வைத்துக் கொண்டவளை இன்னமும் பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? எப்போதும் பேச ஆரம்பித்தால்  நிறுத்தாதவன், மூளை  இப்போது வேலை நிறுத்தம் செய்து விட்டது. “நான் அப்புறம் பேசறன்.” அவன் போனை வைத்ததும், “ஆமா! புதுசா கல்யாணம் ஆனவர் இனிமே எங்கேர்ந்து பேசறது?” பி ஏ மனதில் சிரித்துக் கொண்டார்.

தலையில் பூ வைத்தவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன்,

“பாட்டி பார்த்தியா?”

“ம்!”

“என்ன சொன்னாங்க?”

“ஏதேதோ சொன்னாங்க?”

“என்ன சொன்னாங்க?”

“சீக்கிரமா குழந்தை பெத்துக்க சொன்னாங்க.”

“அஹா!”

“ப்ளீஸ் மயக்காதடா “

“எவ்ளோ பெரிய கம்பனி ஓனர்? டா போட்டு சொல்லற?”

அவள் மீது படர்ந்து அவள் கை விரல்களை சப்பி கொண்டிருந்தான்.

“நான் ஒன்னும் கம்பனி ஓனரை சொல்லலியே? எனக்குத் தாலி கட்டின புருஷனைத் தான் சொன்னேன்.”

“இந்த மஞ்ச கயத்துல என்ன இருக்குன்னு நினைச்சேன். இந்த கயத்துல என்னையே கட்டிப் போட்டுட்டியே?”

சொன்னவன் அடுத்த சில நிமிடங்களில் அந்த ஒற்றை கயிற்றை மட்டுமே அவள் உடலில் விட்டு வைத்திருந்தான்.

அவளின் வெட்கம், சிறு சிறு முனகல்கள், நிறைய கோரிக்கை, அதை விட அதிகத் தேவை, கொஞ்சல்கள், எச்சில் முத்தங்கள், வியர்வை, மூச்சுக் காற்று, குட்டி குட்டி அதட்டல், மிரட்டல் உருட்டல் எல்லாம் அவனுக்குப் பிடித்தது. சில நேரங்களில் ரெஜிதாவின் நினைவு வரும். அந்த நாள் நினைவு. அவள் தனக்கானவள் இல்லை என்று ஏற்றுக் கொண்டவன்,இப்போது இவள் தான் என் தேவதை என்று வருவை கொண்டாடினான். வன்மையில் மென்மைக் கலந்து அவளைக் கொண்டாடினான்.

“எனக்கு எதுக்குங்க இவ்ளோ பில்டப்பு?”

“நீ எல்லாத்துக்கும் ஏத்தவ வரு. அதோட என்னோட பொண்டாட்டிய நான் கொண்டாடாம வேற யார் கொண்டாடுவாங்க?”

சொன்னவன் அவன் முகத்தில் கழுத்தில் அதற்கு கீழே என்று ஆயிரம் முத்தங்களை அல்லி வழங்கினான். அவனின் தலைக்குள் விரல் கோர்த்திருந்தவள் ம்! போதுங்க சிணுங்கினாள். போதும் என்று அவள் சொன்னாலும் அவளின் உணர்ச்சி அவன் அறியாததா ? 

அன்று மாலையில்  அவன் வாங்கி கொடுத்த நாக பழ வர்ண சேலையை உடுத்திக் கொண்டாள் . அவர்கள் இருவரும் சும்மா வெளியில் செல்லலாம் என்று இருந்தார்கள்.

“என்னடி இதை கட்டி இருக்க?”

“ஏன்? ஓ  இந்த புடவை உங்களுக்கு பிடிக்காது இல்ல?”

“புடிக்காதா? இதை வாங்கினதே நான்தானே?”

“இல்லையே! அருண் சார் தானே இதை வாங்கி குடுத்தார்.”

“குடுத்தாரு குடுத்தாரு உன்ன அருண் சார் குடுத்தாரு. என்னையும் கடைக்கு கூட்டிட்டு போய் என்ன தானே வாங்க வச்சான்.”

“ஓ!  அப்ப ஏன் உங்களுக்கு இது புடிக்கல? அன்னிக்கு கூட என்ன திட்டினீங்களே?”

“அது ., பேரழகியா வந்து நின்னியா?  அந்த நொடில என்னோட கற்பு பறிகொடுத்துடுவேனோன்னு கொஞ்சம் டென்சன் வந்துருச்சு. அதான் கத்தற  மாதிரி டிராமா பண்ணேன்.”

“சரி! இப்போ என்ன?”

உரிமையுடன் அவன் மடியில் அமர்ந்துக் கொண்டு கழுத்தைக்  கட்டிக்கொண்டாள் .

“இப்போ என்னவா? அதான் என்னை பல தடவை ரேப் பண்ணிட்டியே? இதுக்கு மேல குடுக்க என்ன இருக்கு?

அவள் காது மடலில் அவனின் உதடுஊரவலாம் ஆரம்பமானது 

“ஓ ! அப்டியா? அப்ப ? நீங்க பண்ண அட்டகாசம் எல்லாம்?”

“நான் ஒன்னுமே பண்ணலை. ஏதாவது இருந்தா சொல்லு. “

சொல்ல வாயெடுத்தவள் வெட்கப் பட்டுக் கொண்டு அவன் நெஞ்சிலேயே புதைந்துக் கொண்டாள்.

“ஜில்லு ! முகத்தை காட்டுடி “

“நோ ” தலை மட்டும் ஆடியது.

தலை மட்டும் அசைந்தது.

“போலாமா?”

“ம்!”

“வேண்டாண்டி “

“ஏன்?”

” இந்த கேப்புல  தெரியற குட்டி இடுப்பு, என்ன கவனிக்க மாட்டியா? இவ்ளோ பிரியா இருக்கேணேன்னு கேக்குது. என்று சொல்லி இடுப்பில் முத்தம் வைத்தான். இடுப்புக்கு மட்டும்தானா? நான்   கிடையாதான்னு அதுக்கு மேல… அதுக்கு மேல எங்கேர்ந்து பேசறது? இல்ல எங்கேர்ந்து வெளில போகறது? அவளை அழகாக்கி காட்டிய புடவை அலங்கோலமாக கீழே கிடந்தது.

 ஒரு நாள் இவள் சமையல் அறையில் காலை சிற்றுண்டியை சரி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆபிசுக்கு தயாராகி வந்தவன்,

நேரே  உள்ள வந்தான். அவன் வரும்போதே மற்றவர்கள் வெளியில் வந்து விட்டனர். உள்ளே வரும்போதே அறையை லாக் செய்தவன், 

“என்னடி இன்னிக்கு வெஜா நான் வெஜா ? “கழுத்தில் வாசம் பிடித்தான்.

திரும்பி அவனை ஆச்சர்யமாக பார்த்தவள் , 

“நாம எப்ப அசைவம் சாப்பிட ஆரம்பிச்சோம்?”

முந்தானை விலக்கி ரவிக்கைக்குள் லேசாக கடித்தவன், “நான் இதை கேட்டேண்டி?” சொல்லி விட்டு வேகமாக வெளியில் என்று விட்டான்.

 காதலும் காமமும் அளவை மீறினாலும் அவர்களின் கடமையில் இருந்து அவர்கள் தவறவே இல்லை. சிறியவர்கள் அனைவரும் சேர்ந்து பெரியவர்களை தாங்கினார்கள் . அதற்கு ஏற்றாற்போல பெரியவர்களும் சிறியவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தார்கள். 

கயல் ஆசை பட்ட படியே படிக்க சென்றாள் .  செந்திலும் வெறியோடு படித்திருந்ததால்  ஓரளவு நல்ல விதமாகவே மதிப்பெண் வாங்கி இருந்தான். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த இடத்தில பயிற்சி முடிந்திருந்தது. அதனால் மேற்படிப்புக்கு செல்வதாக கூறி வெளியில் வந்து விட்டான். இன்ஜினீயரிங் சேர்ந்தான்.

முரளி இவர்களோடு சிறிது காலம் இருந்தவனுக்கு டெல்லிக்கு வேலை மாற்றம் கிடைத்தது.  கோதையைப் பார்த்துக் கொள்ள வேறு எங்கோ ஆள் தேடக் கணவன் மனைவி இருவருக்குமே விருப்பம் இல்லை. கோதையைப் பார்த்துக் கொள்ளும் சகோதரியாக, அவர்களில் ஒருத்தியாக ஆனந்தன் மீனம்மாவையே வீட்டில் வைத்துக் கொண்டான். இத்தனை நாள் யாரும் இல்லாத அனாதை நான் என்ற எண்ணம் இனி அவருக்கு வர போவதில்லை. அவரும் மற்றவர்களை போல பிள்ளைகள், பேரன்கள். பேத்திகள் என்று இருக்கலாம். இதை விட வேறு எந்த நன்றிக் கடனும் ஆனந்தனால் செலுத்த முடியாது. 

அருணும் இலண்டனில் எலும்பு புரை நோய்  மற்றும் திசுக்கள் ஆராய்ச்சி பற்றி மேற்படிப்புக்குச் சென்றான். அவனுக்கானவள் இனி பிறக்கவா வேண்டும்? அவனுக்கும்  ஒரு சிறந்த  எதிர்காலம் உண்டு…….

   ஒரு நாள் காலை அமிர்தாவுக்கு காலை  தூக்கி கீழே கூட வைக்க முடியவில்லை. 

“என்னடி பட்டூ ? என்ன ஆச்சு?” தலைக்கு  குளித்து துவட்டியவன் இவள் அருகே வந்து தலை  கோதினான்.

“சீ போடா! என்னால எழுந்துக்கவே முடியல,  உன்னாலதான் . தலை  சுத்துது. நான்வெஜ் வேணும் நான்வெஜ் வேணுன்னு என்ன படுத்தி எடுத்த!”

“அடிப்பாவி! இது அடுக்குமா? சின்னதா ஒரு ரேப் சின்னதா ஒரு ரேப்! ப்ளீஸ் டா! ப்ளீஸ் டான்னு என்னை படுத்தி எடுத்து யாருடி ?”

“போடா! நீ பேட் பாய். அசிங்கசிங்கமா பேசற”

“நானா அசிங்கமா பேசறேன். சண்டித்தனம் பண்ணும் ஆம்பிளைய கிண்டி  கிழங்கெடுப்பான்னு என்ன படுத்தறது நீதானடி” 

“டேய் அதெல்லாம் விடுடா எனக்கு ஏதாவது பண்ணு டா”

“சரி வா! முதல்ல ப்ரஷ் பண்ணு” மெதுவாக தூக்கி கொண்டு போய்  பல் தேய்க்க வைத்தான். நிற்க கூடமுடியாமல் இருந்தவளுக்கு தலையில் பாண்டை போட்டு விட்டான். உள்ளாடைகளோடு இருந்தவளுக்கு நைட்டி மாட்டி விட்டான்.காபி கொண்டு வந்து கொடுத்தான்.  அதை அருகே கொண்டு போனதும்தான் தாமதம், எழுந்து  கொள்ள முடியாமல் இருந்தவள் வாஷ் ரூமிற்க்கு ஓடி சென்று குபுக் குபுக் என வாந்தி எடுத்தாள். தன்னால் தான் இவளுக்கு இப்படியா? பயந்து விட்டான். 

 அவளை படுக்க வைத்து விட்டு கீழிருந்து பாட்டியை அழைத்து வந்தான். அவர்கள் இருவரும் வரும்போது கோதை கையில் இரண்டு பொம்மைகளை வைத்து கொஞ்சி  கொண்டிருந்தார். 

அவளே சொன்னாள் , 

“பாப்பா! பாப்பா! ரெண்டு பாப்பா! புது பாப்பா. இந்தா  நீ வச்சுக்கோ. புஜ்ஜியின் கையில் கொடுத்தாள் “

பாட்டிக்கும்  பேரனுக்கும் புரிந்து விட்டது. 

ஸ்தம்பித்து நின்றவனை பாட்டிதான்,

” டேய்! நீ போய் அதை  வாங்கிட்டு வா. வீட்டுல செக் பண்ணிட்டு டாக்டரை பாக்கலாம். மீனாவை கூப்டு. நாங்க  பார்த்துக்கறோம். நீயே போடா வேற யாரையும் அனுப்பாத” ஓடியவனிடம் சொன்னாள் .

“சரி ” தலையாட்டிவிட்டு வந்தக் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே ஓடினான்.

கோதை சொன்னபடியே இவளுக்கு இரட்டையர்கள் என்று மருத்துவர் கன்பார்ம் பண்ணி விட்டார்.

முத்துவுக்கும் வைரனுக்கும் என்ன புரிந்ததோ அமிர்தாவை விட்டு  நகரவே இல்லை.

அதிலும் ஆனந்தை அமிர்தாவை நெருங்க கூட விடுவதில்லை.  “ரெண்டு குழந்தைங்க. இவங்கள ரொம்ப ரொம்ப கவனமா  பார்த்துக்கணும்.  ஆனந்தை தனியே அழைத்து, நீங்க  கொஞ்ச நாளைக்கு அவங்ககிட்ட போகாம இருக்கறது நல்லது” நாய்கள் தானே என்று நினைத்து மருத்துவர் சொன்னதின் விளைவு தான் இது.

“டேய்! ப்ளீஸ் டா! ஒரே ஒரு கிஸ்.”

 ம்ம். அவர்கள் அனுமதிக்கவே இல்லை . தனிமை அவனைக் கொன்றது. கத்தினான் திட்டினான். ம்ம் அவர்களிடம் இவன் கெத்து  பலிக்கவே இல்லை. இவனுக்கும் அவர்களுக்கும் நடக்கும் சண்டையை பார்த்து தாத்தா சிரித்துக் கொண்டிருந்தார்.

(இது எல்லாம் சும்ம கற்பனைதான் )

“என்னங்க இது? பாவம் சின்ன பசங்க. ஏதோ குழந்தைங்கதான் புரியாம ஏதோ பண்ணுதுங்க. நீங்களும்?”

“குழந்தைங்களா ? போய் பாருடி! நம்ம குழந்தைங்க போன இடத்துலலாம்  எவ்ளோ குழந்தைங்கன்னு..”

“சீ! வெவஸ்த இல்லாம என்ன பேச்சோ? இனி நாய்ங்க நைட்டு வெளில இருக்கட்டும் கட்டளை இட்டாள் .

“சரிங்க மகாராணி!”

வெறுப்பில் இருந்த  கள்வனை இரவில் வந்து கட்டி கொண்டாள் . இதுதான் அவனை சமாதானப்படுத்தும் எளிமையான வழி. அதற்கு அர்த்தம் என்ன என்று அவனுக்கு தெரியாதா? முதலிரவிலேயே மனைவி காட்டி கொடுத்ததாயிற்றே? முள்ளாக இருந்தவன் அவளை மலராக ஏந்தினான். பூவுக்கு வலித்து விடுமே என்று இதழ் ஒற்றலைக் கூட பாத்து பார்த்து வழங்கினான். 

“ரொம்ப தேங்க்ஸ் வரு. நல்ல அம்மா, மனைவி, குழந்தைகள் இதுக்காக நான் ரொம்ப ஏங்கி இருக்கேன். எல்லாமே உன்னாலதாண்டி கிடைச்சிருக்கு. நான் உன்னை ரொம்ப கொடுமை படுத்தியிருக்கேன். சாரி டீ !”

“சுப் ! இனிமே அது பத்தி எல்லாம் பேசக் கூடாது. எங்கிட்ட வந்தா எப்படி பேசணுன்னு தெரியாதா?”

“தெரியாதே “

“ரொமான்டிக்கா பேசணும் “

“அதுவும் எனக்குத் தெரியாதே “

“அப்ப ஜெய்ப்பூரிலிருந்து பேசினது எல்லாம் என்னவாம்?”

“என்ன பேசினேன். நினைவில் இல்லையே. நீ சொல்லு “

“அதான் நான் போட்டிருந்த ட்ரெஸ், அதுக்குள்ள சைஸ் ..அப்புறம் ..”

“அப்புறம்.. சீ ! நான் சொல்ல மாட்டேன்.”

“என்னடி இது ரெட்டை புள்ளை வயத்துல இருக்கு. இன்னும் எங்கிட்ட இவ்ளோ வெக்கம் காட்டற?”
“அது அப்படித் தான். “அவன் கழுத்தில் முகம் புதைக்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.

முயன்று அவள் முகம் பார்த்தவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. அவள் முகம் குங்குமப் பூ போல சிவந்து விட்டது. எந்த போதையும் கையால் கூடத் தொடாதவனுக்கு இந்த போதையை தொட்டால் மட்டும் தன்னை அடக்கிக் கொள்ள முடிவதில்லை. அவனை அடிமையாக்கி வைத்திருக்கும் போதை அவள். 

உயிர் இருக்கும் வரை அவன் வெளியில் வர முடியாத போதை அவள்.

 நாட்கள் நகர நகர முத்து , வைரன், தாத்தா, பாட்டி  மீனா வேலைக்காரர்கள் என்று அனைவரும் இவளை தாங்கு தாங்கு  என்று அவளைத் தாங்கினார்கள். 

முதல் குழந்தை செந்திலை இவள் தாங்கினாள். தன்னுடைய முதல் குழந்தை தன்னுடைய அன்னையை , தந்தையாக இருந்து, மகனாக இருந்து, சேவகனாக இருந்து மனதில், மடியில் தாங்கிக் கொண்டான் ஆனந்தன். 

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலாமா?

 தண்டனை முடிந்து ஜெயிலில் இருந்து வந்த ரெஜிதா, இப்போது ஓரளவு பரவாயில்லை. முன்னளவு மோசம் இல்லை. ஜெயிலில்  இருந்து வெளியில் வந்தவள் ஆனந்தை  பார்க்க வந்தாள் . அவள் முகத்தை பார்த்தவுடன் அமிர்தாவின் முகம்  வெளிறியது. ஏனோ இப்போதும் ஒரு பாதுகாப்பின்மையை அவளால் உணர முடிந்தது. 

பளிங்கு மேனியாய் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் பேரழகியாக  இருந்தவள், அளவுக்கு மீறிய போதையினாலும்,  சிறை வாசத்தினாலும் இளைத்து, கருத்து, மெலிந்திருந்தாள் .

ரெஜிதாவின் முகத்தை பார்த்த பாட்டிக்கு  ஒன்றுதான் தோன்றியது “கூடா  நட்பு கேடாய் முடியும்” 

  ரெஜிதாவை பார்த்த ஆனந்த், “வா! வா! ரெஜிதா எப்படி இருக்க?” அவளிடம் பேசிக் கொண்டே அமிர்தாவையும் அருகில் அழைத்து அமர வைத்தான். 

“உட்காரு ரெஜிதா” கவனமாக எதிரில் இருந்த சோபாவை காட்டினான்.

 சற்று தள்ளி அமர்ந்த அமிர்தாவை அசால்டாக இடுப்பை தூக்கில் அருகில் அமர வைத்து இடையை கட்டி கொண்டான். அதிலேயே ரெஜிதாவுக்கு ஆனந்த்  எத்தனை இயல்பாக அமிர்தாவுடன் ஒன்றி இருக்கிறான் என்பது புரிந்தது.

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை.

“எப்படி இருக்கீங்க ஆனந்த் ?”

அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அமிர்தா அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள் .

அருகில் வந்து குனிந்து  நின்றவளை பார்த்த ரெஜிதா அவளை உற்று நோக்கினாள் .

“அடுத்து என்ன பண்ண போற ரெஜி?”

“தெரியல ஆனந்த்! இப்போதைக்கு நான் எதையும்  யோசிக்ககூடிய  நிலைல இல்ல. இப்பலாம் யாரை நம்பனும் யாரை நம்பக்  கூடாதுன்னு தெரியல.  நல்லா இருக்கறவரைக்கும் தான் எல்லாருமே கூட இருக்கறாங்க. கஷ்டம்னா ஏனோ எல்லாருக்குமே தப்பிச்சு ஓட ஏதேதோ காரணம் கிடைச்சுடுதில்லை? உள்ளங்கையை கோர்த்து வைத்து பேசிக் கொண்டிருந்தவள் அதற்கு மேல் தொடர முடியாமல் வெளியில் வெறித்தாள்.

“மதன் ரொம்ப நல்லவர் ரெஜி. நீ தாராளமா அவரை நம்பலாம். உனக்கு அண்ணன்தானே ? “ 

“அப்ப கூட  நான் உனக்கு துணையா இருப்பேன்னு சொல்ல மாட்டியா ஆனந்த்?” அவளது இந்த நேரடிக் கேள்வியில் அமிர்தா பயந்து விட்டாள் .

ஆனால்  ஆனந்த்  தடுமாறவில்லை.

“அதுக்கு என்ன ரெஜி என்னிக்குமே நாம பிசினஸ் பார்ட்னர்ஸ்தான். தேவை இல்லாத விஷயங்களை பத்தி யோசிக்காத. பிஸினஸ்ல கவனம் செலுத்து. என்னோட சைடுலேர்ந்து உனக்கு என்ன வேணுமோ அத நான் பண்ணறேன்”

நம்முடைய தொடர்பு தொழிலில் மட்டும்தான் என்பதை தெளிவாக விளக்கி விட்டான். 

பேரனின் மன முதிர்ச்சியைக் கண்டு ஆச்சர்யப் பட்டுப் போனார் பாட்டி .

“ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த் . இந்த சில மாசங்கள்  என்னோட வாழ்க்கைல ரொம்ப கஷ்டமான பல விஷயங்களை ரொம்ப ஈஸியா சொல்லிக் குடுத்துடுச்சு. ஏனோ அப்பா இப்டி என்ன தவிக்க விட்டுருக்க வேணாம். இப்பலாம் தோள்  சாய மனசு அவரை ரொம்ப தேடுது” கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

“கரெக்ட் ரெஜி! இப்போ நீ ரொம்ப தளர்ந்து போய் இருக்க.  மனசு உனக்குன்னு நான் இருக்கேன்னு யாராவது சொல்ல மாட்டங்களான்னு தவிக்கும். உங்க அப்பா உன்னை  தனியா தவிக்க விடல. அவரை விட உன்னை  நல்லா பார்த்துக்க கூடிய உங்க அண்ணாவைதான் கூட விட்டுட்டு போய் இருக்கார். நீ மறுபடியும் மறுபடியும் தோள் சாய மனுஷங்களை தேடினா எல்லாரும் உன்ன திருப்பி திருப்பி யூஸ் பண்ணிக்குவாங்க .

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!