மலர் 4
அவருக்கு எல்லாமே அவர் மனைவிதான். திருமணத்திற்கு பெண் பார்த்த காலத்தில் ஆரம்பித்த அவர்களின் காதல் இதோ இன்னமும் தொடர்கிறது. அவர்களை பார்த்து அவர்கள் வளர்த்த பேரனே கூட பொறாமை படத்தான் போகிறான்.
அறுவை சிகிச்சை நல்ல படியாகவே முடிந்தது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் மருத்துவமனையிலேயே இருந்தார். அதற்கு பிறகும் வேண்டுமென்றால் அவர் வீட்டோடு ஒரு நர்ஸ் வைத்துக் கொண்டு டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று அருண் கூறி இருந்தான்.
இந்த ஒரு வாரமும் அமிர்தா தான் உடன் இருந்தாள் . அவளும் இனியாவும் ICU வில் கூட இருக்க முடியும்.
முதலில் ICU வில் உடன் இருந்தவள் அப்படியே நார்மல் வார்டிலும் பாட்டி கூடவே இருந்தாள். அருண் அதற்கென்று தனியாக பர்மிஷன் வாங்கி விட்டான். தோழனுக்காக இருக்கலாம். அலலது தாத்தாவின் பயம் கூட காரணமாக இருக்கலாம். அதற்கு என்று பயிற்சி பெற்றவர்கள்.
அவ்வபோது காலையிலேயே ஆனந்த் பாட்டியை பார்க்க வந்து விடுவது வழக்கம். பாட்டிக்காக அவன் தனது ஜிம்மை கூட நிறுத்தி இருந்தான். எத்தனை சொன்னாலும் கேட்காமல் தாத்தா முழுக்க முழுக்க மனைவியுடன் இருந்தார். பேரன் வரும் சமயத்தில் மட்டும் வீட்டிற்கு சென்று குளித்து மனைவிக்கு தேவையானதை எடுத்து வருவார். வீட்டில் எத்தனை பேர் வேலை செய்ய இருந்தாலும் அவர் மனைவிக்கு அவர்தான் எல்லாம் செய்ய வேண்டும். அது ஏன் என்பதெல்லாம் மற்றவர்களுக்கு புரியாது. ஆனால் மனைவிக்கு புரியும்தானே? தான் கணவனுக்கு கஷ்டத்தை கொடுக்கிறோமோ என்று அவர் வருந்தாத நேரம் இல்லை. அதே சமயம் தான்தான் கணவனின் உயிர்ப்பு என்பது அவருக்கு தெரியும்.
ஆனந்த் ஒரு நாள் விடியலிலேயே வந்திருந்தான். அவன் உள்ளே நுழையும்போது மீண்டும் அமிர்தா அவன் மேல் இடித்துக் கொண்டு அவசரமாக வெளியில் ஓடினாள். அவனுக்கு தலை கால்
புரியாத கோபம்.
‘பாட்டி ரூமுல இல்லாம இவ எங்க ஓடறா ?’ அதுவும் சேர்ந்து கொண்டது. பாட்டியை கண்டதும் முகத்தை மாற்றிக் கொண்டான். பாட்டியின் அறையில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். தாத்தாவும் பாட்டியும் உறங்கி கொண்டிருந்தனர்.
அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாதவன் தனது போனில் அன்றைய அப்பாயின்ட் மெண்டிற்கு தேவையானது சிலவற்றை பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த அரை மணி நேரத்தில் அங்கே வந்த அமிர்தா,
“நீ இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக்கோ நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன்” அந்த நர்ஸிடம் சொல்லி விட்டு நகர்ந்தாள். வாயிலுக்கு சென்றவளை மீண்டும் அவனின் சொடக்கு சத்தம் நிறுத்தியது. அவள் புரிந்து கொண்டாள் . அசைவில்லாமல் நின்றிருந்தவளின் அருகே வந்து,
” உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்ல ? இப்படி ஒரு ஆம்பிள மேல வந்து வந்து விழற ? இப்படித்தான் உன்ன வளர்த்துருக்காங்களா? சீ !” அவன் முகத்தில் அத்தனை அருவருப்பு .
“நா எப்ப இடிச்சேன்? ” இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே சமயம் அவனின் வார்த்தைகள்? நெருப்பாக விழுந்தது. வெளியில் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவள், “சாரி” சொன்னாள் .
“எதுக்கெடுத்தாலும் ஒரு சாரி” அவன் மென்று துப்பிய வார்த்தைகளை கவனிக்காதது போல சென்று விட்டாள் .
அதே சமயம் அங்கு அருண் வந்தான்.
“அவள் தோளில் இருந்த ரத்த கறையை பார்த்தவன் வேற எக்ஸ்ட்ரா யூனிபார்ம் இருக்கா ?”
“நோ சார்!”
“அட்மின்கிட்ட நான் சொல்லறேன். அவங்க வந்ததும் வேற மாத்திக்கோ . இப்போ உன்னோட நார்மல் ட்ரெஸ் போட்டுக்கோ”
“ஓகே டாக்டர்!”
அவளின் கண்கள் அவள் அழ தயாராக இருப்பதை அவனுக்கு தெளிவாகவே சொல்லியது.
பாட்டி தூங்கி கொண்டிருப்பதை பார்த்தவன் பாட்டியின் உடல் அறிக்கையை பார்த்து திருப்தி அடைந்தான். “நல்லாவே இம்ப்ரூவ்மென்ட் இருக்குடா. நீ எப்பவேணாலும் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். ஆனா ஒரு மாசத்துக்காவது குறைஞ்சது ஒரு நர்ஸ் 24 ஹவர்ஸும் கூட இருக்கணும். அதே மாதிரி பிசியோவும் வந்து பார்த்துக்கணும். வீக்லி ஒன்ஸ் நானே வந்து பார்த்துக்கறேன்.”
“ஓகே டா. தாத்தாகிட்ட பேசிட்டு சொல்லறேன். அதே மாதிரி பாட்டி இங்க இருக்கற வரைக்கும் இப்போ போச்சே அந்த நர்ஸ் வேண்டாண்டா” வெளிப்படையாகவே சொன்னான் ஆனந்த் .
யாராவது ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் மீது நெருப்பை மழையாகவே கொட்டுவான் ஆனந்த் என்பது நன்றாகவே அருணுக்குத் தெரியும். நண்பனை உணர்ந்தவன், தனியே அழைத்துப் பேசினான்.
“ஏண்டா ? உனக்கும் அவளுக்கும் என்னதான்டா பிரச்சனை?”
“அது என்னடா வேலை நேரத்துல இங்க இல்லாம வேற எங்கையோ போயிட்டு வரா ?”
“அதுவா அது ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ். எல்லா நர்சாலையும் அதெல்லாம் ஹாண்டில் பண்ண முடியாது. வெளில அவங்களால காண்பிச்சுக்க முடியாது. ஆனா உள்ளுக்குள்ள படபடப்பு இருக்கும். அவங்களால நாம் சொல்லறதை சட்டுனு செய்ய முடியாது. அதனால் இந்த மாதிரி சில பேர் இருப்பாங்க. அவர்களுக்குத்தான் பஸ்ட் ப்ரிபரன்ஸ். அடுத்து தான் மத்தவங்கள கூப்பிடுவோம். அமிர்தாவுக்கு நல்ல அனுபவம். பார்த்த உடனவே சில விஷயம் புரிஞ்சுடும். டாக்டர்ஸுக்கும் ஈஸி. அதனால் அவளை கூப்பிட்டு இருப்பாங்க. அவ டியூட்டில ரொம்ப சின்சியர் அவ பார்த்துக்கவரைக்கும் பாட்டிக்கு ரொம்ப நல்லது.”
“என்னவோ நீ சொல்லற”. அதற்குள் அமிர்தா அங்கு வந்து விட அவளை தீயாய் முறைத்தான் ஆனந்த் .
“அங்க என்னடா ? அவளை அப்படி முறைக்கற ?”
“ச்சே! பொண்ணா இது? மேல மேல வந்து விழுந்துகிட்டு” அவர்கள் வெளியில் பேசினாலும் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அமிர்தாவுக்கு அவர்களின் பேச்சு நன்றாகவே காதில் விழுந்தது.
“ஏதோ தெரியாம பட்டிருக்கும். அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லடா.”
“ஏய் எத்தனை கேச பார்த்திருக்கேன். ஒருத்தன் பணக்காரனா இருந்துட்டா போதுமே. வளைச்சு போட என்ன வேணா பண்ணுவாங்க. அதுலயும் கொஞ்சம் பார்க்க நல்லா இருந்துட்டா கேட்கவே வேணாம்”
“ஆமா! என்ன நீ அவளுக்கு ரொம்பத்தான் சப்போட் பண்ணற? அவகிட்டலாம் வழியாத. நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு அததை வைக்கற இடத்துல வைக்கணும்” அவர்களின் குரல் தேய்ந்து கொண்டே போனது. அந்த இன்னொரு நர்ஸ் உடை மாற்ற சென்றிருந்ததால் நல்ல வேளை இவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை.
அருணுடன் பேசிவிட்டு வந்த பேரன் ஆசையோடு பாட்டி என்று வந்து கட்டிக் கொண்டான். அவன் உள்ளே வந்ததும் இவளுக்கு அங்கு நிற்க அவஸ்தையாக இருந்தது. இருப்பினும் அவர்களை கவனிக்காமல் தன் வேலையை மட்டுமே செய்துக் கொண்டிருந்தாள். அவனின் பேச்சு அன்று முழுவதுமே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. பெரியவருக்கு அவளின் முக வாட்டம் நன்றாகவே தெரிந்தது. அவளை சிரிக்க வைக்க ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
பேரன் போன் பேச வெளியில் சென்றபோது ,
“ஏ! குமரி பொண்ணு இந்த குமரனை கட்டிக்கிறியா ?”
“ஏன் வாலிபரே ?”
“என்னோட பொண்டாட்டி கால்ல ஆப்ரேசன் பண்ணிக்கிட்டு சிரிக்கவே மாட்டேங்கறா அதுதான் புதுசா இளசா ஒன்னு பார்த்து வச்சுக்கலான்னு பாக்கறேன்.”
“ஓ! வரேனே பேத்தியா !”
“நீதாண்டி என் ராசாத்தி! அழகா அவரை கிழவன்னு சொல்லிட்டியே” மெச்சினாள் பாட்டி .
“இந்த கிழவனுக்கு ஏத்த குமரி எங்க பாட்டிதான்” செல்லம் கொண்டாடினாள் அமிர்தா. அது இருவருக்குமே ரசித்தது. பிடித்தது.
தனிமையில் தாத்தா,
” ரொம்ப தேங்க்ஸ் அமிர்தா . அவ இப்படிலாம் சிரிக்கறதே இல்ல. இன்னிக்கி உன்னாலதான்” அவர் கண்கள் பனித்தது . அதுவும் இன்னும் ரெண்டே நாள் நாங்க வீட்டுக்கு போயிடுவோம். அங்க போனா ?”அவரை ஆதூரமாக கட்டிக் கொண்டாள் பேத்தி .
“அடுத்து வர்ற நர்ஸும் நல்ல சிரிக்க சிரிக்க பேசுவாங்க. நல்லா பார்த்துக்குவாங்க. டோன்ட் ஒர்ரி.”
மீண்டும் பேருந்தில் இனியாவுடன் பிரயாணம். தோழியிடம் இருந்த முக மாற்றத்தை பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்டாள் இனியா.
எத்தனையோ கட்டு படுத்தியும் அந்த கட்டிடத்தை தாண்டும்போது அவளால் தன் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை.
“என்னடி என்னடி ஆச்சு ? ”
பேருந்திலேயே குலுங்கி குலுங்கி அழும் தோழியை சாய்த்துக் கொண்டாள் .
நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விட்டாள் அமிர்தா. பெரிய பூதாகாரமாக எண்ணிய பிரச்சனை,
“ப்ச்! இவ்ளோதான் மேட்டரா ?”
கண்ணை துடைத்துக் கொண்டு என்னடி இப்படி சொல்லற? என்ன பத்தி கூட ஓகே பட் என்னோட பேரன்ட்ஸ் ? அவங்கள எப்படிடி அவரு தப்பா பேசுவாரு?”.
“என்ன அவரு ? அவன். நமக்கு மரியாதை குடுக்காதவங்களுக்கு நாமும் மரியாதை குடுக்க வேண்டிய அவசியம் இல்ல. அப்புறம் என்ன சொன்ன ? பேரண்ட்சா ? ஊருல ஏதாவது பிரச்சனை வந்தாலே முதல் வார்த்தையே அம்மா வைதான் அசிங்க படுத்துவாங்க .வாய தொறந்தாலே ஒருத்தனுக்கு ****தே *** அதனால இதுக்கெல்லாம் நாம கவலை பட முடியாது. அதே மாதிரி அவனை அங்கேயே கழுவி கழுவி ஊத்தாம இங்க வந்து ஒப்பாரி வைக்கற?”
“இல்லடி! அவரோட தாத்தா பாட்டி ரொம்ப நல்லவங்க. அவங்கள நாம ஹர்ட் பண்ணிட கூடாது”
“இப்படி நீ மத்தவங்களுக்காவே பார்த்துகிட்டு இரு. உன்ன எப்போ பாக்க போறியா? முதல்ல சாப்பிடற வழிய பாரு. எவஎவனுக்கோ டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு?”
கூலாக சொன்னவள் வார்த்தைகள் அப்போதைக்கு அமிர்தாவின் மனதை மாற்றியதா ? அவளுக்கே தெரியவில்லை.
தொடரும்..
