மலர்-5
மறு நாள் காலையில் இவள் வந்த போதே விழித்து விட்டார் பாட்டி .
“என்ன பாட்டி அதுக்குள்ள எழுந்துட்டீங்க ?”
“வீட்டுலையும் சீக்கிரமே எழுந்துடுவேன். காலைல எழுந்து பூஜை பண்ணுவேன்.”
“ஓ ! ஆனா இனிமே எழுந்து வாக்கிங் போனதுக்கு அப்புறம் தான் எல்லாமே. இனிமே கை வலி கால் வலின்னு யாரையும் ஏமாத்த முடியாது. மெதுவா நடக்க ஆரம்பிக்கனுன்னு அருண் சொல்லி இருக்கான்”,
தாத்தாதான் குரல் கொடுத்தார்.
மெதுவாக பாட்டியை எழுப்பி பல் தேய்க்க வைத்தாள் . அதற்குள் அவருக்கு ஹார்லிக்ஸ் வந்தது. சூடாக இருந்ததை ஆத்தி மனைவிக்கு ஏற்றாற்போல் கொடுத்தார் ஆசைக் கணவர்.
“என்னங்க இது இப்டி ஆறி போச்சு” கணவனை கடிந்து கொண்டார். அவர் முகம் சுருங்கி விட்டது.
அவருக்கு வந்திருந்த காபியை கொடுத்தார். “ஆர்லிக்ஸ்,காபி இது என்ன வயிறா குப்பை தொட்டியா” அதற்கும் திட்டு வந்தது.
அமிர்தாவுக்கு தாத்தாவை பார்க்க பாவமாக இருந்தது.
“என்ன பாட்டி? என்னோட ஹீரோவ இப்படி திட்டறீங்களே ?”
இவள் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்து விட்டான் பாம்பு செவியுடையவன்.
அவன் வந்ததும் வழக்கம் போல் இவள் தன் வேலைகளை செய்ய போனாள் . அவன் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது தாத்தா,
” இவளிடம் என்ன இன்னிக்கு உங்க யூனிபார்ம் இல்லையா ?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
“இல்ல தாத்தா! நேத்து காலைல அந்த ஆக்ஸிடென்ட் கேஸ் வந்ததுல? அவரை பார்த்து பிடிச்சு தூக்கும் போது மேல தோள் சைடுல புல்லா ரத்தக்கறை. அது தோச்சாலும் பளிச்சுனு இருக்காது. அதான் வேற கேட்டிருக்கேன். என்னோட சைஸ் இல்ல. அதான் அது வரைக்கும் இதை போடலான்னு. நாளைக்கு இன்னொரு செட் இருக்கு.”
“ ஆனா நீ மட்டும் தனியா தெரிவியே ?”
“நான் ஓபி பாக்கறதுன்னா கஷ்டம். இங்க பாட்டிகூடத்தானே அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. அருண் சார்கிட்டையும் சொல்லிட்டேன்”.
“அருணுக்கு நீன்னா ரொம்ப இஷ்டமோ ?” தாத்தா விளையாட்டாக கேட்டார்
“அப்டிலாம் ஒன்னும் இல்லையே ? ஏன் கேட்கறீங்க ?”
“இல்ல சும்மாதான்”
பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுவதும் இவர்கள் பேசுவதில்தான் இருந்தது.
பாட்டியின் பழைய துணிகளை அடுக்கி கொடுத்தவள் “தாத்தா! பை ரெடி இந்தாங்க” என்று எடுத்து வைத்தாள்.
தாத்தா கிளம்பிய சிறிது நேரத்தில் பாட்டி மீண்டும் படுத்துக் கொண்டார். இவனும் தன் லேப்டாப்பில் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். அப்போது ரூம் க்ளீன் செய்ய ஆள் வந்தது. அவள் எழுந்து வழி விட்டாள் .
அவனும் எழுந்து கொண்டான். அவள் நகர்ந்தபோது வேண்டுமென்றே ஓரமாக ஒதுங்கி கொண்டான். இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அன்று தாத்தாவுக்கு முடியவில்லை. அதனால் மாலை வரை ஆனந்த் இருக்கும்படியாக இருந்தது. இவள் வேலை முடிந்ததும் தோழி இனியாவை பார்க்க சென்றாள் . அங்குதான் முதல் நாள் வந்த அந்த ஆக்ஸிடென்ட் ஆன வாலிபனும் இருந்தான். அவன் விக்ரம். அவன் அன்னை கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தார்.
“ஹாய் விக்ரம்! எப்படி இருக்கீங்க ? “மருந்தின் வீரியத்தில் தூங்கி கொண்டிருந்தவன் அப்போதுதான் எழுந்தான்.
“நீங்க ? ”
“நேத்து உங்கள கூட்டிட்டு வந்தபோது நாந்தான் அட்டண்ட் பண்ணேன்” சொல்லிக் கொண்டே ட்ரிப்சை சரி செய்தாள் . “நான் அமிர்தா. இங்க நர்ஸ்.” கண்கள் விரிய லேசாக புன்னகைத்தாள்
“ஓ ! ரொம்ப தேங்க்ஸ், என்ன கொஞ்சம் தூக்கி விடறீங்களா ?”
மெதுவாக அவளும் அன்னையும் அவனை எழுப்பி உட்கார வைத்தனர்.
“என்ன விக்ரம் இது? இப்படியா பைக் ராஷா ஓட்டறது ? ”
“அவன் என்ன பண்ணுவான் ? எல்லாம் அந்த சனியனால வந்தது. அவள் ஊருலேர்ந்து வரான்னு பிக்கப் பண்ண போய் இருக்கான். இன்னும் வேகம் இன்னும் வேகம்னு அது பின்னா டிலேர்ந்து சொல்லி சொல்லி வண்டிய கொண்டு போய் பள்ளத்துல விட்டுட்டான். அது தப்பிச்சுருச்சு. இவன் இப்படி கிடக்கிறான்.”
அவன் அன்னைதான் எரிச்சலோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
“யாரு ? “புரியாமல் கேட்டாள் அமிர்தா.
“ம்! சாரோட காது எலி ” நக்கலாக சொன்னாள் இனியா.
“என்னடி இது?” யாருக்கும் தெரியாமல் பல்லை கடித்தாள் அமிர்தா .
“நீ ஏம்மா இந்த புள்ளைய திட்டற ? அது சொல்லறது கரெக்ட்டுதான். இவன கொண்டாந்து இப்டி போட்டுருக்கோமே ? நேத்துலேர்ந்து இங்க இருக்கான். அது வந்து பாத்துச்சா ? அவளுக்கு ரத்தம்னா ஆகாதாம் . அவங்க அப்பாரு சொல்லறாரு, அதுவும் போனுல . இதுவே அவளுக்கு ஏதாவதுன்னா நாங்க விட்டுருப்போமா? ”
வந்த அழுகயை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.
அவரை இடுப்போடு கட்டி சமாதானப் படுத்தினாள் அமிர்தா .
“என்ன விக்ரம் இது? அவங்க சொன்னா ? நீங்க யோசிக்க வேணாமா? உங்க அம்மா நேத்து எப்படி இருந்தாங்க தெரியுமா ? அவங்க உசுரு அவங்ககிட்ட இல்ல. இதெல்லாம் தேவைதானா ? இப்பவும் இவங்க தான் இங்க அழுகுறாங்க. ஆனா உங்க அவங்க? ப்ளீஸ். அம்மாவை அழவிடாதீங்க.”
“இல்லங்க! நான் வேண்ணுன்னு பண்ணல” என்று தன்னிலை விளக்கம் தந்தான் விக்ரம்.
“புரியுது.”
“ப்ளீஸ்! இனிமேலாவது கவனமா இருங்க. அவங்ககிட்டையும் சொல்லுங்க. சொல்லி புரிய வைங்க. சீக்கிரமா உடம்ப தேத்திகிட்டு வேலைக்கு ஜாயின் பண்ணுங்க. டேக் கேர்”. அவன் கைகளில் தட்டிக் கொடுத்தாள் . லஞ்சுக்கு சென்ற ஆனந்த் கண்ணில் இது தெளிவாகவே விழுந்தது.
அதற்குள் அடுத்த நர்ஸ் வந்திருந்தார். அவளிடம் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாள் இனியா.
“ஓகே இனியா! நான் வெளில உட்கார்ந்திருக்கேன்” சொல்லி விட்டு வெளியில் வந்தவள் எதிரில் நின்றான் ஆனந்த் .
“ஏண்டி! உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? காலைல எங்க தாத்தா. இப்போ இவனா? ச்சே! எனன ஜென்மமோ?”
“ஏன் சார் உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வறீங்க ? போங்க போய் வேற வேல இருந்தா பாருங்க (அம்மணி நீயா சொன்ன ?)
மனதில் வந்த வார்த்தைகளை வழக்கம்போல அடக்கிக் கொண்டாள்.(அதானே அமிர்தாவா கொக்கா? கோவை சரளா குரலில் நாந்தான்)
இன்று அவள் பேசாமல் இருப்பதை தனக்கு சாதகமாக்கி கொள்ளும் ஆனந்த் அவள் ஏதாவது சொல்ல மாட்டாளா என்று எங்கும் காலமும் வரத்தான் போகிறது.
