மலர்-7
அவர்களின் காரிலேயே இவளது பயணமும் ஆரம்பித்தது. இரவு கட்டாயம் தங்கக் கூடாது என்ற கண்டிஷனோடு அனுப்பினார் தந்தை .
பெரிய கேட்டுகளை தாண்டி, பெரிய தோட்டம் தாண்டி அந்த பவுண்டைன் எதிரில் அந்த அரண்மனையின் வாயில் அருகிலேயே வண்டியை நிறுத்தினான்.
அவங்க ரொம்ப பெரிய இடம் என்று அருண் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. வீல் சேரை அவள் பிரிக்க, பாட்டியை கையில் அலேக்காக தூக்கினான் பேரன். புதிதாக பிறந்த குழந்தையை தூளியில் போடுவதை போல பாந்தமாக பாட்டியை தூக்கி வைக்கும் பேரனை கண்டு அவளால் அசராமல் இருக்க முடியவில்லை. அதிலும் அத்தனை நெருக்கமாக இருந்தால் ?
உள்ளே போகுமுன் ,
“பாட்டி ஆர்த்தி எடுக்கணும்” சொன்னாள் அமிர்தா.
தாத்தாவும் ஆமோதிக்க வாயில் வந்ததை முழுங்கி கொண்டான் ஆனந்த் .
கமலா ஆர்த்தி கரைத்து கொண்டு வந்தாள் .
“இந்தாங்க நர்சம்மா! நீங்களே எடுங்க” என்று அந்த விதவை பெண் இவளிடம் கொடுத்தாள் . “பரவால்ல! கமலா நீயே ஏடு எனக்கு ஒன்னும் பாகு பாடு இல்ல” பாட்டி சொன்னார்.
“இல்லம்மா! நீங்க இன்னும் தீர்காயுசா இருக்கணும் நான் வேணாம்”
“போடி! மனசுதாண்டி வேணும். சரி விடு என்ன சொன்னாலும் நீ கேப்பியா ?” செல்லமாய் கடிந்து கொண்டார்.
“நீயே எடு அமிர்தா ”
மெதுவாக சுற்றி பாட்டிக்கு நெற்றியில் திலகமிட்டாள் .
அதை கமலாம்மாவிடம் கொடுத்துவிட்டு பாட்டியை மெதுவாக அழைத்து சென்றாள் .
“வாம்மா வா!” சொல்லி அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார் தாத்தா. கீழேயே இவர்களின் அறை இருந்ததால் வசதியாக இருந்தது.
“ரூம் கீழேயே இருக்கறது வசதிதான் இல்ல பாட்டி?” அவள் வண்டியை தள்ளிக் கொண்டே கேட்டாள் அமிர்தா
“இல்லனாலும் கவலை இல்ல. லிப்ட் இருக்கு. அதனால கவலை இல்ல” பதிலுரைத்தாள் பாட்டி .
“ஓ !” அழகாக உதட்டை குவித்தாள் . ஏனோ சில சமயங்களில் ஆனந்தனால் அவள் மீதிருந்து கண்ணை எடுக்கத்தான் முடிவதில்லை. முயன்று முகத்தை திருப்பி வேலைக்காரனை பார்த்தான்.
அதற்குள் பாட்டியின் வாசம் பிடித்த முத்துவும் வைரனும் ஓடி வந்தார்கள். அங்கு புதியதாக நின்றிருந்த அமிர்தாவை பார்த்து இருவரும் சத்தமாக குறைக்க ஆரம்பித்ததும் அவர்களை பார்த்துக் கொள்பவர் அவர்களை அடக்கினார். இவள் பயந்து ஓடாமல் கத்தாமல் இருப்பதை பார்த்த முத்து மெதுவாக வந்து அவளை முகரத் தொடங்கியது. மெதுவாக அதன் தலையில் இவள் தடவிக் கொடுத்தாள் .
போனில் பேசிக் கொண்டிருந்த ஆனந்த் விசித்திரமாக பார்த்தான் அவளை. முத்துவை தொடர்ந்து வைரனும் அதே போல நுகர்ந்தான் . அவனுக்கும் செல்ல கொஞ்சல் கிடைத்தது.
அன்றே அவர்கள் இருவரும் அமிர்தாவின் பாய் பிரண்ட்ஸ் ஆகி விட்டார்கள். நான் அமிர்தா. நீங்க ?”
அவள் கை நீட்டியதும் அவர்களும் கை குலுக்கினார்கள் .
“இவன் முத்து . இவன் வைரன் .” பாட்டிதான் அறிமுகப் படுத்தினார்.
“வாவ்! ஆளுக்கு ஏத்த மாதிரிதான் பேர் வச்சிருக்கீங்க. சூப்பரா இருக்கு.”
“இங்கிலிஷ் பேரு வைக்கலன்னு பேரனுக்கு குறை. எனக்கு அதெல்லாம் புடிக்காது.”
மெதுவாக தோழர்களை தடவிக் கொண்டிருந்த கை தானாக நின்றது அவன் பெயரைக் கேட்டதும்.
“நான் போய் ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன். நீங்க டயர்டா இருப்பீங்க. முதல்ல ஏதாவது குடிங்க.” சமையல் செய்பவரிடம் பாட்டிக்கு தேவையானதை செய்ய சொன்னாள் . அது தயாராகி வருவதற்குள் பாட்டியை கழிவறைக்கு அழைத்துச் சென்று அவரை ப்ரஷ்ஷாக்கி அழைத்து வந்தாள் .
பாட்டிக்கு அப்போதைக்கு வந்த பானத்தை மெதுவாக ஊட்டினாள்.
ஊட்டிக் கொண்டே தாத்தாவை பார்த்து ,
“தாத்தா நீங்க என்ன சாப்பிட போறீங்க? அங்க லன்ச் சரியா சாப்பிடலையே ?”
ஏனோ கணவன் மனைவி இருவருக்கும் மனதில் ஏதோ சொல்ல முடியாத எண்ணம், மகிழ்ச்சி. இருவருக்குமே மனதில் ஏதேதோ தோன்றியது. அவர்களின் மனக் கணக்கை பேரன் நடத்த விடுவானா ?
“இல்லமா! இப்போ எனக்கு எதுவும் வேண்டாம்.”
“நீங்க ஏதாவது ஜூஸாவது குடிக்கணும். அப்ப தான் கொஞ்சம் ப்ரஷா இருப்பீங்க. இருங்க உங்களுக்கு என்ன வேணும்? ஆப்பிள் குடிங்க . அதான உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.”
அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆனந்திற்கு இப்போது ஆச்சர்யம்.
“பரவால்ல. நல்லாத்தான் வேலை செய்யறா” மனதில் மெச்சினான். வார்த்தைகளில் கொட்டினால் அவன் ஆனந்த் இல்லையே ?அவள் செய்கையை ரசித்த தாத்தா, அதை வெளியில் காண்பிக்காமல் இருக்க சட்டென,
“ஏண்டி! கால்ல தானே பிரச்சனை. கை நல்லாதானே இருக்கு அந்த பொண்ணையே ஊட்ட சொல்லற ?”
“அதனால என்ன தாத்தா, நமக்காக எத்தனையோ வருஷம் செஞ்சுருக்காங்க. இப்போ வயசானதுக்கு அப்புறம் மத்தவங்க தன்னை கவனிக்க ஆசை . இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா. எங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு செய்ய மாட்டேனா ?”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போது சட்டென அவள் கையில் இருந்த பானத்தை பிடிங்கி எங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு நாங்க செய்வோம். நீ வந்த வேலைய மட்டும் பாரு.”
வார்த்தைகளை கடித்து துப்பினான்.
மனது வலித்தாலும் , அதை காண்பிக்காதவள் அவன் இருந்த அறையை விட்டு வெளியேறினாள் , ஆனால் அவன் பேசுவது மட்டும் கேட்டது.
“என்னடா இது? இவ்ளோ கேவலமா பிகைவ் பண்ற? “ தாத்தாதான் அவனை திட்டினார்.
“தாத்தா உங்களுக்கு தெரியாது, இந்த மாதிரி பொண்ணுங்க சிரிச்சு சிரிச்சு பேசி ஆள மயக்கிடுவாங்க . அருண்கிட்ட பிடிவாதம் பிடிச்சு அவ இங்க வந்திருக்கா . ஏற்கனவே அவ ஒரு மாதிரி. இப்போ நம்ம அந்தஸ்த்தை வேற பார்த்துட்டா இல்ல. சும்மா விடுவாளா“
“மரியாதையா பேசுடா” பாட்டி அதட்டினார்.
“ஏற்கனவே அனுபவப்பட்டும் யாரு எப்படின்னு உங்களுக்கு தெரிய மாட்டேங்குது” சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வந்தான். வந்தவன் சிறு உபச்சாரமாக நெருப்பு பார்வையையும் கொடுத்துட்டே போனான்.
அவன் அவளை பற்றி தவறாக எண்ணுவதற்கு என்ன காரணமாக இருக்கும்? விடை விரைவில் தெரியும்.
அன்று மாலை வந்த நர்சிடமும் ஆயாவிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தாள்.
கிளம்பியவளிடம் தாத்தா ,
“உன்னோட நம்பர் குடுத்துட்டு போம்மா . ஏதாவது வேணுன்னா போன் பண்ணுவேன்”
“சரி தாத்தா” நம்பர் கொடுத்துவிட்டு பாட்டிக்கும் தைரியம் சொல்லி விட்டு கிளம்பினாள். இரவில் வந்த அந்த நர்ஸும் ஆயாவும் ஒரு வழியாக ஒத்து போனார்கள். ஆனால் பகலில் தான் நல்லதாக ஆள் கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள். வந்தவர்களில் சிலர் நாய்களை பார்த்து ஓட்டம் பிடித்தார்கள் அல்லது பாட்டியின் அடத்தினால் ஓடிப் போனார்கள். சிலர் ஆனந்தின் மிரட்டலில் விரட்டலில் ஓடிப் போனார்கள் என்பது தனி விஷயம் அதுவும் இரண்டே நாட்களில்.
டயட் என்று மருத்துவமனையில் அவர்கள் கொடுத்த உணவு பாட்டிக்கு சுத்தமாக உள்ளே இறங்கவில்லை. தாத்தாவும் பேரனும் எத்தனையோ மல்லு கட்டினார்கள். அமைதியாக சொன்னால் பாட்டி மற்றவர்களை அதட்டுவார் . இவர்கள் அதட்டினால் அவர் அழுவார். பாட்டியை சமாளிக்க முடியாமல் தாத்தாவும் தவித்தார். அதன் எதிரொலியாக அருணுக்கு கால் வந்தது. அப்போதுதான் அருண் அமிர்தாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“ஐயோ சார்! நான் உயிரோட இருக்கறது உங்களுக்கு புடிக்கலையா ?”
“ப்ளீஸ் அமிர்தா . கொஞ்ச நாளைக்கு தானே ?”
“இல்ல சார்! என்னால முடியாது. நீங்க நம்ம ஹாஸ்பிடல்லயே வேற யாராவது வருவாங்களான்னு கேளுங்க, என்ன ஆள விடுங்க”
“இல்ல அமிர்தா! அவர்களுக்கு இப்போதான் ஆபரேஷன் ஆகி இருக்கு. ஹெல்த்தி டயட் ரொம்ப தேவை. அதே மாதிரி இன்பெக்ஷன் ஆகிட கூடாது. அவங்களோட பிஸிக்கல் ஹெல்த் மெண்டல் ஹெல்த் ரெண்டுமே ரொம்ப முக்கியம். அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா ஆனந்த் என்ன இந்த ஹாஸ்பிடலை சும்மா விட மாட்டான். உனக்கே அவன் எப்படி பட்டவன்னு தெரியும்”
“அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்?”
“உனக்கும் அவங்களுக்கும் ஒரு மாதிரி நல்லா ஜெல் ஆகுது. உன்னால ஈஸியா அவங்கள ஹாண்டில் பண்ண முடியும். அங்க இருக்கற டாக்ஸ் கிட்டையும் உனக்கு ஜெல் ஆகுது வேற என்ன?”
அவன் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள்,
” உங்க பிரண்டு மட்டும் அங்க இல்லன்னா என்கிட்ட நீங்க இவ்ளோ சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க” தெளிவாக மறுத்துவிட்டாள்.
அப்போதுதான் அவன் போன் அடித்தது.
