1..ராட்சசனின் காதல் பாவை

1… ராட்சசனின் காதல் பாவை

சென்னை சிட்டி முழுவதும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூடி நியூ இயர் செலிப்ரேஷன் செய்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் இங்கு…

“டேய், நீங்க எல்லாம் யாருடா? என்னை எதுக்கு கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்.

அவன் எதிரில் நிற்பவர்களோ எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்தவன் இன்னும் கடுப்பாகிக் கத்தத் தொடங்கினான்.

“டேய், உங்களைத் தாண்டா கேட்கிறேன்! நீங்க எல்லாம் யாரு? என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இப்படி கட்டிப் போட்டு வச்சிருக்கீங்க? யாருடா நீங்க? சொல்லுங்கடா!” என்று கேட்டான் அவன்.

ஆனால், இவன் கேட்ட கேள்விக்கு அங்கு நிற்கும் எவரும் பதில் சொல்லவில்லை. ஏன், அவர்களுக்கு அங்கு ஒருவன் இருப்பதாகவே தோன்றவில்லை.

அப்பொழுது அந்த பில்டிங் அதிரும் அளவுக்கு காலடி சத்தம் கேட்டது.

அதைக் கேட்டவன், யார் வருகிறார்கள் என்பது போல் பார்த்தான். அடுத்த நொடி, அவன் கண்களில் அப்பட்டமாகப் பயம் தெரிந்தது.

அங்கு வாசலில் ஆறு அடிக்கு சற்று உயரமாக ஒருவன் நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்தவனுக்கு அவன் மனிதன் அல்ல… அந்த எமனே என்பது போல் தோன்றியது. வேர்வைத் துளிகள் அவன் முகத்தில் முத்து முத்தாகப் பூத்தன.

ஆனால், அங்கு வாசலில் நின்றவன் சிங்கம் போல் நடந்து வந்து, தனக்கென்று போடப்பட்டிருந்த அந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தான். எதிரில் இருப்பவனை அனல் கக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையைப் பார்த்துப் பயந்தவன்,

“சாரி சார்… உங்களைப் பத்தித் தெரியாம அப்படி பண்ணிட்டேன். இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன் சார். என்னை விட்டுடுங்க…” என்று கெஞ்சினான்.

அவன் சொல்லியதைக் கேட்டவன், பக்கத்தில் நின்றிருந்தவனை ஒரு பார்வை பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவன், உடனே எதிரில் இருந்த எல்.இ.டி. திரையை ஆன் செய்தான்.

அதில் சில காட்சிகள் ஓடத் தொடங்கின.

அதைப் பார்த்தவன் அதிர்ந்து அந்தத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார், அவரைப் பத்தித் தெரியாம நீங்க மோதுறீங்கன்னு நினைக்கிறேன்” என்று ஒருவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இங்க பாருங்க சார்… அவனைப் பத்தி எல்லாம் தெரிஞ்சதனாலதான் நான் மோதுறேன். எத்தனை நாளைக்குத்தான் அவனுக்குப் பயந்துட்டு நம்ம எதுவுமே பண்ணாம இருக்கணும்?” என்று கேட்டான் அவன்.

“சார், பயந்துட்டு எதுவும் பண்ணச் சொல்லல. நமக்குப் பணத்தைவிட நம்ம உயிர் முக்கியம் இல்லையா? அவர் கிட்ட மோதின யாருமே இதுவரைக்கும் உயிரோட இருந்ததில்ல. அதனாலதான் உங்களுக்கு இவ்வளவு தூரம் சொல்றேன். அப்புறம் அது உங்களோட விருப்பம்.”

“இதுக்கெல்லாம் பயந்தா வாழவே முடியாது. அப்படி அவனால என்னதான் பண்ண முடியும்னு நானும் பார்க்கிறேன்” என்று சொன்னான் அவன்.

“நான் சொல்றதைச் சொல்லிட்டேன். இதுக்கு மேல உங்களோட விருப்பம். அவர் கிட்ட மோதினா என்ன நடக்கும்னு நான் முன்னாடியே சொல்லிட்டேன். மீறி நீங்க பண்ணுவீங்கன்னா, உங்க தலையெழுத்தை யாராலயும் மாற்ற முடியாது” என்று சொல்லியவன் அங்கிருந்து சென்று விட்டான்.

அத்துடன் அந்த எல்.இ.டி. திரையில் ஓடிக் கொண்டிருந்த வீடியோவும் முடிந்தது.

முழுவதுமாக அந்தத் திரையில் ஓடியதைப் பார்த்தவனுக்கு உடல் முழுவதும் வேர்வைத் துளிகள் பூத்திருந்தன. எதிரில் அமர்ந்திருந்தவனைப் பயத்தோடு பார்த்தான்.

அவனின் பார்வையோ கூர்மையாக அவனைத் துளைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவனுக்கு இன்னும் பயம் வர,

“சாரி சார்… நான் தெரியாம பேசிட்டேன். ப்ளீஸ் சார், என்னை விட்டுடுங்க” என்று சொன்னான்.

ஆனால், அவனின் வார்த்தைகள் முழுதாக வெளியே வரவில்லை.

அவனின் வார்த்தைகள் முடியும் முன்பே, அவன் நெற்றிப் பொட்டில் தோட்டா பாய்ந்திருந்தது.

அவனின் உயிர் அவனை விட்டு பிரிந்திருக்க, அதைப் பார்த்தவன் எந்தச் சலனமும் இல்லாமல் பக்கத்தில் இருந்தவனைப் பார்த்து,

“இவனோட டெத் பார்க்குற எல்லாருக்கும் இனி என்னை எதிர்த்து நிக்கணும்னு எண்ணமே வரக்கூடாது” என்று சொல்லியவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

அங்கிருந்து கிளம்பியவன், அவன் எப்பொழுதும் வரும் ஹோட்டலுக்கு வந்தான்.

இவன் வந்ததைப் பார்த்த அந்த ஹோட்டல் மேனேஜர் வேகமாக ஓடி வந்தவன்,

“சார், எல்லாமே அரேஞ்ச் பண்ணியாச்சு சார்” என்று அவன் கேட்பதற்கு முன்பே சொன்னான்.

இவன் சொல்லியதை அனைத்தையும் கேட்டவன், பதிலுக்குப் பேசவும் இல்லை. சரி என்பது போல் தலையை அசைக்கவும் இல்லை.

நேராக அவன் எப்பொழுதும் தங்கும் அறைக்கு வந்தவன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனையே ஒரு அழகு மங்கை வரவேற்றாள்.

“ஹாய் பேபி” என்றாள் அவள்.

ஆனால், இவனோ அதைக் கொஞ்சமும் காதில் வாங்காமல் அங்கிருந்த கபோர்டைத் திறந்தான். அதில் பல ரக மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதில் ஒன்றை கையில் எடுத்தவன் சோபாவில் அமர்ந்து அதை பருகத் தொடங்கியிருந்தான்.

அதைப் பார்த்த அந்தப் பெண், அவன் அருகில் வந்து அமர்ந்தவள், மெல்ல அவன் மீது தன் கைகளைப் பரப்பிக் கொண்டிருந்தாள்.

அது தெரிந்தும் எந்த மறுப்பும் சொல்லாமல் மதுவை அருந்திக் கொண்டிருந்தான் அவன்.

ஆனால், அந்தப் பெண்ணின் கைகளோ அவன் சட்டைக்குள் நுழைந்து, அவன் நெஞ்சின் ரோமங்களை வருடத் தொடங்கியிருந்தன.

மெல்ல அவனை இன்னும் நெருங்கியவள், அவன் கழுத்துப் பகுதியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, அவன் சட்டைப் பட்டன்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழட்டியவள், கழுத்திலிருந்து தன் முத்தப் படலத்தை அவன் நெஞ்சுக் குழி வரை கொண்டு வந்தாள்.

அதுவரை பொறுமையாக இருந்தவன், இதற்கு மேல் தன்னால் பொறுக்க முடியாது என்று நினைத்தானோ என்னவோ, அவளை அப்படியே அந்த சோபாவில் தள்ளினான்.

கையில் இருந்த மது பாட்டிலை அவள் மீது மெல்ல ஊற்றத் தொடங்கினான்.

அதில் அவள் பதறி எழுந்திருக்க முயன்றபோது, அவளை அப்படியே அந்த சோபாவோடு வைத்து அழுத்தியவன், கையில் இருந்த மது பாட்டிலைத் தூக்கி எறிந்துவிட்டு அவள் மீது படரத் தொடங்கினான்.

எங்கெல்லாம் மது துளிகள் இருந்ததோ, அங்கெல்லாம் அவன் மெல்ல நாவால் ருசிக்கத் தொடங்கியவன், மெல்ல அவளை ஆட்கொள்ளத் தொடங்கினான்.

முதலில் என்னவோ அவனின் தொடுகை மென்மையாக இல்லாவிட்டாலும், ஒரு பொறுமை இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல அவனின் பொறுமை காற்றில் பறந்தது போல், அவளது ஆடைகளைக் கிழித்து எறிந்தவன், அவளைத் தன் வசப்படுத்தியிருந்தான்.

அவளுடன் மூன்று, நான்கு முறை உறவாடியவன், அவளை விட்டு எழுந்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஆனால், அந்தப் பெண்ணின் நிலையோ, ஐயோ… பரிதாபம் என்பது போலத்தான் இருந்தது.

அவளுக்கே ஒரு நிமிடம், அவன் மனிதனா, மிருகமா என்பது போல் மனதில் தோன்றியது.

அவன் ஏற்படுத்திய காயங்களில் அவளால் கொஞ்சம்கூட நகர முடியாமல் அப்படியே படுத்திருந்தாள்.

இப்படியே பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்க, குளியலறைக்குள் புகுந்தவன் இப்பொழுது குளித்து முடித்துவிட்டு ஒரு டவலுடன் வெளியே வந்தான்.

அவளை கேள்வியாகப் பார்த்தான்.

அவனின் பார்வை புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அதில் கடுப்பானவன்,

“ஏய்! இன்னும் நீ கிளம்பலையா?” என்று கர்ஜனையாய் கேட்டான்.

அவன் கேட்ட தோரணையில் அந்தப் பெண் பயந்தவள்,

“என்னோட டிரஸ் எல்லாம் கிழிஞ்சிடுச்சு. நான் டிரஸ் இல்லாம எப்படி கிளம்புறது?” என்று ஒருவித பயத்தோடு சொன்னாள்.

அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், தன் போனை எடுத்து யாருக்கோ மெசேஜ் செய்தான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த ரூமின் பெல் அடித்தது.

அந்தப் பெண்ணின் நிலையைப் பற்றிக்கூட யோசிக்காதவன்,

“கம்மிங்” என்று மட்டும் சொல்லியிருந்தான்.

இவன் குரலைக் கேட்டவுடன், ஒரு பேக்குடன் உள்ளே நுழைந்தவன், அங்கிருந்த டீப்பாயில் அதை வைத்துவிட்டு சென்றான்.

இப்படி சற்று நேரத்தில் உள்ளே ஒருவன் வந்ததைப் பார்த்து அந்தப் பெண்ணும் பதறியவள்,

“சார், நான் எப்படி இருக்கேன்னு நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம இப்படி இன்னொருத்தரை உள்ள வரச் சொல்றீங்க?” என்று சற்று கோபமாகக் கேட்டாள்.

அடுத்த நொடிப்பொழுதில் அவளிடம் நெருங்கியவன், அவள் கழுத்தைப் பிடித்துச் சற்று மேலே தூக்கியான்.

அவளைப் பார்த்துக் கோபமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“ஏய்! என்னடி, அப்படியே பத்தினி மாதிரி சீன் போடுற? பணத்துக்காக வந்தவ தானே? என்னவோ இதுக்கு முன்னாடி உன்னை எவனும் பார்க்காத மாதிரி, எவன் கூடையும் படுக்காத மாதிரி பேசுற.

நீ இப்போ பேசின பேச்சுக்கு உன்னை நான் இங்கேயே கொன்னு புதைச்சிருப்பேன். என் கூட படுத்தியேன்னு ஒரே காரணத்துக்காக உன்னைச் சும்மா விடுறேன்” என்று சொல்லியவன், அவளைப் புத்தென்று கீழே விட்டான்.

பின்னர் அந்தக் கவரை எடுத்து அவள் மீது வீசி எறிந்திருந்தான்.

ஏற்கனவே அவன் ஏற்படுத்தியிருந்த காயங்கள் அவளுக்கு வலி தந்திருக்க, இப்பொழுது அவன் கழுத்தைப் பிடித்ததில் இன்னும் வலி அதிகரித்தது.

இவனிடம் இருந்தால் தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நினைத்தவள், அவன் தூக்கி எறிந்த ஆடைகளை அவசர அவசரமாக மாட்டிக் கொண்டு, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடினாள் அந்தப் பெண்.

அந்தப் பெண் சென்றதும் அந்த அறைக்குள் அவனின் மேனேஜர் நுழைந்தான்.

“சார், இன்னும் கொஞ்ச நேரத்துல நியூ இயர் பார்ட்டி இருக்கு” என்று சொன்னான் சுனில்.

“சோ வாட்?” என்று சொன்னான் அவன்.

அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தவன், எங்கு சென்று முட்டிக் கொள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்னர் மீண்டும் மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.

“சார், நியூ இயர் பார்ட்டி மட்டும் இல்ல… நம்ம எடுத்து இருக்க ப்ராஜெக்ட்டுக்கு சைன் பண்ணணும்” என்று சொன்னான் சுனில்.

“என்ன சுனில், இதெல்லாம் புதுசா இருக்கு?” என்று கோபமாகக் கேட்டான் அவன்.

“சார், அன்னைக்கு ஜீகே சார் உங்ககிட்ட சொன்னது தான். நீங்களும் இதுக்கு ஓகேன்னு சொன்னீங்க” என்று பயத்துடன் எச்சிலை விழுங்கியபடி சொல்லி முடித்தான் சுனில்.

ஈ.சி.ஆர். கடற்கரை ஓரம், பார்க்கும் அனைவரும் பிரமிக்கும் அளவுக்கு அந்த இடம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதுவும் இல்லாமல், நியூ இயர் செலிப்ரேஷனுக்காக அனைத்து பக்கங்களிலிருந்தும் வானவேடிக்கைகள் வெடித்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது அந்த பீச் ரெஸ்டாரன்ட் முன்பு ஒரு பி.எம்.டபிள்யூ. கார் வந்து நின்றது.

அதில் இருந்து கிரே கலர் சூட் அணிந்து கொண்டு இறங்கி நின்றான் அவன்.

அதைப் பார்த்து ஜீகே வேகமாக வந்தவர்…

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

பாவை தொடரும்…

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!