ஆர். எ .புரம் சென்னை
கோபமாக ஜெனி தன் கை பையை விசிறி அடித்ததை, ராஜம்மா பார்த்ததும், மனம் கலங்கினார்.
‘இந்த பெண்ணை ஏன் படுத்துகிறார்கள். உடம்பு சுகமில்லை என்று ஆஸ்பத்திரிக்கு போனாலும், அங்கேயும் வினை வந்து விட்டது’
‘அந்த தம்பி தினேஷ்டன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது பாப்பா-
பெரிய மேடமே இப்படி இருந்தால், இந்த பெண் எப்படி நிம்மதியா இருக்க முடியும். தைரியமான பெண். எதோ பெற்றோர்க்கு கட்டுபட்டு இருக்கு. இவர்களே கெடுத்து கொள்வார்கள் போல இருக்கே’….…
‘சரி. நமக்கேன் வம்பு .நாம போய் பாப்பாக்கு எதாவது ஜூஸ் கொடுத்து விட்டு வருவோம்” என்று ஆரஞ்சு பழத்தை எடுத்து பிரஷ்ஷாக ஜூஸ் போட்டாள்..
ஜெனியிடம் கொண்டு போய் கொடுத்தாள்.
மதி அவள் ஜூஸ் எடுத்துக் கொண்டு போவதையே பார்த்தாள்.
‘முதலில் இவளை வேலை விட்டு தூக்கணும். இவள் சமையலுக்கு நாக்கு அடிமையா போயிடுச்சு தற்காலிகமாக சமையல் செய்தவர்கள் சாப்பாடு சுத்தமா வாயிலே வைக்க முடியவில்லை. வேறு யாரும் கிடைக்கமலா போய் விடுவார்கள்.
அப்ப இருக்குடி உனக்கு ‘என்று மனதில் கருவிக் கொண்டாள்.
ஜெனிக்கு தினேஷ் போன் செய்தான்.
“ஹலோ ஜெனி…. சேப்பா (safe) போயிட்டியா . அந்த பிரசாத் அவ்வளவு வேகமா போனான்..”
“ஹலோ தினேஷ்……. வந்துட்டேன். ஒன்றும் பிரச்சனையில்லை. நீ இப்ப ப்ரீயா. “
“ஆமாம். வீட்டுக்கு கிளம்பப் போறேன்.”
“எனக்காக ஒரு இடத்துக்கு வருவியா.உனக்கு டயர்டா இருந்தால் சொல்லு. வேண்டாம்.”
“நோ பிராப்ளம்.. உன்னை வீட்டில் விட முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது…என் பாஸ் அவரோட ஆடி காரை கொடுத்து உன்னை வீட்டில் விடச் சொன்னார். பிரசாத் வந்துட்டான். அவன் போன வேகம் எனக்கு பயமா இருந்தது.”
“ஒன்றும் பிரச்சனையில்லை தினேஷ்.”
வீட்ல தான் இருக்கேன். நீ அங்கு வருவதாக இருந்தால் நானும் கிளம்பறேன்.”
“ஓ.கே” என்று தினேஷ் சொன்னவுடன்,
அவனுக்கு வர வேண்டிய இடத்தை சொன்னாள்.
இவளும் Sequin எம்பிலிஷ்டு நெட்டடு
மிடி டிரஸ் , நல்ல கருப்பு கலரில் சில்வர் ஜரி மின்ன,மிதமாக மேக்கப்பில் அட்டகாசமாக படிக்கட்டில் இறங்கி வர,
அம்மாவும்,மதியும் இவள் வருவதை பார்த்தார்கள்.
சுதா தன் மகளைப் பார்த்து வியந்து. “எங்கேடி போற “. என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்.
யாருடனோ போனில் இருந்த அண்ணி மதிவதனி போனை அணைத்து விட்டு,
“என் அண்ணன் அழைத்த போது பெருசா குதித்த, இப்ப மட்டும் எப்படி போற. எங்கே போற “என்று கேட்க,
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் எங்கு போய் இருக்கேன் என்று உங்களுக்கு தெரிய வரும். இப்ப டாட்டா சொல்லிவிட்டு,
தன் மினி கூப்பர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“அத்தே… இது சரியில்லை என் அண்ணன் செய்தது தப்பு என்று இப்பத்தான் அவனை திட்டினேன். இவ என்னடானா நல்ல டிரஸ் பண்ணிக்கொண்டு வெளியே போறா. நாங்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா “என்று பொரிய,
சுதாவும் ‘ஏன் தான் இந்த ஜெனி இப்படி நடந்து கொள்கிறாளோ அப்படி எங்கத் தான் போவாள்’. என்று உடலை குலுக்கியபடி , மதிக்கு பதிலேதும் சொல்லாமல் தன் அறைக்கு போய் விட்டாள்..
இவள் கார் பிரசாத் போன 5 ஸ்டார் ஹோட்டலில் நின்றது.
காரை வேலே பார்க்கில் விட்டு, திரும்புவதற்குள், தினேஷ் தன் பைக்கில் வந்தான்.
“ஹாய்”.. என்று சொல்லி வரவேற்றாள்.
அவளை ப் பார்த்ததும், “ஹே.. யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்” என்று சொல்லி அவளை லேசாக அணைத்தான்.
“இங்க திடீரன்று வரச் சொன்ன.”.
“சொல்றேன்.”
நடந்ததை சுருக்கமாக சொன்னாள்.
“அவன் இங்கத்தான் இருப்பான். அவன் முன்னாடியே நாம் இரண்டு பேரும் டான்ஸ் ஆடணும். அவனுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குது.”
அந்த பஃபுக்குள் நுழைந்தர்கள்.
தினேஷ் நண்பர்களுடன் போய் இருக்கிறான் . ஆனால், 5 ஸ்டார் பஃபுக்கு வருவது இதுவே முதல் தடவை.
உள்ளே நுழைந்தர்கள். இவளின் அண்ணன் அங்கே பிளாட்டினம் மெம்பர்ஷிப் கார்டு ஹோல்டர்.
உள்ளே நுழைந்ததும், முதலில் குளிருட்டும் காற்று, முகத்தில் ஜில்லென்று பரவியது. .சுவர் முழுவதும் கண்ணாடிகளால் ஒளிர்ந்த விசாலமான அரங்கம். தலைக்கு மேலே நீளமான கிரிஸ்டல் விளக்குகள் தங்க நிற ஒளியை உமிழ்ந்தது.
ஒரு பக்கத்தில் நீண்ட பாலீஷ்டு வுட்டன் கவுண்டர். -அதன் பின்னால் பல வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்ட விலையுயர்ந்த இப்போர்ட்டடு பாட்டில்கள் விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
பார்டெண்டர் பாய்ஸ் அந்த பாட்டில்களை சிவப்பு, ஊதா என்று இடைவிடாமல் மாறி கொண்டே இருக்கும் எல்இடி விளக்கு வெளிச்சத்தில் தூக்கி பிடித்தும்,கிளாஸ்களில் உயரே ஊற்றி நிரப்பியும், காண்போரை கவர்ந்தார்கள்.
அங்கே ஏற்கனவே மேற்கத்திய இசை ஆரம்பித்து, விதவிதமான உடை அணிந்த இளைஞர்கள் தங்கள் தோழிகளுடன் அந்த இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டியிருந்தனர்.
தினேஷ்ம், ஜெனியும் முதலில் அங்கு போடப்பட்டு இருந்த மெத்தை போன்ற சாப்ட் சோபாக்களில் அமர்ந்தனர்.
‘பிரசாத் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு நேர் எதிர் சோபா . ஒவ்வொரு மேசையிலும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருந்தது.
பிரசாத்தும், அவனது நண்பர்களும் அமர்ந்து இருந்தனர்.
ஜெனி வந்த போதே லுக் தேர், ஒரு பியூட்டி வருகிறாள் என்று ஒருவன் சைகை காண்பித்தான். அவனுக்கு ஜெனியை தெரியாது.
யாரென்று பிரசாத் பார்க்க,..ஜெனியும், தினேஷும்.
அதுவும், இவர்கள் டேபிளுக்கு அருகிலே அமர,கோபம் உச்சந்தலையில் ஏறியது. நான் கூப்பிட்டேன். அப்போ வராதவள், இவனுடன் வந்து இருக்கிறாளே. பல்லை நறநறவென்று கடித்தான்.
பெருத்த அவமானமாக இருந்தது.
பேரர் இவர்களுக்கு டிரிங்ஸ் வைத்தவுடன், குடித்து விட்டு தினேஷ் நடனமாட போலாமா என்று கேட்டு கையை நீட்ட,அதை பற்றிக் கொண்டு அவளும் அவனும் ஆட போய் விட்டார்கள்.
அவர்களுக்குள் கெமிஸ்டரி பர்பெக்டா ஒத்து போய் இருந்தது.
அதை அங்கே பிஸினஸ் பேச வந்தவர்களும், பொழுது போக்க வந்த கனவான்களும், யுவதிகளும் கண்டு ரசித்தனர்.
இவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, தாளம் தப்பாமல் ஆடிக் கொண்டுயிருந்தனர்.
ஜெனி அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு, அப்படியே இருவரும் உலகத்தை மறந்தார்கள்.
பிரசாத்தும் அவன் நண்பர்களும் பொறாமையுடன் பார்த்துக் கொண்டு யிருந்தாரகள். பார்டெண்டர் களிடமிருந்து வரும் சிவப்பு வெளிச்சம் பிரசாத் முகத்தில் பிரதிபலித்தது. கடும் சிவப்பில் இருந்தான்.
நடிகன்.. அவனிடம், “அது யாருடா. உன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவனுடன் மெய்மறந்து ஆடுகிறாள்.”
“அவன் ஒரு சாதாரண டாக்டர் டா . சமூகத்தில் பெரிய அந்தஸ்து இல்ல. இவ என்னவோ. அவனை பெரிய ஹீரோவா நினைக்கிறா. அழகி ன்று திமிர் வேற .எப்படியாவது அவள் திமிரை அடக்க வேண்டும். கோபத்தில் அவசர அவசரமாக அந்த விலையுயர்ந்த விஸ்கியை வாயில் ஊற்றிக் கொண்டான்.
அவன் நண்பர்களை பார்த்து, “எனக்கு ஒரு உதவி செய்வீர்களா” என்று கேட்டான்.
“என்ன செய்யணும். “
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு,
“அவளை கடத்தி விடலாமா”…?
நடிகன் பின்வாங்கினான்.
“என்னை சேர்த்துக் கொள்ளாதே. இப்பத்தான் அவன் அண்ணனிடம் அடி வாங்கினேன். நல்லவேளை என் முகத்தை எதுவும் செய்யவில்லை. .தப்பித்தேன் .இல்லையென்றால் நான் நடிப்புக்கே முழுக்கு போட்டு இருக்க வேண்டும்.”
“ஏண்டா இப்படி பயப்படுற. “
“டேய்.. நான் ஆஸ்பிட்டலில் படுத்து இருக்கும் போது, அந்த வெளிநாட்டு தயாரிப்பு நிறுவன ஆட்கள் பயமுறுத்தி போய் விட்டார்கள். இந்த மாதிரி வேண்டாத வேலையெல்லாம் செய்து,
“எங்கள் படத்திற்கு நஷ்டமானால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இன்டஸ்டிரியை விட்டு துரத்தி விடுவோம் என்று எச்சரித்து போய் விட்டார்கள். .ஸாரிடா . என் கேரியர் எனக்கு ரொம்ப முக்கியம்.” என்று அவன் கேட்ட உதவியை நிராகரித்தான்.
மற்றவர்களும், எதோ காரணத்தை சொல்ல,
“வெல். இத்தனை நாளா உங்களை என் தோழர்கள் என்று நினைத்தேன்.
எனக்கு ஒரு அவமானம் என்றால், அது உங்களுக்கும் என்று நினைத்தேன். அப்படி இல்லை என்று தெரிந்துக்கொண்டேன்.” என்று அவ்வளவு குடி குடித்தாலும் மனம் நொந்து சொன்னான்.
விஷால் என்பவன், “கோவித்துகொள்ளாத டா மாப்பிள்ளை .நாங்கள் சுயமாக சம்பாதித்த சொத்தா வைத்து இருக்கிறோம். எல்லாம் அப்பா சம்பாதித்தது. எதாவது இஷ்யூஸ்ஸில் மாட்டினோம் என்றால், ரோட்டில் பிச்சை தான் எடுக்கணும்.. இப்படியே எங்கள் பிழைப்பு ஓடுகிறது. அதை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லையடா.. ஸாரி” என்று அனைவர் சார்பாக கேட்டுக் கொண்டான்.
ஒன்றும் பதில் சொல்லாமல் வெறுப்பாக,தினேஷ், ஜெனி ஆடுவதை பார்த்து, மேலும் குடித்து விட்டு, நேராக எழுந்து அவர்களை நோக்கிச் சென்றான்.
தினேஷை பிடித்து இழுத்து, அவனை தள்ளி விட்டு ஜெனியை அணைக்க முயல, தினேஷ் அவன் சட்டை காலரை பிடித்து தள்ளினான்.
“டேய்… என்னயா தள்ளின.. என்று ஆக்ரோஷமாக அவன் மேல பாய, அதற்குள்
பெளன்ஸர்ஸ் எதோ பிரச்சனை என்று, பிரசாத் அருகில் வந்தனர்.
ஸார்…. “மேடம் எங்களோட மதிப்பிற்குரிய விருந்தினர். இவர்களிடம் நீங்கள் இப்படி நடந்துக் கொள்வது. சரியில்லை “என்று சொன்னவனை பார்த்து, மூக்கில் குத்தினான்.
நடனம் ஆடிக் கொண்டுயிருந்த அனைவரும் ஸ்தம்பித்தனர்…
பெளன்ஸர்ஸ் அனைவரும். அவனை குண்டு கட்டாக தூக்கி வெளியே விட்டனர்.
செக்யூரிட்டியிடம் அவனை உள்ளே விட வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.
ஜெனியிடம். உங்களுக்கு ஏற்பட்ட அசம்பாவத்திறகு நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். என்று பஃப் மேனேஜர் வருத்தம் தெரிவித்தார்.
பிரசாத், அடிப்பட்ட புலியாய் கோபமாக தன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக, தங்கையின் வீட்டை அடைந்தான்.
அங்கே போய், கோபமாக தங்கையிடமும், அவள் மாமியார் சுதாவிடமும் கத்தி கூப்பாடு போட்டான்.
அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
என்ன ஆச்சு. இவன் குடித்துவிட்டு இங்கு வந்து ஏன் உளருகிறான்.
“மதி -.. எதுக்கும் லிமிட் இருக்கு.
உன் அண்ணன் இப்படியெல்லாம் தங்கை வாழ வந்த வீட்டில் வந்து ரகளை பண்ணக்கூடாது. அவனை போகச் சொல்.” என்று சற்று கடுப்பாக சுதா சொல்ல,
எங்கே தன் கணவனும் மாமானாரும் வந்துவிட போகிறார்கள். அவர்கள் இருந்தால் இன்னும் நிலமை மோசமான விடுமே. என்று உடனே, தன் அப்பாவிற்கு போன் செய்தாள்.
“ஹலோ சொல்லும்மா”..
“ஹலோ அப்பா.. ஏன்ப்பா இந்த பிரசாத் இப்படி இருக்கான்”.
“ஏன் என்னச்சி” என்று கேட்க, விஷயத்தை சொன்னாள்.
“பதட்டமடையாதே. நாங்கள் உன் வீட்டு பக்கத்தில் ஒரு வேலையா வந்தோம்.
இதோ வருகிறோம்” என்றனர்.
தொடரும்.
