.32. அவளை மறக்கத்தான்.
லண்டன்.
தினேஷ் கோபத்தில் ஜெனியை தரக்குறைவாக பேசிவிட்டு, தூங்க போய் விட்டான்.
இனி மேல் அவனுடன் இருக்க அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
விடியற்காலை 4 மணி இருக்கும்.
O டிகிரி டெம்பரேச்சர் இருந்தது.
இலேசாக ஐஸ்கட்டியாக மழை பெய்தது.
அதை பொருட்படுத்தாமல், தன் உடமைகள் மற்றும் நிகேதன் உடைமைகளை எடுத்துக் கொண்டு தன் காரில் கிளம்பினாள்.
அந்த அதிகாலை வேளையிலும் டிராபிக் இருந்தது . ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள, கெண்ட் சேர நேரம் எடுத்துக்கொண்டது.
கெண்ட் (Kent) பகுதியிலுள்ள தன் கல்லூரி தோழி வீட்டிற்கு போனாள்.
அவளோ ஜெனிவந்ததும், சாவியை ஒப்படைத்து விட்டு, இந்தியா கிளம்பினாள்.
“ஸாரி ஜெனி என் அக்காவிற்கு திருமணம் .நான் போயே ஆக வேண்டும். 15 நாளில் வந்து விடுவேன். உன்னை தனியா விட்டு போறேன். சமாளித்து கொள்வாயா.”
“நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்.
உனக்கு பிரிட்ஜில் பால் முதல் வெஜிடபிள்ஸ் வாங்கி வைத்துள்ளேன். ஒருவாரத்திற்கு வரும். என்று சொல்லிவிட்டு டாக்ஸி வந்தவுடன் போய் விட்டாள். காரிலும் நிகேதன் அழுது கொண்டே வந்தான். சில நிறுத்தங்களில் நிறுத்தி அவனை தட்டி கொடுத்து, எப்படியோ வந்து சேர்ந்தாள்.
இவளுக்கும் இரவெல்லாம் தூங்காததால் அவனை படுக்க வைத்து தானும் படுத்துக்கொண்டாள்.
அந்த ஸ்டூடியோ அபார்ட்மெண்ட் வீடு. சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது.
அவள் யாருக்கும் சொல்லாமல் இருந்தாள். கல்யாணுக்கு கூட தெரிவிக்க வில்லை.
பதினைந்து நாட்கள் கழித்து தோழி வந்தவுடன், கல்யாண்னுக்கு மெயில் செய்து இருந்தாள்.
வீட்டில் நடந்ததை சொல்லி, தன் தோழி வீட்டில் இருப்பதாக சொன்னாள்.
அவன் கேம்ப்ரிஜ்ஜில் இருக்கும் தன் அத்தை சாந்தினியை கெண்ட்டுக்கு அனுப்பி வைத்தான்.
அவர் கேம்பிரிஜ் யூனிவர்சிட்டியில்
விரிவுரையாளராக இருக்கிறார்.
முதலில் சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் ஜெனிக்கு புரபசராக
இருந்தவர். நன்கு அறிமுகம் ஆனவர்.
அவரே கெண்ட் வந்து ஜெனியையும், குழந்தையையும் தனியே இருக்க வேண்டாம் என்று அழைத்துச் சென்றார்.
கல்யாண் ஆஸ்திரேலியாவில் வேலையை முடித்துக் கொண்டு ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்கினான்.
அங்கிருந்து கார் மூலமாக கேம்பிரிட்ஜ் ஊருக்குச் சென்றான்.
ஜெனியின் கண்கள் குழிவிழுந்து தூங்காததால் கண்களில் கருவளையத்துடன் பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
கல்யாண் பிரயாண களைப்பு தீர்ந்ததும் ஜெனியை வெளியே போகலாம் என்று அழைத்தான்.
அத்தை சாந்தினி, “இன்று எனக்கும் உன் மாமாவுக்கும் லீவுதான் .நாங்கள் குழந்தையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் இருவரும் போய்விட்டு வாருங்கள்” என்றார்.
சரியென்று கிளம்பினார்கள்.
மெளனமாக குறுகலான தெருக்கள் வழியே நடந்து சென்றார்கள்.
“இந்த ஊர் மிகவும் அழகாக இருக்கிறது. லண்டன் பரப்பரப்பு இல்லாமல் அமைதியாகவும் இருக்கிறது” என்றாள்..
டிரினிட்டி மியூசிக் கல்லூரி எதிரில் உள்ள பூங்காவில் அமர்ந்துக் கொண்டார்கள்.
(River Gam ) ரிவர் கேம் அமைதியாக ஓடிக் கொண்டு யிருந்தது..
சிறிது நேரத்திற்குப் பிறகு , ஜெனிம்மா என்று மென்மையாக அழைத்தான்.
“உன் பியூச்சர் பிளான்ஸ் என்ன” என்று கேட்டான்.
“தெரியல கல்யாண். நிகேதன் ஏன் அழுதுக் கொண்டே இருக்கிறான்.என் பிரக்னஸி போது, நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னை தினேஷ் அப்படி பார்த்துக் கொண்டான்.
இவனை சரியா வளர்க்க வேண்டும். அது மட்டும் தான் மனதில் இருக்கிறது.”
“வெல்”
நேரிடையாக விஷயத்திற்கு வந்தான்.
“ஜெனிம்மா……. டாக்டர் பேசினதை நான் ஜஸ்டிபை பண்ணல. தப்புத்தான். எனக்கு மெயில் அனுப்பி இருந்தான்.. உனக்கும் அனுப்பி இருந்ததாக சொன்னான்.”
“PPD பற்றி இப்ப புரிந்துக கொண்டான். டாக்டர்தானே அவனுக்கே தெரிந்து இருக்கும் என்று நீ நினைத்து இருப்பாய்.”
“அப்படி இல்லடா. .அதைப் பற்றி எல்லா டாக்டர்ருக்கும் தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.”
“எனக்கு ஏன் தெரிந்தது என்றால், என் பெரியம்மா பெண்ணிற்கு, என் அக்காவிற்கு இப்படித்தான் இருந்தது. யாருமே அவளை புரிந்து கொள்ளவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டாள். அப்படித்தான் எனக்குத் தெரியும்” என்று சுருக்கமாக சொன்னான்.
“என்னாலேயும் தினேஷ்யிடம் சொல்ல முடியாமல் போய் விட்டது.” என்று கல்யாண் வருத்தப்பட்டான்.
ஜெனியிடம் பேசும்போதே, கல்யாண் “குறுக்க பேசாம.. ஜஸ்ட் நான் பேசுவதை கேள்” என்று சொல்லித்தான் ஆரம்பித்தான்.
அதனால் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
கேம் ரிவரில் டூரிஸ்ட்டுகள், போட்டில் பலமாக சிரித்துக் கொண்டு போனார்கள்.
அந்த அமைதிக்கு அந்த சிரிப்புச் சத்தம் உற்சாகமாக இருந்தது.
“ஜெனி டியர்.. நீ பட்ட காயம் பெரிசு. அவன் பேசின வார்த்தைகளை யாராலேயும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. “
“ஒரு நிமிஷம் யோசித்து பாரு. உன் மீது இருந்த ஓவர் பொஸஸிவ்னெஸ், மற்றும் காதல் எப்படி அவனை பேச வைத்தது. ஆத்திரத்தில் வார்த்தைகள் தடித்து போய் விட்டது.”
“ஒரு டாக்டரா தோற்று விட்டதாக தினம் தினம் அழுகிறான். அன்னைக்கு நீ எதிர்பார்த்த அரவணைப்புக்காக ஏங்கிட்டு இருக்கான்”.
மெளனமாக ஓடும் ஆற்றை பார்த்தாள்.
“மனுஷங்க எல்லோரும் 100% பெர்ஃபெக்ட் கிடையாது. சில நேரங்களில் நம் தப்பு பிறருக்கு தெரியும். மற்றவர்கள் செய்யும் தப்பு நம் கண்ணுக்கு தெரியும். ஆனா, அந்த தப்பை ஒருத்தன் உணர்ந்து திருந்தும் போது, அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறது தான் உண்மையான அன்பு..”
அவளிடம் நெருங்கி உட்கார்ந்து, அவள் கைகளை பிடித்துக் கொண்டான்..
“நீயே யோசித்து பார் – நீயும், நானும் சைல்வுட் பிரண்ட்ஸ். நாம் பல வருடங்கள் பார்க்காமல் இருந்து இருக்கிறோம். அப்போது எனக்கு உன் மீதிருந்த அன்பு எப்படியே, இப்போதும் இருக்கிறது.
அது தினேஷ்க்கு தெரியாது.
உனக்கும், எனக்கும் திருமணம் உன் அண்ணா செய்த ஏற்பாடு என்று நீ தினேஷ்யிடம் சொல்லி இருக்க.
இயல்பா நான் அங்கே அவனுக்கு வில்லன் ஆகிறேன். அந்த பதைபதைப்பு இருக்கத்தானே செய்யும்.”
“அப்படி நிச்சயம் ஆனவனிடம் நீ சிரித்து பேசிக் கொண்டு இருப்பதை அவன் பார்த்து இருக்கிறான்.”
“அந்த நேரத்தில் சைக்காலஜிக்கலா படிப்பு, டிக்னிட்டி… இப்படி எதுவும் நமக்கு உதவி செய்யாது.
கோபத்தில் பேசிட்டான்.”
“நீ அவனுக்காக உன் பிறந்த வீட்டை விட்டு வந்தவுடன், பெரிய இடத்து பெண் நம்மை நம்பி வந்த விட்டாள் என்று டிபிக்கல் இன்டியன் மெண்டாலிட்டோட,உன்னை நல்லா பார்த்துக்கணும், எல்லா வசதியும் செய்து கொடுத்து சௌகரியமா வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி, அதற்காக சும்மா இராமல் இரவு,பகல் உழைத்து இருக்கிறான்.”
“இங்கே பார்” என்று தன் போனை ஸ்கார்ல் செய்து, அதிலிருந்த போட்டோக்களை காண்பித்தான்.
அதை வாங்கி பார்த்தாள்.
பெரிய வீட்டின் புகைப்படம் இருந்தது.
இவனைப் பபார்த்தான்.
“இது தான் தினேஷ் உனக்காக கட்டும். வசந்த மாளிகை. இதற்குத்தான் இவ்வளவ உழைப்பு.”
“அது உனக்கு சர்ப்ரைஸ் என்று சொல்லாமல் விட்டது தான் அவன் செய்த தவறு. “
ஜெனிமா…அவள் கைகளை தட்டிக் கொடுத்தான்.
அவனைப் விட்டு பிரிந்து போற பாதை மிகவும் கஷ்டமாக இருக்கலாம்.
வாழ்க்கை எப்போதும்,100% Glory ஆக இருக்காது. bumps இருக்கும்.
காதலின் அழகே மன்னித்தலில் இருக்கு. உங்கள் காதல் அவ்வளவு அழகு. நான் யார், என் பின்புலம் என்ன என்று தெரிந்தும் என்னை நிராகரிச்ச அது ஏன். நீ அவனை அந்தளவுக்கு காதலித்து இருக்க. ‘அந்தளவுக்கு அவனை விட பெட்டர் சாய்ஸ் வந்தும், அவனை நீ விடல .உங்கள் காதலை மதிக்கிறேன்.”
“காதலுக்கு மரியாதை என்பது விட்டுக் கொடுத்தல், பரஸ்பர அன்பு. மட்டுமல்ல. மன்னித்த லும் தானே.”
“உன்னை கட்டாயப் படுத்தல.. ஒரு நண்பனா உனக்கு சொல்லணும் என்று தோணியது. டேக் யுவர் ஓன் டைம்.”
“எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நீ இங்கே இருக்கலாம். உன்னை யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.
“போகலாமா” என்று கேட்டான்.
“ஒன்று சொல்கிறேன் செய்வாயா” என்று ஜெனி கேட்டாள்.
சொல்லு ஜெனி”.
“நான் இங்கிருப்பது அவனுக்கு தெரிய வேண்டாம்.”
“தினேஷ் லண்டனில் இல்லை. இந்தியா போய் விட்டான். “
“உன்னை எங்கெங்கோ தேடினான். என் அலுவலகத்திற்கும் வந்து இருக்கிறான்.”
“நீயும், நிகேதனும் இல்லாமல் அவனால் இந்த நாட்டில் இருக்க முடியவில்லை.
அவனுடைய சேர்மனும் அங்கே கூப்பிட்டார். வீட்டை நண்பனிடம் ஒப்படைத்து விட்டு சென்னை போயிருக்கிறான்.”
அவள் பதிலேதும் சொல்லவில்லை..
வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளாமல், இரண்டு நாளிலே “இந்தியா போகலாம் “என்றாள்.
பிரிவுகள் சில நேரங்களில் காயங்களை ஆற்றும் மருந்தாகக் கூட இருக்கலாம்.
முற்றும்.
Epilogue.
ஜெனி இந்தியாவிற்கு
போகலாம் என்றதும்,மூன்று பேருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பர்ஸ்ட் கிளாஸில் கல்யாண் டிக்கெட் புக் செய்துவிட்டான்.
கல்யாணின் அப்பா, அம்மாவும் சென்னையில் I.T.C. சோழாவில் தங்கி இருந்தார்கள்.
விமானம் சென்னை இறங்கியதும்,
அவர்களை ஜெனியின் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தான்.
இவள் வருவது தெரிந்ததும், ராஜம்மாவும் வந்து விட்டார்.
கார் உள்ளே நுழைந்தவுடன், ஆரத்தி தட்டுடன் வாசலே காத்துக் கொண்டுயிருந்தார்.
அப்பா மகேந்திரன் அம்மா சுதா மற்றும் அண்ணன், அண்ணி அவர்களின் மூன்று வயது பெண் குழந்தை லயாவுடன் வாசலிலே காத்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆரத்தி யெடுத்து உள்ளே போனதும் சுதா தன் மகளை கட்டி பிடித்து அழுதார். “என்னை மன்னித்து விடும்மா உன் மீது அக்கறை யில்லாமல் இருந்து விட்டேன்.”
அவள் கண்களை துடைத்து விட்டு, “என் அம்மா இப்படி அழுவது எனக்கு பிடிக்காது.”என்று சொல்லி அணைத்தாள்.
அப்பாவும், அண்ணனும், அண்ணியும் கட்டி அணைத்தனர்.
குழந்தையை சுதா வாங்கிக் கொண்டாள்.
என் பேரன் என்று உச்சி மோர்ந்தாள்.
ராஜம்மா அவளை கட்டியணைத்தார்.
பாப்பா… என்று விம்மினார்.
அவளையும் சமாதனப் படுத்தி விட்டு
எல்லோரிடமும் ஜெனி மன்னிப்பு கேட்டாள்.
அப்பா, அண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டு, “அப்பா அண்ணா
என்னை மன்னித்து விடுங்கள். .இப்படி சொல்லாமல் போய் இருக்கக் கூடாது.”
“விடும்மா நடந்தது நடந்து விட்டது. .”
கலியாண்க்கு அனைவரும் நன்றி சொன்னார்கள்..
“எங்கள் மகளை எங்களிடம் பத்திரமாக சேர்த்து விட்டாய்.”
சுதா “அதைவிட முக்கியம் ஜெனியும், தினேஷ்ம் ஒன்று சேர்வது தான்.”
“ரொம்ப சரியா சொல்லி இருக்க” என்று மகேந்திரன்.பாராட்டினார்.
லண்டனிலிருந்து கிளம்பும் போதே, மகேந்திரனிடம் சுருக்கமாக போனிலே விஷயத்தை சொன்னான்.
அன்றே எல்லோரும் கிளம்பினார்கள்.
சேர்மன் ஸ்பெஷல் தனி பிளைட்டில் திருச்சி அழைத்துச் சென்றார்.
அங்கிருந்து கார்கள் மூலம் ஒரத்தநாடு
சென்றார்கள்.
தன் அப்பா காரிலிருந்து ஜெனி இறங்கியதும், தினேஷ பார்த்ததும் ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.
அந்த அணைப்பில் ஆயிரம் வார்த்தைகள் சொல்லத் தவறிய மன்னிப்பும், பிரிவினால் விளைந்த அத்தனை ரணங்களும் கண்ணீரோடு கரைந்துபோயின.
அவளை மறக்கத்தான் இங்கு வந்தான். மறக்க முடியாமல் அவன் தவித்த தவிப்பு சொல்லில் அடங்காது.. காதல் மீண்டும் மகுடம் சூடிக் கொண்டது.
அவனுக்குமே இன்ப அதிர்ச்சி:
இதை அவன் எதிர்பார்க்கவில்லை.
நிகேதனை லஷ்மி வாங்கி முத்தமழை பொழிந்தார்.
ஜெனி தன் மாமனார், மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
லஷ்மி மருமகளை உச்சிமோர்ந்தார்.
அனைவரும் ஹாலில் அமர்ந்தார்கள்.
கல்யாண் பின்புறம் உள்ள கொல்லை பக்கம் போனான்.
அங்கே அமலா வாழையிலையை எம்பி, எம்பி கிழிக்காமல் அறுக்க பாடுபட்டு கொண்டியிருந்தாள்.
அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
சுயநினைவு வந்தவனாய் , தன்னிச்சையாக அவளிடமிருந்து கத்தியை வாங்கி வாழையிலையை அறுத்து கொடுத்தான்.
அந்நிய ஆடவனின் அருகாமை அவளை முகம் சிவக்க வைத்தது.
ஜெனியிடம் தினேஷ் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்றான்.
“ஐய்யோ சர்பரைஸ்ஸா”……..
“வா ”என்று அவளின் கையை பிடித்து கொல்லைப்புறம் அழைத்துக் சென்றான்.
அங்கு அமலாவை பார்த்ததும் அதிர்ச்சியுடன் , “அமலா” என்று கட்டி பிடித்துக் கொண்டாள்.
“ஜெனி”…. என்று அமலா கதறி அழுதாள்.
ஜெனியிடமும், கல்யாண்யிடமும் சுருக்கமாக அவள் கதையை சொன்னான்.
“சே… இது தெரியாமல் போச்சே. போலீஸிடன் போய் இருப்பேனே.”
“விடு நடந்து முடிந்துவிட்டது. அவள் குணத்திற்கு இனிமேல் நல்லதே நடக்கும். “இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அங்கு வந்த லஷ்மி சொன்னார்.
அமலா அனைவருக்கும் சாப்பாடு பரிமாறினாள்.
கல்யாணுக்கு பரிமாறும் போது மட்டும் கை உதறல் எடுத்தது.
சேர்மன் சப்பு கொட்டி சாப்பிட்டார்.
ஆஹா. அருமை. இந்த மாதிரி உணவு எந்த ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது.
எல்லாம் அமலாவும், தேன்மொழி என்ற பெண்ணும் செய்தது. இது எல்லாம் முழுக்க முழுக்க அமலா செய்தது.
அது அவள் அப்பத்தாவின் கைமணம்.இவளுக்கு அப்படியே வந்து இருக்கு.
இவள் சாப்பாட்டை தினமும் சாப்பிட யாருக்கு கொடுத்து வைத்து இருக்கிறதோ” என்று ஜெனி சொன்னவுடன் கல்யாண்க்கு புரை ஏறியது.
உடனே அவன் தலையில் தட்டி, அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள்…இது அமலா.
எல்லோரும் அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.
அடுத்து என்ன…?
கெட்டி மேளம்தான்.
பெங்களூரில். விமரிசையாக அமலா – கல்யாண் திருமணம் நடைபெற்றது.
தினேஷ்.. ஜெனிலியா மற்றும்
கல்யாண்…அமலா வாழ்வாங்கு வாழ்ந்தார்கள்.
சுபம்.
.
