.31. அவளை மறக்கத் தான்.
மோகன் தன் மகன் டாக்டர் தினேஷ் சொல்வதை எந்த குறிக்கிடும் இல்லாமல் கேட்டுக் கொண்டியிருந்தார்.
பம்பு செட்டுக்கு அருகிலே வேப்பமரமும் புங்கை மரமும் ஓங்கி வளர்ந்து இருந்தது. அதை மோகன் பார்க்கும் போதெல்லாம் கணவன், மனைவியாக உருவகப் படுத்திக் கொள்வார்.
எப்படியே இரண்டுக்கும் இடையில் பாதாம் மரம் வளர்ந்து இருந்தது. அதை வேப்பமும், புங்கையும் தன் குழந்தையை போல் அரவணைப்பாதாக தோன்றும்.
தினேஷை பார்த்தார்.
கண்மூடி, தலைக்கு தன் இரு கைகளையும் முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தான்.
வேப்ப மரத்தின் மீது அமர்ந்துக் கொண்டு சில காகங்கள் கரைந்துக் கொண்டேயிருந்தது.
வானத்தில் கூட்டமாக பறவைகள் ஒரே வரிசையில் வலசை போய்க் கொண்டியிருந்தன.
தீடீரென்று கண்களைத் திறந்து தினேஷ், அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு, “ என்னை மன்னித்து விடுங்கள் அப்பா.”.என்றான்.
அவன் கண்களில் நீர் திரையிட்டு இருந்தது.
“என்னால் ஜெனி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்.”
“அவளைப் போன்ற சுதந்திரமான ஐ.டி ஊழியருக்கு, 24மணிநேரமும் குழந்தையின் அழுகுரலுக்குப் பின்னால் ஓடும் வாழ்க்கை மிகப் பெரிய மன அழுத்தத்தை கொடுக்கும் என்பது புரியாமல் போயிற்று.”
போஸ்ட் பிரக்கென்ஸி குழப்பம். அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து இருக்கிறாள்.
ஒரு முறை என்னிடம் “தினேஷ், ப்ளீஸ் எழுந்துவா. என்னை கட்டி பிடிச்சிக்கோ எனக்கு பயமா இருக்கு. நான் பைத்தியம் ஆயிடுவேன் என்று நினைக்கிறேன்.” என்று கதறினாள்.
“ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நான் அவன் கையை உதறினேன்.அவள் கதறுவதை நான் பெருசா எடுத்துக் கொள்ளவில்லை .”
“.தூங்க விடு ஜெனி காலையில் தியேட்டர் போகணும் “ என்று சொல்லி அவளை நிராகரித்து உள்ளேன்.அவளுக்கு ரொம்ப தனிமையை கொடுத்து விட்டேன்.”
“நான் ஒரு டாக்டர் அவள் நிலமையை புரிந்துக் கொண்டு அவளுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா இருந்து இருக்க வேண்டும். பக்குவமா, ஆதரவா பேசியிருந்தால், அவள் அந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டு இருப்பாள்.
அதையெல்லாம் செய்யாமல் அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்ததால் கோபம் வந்தது.”
மோகன் அதிர்ச்சியாக, “என்னடா சொன்ன “ என்றார்.
வீட்டிற்கு அவள் வந்ததும், கோபமாக “அவன் யார்” என்று கேட்டேன். உன்னைப் பார்த்தேன். பட்டர்பிளை கார்டனிலிருந்து அவனுடன் சிரித்தப்படி வெளியே வந்தாய்.”
““ஓ… என் பிரச்சனை உனக்கு எதுவுமே தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை.
நான் யாருடனோ சிரித்தது மட்டும் உனக்கு பிரச்சனையாகி விட்டதா “ என்று அவளும் கோபமாக கேட்டாள்.
“என் குரலை தாழ்த்திக் கொண்டு, “நாம எப்படியெல்லாம் காதலித்தோம். ஏன் ஜெனி இப்படி மாறி போய் விட்ட “என்று அவள் மீதே பழியை சுமத்தினேன்”
அவள் புரியாமல் விழித்தாள்.
“இப்போ என்ன ஆகிவிட்டது. அவன் என் நண்பன். நண்பனுடன் எங்கும் போகக் கூடாதா”……?
“ நிகேதன் பிறந்ததலிருந்து நீ எத்தனை முறை என்னிடம் அன்பா பேசி இருப்பாய். வெளியே அழைத்து சென்று இருக்கிறாயா”…
அவள் அப்படி கேட்டதும், எனக்கு கோபம் வந்தது.
“நான் என்ன ஊர் சுற்றிக் கொண்டா இருக்கிறேன்.என் வேலையை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. “
மேலும், “நீ பணக்கார வீட்டுப் பெண் உன்னையும், நம் மகனையும் வசதியா வாழ வைக்க வேண்டும். உன் வீட்டில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்று நினைத்து உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.”என்று என் தரப்பு நியாயத்தையும் சொன்னேன்.
“நான் உன்னைக் கேட்டேனா . என் வீட்டிலேயே நான் பணக்காரியாக வாழ வில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை. எனக்கு என்ன ஆச்சு என்றே புரியவில்லை. உன்னிடமிருந்து எனக்கு எந்த சப்போர்ட்டும் வரவில்லை.” என்று சொல்லி அழுதாள்.
“சரி.. யார் அவன்”…..?
“அவன் கல்யாண். என் சிறுவயது தோழன் – அவன் ஆதரவு இல்லனா நான் பைத்தியமாகி இருப்பேன்.”
அவன் சொல்வதை எதையும் நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
கல்யாண் என்ற பெயரைக் கேட்டதும், ஆத்திரம் என் அறிவை மழுங்கடித்தது.
.எகத்தாளமாக “ஓஹோ… கதை அப்படி போகுதோ..i
ஆத்திரத்தில் என்ன பேசுவது என்று
தெரியாமல் கெட்ட வார்த்தையால் அவளை திட்டி விட்டேன்.
மோகன் தலையில் கை வைத்துக் கொண்டார்.
அந்த வார்த்தையை தாங்க முடியாமல் அழுதாள்.
அந்த கசப்பில் என்னை விட்டு விலகிச் சென்றாள்.
குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டாள்.
மறுபடியும் வந்து விடுவாள் என்று நினைத்தேன்.
வரவில்லை.
அவள் அறைக்குள் சென்றேன்.
அவள் கெளன்சிலிங் சென்று, சைக்கிரியாட்டிஸ்ஸை பார்த்து இருக்கிறாள். அவள் பைல் அங்கு இருந்தது.
அப்போது தான் என் மண்டையில் யாரோ ஓங்கி அடித்தது போல் இருந்தது.
நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று புரிந்தது.
அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அவளையே விட்டுவிட்டேன்.
முகத்தை மூடிக் கொண்டு அழுதான்.
அவன் தந்தை அவன் கையை பற்றிக் கொண்டார்.
அவள் போனதும் என் தவறு புரிந்தது.
வெறுமையான பகல் பொழுதுகள் உறக்கம் இல்லா நீள் இரவுகள்.
எங்கெங்கோ தேடினேன்.
கிடைக்கவில்லை ஜெனி என்னை விட்டு நிரந்தரமாக போய் விட்டாள் என்னும் போது, உயிர் வாழவே பயமாக இருந்தது.”
எப்படியோ தேடி, கல்யாண் அலுவலகத்தை கண்டு பிடித்தேன்.
விசாரித்ததில் அவன் ஆஸ்திரேலியா போய் விட்டான். பட்டர்பிளை பார்க்கிலிருந்து நேரே ஏர்போர்ட் போயிருக்க வேண்டும். அன்று தான்
சென்றானாம்.
அவன் நண்பன் என்று ஜெனி சொன்னதை கேட்காமல், அவர்கள் நட்பை கொச்சை படுத்தினேன்.
“நான் உயிருக்குயிராய் காதலித்த பெண்ணை இழந்து விட்டேன்.
எல்லாம் சரியாகும் என்று மோகன் ஆறுதல் சொன்னார்.”
.
இப்படி இருக்கிற மனநிலையில் என் மருமகள் எப்படி கை குழந்தையுடன் தனியே இருப்பாள். அவளுக்கு எதாவது ஆகி விடப் போகுது.”என்று பதட்டமாக கேட்க
“இல்லப்பா இது லாங் டர்ம் இல்லை. அவள் நண்பன் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சைக்கு போய் இருக்கிறாள். அவனும், டாக்டர் சொன்னபடி செய்து இருக்கிறான். மேலும், என்னை சந்திக்க இரண்டு முறை ஆஸ்பிட்டலுக்கு வந்து இருக்கிறான். நான் அப்போது தியேட்டரில் இருந்ததால், கவனம்கொள்ளவில்லை.”
“இதெல்லாம் ஜெனி என்னை விட்டு போனப்பிறகு தான்தெரியும்.”
“கைமீறி போய் விட்டது .”
“உங்கள் வளர்ப்பு தப்பாகி விட்டது என்று யோசிக்கிறீர்களாப்பா.”
மெளனமாக இருந்தார்.
அவர் முகத்தையே பார்த்தான்.
ஆமாம் தினேஷ். உன் வாயிலிருக்கு கெட்ட வார்த்தைகள் வரும் என்று நினைத்தால் ணக்கு உள்ளம் பதறுதுப்பா . . அதுவும் நேசித்து மனைவியாக்கித் கொண்ட பெண்ணைப் பார்த்து சொல்லி இருக்க….என்னால் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
“எந்த சூழ்நிலையிலும் தன் நிலையிலிருந்து தவறக் கூடாது. அப்படி பட்ட சூழ்நிலை வராமல் இருந்தால் நீ அந்த வார்த்தையை பிரயோகிக்க மாட்டாய். ஆனால், சூழ்நிலை உன்னை தூண்டினால் நீ எப்படி வேண்டுமானாலும் பேசுவாய். அப்படித்தானே”…?
அவர் காலடியில் பொத்தென்று விழுந்து கதறினான்.
“என்னை மன்னித்து விடுங்கள் அப்பா.”
“எழுந்திரு. என்று அவனை கைதூக்கி எழுப்பி விட்டார்.
தவறு நடப்பதும், அதை உணர்ந்து திருத்திக் கொண்டு மீண்டும் வாழ்வைத் தொடங்குவதும் உன்னதமான விஷயம் .உங்கள் இருவரின் உண்மையான காதலே உங்களை சேர்த்து விடும். வா வீட்டுக்குப் போகலாம்.” என்று
கிளம்பினார்கள்.
காகம் கரைந்துக் கொண்டே இருந்தது.
வீட்டிற்கு போனதும், லஷ்மி இவர்களை வரவேற்றார்.
“இரண்டு பேரும் இப்படியா செய்வீர்கள்”.
“ஏம்மா… என்னாச்சு.”
“இருவரும் போன் எடுத்துக் கொண்டு போகலயா . ஏன் நான் போன் பண்ணி வாங்க சீக்கரம் ன்று தொல்லை பண்ணுவேன் என்றா.”
“இல்லம்மா. மறந்துவிட்டோம்” என்று இருவரும் ஒன்றாக சொன்னார்கள்.
“உன் சேர்மன் போன் பண்ணி இருந்தார்.”
“நாங்கள் வருகி”றோம் என்று சொல்லச் சொன்னார்.
“யாரு சேர்மனே வருகிறாரா.”
“ஆமாம்.உங்க கையால் சாப்பிடணும் என்று சொல்லி இருக்கார்.
எனக்கு கையும், ஓடல, காலும் ஓடல .அமலாவை வரச் சொல்லி இருக்கேன். தேனும் இங்கே வந்து இருக்கிறாள்.”
“இருவரும் உதவிக்கு வர்றேன் என்று சொல்லி விட்டார்கள்.”
அம்மா என்று. கூப்பிட்டுக் கொண்டே கையில் காயகறிகள் மற்றும் பழங்கள் மளிகை பொருட்களுடன், அமலாவும், தேன் மொழியும் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களை பார்த்ததும், முகமலர்ச்சியாக “எனக்கு பெண் இல்லாத குறையை தீர்த்து வைத்து விட்டீர்கள்.”
“சேர்மனுக்கு எப்போதும் சாப்பாடு கல்யாண சாப்பாடு மாதிரி இருக்க வேண்டும். அத்தனையும் விரும்பி சாப்பிடுவார். “
சென்னையிலிருந்து திருச்சிக்கு பிளைட்டில் வந்து, அங்கிருந்து காரில் வந்தார்கள்.
ஆம் வந்தார்கள்.
நான்கு காரில் வந்தார்கள்.
தினேஷ் யோசித்தான்.
அவரிடம்தான் முதலில்,ஜெனி ஏன் பிரிந்து சென்றாள் என்று சொன்னான்.
அவர் தான் முதலில் “ஒரத்தநாடு போ.. அப்பாவிடம் எல்லாவறறையும் சொல்லு” என்றார்.
‘என்ன காரணமாக இங்கே வருகிறார்.’
சரி வரட்டும். என்று வீட்டை சுத்தம் செய்ய தொடங்கினான்.
பழங்காலத்து வீடு என்றாலும் எல்லா வசதியும் இருந்தது.
அப்பா தன் பாணிக்கேற்ப, அதை வடிவமைத்து இருதார்.
சரியாக பகல் ஒரு மணிக்கு நான்கு உயர்ரக கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது.
காரிலிருந்து ஜெனியும் கல்யாண்னும் இறங்கினார்கள்.
தொடரும்.
நடந்தது என்ன….? ஜெனி எப்படி, தன் குழந்தையுடன் இங்கு வந்தாள். அடுத்த பாகத்தில் பார்ப்போம்:
‘
.
