5- தாட்சாயிணியின் கனவு இல்லம்

அத்தியாயம்- 5

தாட்சாயிணி குடும்பத்தார் வீட்டிற்கு வந்து சேரும் வரை யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.

உடன் வந்து இருந்த சொந்தங்கள் தாட்சாயிணிடம் கூறிவிட்டு அவர் அவர்கள் வந்த வழியே வீட்டை நோக்கி புறப்பட்டனர். 

தாட்சாயிணியின் முன்பு அனுதாபமாக பேசியவர்கள் வீட்டின் வாசலை தாண்டியதும் புரளி பேச ஆரம்பித்து விட்டனர். 

“இந்த கேஷவ் பையனுக்கு இது தேவை தான்டி. நம்ம உதவி கேட்ட போது, நம்மளை எவ்வளவு கேவலமா பார்த்தான். அதான் அந்த ஆண்டவனே பார்த்து அவனுக்கு தண்டனை கொடுத்துடுச்சி” என்றாள் அவர்கள் சொந்தங்களின் ஒருத்தி. 

“ஆமாக்கா, நம்ம பையனுக்கு அவனோட கம்பெனில ஒரு வேலை தர சொன்னதுக்கு, என்னவோ சொன்னான். உங்க பையனோ பேச்சி பழக்க வழக்கம் எல்லாம் சுத்தமா சரியில்லைனு சொன்னான். ஹான் அப்புறம் இன்னொனு சொன்னானே, என்னது அது” என்று யோசித்தாள். 

“ம் மனுஷங்களுக்கு மரியாதை கொடுத்து பேச தெரிலனு சொன்னான்டி” என்று முடித்தாள் அவள். 

“அதே தான்க்கா. இப்போ எங்கே போச்சாம் அந்த மரியாதை. வீட்ல பெத்த அப்பா அம்மாவுக்கே மரியாதை கொடுத்து பேசாத பொண்ணை தேடி போய் நிச்சியம் பண்ணிட்டு வந்து இருக்கா அந்த தாட்சாயிணி” என்று தாட்சாயிணியில் மட்டும் இழுத்து கூறினார்.

ஒரு குழு இவ்வாறான வார்த்தைகளை பேசிக் கொண்டு செல்ல. 

மற்றொரு குழுவில் உள்ளவர்களோ “பாவம்ப்பா நம்ம தாட்சாயிணி. இன்னும் எவ்வளவு தான் கஷ்டத்தை அனுபவிக்க போகுதோ. அவங்களுக்கு  ஒரு நல்ல காலம் பிறக்க மாட்டிக்கிதே” என்றார் ஒருவர். 

அருகிலிருந்தவரோ “ம் எல்லாம் தலையெழுத்து. இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து அந்த புள்ள தினம் தினம் கஷ்டத்தை தான் அனுபவிச்சிது. சரி புள்ளைங்க வளர்ந்து தாட்சாயிணியை நல்லா பார்த்துப்பாங்க நினைச்சா. இப்போ வீட்டுக்கு மூத்த புள்ளையாளையே பிரச்சனை வந்து வேதனையை அனுபவிச்சிட்டு இருக்கு. எப்போ தான் அதுக்குனு வாழா போகுது. இந்த நாள்வரை அந்த தாட்சாயிணி அதுக்காக வாழ்ந்து நான் பார்த்ததேயில்லைய்யா” என்று உண்மையான மனதோடு வருத்தப்பட்டார். 

அவர் அவர்கள் மனதில் இருப்பதை ஆளுக்கு ஒன்றாக புலம்பிக் கொண்டே அவர்கள் இல்லத்தை அடைந்தனர். 

இங்கே அறைக்கு வந்த கேஷவ்விற்கு கட்டுக்கடங்காத கோபம் அவனின் நிதானத்தை மிகவும் சோதித்துக் கொண்டு இருந்தது. 

அங்கே இருந்த தண்ணீர் குவளையை எடுத்து பருகியவனுக்கு அந்த தண்ணீர் கூட தொண்டையில் இறங்காமல் சதி செய்ய, ஆத்திரத்துடன் அதை தரையில் தூக்கி எறிந்து “டாம்மீட்” என்று சொல்லிக் கொண்டே தலையை பிடித்துபடி மெத்தயில் தொப்பென்று அமர்ந்தான். 

அவன் அறை கதவு திறந்து இருந்ததால் கீழே விழுந்து உடைந்த பொருளின் சத்தம் முன்னறையில் இருந்த தாட்சாயிணிக்கும் ரதிபாலாவிற்கும் தெளிவாக கேட்டது. 

மனம் கேளாமல் ரதி அவன் அண்ணனின் அறைக்கு செல்ல படியை ஏற போக, மகளை தடுத்தார் தாட்சாயிணி.

“வேணாம்” என்று இருப்பக்கம் தலையை ஆட்டியவர் “அவன் கொஞ்சம் நேரம் தனியா இருக்கட்டும். அப்படியே தூங்கவும் செய்திடுவான். தூங்கி எழுந்ததும் அவனுக்கு ஒரு மாறுதல் கிடைக்கும்” என்று சொல்லி ரதியை அவள் அறைக்கு போக சொன்னார்.

ரதியோ பாவமாக அன்னையை பார்த்து “ம்” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு மேலலறையை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தாள். 

பின் தாட்சாயிணி சமையலறைக்கு சென்றவர் அடுப்பை பற்ற வைத்து பாலை காய்ச்சினார். 

அதன் பின் அதை மூன்று பங்காக பிரத்தவர் முதலில் மகள் அறைக்கு சென்று  கொடுத்தார்.

பின் மகன் அறைக்கு சென்று பால் டம்ளரை டேபிளில் வைத்து விட்டு அவன் அருகில்  அமர்ந்து “மன்னிச்சிடு கண்ணா” என்று தழுத்த குரலில் பேசினார் தாட்சாயிணி. 

தாயின் குரலை கேட்ட கேஷவ் விளுக்கென்று திரும்பி பார்த்தவன், சட்டென்று அன்னையின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவரின் இருக்கரத்தையும் தன் இருக்கரத்தில் பொதித்துக் கொண்டு,

“ம்மா நீங்க என்ன தப்பு பண்ணிங்க. எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க. அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கல அவ்வளவு தானே. அந்த சௌந்தர்யா இல்லனா வேற நல்ல பொண்ணுங்க இந்த உலகத்துல இல்லாம போயிடுவாங்க. இப்போவும் சொல்றேன்ம்மா, நீங்க எந்த பொண்ணை எனக்காக பார்த்து கட்றா தாலியை சொன்னா போதும். மறுப்பேச்சி இல்லாம அந்த பொண்ணை கட்டிப்பேன்” என்று மனம் உருகி பேசினான். 

மகனின் தலையை வருடிக் கொடுத்தவர் மெல்ல புன்னகைத்து “முதல் முறை அம்மா உன் விசியத்துல தப்பான முடிவை எடுக்க இருந்து இருக்கேன். அதை நினைச்சா ரொம்ப குற்றவுணர்வா இருக்கு கேஷவ். இந்த அம்மாவை நம்பி நீ உன்னோட வாழ்க்கையே ஒப்படைச்ச, ஆனால் என்னால அது பாழகா இருந்துச்சி. அந்த கடவுள் புண்ணியத்துல அந்த பொண்ணை பத்தின உண்மையான ரூபம் தெரிஞ்சிடுச்சி” என்று சொன்னவர் கேஷவ்வின் கண்ணத்தை பிடித்து,

“கண்ணா அம்மா இப்போ கூட சொல்றேன். உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா சொல்லு. நம்ம அந்த பொண்ணையே பேசி முடிக்கலாம். இந்த அம்மாவுக்காக யோசிக்காதடா கண்ணா” என்று மகனின் மனம் அறிய கேட்டார். 

“அம்மா அப்படி ஒருத்தி என் லைஃப்ல இருந்து இருந்தா, அதை பகிர்ந்து கொள்ளும் முதல் ஆளே நீங்களா தான் இருப்பீங்க. ஆனா அப்படி எதுவுமே இல்லையே” என்று உதட்டை பிதுக்கினான். 

பின் எழுந்தவன் அங்கே மேசையிலிருந்த பால் டம்ளரில் ஒன்றை எடுத்து வந்து தாயிடம் கொடுத்து “பால் குடிங்கம்மா. இன்னிக்கு நடந்த சம்பவம் எதுவும் என்னை பாதிக்கல. எனக்கு கோபமே அந்த பொண்ணு உங்களை மரியாதை இல்லாம பேசினது தான். வேற ஒன்னும் இல்ல. அதே மாதிரி அந்த பொண்ணு பக்கத்துல நிக்கும் போது ஒரு பீலே இல்லமா” என்று தன் வருத்ததை மூடி மறைத்துக் கொண்டு அன்னையின் முன் புன்னகையோடு நின்றான். 

ஆனால் ஒரு தாயிற்கு தெரியாதா! மகனின் பொய்யான புன்னகை எது? மெய்யான புன்னகை எது என்று. வலி நிறைந்த புன்னகையை சிந்திக் கொண்டு இருக்கும் மகனை கண்டு நெகிழ்ந்து தான் போனார். 

‘தன் முன் அவன் வலியை மறைத்து கொண்டு, அம்மாவிற்காக சிரிக்கிறானே’ என்று புரிய, அவன் தலையை ஆதரவாக தேய்த்து விட்டு மகன் கொடுத்த பாலை வாங்கி பருகியவர் கண்களாலே அவனையும் மேசையில் இருக்கும் பாலை எடுத்துக் குடிக்க சொன்னார். 

கேஷவ் சரியென்று தலையை ஆட்டிவிட்டு பாலை குடித்து காலி டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே சென்று கழுவி வைத்து விட்டு மீண்டும் தனதறையில் புகுந்துக் கொண்டான். 

தாட்சாயிணியோ மகன் நன்றாக தூங்கி எழுந்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவர் அவர் அருந்திய பால் டம்ளரை அவரே சுத்தம் செய்து விட்டு அவர் குடிலை நோக்கி வீட்டின் பின்பக்கம் சென்றார். 

ஆம் அவரின் அறை அவ்வீட்டில் இல்லை. அந்த இல்லத்தில் பின் பகுதியில் இருக்கும் சிறிய பூங்காவை ஒட்டிய குடிசை வடிவமைப்புக் கொண்ட சிறிய வீடு. 

கண் முன் அவ்வளவு ஆடம்பரமான கண்கள் கவரும் பெரிய இல்லம். கேட்டின் வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு அந்த வீடு ஒரு கனவு வீடு என்றே தான் கூற வேண்டும். 

ஒவ்வொரு செங்கலும் கற்களும் பார்த்து பார்த்து ரசனையாக கட்டி இருந்தது அந்த இல்லம். முன் பக்கம் ஒரு பகுதி தோட்டமும், மற்றொரு பகுதியில் புல்தரையில் அழகிய ஊஞ்சல், அதனை ஒட்டி மாமரம். கூடைந்து பந்து மற்றும் வலைப்பந்து வடிவமைக் கொண்ட பகுதியாக இருந்தது.

அதை தாண்டி அப்பெரிய வீட்டினுள் பெரிய முன்னறை. மிகுவும் விலை மதிப்புடைய மெத்தை போன்ற சோபா. அதன் வலப்புறம் பாரம்பரியமான ஊஞ்சல். 

அதை தொடர்ந்து சமையலறை பூஜை அறை மற்றும் மூன்று தனியறைகள். அங்கே கவர்ந்து இழுக்கும் விதமாக பல வண்ண ஓவியங்களின் சிலை. மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் மாட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அதன் நடுவே பெரிய அளவிலான கேஷவ்வின் தந்தை ராம்குமாரின் புகைப்படம் மாலைப் போடப்பட்டு காட்சியளித்தது.

மேல்பகுதியிலும் மூன்று அறைகள் மற்றும் பால்கனி அங்கும் ஒரு சிறிய ஊஞ்சல் ஒன்றும், நான்கு பேர் உட்கார்ந்து அரட்டை அடித்து பேசுவதற்காகவே போடப்பட்டு இருக்கும் சொகுசு நாற்காலிகள். 

ஒவ்வொரு அறையிலும் ஆடம்பரம் என்று சொல்லும் அளவுக்கு அனைத்தும் சொகுசாகவே இருந்தன. 

 

ஆனால் அவ்வீட்டின் பின்புறம் சிறிய குடிசை போன்ற மற்றொரு இல்லத்தை பார்த்தால் யாராக இருந்தாலும் வினோதமாக நினைத்துக் கொண்டு போவார்கள். 

ஆம் அந்த சிறிய குடிசை வீடு தான் தாட்சாயிணியின் மிகப் பெரிய கனவு மாளிகை. 

மகனின் ஆசைக்காக அந்த ஆடம்பரமான வீடு என்றால் அவன் தாயின் கனவுக்காக அக்காலத்தில் இயற்கையோடு வாழ்ந்த மனிதர்களின் கூரைவீடு போன்ற வடிவமைப்பு கொண்டது தான் தாட்சாயிணி சிறிய அறை என்று சொல்வதை விட. ஒரு சிறிய குடில் மாளிகை என்றே சொல்லலாம். 

பழங்கால மக்கள் வாழ்ந்தது போன்றே அன்றாட வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார் தாட்சாயிணி.

பசுமாடு சாணம் பூசிய இல்லம். விறகு அடுப்பு. மற்றும் செயற்கை இல்லா இயற்கை காற்று. மின் விளக்கு ஒலி. என்று அனைத்தும் பார்த்து பார்த்து செய்துக் கொடுத்து உள்ளான் கேஷவ். 

 

இருந்தாலும் அன்னையை அங்கே உறங்க மட்டுமே அனுமதித்து இருந்தான் அவரின் அன்பு மகன் கேஷவ். 

 

வீட்டில் பணியாட்கள் இருந்தாலும் பிள்ளைகளுக்கு தாட்சாயிணி தான் சமைத்து கொடுப்பார். அது ஒரு டம்ளர் பாலாக இருந்தாலும் சரி. 

அதே போல் ஞாயிறு வந்து விட்டால் அவ்வீட்டின் சமையல் பொறுப்பு ஆண்மகனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். இல்லை இல்லை வலுக்கட்டாயமாக அந்த கள்வன் பிடிங்கிக் கொள்வான். 

 

தங்கைக்காகவும் தாயிற்காகவும் வித விதமாக சமைத்து போட வேண்டுமென்றே தனியாக சமையலை கற்றுக் கொண்டான் புகழ் பெற்ற சமையல் நிபுணர் ஒருவரிடம். 

 

அதே போல் அவர்கள் உண்ணும் பாத்திரங்களை அவர் அவர்களே சுத்தம் செய்யது விட வேண்டும் என்பது தாட்சாயிணியின் கட்டளை. 

 

இப்படி மகிழ்ச்சியாக இருந்த இல்லத்தில் தான் மகனுக்காகவும் அவ்வீட்டில் புதிய நபரை அழைத்து வர வேண்டும் என்பதற்காகவும் கேஷவ்விற்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் தாட்சாயிணி. 

 

அப்போது தரகர் மூலம் கிடைத்த வரன் தான் தில்லைநாதனின் குடும்பம். 

தாட்சாயிணி விசாரித்த வரை அவர்கள் குடும்பத்தை பற்றி நல்ல விதமாகவே கூறி இருந்தனர்.

காரணம் அனைவருக்கும் தில்லைநாதனின் குணநலங்களை பற்றி அறிந்து வைத்து இருந்ததால். 

ஆனால் அவர்கள் யாரும் சௌந்தர்யாவின் உண்மையான குணத்தை இதுவரை பார்த்ததில்லை. தில்லைநாதனும் மகளை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்ததுமில்லை. 

 

அதனாலையே தாட்சாயிணி அவர் வீட்டில் சம்மந்தம் வைத்துக் கொள்வதில் தடையில்லாமல் போனது. 

அப்படி இருந்தும் தாட்சாயிணி சொந்தங்கள் பெண் வீட்டின் அந்தஸ்து அவர்களை விட மிக குறைவாக இருப்பதை சுட்டி காட்டினாலும். அதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளவாரா நம்ம தாட்சாயிணி. 

 

அதை சட்டை செய்யாமால் மகனிற்கு நிச்சியம் வரை எடுத்து சென்று விட்டார். 

 

ஆனால் ஊரார் கண்பட்டது போல் அனைத்தும் ஒரே நாளில் முடிந்துவிட்டது அல்லவா. 

 

இன்று அவர்கள் இழந்த சந்தோஷத்தை நாளை மீட்டு தர, அவர்களை தேடி வர இருக்கிறாள் ஒருத்தி. யார் அவள் காத்திருந்து பாருங்கள்.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.  

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!