6..ராட்சசனின் காதல் பாவை

6. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில்: விதுரனும் கட்டுக்கடங்காத கோபத்துடன் அந்த அறையில் வெறிபிடித்த சிங்கம் போல் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க சுனிலுக்குப் பயம்தான் வந்தது.

இனி..

அதே நேரம் இங்கு..

“அடியே எருமை மாடு, இன்னைக்கு என்னன்னு மறந்துட்டியா? எருமை மாடு மாதிரி இப்படி தூங்கிட்டு இருக்கே… எழுந்திரு.” என்று சொன்னாள் அவள்.

“ஏண்டி இப்படி சாகடிக்கிற? லஞ்ச் முடிஞ்சு தானே இப்போ மணி பன்னிரண்டு தாண்டி ஆகுது. கொஞ்ச நேரம் தூங்குகிறேனே.” என்று சொன்னாள் தோழி.

“அடியே எருமை, லஞ்ச் முடிஞ்சுதான்னு நான் சொல்லல. நம்ம கிளம்பிப் போக டைம் சரியா இருக்கும் டி. எழுந்திரு.” என்று சொன்னாள் அவள்.

“போடி… நிம்மதியாவே தூங்க விட மாட்டேங்குற.” என்று புலம்பியபடி அப்படியே பாத்ரூமுக்குள் புகுந்தாள் தோழி.

பாத்ரூமுக்குள் புகுந்தவள் அடுத்த பதினைந்து நிமிடத்தில் வெளியே வர, அடுத்த ஒரு மணி நேரத்தில் கிளம்பி இருந்தனர் இருவரும்.

ஒருபுறம் சுனில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் டென்ஷனாக அமர்ந்திருக்க, அப்பொழுது அவனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் வந்தது.

“சார், இன்டர்வியூக்கு எல்லாரும் வந்துட்டாங்க.” என்று சொன்னாள் ரிசப்ஷனிஸ்ட்.

“ஓகே, இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ண சொல்லுங்க. நான் முக்கியமான வேலைல இருக்கேன்.” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்ட அந்தப் பெண்ணும் சரி என்று சொல்லி போனை வைத்தாள்.

“பாஸ், இன்டர்வியூக்கு எல்லாரும் வந்துட்டாங்க. இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணணும்.” என்று சொன்னான் சுனில்.

விதுரனிடம் சொல்ல, ஆனால் அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

இவன் அமைதியாக இருப்பதைப் பார்த்தவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அங்கிருந்த வேலை செய்பவர்களிடம் தாங்களே இன்டர்வியூ பார்த்துக்கொள்ளுங்கள் என்று மெசேஜ் போட்டவன், அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் இறங்கினான்.

அதே நேரம்…

“அடியே, இந்த வேலை நமக்குக் கிடைச்சிடும் தானே?” என்று கேட்டாள் அவள் தோழி.

“அடியே பைத்தியம், உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? நமக்கு இந்த வேலை கிடைக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல. நீ என்னடா, இந்த வேலை கிடைச்சிடுமான்னு வேற கேக்குறியா?” என்று திட்டினாள் அவள்.

“ஏண்டி இப்படி திட்டுற? ரெண்டு நாள் முன்னாடி இன்டர்வியூ அட்டன் பண்ணேன். ஆனா உள்ள போன நீ கோவமா வந்த. என்னன்னு கேட்டா, ‘இந்த வேலை நமக்கு வேணாம்’னு சொல்லி கூட்டிட்டு வந்துட்ட. அதுவும் பெரிய கம்பெனிதான். அதே மாதிரி இங்கேயும் வேலை கிடைக்காம போயிடுமோன்னு ஒரு பயம் தாண்டி.” என்று சொன்னாள் அவள் தோழி.

“தயவு செஞ்சு அதை மட்டும் பேசாத. அவன் எல்லாம் ஒரு மனுஷனா? பொம்பளைப் பொறுக்கி நாய்.” என்று கோபமாகத் திட்டத் தொடங்கினாள் அவள்.

“என்னடி பண்றது? பொண்ணுங்கள்னாலே ஒரு போதைப் பொருளா மட்டும் தான் பார்க்கிறாங்க. நமக்கு மனசு இருக்கு, உணர்வு இருக்குன்னு புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்க. ஆமா, அந்த சி.இ.ஓ. பெயர் என்னவோ…” என்று சொல்ல வந்தாள் தோழி.

“தயவு செஞ்சு நிறுத்திடு. நான் அதை மறக்கணும்னு நினைக்கிறேன். அவனை மட்டும் இல்ல, அவன் பேரையும் இனி நான் கேட்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று சொன்னாள் அவள்.

“சரி, சரி… கோபப்படாதே. நான் இனி அதைப் பத்தி பேச மாட்டேன்.” என்று சொன்னாள் தோழி.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க,

“மேடம், அடுத்து நீங்கதான் போங்க.” என்று சொன்னாள் ஷீலா.

அதைக் கேட்டதும் இருவரில் ஒருவர் எழுந்து சென்றாள்.

“வாங்க மேடம், வந்து உட்காருங்க.” என்று சொன்னார் அவர்.

இவளும் அவர் முன்பு போய் அமர்ந்தவள், கையில் இருக்கும் பைலை அவரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கி முழுவதும் பார்த்தவர்,

“மிஸ் ஸ்ரீனா, உங்களோட சர்டிபிகேட்டுக்கும் இந்த வேலைக்கும் சம்பந்தமே இல்லையே.” என்று கேட்டார்.

“சார், நான் ஓபனா சொல்லணும்னா, நான் படிப்புக்கேத்த வேலையை இப்போ தேடல. இந்த வேலை எனக்குக் கிடைச்சா எனக்கு ரொம்பவே நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் சார்.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“இல்ல மேடம், உங்க குவாலிபிகேஷன் ரொம்பவே நல்லா இருக்கு. அது மட்டும் இல்ல, நீங்க நல்ல பர்சன்டேஜ் எடுத்திருக்கீங்க. அப்படி இருக்கும் போது இந்த வொர்க்…” என்று அவர் ஏதோ சொல்ல வர,

“சார், நீங்க பேசும்போது நான் குறுக்கப் பேசுறதை தப்பா எடுத்துக்காதீங்க, ப்ளீஸ். எனக்கு இந்த வேலை வேணும்.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அதில் சிறிது நேரம் யோசித்தவர்,

“ஓகே மேடம். உங்களுடைய குவாலிபிகேஷன் ரொம்பவே நல்லா இருக்கு. எங்களுக்கு வேற டிபார்ட்மெண்ட்டுக்கு இல்ல, இதைவிட வேற பொசிஷனுக்கு தேவைன்னா அப்போ உங்களை எடுத்துக்குறோம். இப்போதைக்கு நீங்க சேல்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருங்க.” என்று சொன்னார் அவர்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“ஓகே, வெளியே வெயிட் பண்ணுங்க.” என்று சொன்னவர், அடுத்த ஆளை உள்ளே அழைத்தார்.

அடுத்து உள்ளே வந்தவள் அவரிடம் தனது பைல்களைக் கொடுத்துவிட்டு, அவர் முன்பு அமர்ந்தாள்.

அவரும் இவளுடைய பைல்களைப் பார்த்தவர்,

“மிஸ் கவி, உங்களோட குவாலிபிகேஷன் நல்லா இருக்கு. அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த ஜாபுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்க?” என்று கேட்டார்.

“ஏன் சார், படிச்ச படிப்புக்கு தான் வேலை தேடணுமா? மத்த வேலை செய்யக்கூடாதா?” என்று கேட்டாள் கவி.

“ஓகே, வெயிட் பண்ணுங்க.” என்று சொன்னார் அவர்.

அதைக் கேட்டவள் வெளியே வந்துவிட்டாள்.

வெளியே வந்தவள் தன் தோழி அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவளிடம் வந்து அமர்ந்தாள்.

“ஸ்ரீ, உனக்கு என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் கவி.

“வெயிட் பண்ண சொன்னாங்கடி.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அந்த மொத்த பில்டிங்கில் என்னென்ன நடக்கிறது என்று விதுரனின் அறையில் இருந்தே பார்க்கலாம். அவன் எதிரில் இருக்கும் எல்.இ.டி. ஸ்கிரீனில் ஒவ்வொரு தளமாக மாறி மாறி வந்து கொண்டே இருந்தது.

இவ்வளவு நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தவன், ஏதோ ஒரு உந்துதலில் கண்களைத் திறந்து பார்த்தான்.

அப்பொழுது சரியாக இன்டர்வியூ நடக்கும் இடம் அவன் கண்ணில் பட,

“சுனில்!” என்று கர்ஜனையாய் அழைத்தான் விதுரன்.

அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தவன், அடுத்த நொடியே அவன் முன்பு வந்து நின்றான். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி நின்றான்.

ஆனால் அதைக் எதையும் கண்டுகொள்ளாத விதுரன்,

“இன்டர்வியூ முடிஞ்சுதா இல்லையா?” என்று கேட்டான் விதுரன்.

“முடிஞ்சிருச்சு பாஸ். வெயிட்டிங் லிஸ்ட்ல சில பேர் இருக்காங்க. ஒருவாட்டி எல்லாரையும் கன்சல்ட் பண்ணிட்டு, இன்னும் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல இன்டர்வியூ முடிஞ்சிடும்.” என்று சொன்னான் சுனில்.

“உனக்கு கொடுத்த வேலை என்ன ஆச்சு?” என்று வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து கேட்டான் விதுரன்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமே, அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்பதைச் சொல்லியது.

அதில் சுனிலுக்குப் பயம் தொற்றிக்கொள்ள, அவனைப் பார்த்தபடி அப்படியே நின்றான்.

“என்ன சுனில், என் முகத்துல ஏதாவது எழுதி ஒட்டி இருக்கா?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான் விதுரன்.

“சாரி பாஸ்.” என்று சொன்னவன், அறையிலிருந்து வெளியே வந்து அவனுடைய ஆட்களுக்குக் கால் செய்தான்.

கால் அட்டன் ஆன உடனே,

“டேய், என்னடா? கண்டுபிடிச்சீங்களா இல்லையா?” என்று கேட்டான் சுனில்.

“சார், விசாரிச்சுட்டுதான் சார் இருக்கோம்.” என்று சொன்னான்.

“ஏண்டா, என் உயிரை வாங்குறீங்க? உங்களால ஒரு பொண்ணைக் கண்டுபிடிக்க முடியாதா? நீங்க எவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிக்கிறீங்களோ, அது நமக்குத்தான் நல்லது.” என்று சொன்னான் சுனில்.

“சார், கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார். போட்டோவோ இல்ல, பேரோ, அட்ரஸோ இருந்தா பரவால்ல. எதுவுமே இல்லாம தேடச் சொல்லி இருக்கீங்க. அப்படி இருக்கும் போது டிலே ஆகத்தானே சார் செய்யும்.” என்று சொன்னான்.

அவன் கேட்கும் கேள்வி எல்லாம் நியாயமானது என்று சுனிலின் மனதில் நினைத்தாலும், அவன் நிலையே இங்கு கவலைக்கிடமாக இருக்கிறது. மற்றவர்களை நினைத்து கவலைப்படும் நிலையில் அவன் இல்லை என்பதால், அவனிடம் கோபமாகப் பேசத் தொடங்கினான்.

“இந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். அந்த பார்ல இருக்கிற சி.சி.டி.வி.ல அந்தப் பொண்ணு இருக்கும். ஃபர்ஸ்ட் அந்த சி.சி.டி.வி. கேமரா எல்லாத்துலயும் செக் பண்ணுங்க.” என்று சொன்னான் சுனில்.

“சார், நீங்க நேத்தே அதை எல்லாம் டெலிட் பண்ணிட்டீங்க. அப்படி இருந்தும் நாங்க ஒன்ஸ் செக் பண்ணிப் பார்த்தோம். அதில் எந்த ஃபுட்டேஜும் இல்லை.” என்று சொன்னான்.

இவன் சொல்லியதைக் கேட்டவன்,

“ஐயோ, இதை வேற டெலிட் பண்ணி வச்சிருக்கேனா? தேவைப்படாது, எந்த எவிடென்ஸும் இருக்கக்கூடாதுன்னு டெலிட் பண்ணது இப்போ எனக்கே பிரச்சனையா வந்து முடிஞ்சிருக்கு. என்ன பண்றது?” என்று மனதில் யோசித்தவனுக்கு ஏதோ ஒன்று தோன்றியது.

“இங்க பாருங்க, அந்த ஃபுட்டேஜ் இல்லன்னா என்ன? அந்த ஸ்ட்ரீட்ல இருக்கிற சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் எல்லாம் செக் பண்ணுங்க. நான் அங்க இருக்கிற ஃபுட்டேஜ் எல்லாம் ஒரு அளவுக்குத்தான் கிளியர் பண்ணியிருந்தேன். நீங்க அந்த ஏரியா ஃபுல்லா செக் பண்ணீங்கன்னா ஏதாவது ஃபுட்டேஜ் கிடைக்கும்.” என்று சொன்னான் சுனில்.

“ஓகே சார்.” என்று சொல்லியவன் போனை வைத்தான்.

சுனிலும் போனை கட் பண்ணியவன், மீண்டும் யாருக்கோ மெசேஜ் செய்தான்.

அதே நேரம் இங்கு…

“கவி, ஸ்ரீனா… யாரு?” என்று கேட்டவள், இன்னும் சில பெயர்களையும் சொன்னாள் ஷீலா.

“நாங்கதான் மேம்.” என்று சொன்னாள் கவி.

“உங்க ரெண்டு பேருக்கும் அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடி ஆயிடுச்சு. இருந்துக்கோங்க, வாங்கிக்கோங்க.” என்று இவர்களிடம் சொல்லியவள், மற்றவர்களிடமும் சொல்லிவிட்டுச் சென்றாள்.

இவள் சொல்லியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் அப்பாயின்மென்ட் ஆர்டர் அவர்கள் கைகளுக்கு வந்தது.

அனைவரையும் பார்த்த ஷீலா,

“நாளைக்கு மார்னிங் எல்லாரும் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க. சாருக்கு பஞ்சுவாலிட்டி ரொம்பவே முக்கியம். டைம்க்கு வந்துருங்க. ஓகே?” என்று சில டீட்டெயில்களை அவர்களுக்குச் சொல்லி அனுப்பினாள் ஷீலா.

“ஏய் எருமை, அந்த மேம் சொன்னது கேட்டியா? இழுத்துப் போத்திட்டு தூங்காம, காலையில சீக்கிரமா எழுந்திருக்கிற வழியைப் பாரு.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“ஏண்டி, இத்தனை நாள் வேலை இல்லாம தூங்கினேன். இப்போ அப்படியே தூங்கிடுவேனா?” என்று கேட்டாள் கவி.

“ஆமாமா… நாளைக்கு பார்க்கத்தானே போறேன் மேடம் எந்திரிக்கிறதை.” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“சரி, சரி… என்ன ரொம்ப பாராட்டாத. வா, கிளம்பலாம்.” என்று சொல்லி இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி..

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!