அத்தியாயம் 2

பிரதிக்ஷாவை  கல்யாணம் பண்ணிக்க என்று ரஞ்சித் சொல்ல அதிர்ச்சியில் உறைந்தான் விதுரன்.

“மச்சான் அது எப்படி முடியும்? என் மனசுல மனிஷா இருக்கான்னு உனக்கு தெரியும் தானே!” என்று கேட்டான் விதுரன்.

“மச்சான் புரியுது! ஆனா இங்கே இருக்கிற நிலைமை  நம்ம கை மீறி போயிருச்சு. அதனால பிரதிக்ஷாவ நீ கல்யாணம் பண்ணிக்க என்று ரஞ்சித் சொல்ல,” நீ சொல்ற மாதிரி இந்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதித்தால் நான் தப்பு பண்ணத ஒத்துக்கிட்டதாயிருமே!” என்று கூறினான் விதுரன்.

ரஞ்சித் விதுரனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க விதுரனின் அருகில் வந்தார் ரஞ்சித்தின்   தாயார் சரஸ்வதி.

“விதுரா, அம்மா இப்படி சொல்றேன்னு நினைக்காத! இங்க என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியல? ஆனா ஒரு பொண்ணு அவ வாழ்க்கைய நீ சீரழிச்சதா சொல்லி நிக்கிறா! அவ இப்படி சொல்றது உனக்கு மட்டும் கெட்ட பேர் இல்ல உன்னை விட அதிக அளவு அவளுக்கு பாதிப்ப உண்டாக்கும். அப்படி இருந்தும்  அவ தைரியமா சொல்றா? அவ பொய் சொல்றாளா உண்மையை சொல்றாளான்னு இது கண்டுபிடிக்கிறதுக்கான நேரம் கிடையாது, நடந்தது நடந்து போச்சு ! நீ பிடிவாதம் பண்ணாம அவளை கல்யாணம் பண்ணி உன் மனைவியா ஏத்துக்க ” என்று சொல்ல “அம்மா நீங்களுமா?” என்று கேட்டான் விதுரன்.

சரஸ்வதி சிரித்துக்கொண்டே, ” பெண் பாவம் பொல்லாதது.அந்த பொண்ணு எப்படி கலங்கி போய் நிக்கிறா பாரு! அப்பா இல்லாத பொண்ணு, அந்த பொண்ணோட அம்மா முகத்தை ஒரு தடவை பாரு கூட நிக்கிற அவங்க சொந்தக்காரங்க முகத்தை எல்லாம் பாரு! அவமானத்துல மனசு உடைஞ்சு  போய்ட்டாங்க, இந்த கல்யாணம் நடந்தா மட்டும் தான் அவங்க தலை நிமிர்ந்து நடக்க முடியும்.அதனால நீ மண மேடையில போய் உட்கார்ந்து அந்த பொண்ணு கழுத்துல தாலியை கட்டு!” என்று சொல்ல, வேறு வழியில்லாமல் மணமேடையில் போயி அமர்ந்தான் விதுரன்.

கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவை பார்த்து, ” போமா போய் மணமேடையில நீயும் உட்காரு!’ என்று சரஸ்வதி சொல்ல, தன் தாய் லட்சுமியை பார்த்தாள்  பிரதிக்ஷா.

‘லட்சுமியும் போ’ என்பது போல்  பிரதிக்ஷாவிற்கு கண்கள் காட்ட பிரதிக்ஷாவின் தோழி ரம்யா அவளை அழைத்து மணமேடையில் உட்கார வைத்தாள்.

“நடந்தது நடந்து போச்சு! மாப்பிள்ளை தான் மாறிப்போச்சு. இப்ப  கல்யாணம் கட்டாயம் நடக்கும். வந்தவங்க எல்லாரும் மணமக்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு  வயிறார சாப்பிட்டுட்டு தான் போகணும்!” என்று ரஞ்சித்தின் அப்பா சொல்ல அனைவரும் அப்படியே அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

மாங்கல்யம் தந்துனானே 

மம ஜீவன கேதுநா 

கண்டே பத்மநாமி ஸுபகே 

த்வம்  ஜீவ சரதஸ்ஸதம்…

என்று சொல்லி கெட்டு மேளம் என்று ஐயர் கூறிக்கொண்டே மஞ்சள் பூசப்பட்டு மங்கலகரமாய்   தேங்காயின் மேல் வைக்கப்பட்டிருந்த தாலியை ஐயர் கையில் எடுத்து விதுரனின் கையில் கொடுக்க, அதை வாங்க தயங்கினான் விதுரன்.

பக்கத்தில் இருந்த ரஞ்சித் “ஐயர் கிட்ட  தாலிய வாங்கி பிரதிக்ஷாவோட கழுத்துல கட்டு ” என்று சொல்ல, திடீரென்று தன் காதலி மனிஷாவின் முகம் வந்து போக ‘என்னை மன்னிச்சிரு மனிஷா’ என்று மனதில் நினைத்துக் கொண்டே 

கைகள் நடுங்க  ஐயரிடம் அந்த தாலியை வாங்கி  பிரதிக்ஷாவின் கழுத்தில் கட்டினான்   விதுரன்.

விதுரன் தாலி கட்டியதும் பிரதிக்ஷாவின் கண்களில் இருந்து கண்ணீர்  வழிந்தது.

அவளின் கண்ணீரை பார்த்த விதுரனோ, “பொய் சொல்லி எல்லாரையும்  ஏமாத்தி என் கையால தாலிய கட்ட வச்ச பின்னாடியும்   யாரை ஏமாத்துறதுக்கு இப்படி நடிக்கிறானு  தெரியல’என்று நினைத்துக் கொண்டே  பற்களை கடித்தான்  விதுரன்.

பற்களை நர நரவென்று கடிக்கும் சத்தம் கேட்க மெதுவாக திரும்பி பக்கத்தில் இருந்த விதுரனை பிரதிக்ஷா பார்க்க அவளை கோபத்தில் எரிப்பது போல் பார்த்தான் விதுரன்.

அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலையை குனிந்தாள் பிரதிக்ஷா.

“தாலியை கட்டி முடிச்சாச்சு ரெண்டு பேரும்  எழுந்து  பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதத்தை வாங்குங்க” என்று ஐயர் சொல்ல அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தான் விதுரன்.

“விதுரா எழுந்திரு!” என்று ரஞ்சித்தின் தாயார் சரஸ்வதி சொல்ல, வேண்டா வெறுப்பாக அங்கு நின்றவர்களின் காலில் விழுந்தான் விதுரன்.

“ஏதோ நடந்தது நடந்து போச்சு! இனிமேலே நீங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து  இங்கே நடந்ததை மனசுல வைக்காம சந்தோசமா வாழுங்க! நீங்க ரெண்டு பேரு தான் ஒன்னு சேர்ந்து வாழணும்னு உங்க தலையில எழுதி இருக்கு போல அதனால தான். கடைசி நேரத்துல நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து இருக்கீங்க!” என்று  திருமணத்திற்கு வந்த வயதான பாட்டி ஒருவர் விதாரணையும் பிரதிக்ஷாவையும் பார்த்து சொல்ல, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவை முறைத்தான்  விதுரன்.

 

“அம்மா இங்கே நிக்க நிக்க எனக்கு கோவம் வருது நான் இங்க இருந்து கிளம்புறேன்!” என்று விதுரன் கோபமாக சொல்ல, ” கொஞ்ச நேரம் பொறுமையா இரு! சில சடங்குகள் செய்ய வேண்டியது இருக்கு அதை செஞ்சு முடிச்சதும் இங்கே இருந்து கிளம்பிடலாம்!” என்று கூறினார் சரஸ்வதி.

தன் தாயை விட அதிகமாக நேசிக்கும் ஒருவர் ரஞ்சித்தின் அம்மா சரஸ்வதி அதனால் தான் யார் சொல்லியும் கட்டுப்படாத  விதுரன் சரஸ்வதி ஒரு வார்த்தை சொல்லவும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் மணமேடையில் போய் அமர்ந்தான்.

சில மணி நேரங்களில் அந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் நிறைவேற்றி முடிய,அங்கு வந்தார் போட்டோகிராபர்.

“திடீர்னு மாப்பிள்ளை மாறி போனதுனால மாப்பிள்ளையும் பெண்ணும் சேர்ந்து எடுத்த போட்டோஸ்  இல்ல! தாலி கற்றத மட்டும் தான் எடுக்க முடிஞ்சது! அதனால கொஞ்சம் ரெண்டு பேரும் ஒத்துழைப்பு கொடுத்தால்  போட்டோ எடுத்து விடுவோம்!”என்று போட்டோகிராபர் சொல்ல அவனை எரிப்பது போல் பார்த்தான் விதுரன்.

‘இப்ப நான் என்ன சொன்னேன்னு இந்த ஆளு இப்படி பாக்குறாரு? மாப்பிள்ளை மாறி போயிருச்சு! அதனால ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க  கொஞ்சம் போட்டோ எடுத்தரலாம்னு சொன்னது ஒரு குத்தமா?’ ஒரே பேமெண்ட் வாங்கினாலும்  மாப்பிள்ளையும் பொண்ணையும் சேர்த்து வச்சு   போட்டோ எடுக்கலாம்னு நெனச்சு கேட்டா  இவரு முறைக்கிறாரு! நல்லதுக்கே காலம் இல்ல போல!’ என நினைத்துக் கொண்டே போட்டோகிராபர் விதுரனை  பார்க்க, விதுரன் பார்த்த பார்வையிலே போட்டோகிராபரில் பயந்து எச்சில் விழுங்கிக்கொண்டே   ஓடிவிட்டார்.

“சரிமா எல்லா சடங்குகளும் முடிஞ்சிட்டா நான் கிளம்பலாமா?” என்று விதுரன் கேட்க, “இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையா இரு! வீட்டுக்கு போயி பால் பழம் சாப்பிடணும்” என்று சரஸ்வதி சொல்ல,

“அம்மா போதும் இவ்வளவு நேரம் நீங்க சொன்னிங்கன்னுதான்  பொறுமையா கேட்டுக்கிட்டு இருந்தேன்  இதுக்கு மேல என்னால கேட்டுக்க முடியாது! இப்ப பாலும் பழமும் சாப்பிடுறது தான் எனக்கு குறைச்சல்?” என்று  கோபத்தில் கொந்தளித்தான் விதுரன்.

‘இவ்வளவு நேரமும் அவன் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம்!’ என்பதை உணர்ந்த ரஞ்சித் “அம்மா விடுங்க, விதுரன பத்தி உங்களுக்கு தெரியும் தானே! இவ்வளவு நேரம் நீங்க சொன்னதுக்காக மட்டும்தான் பொறுமையா இருந்து இவளத்தையும் பண்ணி இருக்கான்! மேலும் மேலும் அவன் பொறுமைய நம்ம சோதிக்க வேண்டாம், அவன அனுப்பி வைப்போம்” என்று ரஞ்சித் சொல்ல  சரியென்று தலையசைத்தார் சரஸ்வதி.

“சரி விதுரா! மருமகள அழைச்சிட்டு நீ வீட்டுக்கு போ, நாங்க வேற கார்ல உன் பின்னாடியே வாரோம்?”என்று சொல்ல, ” “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா!  நீங்க இருங்க நானே போகிறேன்” என்று கூறினான் விதுரன்.

“புதுசா கல்யாணம் முடிஞ்சு இருக்கு! அது எப்படி தனியா உங்க ரெண்டு பேரையும்  தனியா  விட முடியும்?”என்று   சரஸ்வதி  கேட்க,

“கல்யாணமா?” என்று நக்கலாக சிரித்தான் விதுரன்.

“பொய் சொல்லி நெருக்கடில ஒருத்தன நிப்பாட்டி , தாலி கட்ட வைக்கிறது கல்யாணத்துல சேராதுமா? நீங்க சொன்னதுனால தான் நான் தாலி கட்டினேன்! இது தாலி இல்ல இவ பண்ணுன தப்புக்கு தண்டனை. என் முன்னாடி யாரும் எதிர்த்து கூட பேச கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனால் என்னைய  நான் செய்யாத தப்புக்கு இத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டா!!

இவ  பண்ணுன இந்த தப்புக்கான விளைவுகளை கண்டிப்பா இவ அனுபவிப்பா? ” என்று கண்கள் சிவக்க கோபமாய் கூறிவிட்டு மஹாலுக்கு வெளியில் நின்ற தன் காரில் போய் அமர்ந்தான் விதுரன்.

விதுரன் கோபத்தையும், அவன் உடல் மொழியை பார்த்த பிரதிக்ஷாவின் தோழி ரம்யாவிற்கு பயம் வந்தது.

தன் தோழியின் பேச்சை கேட்டு, பொய்யாக ஒரு திட்டத்தை தீட்டி விதுரனை பிரதிக்ஷாவின் கழுத்தில் தாலி கட்டும்படி செய்தது மிகப்பெரிய தவறோ என்று அவளின் உள் மனம் உரைக்க தொடங்கியது!!

ஆனால் பிரதிக்ஷாவோ புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தாள்!!

அவள் முகத்தில் எதையோ சாதித்து விட்ட உணர்வு  மேலோங்கி இருந்தது.

“பிரதிக்ஷா உனக்கு பயமா இல்லையாடி?” என்று  அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரம்யா கேட்க,  ” பயமாத்தான் இருக்கு! அதெல்லாம் வெளியில காட்ட முடியுமா? ஏண்டி நீ வேற நானே பயத்தை வெளியில காட்டக்கூடாதுன்னு கட்டுப்படுத்தி சிரிச்சுகிட்டு இருக்கேன். நீ வேற பயமுறுத்திக்கிட்டு இருக்க!” என்று  கூறினாள்  பிரதிக்ஷா.

“அவசரப்பட்டு  தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுதுடி!” என்று ரம்யா சொல்ல, ” எது தப்பு எனக்கு புடிச்ச ஒருத்தர கல்யாணம் பண்றதுக்கு ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன்! இது ஒரு குத்தமா?” என்று அலட்சியமாக கேட்டாள் பிரதிக்ஷா.

“இது சின்ன பொய்யா? நேத்து நைட்டு என்ன நடந்துச்சுன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்! நம்ம தான்  ரஞ்சித் குடிச்சுட்டு  உன்னோட அறையில் விழுந்து கிடக்காரு! யாராவது பார்த்தா பெரிய பிரச்சனை ஆகிரும்! அதனால வந்து கூட்டிட்டு போங்கன்னு விதுரனுக்கு   தகவல் சொன்னோம். அவரும் அதை நம்பி உன்னோட ரூமுக்கு வந்தாரு!

விதுரன் கதவு திறந்து உள்ள வரும்போது வழுக்கி  விழுகிற மாதிரி எண்ணெயை கொட்டி வச்சோம். நம்ம நெனச்ச மாதிரி விதுரனும் வழுக்கி  விழும்போது நீயே போயி அவர் பக்கத்துல நின்ன. அவரும்  உன் மேல விழ   அத போட்டோவாவும் எடுத்துட்டோம்!

 நம்ம நெனச்ச மாதிரி காலையில கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லார்கிட்டயும் காட்டி, விதுரன் உன்கிட்ட தப்பா நடந்துட்டாருன்னு  எல்லார்கிட்டயும் பொய் சொல்லி உனக்கும் ரஞ்சித்துக்கும் நடக்க வேண்டிய கல்யாணத்தை  நிறுத்தி நீ நெனச்ச மாதிரி விதுரன உன் கழுத்துல தாலி கட்ட வச்சது சின்ன விஷயமா?” என்று கேட்டாள் ரம்யா.

“இது சின்ன விஷயம் தான். எனக்கு ரஞ்சித கல்யாணம் பண்றதுக்கு விருப்பம் இல்லை! விதுரன புடிச்சி இருந்துச்சு, அவர கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்! எனக்கு கல்யாண  ஏற்பாடு  நடக்காம இருந்திருந்தா நேரா என்னோட விருப்பத்தை விதுரன் கிட்ட சொல்லி புரிய வச்சு அவர கல்யாணம் பண்ணி இருப்பேன். எல்லாம் கைமீறி போனதுனால  விதுரன கல்யாணம் பண்றதுக்கு  இப்படி ஒரு திட்டம் போட வேண்டியதா போச்சு!” என்று சிரித்தாள் பிரதிக்ஷா.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை  கேட்டு கோபத்தில் கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தான்  ரஞ்சித்.

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
984 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page