அத்தியாயம் -2

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த கெஸ்ட் ஹவுஸ் மிகவும் செழுமையாக இருக்க மழை பெய்து ஓய்ந்து வெறும் பூச்சிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருக்க காற்றைக் கிழித்துக்கொண்டு அந்த காரானது கெஸ்ட் ஹவுஸ் உள்ளே  நுழைய வாட்ச்மேன் சல்யூட் அடித்து விட்டு கதவை  திறந்தார். 

கொடூரன் ஈஸ்வரன் பெண்ணவளை கீழே இறக்க சுற்றி முற்றி பார்த்தவள் இருட்டின் பயம் அவளது கண்களில் நன்றாக தெரிந்தது.  அதைவிட தன்னை களவாட காத்திருக்கும் அந்த கொடூரனின் பார்வை பெண் அவளுக்குள் கிலி யை பரப்பியது. 

கண்களில் வடியும் கண்ணீரை கூட அந்த மழையானது அழித்துவிட “என்ன விட்டுருங்க ப்ளீஸ்!  என்ன ஒன்னும் பண்ணாதீங்க உங்க மக வயசு எனக்கு ஆகுது இந்த மாதிரி நீங்க ஒரு பெரிய பதவியில் இருக்கிறவங்க நடந்துக்கலாமா?”  என்றால் பயந்து கொண்டே. 

அதற்குள் அவளை வீட்டிற்குள் அழைத்து வந்துவிட மற்ற ஆட்களை பார்த்த ஈஸ்வரன் ” டேய் எல்லாரும் வெளியவே இருக்கணும் யாரும் வீட்டுக்குள்ள வராத மாதிரி பார்த்துக்கோங்க . ஆனா இந்த அனாதை கழுதைக்கு யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும்.  ஏனென்றால்  இவளோட புருசனே  என்கிட்ட இவள வித்துட்டான்.  அதனால யாரும் வர மாட்டாங்க நீ ஒரு அனாதை தான் இப்போ!”  என்றான் அபியை இளக்காரமாக பார்த்துக் கொண்டே.

அந்த வார்த்தை அவளை இடியென தாக்கியது. யாருடைய  கொடுமையை இத்தனை நாள் தாங்கிக் கொண்டிருந்தாலோ யாருடைய குழந்தையை தனது வயிற்றில் தற்பொழுது சுமந்து கொண்டிருக்கிறாளோ அவனே தன்னை இப்படி ஒருவனுக்கு கொடுத்ததை எண்ணி அவள் மனமானது மிகவும் அடிபட்டது. 

“ப்ளீஸ் என்ன விட்ருங்க!”  என்று சொன்னவள் அப்படியே நகர்ந்து அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தவள் ஈஸ்வரன் அவளை நெருங்கும் முன்பு அந்தக் கதவை அடைத்து தாழ்போட்டுக் கொண்டாள். 

அதை பார்த்து சிரித்தவன் சாவியை வைத்து கதவை திறக்க அதுவும் திறந்து கொண்டது. உள் நுழைந்தவன் பார்த்தது என்னவோ அறைக்கு ஓரத்தில் அழுதுகொண்டு  நின்று இருக்கும் அபி யைத்தான். 

அவளைக் கண்டு சிரித்தவன் “ரொம்ப பயப்படாத மா சீக்கிரமா முடிஞ்சிடும் நானும் எத்தனையோ பொண்ணுங்கள ருசிச்சுட்டேன் உன்னோட அழகை யார்கிட்டயும் பார்த்ததில்லை அதனாலதான் கொஞ்ச நாளா உன்ன ஃபாலோ பண்ணி இன்னைக்கு பிளான் பண்ணி தூக்கிட்டேன்!” என்றான்.

அவன் பேசிக் கொண்டே அவள் அருகில் நெருங்க அவளோ தன்னுடைய மானத்தையும் வயிற்றில் இருந்த குழந்தையும் காப்பாற்ற அழுது கொண்டே சுவற்றில் சாய்ந்து அப்படியே தள்ளி செல்ல ஒரு கட்டத்தில் அவளை பிடித்தவன் அவளுடைய முந்தானையில் கை வைக்க பெண்ணவள் சக்தியற்று இருந்ததால் அவன் இழுத்த ஒரே இழுவையில் அவள் கையில் இருந்தும் உடம்பிலிருந்தும் அது அப்படியே உருவிக்கொண்டு வந்துவிட தனது மானத்தை மறைக்க கைகளை கொண்டு நெஞ்சு பகுதியில் மறைத்துக் கொண்டவள் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தாள். 

இப்பொழுதே இந்த கடவுள் தன்னை எங்காவது மறைத்து விட மாட்டாரா அல்லது பூமியை பிளந்து உள்ளே சென்று விட மாட்டோமா என்று நினைத்துக் கொண்டிருக்க அடுத்த அவளது ஜாக்கெட்டின் மேல் கை வைக்க நெருங்க “ப்ளீஸ் வேண்டாம் வேண்டாம்!  என்று அழுபவளை பார்த்து சிரித்துக் கொண்டே ரசித்தவன் அவள் ஜாக்கெட்டை தொடும் நேரம் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பது போல் கண்களை மூடிக்கொண்டு நின்று இருந்தவள்  சரியாக அவள் முகத்தில் ஈரம் பட மெதுவாக கண்களைத் திறந்து பார்க்க அவள் முகம் முழுவதும் இவனுடைய ரத்தம் இருந்தது.  அதை கண்டவள் மெதுவாக கீழே குனிந்து பார்க்க நெற்றி பொட்டில் புல்லட் இறங்கியதற்கான அடையாளம் அத்துடன் ஈஸ்வரன் இறந்து கிடந்தான். 

மனதிற்குள் சற்று நிம்மதி அடைந்தாலும் இவனையே கொன்று இருக்கிறார்கள் என்றால் இன்னும் மோசமானவர்கள் தான் இருப்பான் இவனை கொன்றவன் என்பதை புரிந்து கொண்டு மெதுவாக நிமிர்ந்து பார்க்க அப்பொழுது அங்கே ஆஜான பாகுவாக நின்று கொண்டிருந்த கரணை பார்த்தவள் கண்கள் அப்படியே அதிர்ந்தது. 

அவள் முகத்தின் அதிர்வை வைத்தே தன்னை கண்டுகொண்டால் என்பதை நினைத்து அவன் முகத்தில் ஒரு கர்வ புன்னகை வந்து செல்ல மெதுவாக அவள் அருகில் நெருங்கினான். 

அவள் அருகில் வந்தவன் தனது கைகுட்டையால் அவள் முகத்தில் இருந்த ரத்தத் துளிகளை துடைத்து விட அதில் சுயநினைவு அடைந்தவள் தட்டு தடுமாறி க…ர…ண்… என ஒவ்வொரு வார்த்தையாக உதிர்த்தாள். 

அதைக் கண்டு இன்னும் புன்னகை அதிகம் படுத்தியவன் “கரண் தான் உன்னுடைய கரண்!”  என்றவன் வார்த்தை சொல்லி முடிக்கையில் அவன் மீதே மயங்கி சரிந்தால் அபிரஞ்சிதா. 

அதைக் கண்டு சிரித்தவன் பெண்ணவளை பார்த்து அவன் அணிந்திருந்த ஓவர் கோட்டை கழட்டி அவளுக்கு போட்டி விட்டு நன்கு மூடி விட்டவன் அவளை அப்படியே தனது கைகளில் ஏந்தி கொண்டு அங்கிருந்து வெளியே வர ஈஸ்வரன் உடைய ஆட்கள் அனைவரும் குண்டடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். 

கரன் உடைய நெருங்கிய நண்பன் வினோதன் தலையசைக்க இருவரும் அங்கிருந்த காரில் ஏற தன்னவளை கைகளில் ஏந்தி கொண்டு உள் நுழைந்தவன் அவளை தன் மடியில் வைத்துக்கொண்டு தனது நண்பனுக்கு கண்ணை காட்ட தற்பொழுது காரானது அவனுடைய அப்பார்ட்மெண்ட்டை நோக்கி சென்றது. 

தனது இல்லத்திற்கு வந்தவன் தனது நண்பனிடம் பேச வேண்டிய விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு தான் நாளை வீட்டிற்கு செல்வதாக சொன்னவன் கம்பெனியை பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு நாளை காலை தெள்ளத் தெளிவாக வேண்டும் என்று மட்டும் கூறியவன் தன்னவளை அழைத்துக்கொண்டு படுக்கையறையில் மெத்தையில் கடத்தியவன் அவளை பார்த்துக் கொண்டே அருகில் அமர்ந்தவன் அதன் பிறகு தான் அவள் உடல் ஈரமாக இருப்பதை உணர்ந்து கொண்டு வேகமாக அங்கே இருந்த ஒரு கபோர்டு திறந்து  அவன் வாங்கி வைத்திருந்த உடைகளை எடுத்துப் பார்க்க திரும்பி அபியையும் பார்த்தான் .

“அப்ப இருந்த மாதிரி இப்பவும் இருக்கடி நீ ! கொஞ்சம் கூட மாறவே இல்ல குணத்திலும் சரி, அழகுலையும் சரி !” என்று சொன்னவன் உதட்டில் தானாக ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. 

அதன் பிறகு அவனே அவளுடைய இரு உடைகளை கழட்டி காய்ந்த உடைகளை அணிவித்து விட்டான்.

அந்தப் பார்வையில் துளி கூட காமம் இல்லை. ஆனால் அவளின் வயிற்றின் மேல் மட்டும் அழுத்தமாக பதிந்து அங்கே கை வைத்து தன்னவளின் குழந்தையை உணர்ந்தவன் உடலுக்குள் அவனை அறியாமல் ஒரு சிலிர்ப்பு உருவானது. 

அதில் அவன் இதழில் ஒரு புன்னகை தவழ கையால் அந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்தவன்  ’உனக்கும் உங்க அம்மாவுக்கும் எதுவும் ஆகாது. என்னதான் நீ என் மூலமா என் அபி வைத்துள்ள வரலன்னாலும் அவளுடைய பொருள் எல்லாமே என்னுடையதுதான்.  அவளே இப்போ என்னுடையவள் ஆகப் போறா. அதனால நீயும் என்னுடையதுதான் உன் அம்மாவே நினைத்தாலும் இதை தடுக்க முடியாது ’ என்று அந்த குழந்தையிடம் மட்டும் மனதிற்குள்  பேசியவன் அவளுக்கு உடை அணிவித்து விட்டு தலையையும் நன்றாக துவட்டி விட்டு பெண்ணவளை பார்த்துக் கொண்டு அமர்ந்தவன் நினைவு  ஐந்து வருடங்களுக்கு பின்னோக்கி சென்றது. 

பிளாஷ் பேக் ஆரம்பிச்சாச்சு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும்…

மறக்காம கதை பத்தின விமர்சனங்களை கொடுத்துட்டு போங்க மக்களே…

சூரிய கதிர்கள் பூமியை பிரகாசித்துக் கொண்டிருக்க ஜூன் மாதம் என்பதால் காலையிலேயே வெயில் கொளுத்திக் கொண்டிருக்க மக்கள் புலம்பிக்கொண்டே தங்களது வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். 

அந்த ஒரு வீட்டில் மட்டும் அந்த குடும்பத் தலைவியின் சத்தம் காதை கிழிக்கும் வகையில் இருந்தது காரணம் நம்ம அபி ரஞ்சிதா தான். 

இன்று முதல் நாள் கல்லூரி அவளோ ஒன்பது மணி கல்லூரிக்கு இருக்க வேண்டும் பெண்ணவள் தற்பொழுது 8:00 மணி ஆகிவிட அப்பொழுதுதான் எழுந்து குளித்துக் கொண்டிருந்தாள். 

அவள் குளித்து முடிப்பதற்குள் ஹீரோயின் ஃபேமிலியை பற்றி பார்த்துவிட்டு வரலாம் வாருங்கள். 

ஹீரோயின் அப்பா கதிர்வேல் அந்த சிட்டியில் இருக்கும் பிரபலமான வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

குடும்பத் தலைவி கௌரி மிகவும் நல்ல மனம் கொண்டவர் , ஆனால் கொஞ்சம் பணத்தாசையும் பிடித்தவர்.. 

வீட்டில் இருந்தபடியே பூ கட்டி கொடுப்பது ஊறுகாய் போட்டுக் கொடுப்பது வடகம் செய்து கொடுப்பது என்று அவரால் முடிந்த வேலைகளை செய்து கொண்டிருப்பார். இதை வைத்து அவரை பணத்தாசை பிடித்தவர் என்று சொல்லவில்லை அவருடைய குணம் என்னவென்று உங்களுக்கே தெரிய வரும்..

அவப்பொழுது பக்கத்து வீட்ல அது வாங்கி இருக்காங்க மேல் வீட்ல இது வாங்கி இருக்காங்க கீழ் வீட்டில் இது வாங்கி இருக்காங்க நம்ம இதெல்லாம் எப்ப வாங்க போறோம் என்று பேசி கணவரிடமும் திட்டும் வாங்கிக் கொள்வார்…

அவர்தான் தனது மகள் இன்னும் கல்லூரிக்கு கிளம்பாமல் இருந்ததால் கத்திக் கொண்டிருந்தார். 

அடுத்து நம்முடைய கதாநாயகியின் அக்கா பவித்ரா. சாந்தமான குணம் கொண்டவள். தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருக்கிறாள். வயது 24 அபியை விட சற்று கலராகவும் அழகோவியமாகவும் இருப்பவள் தன்னைத் தாண்டி செல்பவர்களை ஒரு முறை திரும்பி பார்க்கச் செய்யும் அழகு உடையவள். ஆனால் அந்த கர்வம் துளி கூட இல்லாமல் மிகவும் சாந்த குணம் உடையவள்..

 

வேலைக்கு செல்வதற்கு அழகான புடவையில் தயாராகி வந்தவள் தனக்கும் தனது தந்தைக்கும் தங்கைக்கும் அம்மா தயார் செய்து வைத்திருந்த உணவை டிபன் பாக்சில் போட்டுக் கொண்டிருந்தாள். 

அதை பார்த்த கௌரி ” நீ எவ்வளவு பொறுப்பா இருக்க ! உன் தங்கச்சின்னு தான் இருக்காளே? எந்த வேலையும் செய்யறதில்ல சரியான சோம்பேறி!”  என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவள் நம்ம ஹீரோயின் “அம்மா நான் குளிச்சிட்டு வந்துட்டேன் சும்மா காத்திட்டே இருக்காதே!”  என்று கூறிக் கொண்டே தன்னை தயார்படுத்த ஆரம்பித்தால். 

ஐந்தடியில் சற்று பூசினார் போன்று உடல்வாகக் கொண்டவள் நமது நாயகி. கோதுமை நிறத்தில் சற்று வெண்மையாக இருப்பாள். முதுகு வரை இருக்கும் முடியை பின்னி கொண்டு இருந்தவள் மீன் போன்ற கருவிழி சற்று முட்டைக்கண் என்று கூட சொல்லலாம் . ஆனால் அதில் ஒரு வசீகரம் இருக்கும். நடுவில் அழகான ஒரு திலகம் சைசில் பொட்டு வைத்து நேர்த்தியாக ஒரு சுடிதாரை அணிந்து  கொண்டவள் மறக்காமல் ஷாலை இரண்டு பக்கமும் பின் குத்தி தனது கல்லூரி பாகை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து அடுத்த கால் மணி நேரத்தில் வெளியேறினால். 

அவளைப் பார்த்த பவித்ரா ” ஏன்டி சாளுக்கு  பின் புத்தி இருக்க?”  என்றால். 

“இல்லக்கா லேடிஸ் காலேஜ்லயே படிச்சுட்டேன்னா இப்ப பாய்ஸ் இருக்குற காலேஜ் போறதுக்கு கொஞ்சம் பயமா  இருக்கு.  அதனால தான் இப்படி இருந்தா எனக்கு காண்பிடென்ட்டா இருக்கும் !” என்றால் அப்பாவியாக. 

அதைக் கேட்டு சிரித்த பவித்ரா “நல்லவ மாதிரியே நடிக்காதடி நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடி என்று எனக்கு தெரியாது!”  என்றால் மெதுவான குரலில். 

“கண்டுபிடிச்சிட்டியா  ச்சே, நான் உன் கூட முதல் நாள் நல்லவள் போல்  நடிச்சு உன்கிட்ட இருந்து பாக்கெட் மணி வாங்களான்னு பார்த்தேன் இப்படி என்ன கண்டுபிடிச்சிட்டியே!”  என்றால் போலி சோகத்துடன் . 

“நீ நல்லவளா நடிக்கலனாலும் நான் உனக்கு எடுத்து வச்சிருக்கேன் உன்னுடைய பேக் ஓட ஃப்ரெண்ட் ஜிப் தொறந்து பாரு!”  என்றால் .

உடனே அதை திறந்து பார்க்க அங்கே 50 ரூபாய் பணம் இருந்தது.  அதை பார்த்த சந்தோஷத்தில் தனது அக்காவின் கன்னத்தில் முத்தமிட்டவள்” தேங்க்யூ செல்ல அக்கா!”  என்று கொஞ்சி விட்டு தனது அம்மா வருவதை கண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள். 

கதிர்வேலும் கிளம்பி வந்து விட மூவரும் சாப்பிட்டு முடித்தவுடன் கௌரியிடம் சொல்லிவிட்டு கதிர்வேல் அலுவலகத்திற்கு கிளம்ப பவித்ரா தனது தங்கையுடன் வெளியேறினால். 

“புதுசா காலேஜ் போற பசங்க எல்லாம் வேற இருப்பாங்க பார்த்து ஜாக்கிரதையா இருக்கணும் யார்கிட்டயும் பேசாத பொண்ணுங்க கூட மட்டும் பேசு !” என்று டிபிக்கல் அம்மாவாக தனது மகளுக்கு அட்வைஸ் செய்ய அவளோ அனைத்திற்கும் நல்ல பெண் போல் தலையை ஆட்டிக்கொண்டே வெளியே வந்தவள் தலை இன்னும் ஆடிய வண்ணமே இருக்க அதை பார்த்து சிரித்த பவித்ரா ” போதும் டி அந்த கேரக்டர் விட்டு வெளியே வா நம்ம அம்மாவை விட்டு தள்ளி வந்துட்டோம்!”  என்று சொன்னதை கேட்டு

” அக்கா என் தலையை பிடித்து ஸ்டாப் பண்ணு தானா ஆடிகிட்டே இருக்கு!”  என்று காமெடி செய்ய தனது தங்கையின் தலையில்  கொட்டியவள் அவளையும் தன்னுடைய ஸ்கூட்டியில் அமர வைத்து பஸ் ஸ்டாப்பில் கொண்டு விட்டு ஆயிரம் பத்திரம் கூறியவள் “இன்னைக்கு ஒரு நாள் காலேஜ் பஸ் வராது ! என்று சொல்லி இருக்காங்க இன்னைக்கே போய் நம்ம ஏரியா நம்ம வீட்டு அட்ரஸ் எல்லாத்தையும் கொடுத்து நாளையிலிருந்து காலேஜ் பஸ்ல போலாம்!  மறக்காம அமௌன்ட் எவ்வளவுன்னு கேட்டு அப்பா கிட்ட வந்து சொல்லு சரி அக்கா போயிட்டு வரேன்!”  என்று கூறிய பவித்ராவும் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட அவளை பார்த்த வண்ணமே அங்கிருந்து ஒரு காரம் அவள் அறியாத வண்ணம் கிளம்பியது. 

அது யாராயிருக்கும் என்று அடுத்தடுத்து எபியில் பார்க்கலாம். 

நமது ஹீரோயினும் அந்த நகரத்தில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியில் தான் படிக்கப் போகிறாள்.

அந்த இடத்திற்கு செல்ல பஸ் வந்தவுடன் ஏறிக் கொண்டவள் டிக்கெட் வாங்கிக் கொண்டு இடம் வந்தவுடன் இறங்கி கொண்டு அந்த காலேஜ் முகப்பை  கண்டு வியந்தவள்   கல்லூரிக்குள் செல்ல ஆங்காங்கே மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ஒரு புறம் வரவேற்று கொண்டும் மறுபுறம் வரவேற்பு தாண்டி செல்லும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கலாய்த்துக் கொண்டும்  ரசித்துக் கொண்டும் சைட் அடித்துக் கொண்டும் ராகிங் செய்து கொண்டும் இருந்தனர்.  அனைத்தையும் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தவள் காதல் விசில் சத்தம் கேட்க குரல் வந்த திசையை பார்த்து பெண் அவள் கண்கள் மிரட்சி அடைந்தது..

கண்டிப்பா அடுத்த எபில ஹீரோவை பாத்தரலாம்…. மறக்காம கதையை பற்றி இரண்டு வரி சொல்லிட்டு போங்க நட்புகளே.…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page