நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்படி ஒரு கேடுகெட்ட எண்ணத்தோட தான் அவன் என்கிட்ட பழகிட்டு இருந்தா எனக்கு இப்போ தான் தெரியுது.
நான் நல்லாவே இல்லையா?…. ஏன் என்னை எல்லாரும் இவ்வளவு கேவலமா நினைக்கிறாங்க?.. அவ்வளவு அசிங்கமா இருக்கேனா?…
எனக்கு ஒரு ஆசை இருக்கு. அது என்ன தெரியுமா?
அப்பா பாருங்க… நானும் என்னோட புருஷனும் எப்படி இருக்கோம் னு பாருங்க.. எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குன்னு பாருங்க. எனக்கு கல்யாணம் ஆகாது, உன் மூஞ்சி வியாபாரம் ஆகாதுன்னு என்னை திட்ட ஆரம்பிச்சீங்களே பாருங்க, ரொம்ப ஹான்ஸமான ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
அவனுக்கு என்னை விட்டா இந்த உலகத்துல யாரும் முக்கியம் கிடையாது. என்ன சின்ன இடத்துல கூட விட்டுக் கொடுக்க மாட்டேங்குறான்.
நீங்க அடிக்கடி சாபம் விட்டுட்டு இருப்பீங்களே பாருங்க, நானும் நல்ல புருஷன் கட்டி இருக்கேன். கண்டிப்பா உங்க கண்ணு முன்னாடி நல்லா இருப்பேன்பா. என் புருஷன் என்ன நல்லா பார்த்து பாருப்பா. அவரோட ஒரே ஒரு சாய்ஸ் அது நானா மட்டும் தான் இருப்பேன். நீங்க எனக்கு 30 வரன் பார்த்தீங்களே, அப்படி கிடையாது.
என் புருஷனுக்கு 30 ல கிடைச்ச ஒன்னு நான் இல்ல, அவரோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் சாய்ஸ் நான் மட்டும்தான்.
இப்படி எங்க அப்பா கிட்ட சொல்லனும்னு எனக்கு அவ்வளவு ஆசை.
நிறைய பொண்ணுங்க கிட்ட நிறைய பசங்க ஃபாலோ பண்ணி வந்து ப்ரொபோஸ் பண்றாங்களே, அப்படி என்கிட்ட யாராவது ப்ரொபோஸ் பண்ண மாட்டாங்களான்னு எனக்கும் அளவுக்கு அதிகமாக ஆசை.
ஏன் எல்லாரும் என்ன மட்டும் இப்படி இளக்காரமாக பார்க்கிறார்கள்? கஷ்டமா இருக்குன்னு சொல்லி அவனுடைய ஒரு பக்கம் தோள்பட்டையில் சாய்ந்து பயங்கரமாக அழுதாள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி?..
நான் அப்படி என்ன பாவம் பண்ணேன்னு சொல்லி சொல்லி தோள்பட்டையில் முட்டி முட்டி அழுது கொண்டே இருக்க,
அது அடிபட்ட இடம். பயங்கரமாக இரத்தம் கசிய ஆரம்பித்தது.
ஆனா அத அவள் பார்க்கவே இல்லை. அவன் வலிக்குதுன்னு சொல்லவே இல்ல. முகத்தில் ரத்தம் கசிஞ்சதுக்கு அப்புறம் தான் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
அவனுடைய வலியை விட இவளுடைய அழுகை அவனுக்கு பயங்கரமாக வலியை ஏற்படுத்தியது.
அவனுக்கு பயங்கரமாக கண்கள் கலங்கி, அதை வெளி காட்ட முடியாம வானத்தை பார்ப்பது போலவும், பெருமூச்சு விடுவது போலவும் அவன் சமாளித்து பார்த்தாலுமே அவனால முடியல.
ஐயயோ..
ரத்தம் வருது. சொல்ல வேண்டியது தானே, இந்த பைத்தியக்காரி காயம் பட்ட இடத்தில் இன்னும் வலியை கொடுத்துட்டு இருக்கேன்னு சொல்லி…
சீக்கிரம் வா, ஹாஸ்பிடல் போகலாம். நீ எதுக்கு அமைதியாகவே இருக்கேன்னு சொல்லி அவன் முகத்தை வேகமாக திருப்ப,
ரொம்ப வலிக்குதா?.. முதல்ல எழுந்திரு என்று சொல்லி அவன் கைய புடிச்சு அவள் வேகமாக இருந்து கூட்டிட்டு போக,
இரு… பைக் எடுத்துட்டு போவோம்.
பைக் இங்கேயே இருக்கட்டும். நான் ஆட்டோ புடிக்கிறேன். அதுல போகலாம். உன்னால எப்படி ஓட்ட முடியும்?..
வா போகலாம்….
இப்படி அவனை கை பிடிச்சு தூக்கும்போது, அவன் அதுல ஒன்னும் இல்ல, நான் பைக் எடுத்துட்டு வரேன், கிளம்பலாம் என்று அவன் போய் பைக்கை சாதாரணமாக எடுத்துட்டு வர,
சொல்ற பேச்சை நீ கேட்க மாட்டியா?… சரி சீக்கிரமா போ.
நேத்து போன அதே கிளினிக் போ. அதான் பக்கமா இருக்கு.
இப்படி சொல்லி ரெண்டு பேரும் கிளீனிக்கு போக,
அவங்க பயங்கரமான திட்டு.
காயம் கொஞ்சம் ஆழமா பட்டு இருக்கு.
இங்க இருந்து அனுப்பி 3 மணி நேரம் கூட ஆகல, அதுக்குள்ளேயே இப்படி மறுபடியும் அதிலேயே ரத்தக்கசிவை ஏற்படுத்திக் கொண்டு வந்து இருக்கீங்க.
கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்க மாட்டீங்களா?..
இப்படி பயங்கரமா திட்டிக்கிட்டு, அவங்க ட்ரெஸ்ஸிங் பண்ணி விட,
மேடம், கொஞ்சம் பாத்துக்கங்க.
ஏற்கனவே துருப்பிடித்த கம்பி தான் கிளிச்சி இருக்கு. கொஞ்சம் சேஃபா பாருங்க.
இப்படி சொல்லி அவங்க ரெண்டு பேரையும் அனுப்பி வச்சாங்க.
இப்ப ரெண்டு பேருமே வீட்டுக்கு வந்தாச்சு.
டேப்லெட் போடணும். ஆனா காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல, ரெண்டு பேருமே.
அவனுக்கு இன்ஜெக்ஷன் வேற போட்டுருக்காங்க.
சாப்பிட ஏதாவது வேணுமே. இங்க கிச்சன் எங்க இருக்கு? கிச்சன்ல ஏதாவது பொருள் இருக்கா?..
அதெல்லாம் எதுவும் இல்லை.
என்னுடைய ஃபோன்ல ஆர்டர் பண்ணு. நம்ம நாளைக்கு போய் எல்லா பொருளும் வாங்கிட்டு வரலாம். இப்போ என் போன்ல ஆர்டர் பண்ணி விடு. மதியம் ஆயிடுச்சு.
நீ என்ன பிரியாணி சாப்பிடுறியா? என்ன சாப்பிடுற?..
பிரியாணியா?… கடையில நல்லா செய்வாங்களா?..
சரிதான். நீ அதையும் டேஸ்ட் பண்ணது கிடையாதா?..
போனை கொடு. நானே ஆர்டர் பண்றேன்னு ஒரு பெரிய ட்ரீட் வைக்கிற மாதிரி நிறைய ஆர்டர் பண்ணினான்.
கொஞ்ச நேரத்துல வந்துருச்சு. இத்தனை வகைய அவள் பார்த்ததே இல்லை.
அவள் தங்கச்சி அடிக்கடி போட்டோ உள்ள காட்டுவா. நாங்க பிரண்ட்ஸோட வெளில போனோம்னு சொல்லி, அதுல இப்படித்தான் இருக்கும்.
இது எல்லாத்தையும் பாத்துட்டு, அவள் பயங்கர வேகமாக கடகடன்னு சாப்பிட ஆரம்பிச்சுட்டா.
அவ சாப்பிடுறதா அவன் அமைதியாக வேடிக்கை பார்த்துட்டு இருந்தான்.
நீயும் சாப்பிடு… ஏன் வேடிக்கை பார்த்துட்டு இருக்க?..
இப்படி அவள் கேள்விகளாக கேட்டுக்கிட்டே, அவர் சாப்பிடுவதை மட்டும் நிப்பாட்டவே இல்லை.
அப்போ தான் அவனுடைய வலது கையை நீட்டினான்.
உள்ள கொஞ்சம் உறைந்து போய் இருந்துச்சு. அந்த ரோட்ல அவனுடைய கை பட்டு தேஞ்சு இருந்துச்சு.
அப்புறம் சாப்பிட்டுகிறேன். நீ சாப்பிடு என்று சொன்னதும்,
நான் ஒரு லூசு. இதெல்லாம் நான் சாப்பிட்டதில்லையா? அதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.
ஸ்பூன் வேற அவன் குடுக்கல போல.
இரு, நானே தரேன்னு அவள் ஊட்டி விட ஆரம்பிச்சுட்டா.
அவன் ஊட்டி விடும் போதெல்லாம், அவனுடைய ஆன்ட்டி ஞாபகம் அவனுக்கு வந்துச்சு. கண் எல்லாம் கலங்கியபடி, அது ரொம்ப சந்தோஷமா சாப்பிட ஆரம்பிச்சான்.
ஒரு சின்ன குழந்தையை பார்த்துக்கிற மாதிரி ஆ காட்டு… ஆ… இப்படி சொல்லி சொல்லி ஊட்டி விட,
அவனுடைய சின்ன வயசுக்கு அவன் போயிட்டான்.
ஏழு கழுதை வயசாயிடுச்சு. ஆனாலும் சில ஏக்கங்கள் எளிதில் மறைந்து போறது கிடையாது.
அவனுக்கு ஏற்பட்ட சின்ன வயசு டிராமா அந்த மாதிரி.
சாப்பிட்டு முடிச்சுட்டு, மீதம் இருக்கிற சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு, மாத்திரை எல்லாம் கொடுத்து, அவன் தூங்குவதற்கு அழகா பெட்டை விரிச்சு எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு அவனைத் தூங்க சொல்ல,
ஏதோ ஒரு மனதிருப்தி. அது சொல்ல முடியல, இதுதான் அப்படின்னு.
தனிமை என்கிற சிறை அங்கு உடைஞ்ச மாதிரி அவனுக்கு தோணிச்சு.
சரி, நான் போய் குளிச்சிட்டு வரேன். நீ தூங்கு என்று சொல்லிட்டு, அவள் இப்போ புது ட்ரெஸ்ல உன்னை எடுத்துக்கிட்டு இப்ப பாத்ரூமுக்குள்ள போக,
அவள் குளிக்கிற சத்தத்தை கேட்டுகிட்டே அவன் படுத்திருந்தான். ஆனால் தூக்கம் மட்டும் வரல.
ஒரு பக்கமாக திரும்பியபடி, அந்த பாத்ரூமில் பார்த்துக்கொண்டே, எதையோ நினைச்சு சிரிச்சுட்டு இருந்தான்.
அவ இப்ப கதவை திறந்ததும்,
அவன் தூங்குற மாதிரி லைட்டா கண்ணை மூட,
ஐயையோ… இந்த ஜிப்பை எப்படி மாட்ட? கை வேற எட்ட மாட்டேங்குது, அவ சொல்லிகிட்டு வெளியில் வந்தா.
அவன் கண்ண மூடி தூங்கிட்டு இருந்தான், அவள் பார்க்கும் போது.
மெல்ல வெளியில் வந்து, அங்கே இருக்கிற கண்ணாடியை பார்த்து, அவள் கஷ்டப்பட்டு ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தா, அதை போடுவதற்கு.
இங்கே அத பாத்த அவன் சிரிச்சிட்டு இருந்தான், அவளுக்கு தெரியாம.
ஆனா நிலாவிற்கு கேட்டுருச்சு.
அவள் திரும்பி, நீ இன்னும் தூங்கலையா? ன்னு கேட்டுகிட்டே, அவள் தோள்பட்டையில் போட்டிருந்த துண்டை வைத்து முதுகு பக்கமாக மறைக்க,
இங்கே வா….
என்ன திரு திருன்னு முழிக்கிற? கிட்ட வா.
எதுக்கு?..
நீ தூங்கு.
நான் கொஞ்ச நேரம் காத்தாட அந்த பக்கமா போயிட்டு வரேன்னு அவள் சொல்லும் போது,
இப்படி டிரஸ் ஓப்பனா இருக்கும்போதே வா போவ? வா..
அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் பாத்துக்குறேன்.
நீ தூங்கு.
இப்படி அவள் பேசிக்கொண்டே இருக்க, அவன் மெல்ல எழுந்து பக்கத்துல வந்தான்.
திரும்பு, நிலா.
அதெல்லாம் வேணாம்.
நான் பார்த்துகிறேன் என்று சொல்கிறேன்ல்ல. நீ பார்த்ததே நானும் பாத்துட்டேன். போதும், போதும்.
அப்படியே நில்லுனு சொல்லிட்டு, நேருக்கு நேராக நின்று கொண்டு, தன் கையை முதுகுக்கு பின்னால் மெதுவாக கொண்டு சென்று, வேகமாக ஜிப்பை போட்டு விட,
அவன் கண்கள் அவள் கண்களை விட்டு வேறு எங்கும் அகலவே இல்லை.
அவனுடைய கண்ணுல ஏதோ ஒரு ஈர்ப்பு.
அவளை வேறு பக்கம் பார்க்க விடாமல் இறுக்கமாக பிடித்தது.
அவன் முடிச்சதுக்கு அப்புறம் கூட, அவளுடைய கண்கள் வேறு பக்கம் பார்க்காமல், அவனை கூர்ந்து பார்த்தபடி இருக்க,
அவன் மெதுவா அவள் காது பக்கத்துல வந்து,
வேலை முடிஞ்சுச்சு. நீ என்ன அப்படியே நிக்கிற?..
இப்படி சொல்லி, ஒரு சின்ன புன்னகையோடு அவன் கண்ணை அடிச்சுட்டு பால்கனி பக்கமாக போக,
அவள் முகம் எல்லாம் சிவந்து போனது.
இது முதல் முறையான ஒரு வெட்கம்.
உடம்பெல்லாம் சூடு தீயாய் பரவ ஆரம்பித்தது.
திருப்பி அவன் முகத்தை பார்க்க முடியல.
அவன் பால்கனி பக்கமாக போய், வெளியில் எட்டி பார்த்துகிட்டே, சிரிச்சிட்டு நின்னுட்டு இருந்தான்.
அவன் சிரிப்பதை அவளும் உணர்ந்தாள்.
சாதாரணமாக துடிக்கும் இதயத்தை விட, இப்பொழுது துடிப்பு சத்தம் வெளியில் வரையிலும் கேட்டது.
நல்ல காத்தாட இருக்கிற அந்த வீட்ல, அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேர்க்க ஆரம்பித்தது.
நேராக அவள் கண்ணாடியை பார்க்க,
எப்போதும் இல்லாத அவளுடைய முகம், பிரகாசமாக இன்னும் அழகாக தெரிந்தது.
அந்த உடையோ, ஏதோ ஒரு விதமான சுதந்திரமோ கிடையாது.
நான் ஒரு பெண் என்பதை உணர்ந்த அந்த ஒரு தருணம்.
“அவன் கண்கள் அவள் விழிகளுக்குள் ஊடுருவ, தப்பிக்க வழி என்று தவித்தாள். வெட்கம் அவள் கன்னங்களில் செந்நிறத்தை சிந்தி இருக்க சொல்ல, துடித்த வார்த்தைகளை தடுக்கவோ, என் உணர்வுகளுக்கு எல்லை சுவர் எழுப்ப முடியாதவள் போல, இதழ்கள் அவன் இதழை பற்ற நினைத்த அந்த ஒரு நினைவில் என்னவோ… தன் பற்களால் இதழுக்கு சிறை வைத்தாள்.”
அந்த எண்ணங்களுக்கு அவளால் ஓவியம் தீட்ட, ஒரு சின்ன மெல்லிய கோடு மட்டுமே இருந்தது.
இனி என்ன நடக்குது, அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.
