அத்தியாயம் 3

அத்தியாயம் 3

குளித்து முடித்து ரத்த சிவப்பில் இருக்கும் அந்த ஜார்ஜெட் சேலையை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள் அகமித்ரா..

தலைக்கு குளித்திருந்த காரணத்தினால் துண்டை எடுத்து தலையை துவட்டி கொண்டிருந்தாள்..

ஈரம் சொட்ட சொட்ட அந்த சிகப்பு வண்ண சேலையில்,அப்போது தான் பூத்த புத்தம் புது ரோஜாவாய் நின்று கொண்டிருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.

உலகில் உள்ள பல அழகிகளை ரசித்து ருசித்தவன் அவன்..

ஆனால் அவன் கண்களுக்கு விருந்தாக இவள் மட்டுமே தெரிகிறாள் இப்பொழுது..

அப்படி ஒன்றும் பெரிய நிறமல்ல அவள்..

மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம் தான்.. கண் காது மூக்கு வாய் எல்லாம் அது அது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் அமைந்திருந்தது..

செதுக்கி வைத்த சிலை போல இல்லை என்றாலும் சுண்டி இழுக்கும் வளைவு நெளிவுகளோடு தான் இருந்தாள் அவள்..

அவனுக்கு முதுகு காட்டி தலையை துவட்டி கொண்டிருந்த அவளுடைய சேலை முந்தானை முன்பக்கம் விலக.. பின்பக்கம் அவளின் முதுகு இடுப்பு எல்லாம் பளிச்சென்று அவனுடைய கண்களுக்கு தென்பட்டது..

மனதிற்குள் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது அவனுக்கு..!!

பார்த்ததுமே கிளர்ச்சியூட்டும் வகையில் அவள் நின்றிருந்த தோரணையில் சொக்கி போனான் அவன்..

மெதுவாக அவளை நெருங்கி பின்னிருந்து அவளை அணைத்தான் இடையோடு..

எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட இந்த திடீர் அணைப்பில் விக்கித்து போய் நின்று விட்டாள் அவள்..

அங்கு, அவனைத் தவிர வேறு யாராலும் தன்னை நெருங்க முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள்..

அதனால்..

” என்னங்க… இப்பதான் குளிச்சிட்டு வந்தேன் கீழே வர சொல்லிருந்தாங்க அத்தை நேரத்திலேயே.. ஆனால் எழுந்திருக்க லேட் ஆயிடுச்சு இப்போ நான் கீழே போயாகணும்..”, என்றாள் திணறலாக.

” ஏன் கொஞ்ச நேரம் இங்கே இருந்தா குறைஞ்சா போயிடுவே”, காதோரம் கிசுகிசுத்தான் அவன்.

குறுகுறுக்கும் மீசையும் அழுத்தமான தடித்த அவனுடைய உதடுகளும் அவள் காதோரம் உரச.. அடிவயிற்றில் தீ பற்றி கொண்டு எரிந்தது அவளுக்கு🔥🔥

” சொன்னா கேளுங்க ப்ளீஸ் என்னை விடுங்க..”, அவனுடைய கை வளைவுக்குள் சிக்கிக் கொண்டு நெளிந்தாள்.

அவன் ஆசை பொங்கும் வேளையில் அவள் நெளிவதும் அவ்வப்போது சினுங்குவதும் அவனுக்கு எரிச்சலூட்டியது..

சட்டென்று அவளை திருப்பி மூர்க்கமாக அவளுடைய உதட்டை காயப்படுத்தினான் முத்தம் என்கிற பெயரில்..!!

அவன் செய்த சில்மிஷத்தால் அவளுடைய உதடுகள் ரத்தத்தை கண்ணீராக சிந்தியது.

” அம்மாடி மித்ரா.. டேய் தீரா.. கீழே வாங்க.. நேரமாச்சு சாப்பிட வாங்க..”, கீழிருந்து தன்னுடைய மாமியார் கூப்பிடும் குரல் காதில் ஒலிக்க..

தெய்வமே வந்து காப்பாற்றியது போல் உணர்ந்தாள் அந்நேரத்தில்..

சட்டென்று அவனிடமிருந்து விலகி நின்று “அத்தை கூப்பிடுறாங்க”, என்று கூறிவிட்டு ஒரு நொடி கூட அங்கே நின்று தாமதிக்காமல் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்று விட்டாள்..!!

” ஸ்டுப்பிட்..இடியட்.. ஃபூல் ச்சே..மூடை ஸ்பாயில் பண்ணிட்டா..”, அவள் மீதுள்ள கோபத்தில் தரையை காலால் எட்டி உதைத்தான் தீரன்..

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடியவள் நேராக அடுப்படிக்கு சென்றாள்..

” வாம்மா மருமகளே.. அழகா இருக்க”, என்று கூறி அவளுடைய முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

“ என்னம்மா இந்த வீடு உனக்கு பிடிச்சிருக்கா?? ”

“ம்ம்”

“அப்புறம்.. அது.. வந்து.. நேத்து.. இதை எப்படி எனக்கு கேக்குறதுன்னு தெரியல.. ஆனா வேற வழி இல்ல.. நான் கேட்டு தானே ஆகணும் ரெண்டு பேரும் நேத்து….. சந்தோஷமா தானே இருந்தீங்க..??”

அவர் இந்த கேள்வியை கேட்கவும் நேற்று இரவு நடந்த கொடூரமெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது..

முத்தம் என்கிற பெயரில் அங்கங்கே அவன் கடித்து வைத்ததும், காதலில் உச்சத்தை தொடுகிறேன் என்ற பெயரில் கட்டிலில் அவளை போட்டு புரட்டி எடுத்து நகத்தால் அவள் உடல் எல்லாம் கீறியதும் , தன் அழுகையை கூட பொருட்படுத்தாமல் கதற கதற தன்னை அவன் சீரழித்ததும் நினைவுக்கு வந்து அவளை  இம்சித்தது..

சந்தோஷமாக இருந்தீர்களா என்று கேள்வி வேறு கேட்கிறார்களே இதற்கு என்ன பதில் சொல்வது??

உங்கள் மகன் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு என் உடலை மட்டும் இல்லாமல் என் மனதையும் சேர்த்து புண்படுத்தி விட்டான் என்று கூறுவதா??!!, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் அவள்.. ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் புன்னகை பூத்த முகத்துடன் பேச தொடங்கினாள்.

” சந்தோஷமா தான் அத்தை இருந்தோம்..”, என்றாள்.

நல்ல வேளை எப்படியோ இருவருக்கும் ஒத்து போனால் அதுவே போதும்.. என்று நினைத்துக் கொண்டு புன்னகையுடன் அவளை பார்க்கும் பொழுது தான் அவள் கழுத்தை கவனித்தார்.

ஆங்காங்கே ரத்த காயமும் கீறலும் தென்பட்டது..!!

“கடவுளே என்ன இது??!! கணவன் மனைவிக்குள் இதெல்லாம் நடப்பது சகஜம்தான்.. ஆனால் இவளுடைய உடலில் இருக்கும் காயங்களை பார்த்தால் காதலில் பிறந்த ஊடலால் நிகழ்ந்தது போல் இல்லையே.. ஏதோ கொடூரமாக ராட்சசத்தனமாக அவளை காயப்படுத்தியது போலல்லவா இருக்கிறது.. அப்படி என்றால் இருவருக்கும் எதுவும் ஒத்துப் போகவில்லையா?? சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்களா?? நான் சொன்னேன் என்கிற காரணத்திற்காக பெயருக்கு இவளை திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துகிறானோ அவன்?? என்னவென்று தெரியவில்லையே எதையும் வெளிப்படையாக கேட்டு வைக்கவும் முடியவில்லை.. நன்றாக தான் இருக்கிறோம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று இந்த பெண் புன்னகை புரிகிறாள்.. இதற்கு மேல் அவர்களுடைய அந்தரங்க விஷயத்தை எப்படி கேட்பது ??எப்படி தெரிந்து கொள்வது?? அப்படி கேட்பதும் நாகரீகம் இல்லையே.. ஆண்டவா, இந்தப் பிள்ளைகளை தயவு செய்து சந்தோஷமாக வை.. நல்லபடியாக வாழ வேண்டும் காலம் முழுக்க இவர்கள்”, என்று எண்ணி மனதிற்குள் மருகினார்..!!

“ சரிமா வா வந்து சாப்பிடு..”

“ இருங்க அத்தை அவரும் வந்துவிடட்டும்”

” ஓஹோ புருஷன் வந்தால் தான் சாப்பிடுவியா?? சரிதான்..”, என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே.. படிக்கட்டுகளில் தடதடவென்று இறங்கி வந்தான் தீரன்.

கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தான் அவன்..அதில் அவனுடைய கம்பீரம் அளவுக்கதிகமாக மிளிர்ந்தது..!!

“ இதோ உன்னுடைய புருஷனே வந்துட்டான் இப்பயாவது சாப்பிடுறியா??”

“ம்ம் ”

” வாப்பா தீரன் வந்து சாப்பிடு”, என்று கூறி அவனையும் அவளையும் அருகருகே அமர வைத்து அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினார் வசுந்தரா.

” இன்னைக்காவது கொஞ்சம் நிதானமா உட்கார்ந்து சாப்பிடு சரியா?? எப்ப பார்த்தாலும் அவசரமா சாப்பிட்டு அப்படியே ஆபீஸ் கிளம்பி போவ.. இனிமே அப்படி எல்லாம் இருக்கக்கூடாது தீரன் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இனிமேல் உன்னுடைய மனைவிக்காகவும் நீ நேரம் ஒதுக்கியாகணும்..  என்கூட தான் பேச உனக்கு நேரமில்ல.. ஆனா இனிமே உன் மனைவிக்காக நீ எல்லாத்தையும் செஞ்சுதான் ஆகணும் உன்னையே நம்பி உனக்காகவே இந்த வீட்டிற்கு வந்திருக்கும் பெண் அவள்.. அவளை ஏமாற்றக்கூடாது இல்லையா?? அதனால் சமத்தா சாப்பிட்டு அவளை வெளியே எங்கேயாவது கூட்டிட்டு போ முக்கியமா முதலில் கோயிலுக்கு கூட்டிட்டு போ”, என்று உத்தரவிட்டார் தன் மகனுக்கு.

இவனுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்று ஹாரர் படம் பார்ப்பது போல இருக்கிறது.. இதில் இவனுடன் வெளியே வேறு சொல்ல வேண்டுமா ??

முதலில் அதற்கு அவன் ஒத்துக் கொள்வானா ?? அவனுக்கு தான் என்னை பார்த்தாலே பிடிக்கவில்லையே.. தேவைப்படும் நேரம் தவிர அவன் என்னை சீண்டுவதுமில்லை தீண்டுவதும் இல்லை..

இந்த லட்சணத்தில் இவன் எங்கே என்னுடன் வரப் போகிறான் ??என்று அசட்டையாக நினைத்துக் கொண்டு அவனை ஓர கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இட்லியை எடுத்து வாயில் போட்டாள் அவள்.

” சரிமா ,அதுக்கு என்ன ?? கூட்டிட்டு போயிட்டு வரேன்”, என்று அவன் சொன்ன பதிலில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் பார்த்து வைத்தது வசுந்தரா மட்டுமல்ல மித்ராவும் தான்..!!

வாயில் போட்ட இட்லி ஒரு பிடி கூட தொண்டைக்குழியில் இறங்கவில்லை அதற்குள் அது இடையில் சிக்கிக் கொண்டது போல அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்த்தாள்..

பேசுவது இவன் தானா ??என்பது போல இருந்தது அவளுடைய பார்வை..

புருவத்தை உயர்த்தி , இதழ் வளைத்து அலட்சியமாக அவளைப் பார்த்து சிரித்தான் தீரன்..

சீக்கிரத்தில் தன் தாய் சொல்வதை அவன் தட்டாமல் செய்பவன் அல்ல..

எது சொன்னாலும் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசித்துப் பார்த்துவிட்டு கடைசியில் இல்லை என்கிற பதில் மட்டுமே அவன் உதட்டிலிருந்து வெளிவரும்..

ஆனால் இன்று அதிசயமாக சொன்னவுடனே சரிமா செஞ்சுட்டா போச்சு என்பது போல அவன் சொல்லவும் அவருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது..

மாற்றம் தேவை தான்.. அதுவும் இது நல்ல வகையில் உண்டான மாற்றம் அல்லவா அதனால் அவருக்கு சந்தோஷம் தான் உண்டானது..

கொஞ்சம் கொஞ்சமாக தன் மகன் திருந்தி  குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டால் போதும் என்று கடவுளை வேண்டிக் கொண்டார் அவர்.

சாப்பிட்டு முடித்து இருவரும் வசுந்தராவிடம் சொல்லிக்கொண்டு காரில் ஏறி சென்றார்கள்.

காரில் ஏறப் போகும் போது பின்பக்க சீட்டில் அமர போனவளை தடுத்து, முன்பக்க டோரை திறந்து விட்டு அவளை அதில் அமர செய்தான் வலுக்கட்டாயமாக..

அழுத்தமாக அவன் தன்னுடைய கரத்தை பிடித்திருக்கையில் அவளால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை அவன் சொன்னதை கேட்பதை தவிர அவளால் வேறு எதுவும் செய்யக்கூட முடியவில்லை..

சீட்டில் அமர்ந்து கொண்டவள் முதலில் தன் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டாள்.. அவன் பிடித்த இடம் சிவந்து கன்றி போய்விட்டது..

அவள் அருகில் வந்து தொப்பென்று சீட்டில் அமர்ந்தவன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே கிளம்பினான்..

ஜன்னலை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தவள் மறந்தும் கூட அவன் பக்கம் திரும்பவில்லை..

படபடவென்று நெஞ்சு அடித்து கொண்டது.. இரவில் நடந்து கொண்டது போலவே பகலிலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வானோ என்கிற பயம் அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே மனதில் தோன்றியது..

அதனால் அவனிடம் வாய் திறந்து அவள் பேசவும் இல்லை அவன் பக்கம் திரும்பவும் இல்லை..

ஆனால், அவனுடைய கவனம் மொத்தமும் இவள் மீது தான் இருந்தது..

அவ்வப்போது ஓர கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.

“ பார்த்து ஜன்னல் வழியா தலை தொங்கி வெளியே போயிட போகுது..”

கரகரப்பான அவனுடைய குரல் திடீரென்று ஒலிக்கவும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் அவள்.

“ இல்ல.. அது வந்து..”

” ஏன் இதுக்கு முன்னாடி வெளியே விடிக்கை பார்த்ததே இல்லையா?? இல்ல காரில் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லையா??”, ஏளனமாக அவளை ஒரு பார்வை பார்த்தபடி கேட்டான் அவன்.

அவனுடைய கிண்டலான பேச்சும் பார்வையும் அவளை காயப்படுத்தியது..

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அவளுடைய ஏழ்மையை பற்றி அவன் பேசுகிறான் என்று எண்ணியவள் முகம் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..

“ அதுவும் சரிதான்.. நீங்கதான் மிடில் கிளாஸ் ஆச்சே.. இதுக்கு முன்னாடி காரில் போயிருக்க வாய்ப்பில்லை தான்.. ஆனால் அதுக்காக இப்படி வெளியே வேடிக்கை பார்த்துட்டு ஆவென்று வாயை பிளந்துக்கிட்டு வராத.. பார்க்கிறவங்க ஏதோ பட்டிக்காட்டை இழுத்துட்டு போறேன்னு நினைப்பாங்க”

“ இதுக்கு முன்னாடி காரில் போகவில்லை என்றாலும் நாகரிகம் பற்றி எனக்கும் தெரியும்.. பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல..”

” அடேங்கப்பா உனக்கு கோவம் வேற வருதா?? சரிதான்.. ஆனா இன்னொரு விஷயம் சொல்றேன் நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. என்கிட்ட இந்த மாதிரி எதிர்த்து பேசுற வேலை எல்லாம் இத்தோட நிப்பாட்டிக்கோ.. இதுவே கடைசியா இருக்கட்டும்.. நான் ஒரு விஷயம் சொன்னா, அப்படியா?? ஆமாவான்னு கேட்டுட்டு போயிட்டே இருக்கணும்..  அதை விட்டுட்டு இப்படி எதிர்த்து பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத.. புரிஞ்சுதா?? அப்புறம் இன்னொரு விஷயம்.. அம்மா சொன்ன அடுத்த நிமிஷமே உன்னை வெளியே கூட்டிட்டு வந்ததால நான் உன்னை முழுசா மனைவியாக ஏற்றுக் கொண்டதா அர்த்தம் கிடையாது.. அவங்க கண்ணு முன்னாடி நாம மனமொத்த தம்பதிகளா வாழனும் அதாவது வாழ்ற மாதிரி நடிக்கணும்.. மற்றபடி எனக்கு உன் மேல் அக்கறை அன்பு பாசம் கத்திரிக்காய் எதுவும் கிடையாது.. என்னுடைய தேவையை தீர்த்துக் கொள்ள உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் அதுக்கான லைசென்ஸ் தான் உன் கழுத்துல தொங்கிக்கிட்டு இருக்குற தாலி.. இரவு நேரத்தை தவிர மற்ற நேரத்தில் உனக்கும் எனக்கும் எந்தவித உறவும் கிடையாது ஒட்டுதலும் கிடையாது.. நல்ல ஞாபகத்தில் வச்சுக்கோ..”, மிரட்டும் தொனியில் அவன் கூறவும்..

துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு கண்கள் கலங்கியது மித்ராவுக்கு..!!

தொடரும் 🔥🔥❤️❤️..

 

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page