மறுநாள் காலையில் மனதில் பயத்துடனே கல்லூரிக்கு வந்த அபி உள்ளுக்குள் நுழையும் பொழுதே கரண் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் அந்த வகுப்பின் ஆசிரியர்கள் பாடம் நடத்த பயன்படுத்தும் மேடையில் நின்று பேசிக் கொண்டிருப்பதை கண்டு வாசலிலேயே அப்படியே பெண்ணவள் நின்றுவிட
அதைப் பார்த்துவிட்டு சிரித்தவன் வேகமாக அவள் அருகில் ஓடி சென்று கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு மேடையில் ஏறியவன் அவளை தன்னருகே நிற்க வைத்து தோல் மேலும் கைபோட்டுக் கொண்டவன்
“எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க! இவ தான் நான் காதலிக்கிற பொண்ணு. யாரும் இவ்வளவு கஷ்டப்படுத்தக் கூடாது எந்த பாய்ஸும் இவகிட்ட நெருங்க கூடாது!” என்றவன்
“இனிமே உங்க எல்லாருக்கும் அபி தங்கச்சி புரியுதா?” என்று மாணவர்கள் அமர்ந்திருந்த பக்கம் பார்த்து கேட்க அனைத்து இளைஞர்களும் தலையை ஆட்டினர்.
அதில் அவமானமாக உணர்ந்தவள் அவனது கையை உதரலாம் என்று பார்க்க அதுவும் முடியாமல் போக அவளை அழைத்துக் கொண்டு இறங்கியவன் அபி உடைய இடத்தில் அவளை அமர வைத்து விட்டு அவளுக்கு அருகே முட்டி போட இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஏன் அவனுடைய நண்பர்கள் கூட கரணுடைய இந்த செயலில் அதிர்ந்து விழித்தனர்.
அவள் முன்பு சற்றும் நான் என்ற கர்வம் இல்லாமல் முட்டி போட்டவன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஒற்றை ரோஜாவை எடுத்து அவள் முன்பு நீட்டி ” ஐ லவ் யூ பச்சைக்கிளி!” என்று கூறினான்.
அவள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க அவள் வாங்க மாட்டாள் என்று உணர்ந்து கைகளில் திணித்து விட்டவன் ” மத்தியானம் பார்க்கலாம் ஒழுங்கா படிக்கணும் யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணினார்களா சொல்லு நான் பாத்துக்கிறேன் !” என்று கூறிவிட்டு நண்பர்களுடன் தனது வகுப்பிற்கு விரைந்தான்..
இப்படியே நாட்கள் ஓட நாளுக்கு நாள் அவனுடைய காதல் டார்ச்சர் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒவ்வொரு நாள் இரவு படுக்கும் போது மறுநாள் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற பயத்திலேயே நாட்களை கடத்தினால் அபி.
வகுப்பறையிலும் கரண் உடைய உயரம் தெரிந்து அவன்மேல் ஆசை கொண்ட பெண்கள் மறைமுகமாக இவளை தப்பு தப்பாக பேசவும் ஆரம்பித்தனர்.
ஒரு நாள் ரோஜா கொடுப்பான், ஒருநாள் ஒரு கீ செயினில் ஒரு காதல் ஜோடி இருப்பது போல் ஒரு கிப்ட் கொடுத்தான் . ஒரு சில நேரம் அவளுடன் கைகளை கோர்த்துக்கொண்டு அந்த காலேஜில் உலா வருவான், ஒரு நாள் அவளை தனது வகுப்பறைக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
அவள் ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்டவள் வீட்டிற்குள் வாயடிப்பாள் ஆனா வெளியில் யாரிடமும் அவ்வளவாக பேசாதவள்! நெருங்கியவர்களிடம் n மட்டுமே அவளது வாயாடித்தனம் வெளிப்படும்.
இவனுடைய அன்பு ஒருபுறம் அவன் தனக்காக எதையும் செய்ய துணிவது ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதையும் மீறி ஏற்றுக்கொள்ள உலகம் தெரியாத பெண் அவளுக்கு பயமாக இருந்தது . வீட்டில் சொன்னாலும் அவர்கள் மனம் கஷ்டப்படும் ஆசிரியர்களும் இதை பெரிதாக கண்டு கொள்ளப் போவதில்லை .
அவனுடைய பின்புலம் பற்றி இவளுக்கும் ஒரு நாள் வந்தனாவின் மூலம் தெரியவர இதனால் தனது குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானால்.
அன்று காலை எப்பொழுதும் போல் கல்லூரிக்கு வந்தவள் இடைவேளை நேரத்தில் அவள் தோழிகளுடன் கேண்டினுக்கு செல்ல வகுப்பறையின் வாசலுக்கு வர தேர்டு இயர் சீனியர் ஒரு பெண் அவள் முன்பு வந்த நின்றவள்
அவளை மேலிருந்து கீழாக பார்த்தால் . வழியில் நின்று கொண்டு இருந்தவர்களை நகர்ந்து செல்ல முனைய மீண்டும் அதேப் பெண் வழி மறித்து நின்றவள்
“உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு அந்த கரண் உன் பின்னாடியே சுத்துறான் நானும் காலேஜ்ல சேர்ந்த ஃபர்ஸ்ட் இயர் ல இருந்து அவனுக்கு லவ் சொல்லிட்டு இருக்கேன்? என்னை அவன் கண்டுக்கறதே இல்லை! ஆனா நீ வந்த முதல் நாளில் இருந்து அவனை உன் பின்னாடி சுத்த வச்சுட்ட middle கிளாஸ் மாதிரி தான் தெரியுது உன்ன பாக்க ஆனா இதெல்லாம் எங்க இருந்து கத்துகிட்டு வரீங்கன்னு தான் எனக்கு தெரியல!” என்றவள் இன்னும் அவளை அசிங்கப்படுத்துவது போல் சில கொச்சையான வார்த்தைகளை பேச அதைக் கேட்ட அபி என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
வந்தனா, ” சீனியர் உங்களுக்கு கரண் சீனியரை பிடிக்கும்னா நேரா அவர்கிட்ட போய் பேச வேண்டியதுதானே? எதுக்காக தேவையில்லாம இவகிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க?” என்று அவளும் பேச
” ஏய் உன்கிட்ட எனக்கு பேச்சு கிடையாது அமைதியா வாய மூடிட்டு இரு இல்லனா நடக்கிறதே வேற!” என்றவள்
” இனிமே அபி பின்னாடி நீ வரக்கூடாது !” என்றால் அபியை பார்த்து.
” நான் வரல சீனியர் அவர் தான் என் பின்னாடி வந்துட்டு இருக்காரு!” என்றால் .
” ஓ அது உனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பிச்சைக்கார நாயி உனக்கு எல்லாம் என்னோட கரண் கேக்குதா?” என்றவள் அவளது கண்ணத்தில் அறைந்தாள். யாரும் இதை எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் இருக்க அதில் அப்படியே மயங்கி சரிய வந்தனாவும் சமிக்சாவும் அவளை பிடித்துக் கொண்டனர்.
அவள் மயங்கி விழுந்ததை எதிர்பார்க்காத சீனியர் மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட
உடனடியாக வந்தனா தனது தோழியை கன்னத்தை தட்டி எழுப்பப் பார்த்து தோற்றுப் போக சமிக்ஷா உள்ளிருந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீரை அவளது முகத்தில் தெளிக்க அப்பொழுதும் அபி கண் திறக்கவில்லை.
வகுப்பை சேர்ந்த ஒரு பெண் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவள் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் சென்ற விஷயத்தை கூற வந்து இவளை எழுப்ப முயன்று தோற்றுப் போனவர் தனக்கு மேல இருந்த ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டு அடுத்து துரித கதியில் ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாவம் அன்று என பார்த்து கரண் வகுப்பிற்கு கம்ப்யூட்டர் லேப் இருந்ததால் அவர்கள் வராமல் போய்விட அனைத்தும் நொடிப் பொழுதில் நடந்து முடிந்தது.
பவித்ரா மட்டும் எப்படி வந்தால் என்றால் இவளை இவன் இல்லாத நேரம் பார்த்து பேசி விட வேண்டும் என்று ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி தோழிகளுடன் வந்துவிட்டாள். ஆனால் அபி மயக்கம் போட்டது அவளே எதிர்பாராத ஒன்று.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து இவளை செக் செய்து மருத்துவர் மருத்துவம் செய்துவிட்டு வெளியே வந்தவர் வகுப்பாசிரியரிடம் ” சாதாரண மயக்கம் தான் . ஆனால் ரொம்ப வீக்கா இருக்காங்க! நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்து சொல்லுங்க கண்டிப்பா ஏதோ பிரஷர்ல இருக்கிற மாதிரி தான் இருக்கு என்னனு தெரிஞ்சுக்கோங்க சீக்கிரம் அவங்க அப்பா அம்மா வந்த உடனே என்ன வந்து பார்க்க சொல்லுங்க!” என்று விட்டு அவர் சென்று விட
உடனடியாக வந்தனாவை அழைத்து அவளது பேரண்ட் அழைக்க சொல்ல அவளும் அபியின் தந்தை எண்ணிற்கு அழைத்து விஷயத்தை கூறி மருத்துவமனை விவரத்தை சொல்லி வர வைத்தால்.
அவரும் உடனடியாக மனைவியையும் அழைத்துக் கொண்டு அடுத்த அரை மணி நேரம் கழித்து வந்திருக்க
அதே நேரம் பவித்ராவும் அழுது கொண்டே வேறு ஒரு இளைஞருடன் அந்த இடத்திற்கு வந்தால்.
வந்தனா அபியின் குடும்பத்தை அவள் ஏற்கனவே புகைப்படத்தை காட்டி இருந்ததால் அடையாளம் கண்டு கொண்டு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவள் வகுப்பாசிரியரிடம் அழைத்துச் சென்று விட்டு சற்று நகர்ந்து நின்று கொள்ள
அவர்களும் பேசிக்கொண்டே மருத்துவர் அறைக்கு சென்றனர் அதே விஷயத்தை மீண்டும் மருத்துவர் கூறிவிட்டு வகுப்பாசிரியரை வெளியே நிற்க சொன்னவர் ” ஏன் சார் வீட்ல ஏதாவது பிரச்சனையா ? அந்த பொண்ணு ரொம்ப சோர்வா இருக்காங்க! சரியா தூங்குறாங்களா இல்லையா? இப்படியே போனா ரொம்ப பிரச்சினையாயிடும் வீட்டில் பொண்ண கவனிச்சுக்காம என்ன சார் பண்றீங்க? என்று கேள்வி கேட்டவர்
” நல்ல சத்தான ஆகாரமா குடுங்க நல்ல ரெஸ்ட் எடுத்து நல்லா சாப்பிட்டு நல்லா இருந்தா தான்! ஆரோக்கியமா இருக்கலாம். இந்த வயசிலேயே இவ்வளவு ஸ்ட்ரெஸ் எதற்கு சார் அந்த பொண்ணுக்கு! நல்லா கவனிச்சுக்கோங்க!” என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்க
கதிர்வேலுக்கோ கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் தனது மகளுக்கு என்ன மன உளைச்சல் என்று அவருக்கு எதுவுமே புரியவில்லை.
கரண் ஒரு வழியாக லேபில் முடித்தவன் பல்லை கடித்துக் கொண்டே வேகமாக தனது காதலியை காண ஓடினான்.
அப்பொழுது வழியில் சென்றவர்கள் “பாவம் அந்த பொண்ணு ஆஸ்பத்திரி கூட்டி போய் இருக்காங்க என்ன பிரச்சனையோ என்னவோ?” என்று பேசுவதெல்லாம் அவன் காதில் விழுந்தாலும் தன்னவளை பார்த்தால் தான் மூச்சு விட முடியும் என்ற நிலையில் இருந்தவன் வேகமாக அவளது வகுப்பிற்கு செல்ல , அங்கே மாணவர்கள் அதே விஷயத்தை பேசிக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தவன் தன்னவலை தேடிப் பார்த்தவன் அவள் இல்லாமல் போக
அங்கே இருந்த மாணவர்களிடம் கேட்க அவர்களும் அவள் மயக்கம் அடைந்ததையும் தோழிகளுடன் மருத்துவமனை சென்று இருப்பதையும் பற்றி கூற “என்னாச்சு எதனால் என்று தெரியுமா? அவளுக்கு ரொம்ப உடம்பு முடியலையா?” என்று கேட்டான்.
அவர்களோ ஒருவரை ஒருவர் தயங்கிக் கொண்டே பார்க்க, ஒரு பெண் முன்னாள் வந்து ” சீனியர்!” என்று அழைத்தவள்
அவனை பார்த்து ” தனியாக பேசணும் வாங்க சீனியர் அபியைப்பத்தி தான் !” என்று கூறி முன்னாள் நடக்க
இவனும் அந்த பெண்ணின் பின்னால் சென்றவன் “என்னாச்சு!” என்று கேட்க , நடந்த அனைத்து விஷயத்தையும் கூற கோபத்தில் பல்லை கடித்தவன் அந்த பெண்ணிற்கு நன்றி கூறிவிட்டு தனது நண்பர்களிடம் சொல்லிவிட்டு “நீங்க இங்கேயே இருங்க!” என்றவன்
” அந்த பவித்ராவை எங்கேயும் போகாமல் பார்த்துக்கோங்க!” என சொல்லிவிட்டு வேகமாக மருத்துவமனைக்கு தனது வண்டியில் விரைந்தான்.
இவன் வரும் நேரம் அனைவரும் மருத்துவரை பார்க்க சென்று இருக்க வந்தனாவை கண்டு கொண்டவன் அவள் அருகே வந்து அபியை பற்றி கேட்க
அவள் பார்வையோ அவனை முறைத்து பார்க்க அதற்குள் சமிக்ஷா ” சீனியர் அந்த ரூம்ல இருக்கா சீனியர்!” என்று கூறிவிட்டால் அதில் தனது தோழியை முறைத்தவள் வேறு புறம் திரும்பிக் கொள்ள, உள்ளே மயக்க நிலையில் இருந்த தன்னவலை பார்த்தவன் மிகவும் கவலை கொண்டான்
கண்களில் வழியும் கண்ணீரை கண்டுகொள்ளாமல் மீண்டும் அவள் முன்பு மண்டியிட்டவன் “ஏன்டி எனக்குன்னு இந்த உலகத்துல நீ ஒருத்தி தான் இருக்கன்னு நான் சந்தோஷப்பட்டேன்! அது கூட இந்த கடவுளுக்கு பொறுக்கல போல! நான் உசுரா நினைச்ச எங்க அம்மாவை எடுத்துக்கிட்டாங்க மறுபடியும் இப்போ உன்னையும் அந்த கடவுள் என்கிட்டே இருந்து பிரிக்க பார்க்கிறானா ப்ளீஸ் அபி தயவுசெஞ்சு என்கிட்ட வந்துரு!” என்றான்.
