அபி மருத்துவமனையில் இருக்க அவளை காண வந்திருந்த கரன் அவள் நிலை கண்டு உடைந்து அழுதான்..
அப்பொழுதும் அவள் அசைவற்ற கிடைக்க அவளுடைய அதரங்களை கண்டவன் சற்றும் தாமதிக்காமல் தனது முதல் இதழ் முத்தத்தை பதித்தான் ..
அதில் அவள் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்ற பிடிவாதமும் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையும் அந்த நேரத்தில் தன்னால் அவள் அருகில் இருக்க முடியவில்லை என்ற கோபமும் அனைத்தும் மாறி மாறி இதழ் முத்தத்தில் காண்பித்தவன் மெதுவாக பிரிய அவளும் லேசாக கருவிழிகளை மூடிக்கொண்டே உருட்டிக் கொண்டிருக்க அதை கண்டவன் “அபி ப்ளீஸ் எழுந்திரு!” என்றான்.
மெதுவாக கண்களைத் திறந்தவள் அவனது முகத்தை அருகில் பார்த்து பயந்து கத்த வேகமாக வந்தனாவும் சமிக்சாவும் அறைக்குள் வந்தவர்கள் “சீனியர் நீங்க வெளியே போங்க அவ உங்கள பாத்து தான் பயப்படுற அவளோட இந்த நிலைமைக்கு எல்லாம் நீங்கதான் காரணம்!” என்று வந்தனா கத்தியவள் அவனை தள்ளிவிட
அதில் அவளை முறைத்து பார்த்தவன் கழுத்தைப் பிடித்து நெருக்கினான்.
” என்னோட அபி பக்கத்தில் நெருங்க கூடாதுன்னு சொல்றதுக்கு இந்த உலகத்துல யாருக்கும் உரிமை கிடையாது!” என்றவன் திரும்பி அபியை பார்த்தான்.
அவளோ ஏற்கனவே அவன் மீது பயத்தில் இருப்பவள் தற்பொழுது அவன் தனது தோழியை இவ்வாறு துன்புறுத்துவதை கோபம் கொண்டு தனது கையில் இருந்த ட்ரிப்ஸை உருவி போட்டவள்
” அவள் சொல்றது ஒன்னும் தப்பு இல்லை. என்னுடைய இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்! ஏன் இப்படி ஓயாமல் என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க ? பாக்குறவங்க எல்லாம் என்னை எவ்வளவு கேவலமா பாக்குறாங்க தெரியுமா? தயவு செஞ்சு என்னை விட்ருங்க இப்ப எல்லாம் காலேஜுக்கு வரதுக்கு எனக்கு அவ்வளவு பயமா இருக்கு வேண்டாம்னு சொன்னா நீங்க கேட்கவும் மாட்டேங்கறீங்க என்னமோ நரகத்தில் மாட்டுன மாதிரி ஒரு பீல் இருக்கு நான் நல்லா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு இனிமேட்டு என்னை பார்க்க வந்திடாதீங்க!” என்றவள்
“இப்ப என் கண்ணு முன்னாடி நிக்காம இந்த அறையை விட்டு வெளியில போங்க!” என்று கூறி கைகளில் ரத்தம் வழிவதை கூட பொருட்படுத்தாமல் தனது தோழியின் கழுத்தில் கை வைத்திருப்பவன் கையைத் தட்டி விட்டவள் அவனை கஷ்டப்பட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாற்றி அதில் சாய்ந்து அழுது அப்படியே கீழே சரிந்தால்.
அதை பார்த்து வந்தனா சமிக்ஷாவும் அவளை தாங்கிப் பிடித்து அழைத்துக் கொண்டு மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தவர்கள் வெளியே சென்று செவிலியரை அழைத்து வந்து மீண்டும் ட்ரிப்ஸ் ஏற்றப்பட கண்களை மூடி படித்திருந்தால்.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவன் காதுக்குள் விழுந்து கொண்டே இருக்க கசந்த புன்னகை சிந்தியவன் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அவளின் அப்பா அம்மாவை தாண்டி சென்றவன் மீண்டும் அவளது அறையை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்.
முகத்தில் இருக்கம் இருந்தாலும் கண்களில் மட்டும் தன்னவள் சொன்ன வார்த்தையின் காயம் தாங்காமல் கண்ணீர் உதிர்ந்து கொண்டே இருக்க மீண்டும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தவன் பைக்கை கூட பார்க் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டு வேகமாக தனது வகுப்பறைக்கு வந்து பவித்ரா என்று அந்த அறைய அதிரும் வண்ணம் கத்தினான்.
அப்பொழுது தனது தோழிகளுடன் அவள் சாப்பிட்டு கொண்டு இருந்ததை கண்டு வேகமாக அருகில் வந்தவன் அவள் முகத்தில் மாறி மாறி அறைந்து கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு கிரவுண்டுக்கு வந்தவன் அவளை கீழே தள்ளி தனது பேண்டில் இருந்த பெல்ட்டை உருவி சரமாரியாக அடித்து தீர்த்தான்.
யாருக்கும் அவனை தடுக்க தைரியம் இல்லை. இவன் செய்வதை எல்லாம் அறிந்து கொண்ட நண்பர்கள் வேகமாக ஓடி வந்து அவனை தடுத்து பிடித்தனர் தேவனும் ஸ்ரீ நந்தனும்.
தேவி அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் “ஏன்டா அவளை இப்படி அடிக்கிற எதா இருந்தாலும் பேச மாட்டியா வாய தொறந்து எப்ப பாரு கை நீட்டிட்டுதான் இருப்பியா?” என்றால் கோபமாக.
உடனே அங்கே இதை அனைத்தையும் பார்த்துவிட்டு பிரின்சிபால் வந்து விட, தேவி பவித்ராவை தூக்கி நிறுத்தியவள் அவளது உடலில் இருந்த மண்ணை எல்லாம் தட்டி விட்டால்.
“கரண் நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க வாங்க எல்லாரும் என்னோட அறைக்கு!” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட பவித்ராவை கொலை வெறியில் பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் அவளை அடிப்பதற்கு திமிறி கொண்டு இருக்க ” கரண் ப்ளீஸ் டா கண்ட்ரோல் யுவர் செல்ப்!” என்று அவனுடைய நண்பர்கள் அவனை அடக்கி பிரின்சிபல் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.
” கரண் வரவர உன்னோட நடவடிக்கை சரியே இல்லை . நானும் நீ என்ன பண்ணாலும் நீ ஒழுங்கா படிக்கிற. விவரம் புரிஞ்சு நீயே திருந்தி ஒழுங்கா இருப்ப . அதனால தான் அமைதியா இருக்கேன் உன்னை கண்டிக்காமல். ஆனா எதுக்கு காரணமே இல்லாம ஒரு பொண்ணுன்னு தெரிஞ்சும் பவித்ராவை இந்த மாதிரி நீ பண்ணி இருக்கிறது ரொம்ப பெரிய தப்பு! அதுவும் மினிஸ்டரோட பொண்ணு! எதுவா இருந்தாலும் நீ ஸ்டாப் கிட்ட சொல்லணும். அதை விட்டுட்டு நீயா எப்படி அந்த பொண்ணு இப்படி அடிக்கலாம் எதுக்காக இதெல்லாம் பண்ணினாய்!” என்று கேட்க
அவன் அமைதியாகவே இருந்தான். ” தேவி தான் அவரிடம் எக்ஸ்க்யூஸ் கேட்டு எதனால் அவன் இவ்வாறு நடந்து கொண்டான் என்பதை கூற திரும்பி பவித்ராவை பார்த்த முறைத்தவர்
” பவித்ரா தேவி சொல்றதெல்லாம் உண்மையா ?” என்றார் .
அவளும் எதுவும் கூறாமல் கீழே குனிந்து கொள்ள அதிலேயே அதுதான் உண்மை என்று புரிந்து கொண்டவர்
“நீ பண்ணினது ரொம்ப தப்பு எதுக்காக அந்த பொண்ணு அப்படி பண்ற என்றார்.
” சார் எனக்கு கரண ரொம்ப பிடிக்கும் ஆனா அவன் என் லவ் அக்செப்ட் பண்ணாம அவ பின்னாடி சுத்திட்டு இருக்கான் . அது எனக்கு பிடிக்கல அதனாலதான் நான் சும்மா ஒரு அரை தான் விட்டேன் அவ வேணும்னே மயங்கி விழுந்துட்டு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கா!” என்று கூற சற்றும் தாமதிக்காமல் மீண்டும் அவளது கன்னத்தில் அறைந்தவன்
” அவ எவ்வளவு வீக்கா இருக்கான்னு உனக்கு தெரியுமா நீ யாருடி அவளை லவ் பண்ணாதன்னு சொல்றதுக்கு இப்ப சொல்ற நல்லா கேட்டுக்கோ அவ தான் என் பொண்டாட்டி அதை நீ என்ன அவளே நினைச்சாலும் மாற்ற முடியாது. இந்த ஜென்மத்துல எனக்கு லவ்வர் பொண்டாட்டி எல்லாமே அவதான் இனிமேட்டு என் லைன்ல குறுக்க வந்த உன் உடம்புல இப்ப இருக்குற அந்த உயிரும் இல்லாம போயிடும்!” என்று மிரட்டினான்.
அதைக் கேட்ட பிரின்ஸ்பல் “சைலன்ஸ் ! என்ன கரண் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம என் முன்னாடி அவளை மிரட்டுற அவை யாருன்னு உனக்கு மறந்து போச்சா மினிஸ்டர் ஓட பொண்ணு ஏதாவது ஒன்னுனா உன்னால இந்த காலேஜ் பெரும் சேர்த்து கெடும்!” என்றார்.
“சார் நானும் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது . என்னோட பேக்ரவுண்ட் என்னன்னு உங்களுக்கே தெரியும் அதனால காலேஜ பத்தி நீங்க கவலைப்படாதீங்க எதா இருந்தாலும் நான் டைரக்ட்டா ஃபேஸ் பண்ணிக்கிறேன்!” என்றவன் திரும்பி பவித்ராவை பார்த்து
” போ போய் உங்க அப்பன் கிட்ட சொல்லு நான் ஒருத்தனா ஆசை ஆசையாக காதலிச்சேன் அவன் வேற ஒருத்தனா காதலிச்சா அவன் தான் எனக்கு இப்படிப் பட்டையா அடியை கொடுத்திருக்கான்!” என்று.
” எந்த கொம்பன் என் மேல கை வைக்கிறான்னு நான் பாத்துக்கிறேன் !” என்றவன்
பிரின்ஸ்பால் புறம் திரும்பியவன் ” “சாரி சார் நான் பண்ணினது தப்புதான். அதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்! ஆனா அபிக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவ பின்னாடி நான் சுற்றுவது என்னோட பர்சனல் விஷயம். இவதான் அதை இந்த அளவுக்கு எல்லாருக்கும் தெரியிற மாதிரி பண்ணிட்டா என்ன மன்னிச்சிடுங்க !” என்றான்.
” இந்த விஷயத்தால எக்காரணத்தை கொண்டும் அபியுடைய பெயர் கெட்டுப் போறத நான் விரும்பல!” என்றும் கூறியவன்
“அதையும் மீறி அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் எதுவும் என் கையில கிடையாது!” என்று மெதுவாக ஒரு மிரட்டலையும் விடுத்தான்.
அவனும் மிகப்பெரிய குடும்பத்தின் வாரிசு அதுவும் மூத்த வாரிசு என்பதால் அவரும் ” பவித்ரா நீ பண்ணினது ரொம்ப தப்பு தேவையே இல்லாம நீ தான் வாலன்டியரா அந்த பொண்ண அடிச்சு இப்ப அந்த பொண்ணு ஆஸ்பத்திரியில இருக்கா. இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா உங்க ரெண்டு பேரையும் ஒன் வீக் சஸ்பெண்ட் பண்றேன். இதுக்கு மேல பிரச்சனை பண்ணாமல் படிக்கிறதா இருந்தா இந்த காலேஜ்ல படிக்கலாம் இல்லனா நீங்களே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வேற காலேஜுக்கு போயிடுங்க பிரச்சனை பண்ற ஸ்டூடன்ட் இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது! இதுதான் உங்க ரெண்டு பேருக்கும் லாஸ்ட் வார்னிங்” என்று கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைக்க அனைவரும் நன்றி கூறிவிட்டு வெளியே வந்தனர்.
அவளை மீண்டும் முரைத்துப் பார்த்தவன் “இன்னொருவாட்டி என் அபி பின்னாடி போன மவளே சங்கறுத்துருவேன்!” என்று மீண்டும் பவியை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.
அவர்கள் நண்பர்கள் பின்னால் வர திரும்பி பார்த்தவன் ” நான் எங்கேயும் போல வீட்டுக்கு தான் போறேன் அதான் ஒன் வீக் சஸ்பென்ஷன் சொல்லிட்டாங்க இல்ல ? யாரும் என்னைய தேடி என் வீட்டுக்கும் வர வேண்டாம். என் போனுக்கு எதுவும் கூப்பிடாதீங்க!” என்றவன் நேராக பைக்கை எடுத்துக் கொண்டு பீச்சுக்கு சென்று பறந்து விரிந்த கடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
