நம் உணர்வு நம்மை சேர்த்தது

 

தினேஷ், அவன் செய்த ஒவ்வொரு செயலுக்காகவும் நிலாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிட்டான்.

 அவன் போனதும் அந்த இடம் சத்தமில்லாமல் நிசப்தமாக மாறினாலும், நிலாவின் மனசுக்குள்ள மட்டும் ஓர் எண்ண அலைகள் மாதிரி நினைவுகள் ஓடிக்கிட்டே இருந்தது.

இவ்வளவு நாளா…

அவள் குரல் நடுங்கியது.

என்னை எல்லாருமே பயங்கரமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க. வேலை வாங்குறதுக்காக… என்னை முட்டாளா பயன்படுத்திக்க… அப்படியே என் வாழ்க்கை முழுக்க ஓடிடுச்சு.

அவள் கண்களில் தேங்கி இருந்த வலி, இத்தனை நாளா அடக்கி வைத்த அவமானம், எல்லாமே ஒரே நேரத்தில் வெளியே வர முயற்சி பண்ணினது. அழுகையை கூட சத்தமா அழுகாதவள் என்று அழுகணும்னு தோன்றியது மற்ற நாட்கள் போல் இல்லை இந்த நொடி இந்த நிமிடம்…

எப்ப பார்த்தாலும் அவமானத்தைத் தவிர இந்த உலகம் எனக்கு வேற எதுவுமே கொடுக்கல. தன்னம்பிக்கையோட நான் எதையும் செய்ததே இல்ல. எப்பவும் பயந்துகிட்டே… என்னோட வாழ்க்கை ஒரு இருட்டு அறை மாதிரி மாறிப் போச்சு.

அவள் சொல்வதை கேட்டுக்கிட்டே இருந்த விக்ரமின் கண்களும் மெதுவாக கலங்க ஆரம்பிச்சது.

தினேஷ் போற வரைக்குமே அவர்களுக்குள்ள ஒரு மிகப்பெரிய அமைதி இருந்தது. பிறகு, அவள் தலையை மெதுவாக உயர்த்தி அவனை பார்த்தாள்.

“ஆனா…

இது எல்லாத்தையும் உடச்சு வெளியில கொண்டு வந்தது நீ மட்டும் தான்.”

அந்த ஒரு வரியிலேயே அவள் மனசுக்குள்ள இருந்த பாரம் கொஞ்சம் கொஞ்சமா லேசானது.“எல்லாரும் என்னை கேலி பொம்மையா பார்த்தப்போ, நீ மட்டும் என்ன அப்படி பார்க்கல. எனக்குள்ளயே மறைஞ்சு கிடந்த அந்த சின்ன தைரியத்தை வெளியில கொண்டு வந்தது நீ தான்…

அவ்வளவு சொன்னதும், இனிமேல் தாங்க முடியாம, அவள் வேகமாக விக்ரமை கட்டி அணைத்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி …

ஒரு விரல் கூட அவனை தொடலாமா வேண்டாமா என்று ரொம்ப நேரம் அவளுக்குள் யோசனை. பயம், தயக்கம், பழைய நினைவுகள் எல்லாமே அவளை கட்டிப் போட்டது.

ஆனா தினேஷ் கிட்ட இவ்வளவு தைரியமா பேசினதுக்குப் பிறகு, ஒரே நாள்ல இவ்வளவு மாற்றம் எனக்குள்ள எப்படி வந்தது? ன்னு நினைக்கும்போது, அந்த மாற்றத்துக்கு காரணம் விக்ரம் தான் என்பதைக் கண்டு அவளுக்குள் ஒரு இனிமையான உணர்வானது.

அந்த சந்தோஷமே அவளுக்குள் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.

அவன் மீது இருந்த நெருக்கம், பாதுகாப்பு, நம்பிக்கை எல்லாமே ஒரே நேரத்தில் பெருகி, அவளை அறியாமலே அவனை இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு, குழந்தை மாதிரி கதறி அழுதாள்.

அந்த அழுகையில அவள் பண்ண அனைத்து வலிக்கும் மருந்தாக   மட்டும் இல்லை…ஒருவித நிம்மதியாக  இருந்தது.

நான் தனியா இல்லன்னு நிலாவுக்கு தோணுச்சு.

விக்ரமும், கண்கள் முழுக்க நீர் நிரம்பியபடி,

நான் இருக்கேன்… எப்பவும் இருக்கேன் ன்னு சொல்லாமலேயே சொல்ற மாதிரி, அவளை இன்னும் இறுக்கமாக தன் நெஞ்சுக்குள் சேர்த்துக்கொண்டான்.

அந்த அணைப்பு அந்த உறவுக்கான பெயரை சொல்லல

ஆனா அவங்க இருவருக்கும் தெரிந்தது ஒன்று தான்

அந்த நொடியில், நிலா முதல் முறையா தன்னையே பாதுகாப்பா உணர்ந்திருந்தாள்.

ஆனா அந்த நிமிஷமே…

வெளியில கேட்டுக்கு பக்கத்துல, நிழல் மாதிரி ஒரு உருவம் நின்னுக்கிட்டு, அங்க நடக்குற எல்லாத்தையும் அசையாம பார்த்துக்கிட்டே இருந்தது.

நிலாவும் விக்ரமும் ஒருத்தருக்கொருத்தர் காற்று புகாதபடி உயிரை பிடிச்சுக்கிற மாதிரி கட்டி அணைத்து நின்னு இருந்ததை தூரத்தில் இருந்து ஒரு நிழல் பார்த்தது.அந்த நிழலின் உள்ளுக்குள்ள பயங்கரமான கோபம் பொங்க ஆரம்பிச்சது.

அந்த உருவம் வேற யாரும் இல்லை…

நிலாவுடைய அப்பா.

நம்ம கையாலையே மகளை வீட்டை விட்டு துரத்திட்டோமே…

என்ன நிலையில இருக்காளோ…சாப்பிட்டாளோ இல்லையோ…

பயந்துக்கிட்டே இருக்காளோ…

உலகம் தெரியாத அந்த பொண்ணு இப்போ என்ன செய்றாளோ…

இந்த பயம் தான் அவரை இத்தனை தூரம் வர வச்சது.

ஊர் உலகம் பேசின வார்த்தைகள் அவருக்கு முன்னாடியே வந்துச்சு.

உங்க மகளுக்கும் அந்த பையனுக்கும் ஏதோ ஒன்னு இருக்குன்னு சொன்னதை சொன்னதை அவர் கேட்டு கோபப்பட்டாலும் கூட… என்னதான் இருந்தாலும் தன்னுடைய மகள் மகள் இல்லையா?… அதனால அந்த பாசம்  விடாமல் அவளை தேடி வர செய்தது.

ஆனா இப்போ…

கண்ணு முன்னாடி அதையே பார்த்ததும்,

அவருக்குள்ள இருந்த சந்தேகம் எல்லாமே கோபமா மாறிப் போச்சு.

இவ்வளவு தூரம் வர தேவையில்லை…

உண்மை இதுதான்னு இப்போ கண்ணாலேயே பார்த்துட்டேன்ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே,

கோபத்தோட, விறுவிறுன்னு அங்கிருந்து நடக்க ஆரம்பிச்சார்.

ஆனா இதுக்கெல்லாம் காரணம் அவர்  மட்டும் தான்.

ஒருத்தருக்கு ஒருத்தர் சரியா தெரியாது , ஒழுங்கா பேசிக்கிட்டதும் இல்லை.

சின்ன உதவி பண்ண போன விஷயம்,

அந்த பிளாட்டுல இருக்குற எல்லாரும் வாய்க்கு வந்த மாதிரி பேச ஆரம்பிச்சதுனால, 

மக மேல கோபப்பட்டு,விசாரிக்க கூட இல்லாம,

நம்பிக்கை கொடுக்காம,ஒரே வார்த்தையில வீட்டை விட்டு துரத்திட்டார்.

ஆனா அந்த நேரத்துல…அவள் ஒரு தப்பும் பண்ணல.

 

போக வழி இல்லாம, உடைந்து நின்ன அந்தப் பொண்ணை,

ஒரு வார்த்தையும் கேள்வியும் இல்லாம,

அரவணைச்சது விக்ரம்.

ஆனா இப்போ,

தன் மகள் இப்படியொரு கேடுகெட்ட விஷயம் பண்ணுற மாதிரி தோன்றியதும்,

அந்த கோபம் எல்லாத்தையும் தாண்டி,

இனிமேல் இவ என் மகளே இல்லன்னு மனசுக்குள்ள தீர்மானம் பண்ணிக்கிட்டு,

ஒரு வார்த்தை கூட பேசாம அங்கிருந்து கிளம்பிட்டார்.

அவர் இப்படி இங்கு வந்து இவங்க ரெண்டு பேரையும் பார்த்தத எதுவுமே அவங்க ரெண்டு பேரும் பார்க்கவே இல்லை.

அந்த நேரத்துல நிலாவின் மனசுக்குள்ள இருந்த வலி,

அவளுக்கே புரியாத அளவுக்கு ஆழமா இருந்தது.

சொந்த வீட்டிலேயே,

அவளை ஒரு பாரமா பார்த்தாங்க.

வெறுக்க ஆரம்பிச்சாங்க.

சிறு வயதில் இருந்தே அந்த ஒரு வாழ்க்கை ஒரு நரகமா மாறிப் போச்சு.

ஆனா அதே வாழ்க்கையில…

இந்த இருட்டுக்குள்ள,

உனக்குன்னு நான் இருக்கேன்னு சொல்லாமலேயே சொல்ற மாதிரி,

ஒருத்தன் வந்ததை நினைச்சதும்,

அவள் மனசுக்குள்ள இருந்த அந்த பாரம் எல்லாமே,

சுக்கு நூறாக உடைந்து போயிடுச்சு.

இப்போ,அவள் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தாள்.

ஆனா…

அப்பா,அம்மா,தங்கச்சி…

யாரையும் நினைச்சு கூட யோசிக்க முடியாத அளவுக்கு,

மனசு ரொம்ப தூரம் போயிடுச்சு.அதை விட வெறுத்துப்போச்சு.

இவன் ஒருத்தன்…

என்கூட இருந்தா போதும்…

அந்த அளவுக்கு அவள் மனசு பேச ஆரம்பிச்சது.

இதற்குக் காரணம் காதல் மட்டும் இல்ல…

அவளை எல்லாரும் ஒரு பாரமா பார்த்தாங்க.

ஆனா அவன்…

அவளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தான் அசிங்கமானவள் என்று தெரிந்தும் கூட,

 விக்ரம் மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தி,

 தன்னோட கைகளால் அவள் கண்ணோரம் தேங்கி இருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

 அவளுடைய நெற்றியில் அவன் வைத்த அந்த முத்தம்,

 வார்த்தை இல்லாமலேயே அவனுடைய அக்கறையை சொல்லிச்சு.

அவள் அவனை பார்த்தபடி,

 உன் கண்ணு ஏன் கலங்குது?ன்னு கேட்டதும்,

 அவன் கண்களில் இருந்த ஈரம் இன்னும் ஆழமாயிற்று.

உன் கண்ணீரை என்னால பார்க்க முடியல…

 நீ எனக்கு அவ்வளவு முக்கியம்ன்னு சொன்னான்.

 உன்னை சந்தோஷப்படுத்த

 நான் எந்த எல்லைக்கும் போவேன்…

அந்த வார்த்தைகள் அவள் மனசை கலக்க,

 அவளுக்குள்ள ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுந்தது.

நம்ம பார்த்ததும் பழகியதும் ஒரு நாள் கூட முடியல.

 முன்ன பின்ன தூரத்துல பார்த்திருக்கோம், ஆனா நம்ம பேசுனது

முழுசா 24 மணி நேரமும் இல்ல.

அதுக்குள்ள எப்படி என் மேல உனக்கு இந்த அளவுக்கு அன்பு வந்தது?

என்னை பார்த்து நீ இரக்கப்படுறையா?

இந்த முத்தம், அணைப்பு இதெல்லாம் என் மேல படுற பாவமா?

 இல்ல?.. 

 வேற ஏதாவது உணர்வா?

எனக்குள்ள இருக்குற உணர்வைப் பற்றி

 நான் சொல்றேன்.

 கண்டதும் காதல் கிடையாது என்னோடது.என் வாழ்க்கையில

 நான் ஏங்கியது ஒரே ஒரு விஷயத்துக்காக தான்.

எனக்காக ஒருத்தன்…என்னை மட்டுமே உலகமா நினைக்குற ஒருத்தன்.

என்னோட அழுகை அவனுடைய அழுகையா இருக்கணும்.

 என்னோட சந்தோஷம் அவனுடைய சந்தோஷமா இருக்கணும்.

இந்த எல்லாத்தையும் நான் உன்கிட்ட பார்த்தேன்.

 ஆனா ஏன்?….ஒரே நாள்ல

 இந்த உறவு இந்த அளவுக்கு மாறியது

 எனக்கு புரியல…நான் உன்னை பார்க்கும்போது

 உனக்கு என்ன மாதிரியான ஃபீலிங்ஸ் வருது?

 அதை நான் தெரிஞ்சுக்கலாமா?..கேள்விக்கு மேல் கேள்வியாக

 அவள் அவனைப் பார்த்துக்கிட்டே கேட்டாள்.

  ஆனால் அவன் மெல்லிய சிரிப்புடன் அவளை பார்க்க அவளுடைய கேள்விகள் அவன் மௌனத்துக்குள்ள மெதுவா கரைய ஆரம்பிச்சது.

உனக்கு என்ன தோணுது?.. இதுக்கு பேர் இரக்கமா தோணுதா?

 இல்ல காதலா தோணுதா?..என் கண்ண பாரு…

 என் கண்ணுல என்ன தெரியுதோ,உனக்கு எது புரியுதோ…

 அதைத்தான் நான் பீல் பண்ணி பேசுறேன்.

 

அந்த நொடியில் விக்ரம் மெதுவா மூச்சு விட்டான்.

 அவள் கைகளுக்குள் இருந்த அவன் கைகளில்,

 ஒரு உறுதியான பிடிப்பு வந்தது.

நான் கடந்து வந்த பாதை ரொம்ப மோசமானதுன்னு அவன் சொன்னபோது,

 விக்ரம்  கண்ணுக்குள்ள ஒரு வலி தெரிஞ்சது.

எல்லாரும் எனக்கும் இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டாலும்,

 உண்மையில…

 யாரும் இல்லாத மாதிரி ஒரு தனிமை

 எப்பவும் என்கிட்ட இருந்துகிட்டே தான் இருக்கு.

அவன் சொல்லிக்கிட்டே இருக்க,

 அவளுடைய கண்கள் அவன் முகத்தை விட்டு விலகவில்லை.

அதனால தான் என்னவோ தெரியல…உன்னிடம் என்னை தஞ்சம் அடைய செய்தது. 

ஒரு சில கனெக்சன் தான்  சிலர் மேல ஈசியா வரும். அது ஏன் தெரியுமா ?.. 

ரெண்டு பேருமே ஏதோ ஒரு வகையில ஒரே மாதிரியான வாழ்க்கைல இருந்திருக்கிறோம் என்று அர்த்தம் நம்மளோட உணர்வுகள் எப்போதும் ஒன்றாக இருக்கன்னு அர்த்தம். 

 அந்த உணர்வுகள் நம்மோடு ஆழமாக கலந்து இருக்கிறது நம்மளை அறியாமலேயே.. 

 நான் சொல்றது இரக்கத்தோடு இல்லை முழு காதலோடு.. 

என்னோட கண்கள் பேசும் நான் என்ன நினைக்கிறேன் என்று..  அது உன்னோட பார்வைக்கு புரியலையா?.. 

 

 அப்படி புரிந்திருந்தா இந்த சந்தேகம் உனக்கு எழுந்திருக்குமா?.. 

 இப்படி சொல்லிக்கிட்டே அவளுடைய  முகத்தை நிமிர்த்து அவன் இந்த கேள்வியை எல்லாம் கேட்கும் போது,

 அவள் மனசு சொன்னது இல்லை என்று… அவள் நினைப்பதை அவளின் ஒற்றை கண்ணீர் துளி சொன்னது

 

  உன்னை முழுசா நம்புறேன் என்று.. 

 அவனுடைய இரு  உள்ளங்கைகளுக்குள் அவளுடைய முகத்தை புதைத்து அவள் நெற்றியில் ஆழமாக முத்தம் கொடுத்தான். 

 அந்த முத்தம் இருவருக்குமே மிகப்பெரிய மன பாரத்தை குறைக்க ஆரம்பித்தது. 

 

 ஏனோ தெரியல.. 

 நம்ம ரெண்டு பேரும்  வாசலில் நிற்கிறோம். 

 நம்மை நிறைய பேர் பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறார்கள்…. ஆனால் இந்த வெட்கம் எதுவும் இப்போது நம்ம ரெண்டு பேரும் மனசுலயும் இல்லையே?… என்ற கேள்வியை மறந்த இருவரும்.. 

அவர்களுக்குள் ஆழமாக ஊடுருவிக் கொண்டிருக்க..  அப்போ ஒரு கைதட்டல்  சத்தம் கேட்டது. 

 

  ஒரு 50 வயசு அம்மா கை தட்டிக்கிட்டு ரெண்டு பேரையும் பார்த்து,

 சபாஷ்…. நல்ல காட்சி தான் இப்படி சொல்லிக்கிட்டு ரெண்டு பேரையும் நெருங்கி வந்தாங்க. 

 ஆனா அவங்கள பார்த்ததுமே  நிலா அதிர்ச்சியாகி விக்ரமுக்கு பின்னாடி போய் ஒளிந்து நின்றாள்.  இனி என்ன நடந்தது என்பது அடுத்த எபிசோட்ல பார்க்கலாம் .

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page