அத்தியாயம் 4

தன் அண்ணனின் கரங்களுக்கு சென்றதும் மகள் அழுகையை நிறுத்தி விட்டாள். அவனை தேடி தான் இந்த ஒரு மணி நேரமாக அழுது கொண்டிருக்கிறாளா! என்று நினைத்த கார்த்திகாவின் கண்களில் இன்னும் நீர் மின்னிக் கொண்டு தான் இருந்தது. 

 

அண்ணன் பேசாமல் ஒதுங்கி இருப்பது மனதில் வலியை தந்தாலும் தன் மகளிடம் அவன் பாசமாக இருப்பது மனதின் வலிக்கு மருந்தாக இருந்தது. 

 

டேய் டீ எடுத்துட்டு வரட்டுமா டா? மகன் வந்ததை கிட்சனில் இருந்து வெளி வந்து இப்பொழுது தான் பார்த்தார் செல்வக்கனி. இந்த இரு புண்ணியவான்களை பெற்றவர் இவரே. 

 

இல்லை மா. இப்போ வேணாம் என்றான் கார்த்திக். 

 

தன் மருமகளின் முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்.  இவனின் முத்தத்தில் மழலை அழகாக சிரித்தது. 

 

செல்வக்கனி தன் மகளின் அறைக்குள் சென்றார். அவளோ அங்கு அழுது கொண்டிருக்க, அதை பார்த்த அந்த தாய்க்கு என்ன ஆறுதல் சொல்வதென்று கூட அவருக்கும் தெரியவில்லை. 

 

தாயை பார்த்த கார்த்திகா, ” அம்மா,  அண்ணே என்னைய இன்னும் எவளோ நாள் மா ஒதுக்கி வைப்பான் ” என்று லேசான விசும்பலோடு கேட்டாள். 

 

அவளின் உள்ளம் புரிந்த அந்த தாய் ” நீ செஞ்சது என்ன சின்ன விஷயமா டி? அவன் இடத்துல இருந்து பாரு. அவன் வலி புரியும் ” என்று கோபமாகவே கேட்டு விட்டு சென்றார். 

 

அப்பொழுதாவது மகள் அழுகையை நிறுத்த வேண்டும் என்று நினைத்தது அந்த தாயுள்ளம். 

 

கார்த்திகாவின் நெஞ்சம் சுருக்கென்று வலித்தது. ஆமா அண்ணன் இடத்துல இருந்து ஒரு நாளும் நான் யோசிக்கல. என்னைய பற்றி மட்டும் தான் நான் எப்பவும் யோசிச்சிருக்கேன்.  அண்ணன் என்மேல இன்னும் கொஞ்சம் பாசம் வச்சிருக்கிறதால தான் என்னைய வீட்டுல வச்சிருக்கான் என்று நினைத்து அழுகையை நிறுத்தினாள். 

 

கார்த்திகாவிடம் கோபப்பட்டு மீண்டும் கிட்சனுக்குள் புகுந்து கொண்ட செல்வக்கனி மகளை நினைத்து புது கண்ணீர் ஒன்று வடித்தார். 

 

மகள் அழுகையை நிறுத்த வேண்டும் என்று அவர் அப்படி பேசி இருந்தாலும் அது கூட அந்த தாய்க்கு வலியை கொடுத்தது. 

 

****

 

அகிலா தாயையும் தந்தையும் கோபத்தோடு பார்த்து கொண்டிருந்தாள். 

 

“நான் பண்ண மாட்டேன் ” என்று அடம் பிடித்து கொண்டிருந்தாள். 

 

கௌரி அகிலாவின் கைகளில் கிள்ளி வைத்தார். ” ஹா அம்மா நிஜமா வலிக்குது மா ” என்று முகம் சுருக்கினாள் அகிலா. 

 

எங்க பொண்ணு நல்லா இருக்கனும்ன்னு நினைச்சி தான் பெத்தவங்க நாங்க பார்த்து பார்த்து முடிவு பண்ணிட்டு இருக்குறோம். நீ ஏதோ அறிவாளி மாதிரி பேசுற என்று அதட்டினார் மகளை. 

 

ப்பா ஏன் ப்பா? உங்களுக்கு எப்படிப்பா இப்படி பண்ண மனசு வருது என்று தந்தையிடம் சண்டை போட்டாள் அகிலா. 

 

இல்லை டா ” எல்லாமே அக்கா நல்லதுக்கு தான் ” என்றார் கல்யாண்.

 

எது?  அக்கா ஒருத்தனுக்கு ரெண்டாம் தாரமா போறதா? என்று ஆத்திரத்தோடு தாய் தந்தையை கேள்வி கேட்டாள். 

 

என்ன டி? ரொம்ப தான் பேசுற? பேசாமல் நாங்க சொன்னதை செய். அந்த ஆப்ல பதிஞ்சு வை. எப்போ என்ன செய்யணும்னு பெரியவங்க எங்களுக்கு தெரியும் என்றார் கௌரி. 

 

பெரியவங்கனா தப்பு பண்ண மாட்டிங்களா? இப்போ நீங்க பண்றது தப்பு இல்லை” பெரிய பாவம்” என்றாள் அகிலா. 

 

அகிலா பேசுவது கௌரிக்கு கோபம் அவரின் மண்டையை சூடு செய்தது. ஆத்திரத்தோடு மகளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார். 

 

கௌரி எதுக்கு இப்போ புள்ளைய அடிச்ச? என்று பொங்கினார் கல்யாண் . 

 

அடிக்காமல் வேற என்ன பண்றது? ஒழுங்கா நான் சொன்னதை செய் என்றார் கௌரி. 

 

கன்னத்தை தடவியவள் யாருக்கும் அக்கா மேல அன்பு இல்லை என்று முனு முனுத்து விட்டு ” மேட்ரி மோனி ஆப்பை தன் மொபைலில் இன்ஸ்டால் செய்தாள் “. 

 

அதில்   அபிராமியின் போட்டோ போட்டு தாய் கூறிய காரணங்களையும்  சேர்த்து பதிந்து வைத்தாள். 

 

பாருங்க என்று தாய் தந்தையரிடமும் காண்பித்தாள் அகிலா. 

 

ம்ம் “குட் கேர்ள் ” இப்போ போய் தூங்கு என்று மகளை அனுப்பி வைத்தார் கௌரி. 

 

இப்படி ஒரு பாவத்தை பண்ணுன எனக்கு இனிமேல் எப்படி தூக்கம் வரும் என்று புலம்பி விட்டு சென்றாள் அகிலா. 

 

ஏன் கௌரி புள்ளையை அடிச்ச? அப்படினு கேட்குறீங்க? அவள் பேசுன பேச்சுக்கு உங்களுக்கே அவளை அரையணும்னு தோணிச்சு தான். நான் உங்க முகத்தை பார்த்துட்டு தான் அவளை அரைஞ்சேன் என்றார் கௌரி. 

 

கல்யாண் மனைவியை ஆச்சரியமாக பார்த்தார். 

 

அன்பு மட்டும் தான் நீங்க காட்டுவீங்க. ஆனால் அதட்டுறதும் நான் அடிக்கிறதும் நான் தான். இப்போ அவள் என்னைய ராட்சசியை விட மோசமா நினைச்சிட்டு போயிருப்பாள் என்று கணவரிடம் பாய்ந்தார் கௌரி. 

 

சரி விடு டி. “சீக்கிரம் நம்ப அபிக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும்னு வேண்டிக்கோ என்று” பேச்சை மாற்றினார் கல்யாண். இல்லையெனில் இவரின் கன்னமும் பழுக்கும் என்று அவருக்கு தெரிந்து விட்டது முன்பே. 

 

****

 

பாரிஜாதம் தன்னுடைய மொபைலில் மகனின் நல்வாழ்வுக்காக பதிவிறக்கம் செய்து வைத்திருந்த அந்த மேட்ரி மோனி ஆப்பை உயிர்ப்பித்து பார்த்து கொண்டிருந்தார். 

 

தினமும் ஒவ்வொரு பெண்களின் புகைப்படத்தையும் பார்த்து கொண்டு மனம் சலித்து வைத்து விடுவார் . 

 

இன்று இப்பொழுது பார்க்கும் பொழுது அபிராமியின் ப்ரோபைல் பார்த்ததும் அவரின் கண்கள் அவளின் முகத்தை அளவெடுத்தது. 

 

அபிராமியின் முகத்தை பார்த்ததும் பாரிஜாதத்தின் முகம் மின்னியது. ஹாலில் அமர்ந்திருந்தவர் வேகமாக அறைக்குள் சென்றார். 

 

“என்னங்க ” என்று கணவரின் அருகில் அமர்ந்தார் பாரிஜாதம். 

 

பேரன் அழுததும் பாரிஜாதம்,  அவனுக்கு பசியாற்ற மகனிடன் இருந்து பேரனை தூக்கி வந்தவர் பேரனுக்கு பசியாற்றி விட்டு கணவனின் கைகளில் கொடுத்து விட்டு தான் சென்று ஹாலில் அமர்ந்தார். 

 

பேரன் தூங்கும் அழகை கண் கொண்டு ரசித்து பார்த்தார் சங்கர். அஷ்வந்தின் தந்தையும் பாரிஜாதத்தின் கணவரும் இவரே. 

 

“பாருங்க இந்த பொண்ணை பாருங்க”  என்று வெகு நாட்கள் கழித்து மனைவியின் துள்ளலான குரலில் பாரிஜாதம் கைகளில் அடக்கி வைத்திருந்த மொபைலை வாங்கி பார்த்தார் சங்கர். 

 

அபிராமியின் முகமும் அவளின் விவரங்களும் அதில் தெரிந்தது. 

 

“அஸ்வந்த் கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்” என்றார் சங்கர். 

 

பொண்ணு எப்படி இருக்கானு மட்டும் சொல்லுங்க. மற்றதை அப்பறம் பார்க்கலாம் என்றார் பாரிஜாதம். 

 

ம்ம் நல்லாத்தான் இருக்குறாள் என்று சங்கர் கூற, ” நான் அழகை சொல்லலைங்க. அவளோட முகத்தை பாருங்க. சந்தமான முகமா இருக்குது. இந்த பொண்ணு நம்ப பையனுக்கு சரி வருவானு தோணுதுங்க ” என்றார் பாரிஜாதம். 

 

மொபைல் நம்பரும் இருக்குது. நான் போன் போட்டு பேசட்டுமா? என்று கேட்ட மனைவியை சின்னத்தோடு பார்த்தார் சங்கர். 

 

அறிவு இருக்கா டி உனக்கு? உன் பையன் ஒத்துக்க மாட்டான் சொல்லுறேன்ல என்று பேரனுக்காக பொறுமையாக பேசினார். 

 

“அவனை எப்படியாவது ஒத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்புங்க ” என்று பாரிஜாதம் வருத்தமாக கூறினார். 

 

மனைவியின் வருத்த முகத்தை பார்த்தவருக்கும் வருத்தமாக தான் இருந்தது. சரி நம்பர் சேவ் பண்ணி வை. காலையில பேசுவோம் என்றார் சங்கர்.

 

சரிங்க என்று பாரிஜாதம் சந்தோஷத்தில் கூற, மேலே அஷ்வந்த்தின் அறையில் கண்ணாடி பொருள் ஒன்று உடைந்து சிதறியது. 

 

பாரிஜாதம் கண்களை ஒரு முறை இறுக்க மூடி திறந்தவர், அவனை தாங்க என்று பேரனை தூக்கி கொண்டு மகனின் அறைக்கு விரைந்தார். 

 

கொலை வெறியோடு அமர்ந்திருந்தான் அஸ்வந்த். 

 

பாரிஜாதம் மெதுவாக அறை கதவை திறந்து உள்ளே சென்றார். 

என் பையன் பசி போனதும் கொண்டு வந்து தர தெரியாதா உங்களுக்கு? என்று கோபத்தோடு கேட்டான் அஸ்வந்த். 

 

திட்டுயா! அம்மாவை திட்டு! என் பையன் குரலை கேட்டு முழுசா மூணு மாசம் ஆகுது என்று அழுதார் பாரிஜாதம். 

 

தாயின் அழுகை குரலில் ஏதோ உணர்ந்தவன் நொடிதனில் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு, தன் குழந்தையை வாங்கி கொண்டு மறுபடி மௌனம் காத்தான்  . 

 

அஸ்வந்த் என் கண்ணா! என்று பாரிஜாதத்தின் குரல் அவனின் காதுகளில் விழ, ” வெளியே போங்க ” என்றான் இறுகிய முகத்தோடு. 

 

கனத்த இதயத்தோடு வெளியே சென்றார் பாரிஜாதம்.

 

*****

 

காலையில் அகிலா அலுவலகத்தை நோக்கி பயணப்பட்டாள்.  யாரிடமும் பேசவில்லை. 

 

தன்னை அடித்து விட்டார் என்று தாய் மீது கோபம். அம்மா அடிக்கும் போது அப்பா எனக்கு சப்போர்ட் பண்ணலைன்னு தந்தை மீதும் கோபம். 

 

காலையில் அபிராமி வந்து பேசும் போது  முகத்தை உர்ரென்று வைத்து கிளம்பி வந்து விட்டாள். 

 

அக்காவிடம் கூறாமல் அவளின் போட்டோவை அந்த ஆப்பில் போட்டது அகிலாவிற்கு மனம் ரணமாக இருந்தது. 

 

அபிராமி தங்கையின் உர்ரென்ற வதனத்தை பார்த்தாலும் சிறு பிள்ளை போல் திரும்பி தன்னிடம் தான் வருவாள் என்று பெரிதாக அவளிடம் எதுவும் பேசாமல் இருந்து விட்டாள். 

 

அனைவரும் வேலைக்கு கிளம்பி சென்று விட்டனர். 

 

கௌரி வீட்டில் தன்னந்தனியாக இருந்தார். மகள்களை பற்றி நினைத்து கொண்டிருந்தார். இப்பொழுது அவரின் எண்ணம் எல்லாம் சிறிய மகளை பற்றி தான். 

 

சிறிய மகளை விடாது பின் தொடர்ந்து கொண்டிருப்பவனை நினைத்து பயமாக இருந்தது. சாலையில் யாரும் இல்லாத நேரம் தன் மகளை ஏதாவது செய்து விடுவானோ? என்று மனது அடித்து கொண்டது. 

 

அவரின் வித்தியாசமான எண்ணங்களை கலைக்கும் படி அவரின் மொபைல் சிணுங்கியது. 

 

கௌரி மொபைலை அட்டென் செய்து காதில் வைத்தார்.  “ஹலோ ” என்றார். 

 

எதிர் பக்கத்தில் பாரிஜாதம் ” ஹலோ கல்யாண் கௌரி வீடா? ” என்று தயக்கம் கலந்த குரலில் கேட்டார் பாரிஜாதம். 

 

ஆமாங்க. நீங்க யாரு? 

 

என் பேரு பாரிஜாதம். உங்க பொண்ணு அபிராமியோட ப்ரோபைல் பார்த்தேன். எங்க பையனுக்கு நாங்க ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்குறோம். நேற்று தான் உங்க பொண்ணை மேட்ரி மோனி ஆப்ல பார்த்தேன் என்று பாரிஜாதம் கூற, 

 

நேற்று தான நாமலும் அதுல பதிஞ்சு வச்சோம். அதுக்குள்ள எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது! இவங்கள நம்பலாமா? என்று யோசித்தார் கௌரி. 

 

தொடரும். 

ஸ்டோரி புடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க friends. 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
874 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page