அத்தியாயம் 5
கௌரி எதிர் முனையில் பேசுபவரை நம்ப முடியாமல் விழித்து கொண்டிருந்தார்.
பாரிஜாதத்தின் குரல் அவரின் யோசனையை கலைத்தது.
நாங்க நேற்று தாங்க அதுல எங்க பொண்ணு விபரத்தை பதிஞ்சு வச்சோம் என்றார் கௌரி.
உங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க. நல்ல சாந்தமான முகமா இருக்குறாள் . கண்டிப்பா நல்ல குணம் தான் என்றார் பாரிஜாதம்.
தன் மகளை ஒருவர் நேரில் பார்க்காமலேயே அவளின் குணத்தை நல்ல விதமாக கூறியதும் கௌரியின் முகம் பெருமையில் சிவந்தது.
எப்போ பொண்ணு பார்க்க வரலாம்? என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் பாரிஜாதம்.
கண்களை அகல விரித்த கௌரி, வீட்டுல கேட்டுட்டு சொல்லட்டுமாங்க என்று கேட்டார்.
சரிங்க கேட்டுட்டு சொல்லுங்க. அடுத்த வாரத்துல ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க என்று பாரிஜாதம் கூறுவது, கௌரிக்கு திகிலாக இருந்தது.
அழைப்பு துண்டிக்கப்பட்டது. கௌரி லேசாக நெற்றியை சுருக்கினார்.
வீட்டுல கேட்டுட்டு சொல்லுங்கன்னு சொல்லிட்டு அடுத்த வாரம்னு அவங்களே முடிவும் பண்றாங்க. இது செட் ஆகுமா? என்று புலம்பினார்.
மறு முனையில் மொபைலை துண்டித்த நம் நாயகனின் தாயார் பாரிஜாதம், “என்னங்க ” என்று தன் கணவரை சத்தமாக அழைத்து கொண்டு ஓடினார்.
அந்தவரோ கோர்ட் சூட் அணிந்து கையில் கோல்ட் வாட்ச் அணிந்த வண்ணம் அழகான புன் முறுவல் கொண்டு, தன் மனைவியை பார்த்தார்.
“ஏங்க” இந்த சம்பந்தம் ஓகே ஆயிடும். அவங்க வீட்டுல கேட்டுட்டு சொல்லுறேன் சொல்லிருக்காங்க. நானும் அடுத்த வாரம் வரோம்னு சொல்லிருக்கிறேன் என்று கணவரிடம் கூறினார்.
ஏன் அடுத்த வாரம்? இந்த வாரமே கூட போய் பார்க்கலாமே! என்று சங்கர் கேட்க, அவனை நாம கொஞ்சம் சரி பண்ண வேண்டியது இருக்குங்க. அதுக்கு நீங்க தான் எனக்கு சப்போர்ட் பண்ணனும் என்றார் பாரிஜாதம்.
மனைவி பேசுவது புரியாமல் நெற்றி சுருக்கி யோசித்தார் சங்கர்.
“என்னங்க” நான் எது பண்ணாலும் என்னோட இருப்பிங்களா? என்று கணவரை திண்ணமாக பார்த்தார்.
சரி மா . ஆனால் கொஞ்சம் பார்த்து கவனமா இரு. நீ ஒன்னும் சின்ன புள்ளை இல்லை. எதாவது ஆக்ட்டிவ்வா பண்றேன்னு கீழே விழுந்து கால் கையை உடைச்சிக்காத என்று நக்கல் தோணியில் கூற, பாரிஜாதம் புருவம் சுருக்கி கணவரை மொறைத்தவர்” என்னோட பிளான் சக்ஸஸ் ஆகட்டும் அப்பறம் இருக்கு உங்களுக்கு ” என்று கோபமாக கூறினார் பாரிஜாதம்.
சரி பாரு எனக்கு சாப்பாடு எடுத்து வை. நான் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்புறேன் என்றார் சங்கர்.
*****
அபிராமி தூங்கியதும் அகிலாவின் அறைக்கு சென்றார் கௌரி.
“ஹேய் அகி” என்று மகளின் கன்னத்தில் தட்டினார்.
ஒரே ஒரு தட்டலில் கண் விழித்தாள் அகிலா. கண் முன் அமர்ந்திருக்கும் தாயை முட்டை விழிகளால் மொறைத்தாள் .
வா என்று அவளை அழைத்து சென்று ஹாலில் சோபாவில் அமர வைத்தார்.
இப்போ என்ன பாவம் பண்ணனும்? என்று கோபமாக கேட்டாள் அகிலா.
இவளிடம் பேசினால் நமக்கு தான் எரிச்சல் வரும் என்று நினைத்த கௌரி நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
உன்னோட போன்ல ” அஸ்வந்த் ” அப்படிங்கிற பேருல ஒரு ப்ரொபைல் காட்டுதா பாரு என்றார் கௌரி.
ஏன்?
பாரு டி. அந்த ஆப்ல போட்டு பாரு தெரியும் என்றார்.
ம்மா ஒரே பேர்ல ஆயிரம் பேர் இருப்பாங்க. “நீங்க சொல்லுற ஆள் யாருனு எனக்கு எப்படி தெரியும்” என்றாள் நம் அகிலா.
அவளின் எண்ணம் முழுதும் அக்கா எவனுக்கும் இரண்டாம் தாரமாக செல்ல கூடாது என்பது மட்டுமே!
அச்சோ எவளோ அறிவாளிங்க நம்ப அகிலா என்று கணவரை பார்த்து சிரித்த கௌரி, நீங்க பார்த்து சொல்லுங்க நாங்க கண்டு புடிச்சிக்குறோம் என்று அகிலாவிடம் கூறினார்.
கடுப்பா இருக்கு என்று பற்களை கடித்த அகிலா, தன் தலை எழுத்தை நொந்து கொண்டு நம் நாயகனின் பெயரை சேர்ச் செய்தாள்.
அந்த பெயரில் எண்ணற்ற நபர் குவிய, நிறைய பேர் இருக்குறாங்க என்றாள்.
அம்மா பேரு பாரிஜாதம். அப்பா பேரு சங்கர் என்று கௌரி பதில் கூற, அம்மா என்று பற்களை கடித்தாள் அகிலா.
என்ன டி?
ஏன் மா இப்படி பண்றிங்க. ப்ளீஸ் அக்காக்கு வேற மாப்பிள்ளை பாப்போம். எனக்கு புடிக்கல மா என்று கண்களில் நீர் கோர்க்க கூறினாள்.
மகளின் தலையை வருடி கொடுத்த கல்யாண், ” பாப்பா நம்ப அபிகிட்டே நாங்க இப்படி உனக்கு மாப்பிள்ளை பார்க்குறோம்னு சொன்னா கண்டிப்பா ஓகே சொல்லிடுவாள். ஏனா அவளுக்கு எல்லாத்தையும் புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்குது. நாங்க எது சொன்னாலும் செய்வாள். அப்பா பேச்சை மீறக் கூடாதுனு நினைப்பாள் ” என்று கல்யாண் கலங்கி கூற,
“போதும் நிறுத்துங்க “என்றவள் அஸ்வந்தின் ப்ரொபைல் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.
என்ன மா இது? ஏற்கனவே கல்யாணம் ஆகி அவங்க வொயிஃப் இறந்து அவருக்கு ஒரு குழந்தையும் இருக்குது என்று தாயை பார்த்தாள்.
அகிலாவின் அதிர்ச்சி கொஞ்சமும் குறையவில்லை. மாறாக தாயின் முகத்தில் அந்த அதிர்ச்சி இல்லை.
அப்போ உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா மா? என்று கண்களில் வழியும் நீரோடு கேட்டாள்.
என்ன பெண்ணிவள் அக்காவிற்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்ததும் அவளுக்கு மனம் வலிக்கிறதே!
அந்த பையனோட அம்மாகிட்டே இன்னைக்கு நானும் உங்க அப்பாவும் பேசிட்டோம். எங்க ரெண்டு பேருக்கும் ஓகே தான். அவங்க அடுத்த வாரம் அபியை பொண்ணு பார்க்க வராங்க என்று அகிலாவிடம் தகவல் கூறினார் கௌரி.
ஆனால் எனக்கு ஓகே இல்லை என்றாள் ஆகிளா.
உன்கிட்டே யாரும் கேட்கல. அபிகிட்டே பேசுனா அவளும் சம்மதம் தான் சொல்லுவாள். நாங்க அவள்க்கிட்டே காலையில பேசிக்கிறோம் என்றார் கௌரி.
என்னப்பா இது? தாயை விட்டு தந்தையிடம் கேட்டாள்.
ஆமா டா. பையன் நல்ல பையன் தான் போல. ஏதோ எதிர் பாராத விதமா அந்த பொண்ணு செத்து போச்சி. நம்ப அபிக்கும் அவருக்குமே ஒரே வயசு தான் மா. அம்மா போன் பண்ணி தகவல் சொன்னதும் தெரிஞ்சவங்ககிட்டே சொல்லி உடனே விசாரிச்சிட்டேன் என்றார் கல்யாண்.
நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன் மா என்று எழுந்து நின்று வில்லி போல் கூறினாள் அகிலா.
இங்க பாரு இந்த ஒரு மாசத்துக்குள்ள அவளுக்கு கல்யாணம் நடக்கணும். இந்த ஒரு மாசம் முடிஞ்சுட்டா அவளுக்கு இருபத்து எட்டு ஆயிடும் டி. நீ எதும் சொல்லி எங்க புள்ளை மனச கலச்சுடாத. நாங்க பாத்துக்குறோம் . அபிகிட்டே எப்படி பேசணும்னு எங்களுக்கு தெரியும் என்று முடித்து விட்டார் கௌரி.
அக்காவின் நல் வாழ்வுக்கு தன்னால் எதும் செய்ய முடியவில்லையே என்று கையை இறுக்கி கால்களை தரையில் எட்டி உதைத்து அறைக்குள் சென்று விட்டாள் அகிலா.
*****
காலையில் கௌரி வேகமாக சமையல் வேலையை முடித்து கிட்சனை சுத்தப்படுத்தினார். அவ்வப்பொழுது அபிராமியின் அறை வாயிலை பார்த்து கொண்டார்.
அபிராமியின் அறை கதவு சத்தம் இல்லாமல் திறந்தது. லைட் பிங்க் நிறத்தில் உடம்புக்கு உருத்தாத வகையில் புடவை அணிந்திருந்தாள்.
தேவதை போல் வந்து நின்றவளை விழி மூடாமல் பார்த்தார் கௌரி.
அருகில் இருந்த குளிர் சாதன பெட்டியை திறந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மல்லிகை பூ சரத்தை எடுத்து ” அபி” என்று அழைத்தார்.
அம்மா என்று வெண்ணிற பற்கள் தெரிய சிரித்தவள் தாயின் அருகில் வந்தாள்.
“பூ வச்சிக்க டா ” கௌரி மகளின் கேசத்தில் மல்லிகையை சூடி விட்டார்.
ஸ்கூல்க்கு சீக்கிரம் போகணுமா டா? என்று சாதாரணமாக கேட்டார்.
இல்லை மா டைம் இருக்குது. ஏன் மா?
உன்கிட்டே ஒரு விஷயம் பேசணும் என்று அபியின் கைகளை பிடித்தவர் ஹாலுக்கு வந்தார்.
கல்யாணம் அறையை விட்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்தார்.
அகிலா தாய் தந்தையை மொறைத்து பார்த்து, பேசுவதை கேட்பதற்காக ஹாலில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் முகத்தை பார்த்தவாரு தன் சிகையை அலங்கரித்தாள். .
அப்பாவும் நானும் உனக்காக மறுபடி என்று கௌரி தயங்கி கணவரை பார்க்க,
ஹாங் என்று அகிலா சத்தம் வைக்க,
கல்யாணும் கௌரியும் மகளை பார்க்க, திரு திருவென விழித்த அகிலா, ரொம்ப சிக்கா இருக்கு மா என்றாள்.
கல்யாண் சிறிய மகளின் குறும்பில் புன்னகைத்து வைத்தார்.
கௌரி கண்களால் சுட்டு பொசிக்கினார் மகளை.
நானும் உங்க அம்மாவும் சேர்ந்து உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கோம் என்றார் கல்யாணம்.
இவர் சொல்லக்கூடாதுனு தானே நம்ப தடுத்தோம். உடனே சொல்லிட்டாரு என்று நினைத்த அகிலா அக்காவை பார்த்தாள்.
மாப்பிள்ளைக்கு இது ரெண்டாவது கல்யாணம் என்று தயக்கமாக கூறினார் கௌரி.
அபிராமி நெற்றி சுருங்க தாயையும் தந்தையையும் மாறி மாறி பார்த்தாள்.
அது மட்டும் இல்லைக்கா அவருக்கு மூணு மாசக் குழந்தை ஒன்னு இருக்குது பட்டென்று கூறி விட்டாள் அகிலா.
அபிராமி ஒரு நொடி கண்களை மூடி திறந்தாள். ” எனக்கு சம்மதம் ம்மா சம்மதம் ப்ப்பா ” என்றாள்.
ஆனால், என்னைய பற்றி எதையும் மறைக்காமல் அவங்க வீட்டுல சொல்லிருங்க என்றாள்.
கண் கலங்கிய பெற்றோர் இருவரும் ” இந்த முறை எங்கள நம்பு. கல்யாணம் நல்ல படியா நடக்கும் ” என்பது போல் மகளை பார்த்தனர்.
அபிராமி புன்னகை சிந்தி ” பசிக்குது மா ” என்றாள்.
கௌரி மகளுக்காக வேகமாக சென்று உணவை எடுத்து வந்து மகளுக்கு அவரே ஊட்டினார்.
அக்கா ” அம்மா அப்பாக்காக நம்ப ஓகே சொல்லணும்னு இல்லை . உன் மனசுக்கு புடிச்சிருந்தா மட்டும் சரி சொல்லு ” என்றாள் அகிலா.
கௌரி துடுக்காக பேசும் சிறிய மகளை பார்த்தார்.
” எனக்கு ஓகே தான் அகி ” என்றாள் அபிராமி.
அக்கா நல்லா யோசிச்சுக்கோ. இது உன் வாழ்க்கை. பெத்தவங்களுக்காக முடிவு பண்ண கூடாது. வாழ போறது நீ தான் என்று தனக்கு அறிவுரை வழங்கும் தங்கையை பார்த்தவள்,
நல்லா யோசிச்சிட்டேன் அகி. எனக்கு ஓகே தான் என்றாள்.
தொடரும்.
