அத்தியாயம்-11

மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க அனைவரும் ஆரவாரத்துடன் பரதநாட்டியத்தை பார்த்தனர். 

என்னதான் கவனத்துடன் அபி ஆடினாலும் அவள் முகத்தில் ஒரு தேடல் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது. 

அதை யார் கண்டு கொண்டார்களோ இல்லையோ தேவன் தேவி மற்றும் ஸ்ரீ நந்தன் மூவரும் நன்றாக கண்டு கொண்டனர். 

அப்பொழுது “டேய் பார்த்தியாடா உன்ன காணோம்னு அந்த பொண்ணு தேடிக்கிட்டே இருக்கா?”  என்றான் தேவன் மெதுவான குரலில். 

அதைக் கேட்ட  கரண் சிரித்துக் கொண்டே “தெரியுது பார்ப்போம் மேடம் என்னதான் பண்றாங்கன்னு ஒழுங்கா ஆடினா சரி!”  என்றவன் அவளுக்கு  தன்னை காட்டாமல் தன்னவள் ஆடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான். 

நடனம் ஆடி முடித்துவிட்டு அவளோ ஸ்டேஜ் விட்டு இறங்கியவள் முகம் இன்னும் வாட்டத்தில் இருக்க கரண் அங்கிருந்து எழுந்தான். 

“டேய் எங்கடா போற? கை ஜாக்கிரதை நான் வேணா கூட வரட்டுமா?”  என்ற தேவனும்  எழுந்திருக்க பார்க்க, 

” இல்ல நீங்க டான்ஸ் பாருங்க எனக்கு ஒரு வேலை இருக்கு! நான் பார்த்துக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல!”  என்றவன் செல்வதற்கு முன்பு தடுத்த தேவி

” டே கை ஜாக்கிரதடா இவன்களை யாராவது ஒருத்தர கூட்டிட்டு போ!”  என்றால். 

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் தேவிமா நீ கவலைப்படாதே!” என்றவன் தன்னவலை  காண்பதற்கு ஆர்வமாக ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறினான். 

கிரீன் ரூம் (இந்த அரை ஸ்டேஜ்க்கு அருகில் இருக்கும் இங்கிருந்து தான் ஆடுவதற்கு ரெடியாகி ஸ்டேஜ் க்கு செல்வார்கள்). அருகே இருந்த வாசலில் நேர் எதிராக  அவன் நின்றான்.  முகத்தில் சோகத்துடன் மூக்கில் இருந்த மூக்குத்தியை கழட்டிக் கொண்டு அவள் வெளியே வர ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தவனை பார்த்தவள் கண்கள் அப்படியே நின்று விட அவளுக்கு பின்னால் வந்த பெண் அவளை இடித்து நின்றவள் “ஏன்டி இப்படியா போகாம வழியில நின்னு கனவு காண்றியா? நகர்ந்து நில்லு!”  என்று சொன்னதை கேட்டு தான் சுயம் உணர்ந்து மீண்டும் பார்க்க மரத்தடியில் அவன் இல்லை. 

“அடச்ச  அவரு உண்மையாவே வரலையா அப்ப நம்ம கண்ணுக்கு தான் அவர் நின்ன மாதிரி தெரிஞ்சுதா?”  என்று அவள் மீண்டும் நடந்து கொண்டே  பேசியவள் மீண்டும் ஒரு இடத்தில் பார்க்க காருக்கு அருகே நின்று இருந்தான்.

அதையும் பார்த்துவிட்டு அதிர்ந்தவள் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க அப்பொழுதும் அவன் உருவம் மறையாமல் இருப்பதை உணர்ந்து வேகமாக அருகே ஓடியவள் காலில் செருப்பு கூட அணியாமல் ஓடுவதை கண்ட பதறிய கரண்  “அபி எதுக்கு போ கால்ல ஸ்லிப்பர் கூட போடாம ஓடி வர?”  என்று அவளை பிடிக்க பார்க்க

அதற்குள் அவனை இடிப்பது போல் வந்து கைகளில் இடித்து விடப் போகிறோம் என்று சுதாரித்து நின்றவள் சற்று பின்பக்கமாக வளைய அதில் அவள் விழப் போகிறாள் என்று கையில் அடிபட்டு இருக்கிறது என்பதையெல்லாம் மறந்து அவளை பிடித்தவன் நேராக நிற்க வைத்தவன் கைகளில் வலி உணர்ந்து ஆ என்று அவன் லேசாக கத்துவதில் தான் தன்னைப் பிடிக்க வந்த அவன் கை வலி ஏற்பட்டு விட்டதே என்று பயந்தவள் 

” ஏன் சீனியர்  இப்ப என்ன புடிச்சீங்க நான் என்ன கீழே வா விழுந்தர போறேன் எதுக்காக உங்க கையை ஸ்ட்ரெயின் பண்ணிக்கிறீங்க?”  என்றால் கண்களில் வழியும் கண்ணீருடன். 

அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் எதுவும் பேசாமல் இருக்க “உங்களுக்கு வலிக்குதா? சீனியர் வலிக்குதா?”  என்று இரண்டு முறை கேட்ட பொழுதும் அவன் அப்படியே அவள் கண்களில் வழியும் கண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் அவனை கண்டவள் கைகளை ஆட்டி நினைவுக்கு கொண்டு வர அப்பொழுதுதான் சிந்தை தெளிந்தவன் ” என்ன கேட்ட?”  என்றான்.

” கை வலிக்குதா கேட்டேன்?”  என்று கூற அப்பொழுதுதான் வலியை உணர்ந்தவன் முகம் தானாகவே சுருங்கியது. 

“பாத்தீங்களா தேவையில்லாத வேலை பண்ணி இன்னும் நீங்க கைய ஜாஸ்தி தான் உடைச்சுக்க போறீங்க?”  என்றவள் அவனை மெதுவாக பிடித்து நடத்திக் கொண்டு வந்து அங்கே இருந்த படிகளில் அமர வைத்து அருகில் அமர்ந்தவள் கைகட்டி எதுவும் ஆகி இருக்கிறதா என்று சரி பார்த்தால். 

“நீங்க முதல்ல எதுக்கு காலேஜ் வந்தீங்க வீட்லயே அமைதியா இருக்க மாட்டீங்களா?”  என்றால் கோபமான முகத்துடன்.

 தனக்காக அழுது தற்பொழுது தனக்காக கோவப்படும் அவளின் அன்பில் மெய் மறந்தவன் “ரொம்ப பிடிச்சிருக்கு !” என்றான்.

 அதில் அவளோ அவனை  புரியாமல் பார்க்க நெற்றி மூக்கு அனைத்தும் சுருங்க தன்னை பார்ப்பவளை பார்த்தவன் 

“நீ எனக்காக அழறது  நான் என்ன கவனிக்காமல் இருக்கிறப்போ அதுக்கு நீ என் மேல கோவப்படுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! ” என்றான். 

அப்பொழுதுதான் தான் அவனிடம் அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வதை உணர்ந்தவள் கைகளை எடுத்துக் கொள்ள 

அதை புரிந்தவன் போல் “நீ என்கிட்ட உரிமை மட்டும் எடுத்துக்கல இத்தனை நாள் என்ன பார்த்து பயந்து பேசாமல் இருந்தவ ,  என் பக்கத்தில் நெருங்காமல் இருந்தவ, எனக்கு அடிபட்டதிலிருந்து என்னைய பாக்கணும்னு துடிக்கிற இப்போ இவ்வளவு தைரியமா என்கிட்ட வந்து பேசிட்டு இருக்க எனக்கு இந்த மாற்றம் ரொம்ப பிடிச்சிருக்கு!”  என்றான். 

அதைக் கேட்டவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க வழக்கம்போல் அவனது பழுப்பு நிற விழிகளில் தொலைந்தவள் மாணவர்கள் கைதட்டும் சத்தம் கேட்டு சுயம் பெற்றவள் அவனிடம் எழுந்து  கொள்ள பார்க்க மீண்டும் அவளது கைகளை பிடித்து இழுக்க அவன் மடியில் வந்து விழுந்தால்.

அதில் அதிர்ந்தவள் ‘ஐயோ ஏன் கரண்  இப்படி பண்றீங்க ப்ளீஸ் பாருங்க கை மறுபடியும் வலி ஜாஸ்தியாக தான் போது ! இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கனா கை நிரந்தரமா உடைஞ்சிடும் என்று பதட்டத்தில் அவன் மடியில் அமர்ந்திருப்பதை உணராமல் அவள் பேசிக் கொண்டிருக்க 

அவள் நெருக்கத்தில் பெண்மையின் வாசனையில் தொலைந்தவன் அவள் முடிக்குள் தனது முகத்தை புதைத்து அதை ஆழ்ந்து சுவாசித்தான். 

இது அனைத்தும் அந்த இடத்திற்கு அருகே கார்கள் மறைத்திருந்ததால் யார் கண்ணிலும் படாமல் இவர்களுடைய சம்பாஷனைகள் நடந்து கொண்டிருந்தது. 

அதில் சுயம் உணர்ந்தவள் அவன் மடியில் அமர்ந்திருப்பதை உணர்ந்து விலகி நின்றுக்கொள்ள 

“ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டு போயிடாத உனக்காக தான் கஷ்டப்பட்டு இன்னைக்கு வந்தேன் ப்ளீஸ் டி! அதுமட்டுமில்லாம என் கை உடைந்தால் தான் நீ இந்த மாதிரி என்கிட்ட நெருக்கமா இருப்பனா என்னோட கை நிரந்தரமா உடைந்து இருந்தாலும் எனக்கு கவலை இல்லை!” என்றான் அவளது கண்களை ஆழ்ந்து  பார்த்த வண்ணம். 

 ஏனோ அவனுடைய அந்த சொற்கள்  அவளுக்கு ஒருவித உணர்வை ஏற்படுத்த அதற்கு மேல் அங்கிருந்து செல்லாமல் அவனுக்கு சற்று இடைவேளை விட்டு அமர்ந்தால். 

குனிந்த அமர்ந்திருந்தவள் தனது கைகளையே பார்த்துக் கொண்டிருக்க அவளையே வைத்த கண் வாங்காமல் ரசித்து கொண்டு இருந்தவன்” ரொம்ப நல்ல ஆடின!”  என்றான். 

“தேங்க்ஸ்!”  என்று மட்டும் கூறியவள் அமைதியாக இருக்க

” எதுக்கு டான்ஸ் ஆடுறப்போ யாரையோ தேடி கொண்டே இருந்த போல?”  என்றான்.

” உன் முகத்தில் சிரிப்பே இல்ல டான்ஸ் ஆடுறப்போ சிரிச்சிட்டு ஆடணும் தானே சொல்லுவாங்க? என்னாச்சு யாரை தேடிட்டு இருந்த?”  என்று கேட்க 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் யாரையும் தேடலை !” என்று அவனது கண்களை பார்த்து பேசுவதை தவிர்த்தால். 

அதை பார்த்து மீண்டும் சிரித்தவன் “நீ இப்போ ஹேப்பியா?”  என்றான்.

” எதுக்கு இப்படி கேக்குறீங்க?”  என்றால் குழப்பத்துடன். 

“நீதானே நேத்து நான் வருவேனா வரமாட்டேனா என கேட்ட. அதை என் ஃப்ரெண்ட்ஸ் கால் ஆன் பண்ணி வெச்சிருந்தாங்க அத நான் கேட்டுட்டேன் உன் குரல்ல இருந்த தவிப்பு எனக்கு தெரிஞ்சது அதனாலதான் இன்னைக்கு கிளம்பி வந்தேன்!”  என்றான்.

” அதுக்கு தான் கேட்கிறேன் நீ இப்போ ஹேப்பியா?”   என்றான். 

அதைக் கேட்டு சிரித்தவள் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு அமர்ந்து கொள்ள 

சிறிது நேரத்தில் அவனுடைய நண்பர்களும் இவனைத் தேடிக் கொண்டு வெளியேற கரணை பார்க்க அவர்கள் கண்களில் படாததால் “எங்க போனா இவன்?”  என்று மூவரும் பேசிக்கொண்டே நடந்து வர காருக்கு பின்னால் இருந்தவர்களை கண்டு கொண்ட தேவன் தனது சகோதரியையும் நண்பனையும் அழைத்து காண்பிக்க இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கண்டவர்கள்

 சரி வா அவங்க  பேசிட்டு வரட்டும் நம்ம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்றால் தேவி.

ஆனால்  தேவனோ அதை எப்படி விட முடியும் கண்டிப்பா டிஸ்டர்ப் பண்ணி தான் தீருவேன்!”  என்று தேவி சுதாரிக்கு முன்னர் வேகமாக ஓடி தனது நண்பன் அருகில் அமர்ந்து கொண்டு “என்ன நண்பா ரொம்ப கடலை வறுக்கிற போல தோல் அதிகமா பறக்குது?”  என்றான் நக்கலாக. 

தேவன் திடீர் என்று வந்ததில் அவனை முறைத்து பார்த்தவன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்

 “ஏண்டா வந்த இப்பதாண்டா அவளே  என்கிட்ட ஒழுங்கா பேச ஆரம்பிச்சிருக்கா அது உனக்கு பொறுக்கலையா?”  என்றான். 

அது எப்படி மச்சான் நான் மட்டும் ஜோடி இல்லாம சுத்துவேன் நீ மட்டும் ஜோடியோட சுற்றுவியா என்று சொன்னவன்

” என்னம்மா நீ நெனச்ச மாதிரி இவன் வந்துட்டான் ரொம்ப ஹாப்பியா?”  என்றால் தேவனும். 

அவனிடமும் அதே சிரிப்பு மட்டும் உதிர்த்தவள் 

“ஓகே நான்  கிளம்புறேன். நீங்க பாருங்க என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட நான் போறேன்! சீனியர் கை ஜாக்கிரதை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம இருங்க என்றவள்  அந்த இடத்தில் இருந்து கிளம்பினால் அபி. 

அபி என்று செல்பவளை அழைத்து நிறுத்தியவன் அவள் என்னவென்று கேட்பது போல் பார்க்க “இனிமேலாவது என்கிட்ட ஒழுங்கா பேசுடி !” என்றான் உரிமையாக. 

டி என்று சொன்னதால் அவனை செல்லமாக முறைத்து பார்த்தவள் சரி என்பது போல் தலையாட்டி விட்டு ஓடி விட்டாள். 

அவளுக்கு ஒவ்வொரு முறை அவன் டி என்று உரிமையாக அழைப்பது மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வை ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தியது. 

எங்கே அது முகத்தில் தெரிந்து விடுமோ என்று அவளும் ஓடி விட்டாள்..

இன்னும் அடுத்தடுத்து இவர்கள் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்று அடுத்த அத்தியாயத்தில் இருந்து காணலாம்.…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page