அத்தியாயம் 19

கல்லூரி வளாகம்… என்ன ஒரு அதிசயம்.. இன்று தாரா சூர்யாவைத் தேடி அவனது வகுப்பறைக்கு வந்தாள். “எனக்கு உன்கூட கொஞ்சம் பேசணும், நம்ம லைஃப் பத்தி” என்று அவள் முன்னால் செல்ல, அவன் அவளைப் பின்தொடர்ந்தான். 

“என்ன தாரா.. என்ன பேசணும்?” குழப்பமாய் ஏறிட்டவனைப் பார்த்தவள், “எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்” என்றதும் றெக்கை இன்றி பறக்க ஆரம்பித்தான். 

“ஆனா உங்க மிதுன் அண்ணனுக்கு என்னை, எங்க குடும்பத்தை பிடிக்காது. அவர் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பார்” அவள் அழுத்தமாய் அவனைப் பார்த்தவாறு கேட்க, பறந்தவன் சட்டென கீழே விழுந்திருந்தான்.

“மித்து அண்ணனுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு உனக்குத் தெரியுமா? நான் என்ன கேட்டாலும் என்னோட அண்ணன் எனக்காகச் செய்வார்”

“ஒருவேளை அவர் ஒத்துக்கலைன்னா நீங்க என்னை கை விட்டுட கூடாது. நீங்க என்கூட வந்துடனும். அதுக்கு சம்மதமா?” அவள் மனதில் நினைத்ததை சொல்லிட, அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. 

“தேவையில்லாம பேசாத. எங்க வீட்ல எல்லார் கிட்டயும் சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ உங்க வீட்டைப் பத்தி மட்டும் யோசி” கோபத்தை அடக்கியவாறு சொன்னான். 

“அதெல்லாம் இல்ல. உங்க மித்து அண்ணன் சாதாரண சுமங்கலி பூஜைக்கே எங்களை உங்க வீட்டுக்குள்ள விடல. இதுல அவர் மருமகளா உங்க வீட்டுக்குள்ள என்னை எப்படி ஏத்துப்பார்?”

“திரும்பத் திரும்ப எங்க அண்ணனை இதுக்குள்ள இழுக்காத” அவனது பொறுமை பறக்க ஆரம்பித்தது.

“ஆமா யாரோ பண்ண தப்புக்காக எதுக்கு உங்க அண்ணன் எங்களை ஒதுக்கி வச்சிருக்கார். எத்தனை நாள் என்னோட அம்மா ‘என் கைக்குள்ளேயே வச்சு வளர்த்த பையன், அவனை ஒருநாளாச்சும் பார்க்கணும் அப்படின்னு’ உங்க அண்ணனை நினைச்சு அழுதுருப்பாங்க தெரியுமா? உங்க அண்ணன் மத்தவங்க பீலிங்ஸை புரிஞ்சுக்கத் தெரியாத அரோகன்ட்”

“வாயை மூடு டி..” அவளை அடிக்க கையை ஓங்கியவன், அப்படியே நிறுத்தியிருந்தான். இப்போ கூட என் அண்ணனோட வளர்ப்பு தப்பாகிடக் கூடாதுன்னு தான், நான் உன்னை அடிக்காமப் போறேன். உனக்கு என்னோட மித்து அண்ணனை பத்தி என்ன தெரியும்? சரியான செல்ஃபிஷ் டி நீ. உன்னைப் போய் லவ் பண்றேன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு. எங்க அண்ணனை வேணாம்னு சொல்ற யாரும் எனக்கு வேணாம்” என்றவன் கோபமாக அங்கிருந்து சென்றான்.

மிதுன் ஆபீஸில் இன்றும் நதியாவின் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வீடியோவில் அவனுடைய புகைப்படம் தெரிய அதை கிளிக் செய்து பார்த்தால் 

பூம் பூம் ரோபோ டா ..

ரோபோ டா.. ரோபோ டா ..

ஜும் ஜும் ரோபோ டா ..

ரோபோ டா .. ரோபோ டா ..

ஐசக் அசிமோவின் 

வேலையோ ரோபோ ..

ஐசக் நியூட்டனின்

லீலையோ ரோபோ .. 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

மூளையோ ரோபோ ..

ஹே ரோபோ யோ ரோபோ ஹே ..

இன்ப நண்பா கம் ஆன்

லெட்ஸ் கோ ..

மிதுனின் ஆளுயர போட்டோ ஃபிரேமை பார்த்து நதியா ஆடிக்கொண்டிருந்தாள். அவனுக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக சிரிப்புதான் வந்தது. ‘என்னையே ஒருத்தி கிண்டல் செய்கிறாள், அதையும் நானே ரசிக்கிறேன்’ தனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை எண்ணி அவனுக்கே வியப்பாகத்தான் இருந்தது.

‘என்ன எப்போ பார்த்தாலும் லேப்டாப்பை ஆன் பண்ணி, கன்னத்துல கையை வச்சு ரசிச்சு பார்க்குறார். காதுல புளூடூத் வேற மாட்டியிருக்கார். என்ன பார்க்குறார்னு தெரியலையே?’ கொஞ்சம் தள்ளி அவனுடைய சீட்டில் அமர்ந்திருந்த விஷ்ணு யோசனையோடு மிதுனைப் பார்த்திருக்க, 

மிதுன் மடிக்கணினித் திரையில் இருந்து விலகி அவனைப் பார்த்தான். 

அவனோ, இன்னும் ஏதோ யோசனையிலேயே இருக்க, “விச்சு..” என்ற கணீர் குரலில் திடுக்கிட்டவன் திரும்பிப் பார்த்திட, மிதுனின் கூர்மையான பார்வையைக் கண்டு கொஞ்சம் மிரண்டு போனான்.

“என்ன வேடிக்கை? சதீஷ் எண்டர்பிரைசஸுக்கு ஆர்டர் அனுப்பியாச்சா? ராஜம் டிரேடர்ஸுக்கு கொட்டேஷன் அனுப்பியாச்சா? இந்த மாசம் அக்கவுண்டஸ் குளோஸ் பண்ணியாச்சா? இன்னும் ஃபைல் என் டேபிளுக்கு வரல” மிதுன் பேசிக் கொண்டேயிருக்க, ‘சாமி சாமி பொறுமை.. பொறுமை..’ என்ற வடிவேலு காமெடி அவனுக்கு ஞாபகம் வந்ததால், இன்னும் ஏதோ நினைவில் இருந்தவனை,

 “விச்சு.. உன்னைத்தான்” என்றழைத்த மிதுனின் விழிகள் கோபத்தில் சிவந்து போயிருந்தன.

“சார்.. இ..தோ கொ..ண்டு வர்..றேன்” விஷ்ணுவின் வார்த்தைகள் தந்தியடிக்க, கோப்புகளுடன் மிதுனுக்கு அருகில் சென்றான்.

நதியாவிற்கு ஒரு போன் கால் வந்திருக்க, அவள் மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், ஒரு குட்டித் தூக்கத்தைப் போட்டிருந்ததால் போனை அட்டென்ட் செய்யவில்லை. 

மாலை எழுந்து ஃப்ரெஷ்அப் ஆன பின்னர், டீ குடித்து விட்டு மொபைலை எடுத்து அமர்ந்தவள், பேஸ்புக், இன்ஸ்டா வில் ரீல்ஸ் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, மிதுன் அதைக் காதில் கேட்டவாறு ஃபைல்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஏதோ வினோதமான சத்தம் கேட்க, நிமிர்ந்து மடிக்கணினி திரையைப் பார்த்தால் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. நதியா போனை பார்த்துக் கொண்டிருக்கையில் ஏதோ விளம்பரம் வர, அதை தெரியாமல் தொட்டுவிட, அது பார்ன் தளத்துக்குள் சென்றுவிட்டது. 

‘நாமளும் இவ்ளோ நாளா ஒண்ணா இருக்கோம். நமக்கு ஏன் இன்னும் குழந்தையே பிறக்கல. வேற ஏதாவது புதுசா பண்ணுவாங்களோ. என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்’ என நினைத்து, நதியா ஏதோ வீடியோவைப் போட்டு சுவாரசியமாகப் பார்த்திருக்க, இங்கே மிதுனின் லேப்டாப்பிலும் அதே வீடியோ ஓடிக் கொண்டிருந்தது. 

வீடியோவைப் பார்க்கப் பார்க்க, மிதுனை இரவு ஆடையின்றி பார்ப்பது, அவன் முத்தம் தந்தது, அவன் சரியாக அவளைத் தீண்டாமல் கூட கலவியில் இருந்த தருணங்கள் எல்லாம் அவளது நினைவில் வரச் சிரித்தாள். 

அவள் இன்னும் கொஞ்ச நேரம் அந்த வீடியோவைப் பார்த்திருக்க, அவளும் மிதுனும் அதே மாதிரி செய்வதைப் போல், அவள் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடத் தொடங்கிட, “அய்யோ வேணாண்டா சாமி” என்றவாறு மொபைலை கீழே போட்டாள். ஆனால் அதுவோ ஆஃப் ஆகாமல் ஓடிக் கொண்டிருந்தது.

இங்கே மிதுனும் ‘அவள் அப்படி இதில் என்னதான் பார்க்கிறாள்?’ என ஆர்வமாக அந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கல்லூரியில் படித்தபோது வீட்டிற்குத் தெரியாமல் நண்பர்களுடன் பிரவுசிங் சென்டரில் பார்த்தது. அதன் பிறகு அவனுக்கு இதற்கெல்லாம் நேரமில்லாமல் போனது. 

“சார்.. இந்த ஃபைல்” என்று விஷ்ணு மிதுனுக்கு அருகில் வந்தவன், லேப்டாப்பில் தெரிந்த அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே நிற்க, அவன் சட்டென லேப்டாப்பை மூடினான். 

‘ஹையோ.. தினமும் இதைத்தான் இன்ட்ரெஸ்ட்டா பார்த்துட்டு இருக்காரா? ஆளு சரியில்லையே ஒரு மார்க்கமா தான் ஆகிட்டாரு. நல்ல வேளை நான் பொம்பளையா பிறக்கல. இல்லனா என்னை என்ன பண்ணியிருப்பாரோ?’ விஷ்ணு தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க, அவனுடைய மனதில் இருப்பதை அறிந்தவன், “எனக்கு அவ்வளவு கேவலமான டேஸ்ட் இல்ல விச்சு” என்று சொல்லிட, 

‘மனசுல கூட நம்மள எதும் நினைக்க விடமாட்டார் போலயே’ விஷ்ணு அதையும் மனதில் தான் நினைத்தான். “நீ இப்படியே மனசுக்குள்ளேயே பேசி பைத்தியம் பிடிச்சு சுத்தப்போற” கிண்டலாகச் சிரித்தான் மிதுன். 

மிதுன் அன்று வழக்கத்தைவிட இரவு சீக்கிரமாக வீட்டிற்குக் கிளம்பினான். அந்த வீடியோ தனக்குள்ளே சில உணர்வுகளைக் கிளப்பியிருக்க, அதைப் பார்த்தவளுடைய ரியாக்ஷன் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆவலில்தான், அவன் வேகமாக வீட்டிற்குச் சென்றான். 

அவளோ எப்போதும் போலவே டிவியில் ஏதோ பழைய படம் ஒன்றைப் போட்டு அமைதியாக அமர்ந்து பார்த்திருந்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் நதியாவின் போன் ரிங் ஆனது. அட்டென்ட் செய்து, “ஹலோ..” என்றவள், அதன் பிறகு ஒன்றும் பேசாமல் கட் செய்தாள். மறுபடியும் அழைப்பு வர, போனை கட் செய்து சைலண்ட் மோடில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

மிதுன் வேகமாக தன்னுடைய போனை எடுத்தவன், கால் ரெக்கார்டரில் பதிவான அந்த போன்காலை எடுத்து காதில் புளூடூத் மாட்டிக் கேட்டான். இங்கு நதியா, “ஹலோ..” என்றதும், மறுமுனையில், “நதியா.. நான் ஜெய் பேசுறேன்” என்றது ஓர் ஆண் குரல். அதன் பிறகு வேறேதும் பேசாமல் அவள் தான் கட் செய்து விட்டாளே. ‘யாரிந்த ஜெய்?’ யோசனையோடு அமர்ந்திருந்தான்.

அவள் குளித்து வந்ததும் போனை எடுத்துப் பார்த்தால், மறுபடியும் அந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்திருக்க, அதை வெறித்திருந்தவள் சட்டென நிமிர்ந்து பார்க்க, மிதுன் அவளைப் பார்த்தவாறு இருந்தான்.

‘ஓஹோ.. டைம் ஆகிடுச்சு போல’ தனக்குள்ளே நினைத்தவள், எழுந்து உடைகளைக் களைய அவன் அப்போதும், அவளது இதழ்களை ரசித்தவண்ணம் இருந்தான். எப்போதும் அவனது கண்கள் கைப்பேசியிலோ, மடிக்கணினியிலோ இருக்கும். அவள் படுத்ததும் எழுந்து வந்து இயந்திரத்தனமாக தனது வேலையை ஆரம்பிப்பவன், முடியும் வரை எங்கேயோ பார்த்திருப்பான். 

இன்று மிதுன் அவளையே பார்த்திருக்க, அவளுக்கு அவன் முன்பு உடைகளைக் களைய சங்கடமாக இருந்தது. அவனும் மிட்டாயைப் பார்த்த குழந்தையைப் போல அவள் இதழைப் பார்த்திருந்தான்.

நதியா தனக்கு உரிமையானவளில்லை என்ற எண்ணம் தோன்ற, அவனால் அவளது மேனியில் வேறங்கும் பார்க்க முடியவில்லை. அவள் இதழ் மட்டும் அதில் விதிவிலக்காகிப் போனது. 

அவனுக்கு முதுகு காட்டியவாறு திரும்பி நின்றவள், உடையைக் களைய ஆரம்பிக்க, மிதுன் சட்டென பார்வையை வேறுபக்கம் திருப்பினான்.

‘அவள் இதழைப் பார்க்கக் கூடாது, முத்தம் தரவே கூடாது’ மனதிற்குள் உறுதி எடுத்துவாறு, அவனுடைய வேலையைத் தொடங்க, இன்று நதியா அவன் முகத்தைப் பார்த்தாள்.

அடல்ட்ஸ் ஒன்லி வீடியோவில் பார்த்தது நினைவில் வர, அவளுக்குள் ஒரு புன்சிரிப்பு. அவனும் அதையே நினைத்துச் சிரித்தவாறு அவளைப் பார்த்திட, அவளது சிரிப்பும், மென்மையான இதழ்களும் அவனை இம்சை செய்தன. 

நதியாவின் கற்பனையில் ஏதேதோ தோன்ற, தன்னைக் கட்டுப்படுத்த எண்ணியவள் கண்களை மூடி பெருமூச்சு விட்டு, தன்னுடைய இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டாள்.

ஈரப்பதமான அவளது இதழ்கள் அவனை ஈர்த்திட, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவள் இதழைக் கவ்வியிருந்தான். முத்தத்தோடு அவன் கலவியைத் தொடர, அவளோ தன்னையே மெய்மறந்தாள்.

அவனுடைய தோளைப் பற்றிக் கொண்டவளின் இதழை விட்டு, மோகமேறிய அவளது முகத்தைப் பார்த்தான். “இட்ஸ் அமேஸிங்..” வசீகரமாய் புன்னகைத்தவன், வேகத்தை அதிகமாக்க தன்னையும் மீறி “மிதுனா..” என்றிருந்தாள். 

அவள் மீண்டும் மீண்டும் “மிதுனா..” என்க, நேற்றை விட இன்று அவனுடைய இன்பமும், அவள் தந்த போதையும் அதிகமாகியிருந்தன. 

வேலையை முடித்தவன் விலகிப் படுத்திருந்தாலும், அவன் பார்வையெல்லாம் அவள் மீது தான். குழப்பத்தோடு இருந்தவளின் முகம் பார்த்தவன், “நதியா.. உனக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்குமா?” பதில் தெரிந்தும் கேட்டான். 

“ஆமா.. ஏன் கேட்குறீங்க?”

“சும்மாதான் கேட்டேன். அன்னைக்கு தீம் பார்க்ல நல்லா டான்ஸ் ஆடுன, அதான்”

“ஏன் இப்போலாம் கிஸ் பண்றீங்க?”

“உனக்குப் பிடிக்கலையா?”

“நீங்க பணம் தர்றீங்க. நீங்க எப்படி கேட்டாலும் நான் செஞ்சுத்தானே ஆகணும்” அவள் சொன்ன பதிலில், அவனுக்கு மனம் கனத்துப் போனது. 

தினமும் அவன் மனசாட்சியே அவனை கிழித்துக் கொண்டிருக்க, அவளது வார்த்தைகள் இன்னும் அதிகமாக வலித்தது. 

மறுநாள் இரவு.. மிதுன் அறைக்கு வந்த பிறகு.. 

“நதியா நீ குளிக்குறியா. இன்னைக்கு ஒண்ணா இருக்கலாமா?” அவளிடம் அனுமதியாய்க் கேட்டிட, அவள் திகைத்தவாறு எழுந்து குளிக்கச் சென்றாள். 

இருவரும் கலவியில் இருக்கும் போது, “நான் உன்னை யூஸ் பண்ணிக்கணும்னு நினைக்கல, எனக்கு குழந்தை வேணும்” அவளுடைய கண்களைப் பார்த்து அவன் சொல்லிட, ‘ஏன் திடீர்னு எல்லாமே கேட்டுப் பண்றார், இதெல்லாம் என்கிட்ட சொல்றார்? ஒருவேளை முத்தம் தரத்தான் இப்படி பேசுறாரோ?’ அவள் நினைத்துக் கொண்டிருக்கையிலே, அவளுடைய இதழை பற்றிக்கொண்டான்.

இதழ் முத்தத்தோடு அவளை எடுத்துக் கொள்வது அவனுக்குப் பிடித்திருந்தது. அதைத் தாண்டி செல்லாமல் தன்னைக் கட்டுப்படுத்த முடிந்தவனால், அவள் இதழ் தரும் மயக்கத்திலிருந்து மீள முடியவில்லை.

“நதியா இன்னொரு தடவை பண்ணலாமா?” இதுவரை கட்டளைகளை மட்டுமே இட்டுக்கொண்டிருந்தவன் குரலில் இன்று அத்தனை குழைவு. மிதுனின் இந்த திடீர் மாற்றத்தை எண்ணி குழம்பியிருந்தவள், “ஹ்ம்ம்” எனத் தலையசைக்க, அவன் தனது வேலையைத் தொடங்கினான். 

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page