அத்தியாயம் 16
யாருமில்லாத காரணத்தால் தானே தன்னை இப்படி எல்லாம் செய்கிறான் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்பதால் தானே தனக்கு இப்படி ஒரு நிலை?? என்கிற எண்ணம் தோன்றவும் கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது மித்ராவுக்கு..!!
உதட்டில் ரத்தம் வடிந்து கொண்டிருக்க கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருக்கும் தன் மனைவியை பார்த்தான் தீரன்..
இப்படி காயம் ஆகிவிட்டதே என்று ஒரு பக்கம் அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.. அவனுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் தோன்றினாலும் அவனுடைய ஈகோ அதை செய்யவிடாமல் தடுத்தது..
மெதுவாக அவளை நெருங்கி அவளின் உதட்டில் வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தை தன் விரல்களால் துடைத்து விட்டான்..
டக்கென்று அவனுடைய கைகளை தட்டி விட்டாள்..
“ இங்க பாரு நான் சொல்றதை கொஞ்சம் கேளு..”
” முடியாது…… நீங்க சொல்றத நான் ஏன் கேட்கணும்?? இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. அன்னைக்கு அத்தை உங்கள பத்தி சொன்னதால ஏதோ கொஞ்சம் உங்க மேல நல்லெண்ணம் வந்தது.. அதுக்காக தான் நான் அன்னைக்கு உங்ககிட்ட வந்து நன்றி சொல்ல வந்தேன் ஆனா நீங்க……….ச்சே, அதை பத்தி பேசக்கூட எனக்கு விருப்பமில்லை.. என்கிட்ட இருக்குற குறை என்னன்னு உங்ககிட்ட நான் நேரடியா சொல்லி தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்.. எல்லாம் தெரிஞ்சும் நீங்க எதுக்காக அன்னைக்கு அப்படி பேசினீங்கன்னு எனக்கு தெரியல.. வாரிசை எதிர்பார்த்து கல்யாணம் பண்ற ஆளாக இருந்தால் எதுக்காக என்னை கல்யாணம் பண்ணனும் ?? அப்படி எதிர்பாக்காத ஆளாக இருந்தால் எதுக்காக அன்னைக்கு என்னை குத்தி காட்டி பேசணும்?? பெத்த தாய் முன்னாடியும் ஊர் மக்கள் முன்னாடியும் நல்லவர் வேஷம் போட்டுட்டு திரியுறீங்களா?? ரொம்ப நல்லா இருக்கு சார் உங்க நாடகம்.. பணக்காரங்க புத்தியே இதுதானோ?? வெளியே ஒரு வேஷம் உள்ளே ஒரு வேஷம் அப்படித்தானே?? கொஞ்சம் நஞ்சம் உங்க மேல இருந்த நல்லெண்ணத்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கிற மாதிரி நீங்க அந்த ரெண்டு நாளும் என்கிட்ட நடந்துக்கிட்டிங்க .. இதோ இப்ப கூட நீங்க பண்ண வேலையை வெளியே சொல்ற மாதிரியா இருக்கு..??
அன்பு உரிமை அக்கறை எல்லாமே தானா வரணும்.. வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுத்துக்க கூடாது.. ஆனா நீங்க அதை தான் செய்ய பாக்குறீங்க.. உங்களுக்கு என்ன சார் வந்தது எதுக்காக என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தீங்க??.. உங்களோட தேவை என்னவோ அதை மட்டும் பாருங்க என்று பலமுறை சொல்லிட்டேன் இப்பவும் அதை தான் சொல்றேன்.. உங்ககிட்ட சண்டை போடவும், விவாதிக்கவும்.. எனக்கு நேரமும் , உடம்பில் தெம்பும் இல்லை..”, என்று கூறி விட்டு அங்கிருந்து நகர முற்பட்டாள்.
உடனே அவளின் கையை பிடித்து தடுத்து நிப்பாட்டினான் அவன் ..
“ ஒரு நிமிஷம் நில்லு.. நான் சொல்ல வருவதை காது கொடுத்து கேளு ”
” இதுக்கு மேலயும் உங்க பேச்சை நான் கேட்பேன் என்று எதிர்பார்க்க வேற செய்றீங்களா??”, அலட்சியமாக உதட்டை சுழித்து புருவம் உயர்த்தி கேட்டவளை ஓங்கி ஒரு அறை வைக்க வேண்டும் என்று தோன்றியது அவன் மனதிற்கு..
ஆனால் முடியவில்லை..
உறுதியாக நேருக்கு நேராக அவனைப் பார்த்த விழிகளை கண்டவுடன் அவனுக்கு லேசாக தடுமாற்றம் உண்டாகியது..
இதுவரைக்கும் யாரும் அவனை நேருக்கு நேராக பார்த்ததில்லை என்று கூறமுடியாது.. பார்த்திருக்கிறார்கள் தான்..
ஆனால் அந்த கண்ணில் மரியாதை இருந்திருக்கிறது, பயம் இருந்திருக்கிறது , ஆசை ,ஈர்ப்பு இப்படி பல விஷயங்கள் தென்பட்டிருக்கிறது..
ஆனால் முதல் முறையாக..
“நீ என்ன பெரிய கொம்பனா ??என்னடா பண்ணிடுவ அப்படி??”, என்பது போல திமிராகவும் ஆணவமாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் அவனை எதிர்கொண்டது அகமித்ராவின் விழிகள்..!!
தோல்வியே கண்டிராத ஒரு வெற்றி வீரன் முன்பு இருமாப்புடன் கம்பீரமாக எதிர்கொண்டு நிற்கும் ஒரு போர் வீராங்கனை போல தான் அவள் நின்று கொண்டிருந்தாள்..
கம்பீரமான அவளுடைய தோற்றம் மற்றும் ஆளை துளையிடும் அவளின் பார்வையும் அவனை எதிர்கொண்டு வீழ்த்தியது..!!
தடுமாற்றமும் லேசான நடக்கமும் அவனுக்குள் தோன்ற வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்பொழுதும் கம்பீரமாகவே இருப்பது போல பேர் செய்தான்..
ஒற்றைப் புருவத்தை திமிராக உயர்த்தி, தன்னுடைய கைகளை சிறை பிடித்திருந்தவனின் கரங்களை உற்று நோக்கினாள் அவள்..
அடுத்த நிமிடமே அவளுடைய கைகளை விடுவித்தான் அவன்..!!
நொடியும் தாமதிக்காமல் அவனை திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள் மித்ரா.
கூந்தல் லேசாக காற்றில் பறக்க ஒயிலாக தரையில் நடந்து செல்கிறாளா அல்லது காற்றில் மிதந்து செல்கிறாளா ?? என்று சந்தேகம் வரும் அளவிற்கு பூப்போன்ற பாதங்களை பூமி நோகாமல் பதித்து அவள் அங்கிருந்து நடந்து செல்லும் அழகை கண்டு ரசித்தான் ஆகர்ஷதீரன்..!!
தன்னிடம் முகம் சுருக்கி அருவருப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டு விலகி சென்ற மித்ராவை விட..
இப்பொழுது தன்னிடம் சண்டைக்கோழி போல சிலிர்த்து கொண்டு கம்பீரமாய் பேசி சென்ற அகமித்ராவைத் தான் அவன் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது..!!
விலகிச் செல்லும் இந்த சண்டை கோழியை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்தான் அவன்..❤️❤️
வேகமாக அறையை கடந்து வெளியேறியவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னமோ சொல்லிட்டு போனாளே என்னது ??அம்மா இவகிட்ட ஏதோ சொன்னாங்களாம் என்னை பத்தி அப்படி என்ன சொன்னாங்க?? அதனால இவ மனசுக்குள்ள என்னைப் பற்றிய நல்ல விஷயம் உண்டானது என்று சொன்னாளே.. அப்படி என்ன அம்மா நம்மள பத்தி சொல்லிருப்பாங்க??
நம்மள பத்தி இவ நல்ல விஷயமா யோசிச்சா என்ன, யோசிக்கலைன்னா என்ன?? அதேபோல இவளுக்கு என்னை பிடிச்சா என்ன , பிடிக்கலைன்னா என்ன??
இவ எப்பவுமே எனக்கு தான் சொந்தம்.. எனக்கு மட்டும்தான் சொந்தம்..!!
விலை கொடுத்து வாங்கிருக்கும் இந்த சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுத்தரவே மாட்டேன்.. அது எந்த கொம்பனா இருந்தாலும் சரி.. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்..
காரை எடுத்துக் கொண்டு போகும் வழியிலேயே கிட்டத்தட்ட ஒரு இரண்டு நிமிடத்திலேயே அவளை பிடித்து விட்டான்..
அவளின் அருகே சென்று காரை மெதுவாக நிப்பாட்டி ஹாரன் அடிக்க அவளோ திரும்பி கூட பார்க்கவில்லை..
அவளுக்கு தான் ஏற்கனவே தெரியுமே..
இப்படி ஹாரன் சத்தம் போட்டு தன்னை பின் தொடர்ந்து வரும் கார் தன்னுடைய கணவனுடையது தான் என்று..
அதனால் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை சொல்லப்போனால் அவன் வந்த பிறகுதான் அவளுடைய நடையின் வேகம் அதிகரித்தது..
அதற்கு ஈடாக அவனும் காரை வேகமாக ஓட்டி சென்று அருகில் நிப்பாட்டியவன் காரின் கதவை திறந்து வேகமாக அவளை காருக்குள் இழுத்து போட்டான்..
“ விடுங்க என்னை.. என்ன பண்ணிட்டிருக்கீங்க.. வரவர உங்களுடைய அராஜகம் ரொம்ப அதிகமாயிட்டு இருக்கு..”
” நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. இந்த தீரன் சொல்ற விஷயத்தைதான் எல்லாரும் கேட்கணும்.. மத்தவங்க சொல்றத இந்த தீரன் எப்பவும் கேட்க மாட்டான்..”, என்றான் அவன்.
“ச்சீ விடுங்க.. விடுங்க என்னை.. பொது இடம் என்று கூட பார்க்காமல் இப்படி நடந்துக்கிறீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தை இல்ல..?? படிச்சவர் தானே நீங்க??”
” டெஃபனட்லி டெஃபனட்லி.. ஐ ஆம் அ பட்டதாரி..”, தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்றாக சேர்த்து பதில் கூறினான் அவன்.
விட்டால் போதும் என்று கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கும் நோக்கில் அமர்ந்திருந்தவளை இழுத்துப் பிடித்து சீட் பெல்ட் போட்டு அமர வைத்தான்..
” ஒழுங்கு மரியாதையா நான் சொல்லும் போதே வாயை மூடிட்டு பேசாம வா இல்லன்னா நடக்கிறதே வேற.. என்னைப்பற்றி உனக்கு தெரியுமில்ல.. ?? அதுக்கான அடையாளம் தான் இப்போ உன்னோட உதட்டில் இருக்கு மறுபடியும் உனக்கு அந்த பரிசு வேணும்னா தாராளமாக இந்த காரை விட்டு இறங்கலாம்”, என்று கூறிக்கொண்டே அவளுடைய இதழ்களை வருடினான் தன் விரல்களால்..
உடனே அவனுடைய விரல்களை தட்டி விட்டவள் ஜன்னல் பக்கமாக திரும்பி அமைதியாக அமர்ந்து கொண்டாள்..
வீடு வரும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போடுவது போல அவனுடைய கார் வீட்டை நோக்கி செல்லாமல் வேறு வழியில் திசை மாறி திரும்பியது..!!
அடக்கடவுளே.. மறுபடியும் நம்மளை எங்க கூட்டிட்டு போக பார்க்கிறான் இவன்?? என்று யோசித்தாள் தீவிரமாக.
அவள் வெகு நேரம் பயந்து நடுங்கும் அளவிற்கு வெகுதூரம் பயணம் ஒன்றும் செய்யவில்லை குறுகிய நேரத்திலேயே கார் அந்த கட்டடத்தின் முன்பாக வந்து நின்றது..!!
முதல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சாவடிச்சான்.. இப்ப எந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கான்னு தெரியலையே என்று குழப்பமாக எண்ணிக்கொண்டே காரை விட்டு இறங்கினாள் மித்ரா.
அதிக நேரம் குழம்ப வேண்டிய அவசியம் இல்லாத வண்ணம் அந்த கட்டடத்தின் மேலே வளர்மதி கிளினிக் என்று போட்டிருந்த போர்டை கண்டாள்..
எதுக்காக இப்ப ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கான்?? ஒன்னும் புரியலையே.. இங்க யாராவது உடம்பு சரி இல்லாதவங்க இருக்காங்களா இவனுக்கு தெரிஞ்சவங்க?? இல்லை இவனுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா ?? இவனை பார்த்தா உடம்பு சரியில்லாதவன் மாதிரி தெரியலையே.. அப்புறம் எதுக்கு??
தறிக்கிட்டு ஓடும் அவளுடைய எண்ணங்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டது போல குறுக்கே வந்து நின்றான் தீரன்.
” இப்படியே வாசலயே வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டு இருக்கிறதா உத்தேசமா?? வா உள்ள போலாம்”, என்று அவளுடைய கையை பிடித்து இழுத்துச் சென்றான் அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல்.
தரதரவென்று அவளை இழுத்துச் சென்றவன் ரிசப்ஷனை கடந்து உள்ளே இருக்கும் டாக்டரின் அறையை நோக்கி சென்றான்.
எந்த அப்பாயின்மென்ட்டும் வாங்கவில்லை யாரிடமும் அனுமதியும் அவன் கேட்கவில்லை.
ஏதோ சொந்த ஆஸ்பத்திரி போல அவன் பாட்டுக்கு உள்ளே சென்று விட்டான்..
சரியான காட்டுமிராண்டியா இருப்பான் போலருக்கு.. என்கிட்ட தான் இப்படி அனுமதி இல்லாமல் பல விஷயங்களை செய்யுறான் என்று பார்த்தால் பொது இடத்தில் கூட இப்படித்தானா ??
கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம உள்ளே வரலாமா என்று அனுமதி கூட கேட்காமல் அவன் பாட்டுக்கு உள்ளே போறானே..என்று தன் கைபிடித்து முரட்டுத்தனமாக இழுத்து செல்லும் அந்த அரக்கனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அகமித்ரா..!!
– தொடரும்..
