தூரிகை 13❤️
அவள் வண்டியில் ஏறியவுடன் சீரான வேகத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது.
ஆனால், அவளை தன் சுயநலத்திற்காக அவளின் தந்தையை காரணம் காட்டி இங்கே வரவழைத்த சேகரோ? அவளின் இருப்பிடம் தெரிந்தவுடன்,,” அது எப்படி ஒரே நாள்ல இப்படி இருக்க முடியும்… இது எப்படி நடந்தது. அவ அந்த அளவுக்கு விவரமானவள் இல்லையே!” என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தவன்.
வண்டியை கொண்டு போய் அந்த இடத்தில் விட்டு விட்டு தன் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.
கதவு திறக்க நேரமாகவும் கோவப்பட்டு கதவு உடையும் அளவிற்கு தட்டவும் தான் அவன் அருமை மனைவி ஆடி அசைந்து மெதுவாக வந்து கதவை திறந்து, ” எங்க உங்க அருமை தங்கச்சி வந்துட்டாளா!” என்று கேட்டாள்.
” எவளும் வரல நீ வழி விடு, ” என்று அவளை தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற சேகர் அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்தான்.
அவன் அப்படி கோவமாக சென்றதை பார்த்தவள், “இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே!! எதுக்கு இப்படி கோவமா வந்திருக்கான்னும் புரியல ஒருவேளை அவ கிடைக்கலையா? இல்ல அவ ஊர விட்டு போயிட்டாளா!” என்று தெரியலையே…
இங்க கூட பொறந்த தங்கச்சிக்கே செய்யுறதுக்கு அவங்க அவங்க கஷ்டப்படுறாங்க இங்க ஒன்னு விட்டு தங்கச்சி வரலன்னு இவ்ளோ கோவமா அந்த அளவுக்கு அவ மேல பாசம் பாரு, ” என்று தன் மனதில் கருவிக்கொண்டே வந்து மெல்ல அவன் தோளை தொட்டு “என்னாச்சுன்னு சொன்னா தானே தெரியும்,” என்று கேட்டாள்.
அவனும் நடந்தவற்றை கூறி, ” அது எப்படி ஒரே நாளில் அவ்ளோ பெரிய பணக்காரனுக்கு இரண்டாவது பொண்டாட்டி ஆக முடியும், ” என்று அதி முக்கியமான கேள்வியைக் கேட்டான்.
ஏற்கனவே குழலியை பிடிக்காதவள், ” ஆமா உங்க தங்கச்சிக்கு அதெல்லாம் சொல்லி தரணுமாக்கும், ” என்று அவள் நொடித்துக் கொண்டாள்.
” இல்லடி அவ அப்படியெல்லாம் இல்லையே!! ஏதோ முன்ன பின்ன வந்திருந்து அந்த ஆளை பார்த்து இருந்தால் கூட பரவாயில்லை… அதுக்கு தான் வாய்ப்பே இல்லையே ஏன்னா எப்ப வந்தாலும் அவ எங்க சித்தி கூட தான் வருவா நான் தான் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வருவேன் கூட்டிட்டு போவேன் என் பிரண்டு சொல்றத பார்த்த அந்த ஆள் இருக்கிற ஏரியாவே ரொம்ப பெரிய இடமா இருக்கும் போல,, ஏன்னா நானும் அந்த ஆள பத்தி கேள்வி பட்டு இருக்கேன். அதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கு, ” என்றான்.
” ஏங்க அதெல்லாம் அப்படியே அப்படியே நடந்துருங்க எப்படியும் எங்கேயாவது பார்த்திருப்பாங்க.. இப்ப அவ தனியா வர்றது தெரிஞ்சிருந்தோ இல்ல உங்க தங்கச்சி அவங்களுக்கு சொல்லியோ கூட்டிட்டு போக சொல்லிட்டு இருப்பாள்.
ஆனால், அப்ப அவங்க சாக கிடக்கும்போது இவளுக்கு இதெல்லாம் தேவையா? எப்ப உங்க சித்தப்பா அவள தனியா அனுப்புவாங்கன்னு ஏங்கிட்டு இருந்து இருப்பா போல இவளை பத்தி தெரிஞ்சு தான் உங்க சித்தப்பா இவளை எங்கேயும் தனியா அனுப்பாம இருந்திருப்பாரோ என்னவோ??
எல்லாரும் என்னைய மாதிரியே!! உண்மையா இருப்பாங்களா!! எனக்கு இப்பதான் ஒரு சந்தேகமே வருது ஒருவேளை சின்ன வயசுல கூட இது போல ஏதாவது பண்ணி இருப்பா அதனால தான் அந்த ஆள் குடிபோதையில் செத்துப் போய் இருப்பானா என்னவோ என்று இல்லாததை, ” எல்லாம் எடுத்துக் கூறினாள். சேகரின் மனைவி…
தன் மனைவி கூறியதை அப்படியே எடுத்துக்கொண்டு, ” அப்படித்தான் இருந்திருக்கும் போல,, ஆனால், இதை சும்மா விடக் கூடாது. இரு இப்பவே எங்க சித்திக்கு போன் போட்டு என்னை ஏதுன்னு கேக்குறன். ” என்றான்.
” ஏங்க விட்டு தள்ளுங்க அவ எப்படி போனா நமக்கு என்ன வந்துச்சு, ” என்றாள். அவள்!!
” ஏய்.. அவ எப்படி போனா எனக்கு என்ன? இல்ல யார் கூட போனா எனக்கு என்ன? அட அவ செத்துப்போன கூட எனக்கு என்னடி வந்தது. ஆனால், எனக்கு தேவை பணம்,,” என்றான்.
“ஏங்க நம்ம கிட்ட இல்லாத பணமா?” என்றாள். அவன் மனைவி!!
ஆம் அவன் ஒரு மருத்துவர் வெளியில் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்கிறேன். என்று போலியாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள், அத்தனை வன்மத்தையும் வைத்து உள்ளான்.
தன்னிடம் வருவோருக்கு மருத்துவ ஆலோசனை மட்டும் இலவசமாக வழங்கிவிட்டு மருந்து மாத்திரைகளுக்கு என நான்கு மருந்தகத்தை வைத்துக் கொண்டு,,
அவன் எழுதி தரும் மருந்துகள் அதில் மட்டுமே கிடைக்கும் படியாக செய்து மக்களிடமிருந்து பணத்தை வேறு வழியாக வசூலித்துள்ளான்.
எங்கே தனது வீடு பெரிதாக கட்டினால் அதிகம் வசூலிப்பதாக கருதி விடுவார்களோ? என்று வேண்டுமென்றே ஒரே ஒரு மேல்மாடி மட்டும் வைத்துக்கொண்டு ஏழை போலவே நடித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் நடிப்பை நம்பி அங்கிருக்கும் அனைவரும் தங்களுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கேயே மருத்துவமனை பார்த்துக் கொள்கின்றனர்.
இதுபோக அரசு மருத்துவராகவும்,, ஒரு தனியார் மருத்துவமனையிலும் மருத்துவராக பணிபுரிகிறான். அதிலிருந்து வரும் வருமானம் எல்லாம் பத்தாது என்று இப்படி ஏழைகளை அடித்தும் பிடுங்கிக் கொண்டிருக்கிறான்.
அதுமட்டுமில்லாமல் யாருக்காவது இதய பிரச்சினை என்று வந்து விட்டால் ட்ரஸ்ட் மூலம் பணத்தை வாங்கி தருகிறேன். என்று இருக்கும் மருத்துவமனைகளில் அவனைப் போலவே இருக்கும் சில மருத்துவர்களிடம் பேசி அதிகமாக பணத்தை வசூலித்து பாதி பணத்தை இவன் வாங்கிக் கொண்டு,, அவர்கள் இருவரும் பணத்தை சம பங்காக பங்கு கொள்கின்றனர்.
இப்படித்தான் காஞ்சிபுரத்தில் குழலியின் தந்தையை சேர்த்துள்ள மருத்துவ மனையின் முகவரை அணுகிக் கேட்கவும்,, அவரோ இவனை அடிக்காத குறையாக வெளியே அனுப்பி வைத்து விட்டார். அதன் பின், குழலியின் குடும்பத்திடம் ஏதோ சொல்லி அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டு வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து அங்கும் அதேபோல் அணுக அந்த முகவரும் அதை தடுத்துவிட ஒரு மருத்துவர் மூலமும், ஒரு வாட்பாய் மூலம் இதை இவர்களுக்காக வரும் மருத்துவ செலவை அதிகரித்துக் கூறி,,
சென்னையில் உள்ள ஒரு டிரஸ்ட்க்கு அவரின் மருத்துவ குறிப்புகளை எல்லாம் அனுப்பி வைத்திருந்தான்.
அதை சரி பார்க்கத்தான் முதலில் குழலியை அனுப்பி வைத்தனர் பின்பு ஒரு காரோ இல்லை ஆம்புலன்ஸோ வைத்து காஞ்சிபுரத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இவனுடைய திட்டமாக இருந்தது.
அதாவது குழலின் குடும்பத்திற்கு,, தான் தான் உதவி செய்ததாக இருக்க வேண்டும். அதே சமயம் தனக்கு பணமும் வரவேண்டும் குழலியின் குடும்பத்திற்கு ஒன்று அவன் இலவசமாக எதையும் செய்து விடவில்லை குழலியின் தந்தைக்கு என காஞ்சிபுரத்தில் இரண்டு வீடுகள் உள்ளன..
அது இரண்டையும் எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பதுதான் அவனுடைய திட்டமாக இருந்தது.
ஆனால், அது குழலிக்கு திருமணமாகினால் தான் நடக்கும் என தெரிந்தவுடன் அவளுக்கு ஒரு குடிக்காரனை அதுவும் வயதானவாகப் பார்த்து, அவள் படிக்கும் போதே!! குழலின் தந்தையிடம் ஏதேதோ பேசி கட்டி வைத்து விட்டான்.
அப்பொழுது கையெழுத்து போடலாம் என பார்த்தால் அவள் 18 வயது எட்டாமல் இருந்ததால் அது செல்லாது என வந்துவிட்டது. இது மட்டும் இல்லாமல் பல திட்டங்களை நிறைவேற்றியும் உள்ளான். இப்போதும் வைத்திருந்தான். ஆனால், அது தான் அம்போ என்று ஆனதே!!
இவன் ஒன்றும் இல்லாதவன் கிடையாது தான் நீ சென்னையிலேயே அவனுக்கு கிட்டத்தட்ட 10 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. இருந்த போதிலும் காஞ்சிபுரத்தில் அந்த சிறிய வீடுகளை அவன் கண்ணை உறுத்துகின்றன.
இத்தனைக்கும் குழலியின் அப்பாவும் சேகரின் அப்பாவும் ஒன்றும் கூட பிறந்த அண்ணன் தம்பிகள் கிடையாது அவர்களின் தாத்தாக்கள் வழி பேரன்கள் அவ்வளவு தான்… குழலியின் தந்தைக்கு யாரும் இல்லாததாலும், அவர்களுடைய காலங்கள் எல்லாம் முடிந்து விட்டதால் இவன் தன் ஆதிக்கத்தை அவர்களிடம் செலுத்தி அந்த வீட்டை பறிக்க பார்க்கிறான்.
அந்தத் திட்டம் இப்போது தவிடு பொடி ஆனதால் தான் இவ்வளவு கோவமும் அவனுக்கு,, அவள் மனைவி சொன்னதை கேட்டவனுக்கு கோபம் வந்தாலும் அமைதியாகவே அமர்ந்து கொண்டிருக்க… அவள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் மீண்டும், ” ஏங்க உங்களை தான் கேட்கிறேன் நம்ம கிட்ட இல்லாத பணமா அதை விட்டு தள்ளுங்க… ” என்று சொன்னவுடன் அவன் எழுந்த சட்டென்று தன் மனைவியை அடித்து விட்டான்.
அவன் அடித்தவுடன் அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அந்த வீட்டையே இரண்டாகி விட்டாள். அதைப் பார்த்து பயந்தவன், “ஏண்டி இப்படி கத்துற,” என்று மெதுவாக கேட்டான்.
” பின்ன நீ என்ன அடிச்ச நான் சும்மா இருப்பேனா இதுக்கு மேல என் மேல கைய வச்சா அவ்வளவுதான் உன்னோட எல்லா கள்ளத்தனத்தையும் எல்லார்கிட்டயும் தெருவுல நின்னு கத்தி கத்தி சொல்லிடுவேன் பாத்துக்க…” என்று மிரட்டினாள்.
ஏனென்றால் சேகரின் அனைத்து திட்டங்களும் அவளுக்கு நிச்சயமாக தெரிந்து விடும் ஒன்று செய்வதற்கு முன் அல்லது செய்ததற்கு பின்,, அவன் தன் மனைவியிடம் மட்டுமே உண்மையாக இருந்தான்.
அதனாலேயே தன்னை மீறி எப்போவாவது இந்த மாதிரி அடித்து விட்டால் அவள் இப்படித்தான் கூப்பாடு போட்டு கத்தி விடுவாள். மத்தபடி அவள் கணவனுக்கு அடங்கியவளே!!
அதனால் வேறு வழி இல்லாமல் அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அந்த சோபாவிலேயே கண்களை மூடி அமர்ந்தான்.
அவன் நிலைமை,, யாரிடமும் சொல்லவும் முடியவில்லை யாரை யாரிடமும் தன் கோபத்தையும் காட்ட முடியவில்லை…
அவனுக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை, தான் ஏற்பாடு செய்திருந்த குழலின் மூலம் வரும் பணத்தையும் அடைய முடியாமல் போகவும் அவனுக்கே அவனை நினைத்து சற்று பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பரிதாபத்தை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
அப்போது கார்குழலின் அன்னை பதறி கொண்டு இவ்வளவு நேரம் ஆகியும் சேகரிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும்,, சேகருக்கு அழைக்க… அதை அவன் எடுக்காமல் தவிர்த்தான்.
ஆனால் காமாட்சியோ தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு முடிவுடன் அந்த போனை எடுத்தான்.
அது என்ன முடிவு சேகர் பார்க்கலாம் அடுத்த அத்தியாத்தில்,,
