உயிராக வந்த உறவு – அத்தியாயம் 15

அடுத்த நாள் காலையில் வீட்டில் சாதாரணமாக தோன்றிய அமைதி, உள்ளுக்குள் ஒரு புயலை மறைத்துக் கொண்டிருந்தது.

சமையலறையில் விசில் சத்தம் கேட்க,

ஹாலில் விக்ரம் அப்பா செய்தி தாள் படித்து கொண்டு இருக்க,நேற்றைய நிகழ்வை பற்றி எந்த பேச்சும் இல்லை.

அனன்யா மெதுவாக காபி எடுத்துக் கொண்டு வர,கண்களில் தூக்கமில்லை. நேற்றைய ஹாஸ்பிடல் ரிப்போர்ட் அவள் மனசை இன்னும் தட்டி கொண்டிருந்தது.

மாமியார் காபியை எடுத்து விட்டு “டாக்டர் என்ன சொன்னாங்க?”என கேட்க

அந்த கேள்வி சாதாரணமில்லை,அந்த கேள்வி அனன்யாவை கதி கலங்க செய்தது,விக்ரம் அமைதியாக இருக்க,

அனன்யா பதில் சொல்ல முயன்றாள்.

“அம்மா… ரிப்போர்ட்…”என சொல்ல

“என்ன ரிப்போர்ட்?” என மாமியார் குரல் கொஞ்சம் கடுமையாக “இரண்டு வருடமா ஆகுது. இப்போதாவது ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணணும். இல்லாட்டி… இந்த மாதிரி எவ்வளவு நாள்?”என சொல்ல

அந்த “இந்த மாதிரி” என்ற வார்த்தை அனன்யாவின் இதயத்தை கிழித்தது.

விக்ரம் மெதுவாக “ட்ரீட்மென்ட் பண்ணலாம் அம்மா,” என்றான் அமைதியாக.

அவன் அம்மா உடனே,“ஆமா… டாக்டர் கிட்ட போயிட்டு வந்தீங்க இல்ல அப்புறம் ரெண்டு பேரும் வாய தொறக்கலா” என சொல்ல

 கொஞ்சம் அமைதியா இருங்க உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்றேன் என விக்ரம் சொல்ல ஆரம்பிக்கவும்

“என்னடா சொல்ல போற சீக்கிரம் சொல்லு,இவள் குழந்தையை பெத்துக்க முடியாதுன்னா..”அந்த வாக்கியம் முடிக்கவில்லை.அனன்யாவின் கை நடுங்கியது.

“இல்லன்னா என்ன அம்மா?”என 

விக்ரம் குரல் திடீரென உறுதியானது.

“விக்ரம்… உனக்கு இன்னும் வயசு ஆகல,வாழ்க்கை முழுக்க இப்படியே காத்திருக்க முடியுமா? குடும்பம், வாரிசு… செகண்ட் மேரேஜ் பற்றி யோசிக்கணும் என்று அம்மா சொல்லிய அந்த ஒரு வார்த்தை.

வாட்?செகண்ட் மேரேஜ் ஆ??அந்த வீட்டின் சுவர் கூட அதிர்ந்தது போல இருந்தது அவனின் கோபமான குரலுக்கு

அனன்யா உறைந்து போய் நிற்க,

விக்ரம் எழுந்து,”போதும் அம்மா.”

அந்த சத்தம் வீட்டில் யாரும் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

செகண்ட் மேரேஜ் யாருக்காக?”என அவன் கேட்க

உடனே அம்மா “விக்ரம், நான் உன் நல்லதுக்காகத்தான்”சொல்லுறேன் என சொல்ல

“என் நல்லதுக்கா?அப்படின்னா முழு உண்மையையும் கேளுங்க.”

அவன் அறைக்குள் சென்று கோப்பு ஒன்றை எடுத்து வந்தான்.

அதை அவன் அம்மா முன் போட,

“பிரச்சனை அனன்யாவிடம் இல்லை.”

அந்த வார்த்தை மெதுவாக வந்தது.

ஆனா தாக்கம் மின்னல் போல.

“பிரச்சனை  என்கிட்ட தான்.”என அவன் சொல்ல

தன் மகன் சொல்வதைக் கேட்டதும் அவளின் முகம் வெண்மையாயிற்று.

“விக்ரம்… என்ன சொல்றே?” என கேட்க

டாக்டர் கிளியரா சொன்னாங்க, என்கிட்ட தான் குறை இருக்கு ஆனா அது சரி பண்ணிடலாம் போதுமா மா.. என அவன் சொல்லியபடி அனன்யாவை பார்த்தான்.

“நேத்து வரை அவளை பிளேம் பண்ணிட்டீங்க. அவள் ஒருத்தி அமைதியா எல்லாம் தாங்கிக்கிட்டே இருந்தா.இப்போ சொல்லுங்க… செகண்ட் மேரேஜ் யாருக்கு?”என்ன கேட்க

அந்த கேள்வி வெடித்த குண்டு போல இருந்தது.அம்மா பேச முடியாமல் திணறி போய் நிற்க,

அனன்யா அதிர்ச்சியில்,“விக்ரம்… நீங்க சொல்ல வேண்டாம்…அத்தை என் மேல குறை இருக்கிறதா நினைச்சுட்டு போகட்டும்…” என்று மெதுவாக சொன்னாள்.

அவன் அவளை பார்த்து,நீ என்ன தவறு பண்ணின அணு, உன்னை ஏன் எல்லாரும் குறை சொல்லணும்?”என அவன் சொல்லும் போதே அவன் குரல் கசங்கியது.

“அம்மா… ஒரு பெண்ணை குழந்தை இல்லன்னு குறை சொல்லுறதுக்கு முன்னாடி, அவள் மனசு என்ன ஆகுது என்று யோசிச்சீங்களா?

நான் ஆண் என்பதாலே யாருக்கும் கேள்வி கேட்க மனசு வரல.”அப்படி தான என்று அவன் சொல்லும் போதே 

தன் தாயின் கண்களில் நீர் தோன்றியது.

“நான்… நான் இப்படி இருக்கும் என்று நினைக்கல விக்ரம்…”என்று அம்மா சொல்ல

“அதுதான் பிரச்சனை அம்மா,”என

விக்ரம் மெதுவான குரலில்

“யாரும் என்னைய நினைக்க மாட்டாங்க. ஆனா சில வார்த்தைகள் அணுவை காயப்படுத்தும்.”என சொல்லி

அவன் அனன்யாவின் கையை பிடித்து 

“இந்த வீட்டில் யாருக்கும் எங்கள குழந்தை கத்துக்க சொல்ற உரிமை கிடையாது. குழந்தை வரலாம். லேட்டா வரலாம். வராமலும் இருக்கலாம்.

ஆனா என் வாழ்க்கையில் ஒரே மனைவி அது இவள் தான்.”என சொல்ல

அந்த நிமிடம் அனன்யாவின் கண்களில் கண்ணீர் துளி வழிய,

ஆனால் அவள் மாமியாரின் கண்களில் தன் மகனுக்கு பிரச்சனை என்றதும் ஏனோ இவ்வளவு நேரம் மருமகளை பேசிய வார்த்தைகள் எல்லாம் மகனுக்கு வரவில்லை மகனுக்கு மட்டும் தனி சட்டம் போல இந்த அம்மாக்கள் அகராதியில்..

விக்ரம் “பிரச்சனை என்கிட்ட தான்” என்று சொன்ன அந்த நொடி வீட்டில் விழுந்த அமைதி… அது ஒரு புயலுக்கு பின் வரும் அமைதி போலப் வீட்டைக் குலுக்கி போட்டது..

இருந்தாலும் அவன் அம்மா அந்த ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தார்.அவரின் விரல்கள் நடுங்கின.

“இது… இது எப்படி பாசிபிள்?” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்..

அம்மா இன்னும் என்ன அதே பாத்துட்டு இருக்கீங்க என்று விக்ரம் கேட்க

இல்லடா பொண்ணுங்களுக்கு தான் பிரச்சனை இருக்கும் எப்பவும் ஆனால்..என அவள் சொல்லும் போது அந்த குரலில் அதிர்ச்சி மட்டும் இல்ல… மறுப்பும் இருந்தது. தன் மகனுக்கு எந்த குறையும் இல்லை என்ற மறுப்பு..

“டாக்டர் தான் கன்பார்ம் பண்ணாங்க அம்மா,” என விக்ரம் அமைதியாக சொல்ல

“அது எப்படி நம்புறது? இப்போ டாக்டர் எல்லாம் எதுவும் சொல்லிடுவாங்க. மீண்டும் டெஸ்ட் பண்ணு, பரப்பிரியா ஹாஸ்பிடல் போகலாம் இந்த அனன்யாவை நல்ல செக் பண்ணனும்” என சொல்லும் போது  அந்த வார்த்தையில் இன்னும் ஒரு தலைக்கனம்..

அனன்யா மெதுவாக,“அம்மா… இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்ல, டாக்டர் எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு தான் சொன்னாங்க” என சொல்ல

“நீ சும்மா இரு!”என கோவமாக அம்மா  கத்த,

விக்ரமின் கண்கள் சிவந்து“அம்மா!”

“ அமைதியா இருங்க,நீங்க சொன்ன மாதிரி ஹாஸ்பிடல்ல செக் அப் பண்ணியாச்சு ரிப்போர்ட்டையும் உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து கொடுத்துட்டேன், இன்னும் அணுவை குறை சொல்லிட்டு இருக்கீங்க” என்று சொல்ல

இவளிடம் எந்த பிரச்சனையும் இல்லன்னு எப்படி நம்புறது?”என அம்மா மீண்டும் கேட்க,

“அம்மா… ரிப்போர்ட் கிளியரா சொல்லுது” என்று அவன் சொல்ல

 இந்த வீட்டுக்கு வாரிசு வேணும் விக்ரம்,

நீ ஒரே பிள்ளை எங்களுக்கு, என அம்மா சொல்ல

“அப்பா என்ன இது அம்மா சொன்னான்னு புரிஞ்சுக்க மாட்டாங்க” என்று அவன் தன் அப்பாவிடம் முறையிட

“இல்லங்க இந்த ரிப்போர்ட்ல ஏதோ எனக்கு தப்பா தெரியுது, கண்டிப்பா இவ மேல தான் பிரச்சனை. இன்னும் இத மறைக்கிறதுக்கு ஏதோ பண்ற”என அவள் மீண்டும் தன் மருமகளை குறை சொல்ல 

“நீங்கள் இரண்டு வருடமா அவளை ஒவ்வொரு நாளும் slow poison மாதிரி வார்த்தையால குத்திக்கிட்டே இருந்தீங்க.”இன்னும் என்ன தான் வேணும் உங்களுக்கு என்று அங்காரத்தில் விக்ரம் கத்த

உடனே அவன் அம்மா“நான் இந்த குடும்பத்துக்காக பேசுறேன்!

உன் வாழ்க்கை நாசமா போக கூடாதுன்னு!” என்று சொல்ல

“என் வாழ்க்கை அவள் தான் அம்மா!”என கத்தியவன் 

அந்த கத்தல் சுவர் கூட அதிர்த்தது.

அனன்யா அழ ஆரம்பித்தாள்.

“விக்ரம்… வேண்டாம்… தயவு செய்து…”என அவள் சொல்ல

இன்னொரு தடவை இதைப்பற்றி யாராவது ஒரு வார்த்தை பேசினீங்கன்னா  நான் இந்த வீட்டை விட்டு வெளியேறுறேன்.”என சொல்ல

அவன் சொன்ன வார்த்தைகள் அவன் அம்மாவிற்கு தலையில் குண்டு போட்டது போல இருக்க,

அவளோ அதிர்ச்சியில்,

“விக்ரம்! உனக்கு இந்த வீடு, இந்த குடும்பம் எல்லாம் முக்கியமில்லையா?”என கேட்க

“முக்கியம் தான்.ஆனா அவளோட மரியாதை அதைவிட முக்கியம்.”என 

அவன் அனன்யாவின் கையை இறுக்கமாக பிடித்தான்.

“நாம் போவோம்.”என சொல்ல

அந்த ஒரு நொடி அனன்யா தலை குலுக்கி,“இல்ல… நான் இந்த வீட்டை விட்டு,அத்த மாமா விட்டு  வர மாட்டேன்.இது நம்ம வீடு என சொல்ல.”

அந்த வார்த்தை அனைவரையும் அமைதியாக்கியது.விக்ரம் அம்மா சற்றே தளர்ந்தார். தன் மருமகள் இவளோ நல்லவள் என்று..ஆனால் ஈகோ இன்னும் உடையவில்லை.

“சரி… நீங்க இருங்க.

ஆனா ட்ரீட்மென்ட் உடனே ஸ்டார்ட் பண்ணணும்.எனக்கு இந்த விஷயம் இங்கவே முடிஞ்சு போகணும்.”என சொல்ல

விக்ரம் மெதுவாக,“ட்ரீட்மென்ட் பண்ணுவோம்.ஆனா ஒரே கண்டிஷன்

இனிமேல் அனன்யாவை யாரும் குறை சொல்லக் கூடாது.”என அவன் சொல்ல

அவள் மாமியார் எதுவும் சொல்லவில்லை.அவர் உள்ளுக்குள் போராடிக் கொண்டிருந்தார் தன் மகனுக்கு குறை இருப்பதை நினைத்து..

உண்மையும் யாருக்கு குறை என்பது விரைவில் தெரியும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page