உயிராக வந்த உறவு – அத்தியாயம் 17

நேரம் செல்ல செல்ல அலுவலகத்தில் அமைதி.மேசை மீது குவிந்த கோப்புகள்.

கணினி திரையில் திறந்திருந்த வேலைப் பதிவுகள்.தீரன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.அவன் கண்கள் திறந்தே இருந்தது…ஆனால் மனம் சில ஆண்டுகள் பின்னோக்கி ஓடியது. பழைய நினைவில் இருந்து விழித்துக் கொண்டான்..


மழை நனைந்த கல்லூரி வளாகம்,ஊட்டி மலைகள்,தாரணியின் பிறந்த நாள் சிரிப்பு…அவள் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்,அவன் பேசிய வார்த்தைகள்

எல்லாம் காதில் இன்னும் ஒலித்தது.

அவன் ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டபடி நினைவில் இருந்து நிஜத்துக்கு வந்தான்..
அதே நேரத்தில் கதவு தட்டும் சத்தம்.

“சார்…”அவன் கண்களைத் திறந்தான்.

அவனுடைய நெருங்கிய தோழன் சேரன் வர,


தீரன் அவனை கண்டதும்,”உள்ளே வாடா மச்சான்” என சொல்ல


நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு ஆமா “என்னடா இவ்வளவு ஆழமா யோசிச்சுட்டு இருக்க?” என்று சிரித்தபடி கேட்டு கொண்டே உள்ளே வந்தான்

தீரன் சிரிக்க முயல,அதற்குள் அவன் “என்னடா பழைய விஷயத்தை யோசிச்சிட்டு இருக்கியா? தாரணி உன்ன பாக்கவே வந்துட்டா போல” என்று சொல்லவும்


தீரன் அமைதியாக தலையசைத்தபடி, “ஆமா இது உனக்கு எப்படி தெரியும்”என கேட்பதற்குள்,


“இன்னும் நீ அவளை மறக்கலையா?” என்று கேட்க


“மறக்கணும்னு நினைச்சதே இல்ல டா,” என அவன் மெதுவாக சொன்னான்


“டேய் அர்ச்சனா தான் டா என்ன இங்க வர சொன்னாள்” என சொன்னபடி சேரன் நாற்காலியை இழுத்து அவன் முன் அமர்ந்தான்.


“இப்போ அவள் எங்கே?”என கேட்க


“இதே அலுவலகத்தில் தான்  கீழே.

வேலை முடிச்சுட்டு போற நேரமாயிருக்கும்.”என அவன் சொன்ன போது அந்த வார்த்தையில் ஒரு கலக்கம் இருந்தது.


ஆனால் அவள் எப்போதும் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டாள்.அதே நேரத்தில் அலுவலகத்தின் கீழ் மாடியில் ஏதோ சத்தம் கேட்க,தீரன் எட்டி பார்க்க அவன் தேடிய அவள் மட்டும் அங்கே இல்லை..


ஆனால் அவனின் உள்ளுக்குள் இன்னும் ஒரு காயம் இருந்தது.அதே கட்டிடத்தில் வேலை.ஆனால் இரண்டு இதயங்களுக்கு இடையில் அமைதியின் சுவர் இருக்க, அவன் தன் நண்பனிடம் “தாரணி அன்னைக்கே என்னோட பேச்சை கேட்காம அப்படி போயிருக்க கூடாது, அப்படி சென்றவள் மீண்டும் என் முன்னாடி இப்படி வந்து நின்று இருக்க கூடாது” என சொல்ல


 சேரன்,”சரி உன் வாழ்க்கையில் முடிஞ்சது முடிஞ்சு போச்சு,இப்போ அர்ச்சனா இருக்கா,அவ கூட உனக்கு கல்யாணம் முடிய போகுது மனசு குழப்பிக்க வேண்டும்.அவகிட்ட போன் பண்ணி பேசு” என அவன் சொல்லல


அதுது.. என தீரன் யோசிக்க,


“என்ன யோசிக்கிற டா ,அர்ச்சனா  உன் மேல எவ்வளவு பாசம் எல்லாம் இருக்கா, உன் மேல உயிரையே வச்சு இருக்கா” என சொல்ல விரும்புகிறேன் அமைதியாக இருந்தான்


பேருந்தில் பயணம் செய்தவள் களைப்பில் தாரணி நேராக நிஷா வீட்டிற்குச் சென்றாள். கதவைத் திறந்த நிஷா அவள் முகத்தை பார்த்தவுடன் ஏதோ மாறுபாடு உணர்ந்தாள்; கண்களில் கண்ணீர் இல்லை, ஆனால் ஒரு கடினமான அமைதி இருந்தது. உள்ளே ஓடிக்கொண்டிருந்த சிறுவன் “அம்மா…” என்று அவளை அணைத்தபோது, தாரணி அவனை மார்போடு இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அந்த ஒரு அணைப்பில் தான் அவள் வாழ்க்கையின் உண்மையை மீண்டும் உணர்ந்தாள்.


இவன் தான் அவள் உலகம். கடந்த கால நினைவுகள், கல்லூரி மழை, ஊட்டி சிரிப்பு, அலுவலக ஜன்னல் அது எல்லாம் இப்போது ஒரு தொலைந்த அத்தியாயம் போல் தோன்றியது அவளுக்கு..


“இனி எனக்கும் தீரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று அவள் மனதிற்குள் தெளிவாக சொல்லிக்கொண்டாள். இது கோபத்தில் எடுத்த முடிவு இல்லை; பல இரவுகள் துயில் இழந்த சிந்தனையின் பின் வந்த உறுதி. அவன் அருகில் இருந்தாலும் தூரமாக இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்று அவள் ஏற்றுக்கொண்டாள். தன் மகனின் தலைமுடியை வருடியபடி, “உன் வாழ்க்கை மட்டும் தான் என் பாதை,” என்று மெதுவாக சொன்னாள். அந்த நொடியில் அவள் காதலித்த பெண்ணாக இல்லை,தன் மனதை கல்லாக மாற்றிய ஒரு தாயாக மாறிவிட்டாள்.


நிஷாவை பார்த்ததும் தாரணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த எல்லா உணர்ச்சிகளும் உடைந்தன.


“நிஷா…” என்ற ஒரு வார்த்தை மட்டும்.

அடுத்த நொடி அவள் அழ ஆரம்பித்தாள்.

அந்த அழுகை சத்தமாக இல்லை.

ஆனா அது நெஞ்சை கிழிக்கும் அழுகை.

“நான் ஸ்ட்ராங்கா இருக்கணும்னு நினைச்சேன்… ஆனா முடியல…” என்ன சொல்லும் போது அவள் குரல் நடுங்கியது.


நிஷா அவளை தழுவிக் கொண்டாள்.

“அவனை மறக்க முடியலையா?”என கேட்க


தாரணி தலை அசைத்தாள்.

“மறக்க முடியல… ஆனா அவன் என் வாழ்க்கையில் இருக்க கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

என் மகன் இருக்கான். அவனுக்காக நான் நிற்கணும்.

தீரன்… இனிமேல் வேண்டாம்.”

அந்த வார்த்தையை சொன்னவுடன் அவள் இதயம் உடைந்தது போல கண்ணீர் பெருகியது.


“நான் அவனை பார்த்தா இன்னும் மனசு தளருது.அவன் அருகே நின்னா எல்லா பழைய நினைவுகளும் வந்து குத்துது.

நான் மீண்டும் விழ மாட்டேன் நிஷா. இனிமேல் அவன் எனக்கு இல்ல.” என சொல்ல


நிஷா மெதுவாக அவள் கண்ணீரை துடைத்தபடி,“ தாரணி… சில காதல்கள் வாழ்க்கையா மாறும். சில காதல்கள் நினைவா தான் இருக்கும்.

நீ தாயா இருக்குறதுக்கு மேல பெரிய பொறுப்பு வேற எதுவும் இல்ல.

நீ எடுத்த முடிவு தவறில்லை.”என சொல்லவும்


தாரணி தன் கண்களை துடைத்தபடி “நான் தப்பு பண்ணிட்டேன் நிஷா?” என கேட்கவும்


“உன்னோட வாழ்க்கையில என்ன நடந்தது என்று முதலில் சொல்லுடி அப்புறம் தப்பா சரியான்னு பார்க்கலாம், எதுவுமே சொல்லாம கையில இப்படி ஒரு பையன் கூட கொஞ்சம் நின்னுட்டு புலம்புனா நான் என்ன பண்ணுவேன்” என அவள் சொன்னாள்


அந்த நேரத்தில் கதவுக்கு வெளியே நிழல் ஒன்று நின்றது.அந்த வீட்டின் முகவரியை கண்டு பிடிக்க சில நாட்கள் எடுத்திருந்தது.


ஆனால் இன்று அர்ச்சனா கதவின் முன் நின்றிருந்தாள்.அவள் முகத்தில் பழைய கல்லூரி மாணவியின் மென்மை இல்லை.


அவளின் கதவு மணி ஒலித்தது.நிஷா திரும்பிப் பார்த்தாள்.


“யாரு இந்நேரம்?”என  தாரணி கண்ணீர் துடைத்து அமைதியாக அமர்ந்தாள்.


இருடி நான் போய் பாத்துட்டு வரேன் என நிஷா சொல்லியபடி மெதுவாக கதவை திறந்தாள்..


கதவு திறந்தது.வாசலில் அர்ச்சனா நிற்க,


“தாரணி இங்கதான்இருக்காங்கலா?”என

அவள் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் ஏதோ உறுதி இருக்க


நிஷா குழம்பினாள்.“நீங்க?” அர்ச்சனா தானா.”என கேட்க


அந்த பெயர் காற்றை நின்றது போல செய்தது.உள்ளே அமர்ந்திருந்த தாரணி அந்த குரலைக் கேட்ட நொடி உறைந்து போனாள்.அவள் மெதுவாக எழுந்தாள்.

கால்கள் கனமாக வாசலுக்கு வந்தாள்.


அர்ச்சனா அவளை முழுவதும் பார்த்தாள்.  தாரணி?”என அர்ச்சனா அழைக்க


“ஆமாம், தாரணி தான், ஏன் உனக்கு மறந்து போச்சா”என்று குரல் தளறாமல் கேட்கவும்


அர்ச்சனா சிரித்தபடி, உங்களை அவ்வளவு சீக்கிரம் எல்லாம் மறக்க மாட்டேன். உங்க கிட்ட பேசி நேரத்தை வீணடிக்கவும் நான் விரும்பல ஏன்னா உங்கள விட நான் ரொம்ப பிசி..


“நேராக சொல்ல வந்தேன். தீரன் இப்போ என் வாழ்க்கையில் இருக்கிறார்.நீங்க இன்னும் அவரை சுற்றி நின்னா… அது எல்லாருக்கும் பிரச்சனை.”என சொல்ல


தாரணியின் கண்கள் கோபத்தில் மின்னின.“என்ன மாதிரி பேசுற நீ, எனக்கும் தீரன்கும் எந்த சம்பந்தமும் இல்லை?” என்று அவள் கத்த


அர்ச்சனா கை நீட்டி தடுத்தாள்.உடனே

அவள் அமைதியாக அர்ச்சனாவை பார்த்தாள்.“நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.


தீரன் என் வாழ்க்கையில் இல்லை தேவையில்லாம இப்படி எல்லாம் வந்து மிரட்டுறதெல்லாம் வச்சுக்கடாத அர்ச்சனா.”என தாரணி சொல்ல


அர்ச்சனா ஒரு நொடி சற்றே திகைத்தாள்.ஆனா அவள் ஈகோ விட வில்லை.“அப்படி இருந்தா நல்லது.

அவர் கடந்த காலத்தை இழுத்து வர வேண்டாம், உங்களையும் உன் காதலையும் அவர் எப்பவோ மறந்துட்டாரு அதான் வேற கல்யாணம் முடிக்கிறேன் போனீங்க இல்ல இன்னும் என்ன.”என கேட்க


அந்த வாக்கியம் தாரணியின் நெஞ்சை குத்தியது.ஆனா அவள் முகத்தில் எந்த வலியும் தெரியவில்லை.


“கடந்த காலம் எப்போவும் இழுத்து வராது.அதை பிடிச்சுக்கிட்டு நிற்குறவர்கள் தான் விட மாட்டாங்க.”என அவள் சொல்ல


அந்த பதில் அர்ச்சனாவின் கண்களில் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது.

சில நொடிகள் மௌனமாக நின்றாள்.


அதன் பிறகு அர்ச்சனா திரும்பிப் போக,

ஆனா செல்லும் முன் ஒரு வார்த்தை

“நீங்க எடுத்த முடிவு உங்களுக்கு நல்லதா இருக்கும். இல்லன்னா…” என மிரட்டியபடி சொல்ல


நிஷா தாரணியை பார்த்தபடி, “இங்க பாருங்க அர்ச்சனா தேவை இல்லாம வந்து பிரச்சனை பண்ணாத”என சொல்லியபடி கதவை மூடினாள்

 

நிஷா தாரணியிடம் “இது சாதாரணமில்லை. அவள் எதற்காக இவ்வளவு தைரியமா வீட்டுக்கே வர்றா?”என கேட்க


தாரணி மெதுவாக அமர்ந்து ,“அவளுக்கு பயம் இருக்கு,” என்றாள் அமைதியாக.


“நான் இன்னும் அவன் மனசுல இருக்கேன்னு அவ தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி எல்லாம் பேசுறா” என சொல்ல


எனக்கு என்னமோ அவள் தப்பா புரிஞ்ச மாதிரி தெரியல,இப்ப தான் ரொம்ப சரியா புரிஞ்சிருக்கான்னு நினைக்கிறேன் என்று நிஷா சொல்ல


பேசாம உன் வேலையை பாருடி என்று தாரணி நிஷாவிடம் சொல்லிவிட்டு ரித்விக்கை தேடி அவள் அறைக்குள் சென்றாள்..


மறுபக்கம் அர்ச்சனா வீட்டிற்கு திரும்பியபோது வெளியே மழை பெய்து கொண்டிருக்க,ஆனா அவள் உள்ளுக்குள் புயல் இன்னும் அடங்கவில்லை.


“அவள் இவ்வளவு அமைதியா இருந்தது ஏன்?”என்று அந்த கேள்வி அவளை துளைத்தது.


தாரணி அழுது பிடித்து வேண்டிக்கொள்வாள் என்று நினைத்திருந்தாள்.கோபப்படுவாள் என்று நினைத்திருந்தாள்.

ஆனா அவள் அமைதியாக, உறுதியுடன் நின்றாள்.


அது தான் அர்ச்சனாவுக்கு பயம்.

“அமைதியா இருப்பவங்கள்தான் ஆபத்து,”என அவள் மனதில் ஒலித்தது.

அவள் கைப்பேசியை எடுத்தாள்.

ஒரு பழைய புகைப்படம் திறந்தது,

அதில் கல்லூரி விழா நாள்.

தீரன் மேடையில் நின்று பேசுகிறார்.

அவனை அவன் பின்புறத்தில் நின்று வைத்த கண்ணை வாங்காமல் அர்ச்சனா பார்த்துக் கொண்டே இருந்தது..


“அந்த நாள் முதல் நான் உன்னை விரும்பினேன் தீரா, உன்ன அவ கிட்ட இருந்து பிரிக்க நான் எவ்வளவோ சதி திட்டம் போட்ட, ஆனா விதி எப்படியோ நீங்க பிரிஞ்சிட்டீங்க.. திரும்ப கண்டிப்பா அவ கூட சேர விடமாட்டேன் நீ எனக்கு மட்டும் தான் வேணும்…”என்று காரில் சத்தமாக சொல்லியபடி வண்டியை வேகமாக ஓட்டினாள்..


 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உயிராக வந்த உறவு
796 10 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page