அத்தியாயம் 22

தேக்கு மரத்தாலான தொட்டிலை பார்த்ததும் அபிராமி விழி விரித்து ஆச்சரியப்பட்டாள். 

 

அச்சோ சுஜித் எவ்வளவு அழகாக இருக்கிறான். அவனை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே!  என்று அகிலா அவனின் பிஞ்சு விரல்களில் முத்தம் வைக்க, அந்த பிஞ்சு மொட்டு விழி விரித்து தன் சித்தியை பார்த்து கொண்டிருந்தது. 

 

என்னங்க இது எப்போ வாங்குனீங்க?  என்று அபிராமி தன் கணவனிடம் ஆச்சர்யமாக கேட்டாள். அவள் கேட்ட தொட்டில் உடனே தன் கணவன் வாங்கி தருவான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. 

 

நீ சொன்ன அன்னைக்கே இந்த தொட்டில் வாங்கிட்டேன் அபி. நல்லா இருக்கா? உனக்கு புடிச்சிருக்கா?  என்று அஸ்வந்த் கேட்டான். 

 

ஆமாங்க. அவனை பாருங்க. அவனுக்கும் புடிச்சிருக்கு போல.அழாம இருக்குறான் என்றாள். 

 

அவன் கேட்டது என்ன? அதற்கு அபிராமி உரைத்த பதில் என்ன? அஸ்வந்த் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கொண்டிருக்கிறான் அவளின் வார்த்தைகளில். 

 

உறவினர் அனைவரும் சுஜித்தின் தொட்டிலை சுற்றி நின்றனர். புது புது முகங்களை பார்த்ததும் சுஜித் உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாராக இருந்தான். 

 

அவன் கண்களை சுழற்றி சுழற்றி யாரையோ தேடி கொண்டிருக்க, அவனின் நாக்கில் ஒரு துளி சுத்தமான தேனை வைத்தார் பாரிஜாதம். 

 

சுஜித் விழிகளை சுழற்றி தன் பாட்டியை பார்த்து கொண்டே தேனை ருசிக்க, அப்படியே அவனின் காதுக்குள்” சுஜித்”  என்ற பெயரை மூன்று முறை கூறினார் பாரிஜாதம். 

 

அவன் யாரையும் கண்டு கொள்ளாமல் நாக்கை சுழட்டி கொண்டிருந்தான். 

அடுத்து சங்கரும் அதே போல் தேன் கொடுத்து கூற, அவனுக்கோ நாக்கில் எச்சில் ஊறியது. 

 

கௌரி மற்றும் கல்யாண் இருவரும் தங்கள் பேரனுக்கு கழுத்தில் ஒரு தங்க சங்கிலியை போட்டு விட, அபிராமி இதை துளியும் எதிர்பார்க்கவில்லை. 

 

அவளின் கண்கள் லேசாக கலங்கி நின்றது. எப்போது வேண்டுமானாலும் வெளியே சிதறி விடுவேன் என்பது போல் அவளின் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் கூறியது. 

 

அபிராமி தன் பெருவிரல் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டாள். 

 

சாரி டா தங்கம் சித்தியால தான் உனக்கு எதும் வாங்கிட்டு வர முடியல. இன்னொரு நாள் சித்தி வாங்கிட்டு வரேன். இப்போ தாத்தா பாட்டி வாங்கி கொடுத்ததை நீ போட்டுக்கோ என்று அவனின் முகத்தில் முத்த மழை அகிலா பொழிந்து கொண்டிருக்க, 

 

கார்த்திக் சற்று தொலைவில் நின்று ஏங்கி கொண்டிருந்தான் அவளின் அன்பிற்காக.

வந்திருந்த விருந்தினர்களும் அலுவலக ஊழியர்களும் சுஜித்திற்கு வாங்கிய பரிசுகளை அஷ்வந்த்தின் கைகளில் கொடுத்தனர். 

 

நாக்கில் ஊறி கொண்டிருந்த தேனை நன்றாக ருசித்து தின்ற சுஜித் மறுபடியும் புது முகங்களை மிரட்சியோடு பார்த்தான். 

 

உதட்டை பிதுக்கி கொண்டு இருக்கும் தன் மகனின் பிஞ்சு கன்னங்களை கிள்ளி,  “சுஜித் கண்ணா” என்றாள் அபிராமி. 

 

அவளின் முக தரிசனம் கிடைத்த சந்தோஷத்தில் அழுதது அந்த பிஞ்சு மொட்டு. 

 

அச்சோ தங்கம் என்றவள் தன் மகனை அள்ளி தூக்கினாள். 

 

அவளின் தோள்களில் வாகாக படுத்து கொண்டான் சுஜித். 

 

அவளின் தோள்களில் முகம் புதைக்கும் பொழுது அவனின் அழுகை நின்றது. 

தாய் அருகில் இருந்தால் எந்த குழந்தையும் பயப்படாது. அதே போல் இப்பொழுது சுஜித் சாதாரணமாக இருந்தான். 

அஸ்வந்த் அவனின் தலையை மெதுவாக வருடி கொடுத்து அவனின் காதுக்குள் மூன்று முறை பெயரை கூறினான். 

 

அபிராமி தான் நொடிக்கு நூறு முறை சுஜித் சுஜித் என்று மந்திரம் போல் தன் மகனின் பெயரை உச்சரிக்கிறாளே. 

 

அபிராமி நீயும் அவன் காதுக்குள்ள பெயரை சொல்லுமா என்று பாரிஜாதம் கூறியதும்,  மெதுவாக புன்னகைத்து கொண்ட அபிராமி அவனின் காதுக்குள் பெயரை கிசு கிசுக்க சுஜித் அவனின்  மெல்லிய உதடுகள் விரிய புன்னகைத்தான். 

 

அனைவரும் சற்று ஆச்சரியத்தோடு அந்த தாயையும் சேயையும் தான் பார்த்து கொண்டு நின்றனர். 

 

அஷ்வந்த்தின் அருகில் அபிராமி சுஜித்தை வைத்து கொண்டு நிற்க அவர்களுக்கு பின்னால் தன் பனிக்கட்டி கரங்களால் தன் மகனின் தலையை நீவி விட்டாள் சுகன்யா. 

 

அவளின் கண்களில் இருந்து சிறிது நீர் கசிய, ஆஹ் உஹ்ஹஹ் என்று தன் பூக்குவியல் உடலை அசைத்து சிரித்தான் சுஜித். 

 

சுகன்யா தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகனின் பிறை நெற்றியில் குட்டி முத்தம் வைக்க, அபிராமியின் தோள்களில் அவனின் மென்மையான கரங்களால் இறுக்கி பிடித்த சுஜித் சுகன்யாவின் முத்தத்தில் சிலிர்த்து அடங்கினான். 

 

அபிராமி அவனின் செய்கையில் பின்னால் திரும்பி பார்க்க அவளின் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. 

 

சுகன்யா மெதுவாக அஷ்வந்த்தின் முதுகில் தன் முகத்தை புதைத்து கொண்டாள். 

 

அஸ்வந்திற்கு லேசான பாரம் அவனின் உடலை அழுத்துவது போல் இருக்க,  ஒரு அடி எடுத்து வைக்க அவன் முற்பட அவனால் அசைய முடியவில்லை. 

 

ஆனால் அவனின் மனம் காரணம் இல்லாமல் லேசாக கனத்தது. 

 

சுகன்யா அஷ்வந்த்தின் முதுகில் இருந்து தன் முகத்தை பிரித்து அபிராமியையும் தான் சுமந்து பெற்ற மகனையும் ஆசை தீர பார்த்தாள். 

 

அஸ்வந்த்திற்கு அவனை அழுத்தி கொண்டிருந்த பாரம் குறைந்தது போல் இருக்க உடனே அவன் அவனின் முதுகுக்கு பின் தான் திரும்பி பார்த்தான். 

 

என்னவாயிற்று?  என்று ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்து கொண்டான். 

 

சுகன்யா மூவரையும் பார்த்து கொண்டே மெதுவாக நடந்து செல்ல அவளின் உடல் காற்றோடு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து சென்றது. 

 

அஷ்வந்த்தின் விழிகளில் இருந்து அவனையறியாமல் கண்ணீர் கொட்டியது. 

 

சுஜித் லேசாக சிணுங்கி கொண்டு அபிராமியின் தோள் வளைவில் முகத்தை புதைத்து கொண்டான். 

 

அபிராமி தன் அருகில் நிற்கும் கணவனின் முகம் பார்த்து அதிர்ந்தாள். 

 

என்னங்க என்னாச்சு? என்றவள் லேசான பதற்றத்தோடு அவனை பார்த்து கேட்டாள். 

 

என்ன அபி?  என்று கேட்டான் அஸ்வந்த். 

 

ஏங்க அழுறிங்க? சுகன்யா அக்கா ஞாபகம் வந்துருச்சா? என்றவள் அவனின் விழி நீரை துடைத்து விட்டாள். 

 

அஸ்வந்த் தன் கண்களில் இருந்து கண்ணீரா! என்று அதிர்ச்சியாக தன் கன்னத்தை தொட்டான். ஆம் கண்ணீர் தான்! எப்படி? 

 

வந்திருந்தவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்து சென்று விட்டனர் சங்கரும் பாரிஜாதமும். 

 

பஃபே முறைப்படி உணவு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அனைவரும் உணவு உண்டு கொண்டிருந்தனர். 

 

இவர்களை எவரும் கவனிக்கவில்லை. 

 

அவர்களுக்கு முன்னாள் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அபிராமியின் தாய், தந்தை மற்றும் தங்கை மூவரும் இந்த காட்சியை ஏதோ போல் நினைத்து தங்களுக்குள் சிரித்து கொண்டனர். 

 

அகிலா அவர்கள் அறியா வண்ணம் அதை வீடியோவாக பதிந்து கொண்டிருந்தாள். 

 

கல்யாண் மற்றும் கௌரி இருவரும் மகள் மருமகனை பார்த்து கொண்டு லேசாக புன்னகை சிந்தினர். 

 

நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க? ப்ளீஸ் இனிமேல் என் முன்னாடி வச்சு நீங்க அழக்கூடாது என்றவள் சோகமான முகத்தோடு அவனின் கண்களில் வழிந்த நீரை நன்றாக துடைத்து விட்டாள். 

 

ஹேய் அபி நான் அழல டி என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

 

சரிங்க என்று மனம் தாங்காமல் அபிராமியின் வாயில் இருந்து வந்தது வார்த்தை. 

 

சுஜித் அப்படியே அபிராமியின் தோள்களில் புதைந்து தூங்கி விட, அபிராமி அவனை அசையாமல் தொட்டிலில் படுக்க வைத்தாள். 

 

அத்தை மாமா நீங்களும் வாங்க சாப்பிடலாம் என்று அவர்களை அழைத்தான் அஸ்வந்த். 

 

நீங்க சாப்பிட்டு வாங்க தம்பி அப்பறமா நாங்க சாப்பிடுறோம் என்றார் கல்யாண். 

 

பாரிஜாதம் பாதி பேரை சாப்பிட வைத்து அனுப்பி வைத்து விட்டு இவர்களை பார்க்க வர, அம்மா சுஜித்தை பார்த்துக்கோங்க நாங்க சாப்பிட்டு வரோம் என்று கல்யாண் கௌரி மற்றும் அகிலா மூவரையும் அழைத்து கொண்டு சென்றான். 

 

அபிராமி தூங்கி கொண்டிருக்கும் தன் மகனின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு அவர்களின் பின் நடந்தாள். 

 

பாரிஜாதம் மருமகளை நினைத்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தார். 

 

அக்கா மாமா வாங்க நீங்களும் சாப்பிடுங்க என்று அகிலா இருவரையும் அழைக்க, வா அபி சாப்பிடுவோம் என்று மனைவிக்கு உணவை எடுத்து கொடுத்தான் அஸ்வந்த். 

 

என்னக்கா ஒரே ரொமன்ஸா இருக்கு என்று அபிராமியின் தோள்களில் இடித்து அகிலா கூற, சாப்பாடு எடுத்து கொடுத்தா ரொமன்ஸா டி?  என்று தங்கையை மொறைத்தாள் அபிராமி. 

 

ஆமா அப்போவே ஹாலுல வச்சு ரொமான்ஸ் பன்னிங்களே ரெண்டு பெரும் ஒருத்தரோட ஒருத்தர் முகத்தை பார்த்து என்று அகிலா தான் எடுத்த வீடியோவை காட்ட, ஹேய் எருமை எதுக்கு டி இது வீடியோ எடுத்து வச்சிருக்குற?  என்று தன் விழிகளை சுழட்டினாள் அபிராமி. 

 

ஆமா இந்த வீடியோக்கு பின்னாடி ஒரு பேக்கிரவுண்ட் மியூசிக் போட்டு எடிட் பண்ணி உனக்கும் மாமாக்கும் அனுப்பி வைக்குறேன் என்று அகிலா கிண்டலாக கூற, இது ரொமன்ஸ் இல்லை டி. அங்க ஒருத்தன் உன்னைய வச்ச கண்ணு வாங்காமல் பார்க்குறான் பாரு அதான் ரொமன்ஸ் என்று தங்கையை வேண்டும் என்றே சீண்டினாள் அபிராமி. 

 

யாரு என்பது போல் அகிலா,  அக்காவின் பார்வை சென்ற தூரம் பார்த்தாள். 

 

அங்கே தன் அலுவலக நண்பர்களோடு நின்றிருந்த கார்த்திக்கின் பார்வை அகிலாவை தின்று கொண்டிருந்தது. 

 

நண்பர்களுடன் பேசுவது போல் ஒரு கண்ணை அவன் இங்கு வைத்து கொண்டே அவர்களிடம் பேச, அகிலா அவனின் பார்வையில் கூசி போனாள். 

 

செம்ம ரொமான்டிக் லுக்! என்று கிண்டல் செய்தாள் அபிராமி. 

 

மாமாவை தான் சொல்லணும். மாமா என் இவர் எல்லாம் ஃபங்ஷன்க்கு கூப்பிட்றாரு என்று கோபமாக அக்காவிடம் கேட்டாள். 

 

ஹேய் என்ன டி?  அவர் என் வீட்டுக்காரரோட அபீஸ்ல ஒர்க் பன்றாரு. என் வீட்டுக்காரர் அழைச்சி அவர் வந்துருக்காரு என்றாள் அபிராமி. 

 

இவர்கள் பேசி கொண்டிருக்கும் நொடி கார்த்திக் இவர்களின் அருகில் வந்தான். 

 

இருவரும் விழி விரித்து அவனை பார்த்தனர். 

 

நான் கிளம்புறேன் மேடம் என்றான் கார்த்திக் அபிராமியை பார்த்து. 

 

ஆஹ்…  ஹான் என்று திக்கி திணறி கூறினாள் அபிராமி. 

 

போய்ட்டு வாங்க கார்த்திக் என்று அவனை வழியனுப்ப சென்றான் அஸ்வந்த். 

 

போகும் இவர்களை கவனித்த அகிலா, அக்கா இவரோட அப்பா இறந்துட்டாராம். அப்பறம் அவரு தங்கச்சியும் அவர் வீட்டுல தான் இருக்குறாளாம் என்றாள் அகிலா. 

 

உனக்கு யாரு டி சொன்னா?  என்று கேட்டாள் அபிராமி. 

அகிலா அக்காவின் கேள்வியில் விழி விரித்து பதற்றப்பட்டாள். 

அடுத்த பதிவில் பார்ப்போம். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
879 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page