காதல் – 4

காதல்-4
 

 

ஆர்ஜீ(RG) குரூப் ஆப் கம்பெனி. என்று பிரம்மாண்டமாக. மின்னியது அந்த கட்டிடம்.

கட்டிடம் மேலிருந்து கீழ்வரை பிரமிக்க வைத்தன. அருணுக்கு இவ்வளவு பெரிய கம்பெனியில் இருந்து தனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அருண் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் அழகானவன், அறிவானவன், அன்பானவன் அவன் தந்தை முருகன், தாய் வள்ளி இருவரும் காதல் திருமணம் புரிந்து கொண்டனர்.

பிஏ படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கக்கூடாது என நினைத்தவன். தந்தைக்கு உதவியாயிருக்கும் தான் ஆர்ஜீ குரூப் ஆப் கம்பெனி வேகன்ஸி இருப்பதாக நியூஸ் பேப்பரில் பார்த்தான்.

இன்று அவன் நினைத்தது போலவே வேலைக்கு சேர்ந்து விட்டான். உள்ளே நுழைந்தவன் முன் அலுவலகத்திடம் போய்” ஹாய் ஐ அம் அருண், டுடே ஜாயின் டூ மை ஜாப் “என்று விசாரித்தான்.

“ஓகே சார் வைட் பண்ணுங்க. பாஸ் கொஞ்சம் பிசியா இருக்காரு. அங்க உட்காருங்க நான் கூப்பிடுறேன்.”  என்றவளிடம் உங்கள் நேம் என்று கேட்டான் அருண்.

“பிரியா” எனக் கூறிவிட்டு தன் பணிகளை செய்யத் தொடங்கினாள்.

அருணோ “பிரியா ப்ப்பாபாபாபா எவ்வளவு அழகான பெயர். “என்று வழிந்தவன்”  உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா?.” எனக் கேட்டான்.

பிரியாவோ சற்று கடுப்புடன் “ஹாலே மிஸ்டர் போய் உட்காருங்க” என்று அவனை விரட்ட முயன்றாள்.

“நான் உங்க வயசு என்னா கேட்டான். போன் நம்பர் தானே கேட்டேன். எப்படி இருந்தாலும் ஒருநாள் நீயே தரப்போற அதுக்கு இப்போ கொடுத்தா என்ன” என்று பேச்சை வளர்த்தான் அருண்.

“நான் ஏன் ஒருநாள் உங்களுக்கு என் நம்பரை கொடுக்க போறேன்” என்று கேட்டவளிடம்,

“அப்படி கேளு டி ராசாத்தி”  என்றிட,

“என்னது டீ யா???? ” என்று கோவம் கொண்டாள் பிரியா.

அவனோ தன் பல்லைக் காட்டிக்கொண்டு ” ஈஈஈஈஈ அது ஒரு பாலோவ்ல வந்துருச்சுமா, அதை நீ கண்டுக்காத சரியா.இப்ப விஷயத்துக்கு வரலாம். எனக்கு நம்பர் ஏன் நீ கொடுப்பேனா,  எனக்கு வேலை உறுதி என்று தெரியும். இந்த நேர்காணல் கூட சும்மான்னு தெரியும். அதுக்கு அப்புறம் நீ நம்பர் தந்து எப்ப பேசி எப்ப பழகி” என்று பெருமூச்சு விட்டான்.

“ஹலோ அருண் நம்ம ஏன் பேசணும். அப்படி என்ன நமக்குள்ள இருக்கு இன்னிக்கு தான் பார்த்தீங்க, அதுக்குள்ள உங்களுக்கு நம்பர் வேணுமா?”

அருணோ தலையில் கை வைத்துக்கொண்டு “அட இப்பதான சொன்னேன். சரி இரு உனக்கு புரியல நான் மொதல்ல இருந்து சொல்றேன்.” என்று ஆரம்பிக்க போனவனை இடைமறித்து.

தன் இரு கரம் கூப்பி “ஐயா சாமி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். இப்ப என்ன என் நம்பர் வேணும் அவ்வளவு தானே”

அருணும் சட்டென்று “ஆம் ஆம்” என்று தலையாட்ட

பிரியாவோ “ஓகே நோட் பண்ணிக்கோ.” என தன் நம்பரை கொடுத்தாள்.

அதன்பின் “இப்போதாவது போய் அங்க உட்காரு” என்று சொன்னாள் பிரியா.

அருணோ “பிரியா நான் அங்க போய் சும்மா உட்காரதுக்கு, இங்கே உன் கிட்ட பேசிட்டு இருப்பேன். நீயும் பிரியா நானும் ஃப்ரீயா இருக்கேன்.” என்று மேலும் வழிந்தான்.

“சார் பார்த்தால் நம்மள ஃப்ரீயா வெளியே அனுப்பி விடுவார். ஓகேவா உனக்கு “என்று பிரியா கூறினாள்.

அருண் முகத்தை சுளித்துக் கொண்டு “போடி” என்று சொல்லி விட்டு திரும்பி பார்த்தவன்” அட நாம தேவதை. இந்த பெண்ணா தானா பஸ்டாப்ல பார்தோம்..” என்று யோசித்தான்.

**************************”*””

வேலைக்காக தன் பைக்கில் வந்து கொண்டிருந்த அருண் பாதி வழியில் பைக் நின்றதில் கடுப்பாகி “காலையிலே இந்த பைக் இப்படி மக்கர் பண்ணுது என்ன பண்ணலாம் “என யோசித்தவன் ஆட்டோ இல்லனா பஸ்ஸுல போலாம் என்று முடிவு செய்தான். கடுப்புடன் சாலையில் நடந்து வந்தவன் “முதல் நாளே நல்ல சகுனம்” என்றவாறு நடந்தான்.

அப்போதுதான் அந்த அழகு தேவதை அவன் கண்ணில் பட்டாள். “ஏன் இவளிடம் பேச வேண்டும் என என் மனசு துடிக்கிறது. மனதை அடக்க முடியாமல் தானே அவளிடம் பேசினோம். ஆனால் முறைத்து பார்த்து விட்டு போனவள் இங்கே இப்படி “என்று யோசித்தவாறு அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

**********†***********†***”*******†

அவள் அருகில் அமர்ந்து “ஹாய் தேவதை எங்கே என்ன பண்றீங்க” எனக் கேட்டான்.

அவளோ  அவனைப் பார்த்த எரிச்சலுடன் “ஏய் நீயா இங்கே எப்படி வந்த. ஓ என்ன பாலோ பண்ணிக்கிட்டு இங்கே வந்துட்டியா? அப்புறம் ஒரு விஷயம் என் பெயர் ஒன்னும் தேவதை இல்ல புரியுதா என்று கோபத்துடன் பொரிந்து தள்ளினாள் அவள்.

அருணோ “கூல் கூல் ஏன் இப்ப இந்த அளவுக்கு கோபம் பார்த்துமா, கோவத்துல நான் எரிந்து விடப் போறேன்.”  என்று வழக்கம்போல் மற்ற பெண்களிடம் பேசும் தோரணையில் இவளிடமும் பேசினான்.

ஆனா அவளோ அருணுக்கு பிடிகொடுக்காமல் “ச்சா ” என்று அலுத்துக் கொண்டு வேறு இருக்கையில் மாறி‌ அமர்ந்தாள்.

இன்பராஜா அலுவலகத்துக்கு வந்தவன் தன் வேலையை விரைவாக செய்து முடித்தான்.

விளம்பரத் துறையில் கால் பதித்து தன் கடின உழைப்பால் இந்த ஐந்து வருடத்தில் எல்லோரும் பார்த்து பொறாமை படும்படி முன்னுக்கு வந்தான்.

என்னதான் கடினமாக உழைத்தாலும் ஏனோ அவன் மனம் மட்டும் ஒரு நிலையில் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆறு வருடம் கழித்து மறுபடியும் தன்னவளை பார்த்தவன் தவித்துக்கொண்டிருந்து அவன் மனம். அவளை அவன் ஆபீஸில் அதுவும் சிசிடிவி கேமராவில் பார்த்து நம்ப முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒன்று ஞாபகம் வர தன் போனை எடுத்து சதாசிவத்திற்கு கால் செய்தான்.

“ஹலோ சதாசிவம் அங்கிள்”

எதிர் முனையில்; “சொல்லுப்பா ராஜா.”

“அங்கிள் இன்னைக்கு இன்டர்வியூக்கு எத்தனை பேர் வர சொன்னிங்க” என்று வினவ.

“அது வாப்பா இரண்டு பேர் வர சொன்னப்பா. ஒரு பையன் ஒரு பொண்ணு.அவங்க ரெண்டு பேரும் தான் உனக்கு பிஏவா இருக்க நான் அப்ளிகேஷன் கொடுத்து இருக்கேன்பா.  ஏதாவது பிரச்சனையா? ” என்று கேட்டார்.

“நத்திங் அங்கிள் பை” என அவரிடம் பேசி முடித்தவன், தன் நாற்காலியில் இருந்து எழுந்து அங்கும் இங்கும் நடந்து

கண்களை மூடிக்கொண்டு பழைய நினைவில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கினான்.

******†*****†*****†*****†*****†****

“ப்ளீஸ்டி என்னை விட்டு போயிடாத டி. நீ இல்லாம சத்தியமா என்னால வாழ முடியாதுடி ப்ளீஸ்டி “என்று அவள் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

அவளோ “நீ இனிமேல் எனக்கு தேவையில்லை இன்பா. எனக்கு என் அப்பா தான் முக்கியம் நீ இல்ல.”

“ஆனா எனக்கு நீதாண்டி முக்கியம். “என்ற வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்த அச்சமயம்,

******†******†*******†*****†****†***

“மே ஐயம் கமிங் சார்.” என்று குரல் கேட்க,

தன் நிலையை உணர்ந்தவன் “உள்ள வாங்க பிரியா” என்று பதில் சொன்னான்.

“சார் இன்டர்வியூவுக்கு டைமாச்சு”

“ஓ.. ஓகே முதல்ல மிஸ்டர் அருணை வரச்சொல்லுங்க. நெக்ஸ்ட் அந்த லேடி வர சொல்லுங்க.”என்றான்.

“ஓகே சார்..”

“நான் போன் பண்ணதுக்கு அப்புறம் அனுப்புங்க”

“சரி சார்.”என்று சொல்லிவிட்டு பிரியா சென்றுவிட,

ராஜாவிற்கு கடுங்கோபம் உருவானது. ” எப்படி டி, எப்படி உன்னால எதுவும் நடக்காத மாதிரி இருக்க முடியுது. அதுவும் என் ஆபீசுக்கு எனக்கு பிஏவா வேலை செய்ய வந்து இருக்க. முடியல என்னால, சத்தியமா முடியல டி, என் வலியை நீயும் அனுபவிக்கனும். உன்னை இனிமேல் என்ன பண்ண போறேன் பாரு டி. ” என்று தன் ஆறு வருடம் கோபத்தை எவ்வாறு அவளுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான் ராஜா.

ஒரு முடிவுக்கு வந்தவன் அடுத்து செயல்படத் தொடங்கி, அவன் நினைத்ததை செயல்பவும் ஆரம்பித்தான்.

நேர்காணலுக்கு நேரமாவது உணர்ந்து பிரியாவுக்கு டயல்செய்து இன்டர்வியூவுக்கு வந்தவர்களை அனுப்புமாறு கட்டளையிட்டான்.

முதலில் அருண் கதவை தட்டிக்கொண்டு “மே ஐயம் கமிங் சார்” என்றான்.

“ம் கமின்.”

தன் முன் இருந்த இருக்கையை உட்காரச் சொன்னான் ராஜா.

அருணும் அதற்கு நன்றியை தெரிவித்து அமர்ந்தான்.

“உங்க நேம்” என்று கம்பீரமாக கேட்டான் ராஜா.

அவனோ “அருண்”.  என்று கூற,

“நீங்க இப்போ எதுக்கு இந்த இன்டர்வியூக்கு வந்திருக்கீங்க சொல்ல முடியுமா.” என்று கேள்வி கேட்டான்.

அருணோ “தெரியும் சார் உங்களுக்கு பிஏவா வேலை செய்ய. ” என்றான்.

” ம், இதுல உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா” என்று கேட்டான் ராஜா.

அருண் சற்று தயங்கிக் கொண்டு “இல்ல சார் இது தான் என்னுடைய பஸ்ட் ஜாப். சார் நீங்க எள்ளுன்னா எண்ணெய்யா இருப்பேன் சார்” என்று அவனது குறும்புத்தனத்தை ஆரம்பித்தான் இன்பராஜாவிடம்.

இன்பராஜா சிரிப்பான் என்று நினைத்தவன் ஏமாந்து தான் போனான் அருண்.

“மிஸ்டர் அருண் இங்கே வொர்க்  பார்க்க தான் உங்களை வரச்சொன்னது புரியுதா. வேலையை மட்டும் பார்த்தால் போதும் அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம்.” என்று கட்டளையாக வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.

“சாரி சார்” என்று அருண் வருத்தத்துடன் கூறினான்.

“ஓகே உங்க வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் வெளியே ரிசப்ஷன்ல வாங்கிக்கோங்க நீங்க இப்ப போகலாம் “என்று அவனை அனுப்பினான்.

அருணுக்கு ரொம்ப சந்தோஷம் அவன் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை இவ்வளவு பெரிய கம்பெனியில் தனக்கு வேலை கிடைக்கும் என்று. அதுவும் அவளுடன் ஒரே கம்பெனியில் என்று சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்தான்.

அடுத்து அவள் “உள்ளே வரலாமா சார்”  என்று அவளின் குரலைக் கேட்டு தடுமாறினாலும் தன்னை சமன் செய்து கொண்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு “யஸ் ” என்றான் கடுமையான குரலில்.

உள்ளே நுழைந்தவளுக்கு, தன் எதிரில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தாள்.

தான் காண்பது கனவா இல்ல, நினைவா, இவன் எப்படி இங்க என்று தன்னவனை பார்த்த சந்தோஷத்தில் “எப்படியாவது உன்னை ஒரு தடவையாவது பார்க்க மாட்டோமா என்று தவிச்சுகிட்டு இருந்தேன் இன்பா” என்று தன்னையும் மீறி கூறிவிட்டாள் அவள்.

ஆனால் அவனோ எந்த ஒரு உணர்ச்சியும் தன் முகத்தில் காட்டாமல்,

“ஹலோ மிஸ் உங்க பெயர் என்ன” என்று அவன் மூன்று முறை கூப்பிட பிறகு தான் சுய நினைவுக்கு வந்தவள்,

கண்களில் கண்ணீரோடு “நீ.. நீங்க இன்பா தானே” என்று அவள் கேட்ட மறு நொடி அவளை எரித்து விடும் அளவுக்கு முறைத்தான் ராஜா.

“நான் உங்க நேம் கேட்டேன் அதை சொல்லுங்க பஸ்ட் “என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க,

“அது.. அதுவந்து கீ.. கீ.. கீதா” என்று மெல்ல கூறினாள்.

“ம்ம்.. உங்களுக்கு” என்று ராஜா பேச வருவதற்கு முன்னே,

“உனக்கு இங்கே வேலை இல்லை சொல்ல போறீங்க. அதானே சார்” என்று சொல்லி முடித்தால் கீதா.

ராஜாவோ சலித்துக் கொள்ளாமல் ” உங்களுக்கு இங்கே வேலை உறுதி. நீங்க வெளிய போய் உங்க அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிக்கோங்க.” என்று திமிராக கூறினான்.

ராஜா சொன்னது உண்மைதானா இல்லை தன் காதில் அப்படி விழுந்ததா என்று புரியாமல் குழம்பி கொண்டு நின்றாள்.

அவள் குழம்பிய முகத்தை கண்டவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு “நீங்க போகலாம்” என்று வெளியே கை காட்டியவன் ‘ நீ இனிமே நிம்மதியா இருக்க முடியாது கீதா’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தான் இன்பராஜா.

ஆனால் பாவம் ராஜாவுக்கு தெரியவில்லை அவன் எடுத்த சபதத்தால் அவளின் நிம்மதி போக போகிறதா இல்லை அவனின் நிம்மதியை தொலைக்க  போகிறனா என்று தெரியாமல் சபதம் எடுத்தான்.

இவனின் சபதம் நிறைவேறுமா இல்லையா என்று விதிக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 
 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
என் தீராத காதல் என்றும் உனக்காக
0 0 0
நின் காதல் சுடுவதேனோ
0 0 0
ரணமாய் கொல்லுதடி காதல்
0 0 0
என் அன்பே! எந்தன் ஆருயிரே!
265 3 5
அரக்கனின் காதலி
448 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
1,272 17 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
307 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page