காதல் – 6

 

காதல் -6
 

 

ஊஞ்சலில் அமர்ந்தவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

“ஏய் கீதா எழுந்துடுடி. டைம் பாரு ஏழு. முதல் நாள் காலேஜுக்கு லேட்டா போவியா நீ.” என்று சமையலறையிலிருந்து காபி கப்புடன் வெளியே வந்தார் கீதாவின் அம்மா பார்வதி.

“மா இன்னும் கொஞ்ச நேரமா ப்ளீஸ்மா” என்று கெஞ்சலுடன் மீண்டும் உறக்கத்தை தழுவினாள்.

“ஒழுங்கா எழுந்துக்க போறியா? இல்ல முகத்துல தண்ணி ஊத்தவா?” அவள் அம்மா சொல்வது எதுவும் காதில் வாங்காமல் கனவுலகில் சென்றால் கீதா.

அழகான ஒரு ஆண்மகன் காரில் இருந்து இறங்கி வந்து அவளை அப்படியே தன் இரண்டு கைகளாலும் தூக்கி அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி. ” ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி” என்று அவள் காதில் ஒலித்து அவனது முகத்தைப் பார்க்கும்போது வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள் கீதா.

சிணங்களோடு “அம்மா என்னம்மா இது” என்று கேட்டாள்.

” பின்ன என்னடி எழுப்பி எழுப்பி பார்த்தேன் நீ எழுந்து இருக்கிற மாதிரியே தெரியல அதான் தண்ணி ஊத்துன”

” போங்கம்மா நீங்க ரொம்ப மோசம். எவ்வளவு நல்ல கனவு தெரியுமா. அவன் முகத்தை பார்ப்பதுகுள்ள எப்படி பண்ணிட்டீங்க “

“யாருடி தினமும் உன் கனவில் வந்து உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றானே அவன் தானே” என பார்வதி தினமும் தன் மகள் காணும் கனவை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளோ முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ” ம்ம் ஆமா மா.” என்றாள்.

” இதே மாதிரி கனவு கண்டுகிட்டு இருந்தா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் கண்டிப்பா நடக்க போகுது பாரு. ” என்று தன் மகளை வம்புக்கு இழுத்தாள் பார்வதி.

அவள் மட்டும் சும்மா இருப்பாளா என்ன ” ஆமாம்மா அந்த மாதிரி நடந்தால் நான் அவன் கூட ஓடிப் போய் விடுவேன். அந்த தருணம் எவ்வளவு சுகமா இருக்கும்.” என சொல்ல,

” இருக்கும்டி இருக்கும் நல்ல நாலடி கொடுத்தால் சுகமா தான் இருக்கும் “என்று முறைத்தாள் பார்வதி.

” போமா கண்டிப்பா நான் ஓடிப்போய் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்றால் விளையாட்டுத்தனமாக.

“ம்ம் சரிடி உன் கல்யாண அப்ப பொண்ணு அழைப்புக்காக கார் வைக்க வேண்டாம். நீ ஓடியே வந்து கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப போய் பல்லு தேச்சுட்டு வந்து காப்பி குடிச்சிட்டு போய் குளிடி. எனக்கு சமையலறையில் வேலை இருக்கு.” எனக்கூறிவிட்டு பார்வதி சென்றுவிட,

இன்றும் தன் பேச்சுத் திறமையால் அம்மாவை தன்னால் வெற்றி பெற முடியவில்லையே என்று போலியான கோபத்தில் தன் தந்தையை நோக்கிச் சென்றாள்.

“ஏய் எங்கடி போற”

“போ மா நான் உன்கிட்ட பேசமாட்டேன் அப்பாகிட்ட போறேன்” என கூறிவிட்டு போகும் தன் மகளை பார்த்தவள் “இன்னும் குழந்தையாகவே இருக்காளே” என்று சமையலறைக்குள் புகுந்தாள்.

” அப்பா, அப்பா இந்த அம்மாவை பாருங்கப்பா இன்னிக்கும் நான் நல்ல மொக்கை வாங்கிட்டேன்.” என்று வராத கண்ணீரை வா வா என அழைத்துக் கொண்டு தன் தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

” நீயும்மா மா, ” என அன்பரசன் கேட்க,

“அப்போ நீங்களும் அப்பா ” என்று கீதா கேட்டாள்.

“ஆமாண்டா “என்று தலையை கவிழ்ந்தபடி கூற,

“ச்ச என்னப்பா நீங்க ஒரு நாள் கூட அம்மா கிட்ட மொக்கை வாங்காமல் உங்களால இருக்கவே முடியாது அப்பா ” என்று கூறும் தன் மகளை பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தார்.

“இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கேட்டாள்.

“இல்லம்மா என்னவோ நான் மட்டும்தான் டெய்லி மொக்கை வாங்குற மாதிரி சொன்னியே அதான் அப்பாவால சிரிப்ப அடக்க முடியல” என்று தன் தந்தை சொன்னதும் அவளும் சிரித்து விட்டாள்‌.

தன் அன்பு மகள் எப்பொழுதும் இப்படி சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவள் தந்தை அன்பரசன் வேண்டுகோளாக இருந்தது அந்த கடவுளிடம்.

பார்வதியும் அன்பரசன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்கள் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஊரை விட்டு வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அன்பரசன் கணக்கு வாத்தியார் பார்வதி இல்லத்தரசி.

இவர்களது காதலுக்கு அடையாளமாக கீதா பிறந்தால். அவள் பிறந்த நேரமோ என்னவோ சொந்தமாக ஒரு வீடு வாங்கினார்கள். அதை தன் மகள் பெயரில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணினார்கள்.

பிறகு தன் வீட்டிற்குத் தெரியாமல் பார்வதியின் அண்ணன் ரவி மட்டும் வந்து பார்த்துப் போய்க் கொண்டிருந்தார். கீதாவின் மீது அன்பை கொட்டி வளர்த்தார்கள் ஆனால் அதேசமயம் ஒழுக்கமாகவும் பண்பாகவும் வளர்த்தார்கள்.

கீதாவோ தன் மனதிற்குள் “கடவுளே நாங்க எப்பவும் இதே மாதிரி சந்தோசமா வாழனும். அன்பான அம்மா அப்பா, என் சந்தோஷம் தான் அவங்க சந்தோஷம். நான் எடுக்கிற எந்த முடிவுகளும் எப்பவும் எனக்கு துணையா இருக்காங்க. இவங்கள மாதிரி அம்மா அப்பா கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் “என்று கடவுளிடம் அந்த காலைப்பொழுதில் மனதார வேண்டினாள்.

அங்கே பார்வதியும் சமையலறையில் இதைத்தான் நினைத்துக் கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். இவர்கள் வேண்டுதல் அந்த கடவுள் காதில் விழவில்லை என்று தான் சொல்ல வேண்டும் விதி வலியது.

“கீதா காலேஜுக்கு டைம் ஆகுது முதல்நாளில் லேட்டா போலாமா” தன் அன்னையின் குரலை கேட்டு குளியலறையை நோக்கி சென்றாள்.

சிறிது நேரம் கழித்து
“அம்மா நான் கிளம்பிட்டேன்” என்று கிளம்பி கொண்டு துள்ளி குதித்து கொண்டு வந்தால் கீதா.

“இருடி லன்ச் ரெடி எடுத்துட்டு போயிடு” என்று சமையலறையிலிருந்து பார்வதி குரல் கொடுக்க அன்பரசனோ “இரு மா, நான் வந்துவிட்டு வரேன் என்று அவள் அருகில் வந்தார்.

“இல்லப்பா வேண்டாம் ரம்யா வருவா நான் அவகூட போய்க்கிறேன்” என்று கூறினாள்.

அதைக் கேட்டவர் சற்று மனம் வருந்தி “அம்மாடி கீதா அப்பாவுடைய அடுத்த மாசம் சம்பளத்துல உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி தரேன். “என்றவரிடம்,

“ஐயோ அப்பா இப்ப யாரு உங்க கிட்ட வண்டி கேட்டா “என்று முறைத்தாள்.

“அதுக்கு இல்லம்மா” என்று பேச வந்தவரை தடுத்து,

“எனக்கு இப்போதைக்கு ஸ்கூட்டி வேண்டாம்பா “என சொல்லி முடிக்கும் முன் ரம்யா அங்கு வந்து சேர்ந்தாள்.

“ஹாய் ஆன்ட்டி ஹாய் அங்கிள்”

“வாமா ரம்யா எப்படி இருக்க?” என்று பார்வதி கேட்க,

“நல்லா இருக்கேன் ஆண்ட்டி” என்று கூறினாள்.

கீதாவும் ரம்யாவும் சிறுவயதிலிருந்தே தோழிகள் பள்ளிப்படிப்பை ஒன்றாக முடித்து விட்டு கல்லூரி படிப்பையும் ஒன்றாக சேர வேண்டும் என்பது அவர்களின் ஆசை அது நிறைவேறவும் செய்தது.

அன்னையின் கையில் இருந்த லஞ்ச் பேக்கை வாங்கிக் கொண்டு ரம்யாவிடம் “போலாமா” என்று கேட்டாள்.

“ம்ம் போகலாம்டி” ரம்யா சொல்ல தன் தந்தையும் தாயும் திரும்பிப்பார்த்து பை கூறியவள் இருவர் கன்னத்திலும் இதழ் முத்தம் ஒன்று கொடுத்து விட்டு சென்றாள்.

காலேஜ் போகும் வழியில் ரம்யா கீதாவிடம் “கீதா இன்னைக்கு முதல் நாள் இல்ல ரொம்ப பயமா இருக்குடி “என்று கூறினாள்.

“எதுக்குடி பயம்”

“இல்லடி இன்னைக்கு ராக்கிங் பண்ணுவாங்களாம். என் பக்கத்து வீட்டு பையன் நம்ம காலேஜ் தான். போன வருஷம்தான் முடிஞ்சான். அவன் தான் சொன்னான் காலேஜ்ல யாராவது கிண்டல் பண்ணா ” என்று ரம்யா கூறி முடிக்கும் முன் கீதாவோ,

” என்னடி அவன் பெயரை சொல்ல சொன்னானா” என்று கிண்டலாக கேட்டாள்.

“அது இல்லடி அந்த காலேஜ்ல ஃபைனல் இயர் பையன் யாரோ ராஜாவாம். அவன் பேரை சொல்ல சொன்னான் டி. “

” ஏண்டி ராஜா என்ன அவ்ளோ பெரிய கொம்பனா” என்று சத்தமாக கேட்டாள் கீதா.

“ஷ்ஷ்ஷ் சத்தமா பேசாத டி காலேஜ் வந்துட்டோம்” என்றார் ரம்யா மெதுவாக சொல்ல.

” அது எனக்கும் தெரியுது வா கிளாசிக் போலாம்” எனக் கூறியவள் ரம்யாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்.

“ஏண்டி ரம்யா அந்த ராஜா என்ன அவ்ளோ பெரிய கொம்பனான்னு கேட்டேன் நீ எதுவுமே பதில் சொல்லல” என்று மீண்டும் விட்ட இடத்திலேயே தொடங்கினாள் கீதா.

” நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவன் கொம்பன் தான். அவன் தான்” என்று ரம்யா கூறு வருவதற்குள் ஒரு கும்பல் இவர்களை அழைத்தது.

ரம்யாவோ சற்றுப் பதற்றத்துடன் “ஐயோ போச்சு கீதா இங்க பாருடி, என் செல்லம் தானே நீ. அவனுங்க ஏதாவது கிண்டல் பண்ணா அமைதியா இருடி. உன் வாலு தனத்தை காட்டாதடி.” என்று தன் தோழியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“இப்ப நீ அவனுக்களை நினைச்சு பயப்படுறியா? இல்லை என்னை நினைத்து பயப்படுறியா?” என்று கீதா கேட்க.

“இதுல என்னடி உனக்கு சந்தேகம் உன்னை நினைச்சு தாண்டி பயப்படுகிறேன். ப்ளிஸ் டி நீ சும்மா இருந்தாலே போதும் டி “என்று ரம்யா மீண்டும் கெஞ்சினாள்.

கீதா ரம்யாவை முறைத்துப் பார்த்துக் கொண்டு “சரி பார்க்கலாம் வா” என்று கும்பலை நோக்கி சென்றாள்.

அவர்கள் அருகில் போனதும் அதில் ஒருவன் “உன் பெயர் என்ன” என்று கேட்டான்.

“ரம்யா அண்ணா “என்று கூற,

“என்னது அண்ணாவா! டேய் பரத் என்னடா உன்னை அண்ணா சொல்ற” என்று கிண்டல் செய்தனர் மற்ற நண்பர்கள்.

பரத்தோ ” சொன்னா சொல்லிட்டு போட்டோம்” என்று அவன் கூறினாலும் பரத்தின் பார்வை கீதாவின் மேல் நிலைத்திருந்தது ரம்யா சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை பரத்.

பரத் ரம்யாவிடம் ” ஏன் உன் பக்கத்துல இருக்கிற மேடம் அவங்க பேரை சொல்ல மாட்டாங்களா” என்று கேட்டான்.

ரம்யா சற்று தயங்கியபடி “அது வந்து அண்ணா, அவ நேம்” என ரம்யா ஆரம்பிக்குமுன் அவளைத் தடுத்தவன்,

“நீ உன் நேம் சொல்லிட்டல, அப்ப அமைதியா இருக்கணும் புரிஞ்சுதா. மேடமே அங்க நேம் சொல்லட்டும்” என்று கூறினான் பரத்.

“உங்க நேம் என்னங்க மேடம் “என்று பரத் கிண்டலாக கேட்க,

அவளோ “ம்ம்.. நயன்தாரா” என்று கூறினாள்.

இதைக் கேட்டவர்கள் சத்தமாக சிரித்து ” மச்சி காமெடி டா. எல்லாரும் சிரிங்க டா” என்றான் கூட்டத்தில் ஒருத்தன்.

இவர்களது சிரிப்பில் எரிச்சலடைந்தவள் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ” டேய் மாங்கா மடையன்களா, நான் யாரு தெரியுமா? என்ன பத்தி தெரியாம கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க” என்று கீதா கத்த. அவளின் சத்தத்தில் தன் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த இரு விழிகள் ஆர்வமாக அவளை நோக்கியது.

ரம்யா தன் தலையில் அடித்துக்கொண்டு “போச்சுடா ஆரம்பிச்சுட்டா. இவள பத்தி தெரியாம இவ கிட்ட போய் வாயை கொடுத்து இவனுங்களை புண்ணாக்கிறார்களே” என ரம்யா அவர்களுக்காக பாவம் பார்த்து புலம்பிக் கொண்டு நின்றாள்.

” அப்படியா மா யாருமா நீ சொல்லு பார்ப்போம்” என்று பரத் அருகில் இருந்த சூர்யா கேட்டான்.

கீதா எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென “நான் ராஜாவுடைய ஆளு” என்று கூற, எல்லோரும் வாயை பிளந்துகொண்டு நின்றனர்.

எல்லோரும் ஒன்றாக வியப்புடன் “என்னது “என்று கேட்க.

” உங்களுக்கு புரியலையா நான் ராஜாவுடைய லவ்வர்” என்றதும் எல்லோரும் பின்னாடி திரும்பி பார்த்தார்கள்.

“ஹலோ அங்க என்ன பின்னாடி பாக்குறீங்க “என்று கீதா சொடக்கு போட்டு கொண்டு கேட்டாள்.

அவர்களும் “ஒன்னும் இல்லமா தாயே நீங்க போங்க “என்றான் சூரியா.

ஆனால் இதைக் கேட்ட பரத்துக்கோ எரிச்சலைத் தந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நின்றான்.

அவர்கள் சொன்னதும் ரம்யாவை அழைத்துக் கொண்டு நடந்து சென்றாலும், பின்னாடி திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தாள் கீதா.

“ரம்யா என்னைய யாரோ குறுகுறுனு பாக்குற மாதிரியே இருக்கு டி”

” ஆமா அங்க இருக்கிற எல்லாரும் உன்னை அப்படிதாண்டி பாக்குறாங்க. அவ்வளவு ஏன் நானும் அப்படித்தான் பார்க்கிறேன். ஒழுங்கா வந்துடு கோவத்தை கிளறாமல்” எரிச்சிலுடன் கூறி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அந்த இரு விழிப்பார்வை தான், தன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப்போகும் என்று அறியாமல் புன்னகையுடன் தன் தோழியுடன் போனால் கீதா.

†*******†********†*”******†*******†

என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமைய டி

எங்கோ தூரத்தில் பாட்டு சத்தம் கேட்டு ஊஞ்சலில் இருந்து கண் விழித்து பார்த்தால் கீதா.

விழிகள் திறக்க முடியாமல் எரிச்சல் தந்தன. சிரமப்பட்டு தன் கண்களைத் திறந்தாள். இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டு பழைய நினைவில் மூழ்கியதால் வந்த எரிச்சல் என்பது நன்றாக அறிந்து மெதுவாக எழுந்து நேரத்தை பார்த்தால், அது ஐந்து மணி என்று காட்டியது.

“இவ்வளவு காலையில் யார் போன் பண்ணி இருப்பா ஒருவேளை அத்தானோ இருக்குமோ. ” மறுபடியும் போன் அடித்தது எடுத்து பார்த்தால் “புதிய நம்பராக இருக்கே யாராயிருக்கும் “என்ற யோசனையுடன் ஆன் செய்தாள்.

” ஹலோ யாருங்க ஹலோ யாருன்னு சொல்லுங்க பேசாம இருந்தா எப்படி எனக்கு தெரியும்” என்று பலமுறை கேட்டும் எதிர்முனையில் யாரும் பேசாமல் இருக்க கடுப்பாகி போன கட் பண்ணிவிட்டாள்.

பின் முகம் அலம்பிக் கொண்டு வீட்டு வேலைகளை செய்தால். காலை டிபன், மதியம் சாப்பாடு. தயாரித்தவள். இரவு சாப்பாட்டை மட்டும் அத்தை செய்ய சொல்லி போராடி சம்மதம் வாங்கினாள்.

அனைத்தையும் கடகடவென்று செய்து முடித்துவிட்டு தன் மாமாவிடம் கூறிவிட்டு ஆபிசுக்கு சென்றாள்.

இன்னும் இன்பராஜா வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு கேபினுக்குள் நுழைந்தால் கீதா. 
இன்னும் அருணும் வரவில்லை என்பதே அவளுக்கு பெரும் நிம்மதி தந்தது.

கன்னத்தில் வீக்கம் இருந்ததால் தன் கூந்தலை முன்னால் போட்டு கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து அருண் வந்தான்.

” ஹாய் குட்மார்னிங் ஏஞ்சல் ” என்று அருண் கூறியதைக் கேட்டு.

எரிச்சலுடன் “என்னை அப்படி கூப்பிடதேனு நேத்தே சொன்னேன்ல” என்று திட்டினாள்.

“சொன்ன தான், ஆனா எனக்கு பிடிச்ச மாதிரி தானே நான் கூப்பிட முடியும் “என்று அருண் கூற.

“இங்கப்பாரு அருண்” என்று அழைக்க. தன் பெயரை முதல்முதலில் அவள் கூப்பிடுவது அவன் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது பிறகு அவள் பேசியது எதுவும் அவன் காதில் விழவேயில்லை.

“அருண் உன்னதான்” என்று கீதா சத்தமாக கத்த. ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த அருண் சட்டென்று கீழே தள்ளியது போல் “என்னாச்சு என்ன ஆச்சு” என்று கேட்டான்.

” என்ன பகல் கனவு போல. போங்க பாஸ் கூப்பிடுறாரு “என்று கீதா கூறினாள்.

” ஓ! சாரி ஏதோ ஒரு யோசனையில் இருந்தேன் “என்று கூறிவிட்டு தன் எதிரில் இருக்கும் அறைக்கு சென்றான் அருண்.

அங்கே இன்பராஜா செம கடுப்பில் அமர்ந்திருந்தான்.

“மே ஐ கமின் சார்” என்று அருண் கதவைத் தட்டிக் கேட்க,

“ம் “என்ற ஒற்றை பதில் மட்டும் கொடுத்தான் ராஜா.

” சொல்லுங்க சார் ” என்று அருண் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு நல்ல பிள்ளை போல் கேட்க.

தன் மடிக் கணினியில் இருந்து நிமிர்ந்து பார்த்தவன் “அவங்க எங்க” என்று கேட்டான்.

“யார் சார் கேக்கறீங்க” அருண் புரியாமல் முழித்தான்.

” அதான் அந்த மிஸ் “என ராஜா சொல்ல வருவதற்குள்”

“ஏஞ்சலா சார் “என்றான் அவசர குடுக்கையாக.

இதைக் கேட்ட ராஜா தன் பல்லை கடித்துக்கொண்டு “வாட் ” என கேட்டான்.

கீதாவின் ஞாபகத்தில் இருந்தவன் ஏஞ்சலா சார் என சொல்லி விட்டதை நினைத்து தன் நாக்கை கடித்துக்கொண்டு தலையில் தட்டி ” சாரி சாரி ஏதோ ஒரு ஞாபகத்தில் இல்லை என்று சொல்ல வந்தவன்”

“சரி விடுங்க அவங்களையும் அழைச்சிட்டு வாங்க என்று சொல்லவும் கீதா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

கீதா அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழையவும் செம கோபத்துடன் கத்த ஆரம்பித்திருந்தான் இன்பராஜா.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம். 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page