அத்தியாயம்:21
நாட்டிய நிகழ்சிகள் இனிதாக ஆரம்பமாகியது…ஒவ்வொரு ஊரில் இருந்து வந்த கலைஞர்களும் தங்கள்…திறமைகள் காட்டி கொண்டு இருந்தார்கள்.
முதலில் டெல்லி அடுத்து பெங்களூர், ஹைதராபாத் அடுத்து தான் சென்னையில்…உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை.. மேடையேற்றி கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு ஊரில் இருந்தும் அவர்களின் ஊரின் பாரம்பரிய நடனம், குழு நடனம்…அடுத்து தனி நடனம் ஆடி காட்ட வேணும் அதில் இருந்து.
ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டு…பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது…முதலில் ஊர்களின் பாரம்பரிய நடனம் தான் இடம் பெற்றது.
வந்திருந்த அனைவருமே தங்கள் ஊர் கலைஞர்களை…உற்சாகமாக கை தட்டி ஊக்கப்படுத்தி கொண்டு இருந்தார்கள்…
சென்னை சார்பாக கலை சங்கத்தின் பாரம்பரிய குழு… தங்கள் நடனத்தை ஆடி மகிழ்வித்து கொண்டு இருந்தது.
பாரம்பரிய நடனம் முடிய அடுத்து குழு நடனம்…இந்த முறை குழு நடனத்தில் சியாமளா நாட்டி பள்ளி தான்…சாரதா தலைமையில் பங்கேற்றது.
தன் மகள் ஆசையாக தொடங்கிய நடனபள்ளியின் மாணவிகள்…ஆடுவதை சக்ரபாணி மனநிறைவாக பார்த்து கொண்டு இருந்தார்.
பவதீப் குரு மூர்த்தி அருகில் நின்றிருந்தவன் ..சிந்தை எல்லாம் அவரை பாதுகாப்பதில் இருந்தது… அவன் பார்வை நான்கு பக்கமும் சுழன்று கொண்டு இருந்தது…
அப்போது பாஸ் என்று அழைத்து கொண்டு.. ராகுல் வந்தான்.
பவதீப் அவனை பார்க்க ராகுல் அவன் காதில் மெல்ல…
“ பாஸ் சம் திங் ராங் ஏதோ தப்பாக தெரிகிறது…இங்கே மக்கள் மட்டுமல்ல அவங்க கூட வேறு கூட்டமும் சேர்ந்து… வந்திருப்பது போல தெரிகிறது செக் பண்ண உங்க பர்மிஷன் வேணும்..” என்றான்.
பவதீப் பார்வை கூட்டத்தை ஒரு தடவை அலசி விட்டு…
“ நோ ராகுல் நான் பர்மிஷன் தந்தால் மக்கள் பயந்து போய் விடுவாங்க…அது மட்டுமல்ல சம் டைம் பாம் ஏதும் மிரட்ட வைத்திருந்தால்… விஷயம் விபரீதமாகி விடும்…
மக்கள் தங்கள் உயிரை காக்க சிதறி ஓடும் போது…கூட்ட நெரிசலில் சிக்கி விபத்துக்கள் ஏற்படும்… இங்கே சின்ன பசங்க, குழந்தைங்க,வயதான ஆளுங்க கூட வந்திருக்கிறாங்க.
அவங்க சிதறி ஓடும் போது நம்மால்… பாம் இருந்தால் கூட டிஸ்போஸ் பண்ண முடியாது இதுவும் உனக்கு தெரியும்…சோ நீ சைலண்ட்டாக விஷயத்தை ஹேண்டில் பண்ண பாரு…ஏதும் என்றால் எனக்கு இன்பார்ம் பண்ணு.
நான் பர்மிஷன் கொடுக்காது கார்ட்ஸை மிஷனில்… இறங்க கூடாது என்று சொல்லி வை நான்… சாரை விட்டு நகர முடியாது…
தர்ஷன், பாப்பா வேறு வந்திருக்கிறாங்க… ஜாக்கிரதையாக இருக்க வேணும்…” என்றான்.
அதைய நேரம் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரூம்மில்…மேக்கப் போடுவது போல சிலர் ஹிந்தியில் பேசி கொண்டு இருந்தார்கள்…
“ பாடி பய்யா இந்த மிஷனை நம்ம சக்ஸாக்க வேணும்…அப்போ தான் நம்ம இயக்கத்தின் மேலே ஒரு பயம் வரும் இந்திய கவர்மெண்ட்க்கு….
நம்ம லக் சி.எம் மட்டுமல்ல எதிர்கட்சி தலைவர், மினிஸ்டர் ராகவன்… எல்லாம் வந்திருக்கிறாங்க.
சி.எம் தன் குடும்பத்தோடு வந்திருக்கிறார்…அவர் பேத்தி தான் நாட்டிய தாரகை மயூரிகா கலை பொக்கிஷம்…சோ நம்ம வந்த வேலை ஈஸியாக முடியும் என்று நினைக்கிறேன்…” என்றான்…
பெரிய அண்ணன் என்று முன்னவனால் அழைக்கப்பட்டவன்.
“ மஸ்தி நீ நமக்கு சாதகமான விஷயங்களை மட்டும் பேசுகிறாய்…ஆனால் நம்ம ஒரு கொள்கைக்காக போராடும் வீர்கள்…எல்லா விஷயத்தையும் பார்க்க வேணும்.
நீ ஒன்றை மறந்து விட்ட போல முதல்வரின் பர்ஷனல் பாடி கார்ட் யாரென்று…மேஜர் பவதீப் ரவீந்திரன் காஷ்மீர் வாரில் நம்ம ஆளுங்களை… கொன்று குவித்து மிஷனில் வெற்றி பெற்றவன்.
அவன் பிளான் போட்டு மிஷனில் இறங்கினால்….அது வெற்றி தான் அடுத்து ராகுல் இவன் பவதீப்பின் வலது கை…
இருவரையும் தான் பிக் மிஷனுக்கு ஒன்றாக… இந்திய கவர்மெண்ட் அனுப்பும்…பெஸ்ட் டீம் வொர்க் பவதீப்போடது.
நம்ம இருபது பேர் தான் வந்திருக்கிறோம்…இங்கே சி.எம் பாதுகாப்புக்கு என நிற்பவர்கள் முப்பதற்க்கு மேலே…சோ நம்ம பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட வேணும்…” என்றான்.
மஸ்தி “ பாடி பய்யா அப்போ நம்ம சி.எம் பேர பசங்களை தூக்கலாமா..? அவங்க சின்ன பசங்க ஈஸியாக வேலை முடிந்து விடும்.
பையனுக்கு ஆறு வயது…பெண்ணுக்கு மூன்று வயது நம்ம கிட்நாப் பண்ண ஈஸியாக இருக்கும்…”என்றான்.
பாடி பய்யா யோசித்தவன் பின் மஸ்தியை பார்த்தவன்…
“ கிட்நாப் செய்ய அவங்களை விட இன்னும் ஒருவர் இருக்கிறார்…இவங்களை விட அவரை கடத்துவதால் நமக்கு நன்மைகள் பலது இருக்கு…யாரு தெரியுமா.? சி.எம்மின் மகன் வழி பேத்தி நாட்டிய தாரகை மயூரிகா.
அவள் தாய் வழி தாத்தா தான் மல்ட்டி மில்லியனர் மிஸ்டர் சக்ரபாணி…கோடிகணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு அவள் இன்னும் ஒன்று… அவள் ஒரு கலை பொக்கிஷம்…
இந்தியா சார்பாக அவள் தான் பரத நாட்டியத்தில்… கலந்து கொள்ள பல நாடுகளுக்கு போகிறவள்.
இந்திய நாட்டியன் கலை பொக்கிஷம் அவள்…நமக்கு பணமும் தேவை அவளை கடத்தினால்… அவள் தாத்தா கிட்ட இருந்து கோடி கணக்கில் இருந்து பணம் வாங்கலாம்…
அது போல அவளை வைத்து இந்திய கவர்மெண்ட் கிட்ட… நம்ம கோரிக்கைகையை வைக்கலாம்…சின்ன குழந்தைங்களை விட இவளை நம்ம கிட்நாப்.. செய்வதால் லாபம் நிறைய இருக்கு.
இவள் வயசு பெண்ணு வேறு அதனால் மிஸ்டர் சக்ரபாணி, சி.எம் சாப்…இவளை நம்ம கிட்ட இருந்து மீட்க விரைவாக ஆக்சன் எடுப்பாங்க…இல்லை என்றால் அவங்க பெண்ணு மானம் கேள்விக்குறியாகி விடும் என்ற பயம்.
அவங்களுக்கு தெரியாத ஒன்று நம்ம தீவிரவாதிகள் தான்…நம்ம கொள்கையில் மட்டும்.
பாம் வைப்போம்,ஆளுங்களை கடத்துவோம்..ஆனால் பெண்ணுங்க போதை நமக்கு இல்லை.
அது எல்லாம் வெள்ளை வேட்டியில் உலாவும்…பெரிய மனிதர்களிடம் தான் அதிகமாக இருக்கு….சரி அந்த லடுக்கி (பெண்ணு) எங்கே இருக்கு..? மேக்கப் போட வரும் தானே அப்போ… அவளை கடத்த வேணும் ரெடியாக இரு.
முதலில் அவள் கழுத்தில் கத்தி வைத்து மக்கள் முன்னால் நிறுத்த வேணும்…அவங்க முன்னே வைத்து நம்ம கோரிக்கையை கேட்டால் தான் நிறைவேறும்…
இல்லை என்றால் கவர்மெண்ட் நம்மை… மொத்தமாக போட்டு தள்ள உத்தரவு போட்டு விடும்.
முதலில் நம்ம போட்ட தள்ள வருவான் பவதீப்…அவனுக்கு மிஷன் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல…அவனை லாக் பண்ண முடியாத நிலை அவனுக்கு குடும்பமும் இல்லை…அடுத்து காதலும் இல்லை.
மக்களுக்கும் நம்ம இயக்கத்தை பற்றி கேட்டால் ஒரு பயம் இருக்கும்…எலக்சன் வேறு வருகிறது கவர்மெண்ட்டை கிழி கிழியென கிழித்து… தோரணமாக தொங்க விடுவாங்க…
சி.எம் பேத்திக்கே பாதுகாப்பு இல்லை அவளை பாதுகாக்க துப்பு இல்லாத அரசாங்கம்…இந்த எலக்சனில் ஜெயித்தா நம்மை பாதுகாக்க போகிறது என்று பேச தொடங்கி விடுவாங்க..
அந்த பேச்சை ஆளும் கட்சி வளர விடாது தவிர்க்க… நம்ம கோரிக்கையை நிறைவேற்ற… உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
அந்த சக்ரபாணி கிட்ட நம்ம கேட்க போகும் தொகை ஐம்பது கோடி…கூடவே நம்மளும் நம்ம ஆளுங்களும் நம்ம இடத்துக்கு பாதுகாப்பாக போக…ஒரு ஹெலிகாப்டர் தர சொல்லி கேட்க போகிறேன்.
நாங்க பாதுகாப்பாக தரையிறங்கிய உடனே…உங்க பேத்தியை காஷ்மீ்ர் பார்டரில் வந்து மீட்டு போங்கள்…என்று சொல்வேன் அனேகமாக பவதீப் அவன் டீம்மை தான் அவளை மீட்டு வர சொல்லி கவர்மெண்ட் அனுப்பும்.
சி.எம் கூட அதை தான் விரும்புவார்…அப்படி வரும் அவனை நம்ம பதுங்கி இருந்து மொத்தமாக போட்டு தள்ள வேணும்…
அப்போ தான் நம்ம நண்பர்கள் இறந்ததற்க்கு… பழி வாங்கிய திருப்தி நமக்கு இருக்கும்.
அவன் தானே எங்களில் பாதி பேரை அழித்தது…அப்படி வரும் ராணுவத்தை போட்டு தள்ளினால் தான்…இனி எந்த ராணுவமும், ராணுவ வீரனும் நம்ம இயக்கத்தின் மேலே கை வைக்க பயப்படுவாங்க…இது தான் என் மொத்த பிளானும்…” என்றான்.
மஸ்தி “ பாடி பய்யா அந்த மினிஸ்டர் ராகவனின் மூத்த பெண்ணு தான்…நம்ம சி.எம் பேத்தி அதனால் நம்ம அவன் கிட்ட கொஞ்சம் பணம் கேட்கலாமா..?
அவன் மச்சான் அந்த பாண்டி ஏதோ கிரிமினல்… வேலை எல்லாம் செய்து பணம் நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறான்.
காசிப் பய்யா இன்னொரு ஐடியா ராகவனுக்கு இன்னொரு பெண்ணு இருக்கு…அந்த பெண்ணையும் சேர்த்து கடத்தினால் பணம் நிறைய கிடைக்கும்…
அதை விட சி.எம் பெண்ணு அது பெயர் கூட ஆ’ புவனா….அதையும் சேர்ந்து நம்ம கடத்தினால் என்ன..? அது வேறு தனியாக கம்பெனி எல்லாம் வைத்து நடத்துகிறது…” என்றான்.
அவனை கோபமாக பார்த்தவன் காசிப்…
“அரே உனக்கு அறிவு இருக்கா டா..? இந்த பெண்ணை கடத்துவதே நமக்கு ரிஸ்க்…இதில் இன்னும் இரண்டு பெண்ணுங்களா..? அந்த ராகவனின் இரண்டாவது பெண்ணுக்கு… இந்த விலை எல்லாம் அரசாங்கம் கொடுக்காது டா…
அதை விட ராகவனிடம் சக்ரபாணி போல பெரிதாக பணம் இல்லை…அது தான் அவன் பெரியப்பா சி.எம் கூட அவன் கிட்ட கண்டிப்பாக தான் நடந்து கொள்வார்…பாண்டி தங்கச்சி தானே ராகவனின் இரண்டாவது மனைவி.
அவளுக்கும் அவள் பெண்ணுக்கும் பெரிதாக மதிப்பு இல்லை…அவள் மேலே சக்ரபாணி, சி.எம் கோபத்தில் இருக்கிறாங்க…தங்க பெண்ணு சாவுக்கு காரணம் அவள் தான் என்று.
ராகவன் இவளுக்கா தான் தன் முதல் மனைவியை… போட்டு தள்ளினான் என்று நம்மை விட பாண்டி, ராகவன் பெரும் கேடிங்க…
அந்த புவனாவை தூக்க நினைத்தால்… பவதீப் நம்மை முதல் வேலையாக அந்த இடத்தில்… போட்டு தள்ளி விடுவான்.
அந்த பெண்ணுக்கு கல்யாணமாகி குழந்தைங்க வேறு இருக்கு…கல்யாணமாகாத பெண்ணை தூக்கினால் தான் அவள் கற்பு போய் விடும் என்று… பயந்து நம்ம கேட்பதை விட அதிகமாக கொடுப்பாங்க.
நம்ம கொள்கை என்ன..? ஒரு தாயை எக் காரணமும்… கொண்டு பணய கைதியாக்க கூடாது என்பது தானே.
நம்ம ஒரு கொள்கையோடு செயற்படும் ஆளுங்க…அதை முதலில் மறந்து விட கூடாது புரிகிறதா..?
திகார் ஜெயிலில் உள்ள நம்ம தோழர்கள் ஆறு பேரையும் மீட்பது தான்…நமக்கு தலைமை இட்டு இருக்கும் கட்டளை.
அதற்கு சரியான பிளான் போட்டு சரியான நபரை தூக்க வேணும்…நான் சொன்னதை மட்டும் செய் அந்த மயூரி பெண்ணை தவிர… வேறு யாருமே இங்கே வராது பார்த்து கொள்ளு…” என்றான்.
மயில் ஆடி வரும்…
