இதயம்! – 03

இதயம்!

துடிப்பு – 03

செவியை நிறைத்த இதயவோசையில் பயந்து போய், விழிகள் மிரள நின்றிருந்தவளைக் கண்டு கோணலாய் இதழ் வளைத்தான்,சதீஷ்.

அவனுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு இவள் மீது.நாளொரு மங்கையுடன் பொழுதை கழிப்பவன் தான் என்ற போதிலும்,தன்னை கொஞ்சமும் கவனியாமல் தன்னிடம் இருந்து விலக மட்டும முயலும்,இந்த பெண்மை அவனின் கவனத்தை திருப்பியிருந்தது என்னவோ உண்மை.

“என்ன பொண்ணு..? என்ன பாத்து இப்டி பயப்பட்ற..கட்டிக்கப் போறவன் தான..” முழு போதையிலும் தெளிவாகப் பேசினான்.குடித்தே பழகி விட்டவனுக்கு,இது கை வந்த கலை.

அவளுக்கோ,அவனின் வார்த்தைகளில் அப்படியொரு எரிச்சல்.”நாசமாப் போறவன்..நீ லாரில அடி பட்டு சாவ டா நாயே..” மனதால் நினைத்தவளுக்கு,அதீத பயத்தில் நா உலர்ந்திருந்தது.

“என்னம்மா பேச்சயே காணோம்..?” தன்னை அளவிடும் அவன் பார்வையில் வினவியளுக்கு,அவனைக் கொன்று விட்டு தான் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணம் அந்த நொடி மின்னி மறைந்திட,மெது மெதுவாய் பின்னகர்ந்தன,அவள் பாதங்கள்.

அவளின் செயலில் மேலும் இதழ் வளைத்த சதீஷோ,ஒற்றைக் கரம் நீட்டி அவளைத் தொட,சட்டென தலையை இழுத்துக் கொண்டவளுக்கு,சத்தியமாய் அந்நிமிடம் உடைந்து கதறத் தோன்றியது என்னவோ மறுக்க இயலாது.

“என்னடி ரொம்ப ஓவரா பண்ற..?” திடீரென, மூர்க்கம் பிடித்தவன் போல்,அவன் முன்னே வர அவளுக்கோ செய்வதறியாத நிலை.

வேக மூச்சு வாங்க,அவள் குளியலறைக்குள் நுழையப் பார்த்திடவும், கதவைத் திறந்தவாறு கணேஷ்வரி உள்ளே வரவும் சரியாய் இருக்க,மகனின் செயலில் கொந்தளித்துப் போனார்,அவனைப் பெற்றவர்.

“இங்க என்னடா பண்ற..?” கோபம் வெடிக்க கேட்டவருக்கு,ஏதோ ஒரு சந்தேகத்தில் அவளின் அறைக்கு வந்தது நன்று எனவே,எண்ண முடிந்தது.

“கட்டிக்கப் போறவ தான..அவள பாக்க வந்தேன்..” விட்டேற்றியாய் அவன் பதில் சொல்ல,அதை நம்புவரா அவர்..?

தாய் அறியா சூல் ஏது..?

“கல்யாணம் சாந்தி முகூர்த்தம் ரெண்டு ஜோசியக்காரர் குறிச்சு தந்த நேரத்துல நடந்தா தான் நம்மளோட வம்சம் வளமா தழக்கும்..அதுக்கு முன்னாடி மருமக கிட்ட வாலாட்டுன உன்ன கொன்னு பொதச்சுருவேன்..” விரல் நீட்டி எச்சரித்தவரோ,எரிக்கும் பார்வையுடன் மகனை வெளியே அனுப்ப,போகும் போது அவளை ஒரு முறை அளவிட்டு விட்டே வெளியேறினான்,சதீஷ்.

கணேஷ்வரியின் கூற்றில் ஒரு கணம் திகைத்தவளுக்கு,அதன் மறைபொருள் புரிய,நெஞ்சில் இனம் புரியா பயம்.

அவரோ,மிரண்டு போய் நின்றிருந்தவளின் தலையைத் தடவிட,அதை ஏற்க முடியாத போதிலும்,மறுக்கும் தைரியம் அவளுக்கு இல்லை;இருந்ததும் இல்லை.

“நாளக்கி அவன் கூட என்ன பார்டிக்கு அனுப்பி வக்க மாட்டேன் மா..பயப்டாம போய் தூங்கு..” நல்லவர் உரைத்து விட்டவருக்கு,அவளின் மீதெல்லாம் அக்கறை என்றால்,அது நூற்றுக்கு நூறு சதவீதமான பொய்.

மகனின் மீது நம்பிக்கை இல்லை,அவருக்கு.அதுவும் தற்சமயம் நடந்தேறியதை கண்ட பின்னர்,மகன் ஏதேனும் ஏடாகூடமாய் செய்து விடக் கூடும் என வெகுவாய் பயந்தார்,அவர்.

அவளுக்கோ,நாளை அவனுடன் செல்லத் தேவையில்லை என்பது அப்போதைக்கு போதுமானதாய்.

                  ●●●●●●

அந்தி சாயும் பொழுது அது.

வடக்கே ஒளி தரும் விண்மீன் மறைவதற்கு சான்றாய்,இள மஞ்சள் நிறம் முழுவதையும் வானம் பூசியிருக்க,அதை மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு வெறித்துப் பார்த்திருந்தாள், அக்ஷதி!

இடை வரை நீண்ட கூந்தல்,காற்றின் தயவுக்கேற்ப அங்குமிங்கும் அசைந்தாடிக் கொண்டிருக்க,நுதலை மோதிய சிகைக் கற்றைகள்,அவளுக்கு மேலும் அழகு சேர்த்திட,பால் நிற மங்கைஅவளிள் அழகு அந்த மஞ்சள் வெயிலில், ஆர்ப்பட்டமாய் தெரிந்தது.

அதுவும்,முகத்தில் ஒட்டிக் கொள்ளும் மயிரிழைக் கற்றைகளை,அவள் ஒதுங்கி விடும் பாங்கு,ஏனோ இரசிக்கத் தூண்டுவதாய்.

“அக்ஷு..” அழைத்தவாறு,அவள் நின்றிருந்த இடமான மொட்டை மாடிக்கு வந்தான்,விஷ்வின்.

அக்ஷிதாவின்,தந்தை வழி சிறிய தந்தையின்,மகன் அவன்.உடன் பிறவா சகோதரன் என்பதே,சாலப் பொருந்தும்.

“ம்ம்..என்ன விஷ்..?”

“எதுக்கு ஷ்யாமோட ப்ரபோஸல வேணாம்னு சொன்ன..?”

“ஏன்னு உனக்கு தெரியாதா..?” எல்லாம் தெரிந்தும்,தன்னிடம் வந்து கேள்வி கேட்பவனின் மீது அவ்வளவு கோபம் வந்தது,அவனுக்கு.

“திருந்த மாட்டியா அக்ஷு..? நீ பண்ற வேல உன் லைஃப தான் நாசம் பண்ணிகிட்டு இருக்கு..” அழுத்தம் திருத்தமாய் உரைத்தவனுக்கு,தங்கையின் நிலையை எண்ணுகையில் அத்தனை ஆதங்கம்.

“என்ன பண்ண சொல்ற விஷ்..? மனசுல ஒருத்தன் இருக்க,இன்னொருத்தன் கூட லைஃப வாழ சொல்றியா..?” அவளின் கேள்வியில் அவனுக்கு கோபம்.

“அவன உன் மனசுல இருந்து தூக்கி போடுன்னு சொல்றேன்..ஏன்னா அவன் மனசுல உனக்கு எடம் இல்ல..அப்டி இருக்கும் போது,அவன் பின்னாடி சுத்தி அவனயும் டார்ச்சர் பண்ணிகிட்டு உன் லைஃபயும் ஸ்பாயில் பண்ணிகிட்டு இருக்குறது முட்டாள்தனம் அக்ஷு..”

“ஸோ நீ எனக்காக வர்ல..உன் ஃப்ரெண்டுக்காக தான் பேச வந்திருக்க ரைட்..?” சினத்துடன் சீறியவளை இயலாமையுடன் பார்த்தான்,அவன்.

என்ன சொல்லியும் அவளுக்கு புரியாது என்றிருந்தாலும் பரவாயில்லை.புரிந்து கொள்ள மாட்டேன் என அடம் பிடிப்பவளை,எப்படி தான் வழிக்கு கொண்டு வர முடியும்.?

ஆழ மூச்சிழுத்து தன்னை சமப்படுத்திக் கொண்டவனோ,விடுவிடுவென கீழிறங்கிச் செல்ல,அவனை கோபத்துடன் சுட்டது,அவள் பார்வை.

அதன் பின்னர் தாயார் அழைத்திடும் சத்தம் கேட்டிட,பத்தே நிமிடங்களில் தேவதையென, தயாராகி வந்திருந்தாள்.

தயாராகி வந்த மகளை அழைத்துக் கொண்டு வந்து கணவனுடன் சேர்ந்தார்,விஹானா.

சாத்வேத் – விஹானா தம்பதியினரின் ஒற்றை மகளே,அக்ஷதி.

அபிஷேக்குக்கு,நான்கு வருடம் கழித்து பிறந்தவள்.

அடுத்த சில நிமிடங்களில் முழுப் பாதுகாப்பு சகிதம்,மூவரும் அந்த பிரம்மாண்ட விழா மண்டபத்துக்கு கிளம்பிச் செல்ல,வாயிலில் நின்றிருந்த பிரதம மந்திரியோ புன்னகை நிரம்பி வழிய வரவேற்றார்,மூவரையும்.

நாட்டின் பிரதம மந்திரியின் மகளின் திருமண விழாவில்,கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்,சாத்வேதும் அவரின் குடும்பத்தினரும்.

முன்பிருந்தே,அபிஷேக்கின் உடல் நலன் பற்றிய தகவல்கள் அத்தனை இரகசியமாய் பேணப்பட்டு வந்திருக்க,இப்போதும் அதை அப்படியே பேணிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.

எதிரி நாடுகள்,தாக்குதலுக்கு நேரம் பார்த்து தவமிருக்க,மகனின் நிலை தெரிந்தால்,அது இன்னும் வசதியாகிப் போய் விடக் கூடும் என பயந்தார்,சாத்வேத்.

இன்று வரை,முக்கிய வட்டத்தை தவிர யாருக்கும் அபிஷேக்கின் நிலை தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.அவன் வேறு நாட்டில் இருப்பதாய்,மக்களையும் தனது அரசியல் வட்டத்தில் அநேகமானவர்களையும் நம்ப வைத்து கண் துடைப்பு செய்திருந்தனர்,சாத்வேதும் அவ்னித்தும்.

அவ்னித்தோ,சாத்வேதை விட்டு சில அடிகள் தள்ளி சுற்றத்தை கண்காணித்தவாறு நடந்திட வந்திட,அவரின் கம்பீரமும் ஆளுமையும் துளியும் மாறாமல் அப்படியே இருப்பது ஒன்றும் வியப்பதற்குரிய விடயம் அல்ல.

இருபத்தியேழு வயதில்,அவருக்கு மகன் இருக்கின்றான் என்று அடித்துச் சத்தியம் செய்தாலும்,அவரின் தோற்றத்தை பார்ப்பின் நம்ப மாட்டார்கள்,எவரும்.

“செக்யூரிடி எல்லாம் ஓகே தான..? எனி இஷ்யூஸ்..?” தன் உதவியாளனிடம் அவ்னித் கேட்க,மறுப்பாய் தலையசைத்தவனின் கூற்றை அவ்வளவாய் நம்பவில்லை,அவர்.

விழிகள் கூர்மையான பார்வையுடன்,அங்குமிங்கும் சுழன்ற வண்ணமே இருந்தன.

வெள்ளை நிற கவுன் தரையை உரச,நடந்து வந்த அக்ஷதியின் விழிகளோ,ஒருவனைத் தேட,அவளின் தேடலுக்கு சொந்தக்காரன் அவ்விடம் இல்லையோ எனவே,தோன்றிற்று அவளுக்கு.

எப்படியும் அவன் வந்திருப்பான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காகத் தான்,அவள் அந்த நிகழ்வில் கலந்து கொள்வது.இல்லையென்றால்,என்ன நடந்திருப்பினும் வந்திருக்க மாட்டாள் என்பது சர்வ நிச்சயம்.

அவள் அவனைத் தேட,அவனுக்கு பதிலாய் தரிசனம் தந்தனர்,விஷ்வின்னும் அமிதேஷும்.அமிதேஷின் புருவங்களோ,அவளின் விழிகளின் சுழற்சியைக் கண்டு ஏறி இறங்க,விஷ்வின்னோ தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக ஏதோ முணுமுணுத்தான்.

“இவ திருந்த மாட்டா அமி..அவன் கிட்ட கன்னம் பழுக்க வாங்கி கிட்டா தான் இவளுக்கு புத்தி வரும்..”

“ம்ம்..அதான் நடக்கப் போவுது..”

“ஆமா நெஜமாலுமே அவனுக்கு ஏன் இவ மேல எந்த ஃபீலிங்கஸும் வர மாட்டேங்குது..எந்த பொண்ண கண்டாலும் பத்தடி தள்ளி நிக்கறது ஓகே..ஆனா எப்புர்ரா தன்ன தொரத்தி தொரத்தி லவ் பண்ற ஒருத்திய கொஞ்சமும் கண்டுக்காம அவனால இருக்க முடிது..? மனுஷனா அவன்..?”

“அவன் தான் கல் நெஞ்சக்காரன் ஆச்சே..அவனுக்காச்சும் ஃபீலிங்ஸ் வர்ரதாச்சும்..” முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவளை பார்த்தவாறு அவன் கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே,திடுமென அவ்விடத்தில் பரபரப்பு.

கையில் துப்பாக்கியுடன் காவல் உடை அணிந்திருந்த ஒருவன்,சாத்வேதை தாக்க வர,நொடியில் சுதாரித்த அவ்னித்,சாத்வேதை காப்பாற்றி இருந்த போதிலும்,துப்பாக்கிக் குண்டுச் சத்தமே,அவ்விடத்தை அல்லோலப்பட வைத்தது.

கூட்டம் விசிறியோட,அவ்னித்தும் அவனின் பாதுகாவல் குழுவினரும் சாத்வேதையும் அவரின் குடும்பத்தையும் பத்திரமாய் காரில் ஏற்ற முயன்றவாறு அழைத்து வரும் வழியில்,மீளவும் ஒரு துப்பாக்கிப் பிரயோகம்.

பாய்ந்து வந்த தோட்டா,ஒருவனின் தோற்பட்டையை உரசிச் செல்ல,இன்னும் கவனமாகியவர்கள்,அவர்களை அழைத்துச் செல்ல முனைந்திட்ட, சற்றுத் தள்ளி தீப்பற்றிக் கொள்ள அவ்விடத்தில் இருந்தவர்களின் கத்தலில்,கலைந்த சாத்வேதோ,அவ்னித்தை அவர்களை காக்கச் சோல்லி அனுப்பி வைத்திட,அரை மனதுடன் அவர் நகர்ந்திட்டார்,சாத்வேதின் தொடரான வற்புறுத்தலில்.

அதன் பின்,அவ்னித்தின் ஆட்கள் அவருக்கு பாதுகாப்பாய் சுற்றியிருந்த போதிலும்,எங்கிருந்தோ வந்த துப்பாக்கித் தோட்டாக்கள்,அவர்களை பதம் பார்த்திட,அவர்களின் கவனம் சிதறிற்று.

அக்ஷதியும் விஹானாவும் பயத்தில் குளித்திருக்க,இருவர் மட்டுமே இப்போது அவர்கள் மூவருக்கும் அரணாய்.

அதிலும் ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட,சாத்வேதுக்கு தன் குடும்பத்தை காக்க வேண்டிய நிர்ப்பந்தம்.கீழே விழுந்தவனின் துப்பாக்கியை கையில் எடுத்தவரோ,தன்னை மறந்து கட்டியவளையும் பெற்றவளையும் காக்க முன் வர,அங்கு ஒருவன் அவரைப் பார்த்து துப்பாக்கியை குறி வைத்திருந்தான்.

“கெட் இன்..” காரின் அருகே வந்து மகளையும் மனைவியையும் ஏறிக் கொள்ளச் சொன்னவரோ,முன்னே ஏறிக் கொள்ள முயன்ற வேளை,தோட்டாவொன்று அவரை நோக்கி பாய்ந்து வர,”டேடி” என அலறி கண்களை இறுகப் பொத்தி இருந்தாள்,அக்ஷதி.

சாத்வேதும் நிச்சயம் தன்னை தோட்டா துளைக்கும் என எதிர்ப்பார்த்திருக்க,அதற்குள் ஒரு வலிய கரம் அவரை தன் புறம் இழுத்து விட்டிருக்க,தோட்டாவோ திறந்திருந்த கதவு வழியே,காரின் முன்னிருக்கையில் உள்ளிறங்கியது.

“ஆஜு..” அவரிதழ்கள் உச்சரித்திட,அதை எல்லாம் உணரும் நிலையில் இல்லை,அவன்.

விழிகளில் தீவிரம் தளும்பி வழிய,சுற்றத்தை ஆராய்ந்தவனோ,பேன்டின் பின் பக்க பாக்கெட்டில் சொருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்திருந்தான்.

“கெட் இன் சார்..” அவரை மறைத்தவாறு அவன் கூறிட,கழுகுக் கண்களோ,அதி தீவிரமாய் அவ்விடத்தை அலசலிட்டன.

“ஆஜு நீ..” அவர் ஏதோ கூற வர,”கெட் இன் சார்..” மீண்டும் அழுத்தி உச்சரித்தவனோ,அவரை காருக்குள் தள்ளி ஏற்றி விட்டு,பக்கத்தில் இருந்த அவ்னித்தின் உதவியாளனிடம் ஓட்டுனர் இருக்கையில் ஏறிக் கொள்ளச் சொல்ல,மறுக்காமல் ஏறிக் கொண்டான்,அவனும்.

அந்த சொற்ப வினாடிகளில் நான்கைந்து பேர்,சாத்வேதை குறி வைத்திருக்க,வெறி கொண்ட வேங்கையாய் அவர்கள் அனைவரையும் சுட்டு தன் துப்பாக்கிக்கு இரையாக்கியிருந்தான்,அரிமாவவன்.

மின்னல் வேகத்தில் சுழன்றவனாய், எதிரிகளை அவன் போட்டுத் தாக்கிட,ஏனோ அது ஒரு போர்த் தளபதியையே நினைவூட்டியது.

கூரிய கண்களில் கூர்மையும் தீர்க்கமும் நிரம்பி வழிய துணிச்சல் தீயாய் எரிய,வேகமும் விவேகமும் கலந்தடிக்க,சடசடவென அவன் ஆட்களை சுட்டு வீழ்த்தித் தள்ள,அவ்னித்துமே ஒரு கணம் வியந்து போனார்,மகனின் சாதுர்யத்தில்.

சாத்வேத் ஏறிய வண்டியை,பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு தந்தையின் அருகில் வந்திட,அடுத்த சில நிமிடங்களில் சாத்வேதை தாக்க வந்த அனைவரையும் கூண்டோடு பிடித்திருந்தனர்,அரிமாவவனும் அவனின் தோழர்களும்.

“விஷ்வின் நீ அப்பா கூட போ..நானும் அமித்தும் இவனுங்கள கூட்டிகிட்டு வர்ரோம்..” என்க,சரியென்பதாய் தலையசைத்தான்,தோழன்.

அன்றிரவு,

பிரஜினை நாளை மறுதினம் சந்திக்க வருவதாய் அழைப்பில் தெரிவித்து விட்டு,தனது மாளிகையில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக,அறைக்குள் நுழைந்தார்,சாத்வேத்.

இன்று நடந்த கலவரத்தின் பிண்ணனியைப் பற்றி அடி முதல் நுனி வரை அலசி ஆராய்ந்திட வேண்டி இருந்தது.

அவரின் பிரத்தியேக அறையில் தான் இருந்தனர்,அவ்னித்தும் நாட்டின் பாதுகாப்புப் படையின் தலைமையதிகாரி ஆரிவ்வும்.

அவர் உள் நுழைகையில் இருவரும் எழுந்து கொள்ள,அவர்களை அமருமாறு பணித்து விட்டு முன்னே வந்து அமர்ந்தவரோ,எதுவும் கேட்காத போதிலும் அவரின் விழிகளில் இருந்த செய்தி,புரியாமல் இல்லை முன்னிலையில் இருந்தவர்களுக்கு.

“சார் இது நம்ம ஒப்போசிட் பார்டியோட சதி தான் சார்..அவங்க தான் பார்டர்ல இருக்குற வில்லேஜ் மக்கள போய் சந்திச்சு உங்களுக்கு எதிரா திருப்பி விட்டிருக்காங்க..போன வருஷம் உங்களுக்கு குறி வச்ச பாம்ல அவங்க வில்லேஜ் அட்டாக் ஆனத தப்பா திரிச்சு சொல்லி இப்டி பண்ண வச்சு இருக்காங்க..”

“அவங்க மட்டுமா இல்லன்னா..?”

“அவங்க மட்டும் இல்ல சார்..நம்ம பக்கத்துல இருக்குற மூணு நாட்டு தலைவருங்களும் அவங்க கூட கூட்டு சேந்து தான் இத பண்ணி இருக்காங்க..” 

அவர்கள் கூறுவதை கேட்டவருக்கோ,இதன் அடித்தளம் யாரென்று தெரியாத நிலை தான்.

“இவ்ளோ நாள் நம்மளோட விசுவாசமா இருந்த இந்த மூணு நாடும் திடீர்னு எதுக்காக நம்மளுக்கு எதிரா திரும்பனும் அவ்னித்..?”

“அதத் தான் நாம தேடிகிட்டு இருக்கோம் சார்..அதுக்கு தான் நாம புதுசா ஒரு ஸ்பை டீம உருவாக்கி,அந்த மூணு நாட்டுக்கும் அனுப்பலாம்னு இருக்கோம்..”

“ம்ம்..இன்னும் வன் மன்த்குள்ள எக்ஸாக்ட் ரீசன் எனக்கு தெரிஞ்சாகனும்..” கட்டளை விதித்திட,அவ்னித்தின் மனம் மகனிடமே இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முன் வந்தது.

“சார் ஆஜு கிட்டவே இந்த..” என அவர் இழுக்க,கண்டனத்துடன் முறைத்தார்,சாத்வேத்.

“ஆஜு ஒரு ஸ்பேஸ் சைன்டிஸ்ட் ங்குறத அடிக்கடி மறந்து போறீங்க அவ்னித்…” எச்சரிக்கையாய் கூறியவருக்கு,அவனை மீளவும் இப்படி துப்பறியும் வேலைகளுக்கு அனுப்ப மனமில்லை.

அவர்கள் மூவரும் கலந்துரையாடுகையில்,அழுத்தமான பாதச்சத்தங்கள் செவியை தீண்ட,திரும்பி பாராமலே அது யாரென,சரியாகக் கணித்தார்,சாத்வேத்.

அவன் தான்!

அவனே தான்!

ஆறடி உயரத்தில்,அடர் கேசம் நடைக்கேற்ப அசைந்தாடி நுதலுரச,இடக்கரம் கொண்டு அதை பின்னே தள்ளி சிரசை பக்கமாய் மெல்ல குலுக்கியவனின் விரல்களோ,தன்னிச்சையாய் பக்கக் கழுத்தை வருடி விட்டு,ஷர்ட்டின் காலரை சிறிதே இழுத்து விட்டுக் கொள்ள,அவனின் நடையிலும் தோற்றத்திலும் பாவனையிலும் அப்படி ஒரு கம்பீரம்.

தடித்த கற்றை மீசை மேலிதழின் மேல்,அடர்ந்து படர்ந்திருக்க,இறுகியை தாடையில் மென் புதராய் தாடி பரவியிருந்தது.

ஹேசல் நிற கண்மணிகள் தனி வித அழகென்றால்,நீண்ட இமை முடிகளும் அடர்த்தியான கருமை நிற புருவங்களும்,அவனின் விழிகளை மேலும் கவனிக்க வைப்பது போல்.

“வா ஆஜு..” அவன் அனுமதி கேட்கும் முன்னமே,சாத்வேத் அழைத்திட,உள் நுழைந்தவனின் பின்னூடு தொடர்ந்தான்,அமிதேஷும்.

அமிதேஷ்,நாட்டின் உளவுத் துறையின் தலைமையதிகாரி.

“என்ன ரெண்டு பேரும் ஜோடியா வந்து இருக்கீங்க..?” ஏதேனும் முக்கியமான விடயமாக இருக்கக் கூடும் என்பதே,முவரினதும் எண்ணம்.

“நம்மளோட இந்த அஞ்சு நாட்டுல மூணு நாடு இப்போ நமக்கு எதிரா திரும்பி இருக்கு..”

“ம்ம் அவ்னித்தும் இப்போ அதத் தான் சொல்லி கிட்டு இருந்தாரு..என்ன காரணம்னு கண்டு பிடிக்கனும்..அதுக்கு தான் ஒரு மாசம் டைம் கொடுத்து இருக்கேன்..” 

“கண்டு பிடிச்சாச்சு சார்..” ஆளுமையாய் வெளிவந்தன,அவனின் வார்த்தைகள்.

“வாட்ட்ட்ட்..? என்ன ரீசன்..?” கேள்வித் தொடுத்த,ஆரிவ்வின் புருவங்கள் இடுங்கின.

“ஆஜு ஆர் யு சீரியஸ்..?”

“எஸ் சார்ர்ர்ர்ர்..”

“சரி என்ன ரீசன்னு சொல்லு..” அவ்வளவு எளிதாய் நம்ப முடியவில்லை,அவர்களால்.

“காஷ்யப்ப்ப்ப்ப்..” அவன் அழுத்தி உச்சரித்திட,அந்த பெயரைக் கேட்டதும் சாத்வேதின் இதயம் நின்று துடித்தது.

துடிக்கும்.

2026.03.15

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page