காதல் -23
இன்பராஜா, கீதா என்று கத்திக்கொண்டு தன்னவளை காப்பாற்ற நடுவில் புகுந்து தடுக்க முயற்சி செய்ய நினைக்கும் போதே, ராஜாவை பதம்பார்த்தது, அந்த கத்தி.
இன்பராஜாவை குத்திய வேகத்தில் அடி வயிற்று வரை ஆழமாக போக ரத்தம் வழிந்து கண்களை சொருகி தன்னவளின் மடியில் மயங்கி சரிந்தான் ராஜா.
“இன்பா…..ஆ” என்று கீதா காது பொற்றிக் கொண்டு கதறியதில், அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார்கள்.
அனைவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே ஒரு நிமிடம் தேவைப்பட்டது.
“இன்பா….இன்பா” என கீதா கத்திக் கொண்டே அவன் அருகில் செல்ல, அவன் மயங்கி கீதாவின் மடியில் சரிந்தான்.
உயிற்ற உடலை பார்த்ததும் கீதாவின் அழுகை அதிகமாகியது.
“என்னை பாருடா இன்பா. ப்ளீஸ் கண்ணை முழிச்சி பாருடா” என்று அவளின் அழுக்குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தது என்னவோ அருண் ஒருவன் மட்டும் தான்.
‘நாம் என்ன நினைத்தோம், இங்கே என்ன நடக்கிறது. நான்… நான் குத்தவே இல்லையே. அப்போ யாரு குத்தியது. நான் ஏஞ்சல் மேல் இருந்த கோபத்தில் கத்தியை எடுத்து அவள் அருகில் போக நினைத்தது என்னவோ உண்மை தான். ஆனால் மறுகணமே, ‘இது தவறு உன்னை காதலிக்கவில்லை என்றால், நீயும் மற்ற ஆடவர் போல் பெண்களை கொன்று பழி தீர்க்க போவது சரியா பெண்கள் காதலிக்கவில்லை என்றால் அவர்கள் மேல் ஆசிட் ஊற்றுவது, கற்பழிப்பது, வெட்டி சாய்ப்பது இதெல்லாம் தப்புனு தெரிஞ்சே எப்படி உன்னால இதை செய்ய துணிவு வந்தது அருண்’ என்று என் அம்மாவின் உருவம் வந்து எனக்கு உணர்த்தியதே. அப்படியே என் கையில் எடுத்த கத்தியை கீழேப்போட்டேனே’ “என்று அவன் சிந்தனையில் ஓடிக் கொண்டு இருக்க.
கீதாவின் குரலும், இன்பராஜா மயங்கி விழுந்ததையும் பார்த்தவன் அப்படியே உறைந்து போனான்.
இதற்கு இடையில் பிரியாவும் சுதாரித்து போலீஸ்க்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தாள்.
சுயநினைவுக்கு வந்த அருணின் பார்வை அவர்களின் அருகில் பயத்திலும் பதற்றத்திலும். கொலை வெறியுடனும் கையில் ரத்த படிந்த கத்தியை வைத்து கொண்டு நின்ற இந்துவின் மீது படிந்தது.
இந்துவோ மீண்டும் ஆத்திரத்தில் கீதாவை நோக்கி கத்தியை கொண்டு போக,
அருண் சுதாரித்துக்கொண்டு இந்துவை தடுத்து இந்துவின் கண்ணத்தில் ஒங்கி அறை வைத்தான்.
அதில் கீழே விழுந்தவள் பைத்தியம் பிடித்தது போல் மீண்டும் எழுந்து கீதாவின் அருகில் சென்றாள்.
அதற்குள் காவலாளர்கள் வந்து இந்துவை பிடித்து நிறுத்தினார்கள்.
அருணோ கண்கள் சிவக்க “இந்த அடியை நான் அன்னிக்கே உனக்கு கொடுத்து இருந்தா, நீ இந்த அளவுக்கு துணிந்து இருக்க மாட்ட” என்றான்.
ஆம்புலன்ஸ் வந்து ராஜாவை தூக்கிக்கொண்டு செல்ல, கீதாவும் ஆம்புலன்ஸில் ஏறினாள்.
அருண் மற்றும் பிரியாவும் அவர்ளுடன் ஏற, ஆம்புலன்ஸ் சத்தத்துடன் அதிவேகமாக பறந்தது மருத்துவமனையை நோக்கி.
பார்ட்டி ஹாலில் “கான்ஸ்டபிள் அந்த பொண்ண இழுத்துக்கிட்டு வாங்க” என இன்ஸ்பெக்டர் கட்டளையிட்டார்.
இந்து, “என்னை விடுங்க நான் நான்.. என் அத்தானை பார்க்கனும். என்னை விடுங்க, நான் அத்தானை கொலைப் பண்ண வரல. நான் அந்த கீதாவை தான் கொலை செய்ய வந்தேன். என்னை விடுங்க நான் அத்தானை பார்க்க வேண்டும்” என்று பித்து பிடித்தது போல் கத்தினாள்.
“என்ன தைரியம் இருந்தா! யாரை கொலை பண்ண வந்தனு எங்ககிட்டயே சொல்லுவ? முதல ஸ்டேஷன்க்கு வா. அப்புறம் உன்னை கவனிச்சிக்கிறோம்”
என இந்துவை இழுத்துக்கொண்டு சென்றனர் போலீஸ் அதிகாரி.
கீதாவோ கண்ணீரோடு ராஜாவை பார்த்தவளின் மனதிலோ,
‘ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்..
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்..
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்…
என் கண்ணில் உன்னை வைத்தே..
காட்சிகளை பார்ப்பேன்..
ஒரு நிமிடம் உன்னை மறக்க..
முயன்றதிலே தோற்றேன்….
நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா’
ஆம்புலன்ஸில் தன்னவனின் கையை தன் கையோடு சேர்த்து கோர்த்துக் கொண்டு கண்களில் நீர்வழிய,
“ப்ளீஸ்டா என்னை பாரு, ஏன்டா இப்படி பண்ண. என்னை காப்பாத்த நினைச்சி நீ இப்படி இருக்கியேடா. என்னால் உனக்கு திரும்ப, திரும்ப கஷ்டம் தான். உனக்கு இந்த மாதிரி எதுவும் நடக்க கூடாதுனு தான், ஆறு வருஷத்துக்கு முன்ன பிரிந்து போனேன். நீ கஷ்டப்பட்டாலும் உயிரோட இருப்பனு தான் உன்னை விட்டு போனேன்டா. ஆனா.. ஆனா.. அதெல்லாம் இந்த ஒரு நொடியில போயிடுச்சி.. பிளீஸ் இன்பா என்னை பாருடா. நான் அழுதா உனக்கு பிடிக்காது இல்லையா. சத்தியமா சொல்றேன் இனிமேல் உன்னை விட்டு போகமாட்டேன்டா. கண்ணை திறந்து பாருடா” என்று அவன் கைகளை முகத்தில் வைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.
அருணுக்கு இப்போது தான் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் புதியது இல்லை பழையது என்று.
அதற்குள் ஆஸ்பத்திரி வர தன்னவனின் கையை தன் கையில் இருந்து பிரிக்காமலே ஆஸ்பத்திரி உள்ளே சென்றாள்.
“டாக்டர் டாக்டர் சீக்கிரம் வாங்க. இவருக்கு என்னாச்சி பாருங்க”என்று மருத்துவரை அழைத்தனர்.
ஸ்ட்ரச்சரில் படுத்துக்கொண்டு இருந்த இன்பாவை பார்த்த டாக்டர் உடனடியாக ஐ.சி.யூ விற்கு அழைத்து சென்றார்.
தன்னவளின் கையை விடாமல் கெட்டியாக பிடித்து இருந்தான் இன்பா. டாக்டரோ இன்பாவின் கையை மிகவும் சிரமபட்டு பிரித்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
தன்னவன் கை தன்னை விட்டு பிரியும் போதே, அவளின் உயிரே பிரிந்து செல்வதை போல் உணர்ந்தாள் கீதா.
போலீஸ் ஸ்டேஷனில் இந்துவை அழைத்து வந்து கம்பிக்குள் தள்ளினார்கள்.
“ச்சா.. எல்லாம் மிஸ் ஆகிடிச்சி எல்லாம் இந்த அத்தான் நடுவில் வந்து சொதப்பிட்டாரு. இல்லையினா இந்நேரம் அந்த கீதா செத்துகிடந்து இருப்பா. அத்தான் அன்னிக்கு கீதா முன்னாடியும் அந்த அருண் முன்னாடியும் என்னை கை நீட்டி அடிச்சிட்டாரு. எல்லாம் அவளால. கீதா முன்னாடி எப்போ பாரு அவமானம் மட்டும் தான், நான் பட்டுட்டு இருக்கேன். அதெல்லாம் சேர்த்து பழி வாங்க தான், இன்னிக்கு ஒரு முடிவுக்கட்டணும்னு நினைச்சு வந்தேன். ஆனா அதுல அத்தான் பலியாகிட்டாரு.
இப்ப அத்தான் எப்படி இருக்காரு தெரியவில்லையே” என்று கம்பிக்குள் இருந்து புலம்பிக்கொண்டே அங்கும் இங்கும் நடந்துக்கொண்டு, கைககளை பிசைந்துக்கொண்டு இருந்தவளின் செவியில் அவளின் தந்தை கணேஷன் குரல் கேட்டு திரும்பினாள்.
“என்ன தைரியம் இருந்தா, என் பொண்ணை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு வந்து இருப்பீங்க?” என ஆவேசமாக பேசிக் கொண்டே உள்ளே வந்தார்.
இன்ஸ்பெக்டர் லஷ்மி, தன் லட்டியை எடுத்து பெஞ்சின் மேல் ஒரு தட்டு தட்ட அந்த இடமே அமைதியாகி போனது.
பின் தன் கம்பீரமான குரலில் “மிஸ்டர் யாரு நீ. நீ, பாட்டுக்கு ஏதோ நாய் நுழையற மாதிரி நுழைந்து உன் இஷ்டத்துக்கு கத்திட்டு இருக்க” என்று கேட்டார்.
அவர் கூறியதை கேட்ட கணேஷிற்கோ அவமானமாக இருக்க. சினத்தோடு “யாரை பார்த்து நாய் சொன்னீங்க?” என்றார்.
லஷ்மியோ கொஞ்சமும் அசரமால் “உன்னை பார்த்து தான், ஏன் உன் கூட வேற யாராவது வந்து இருக்காங்களா? என்ன?” என்று கேலியாக கூறியவர் திரும்பி கம்பிக்குள் இருக்கும் இந்துவை வேண்டும் என்றே பார்த்தார்.
கணேசனுக்கோ கோபம் அதிகமாகியது. “நான் இந்துவோட அப்பா. எதுக்கு இப்ப என் பொண்ண பிடிச்சி வெச்சி இருக்கீங்க” என்று அவர் நேரடியாக விசியத்திற்கு வந்தார்.
அதை கேட்ட லஷ்மியோ “ஓ நீ தான் இந்த விளங்காத மூஞ்சியை பெத்தவனா. இந்த அக்யூஸ்ட் ஒரு ஆளை கொலை பண்ண ட்ரைப் பண்ணி இருக்கா. அதுவும் அவளே வாக்குமூலமும் கொடுத்துட்டாள் அதான் உள்ள தள்ளி இருக்கோம்.” என்றார் சாதாரணமாக.
கணேஷோ “என்ன அக்யூஸ்ட்டா? வார்த்தையை பார்த்து பேசுங்க. அவள் என்ன பண்ணி இருந்தாலும் பரவாயில்லை வெளிய விடுங்க. மீதிய நான் வக்கில் வச்சி அப்புறம் பார்த்துக்குறேன்.”என்று மகள் ஜெயிலில் இருப்பத்தை பார்த்தவருக்கு அச்சமயம் மூளை வேலை செய்வதை நிறுத்தி இருந்ததோ என்னவோ. இவ்வாரு பேசிக் கொண்டு இருந்தார்.
லஷ்மி சிரித்துக் கொண்டே “என்னது வெளிய விடனுமா? யோவ் உன் பொண்ணு ஒருத்தனை கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கா! அவளை வெளிய விட சொல்ற. எஃப் ஐ ஆர்லாம் போட்டாச்சு. நீ இங்க இருந்து போலாம். மீதியை கோர்ட்ல பார்த்துக்கோ”
“என்னது எஃப் ஐ ஆர் போட்டாச்சா? யாரை கேட்டு நீங்க எஃப் ஐ ஆர் போட்டிங்க. இப்ப தானே என் பொண்ணை அரெஸ்ட் பண்ணிங்க. அதுக்குள்ள எப்படி போட்டிங்க” என தாம்தூம் என்று கத்தினார்,
லஷ்மியோ தன் சுண்டு விரலை காதில் குடைந்துக் கொண்டே “இங்க பாரு, இங்க நின்னுட்டு கத்துற வேலையெல்லாம் வேண்டாம். நாளைக்கு நாளை மறுநாள் கோர்ட் லீவ். சோ நீ திங்கள் கிழமை எதுவா இருந்தாலும் பார்த்துக்கோ. பர்ஸ்ட் இங்க இருந்து கிளம்பு” என லஷ்மி சொல்ல. திரும்பி மகளை பார்த்தவர் அப்பொழுது வேறு வழி இன்றி வீட்டுக்கு சென்றார் கணேஷ்.
பார்ட்டி ஹாலில் இருந்து இன்பாவின் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இருவரும் பதற்றத்தோடு அழுதுக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
இங்கு கீதாவின் அழுகை மட்டும் குறையாமல் இருந்தது. அருணுக்கோ என்ன சொல்லி அவளை தேற்றுவது என்று புரியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
பிரியா எவ்வளவு சமாதானம் செய்தும் எதுவும் பலன் அளிக்காமல் போனது.
இன்பாவை பரிசோதித்து வெளியே வந்த டாக்டர் அருணை பார்த்து “அவருக்கு ரத்தம் அதிகமாக போய்டுச்சு. அப்புறம் அவர் உடம்பு முழுக்க விஷம் பரவி இருக்கு.” என்று டாக்டர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ராஜாவின் பெற்றோர் வந்தனர்.
வசந்தா, “அய்யோ என் மகனுக்கு என்ன ஆச்சு உடம்பு முழுக்க விஷமா? என்று கதறினாள்.
அதிர்ந்த விழியோடு “என்ன சொல்றீங்க டாக்டர்” என சுந்தர் கேட்க.
“ம் யெஸ், அண்ட் மிஸ்டர் நீங்க அவருக்கு என்ன வேண்டும்.”
“நாங்க இன்பராஜாவின் பெற்றோர். என் நேம் சுந்தர் இவள் வசந்தா ராஜாவின் அம்மா.” என்று கூறிவிட்டு “என் மகனோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்” என்று பரிதவித்தார்.
டாக்டரோ “சாரி மிஸ்டர், சுந்தர் அவர் ரொம்ப கிரிட்டிக்கலான ஸ்டேஜ்ல தான் இருக்காரு. ரத்தம் ரொம்ப லாஸ் ஆகி இருக்கு. அப்புறம் அவர குத்தின கத்தில ரொம்ப கொடுமையான விஷத்தை தடவி குத்தி இருக்காங்க. தெளிவா சொல்லனும்னா பிழைக்கவே கூடாதுனு நினைச்சி குத்தி இருக்காங்க. அந்த விஷம் அவருடைய மூளைக்குள் போயிடுச்சுனா அப்புறம் அவர காப்பாத்த முடியாது. இப்ப அவரு இருக்குற கண்டிஷன்ல மிஸ்டர். இன்பா பிழைக்க வெறும் நூற்றுக்கு நாற்பது பர்சன்ட் தான் சான்ஸ் இருக்கு” என்று,
டாக்டர் சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்த வசந்தாவும் சுந்தரும் கண்ணீருடன் “என்ன டாக்டர் சொல்றீங்க? அப்ப என் மகனை காப்பாற்ற முடியாதுனு சொல்றீங்கலா?. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை டாக்டர் எந்த ஊருல இருந்து எவ்வளவு பெரிய டாக்டர் வேணும்னாலும் வர சொல்லுங்க. எப்படியாவது என் மகனை காப்பாத்துங்க டாக்டர்” என்று சுந்தர் சொல்ல.
டாக்டர், “இமீடியட்டா ராஜாவுக்கு புது ரத்தம் ஏத்தனும். அவருடைய ப்ளட் குரூப் AB- அது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். உங்க குடும்பத்துல இந்த ப்ளட் குரூப் யாருக்காவது இருக்கா? இருந்தா, அவர சீக்கிரம் வர சொல்லுங்க. எங்க ப்ளட் பேங்கிலும் நாங்க விசாரிக்கிறோம்” என டாக்டர் கூறியதை கேட்ட,
கீதாவிற்க்கு ஸப்த நாடியும் அடங்கியது போல் உணர்ந்தாள். தன்னவனை காப்பாற்ற முடியாது, என்ற வார்த்தையை கேட்டு அப்படியே உறைந்தே விட்டாள். என்ன செய்வது என்று தெரியாமல். டாக்டர் காலில் விழுந்து கதறி அழுதாள்.
“ப்ளீஸ் டாக்டர் என் இன்பாவை எப்படியாவது காப்பாற்றுங்க அவன் இல்லனா நானும் உயிரோட இருக்க மாட்டேன். ப்ளீஸ் டாக்டர் எனக்குன்னு என் இன்பா மட்டும் தான் இருக்கான். எப்படியாவது என் இன்பாவை காப்பத்துங்க. என் உயிரை கூட எடுத்துக்கோங்க என் இன்பாவை மட்டும் காப்பாத்துங்க டாக்டர்” என காலைப் பிடித்துக்கொண்டு கதறி அழும் கீதாவை பார்க்க, அங்கே இருந்த அனைவருக்கும் பாவமாக தான் இருந்தது.
அதுவரை கோபமாக இருந்த வசந்தா கூட, தன் மகனுக்காக டாக்டர் காலில் விழுந்து கதறி அழும் கீதாவை பார்க்க கொஞ்சம் பரிதாபமாக தான் தோன்றியது. அவளுக்காக தன் வீம்பை விட்டு கொஞ்சம் கீழே இறங்கி வந்தாள் வசந்தா.
“இங்க பாருமா முதல எழுந்துடு” என டாக்டர் சொல்ல, பிரியாவும் அருணும் அவளை தூக்கி நிறுத்தினர்.
“என் கையில எதுவும் இல்லமா. எல்லாம் அந்த ஆண்டவன் கையில தான் இருக்கு. ஆமா இந்த பேஷன்ட்க்காக இந்த அளவுக்கு துடிக்கிறியே, அவருக்கு நீ என்ன வேணும்”.என டாக்டர் கேட்க,
சுந்தர் சொன்னதைக் கேட்டு வசந்தா அருண் மற்றும் பிரியா மூவரும் பேரதிர்ச்சி ஆகினர்.
கீதாவோ அமைதியாக நின்று சுந்தரத்தை நன்றியுடன் பார்த்தாள்.
சுந்தர் கூறிய வார்த்தைகள் “இவள் என் மகனின் மனைவி கீதா, எங்க வீட்டு மருமகள்.” என்று அல்லவா கூறினார் அவர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
