அன்று காலை ஞாயிற்றுக்கிழமை அபி தங்கள் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்க திடீரென்று கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்க மேகநாதனும் ஜெயந்தியும் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து, “என்ன இந்த வீட்ல கௌரவமா இருக்கணும்னு யாருக்கும் ஆசை இல்ல போல?” என்றார்.
கதிர்வேல் “யார் நீங்க ? அனுமதி இல்லாம உள்ள வந்து என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க? என்ன வேண்டும் உங்களுக்கு ? ” என்ற உடன்
“வாயா நல்லவனே நீ தான் இந்த அபிய பெத்த அப்பனா? ஏன்யா எல்லாரும் அவங்க பொண்ணு படிக்கிற வயசுல லவ் பண்ணிட்டு திரிஞ்சா புத்திமதி சொல்லி படிக்க மட்டும் சொல்லுவாங்களா? நீ என்னடான்னா படிக்கிறதோட சேர்ந்து படுக்குறதுக்கு அனுப்பி வெப்ப போல?” என்றவுடன், பவித்ராவுக்கு சரியான கோபம் வந்து விட,
” ஹலோ பார்த்து பேசுங்க . வயசானவங்களா இருக்க அதனால அமைதியாக இருக்கேன். இல்லனா இந்நேரம் கண்ணம் பழுத்து இருக்கும் யாரை பார்த்து என்ன பேசுறீங்க?” என்றால் கோபமாக .
தன்னை மரியாதை இல்லாமல் பேசிய பவித்ராவை கண்டு இன்னும் கோபம் அடைந்த ஜெயந்தி, அவளது கன்னத்தில் அறைந்தவர், “என்னடி கொஞ்சம் கூட பெரியவங்களுக்கு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க ஏன்யா இப்படித்தான் உன் பொண்ண வளர்த்து வச்சிருக்கியா இது மட்டும் தானா இல்ல பணக்கார பசங்களா பார்த்து வளைச்சு போடு அப்படின்னு ஊர்மேய விட்டுட்டு இருக்கியா அவங்கள ?” என்று வாய் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்கள்.
அதைக் கேட்டு கௌரி “நீ பாட்டுக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் வீட்டில் வந்து இப்படி பேசிட்டு இருக்கியே, நீ எல்லாம் பொம்பளைதான ஏன் உங்க வீட்லயும் இப்படித்தான் அடுத்த வீட்டில் போயி நாகரிகம் இல்லாம பேசணும்னு சொல்லி வளர்த்திருக்காங்களா எங்கள பேச வந்துட்ட ?” என்று அவரும் தன் பங்கிற்கு ஜெயந்தியை சாட
“நீங்க எல்லாம் மிடில் கிளாஸ் ஃபேமிலி நாங்க யார் தெரியுமா? எங்க ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா? அது தெரியாம இதோ இருக்காலே உங்க பொண்ணு அபி எங்க வீட்டு பையன் கரண காதல் என்கிற பெயரில் அவனை வளச்சு போட்டு சொத்தை எல்லாம் பறிக்க பாக்குறா? அவள நாங்க எவ்வளவு பெரிய பணக்கார வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு இருக்கோம். இப்போ அது எல்லாம் உங்களால பாழாகி போச்சு. உங்க பொண்ணுக்கு கல்யாணம்னா எவ்வளவு பவுன் போடுவீங்க ஒரு 20 பவுன் 25 பவுன் அதுக்கு கூட வக்கு இருக்காது உங்களுக்கு பணக்கார வீட்டு சம்பந்தம் கேட்குதா இதுக்காகத்தான் நீங்க எல்லாம் பொம்பள புள்ள பெத்துகிட்டு திரியறீங்களா வெக்கமா இல்ல உங்களுக்கெல்லாம்?” என்று கண்டபடி பேச
பவித்ரா ஜெயந்தியை பார்த்து முறைத்தவள் “அநாகரிகம் இல்லாமல் வீட்டுக்குள்ள வந்துட்டு இப்போ வாய்க்கு வந்தபடி பேசாதீங்க வெளியே போங்க!” என்று ஜெயந்தியை பிடித்து வெளியே தள்ளிவிட இவள் மெதுவாகத்தான் தள்ளினால் .
அவர் வேண்டுமென்றே கீழே விழுந்து “பாத்தீங்களா இந்த அநியாயத்தை நியாயம் கேட்க வந்தால் என்னைய புடிச்சு கீழே தள்ளி விடுற இந்த பொண்ணு. வயசுக்கு மரியாதை கொடுக்காமல் பேசிட்டு இருக்கா என்று உறக்க கத்தினாள்.
ஏற்கனவே இவர்கள் வீட்டில் கூச்சல் சத்தம் கேட்டு வெளியே வேடிக்கை பார்த்து நின்று இருந்தவர்கள் ஜெயந்தி கீழ விழுந்தவுடன் அவர்கள் வீட்டை விட்டு இவர்கள் வீட்டின் முன் கூடி விட
அதைக் கண்ட கதிர்வேல் “பவி எல்லாரும் இங்கதான் பாக்குறாங்க வா நம்ம உள்ள போலாம்!” என்றவுடன்
” என்ன பண்ணக்கூடாத வேலை எல்லாம் பண்ணிட்டு நல்லவன் மாதிரி இப்போ எல்லாரையும் பார்த்த உடனேயே வீட்டுக்குள்ள போய் அடஞ்சிக்க பாக்குறியா மானம் போகுதோ? அதுக்கு என்னைய ஒழுங்கா மரியாதையாக நடத்தி இருந்தா இப்படித்தான் நடக்காமல் இருந்திருக்கும்!” என்றவர் , சுற்றி இருந்த அனைவரையும் பார்த்து
“எல்லாரும் நல்லா இந்த நியாயத்தை கேளுங்க எங்க வீட்டு பையன் படிக்கிற அதே கல்லூரியில் தான் இந்த வீட்டு அபியும் படிக்கிறா. அவன்தான் வயசு கோளாறுல காதல் சுத்திட்டு இருக்கான்னு பார்த்தா இவங்க வீட்டு பொண்ணு இப்பதான் முதல் வருஷம் படிக்கிறா அதுக்குள்ளேயும் காதல் அந்த பையன் பின்னாடி சுத்திட்டு இருக்கா பணக்கார பையன் வளர்ச்சி போட பாக்குற இதெல்லாம் வேண்டாம் நாங்க வேற இடத்துல சம்பந்தம் பாத்துட்டோம் அப்படின்னு சொன்னா இவங்க எங்ககிட்டயே நாங்க அப்படி தான் பண்ணுவோம் உன்னால ஆனதை பார்த்துக்கோ அப்படின்னு சொல்றாங்க!” என்றார் .
அப்பொழுது அங்கே வந்த ஒருத்தர் “இப்படி எல்லாம் பிரச்சனை பண்ணாதீங்க அவங்களை பத்தி அவங்க குடும்பத்தை பற்றியும் எங்களுக்கு தெரியும் தேவை இல்லாம பேசிட்டு இருக்காதீங்க கிளம்புங்க நீங்க?” என்ற உடன்
“நாங்க ஒன்னும் பொய் சொல்லல மினிஸ்டர் வீட்டில சம்பந்தம் பண்ண போறான் அந்த பொண்ணு என்னோட தங்கச்சி பையன விரும்புறா அதுக்கு இடைஞ்சலா இருக்கறது இந்த பொண்ணு இந்த பொண்ணு ஒழுங்கா ஒதுங்கிட்டானா நல்லது இல்லனா படக்கூடாத அவமானம் எல்லாம் பட வேண்டியது இருக்கும் நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க அது மட்டும் இல்லாம அப்பப்போ தன்னோட பொண்ண வச்சு அந்தப் பையன் கிட்ட இருந்து பணம் வாங்கி இவங்க எத்தனை இடத்தில் சொத்து வாங்கி போட்டு இருக்காங்களோ யாருக்கு தெரியும்!” என்று இல்லாததை எல்லாம் கூறினார் மேகநாதன்.
என்னதான் கதிர்வேல் குடும்பம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இதுபோல் ஒருவர் வந்து பேசும் பொழுது அனைவர் பார்வையும் இவர்கள் மேல் சந்தேகமாக படிந்தது.
அதையெல்லாம் பார்த்த கதிர்வேல் “தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க நாங்க இங்க இத்தனை வருஷம் நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கோம் கண்டதையும் பேசி எங்க நிம்மதியை கெடுக்காதீங்க” என்றவுடன்,
எழுந்து நின்ற ஜெயந்தி “இங்க பாரு ஒழுங்கா உன் பொண்ண காலேஜ்க்கு போனமா படிச்சமான்னு வர சொல்லு இல்லனா அமைதியா வீட்டிலேயே வச்சுக்கோ! அதை விட்டுட்டு பணக்கார பையனை மடக்குறதுக்கும் ஊர் மேய விடுறதுக்கு வெளியில வந்தானா அவ யார வேணா பழகட்டும் எவன் கூட வேணாலும் படுகட்டும் அதுக்கு எங்க வீட்டு பையன் ஆள் கிடையாது அவன விட சொல்லு அதையும் மீறி இந்த பொண்ணு அவன் கூட சுத்திட்டு இருந்ததை பார்த்தோம் கண்டிப்பா உங்க குடும்பத்தை பத்தி அசிங்க அசிங்கமா இந்த ஊர் உலகமே பார்க்கிறபடி ஆயிடும் ஞாபகம் வச்சுக்கோ!” என்றவர்
பவித்ராவின் அருகில் நெருங்கி ஏண்டி வயசு வித்தியாசம் பாக்காம என்னையவே மரியாதை இல்லாம புடிச்சு வெளியே தள்ளிட்ட இல்ல உன்னோட தங்கச்சி கரண் கூட பழகாத வரைக்கும் தான் நீங்களும் நிம்மதியா இருக்க முடியும் அதையும் மீறி காதல் தான் முக்கியம் என்று இருந்தீர்கள் என்றால் உடம்புல உசுரு மட்டும் தான் இருக்கும் அதுவும் ஏன் இருக்குன்னு சிந்திக்கிற அளவுக்கு உங்க குடும்ப மானமம் போயிடும் ஞாபகம் வச்சுக்கோ! ஆனா கண்டிப்பா என்னைய அவமானப்படுத்தினதுக்கு உன்னை தனியா நான் பழி வாங்குவேன்!” என்று விட்டு அங்கிருந்து தனது அண்ணனை கூட்டிக் கொண்டு கிளம்பினார்..
அனைவர் பார்வையும் தங்கள் மேல் சந்தேகமாக படிவதையும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை பார்த்துவிட்டு கோபமடைந்த கதிர்வேல் “இவ்வளவு வருஷமா இந்த இடத்தில் இருக்கும் எல்லாரும் எங்களை சந்தேகமா பாக்குறீங்களே இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்ற ஆதங்கமாக.
“நீ சொல்றது புரியுது ஆனா உங்க வீட்டு பொண்ணு பண்ணாததையே அவங்க வந்து சொல்றாங்க என்னப்பா இதெல்லாம் நல்லாவா இருக்கு குடும்பத்தோட இங்க எல்லாம் வாழ்வதுதான் வேணாமா இன்னொரு வாட்டி இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் பண்ணாம இருந்துக்கோங்க ரெண்டு பொட்ட புள்ளைய ஒழுங்கா வளக்குற வழிய பாருங்க!” என்று சொன்னவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டே கலைந்து விட
அதைக் கேட்டு மனம் உடைந்தவர் “என் பொண்ணுங்க எந்த தப்பும் பண்ணல அதெல்லாம் ஒரு நாள் உங்களுக்கு தெரிய வரும். அப்ப என்ன பண்றீங்க நானும் பாக்குறேன்!” என்றவர் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.
அந்த வீடு டிசப்தமாக இருக்க கதிர்வேல் கோபத்தில் அமர்ந்தார். கௌரி புடவையை வாயில் வைத்து அழுது கொண்டிருக்க, அபியோ தனது குடும்பத்தை அவமானப்படுத்தி பேசி விட்டு சென்றதே மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு திக் பிரம்மை பிடித்தவள் போல் தான் இருந்தாள்.
பவித்ராவிற்க்கோ பயங்கர கோபம் அப்படியே அன்றைய நாள் கழிய மறுநாள் பவித்ரா வேலைக்கு செல்ல அபியும் அப்பொழுதும் படுத்துக் கொண்டிருந்தால் .
அவளை எழுப்பி விட பவித்ராவை திரும்பி பார்த்தவன் “என்ன கா?” என்றால் சுரத்தே இல்லாமல் பேச, “காலேஜுக்கு போலையா?” என்றால்.
“இல்லக்கா இப்ப போனா கரண பாக்க வேண்டியது வரும் என்னால எப்படி அவர ஃபேஸ் பண்றதுன்னு தெரியல. இவங்க பண்ணின தப்புனால அந்த கோபத்தை அவர் மேல காட்டிருவேன்னு பயமா இருக்கு ப்ளீஸ் கா நான் போகல ஒரு ரெண்டு நாள் எனக்கு டைம் கொடுங்க!” என்றவுடன்,
” சரி செமஸ்டர் வேற வருது பார்த்துக்கோ!” என்றவுடன்,
” இல்ல அக்கா ஒரு ரெண்டு நாள் மட்டும் நான் சரியாயிடுவேன் போர்ஷன்ஸ் எல்லாம் முடிச்சுட்டாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல!” என்றவளும் போர்வை போர்த்தி படுத்துவிட பவித்ரா மட்டும் படி இறங்கி வருவதை கண்டு கௌரி “என்னடி அவ காலேஜ்க்கு போகலையா? நீ மட்டும் வந்திருக்க அவ என்ன பண்ற குளிச்சு ரெடியாயிட்டாளா?” என்றார் மேலே பார்த்துக் கொண்டே.
“இல்லம்மா அவ காலேஜ் போகலைன்னு சொல்லிட்டா!” என்றவுடன்,
” ஏண்டி உடம்புக்கு எதுவும் முடியலையா என்றார் பதட்டமாக.
“இல்லமா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவளுக்கு கரண பாக்குறதுக்கு முடியல. எங்க அவங்க வீட்ல வந்து பேசிட்டு போன கோவத்தை அந்த பையன் மேல காமிச்சுட்டு வேணும்னு பயப்படுற. அதனாலதான் அவ ரொம்ப பயந்துட்டாமா!” என்ற உடன்,
அங்கே வந்த கதிர்வேல் “என்னம்மா பவித்ரா ஸ்கூலுக்கு கிளம்பிட்டியா?” என்றார் .
ஆமாம்பா என்று சொன்னவள் தந்தை முகத்தை காண இருக்கம் வெறுமை இரண்டும் அவர் முகத்தில் இருந்தது.
எப்பொழுதும் சந்தோஷமாக சிரி சிரித்தபடி வரும் தனது தந்தையின் முகத்தை பார்த்து கவலை கொண்டவள்,
அவர் அருகில் சென்று கைகளைப் பற்றிக் கொண்டு “அப்பா அவங்க பேசுனத மனசுல போட்டு கவலப்படாதீங்க. அந்தக் பையன் நல்லவன்தான். ஆனா அவங்க வீட்ல தான் சரி இல்ல போல அபி தான் சொல்லி இருக்காளே!” என்றால்.
“இல்லம்மா எல்லாரும் ஒரே வீட்ல தான் இருக்காங்க ஒருவேளை அவங்க பிள்ளை சேர்ந்தாலும் சேர்ந்துருவாங்க ஆனா கடைசில நாளைக்கு நம்ம அபி அந்த வீட்டுக்கு போயி நிம்மதியா இருப்பாள் என்பது ஒரு சந்தேகமா இருக்கு !” என்றவுடன்
அப்பா எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க. அவங்க என்ன இப்ப உடனே தான் கல்யாணம் பண்ணிக்க போறாங்க இப்பதான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா. என்னமோ அதுக்கெல்லாம் நாலஞ்சு வருஷம் ஆகும்பா. நீங்க கவலைப்படாதீங்க” என்றவுடன்,
” இல்லம்மா எனக்கு என்னமோ இதெல்லாம் சரியா படல. இவ்வளவு நாள் நம்ம பாட்டுக்கு கௌரவமா இருந்தோம் மத்தவங்க பேசறதுனா கூட நான் கண்டுக்க மாட்டேன். ஆனா அவங்களோட முகத்துல தெரிஞ்ச ஆக்ரோஷம் ஒரு மாதிரி அவங்க எந்த எல்லைக்கும் போவாங்க அப்படிங்கிற மாதிரி தான் இருக்கு. அதனால தான் கொஞ்சம் பயமா இருக்கு . உங்க ரெண்டு பேருக்கும் பேரையும் அடுத்தவங்க கைல புடிச்சு கொடுக்குற வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் வயித்துல நெருப்பை கட்டிட்டு தான் அலையனும்!” என்றவர் சாப்பிடாமல் பையை எடுத்துக் கொண்டு வாசல் அருகே செல்ல,
அவரது கையை பிடித்து “சாப்பிட்டு போங்கபா ” என்றவுடன்
” இல்லம்மா பசிக்கல!” என்றார். ப்ளீஸ் பா என்று கெஞ்சி அழைத்து வந்தவள் , “அபி என் கூட சாப்பிடவா இன்னைக்கு சாப்பிடல நீங்களும் சாப்பிடாமல் போன எனக்கு வருத்தமா இருக்கு!” என்றால்.
மகளின் கவலையான முகத்தை பார்க்க முடியாமல் அவளுக்காக கொஞ்சமாக சாப்பிட்டவர் பணிக்கு கிளம்பி விட , இவளும் கிளம்புவதற்கு முன்பு மீண்டும் தங்கையை பார்த்துவிட்டு வந்தவள் அம்மாவிடம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி பள்ளிக்கு விரைந்தாள்…
