அத்தியாயம்- 1

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா…!!

பிளேயரில் பாடல் ஒலிக்க… அதை கேட்டுக்கொண்டே காரை லாவகமாக ஒட்டிக்கொண்டிருந்த தீபனின் விழிகளில் வைரம் ஜொலித்தது…!!

வெளியே 16 டிகிரி செல்சியஸ் க்கு கீழே குளிர் நடுங்க வைத்து கொண்டிருந்தது, போதா குறைக்கு காருக்குள்ளே இவன் ஏசியை போட்டு கொண்டு வண்டி ஓட்டினான்!!

ஊட்டியில் பாதி எஸ்டேட்டிற்கும் மேல் தீபனுக்கு சொந்தமாக இருந்தது..பேர், புகழ், அந்தஸ்து எதுக்கும் குறைச்சல் கிடையாது.. கூடவே , பொன்மானே செந்தேனே எல்லாம் சேத்துக்க.. என்பது போல் அவனுக்கு கிடைக்கும் அன்புக்கும் காதலுக்கும் பஞ்சமில்லை 🤭🤭.. 

ஆமா நீங்க நினைக்கிறது சரிதான், காதலும் கனிவும் கலந்த காதல் மனைவியா ஒருத்தி இருந்தா, அவனுக்காக💕💕 !!

காதலிச்சு, குட்டிக்கரணம் போட்டு தட்டி தூக்கிட்டு வந்து தாலி கட்டல நம்மாளு.. வெண்ணெய்ல வழுக்கிட்டு போற கூழாங்கல் மாதிரி, அப்பா அம்மா பாத்து வெச்ச அழகு தேவதையாய் இருந்தவளை நோகாம தாலி கட்டி கூட்டிட்டு வந்தான் தீபன்!!

( உங்க M V: Arrange marriage என்று சிம்பிளா சொல்ல வேண்டியதானே.. 🧐🧐🤣🤣)

ஆமாங்க, அவனை பொறுத்த வரை காதலிக்க நேரமில்லை கதை தான்.. குளியலறையில் கூட நேரத்தை மிச்சம் பண்ண நினைக்கும் இவங்கிட்ட போய் காதலிக்க நேரமிருக்கானு கேக்க முடியுமா.. நெவர்😂😂🤭🤭

காரைக்குடி மாநகராட்சி உங்களை அன்போடு வரவேற்கிறது என்கிற பலகையை பார்த்தவுடன் மனதில் சில நினைவுகள் எழும்பியது…

மரங்களும் செடிகளும் அவனை கடக்க… நினைவுகள் மட்டும் அவனை பின்னோக்கி இழுத்து சென்றது….!!

( M V: ஆஹா… அப்போ  அடுத்து ஃபிளாஷ் பேக் வர போகுது🤔🤔🤭🤭😂😂)

மொத்த 24 மணி நேரமும் பிசினஸ் பத்தியே யோசிக்கும் இவனிடம் எந்த பெண்ணாவது காதல் கத்திரிக்காய் என்று போய் நின்றால்.. அந்த பெண்ணிற்கு கன்னம் பழுக்க அறை தான் விழும் 🧐🧐.. அந்தளவிற்கு இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் தீபன் !!

பணம்.. பணம்… பணம்… பணம் தான் எல்லாமே அவனுக்கு.. வெற்று தாளில் மொத்த வாழ்க்கையையும் அடமானம் வைத்திருந்தான்… அவனிடம் பாசம் பந்தம் எதுக்கும் அவன் மனதில் இடம் கிடையாது… பெற்றோரிடம் கூட அமர்ந்து பேச நேரமில்லாது ஓடும் இளைஞன்.. சாரி எந்திரன்!!

அப்பா சுந்தரேசன், பெரிய தொழிலதிபர்.. பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்.. தன் ஒரே மகன் தீபன் தொழிலை கவனிக்க தொடங்கவும்.. அவருக்கு ஓய்வு கிடைத்தது.. அம்மா விசாலாட்சி அடுப்படியே திருப்பதி ஆம்படையானே பெருமாள் என்று வாழும் புண்ணியவதி.. கணவனையும் மகனையும் தவிர வேறு உலகமறியாதவள் !!

தன் தாய் விசாலாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் தீபன்.. அது என்னவோ தெரியல,  தன் தாய் சொல்லை மட்டும் தட்ட அவனுக்கு மனம் வருவதே இல்லை…!!

அந்த ஒரு பிடிப்பு போதுமே விசாலத்துக்கு தன் பேச்சை மகன் மீற மாட்டான் என்ற நம்பிக்கையில் தன் மகன் திருமணத்தை நடத்த முடிவெடுத்தாள்… பின்னே, என்ன செய்வது?? அவனுக்கும் காதலுக்கும் காத தூரம் என்று ஆயிற்று.. சரி அவனை காதலிக்கும் பெண்ணையாவது கடைகண் திறந்து பார்ப்பான் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை.. இவன் முரட்டு குணம் கண்டு அஞ்சி எந்த பெண்ணும் இவனிடம் காதல் என்ற சொல்லோடு வந்து நின்றதில்லை😂😂.. அப்படி ஒரு கன்னி ராசி இவனுக்கு !!

சரி காதலில் தான் ஜீரோ என்று பார்த்தால் நட்பு வட்டாரத்திலும் சொல்லி கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் கிடையாது இவனுக்கு , ஒருவனை தவிர!!

ஆம், சிறு வயதிலிருந்து நண்பன் என்ற பெயரோடு இவனோடு இருக்கும் ஒரே நபர் தான் பார்த்தசாரதி, பால்ய சிநேகிதன்… சுருக்கமாக ‘பார்த்தூ.. பார்த்தூ..’ என்று அழைப்பார்கள் எல்லோரும்…

(M V : பாத்து பாத்து மெதுவா 🤣🤣)

“ஏண்டா பார்த்தூ… நீயாவது அவனுக்கு சொல்ல கூடாதா?? கல்யாணம் காட்சின்னு அவனுக்கு எப்போடா நாங்க நல்லது பண்ணி பாக்குறது.. இருக்குற சொத்து போதாதுன்னு இவன் வேற ஓடி ஓடி உழைக்குறான்.. எதுக்கு இதெல்லாம்?? கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கிறது விட்டுட்டு இவனுக்கு இந்த தலைவலி தேவையா சொல்லு?? அவனவன் காதல் கல்யாணம்னு ஜாம் ஜாம்னு இருக்கானுங்க.. இவன் கூடவே சுத்துறியே நீ இதெல்லாம் சொல்ல மாட்டியா??”, என்று கேட்டார் விசாலம்.

(M V : அதான.. கூடவே சுத்துறியே செவ்வாழை.. இதெல்லாம் கேக்க மாட்டியா??🧐🧐😂😂)

“அட ஏம்மா.. நீங்க வேற அவன்கிட்ட சொல்லி சொல்லி எனக்கு வாயிதான் வலிக்குது.. அவனும் எந்த பொண்ணையும் பாக்க மாட்டெங்குறான் என்னையும் பாக்க விட மாட்டேங்குறான் ..இது கூட பரவால்லமா போன வாரம் நம்ம ஆபிஸ்ல புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்துச்சு.. பேரு தான் கேட்டேன்.. அதுக்கு போய் உங்க மகன் அந்த கல்நெஞ்சக்காரன் என்னைய வேலையை விட்டு தூக்கிருவேன்னு மிரட்டுறான்!! “, என்று பரிதாபமாக மூஞ்சியை வைத்து கொண்டு  சொன்னான்.

தீபனின் அலுவலகத்தில் தான் பணி புரிந்து வந்தான், அவனுக்கு P A வாக.. middle class குடும்பம் தான் அவனது.. தன் பெற்றோருக்கு ஒரே மகன்..காதலில் விழ ஆசை ஆனால் மன்மதனின் அம்பு இன்னும் பாயவில்லை அவனை நோக்கி🤣🤣

“அடக்கடவுளே!! இவன் போற போக்கே சரியில்லையே..கூடிய சீக்கிரம் இவனுக்கு கல்யாணம் பண்ணனும்..”, என்றாள்

“சீக்கிரம் பண்ணுங்க அப்போதான் எனக்கும் ரூட்டு க்ளியர் ஆகும்.. அப்படியே ரெண்டு இட்லி வைங்க ” என்றான் சாப்பிட்டு கொண்டே…

“டேய்.. என்ன போலாமா??”, என்று அங்கு வந்து நின்றான் வாட்ட சாட்டமாய் கம்பீரத்துடன் தீபன்..நல்ல ஹீரோ லூக் அவனுக்கு !!

கன்னியரின் பார்வை மொத்தமும் இவன் மீதே இருக்கும்.. அந்த அளவிற்கு ஆணழகன்.. அழுத்தமான உதடுகளும், தீர்க்கமான பார்வையும், அகன்ற நெற்றியும் அவனின் கருமை நிறமும் அவனின் கம்பீரத்தை இன்னும் எடுத்து காட்டியது..!!

கோட் சூட்டில் படு ஜோராக வந்திருந்த தன் புதல்வனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் விசாலம்… 

“கண்ணா!! ரெண்டு வாய் சாப்பிட்டு போ ராஜா.. இப்படி வெறும் வயிற்றோடு ஓடி ஓடி யாருக்காக சம்பாதிக்கிற?? இருக்குற சொத்து பத்தையெல்லாம் மேற்பார்வை பார்த்தாலே போதும் கண்ணு.. இப்படி கஷ்டப்பட வேணாபா”,என்று அவனை வாஞ்சையுடன் நோக்கினாள் பெற்றவள்…

“இப்போ என்ன நான் சாப்பிடணும் அதானே … ஒகே ஒகே அதுக்காக இப்படி பக்கம் பக்கமா எதுக்குமா அட்வைஸ் பண்ற.. “,என்று கூறி விட்டு டைனிங் டேபிளுக்கு வந்து சேரை இழுத்து போட்டு அமர்ந்தான் தீபன்…

“என்னடா… அடுத்த ரவுண்ட் போற போல.. “,என நக்கலடித்தான் தன் நண்பனை..

“அடேய்.. உன் கம்பெனில மாடா உழைச்சு கொட்டுறேன், அதுக்கு ஈடாகுமா இந்த 6 இட்லி “, என்றான்

“அடப்பாவி 6 இட்லி சாப்பிட்டு தான் இப்படி பந்தாவா பேசிட்டு இருக்கியா??😂😂”

“போதும் போதும் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புடா”

“ஏன்டா கடங்காரா..  நீ மட்டும் 6 இட்லி சப்பிட்டியே என் புள்ளை 2 இட்லியாவது திங்கட்டுமே அதுக்குள்ள என்னடா அவசரம்..” என்று கடிந்து கொண்டார் அங்கு வந்த சுந்தரேசன்..

“சூப்பர் பா.. சூப்பர்.. டோட்டல் ஃபேமிலி ஒண்ணு கூடிட்டீங்க இல்ல.. இனி நான் அவ்ளோதான்.. ஆளை விடுங்க சாமி “,என்று கை கழுவிவிட்டு எழுந்து ஓடினான்..

அவசர அவசரமாக உண்டுவிட்டு, “வரேம்மா”, என்ற சொல்லோடு விடை பெற்று கிளம்பினான் தீபன்..

காலை 9 மணி…

தீபன் எக்ஸ்போர்ட்ஸ் என்று பதிக்கப்பட்டிருந்த  எழுத்துக்கள் தங்க நிறத்தில் ஜொலித்தது..!!

இது மட்டுமல்ல.. தீபன் எஸ்டேட்ஸ், தீபன் சூப்பர் மார்கெட், தீபன் restaurant என்று பல விதமான தொழில்களை தன் மகன் பெயரில் நடத்தி வந்தார் சுந்தரேசன்..

நுழைவாயிலில் அவனது கார் நெருங்கியதும், செக்யூரிட்டி எழுந்து வந்து கேட்டை திறந்து விட்டான்.. 

அந்த பெரிய கண்ணாடி கட்டிடத்தில், 3 வது தளத்தில் இருந்தது தீபனின் கேபின்..உள்ளே வேலையில் ஆழ்ந்திருந்த அனைவரும், இவன் வருகை உணர்ந்து எழுந்து நின்று குட் மார்னிங் சார் என்று சொல்ல… பதிலுக்கு சிறு தலையசைப்புடன் கம்பீரமாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்…

கூடவே வந்த பார்த்தூ.. அன்றைய வேலைகள் என்னென்ன, என்ன மீட்டிங் என்று அனைத்து விவரங்களையும் புளி போட்டு நன்கு விளக்கி கொண்டிருந்தான் அவனிடம்… 

இருவரும் பேசி கொண்டிருக்கும் போதே கதவை தட்டும் ஓசை கேட்க…

“எஸ் கமின்…”, என்றான் தீபன்.

மாம்பழ நிறத்தில் மெல்லிய ஜார்ஜெட் சேலை அணிந்து அதற்கு மேட்சாக தோடும் வலையலும் அணிந்திருந்தாள் ஜோதி ….

பளீரென்று இல்லாமல் கண்களுக்கு குளிர்ச்சி தரும்.. இதமான அழகு கொண்டவள், கோதுமை நிறத்துக்கும் சற்று அதிகப்படியான நிறம், வஞ்சரை மீன் போன்ற கண்கள், செர்ரி பழமாய் சிவந்து பளபளக்கும் இதழ்கள், எட்ட நில் என்று எச்சரிக்கும் கூர் நாசி.. பவுர்ணமி போன்ற வட்ட வடிவில் முகம்… அளவெடுத்தார் போன்ற உடல்வாகு அவளுக்கு !!

( உங்க M V : வஞ்சரை மீன் கண்ணா.. இங்கையும் சாப்பாடு தானா🧐🧐🤭🤭)

சார்…இன்னைக்கு முக்கியமான ஃபைல் ஒண்ணு நீங்க சைன் பண்ணனும்.. அதான் எடுத்துட்டு வந்தேன் என்றாள்..

“என்னங்க இதுக்கு போயி நீங்க கஷ்டபட்டு நடந்து வரணுமா என்ன.. ஒரு மெசேஜ் போட்டிருந்தா நானே வந்துருப்பேனே”, என்று ஜொள்ளு விட்டான் பார்த்தூ…

உடனே அவனை ஒரு பார்வை பார்த்து முறைத்து விட்டு.. அவளை நோக்கி கை நீட்டியவன்…

“குடுங்க” என்று ஃபைலை வாங்கி கையொப்பமிட்டு திருப்பி குடுத்தான் தீபன்.

கம்பனி பற்றி மற்ற விவரங்களை கதைத்தவர்கள் …

“ஆ… அப்புறம் ஜோதி நாளைக்கு மதியம் 12 மணிக்கு.. ஒரு important மீட்டிங் இருக்கு கண்டிப்பா வந்துருங்க.. நாம கார்லயே போகலாம் “,என்றான் 

“ஒகே சார்”, என்றுவிட்டு சிறு புன்னகையுடன் விலகி சென்றாள் ஜோதி…

அவள் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டு.. மெல்ல திரும்பி தன் நண்பனின் கையை பிடித்து முறுக்கினான் தீபன்.

“ஏண்டா.. உன் திருவாயை வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டியா.. போற வர எல்லா பொண்ணுங்க கிட்டயும் வழியுற.. நம்ம ஆபிஸ்ல வேலை பாக்குற பொண்ணுங்க ஒருத்தரையும் விட்டு வைக்கிறதில்ல.. எல்லாரையும் சைட் அடிச்சுட்டு திரி.. இப்படியே பண்ணிட்டு இருந்த மவனே அவ்ளோதான் பாத்துக்க..”, என்று மிரட்டினான் 

“இத்தனை பண்ணி என்ன யூஸ்?? அதான் கூடவே இருந்து கெடுத்து விடறதுக்கு ஆள் இருக்கே.. அப்புறம் எந்த காலத்துல எனக்கு கல்யாணம் ஆகும்..உனக்கு தான் கல்யாணத்துல interest இல்ல அதுக்கு என் வாழ்க்கையும் சேத்து பாழாக்க பாக்குறியா …ஏண்டா எலி தான் காயுதுன்னு பார்த்தா, எலி புளுக்கையும் ஏண்டா காயனும்??”, என்று அழாத குறையாக கேட்டான் பார்த்தசாரதி 

“ஏன்னா.. நீ என் நண்பேன்டா!!”, என்று சொல்லி சிரித்தான்…

கல்நெஞ்சக்காரன் தீபனின் உள்ளம் கரையுமா?? உரியவள்  வருவாளா??

                                            – தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page