அத்தியாயம்-23

காலை, ஜெயந்தி கணவன் உணவு மேஜையில் இருந்தபோது, முக்கியமாக பேச வேண்டும் என்றார். அவர் முதலில் எரிச்சலாக இருந்தாலும், என்னவென்று கேட்க . அவள் ஆராத்யா–கரண் காதலிக்கும்  விஷயத்தை முழுவதும்  சொன்னவுடன் அது மினிஸ்டர் குடும்பம் என்று அறிந்தவர், “அவனுக்கு புடிக்கலனா என்ன பண்ண முடியும் ?” என்றார். உடனே ஜெயந்தி, கரன் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணை விரும்புவதை எதிர்த்து, மினிஸ்டர் வீட்டில் கல்யாணம் செய்தால் கம்பெனி வளர்ச்சி, அதிக ப்ராஜெக்ட்ஸ், தம்பிக்குப் பயன் என தனது லாபங்களை சொன்னார். 

 இதைக் கேட்ட செந்தில் ” நீ கரணுக்கு நல்லது பண்றவ கிடையாது. இந்நேரம் நவீனுக்கு தானே அவனை அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கலாம் மனசுல திட்டம் போட்டு இருப்ப  ” என்று மனைவியின் குணம் அறிந்து கேட்டார்.

கணவர் தன் எண்ணத்தை புரிந்ததை அறிந்த ஜெயந்தி, கோபத்தை மறைத்து, “கரண் எனக்கும் பிள்ளைதான்; அவன் அம்மா செய்த தவறுக்கு அவன் என்ன செய்வான்? அவன் நல்ல வாழ்க்கை கிடைக்க நான் நினைக்கக்கூடாதா ?” என்று நல்லவர் போல் பேசினார் . ஆனால் அதே நேரத்தில் கரனின் அம்மாவைப் பற்றியும் மறைமுகமாக குறை கூறவும் மறக்கவில்லை.

மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டவர் “அவன் படிச்சு முடிக்கட்டும் அதுக்கப்புறம் மத்த விஷயங்கள் பாத்துக்கலாம்!”  என்று மட்டும் கூறி உணவை அருந்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார். 

அங்கே வந்த மேகநாதன் “என்னம்மா சொல்றாரு மாப்பிள கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டியா?”  என்றவுடன்

” என்ன நா அவர் பிடி கொடுக்கவே மாட்டேங்குறாரு. பார்ப்போம் நம்ம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்கும் போல அந்த கரன் கிட்டயும் பேசி அந்த பொண்ணு கிட்ட இருந்து பிரிக்கணும். என்ன பண்ணலாம்னு ஒரு முடிவு எடுக்கலாம் !” என்றவுடன் இருவரும் உணவு அருந்தினர். 

இரண்டு நாள் கழித்து, கல்லூரி வந்த அபி எப்பொழுதும் கரண் அமர்ந்திருக்கும் இடத்தை நிமிர்ந்து பார்க்காமல் சென்றுவிட,

 அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் வேகமாக அவள் வகுப்பறைக்குள் செல்லும் முன்பு தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்துக் கொண்டு கார்டன் ஏரியாவிற்கு வந்தவன், அவளது கைகளை விட்டு  கைகட்டி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளோ அப்பொழுதும் தலைகுனிந்த வண்ணமே இருந்தாள். 

அவளுக்கு கண்டிப்பாக தெரியும் இரண்டு நாட்களாக அவன் போன் காலும் எடுக்கவில்லை. மெசேஜ்க்கும் ரிப்ளை செய்யாமல் இருந்ததால் கண்டிப்பாக இன்று அவன் தன்னிடம்  கோபம் கொள்வான் என்று அனைத்திற்கும் தயாராகி வந்திருக்க,   இழுத்து வந்த வேகத்திலேயே அவன் கோபத்தை அறிந்து கொண்டவள்,  முகத்தை மட்டும் பார்த்து விடவே கூடாது அதன் பின்பு தன்னால் மனதை மறைக்க முடியாது என்று தான் தலை குனிந்த வண்ணம் இருக்க, பொறுத்து பொறுத்து பார்த்தவன் பொறுமை பறந்து விட,

” அபி ” என்றான் . அவளோ அமைதியாக தலைகுனிந்து நின்று இருந்தால்.  அதில் கோபம் கொண்டவன், அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்த, அப்பொழுதும் அவள் நிமிராமல் அவனிடம் போராட, அவளுக்கு வலி ஏற்படும் என்று உணர்ந்தவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அருகில் நெருங்கி அப்படியே அவளை தனக்கு மேல் தூக்கிக் கொண்டான்.

 தற்பொழுது அவள் குனிந்து இருந்ததால் இருவராலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிய, தன்னவள்  வாடிய முகத்தை கண்டவன் என்னடி அச்சு ஏண்டி என்னை பாக்க மாட்டேங்குற ரெண்டு நாளா போன்  பண்ணல மெசேஜும் பண்ணல என்னதான் ஆச்சு உனக்கு?”  ஏன் கோபத்தை அடக்கி கொண்டே. 

அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல்  இருப்பதால் அவன் தூக்க அதில் பதட்டம் அடைந்தவள் “விடுங்க என்ன யாராவது பார்த்திட போறாங்க விடுங்க!”  என்றால் அவனிடம் இருந்து கீழே இறங்க துள்ளிக் கொண்டு .

ஆனால் அவனும் “கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லி இருந்தா நான் ஏன் தூக்க போறேன்!  நீ தான் என் முகத்தை பார்க்காமலே இருக்கே!”  என்றவன் கூற்றில் “சரி என்னை இறக்கி விடுங்க நான் உங்க முகத்தை பார்த்தே பேசுறேன்!”  என்றாள். 

அவனும் அவள் பேச்சை கேட்டு அவளை இறக்கி விட தள்ளி நின்றவள் மீண்டும் குனிய “அபி இன்னொருவாட்டி நீ என் ஃபேஸ் பாக்காம குனிஞ்சனா சத்தியமா எனக்கு டென்ஷன் ஆயிட்டு சொல்லிட்டேன் ஒழுங்கா நிமிர்ந்து என்ன பாரு என்ன விஷயம் என்று சொன்னால்தான் தெரியும்?”  என்றான். 

“இல்ல ஒன்னும் இல்ல லேசா தலைவலி அதனால தான்!”  என்றவள் முகத்தை பார்த்தவன் “பொய் சொல்லாத என்ன ஆச்சு என்ன ரெண்டு நாளா உனக்கு தலைவலியா? அப்படிங்கறதை ஒரு மெசேஜ் ஆவது பண்ணிக்கிட்டு இருந்தா நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்திருப்பேன். எனக்கும் மனசு ஆறுதலா இருந்திருக்கும் ரெண்டு நாளா உன்கிட்ட இருந்து மெசேஜ் வரல போன் கால் வரல நான் பண்ணினதுக்கும் ரிப்ளை இல்ல எனக்கு எப்படி இருக்குன்னு சொல்லு. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?”  என்றவன் பேச்சைக் கேட்டவள் மனதிற்குள்ளே ‘இல்லப்பா நீங்க தப்பு பண்ணல நான் தான் தப்பு பண்ணிட்டேன். நீங்க அமைதியா இருந்தப்போ நானும் அப்படியே இருந்து இருக்கணும் என் மனசுலயும் உங்க காதல் நொழஞ்சு இப்ப உங்கள கஷ்டப்படுத்திகிட்டு இருக்கேன்’  என்று நினைத்தாலும் வாயில் வார்த்தை வராமல் இருக்க, 

“ஏன் அபி ஆரம்பத்தில் இருந்து என்ன கஷ்டப்படுத்திட்டே இருக்க?  ப்ளீஸ்  மனசுல நினைக்கிறது சொன்னால் தானே எனக்கு தெரியும்!”  என்றவுடன் கண்களில் கண்ணீர் வழிய அவனை நிமிர்ந்து பார்த்தவள் அழுது கொண்டே கட்டிக் கொண்டாள். 

அதில் பதறியவன் “என்னம்மா ஆச்சு ஏன்டா இப்படி அழற என்னாச்சுன்னு சொல்லுடா ?” என்றான் தலையை தடவிக் கொண்டே.

 அவள் முகத்தை தன்னிலிருந்து பிரிக்க பார்க்க அவளோ அழுத்தமாக அவன் நெஞ்சில் பதிந்து கொண்டால்.  அவளுக்கு தன் ஆறுதல் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தவன் தலையை தடவி விட்டு, நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டே அவளை தன்னுள் இறுக்கி அணைத்துக் கொண்டு நிறுத்த,  சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து அழுகை குறைந்த விசும்பல் மட்டும் வர மெதுவாக அவனிடமிருந்து பிரிந்தால். 

அழுது வீங்கி இருக்கும் அவளது முகத்தை கண்டவனுக்கு மனது வலிக்க “என்ன தாண்டி ஆச்சு?  வாயைத் திறந்து சொல்லேண்டி?”  என்றான்.

” இல்ல ஒன்னும் இல்ல தலைவலி அதனால தான் இரண்டு நாளா என்னால போன் பாக்க முடியல அது இல்லாம பீரியட்ஸ் வேற?”  என்று பொய் உரைத்தால். 

“ஓ அப்படியா சரி சரி இப்ப ஓகேவா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?  உட்காறியா?”  என்றான் பதட்டத்துடன்.

 அதில் லேசாக புன்னகை புரிந்தவள் “இல்லை இப்ப நல்லா தான் இருக்கேன் .சரியா போயிடுச்சு!”  என்றால்.

 அப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு விட்டவன் “எதையாவது என்கிட்ட text  பண்ணி இருக்கலாம் இல்ல நான் ரொம்ப பயந்துட்டேன் டா!”  என்றவன் மீண்டும் அவளது நெற்றியில் முத்தமிட்டான். 

அவளிடம் இருந்து விலகி நின்றவன் “சரி உனக்கு என்ன பிரச்சனையும் இல்ல தானே வேற எதுவும் இல்லையே இருந்தா என்கிட்ட சொல்லிடு உன் முகமே சரியில்லை!”  என்றான்.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல கரண் நான் நல்லா தான் இருக்கேன்!”  என்றவள் அவன் எதிர்பாராத நேரம் இதழில் முத்தம் கொடுத்து விலகி “கிளாசுக்கு டைம் ஆச்சுப்பா நான் கிளம்புறேன்!”  என்று சொல்லிவிட்டு,  வேகமாக அவ்விடம் விட்டு விலகி விட,  அவள் கொடுத்த திடீர் முத்தத்தில் அதிர்ச்சியில் இருந்தவன் அவள் சென்றதும் தான் சுயம் உணர்ந்து தன்னவள் இதழ் தீண்டலை உதட்டை நாக்கால் தடவி உணர்ந்தவன் அவளுக்கு  பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு தனது வகுப்பறைக்கு வந்தான்…

அடுத்து இரண்டு வாரங்கள் அபி தனியாக இருக்கும் பொழுது மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் வெளியே மற்றவர்களிடம் தன்னை நன்றாக இருப்பது சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டால். அவளுடைய முகத்தில் இருந்த சிரிப்பில் போலித்தன்மை இருந்ததை தோழிகள் உணர்ந்தாலும் கேட்டு அவள் மனதை கஷ்டப்படுத்த விரும்பவில்ல. அவள் நடிப்பதை உணர்ந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம் கிட்டத்தட்ட இந்த இரண்டு வாரங்களில் ஆயிரம் முறை கேட்டு விட்டனர் என்ன பிரச்சனை என்று ஆனால் அவ்வளவு வாயை திறக்க வேண்டாம் என்று இருந்தால்.

அடுத்த 15 நாட்கள் பரிட்சை அனைத்தும் முடிந்து விட, அதில் தன்னவளை சரியாக பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்தவன் அவளுக்கு கடைசி நாள் பரிட்சை அன்று அவளை பார்த்து முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லி இருந்தான் .

அவளும் “சரி பார்க்கலாம்!”  என்றால். தற்பொழுது அவன் பரிட்சை எழுதி விட்டு வேகமாக எக்ஸாம் ஹாலில் இருந்து வெளியே வர மாணவர்கள் வருடம் முடிந்த சந்தோஷத்தில் அனைவரும் தங்கள் தோழர் தோழிகளுடன் பேசிக்கொண்டு அந்த இடத்தில் இருந்த கலைந்தனர். 

கரண் அபி  எழுதும் வகுப்பறைக்கு வாசலில் காத்திருக்க அப்பொழுதுதான் அவளும் பேப்பரை கொடுத்துவிட்டு வேகமாக வெளியே வந்தால் அங்கே சிரித்த முகமாக இருந்தவனை கண்ட புன்னகை புரிந்தவள் பேகை எடுத்துக்கொண்டு தனக்காக காத்திருக்கும் சமிக்ஷா மற்றும் வந்தனா இருவரிடமும் பேசிக்கொண்டே கரனுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால். 

அப்பொழுது கரன் உடைய நண்பர்களும் வர அனைவரும் தோழன் தோழிகளிடம் பேசிவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறினர். 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page