மௌனத்தால் உடைந்த காதல் 15

நேசனும், சித்ராவும் மகன் வீட்டிற்கு சென்று இறங்கினர்.

தன் தாயுடன் பேசிக்கொண்டு இருந்தவள்.மாமனாரையும் , மாமியாரையும் பார்த்துவிட்டு திடுக்கிட்டு உள்ளே குரல் கொடுத்தாள் “ஆதி !”என்றபடி ,

மாமியார் வந்திருந்ததால் அசைவம் வாங்குவதற்கு கடைக்கு கிளம்பி கொண்டிருந்தவன். மனைவியின் குரலில் வெளியே எட்டிப் பார்த்தவன் தாய் தந்தையை பார்த்துவிட்டு ,’போச்சு இவங்க ஒரு பக்கம் வந்து நிக்கிறாங்க !’என்று மனதிற்குள் புலம்பினான் .

மாமனார் ,மாமியாரை பார்த்த சுதா,” வாங்க மாமா! வாங்க!” என்று அத்தை என்ற வார்த்தையை தவிர்த்து வரவேற்று இருந்தாள்.

என்ன இருந்தாலும், வீட்டிற்கு வந்தவர்களை “வாங்க!” என்று வரவேற்பது தானே தமிழர் பண்பாடு என்பதால்,

” வரவர” என்ற படியே முனங்கிக் கொண்டே வேறு எதுவும் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்திருந்தார் சித்ரா.

” என்னம்மா கமலா உடம்பு பரவாயில்லையா ?நல்லா இருக்கியா ?”என்றபடி நேசன் வர.

“நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க ?உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா ?”என்றவர் சம்பந்தியை வரவேற்க வேண்டியதும் தன் கடமை என்பதால் ,”நல்லா இருக்கீங்களா அண்ணி! உடம்ப பரவாயில்லையா?”

” அதுக்கு என்ன? நல்லாத்தான் இருக்கேன்” என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டி திரும்பினார்.

எதுவும் பேசவில்லை நேசன் சிரித்துக் கொண்டே அமைதியாகி விட்டார். தன் மகனையும், மருமகனையும்  பார்த்தார் . இருவரும் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருப்பதை பாவமாக பார்த்தார். அதன் பிறகு ,ஆதித் தான் தெளிவு பெற்று,” டீ போடு சுதா. நான் போயிட்டு பொருள் வாங்கிட்டு வரேன் “

“அங்க எங்கடா போற ?உக்காரு. பொறுமையா வெளியே போய்க்கலாம்”

” இல்லம்மா”

” நீ உட்காரு டா” என்று தன் கையோடு உட்கார வைத்துக் கொண்டார்.

சுதா கிச்சனுக்குள் நுழைந்து டீ போட முயல, அங்கு தொண்டையை கணைத்தபடி நுழைந்தார் சித்ரா .

அவளும் திரும்பிப் பார்த்தாள் .எதுவும் பேசாமல் டீ போட்டதை அவரிடம் நீட்ட.

” வேணாம் நான் காலைல குடிச்சிட்டு தான் வந்தேன். என்னைக்கு நான் ரெண்டு, மூணு டீ குடிச்சி இருக்கேன். காலையில, சாயங்காலம் மட்டும் தானே நமக்கெல்லாம்” என்றவர். தான் எடுத்துக் கொண்டு வந்த கட்டப்பையில் இருந்து ஒன்றை எடுத்து திட்டின் மீது வைத்தவர்.

கிச்சனை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு ,”எல்லாம் நேர்த்தியா தான் வச்சிக்கிற போல பரவால்ல” என்று கூறியபடி தான் எடுத்துக் கொண்டு வந்த பையில் இருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார் .
 

அவள் அவர் செய்வதை பார்த்தபடி நிற்க.

” இதுல சின்ன வெங்காயம் உரிச்சது இருக்கு, இது இஞ்சி பூண்டு பேஸ்ட், இது தக்காளி பேஸ்ட், இது ஆதிக்கு பிடிக்கும்னு சில்லி சிக்கனுக்கு மசாலா தடவி வச்சது, இது பசங்களுக்கு பிடிக்கும்னு மீனு வறுக்குறதுக்கு மசாலா தடவி வச்சது, இந்த மீனு மதியத்துக்கு குழம்புக்கு வாங்குனது ,கழுவியாச்சு,  இது காலையில மட்டன் குழம்பு வச்சுக்கலாம்னு வாங்கிட்டு வர சொல்லி இருந்தேன் அவரை, அது எல்லாம் அங்க புள்ளைங்க வரும்னு ரெடி பண்ணி வச்சேன். அதனால ,அப்படியே தூக்கிட்டு வந்தாச்சு ,காலையில என்ன செய்யலாம்னு இருக்க ?”என்றார் .

“மாவு இல்ல, சப்பாத்தி தான் போடணும் “

” அதெல்லாம் ஒன்னும் வேணாம். இது பழைய மாவு இட்லி ஊத்திக்க. இது இன்னைக்கு காலைல ஆட்டின மாவு” என்று ஒரு பக்கமாக எடுத்து வைத்தவர்.

” இது ரெண்டு நாளைக்கு வரும் வெச்சு ஓட்டிக்கு” என்ற படி தான் எடுத்துக் கொண்டு வந்த அனைத்தையுமே அங்கு அங்கு அவளுக்கு வேலை வைக்காமல் ஒதுங்க வைத்துவிட்டு , கட்டப்பையை உதறி மடித்து அங்கு ஒரு மூலையில் செல்ஃபில் வைத்தவர். இன்னொரு கட்டப்பையை எடுத்து “வாழைப்பழம் இரண்டு சீப்பு ஐம்பது ரூவானு நம்ம பக்கத்து வீட்டு பத்மா வித்தா, அதான் வாங்கினேன். இது அசைவம் சாப்பிடும் போது தட்டுலையா சாப்பிடுறதுன்னு தோட்டத்துல அறுத்த இலை” என்று இலையையும் ஓரிடத்தில் வைத்தவர் .”கீர நேத்து சாயங்காலம் தான் வித்துச்சு, இலங்கிரையா அதான் வாங்கினேன். ஆஞ்சி தான் இருக்கு “என்றபடி, அங்கு இருந்த பிரிட்ஜை திறந்து, அதிலேயே வைத்து விட்டு,”பொழுது போகலன்னு கோவிலுக்கு போயிட்டு வரும்போது வசந்தா தெருமுனையில பூ வித்துட்டு இருந்தா, நல்லா குண்டு குண்டா இருந்துச்சு, நெறுவ கட்னா நல்லா இருக்கும் இல்ல, அதான் வாங்கி கட்டினேன் “என்றவர் மருமகளுக்கு நெறுவ கட்டினால் பிடிக்கும் என்பதை குறிப்பிடாமல் நெறுவ கட்டினா நல்லா இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார்.

அவள் மனதிற்குள் சிரித்துக் கொண்டு, தன் மாமியாரை தான்  கண்கள் விரியப் பார்த்தாள்.

வேறு எதுவும் பேசாமல் அந்த கட்டபையையும் உதறி சுருட்டி அங்கே வைத்துவிட்டு ,”சீக்கிரம் வேலைய பாரு மணி  என்ன? இப்பதான் விடிஞ்சது போல, மணி 7:30-க்கு மேல ஆகுது, இப்பதான் டீயே வைக்கிற. பிள்ளைங்க எல்லாம் சாப்பிடாதூங்க நேரம் காலத்துல “என்றபடி முந்தானையை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு வெளியே கிளம்பினார்.

இங்கு லேசாக பயப்பந்து உருள உட்கார்ந்து இருந்தது என்னவோ ஆதியும் ,கமலாவும் தான்..

  சுதாவிடம் எதுவும் வம்பு செய்வாரோ ?என்ற பயம் இருவருக்கும். ஆதி தன் தாயைப் பார்க்க.

” என்னடா எந்த நேரம் பார்த்தாலும், உன் பொண்டாட்டி இருக்க இடத்தையே சுத்தி சுத்தி பாத்துட்டு உக்காந்துக்குற. வயசு பையன்னு நினைப்போ , ஒன்னுக்கு ரெண்டு புள்ள இருக்குனு கூட இல்லாம,பெத்தவங்களும், மாமியாரும் இருக்காங்கனு கொஞ்சமாச்சு இங்கிதம் வேணாம். இப்படி வாய பொலந்துட்டு நிக்காதே அசிங்கமா இருக்குது  பெத்தவளுக்கு” என்று தன் மகனின் தாடையில் ஒரு இடி இடித்தவர்.

” போ டீ போட்டுட்டா எடுத்துட்டு வந்து வை. உங்க அப்பா குடிப்பாரு, உங்க அப்பாவுக்கு ஒரு நாளைக்கு ஓராயிரம் டீ கொடுத்தாலும் குடிப்பாரு. அதுவும் மருமக கையாலனா வேணாம்னா  சொல்ல போறாரு” என்று நொடிந்து கொண்டார் .

அவனுமே எழுந்து உள்ளே செல்ல.

தாய் எடுத்துக்கொண்டு வந்த அனைத்தையும் சுற்றி கண்களை சூழலவிட்டபடி பார்த்தவன் “என்ன வேணும் சுதா.என்ன வாங்கிட்டு வரது ?”என்று கேட்க.

” எதுவும் வேணாம் .நீங்க போயிட்டு டீ குடிங்க” என்று கணவன் கையில் டீ கொடுத்துவிட்டு ,அவள் அடுத்தடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

ஆதி வெளியே சென்ற பிறகு, கமலா கிச்சனுக்குள் நுழைந்தார். “என்னடி உன் மாமியார் எதுவும் திட்டிட்டாங்களா?”

” அதெல்லாம் எதுவும் இல்லமா”

“அப்புறம் வேகமாக வந்தாங்க?”

“எடுத்துட்டு வந்த பொருளை எடுத்து வச்சுட்டு போனாங்க” என அனைத்தையும் காட்ட.

“பேர புள்ளைங்களை பாக்க வந்தாலும்,உனக்கு வேலை வைக்கிற மாதிரி ஆயிடுச்சு. நீ என்ன செய்யனும்னு சொல்லு கூட மாட பார்க்குறேன் “என்று கூடமாக வேலை செய்தார்.

அனைத்தும் செய்து சாப்பிட்டு விட்டு,  காலை உணவிற்கு பிறகு ,பேரப்பிள்ளைகளை மூவரும் தூக்கி கொஞ்சினர்.

ஆனால் ,இங்கு சுதாவிற்கு தான் வேலை ஓய்ந்த பாடில்லை. என்னதான் மீன் கழுவிக்கொண்டு வந்திருந்தாலும், கறி சுத்தம் செய்து இருந்தாலும், இஞ்சி, பூண்டு பேஸ்ட் என முதற்கொண்டு எடுத்துக் கொண்டு வந்திருந்தாலும், வேலை செய்தபடியே இருக்கும் படியாகத்தான் இருந்தது.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு கிளம்பினர். அன்று இரவு  அசதியில் உறங்கி இருந்தாள்.

அடுத்த வாரமும் இதே தொடர்ந்தது. கமலாவும் வந்திருக்க. இங்கு சித்ரா அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு கிளம்பி இருந்தார் .

“என்ன சித்ரா விளையாடிட்டு இருக்கியா” என்றார் நேசன்.

“இதோ பாருங்க உங்க தங்கச்சிக்கும் பேர புள்ளைகளை பாக்கனும்னு சொன்னீங்க நீங்க. நான் எதுவும் சொல்லல .பிள்ளைகள இங்கே கூட்டிட்டு வந்தா தான் தப்பு .நம்ம அங்க போறதால எந்த தப்பும் இல்லைல” என்றதும் எதுவும் பேச முடியாமல் நேசன் மனைவியை அழைத்துக் கொண்டு மகன் வீட்டிற்கு  வர .

ஆதி தான் பாவமாக தந்தையை பார்த்தான்.

” என்னால முடியலடா. எப்படித்தான் சரி கட்றதுனு தெரியல”  என புலம்பினார்.

முதல் வாரம் அங்கு சென்று விட்டு வந்த அன்றே, உதயா பிடி பிடி என பிடித்து விட்டாள் தாயிடம்,

” என்னமா வார வாரம்  உன்  புள்ளைங்களையும் வர சொல்லு பாத்துக்குறேன்னு சொன்ன. இப்போ நீ போய் உன் மகன் வீட்ல உக்காந்து இருக்க போல, அங்க போய் ஓசி சோறு தின்னுட்டு வரலாம்னு முடிவு பண்ணிட்டியோ” என்றாள் சிறிதும் கூச்சமின்றி,

“நாக்கை இழுத்து வச்சு அறுத்துருவேண்டி. இப்படி ஓசு சோறுனு பேசுற வேலை இருந்துச்சுன்னு வச்சுக்கோ. நீ தினமும்தான் இங்க வர. அதுக்காக நீ ஓசு சோறு தின்றதா ஆகுமா? பெத்த பிள்ளைக்கு தாயும், தாய்க்கு பெத்த பிள்ளையும் போடுற சோறு, ஓசு சோறு கிடையாது டி, அது அவங்க அவங்க பொறுப்பும் ,கடமையும் கூட .

என் பேர புள்ளைங்க இங்க வர முடியாம இருந்துச்சுன்னு நான் அங்க பாக்க போனேன். உன்ன தான் ஏற்கனவே சொல்லிப்புட்டேன் இல்ல, புள்ளைங்க வீட்ல இருக்குதுங்க இல்ல, தினமும் பொழுதுபோய் கூட்டிட்டு வா சரியா ,இல்லையா புள்ளைங்களை  என்கூட அனுப்பிவிடு  ,ஞாயிற்றுக்கிழமை அவங்களையும் கையோட  கூட்டிட்டு போற, அதனால என்ன வந்துறபோது, புள்ளைங்களோட புள்ளைங்களா விளையாட போது, இங்க இருக்கும்போது சுதா புள்ளைங்களை நல்லா தான் பாத்துக்கிட்டா, உன்ன மாதிரி கிடையாது சரியா?”

” மருமகளை உயர்த்தி பேசுறியோ?”

“உயர்த்தியும் பேசல ,இறக்கியும் பேசல ,அவ ஒரு விஷயம் பண்ணது புடிக்கலைன்றதுக்காக, மொத்தமா அவளையே நானு தூக்கி எறிஞ்சு பேச முடியாது இல்ல ,இங்க இருக்க வரைக்கும் வேலைக்கே போயிருந்தாலும் , புள்ளைங்க லீவ் நாளில் வீட்டுக்கு வந்துச்சுன்னா எதுவும் அவள் கையால செஞ்சு போடாம இருந்தது கிடையாது. குளிக்க வைக்கிறதுல இருந்து ,எல்லா வேலையும் பார்க்க தான் செய்வா. சரியா, துணி துவைச்சு போடுறது, ஸ்கூல் நாள்ல வந்துச்சுன்னா கூட புள்ளைங்களுக்கு சாப்பாடு கட்டி தர்றதுல இருந்து படிக்க வைக்கிறதுல இருந்து எல்லா வேலையும் செஞ்சிருக்கா.அதை மறந்துடாத உதயா ,அம்புட்டு தான் சொல்லுவேன்!  எங்க கூட  நீ அனுப்பி விடு புள்ளைங்கள பாத்துட்டு வந்துர போற ,பொழுதுக்கும் அவங்க கூட இருந்துட்டு” என மகளை ஒரே வார்த்தையாக அடக்கி விட்டார்.

அடுத்த வாரமும் கணவருடன் கிளம்பிவிட்டார். அனைத்தையும் செய்து எடுத்துக் கொண்டு,

என்னதான் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தாலும், அவளுக்கு பொழுதுக்கும் சமையலறை, வீட்டை பெருக்குவது, பாத்திரத்தை கழுவுவது ,துணி துவைப்பது என்று நேரம் சென்றது .

அந்த வாரமும் அனைத்தையும் செய்து சாப்பிட்டுவிட்டு அனைவரும் கிளம்ப ..

“ஒரு நிமிஷம் நான் பேசணும்!” என்றான் ஆதி.

மூவருமே அவனை பார்க்க.

” அப்பா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” என்றவன் தாய், தந்தை, மாமியார் மூவரையும் பார்த்தான்.

மூவரும் அவனைக் கேள்வியாக பார்க்க.
 

சுதா தான் ஒன்றும் புரியாமல், ‘பிரச்சனை ஏதாவது செய்து விடுவாரோ ?’என்று அஞ்சியப்படி பார்த்தாள்.

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“நீங்க மூணு பேருமே இங்க வர போக இருங்க. அதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனா, இனி வாரவாரம் வார கடைசி நாள் வராதீங்க. ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு ஒரு நாள் தான் என் பொண்டாட்டிக்கு ரெஸ்ட் .ஆனா, நீங்க இங்க வர்றதால அது கிடைக்க மாட்டேங்குது அவளுக்கு.

நீங்க என்னதான் அசைவம் செய்ய தேவையான எல்லாத்தையும் எடுத்துட்டு வந்தாலும், நீங்களே கழுவி எடுத்துட்டு வந்தாலும், இஞ்சி பூண்டு உரிச்சி எடுத்துட்டு வந்தாலும், அவ பொழுதுக்கும் சமைய கட்டுலே  இருக்க மாதிரி இருக்கு. அது இல்லாம வூட்டப் பெருகிறது, பாத்திரம் தேய்க்கிறது, துணி துவைக்கறதுல இருந்து நிறைய வேலை இருக்கு.

இத்தனையும் பார்க்கும்போது நடுவுல அவளால நிம்மதியா தூங்கி எழுந்திருக்க முடியல. வாரம் ஃபுல்லா ஓடுறா காலையில் எழுந்திருச்சு அவசர அவசரமா செய்யணும் .திரும்ப வீட்டுக்கு வந்து அவசர அவசரமா செய்யணும். நிக்காம ஓடிக்கிட்டே இருக்கா ,அவளுக்கான நேரம் அந்த ஞாயிற்றுக்கிழமை தான். அதுவும் கிடைக்காம பண்றீங்க.

இன்னும் சொல்லப்போனால், பசங்களோடவே அவளால இருக்க முடியல. அதுவும் குறைஞ்சிட்டே போகுது. நீங்க இங்க வரீங்க, நான் வேணாம்னு சொல்லல. மூணு பேருமே வரப்போக இருங்க. ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்ல இருங்க ,உங்களுக்கு பேர புள்ளைங்கள பாக்கணும் அவ்வளவுதான!

ஆளுக்கு ஒரு வீட்டுக்கு ஒரு வாரம் நானே கொண்டு வந்து விடுறேன். பொழுதுக்கும் இருக்கட்டும், சாயங்காலமா வரும்போது அவளையும் கூட கூட்டிட்டு வரேன் கொஞ்ச நேரம் உங்க கூட அவளும் இருப்பா” என்று கமலாவிடம் கூறியவன் ,தாயிடம் அந்த வார்த்தையை கூறவில்லை. தன் மனைவியாக விருப்பப்பட்டு அந்த வீட்டிற்கு போகலாம் என்று கூப்பிடும் வரை, அவளை அழைத்துக் கொண்டு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. என்பதை கூறாமல் கூறியிருந்தான் .

அதை உணர்ந்த சித்ராவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். “தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு என் பொண்டாட்டி முக்கியம்! இனியும் என் பொண்டாட்டிக்காக பேசாம இருந்தா, நான் மனுஷனா இருக்குறதுக்கே தகுதி இல்லாதவனா மாறிடுவேன். அப்பப்ப எல்லா உறவுக்கும் உறவாய் இருக்கணும்னு நினைக்கிறவன் ,பொண்டாட்டிக்கு புருஷனா இருக்குறத மட்டும் எல்லா இடத்திலும் தவற விட்டுட்டே இருக்கேன். இனியாவது என் பொண்டாட்டிக்கு புருஷனாவும் இருக்கணும் ஆசைப்படுறேன். நான் கூட்டிட்டு வந்து விட்டுட்டு, திரும்ப சாயங்காலம் நானே கூட்டிட்டு வந்துடுறேன் .ஆனா ,இங்க மட்டும் வராதீங்க, உங்களை எப்பவும் வர வேணாம்னு சொல்லல.

வரப்போக இருங்க .ஆனா ஞாயித்துக்கிழமை ஒரு நாள் அவள நிம்மதியா தூங்க விடுங்க. ரெஸ்ட் எடுக்க விடுங்க. அவளுக்கான நாளா அன்னைக்கு ஒரு நாள் இருக்கட்டும்” என்று கையெடுத்து கும்பிட்டவன் .

தன் தந்தையிடம் தாயை கூட்டிக்கொண்டு செல்ல கூறிவிட்டு, மாமியாரை அழைத்துக் கொண்டு அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்தான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், வேகமாக கண்கள் கலங்க, சிவந்த விழிகளுடன் அவனை கட்டி அணைத்து இருந்தாள் அவனின் பாதியாளவள்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page