“இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே புரிந்திருந்தால் என் காதலை என்னுள்ளே புதைத்து கொண்டிருப்பேன் “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -20
ஒரே நாளில் எல்லாம் தலை கீழாய் மாறி விட்டது. தனது அறையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வர்மா,
கதவினைத் தட்டும் சத்தம் அவன் செவிகளில் விழ, கண்கள் திறந்து பார்த்தவன் செவிகளில்
“மே ஐ கம் இன் சார் ” புதிய குரல் கேட்டதில் காற்று போன பலூன் போல அவன் முகம் வாடத் தொடங்கியது. மீண்டும் அதே குரல் கேட்க, எரிச்சலுடன் “எஸ் ” என்றான்.
“சார் இந்த பைல்ல சைன் போடணும் ” வாங்கியவன் அதை படித்துப் பார்த்து, கோவத்துடன் கீழே வீசி எறிந்தான்.
“உங்களுக்கு எல்லாம் கண்ணு தெரியுமா தெரியாதா, எவ்ளோ மிஸ்டேக்ஸ் அந்த பைல்ல கூப்டு அந்த இடியட்ட “
“செந்தில் சாரையா சார் ” புதிதாக சேர்ந்திருக்கும் பி. ஏ மிதுனா சொல்ல
“வாட் செந்திலா ” விஜய் இல்லையா, அவளும் என்னை விட்டு பிரிந்து போனாள், நீயும் இப்போது இல்லை, சிறு வயதில் இருந்தே எனக்கு இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் யார் மேல் அன்பு வைக்கிறேனோ அவர்கள் என்னை விட்டு பிரிந்து சென்று விடுகிறார்கள்.
நண்பன் என்னுடன் இருப்பான் என்று நினைத்தேன் என்னை பற்றி புரிந்து கொண்டது அவ்வளவு தானா, எனக்காக ஒருத்தி இருக்கிறாள் என்று என் மனம் கொண்ட மகிழ்விற்கு அளவே இல்லை, என்னை மாற்றியவள் அவள் என் வலிகளுக்கு மருந்து அவள் இதழ்களில் இருந்ததே, அவள் வசம் நான் ஆகி விட்டது எப்படி அவளுக்கு புரியாமல் போனது.
அவன் மனதிடம் மானசீகமாய் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அது திருப்பி ஒரு கேள்வி தான் கேட்டது ‘நீ செய்தது சரியா, அவளிடம் காதலை சொன்னாயா, அவளை காதலிப்பது நிஜம் என்றால் அந்த நிதிஷாவை எதற்கு திருமணம் செய்ய சம்மதம் சொன்னாய் ‘
நான் திருமணம் செய்ய வில்லையே மனதில் ஒருவளை நினைத்த பிறகு வேறொருத்தியை எப்படி நினைக்க முடியும், அது கூடவா புரியாது. அவன் மனதில் மாநாடு நடத்திக் கொண்டிருப்பது புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்த மிதுனா
“சார் ” என்று அழைத்ததில் எண்ணங்களை ஓரம் நிறுத்தியவன். குரலை செருமி “நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு, இதை சரி பண்ணி எடுத்துட்டு வாங்க “
கீழே கிடக்கும் பைலை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவள், பிழைகளை திருத்தி மீண்டும் ஒரு முறை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்த பின்பே வர்மாவிடம் கையெழுத்து வாங்கினாள்.
எழுந்தவன்’ நான் 1 மாசம் இங்க இருக்க மாட்டேன். என்னென்ன பண்ணனும் மீட்டிங் எப்படி அட்டென்ட் பண்ணனும் சைன் இது எல்லாம் விஜய் வந்து பார்த்துக்குவான் “
காரினை எடுத்துக் கொண்டு செல்ல, வழியில் சுக்கு காபி விற்கும் வண்டியைப் பார்த்ததும் நிறுத்தினான். வர்மாவைக் கண்டதும் சிரித்த முகத்துடன் வர்மாவை நோக்கி வர, தான் வருவதாக கை அசைத்தவன் தள்ளு வண்டி கடையின் முன் நின்றான்.
பொருட்களை அழாய் அடுக்கி பார்க்கவே மினி ஹோட்டல் போல் இருந்தது. ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு நிற்கும் வர்மாவிடம் தயங்கிய படி “சாப்பிடுறீங்களா சார் “
“வேணா பாண்டி “
“ரொம்ப டல்லா இருக்கீங்களே சார், அக்கா உங்க கூட இல்லையா “
டீ விற்கும் இவனுக்கு கூட என் சோர்வின் காரணம் அவள் தான் என்று புரிந்திருக்கிறதே, நமக்கு தான் இது புரிய இத்தனை நாட்கள் தேவைப் பட்டிருக்கிறது. பெரு மூச்சு விட்டவன்.
“எனக்கு சுக்கு காபி போட சொல்லி கொடுக்குறியா ” வர்மாவின் மென்மையான குரலில் விழி விரித்துப் பார்த்தவன்.
“என்ன சார் இந்த கடையே நீங்க வச்சு கொடுத்தது தான். கத்துக் கொடுன்னு ஆர்டர் போடுங்க சார், அதை விட்டுட்டு இவ்ளோ சாப்டா பேசுறீங்க, வர்மா சார்னா கெத்து, அப்டியே ஒரு பார்வை பார்பீங்களே அது உங்களுக்கு எவ்வளவு சூப்பரா இருக்கும் தெரியுமா, கம்பீரமான பேச்சு, நீங்க நடந்து வரது, அதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார், நீங்க அதே மாதிரி இருங்க, இப்டி வேணாம்”
பாண்டி, வர்மாக்கு சுக்கு காபி போட சொல்லிக் கொடுக்க, வர்மாவும் கற்றுக் கொண்டு அடுத்து வந்த கஸ்டமருக்கு காபி போட்டு கொடுத்து, அவர் நல்லா இருக்கு என்று சொன்ன பிறகே சிரித்த முகத்துடன் வீட்டிற்கு சென்றான் வர்மா.
பாண்டிக்கு ஏனோ உதவி செய்ய வேண்டும் என்று ஆரண்யா ஒரு முறை வர்மாவிடம் சொன்னதை நிகழ்த்தி காட்டினான். கடை வைத்து தருவதாய் வர்மா கேட்டிட, பாண்டியோ
“சார் எனக்கு தள்ளு வண்டி கடை போதும், நான் கண்டிப்பா உழைச்சு கடை வச்சிடுவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு சார் ” என்றதும் அவன் வார்த்தைகள் தந்த நம்பிக்கையில் அவன் கேட்டதை மட்டும் செய்தவன் போகும் வழியில் பார்த்து, பேசி விட்டு செல்வான்.
வீட்டிற்கு வந்தவன் அம்மாவிடம் “பசிக்குது மா ” என்றிட
3 மாதங்களாக சரியாக சாப்பிடாமல், பேசாமல் இருக்கும் மகன் கேட்டதும் கண்ணீர் வந்து விட்டது அவருக்கு தோசையும், தக்காளித் தொக்கும் வைத்து மகனுக்கு ஊட்டி விட சாப்பிட்டவன் படுக்க சென்று விட்டான்.
வர்மாவின் அப்பாவிற்குத் தான் மனசு தாங்காமல் மனைவியிடம் வந்தவர் “எல்லாம் என்னால தான். எப்படி இருந்த என் பையன் இப்டி ஆகிட்டான். எனக்கு மன்னிப்பே கிடையாது” தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதிட,
அவரின் கைகளை பிடித்துக் கொண்டவர் “வர்மா உங்களை தப்பா நினைக்க மாட்டாங்க, அவனுக்கு ஏதோ வேலைல பிரச்சனை அதான் இப்டி இருக்கான். இப்போ கூட என் கையால சாப்பிட்டு தான் போனான். அவன் நல்லா தான் இருக்கான். நான் பேசுறேங்க “
மகனின் நிலை தெரிந்திருந்தும் அழும் கணவரிடம் ஆறுதல் வார்த்தை சொல்ல,
“இல்லை மா எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என் பிரண்ட் பொண்ணு நிதிஷாவா நான் தான் வர்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினச்சேன். வர்மாவுக்கு ஆபீஸ்ல வேலை செஞ்ச ஆரண்யாவ தான் பிடிச்சிருந்தது.
அவ பொண்ணும் என் மனச மாத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருந்தாங்க, அவங்களோட உண்மையான குணம் தெரியாம நானும் தப்பு பண்ணிட்டேன்.
அவளுக்கும் வருணுக்கும் தப்பான பழக்கம் இருந்தும் பணத்துக்கும், பேருக்கும் ஆசைப்பட்டு நம்ம பையன் வாழ்க்கையை கெடுக்க பார்த்திருக்கா. வர்மா அதை தெரிஞ்சிக்கிட்டு தான் கல்யாண மேடை வரைக்கும் வந்து கல்யாணத்தை நிறுத்திட்டு அவங்களுக்கே கல்யாணம் பண்ணி வச்சிட்டான்.
ஆரண்யா இப்போ இங்க இல்லை. நானும் நிறைய இடத்துல விசாரிச்சிட்டேன். என்னால அந்த பொண்ணு இருக்குற இடத்தை கண்டு பிடிக்க முடியல. அந்த பொண்ணை நினச்சு தான் வர்மா இப்படி ஆகிட்டான்”
3 மாதங்களாக மனதில் இருந்த பாரத்தினை மனைவியிடம் போட்டு உடைக்க, எதுவும் தெரியாத அப்பாவியாய் இத்தனை நாட்கள் இருந்திருக்கிறோமே, இதில் வார்மாவின் காதல் விஷயமும் தெரிய வர, மகன் தன்னிடம் சொல்லவில்லையே என்ற வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிய,
நான் உன்கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கணும். நீ வர்மா மேல கோவபடாத, நான் என் பயன் கிட்ட மன்னிப்பு கேட்கணும் “
எப்போதும் திமிராக, பணத்தாசையில் பேசும் கணவரின் வார்த்தைகள் இன்று மகனுக்காக, பாசத்துக்காக குற்ற உணர்ச்சியில் பேசும் கணவரின் வார்த்தைகளில் புரிந்து கொண்டார் முழு தவறும் கணவன் மீது தான் என்று வர்மாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவர்,
சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்த கணவரை சாப்பிட வைத்து, காலையில் வர்மாவிடம் பேசலாம் என்று ஆறுதல் சொல்லி கணவரை தூங்க வைத்தார்.
தினமும் அவனுக்காய் காத்திருப்பது தான் நிலாவின் வேலை ஆகி விட்டது. வர்மாவின் ஆஃபிஸில் வேலையை விட்டு வெளியே வந்தவன் வர்மா கல்யாணத்தை நிறுத்தி அந்த வருணுக்கு கல்யாணம் செய்து வைத்தது கேள்வி பட்டும் அவனைப் பார் க்க செல்லவில்லை.
வர்மாவும் விஜய்யை வந்து பார்க்கவில்லை. காதலித்தவள் அவ்வாறு இருக்க முடியாதே, வர்மாவிடம் வேலை செய்தவனுக்கு வேறு யாரிடமும் வேலை செய்ய பிடிக்கவில்லை, சொந்தமாக கன்ஸ்டரக்ஷன் கம்பெனி தொடங்கி விட்டான்.
இரண்டு மாதங்களாக போராடி இப்போது தான் பெரிய காண்ட்ராக்ட் ஒன்று வந்திருக்க, அதை முடிக்க தான் இரவும், பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறான். நிலாவும் கல்லூரி முடித்து விட்டு வர்மாவின் ஆஃபிஸில் தான் வேலைக்கு செல்கிறாள்.
வேலை முடிந்ததும் விஜய் வேலை செய்யும் இடத்திற்கு வந்து விடுவாள். வண்டியிலே அமர்ந்து சிறிது நேரம் தன்னவனைக் கண்களால் நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்று விடுவாள்.
அன்று அவள் அறையில் விஜய் என்று பெயர் எழுதி இருந்த தலையணைப் கட்டிப் பிடித்தபடி மயங்கி கிடந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பியவன் சாப்பிட வைத்து அறிவுரை சொல்லி விட்டு சென்றான்.
அவன் சொன்ன அறிவுரை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அடுத்த நாளே அவன் முன் காதலைச் சொல்லி நின்றவளை ஏறிக்கும் பார்வை பார்த்தவன் அவளிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்து வந்தான்.
3 மாதங்கள் கடந்தும் இதோ விஜய்யைப் பார்க்க எப்போதும் போல நிலா வண்டியில் காத்திருந்தாள். விஜய்யை பார்க்க முடியவில்லை. அவன் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தான். எப்போதும் சிறிது நேரம் பார்த்து விட்டு சென்று விடுபவள் இன்று அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் காத்திருக்கிறாள்.
வேலை முடிந்து அனைவரும் சென்ற பிறகும் அவள் வெறித்த பார்வையுடன் அந்த இடத்திலேயே இருந்தாள். வேலை முடித்து சென்றவர்கள் விஜயிடம் நிலா காத்திருப்பதை சொல்லி விட்டு தான் சென்றார்கள். சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றுவிடுவாள் என்ற எண்ணத்தில் விஜய் இருந்தான்.
இருட்டத் தொடங்கியது லேசான தூறலும் விழ, அவள் மட்டும் அசையவில்லை. நீண்ட நேரமாக இவளைப் பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் மது போதையில் தள்ளாடியபடி இவளைச் சுற்றி நிற்க, பென்னவளுக்கு லேசாக பயப்பந்து உருள ஆரம்பித்தது.
“என்னா பொண்ணு தினமும் இங்க வந்து பார்த்துட்டு போற, இன்னைக்கு அவன் இல்லையா ” தாடியுடன் இருக்கும் ஒருவன் சிரிப்புடன் அவளைக் கேட்க,
உயரமாய் நிற்கும் மாற்றொருவனோ “இன்னைக்கு நம்மள பார்த்துட்டு போகட்டும் டா ” என்றான் இரட்டை அர்த்தத்தில்,
மூன்றாமாவனோ அவளை நெருங்க, இன்னொருவன் யாரேனும் வருகிறார்களா என்று சுற்றிலும் பார்வையை விட்டவன் நிலாவின் பின் பக்கமாய் வந்து அணை கட்டி நிற்க, நால்வரின் துகிலுறிக்கும் பார்வையில் மழை நீருடன் அவளின் கண்ணீரும் கறைந்து மறைந்தது…
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
