“காற்றில் துழாவும் என் கைகளில் அகப்படாமல் இருக்கும் உன்னை கண்கள் மூடிய நிலையிலும் உணர்கிறேன் என்னுடன் நீ இருப்பதை “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….
பாகம் -21
தன்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டிருப்பவர்களின் பார்வைகள் மழை நீரில் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் தன் மேனியில் படிவது பொறுத்துக் கொள்ளாமல் யாரேனும் வந்து காப்பாற்றுவார்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே பார்த்தாள்.
அவள் கண்களில் இருந்த பயம் மறைந்தது. நடுங்கும் மேனியில் நடுக்கம் குறைந்து அவளின் கைகள் வண்டியை இயக்குவதற்கு முயல, அதை தாடிக்காரன் நிறுத்துவதற்கு கையை தூக்க, அவன் கையில் மேல் வந்து விழுந்தது ஒரு மரக்கட்டை,
எதிர்பாராமல் வந்து விழுந்த கட்டையால் அவன் கை வலி எடுக்க, யார் அடித்திருப்பார் என்று பின்னே திரும்பி பார்த்தான். சிவந்த கண்களுடன் தன் கைப் பகுதி சட்டையினை மடித்துக் கொண்டவன் தலை முடியினை முன் பக்கத்திலிருந்து தலையின் பின் கழுத்து வரை கையினால் இழுத்து விட்டவன் புருவம் உயர்த்தி பார்த்த பார்வையில்
நால்வரும் பயந்து நிலாவை விட்டு கொஞ்சம் நகர்ந்தனர். ஏற்கனவே விஜய் மேல் காதலில் விழுந்தவள் இன்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து மழையில் நனைந்ததால் அவன் போட்டிருந்த வெள்ளை சட்டை நனைந்து அவன் தோளினையும், அகன்ற மார்பையும் வடிவாய் காட்டிட,
அவனை ரசித்துக் கொண்டிருந்தாள் நிலா. தாடிக்காரனை பின் பக்க சட்டியினைப் பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தியவன் அவன் கையினை பின் பக்கமாய் மடித்து இழுக்க கை பின் புறம் திரும்பிக் கொண்டது வலியில் துடித்தவனை முதுகில் ஓங்கி மிதிக்க அவன் உயரமானவன் மேலே விழுந்தான்.
இருவரும் கீழே விழ கீழே இருந்த கட்டையினை எடுத்து இருவரையும் அடிக்க, மற்ற இருவரும் விஜய்யை பிடித்துக் கொள்ள, அவர்களிடம் இருந்து நழுவி கட்டையால் நால்வரையும் புரட்டி எடுக்க, அடி தாங்கமல் நால்வரும் ஓடி விட்டனர்.
கட்டியை தூக்கி வீசியவன் கோவத்துடன் நிலாவைப் பார்க்க, அவளோ சின்ன சிரிப்புடன் விஜய்யை பார்த்தாள்.அவளிடம் வந்தவன் “என்ன வேணும் உனக்கு, கொஞ்சம் கூட அறிவில்லையா, தனியா அதுவும் மழைல நனைஞ்சிகிட்டு, நீயே போய் வம்புல மாட்டிக்குற, பயமே இல்லையா உனக்கு “
“அதான் நீங்க இருக்கீங்களே, எனக்கு என்ன பயம் ”
அவள் சொன்னதில் இன்னும் கோவம் தான் வந்தது. அவளை வண்டியில் இருந்து இழுத்து, வண்டியை ஓரம் நிறுத்தியவன், காரினுள் ஏறச் சொல்லிட, எதுவும் பேசாமல் ஏறிக் கொண்டாள்.
அவன் முகம் கோவத்திலே இருந்தது. காரில் வந்து அமர்ந்தவன் நெற்றியை தேய்த்துக் கொண்டிருந்தான். நிலாவுக்கு எதுவும் புரியவில்லை.
“விஜய் என்ன ஆச்சு ” அவன் கையினைத் தொட,
வண்டியில் இருந்து துண்டினை எடுத்துக் கொடுத்தவன் “ஈரத்துல இருக்குற துடைச்சிக்கோ ” என்றான். பார்வையை அவள்புறம் திருப்பவே இல்லை.
துண்டினை வாங்கியவள் தலை, கழுத்து, துடைத்து விட்டு கையினை துடைத்தவள் குனிந்து பார்க்க அவள் போட்டிருந்த வெள்ளை ஆடை ஈரத்தில் நனைந்து உள் இருக்கும் ஆடையை கண்ணாடி போல் காட்டியது. இப்போது தான் அவனின் கோவமும் புரிந்தது.
துண்டினை எடுத்து அவசரமாக போர்த்திக் கொண்டாள். அவனைப் பார்க்கவே வெட்கம் வந்து தடுத்தது. திரும்பவே இல்லை. அமைதியாய் இருந்தாள்.
மழையும் நின்று விட்டது. காரில் இருந்து இறங்கியவன் தேநீர் கோப்பைகளுடன் வந்தான். அவளிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டவன். வெளியே இருக்கும் குளிருக்கு சூடான தேநீரை உள்ளே அனுப்ப, அந்த சூழலுக்கு இதமாய் இருந்தது.
கோவம் குறைந்து இருந்தது. வண்டியை அவளின் வீட்டை நோக்கி செலுத்தினான். அமைதியாகவே வந்தான் அவளும் தான்.
பேசுவதற்கு ஆயிரம் எண்ணங்கள் இருவருக்கும் ஆனால் வெட்கம், நாணம் போட்டி போட்டது பெண்ணவளுக்கு, இவனுக்கோ அவளை 3 மாதங்கள் தவிக்க விட்டிருந்தோமே இப்போது உடனே பேசிட முடியவில்லை. அவள் பேசினால் பேசி இருப்பான். அவளின் நிலைமையும் பேசுவதற்கு இல்லை. இந்த அமைதியான உணர்வு கொஞ்சம் பிடித்திருந்தது.
அவளின் வீடு இன்னும் இரண்டு தெருவினை கடந்தாள் வந்து விடும். மீண்டும் இது போல் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா, அவளின் இதயம் வேகமாய் துடித்து, அவனிடம் பேச சொல்லி தூண்டி விட, வாய் வரை வரும் வார்த்தைகள் அதற்க்கு மேல் வரவில்லை.
அவளின் கைப்பயில் இருந்த அவளின் கைபேசி விடாது ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்தாள். அவள் அம்மா தான், அழைப்பை ஏற்றவள், என்ன பேசுவது என்று புரியாமல் விழித்துக் கொண்டு இருக்க, அதை வாங்கியவன்
“ஆன்டி நான் விஜய் பேசுறேன் “
“….”
“நல்லா இருக்கேன். நீங்க “
“…..”
“மழைல மாட்டிக்கிட்டா வண்டி நின்னு போச்சு, நான் வழில பார்த்தேன். இப்போ வீட்டுக்கு தான் ” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவனிடம் இருந்து போனை வாங்கியவள்
“மா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். வண்டி பஞ்சர், மெக்கானிக் வர சொல்லி இருக்கோம். வண்டி சரி ஆனதும் வந்துடறேன். ஓகே மா ” அழைப்பை துண்டித்தவள்
“ப்ளீஸ் விஜய் நான் உங்க கிட்ட பேசணும் கொஞ்ச நேரம் எங்கனா கூட்டிட்டு போங்க ப்ளீஸ் “
அவனால் என்ன பேச முடியும் thalaiyai அசைத்தவன், வண்டியை திருப்பி ஓட்டினான். ஏதோ ஒரு வேகத்தில் பேசி விட்டாள் அவன் தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணம் வேறு அவளை பயமுறுத்த, கண்ணீர் மீண்டும் வெள்ளமாய் பாய்ந்து கன்னங்களில் வழிந்தோடியது.
கன்னத்தில் ஆறாய் ஓடும் கண்ணீரை விஜயின் விரல்கள் துடைக்க, அவனை கலங்கிய கண்களோடு பார்த்தாள்.
“எதுக்கு டி இப்போ அழுதுட்டு இருக்க “
அவன் முகத்தில் கோவம் இல்லை, புதிதாய் முளைத்த புன்னகையில் பளிச்சிட்ட அவன் முகம் ரசனைக்குரியதாய் இருந்தது. அவன் விரல்களை பிடித்துக் கொண்டாள். அவன் முகம் பார்த்தாள். திட்டுவானோ என்ற பயம் கண்களில் தெரிந்தது.
அவளின் கரங்களுக்குள் இருந்த தன் விரல்களை அசைத்தான் அவளோ அசைய விடாமல் இன்னும் அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள்.
“ஏதாவது பேசு இப்படி அழுவுறதுக்கு தான் எங்கனா கூட்டிட்டு போக சொன்னியா “
இல்லை என்பதாய் தலை அசைத்தாள். “அப்போ பேசு “
“ஐ லவ் யூ விஜய் ” நிலா தன் காதலை வார்த்தையில் சொன்னாள்.
“அவ்ளோ தானா ” விஜய் சிரிப்பை மறைத்த படி கேட்டான்.
“ஐ லவ் யூ, ஐ லவ் யூ ”
சிரித்தான் தன் நெஞ்சில் அவள் கையினை வைத்துக் கொண்டவன் “கேட்குதாடி ” என்றான்.
அவனின் இதயத் துடிப்பு வேகமாய் துடிப்பது கண்டு அவனை நெருங்கி நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“என்ன ஆச்சு விஜய், என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன். நீங்க எதுவும் சொல்லல, உங்களுக்கு என்னை ” அவள் வார்த்தைகளை வெளிப்படுத்தும் முன்
“ஐ லவ் யூ நிலா ஐ லவ் யூ சோ மச் ” விஜயின் காதல் வார்த்தைகள் காதில் விழ, இன்னும் அவன் நெஞ்சில் சாய்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.அவனும் அவளை அணைத்துக் கொள்ள, இருவருக்குமே இந்த அணைப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது.
“3 மாசம் என்னை தவிக்க விட்டுடீங்க ” தன் தலையை அவன் நெஞ்சில் வைத்து முட்டினாள்.
“உனக்கு தான் டி வலிக்கும் ” சீண்டினான் அவளை
“எனக்கு ஏன் வலிக்கப் போகுது உங்களுக்குத்தான் வலிக்கும் ” என்றாள்
“இங்க நீ தானடி இருக்க, அப்போ உனக்கு தானே வலிக்கும் “
ஆடவனின் வார்த்தைகளில் செம்மாதுளை போல் சிவந்த அவள் கன்னம் கண்டவன் கரங்கள் அணைப்பை இன்னும் அழுத்தமாக்கிட,
“வலிக்குதுங்க “அவன் நெஞ்சில் புதைந்து கொண்டே சொன்னாள்.
“என்னை விட்டு போகத டி ” ஆழ்ந்த குரலில் அவன் வார்த்தைகள் அவள் செவியைத் தீண்டிட, சிலிர்த்து போனவள் காதலை கண்களில் திரட்டி, கண்களை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.
அவனின் கண்களிலும் காதல் தான். இருவரது பார்வையும் பின்னிப் பிணைந்தது, 3 மாத ஏக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தீர்த்துக் கொண்டிருந்தது.
இருவரின் உடையில் இருந்த ஈரம் எப்போதோ இவர்களின் உஷ்ண மூச்சில் காய்ந்து விட்டிருந்தது. ஈரம் கொண்ட இருவரது இதழ்கள் மட்டும் தன் இணையினை சேர்ந்திட காத்துக் கொண்டிருந்தது.
அவளின் மூச்சு அவன் நெஞ்சில் தீயை மூட்டிக் கொண்டிருந்தது. அவளின் மென்மையான மேனி தீண்டலில் எங்கே அவளுக்கு வலித்திடுமோ என்று எண்ணியவன் அணைப்பை தளர்த்த, அவளோ விட்டால் மீண்டும் அவனை இழந்து விடுவேனோ என்று வேகமாய் அவனின் மேல் மோதி,
அவன் கண்களை பார்த்துக் கொண்டே முகத்தினை மெல்ல மேலே உயர்த்த, அவளின் எண்ணம் புரிந்தவனுக்கு தயக்கம் தான் காதலை உரைத்த உடனே அவளிடம் நெருக்கம் காட்டிட விருப்பம் இல்லை.
கன்னியோ விட மறுக்கிறாளே, தன்னை நோக்கி வரும் காந்தப் புயலில் இருந்து எப்படி தப்பிப்பது யோசனையில் மூழ்கி இருக்க, கண்கள் மூடிய பனிக் கூழ் அவனின் சாக்லேட் இதழ்களில் நிரப்பிட நெருங்கி விட,
இனியும் தயக்கம் கொண்டாள் தன் இதயத்தினை எனக்குள் இடம் மாற்றியவள் வருத்தம் கொள்வாள் என்று நினைத்தவன் அவளின் பின்னந்தலையில் தன் விரல்கள் கொண்டு அழுத்தம் கொடுத்து பனிக் கூழினை ருசித்தான் தன் சாக்லேட் நிற இதழ்கள் கொண்டு.
வர்மாவின் அறைக்கு முன் அவன் அம்மாவும், அப்பாவும் தயங்கிய படி நிற்க, சிறிது நேரத்தில் சிரித்த முகத்துடன் முடியை அழகாய் திருத்தம் செய்து கொண்டு, தாடியினை அளவாய் கொண்டு, கருப்பு உடையில் இருந்தவனின் சிரிப்பு இருவருக்கும் இன்ப அதிர்ச்சி தான்.
வர்மாவின் அப்பா மன்னிப்பு கேட்கும் முன் “நான் ஆரண்யாவைப் பார்க்க போறேன் பா, அவ எனக்கு வேணும். அவ கோவத்தை குறைச்சிட்டு காதலை சொல்லிட்டு தகவல் சொல்றேன் வந்துடுங்க ”
சிரித்தவர்கள் “இப்போ தான் மனசுக்கு சந்தோஷமா இருக்கு, சீக்கிரம் மருமக கோவத்தை குறைச்சிட்டு கூப்டு பா, நாங்க காத்துட்டு இருக்கோம் ” இருவரும் சேர்ந்து சொல்ல,
இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிட, ஆசீர்வாதங்களுடன் நெற்றி முத்தமும் வாங்கிக் கொண்டு வந்தவன்.
“அவ கோவத்தை நினச்சா தான் பயமா இருக்கு, என்ன பண்ண போறாளோ ராட்சசி ” வருத்தமும், காதலும் கலந்து சொன்னான் வர்மா,
“அதெல்லாம் என் மருமக சீக்கிரம் உன்னை ஏத்துக்குவா, அவ நல்ல பொண்ணு டா, அமைதியான குணம், உன் மேல பாசம் அதிகம் டா ” தன்னை மயக்கியதோடு தன் அம்மாவையும் மயக்கி வைத்திருக்கிறாள் வசியக்காரி மனதில் நினைத்த விஜய்க்கு அவளை நினைத்ததும் மனம் முழுவதும் சந்தோஷம் பரவியது.
சிரித்த முகத்துடன் தன் முன் நிற்கும் விஜய்யின் கன்னத்தில் அறைந்த வர்மாவை அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர் .
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
