அத்தியாயம்:28
கண்ணீர் புகை குண்டுகளால் அந்த இடமே புகையால் சூழ்ந்தது…அங்கே உள்ளவர்கள் எரிச்சல், தும்மல், இருமல் என அவதிப்பட ஆரம்பித்தார்கள்.
பவதீப், கிருபா, ராகுல், தர்மா மற்ற ராணுவ வீர்களுக்கு இது பழக்கம் என்பதால்…சட்டென அவர்கள் மூச்சை உள்ளே எடுத்து… தங்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.
தியா உட்பட குழந்தைகள் வேறு இதை எல்லாம் தாங்கி கொள்ள முடியாமல்…சத்தமாக அழ ஆரம்பித்தார் மயூரிக்கு வேறு லேசாக… மயக்கம் தெளிய அவள் மூச்சி விட முடியாமல் இரும ஆரம்பித்தாள்.
அதை உணர்ந்து கொண்ட பவதீப்…அவள் தலையை சட்டென தன் மார்போடு அழுத்தி கொண்டவன்…ஹிந்தியில்
“ கிருபா அண்ணா, ராகுல், தர்மா முதலில் இங்கே இருந்து…குழந்தைங்க, பெரியவங்களை அழைத்து போங்க…அவங்களால் ரொம்ப நேரம் இந்த புகையை தாக்கு பிடிக்க முடியாது.
ராகுல் நீ முதலில் சி.எம் சாரின் பாதுகாப்பை பாரு…தியா, தர்ஷனை வெளியே கொண்டு போ…நான் இவங்களை பார்த்து கொள்கிறேன்…” என்று சத்தமாக பேசினான்.
ராகுல் “ பாஸ் உங்களுக்கு காயம் பட்டு இருக்கு…ரத்தம் வேறு அதிகமாக போகிறது உங்க கையில் தானே…மயூரிகா மேம் இருக்கிறாங்க நீங்களும் சீக்கிரமாக இந்த இடத்தை விட்டு வெளியே வாங்க..
ஜெனரல் சாப் இருப்பதால் நாங்க இங்கே பார்த்து கொள்கிறோம்…சி.எம் பற்றி கவலைப்பட வேணாம் எங்க உயிரை கொடுத்தாவது அவரை காப்பாற்றுவோம்…” என்று அவனும் சத்தமாக பதில் சொன்னவன்…குரு மூர்த்தியை நோக்கி ஓடி போனான்.
பவதீப் மஸ்தியை பார்க்க அவன் கையில் பட்ட குண்டால் மயக்கமாகி இருந்தான்…மெல்ல மயூரியை அணைத்தபடியே கீழே அமர்ந்தவன்…
அவளை தரையில் உட்கார வைத்து விட்டு… மஸ்தி ஓட முடியாத படிக்கு கைக்கு மட்டுமல்ல காலுக்கும்…சேர்ந்து விலங்கு போட்டவன்.
சோர்ந்து போய் இருந்த மயூரியை மெல்ல எழுப்பியவன்…ஒற்றை கையால் அவளை தூக்கி கொண்டான்…மயூரிக்கு லேசாக நினைவு இருப்பதால் பவதீப்பை அவளால் உணர முடிந்தது.
பவதீப், ராகுல், தர்மா மட்டுமல்ல மற்ற கார்ட்ஸ் எல்லாம் ரொம்ப திறமையான ஆளுங்க…அவர்களுக்கு ட்ரைனிங் கொடுத்தது கிருபாகர்…அவனும் இங்கே நிற்பதால் அவர்களால் சட்டென அங்கே உள்ள நிலமையை சமாளிக்க முடிந்தது.
ராகுல் குருமூர்த்தி அருகே ஓடி போக அவரும் சக்ரபாணியும் மூச்சு விடாமல் திணறி கொண்டு இருந்தனர்…அது போல கல்யாணி, மீனா, புவனா எல்லாம் ராகவன் தன் கையில் உள்ள தியாவை…
தன் சால்வையால் முற்றாக மூடி அணைத்து கொண்டவன்…இறுமி கொண்டு இருந்தான்.
அங்கே உள்ள கார்ட்ஸ் ஓட முயற்ச்சி செய்து கொண்டு இருந்த மக்களை…அடக்கி மெது மெதுவாக அனைவரையுமே வெளியேற்றி கொண்டி இருந்தனர்…
ராகுல் நிலமை விபரீதமாக முன்னே… ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி சொல்லி விட்டான்.
அதனால் அவர்கள் டாக்டர்ஸ், மெடிகல் டீம் கூடவே ஓட்சிசன், டெம்பரவரி டென்ட் வேகமாக வந்து விட்டனர்…வெளியே வந்தவர்களுக்கு முதலில் குழந்தைங்க, பெரியவங்களுக்கு வேகமாக சிகிச்சை அளிக்க தொடங்கி விட்டனர்.
ரொம்ப பாதிக்கப்பட்ட ஆளுங்களை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்தார்கள்…கிருபாகர் தர்ஷனுக்கு தன் சட்டையை கழட்டி முகத்தில் மூடி இருந்தான்…அதனால் அவனுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.
அது போல சிலர் புகை ஆரம்பிக்க…கையில் இருந்த கைக்குட்டை, சால்வை, புடவை தலைப்பால் மூக்கு, கண்களை மூடி இருக்க…சிறிதளவு தான் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
டெம்பரவரி மெடிக்கல் டென்ட் ஒன்றை சட்டென போட்டு…சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள் குரு மூர்த்தி, சக்ரபாணி உட்பட அவர்கள் குடும்பத்துக்கும் அது போல…
மற்றவர்களுக்கும் சிகிச்சை அளித்து கொண்டு இருக்க…அனைவரையுமே வெளியே எடுத்து விட்டு…கிருபாகர் தாயிடம் ஓடி போனான்.
சாரதாவுக்கு ஓட்சிசன் மாஸ்க் போட்டு இருக்க….அவர் லேசான மயக்கத்தில் இருந்தார் அம்மா என பதறி போய்.. தாயின் கைகளை பற்றியவன்…டாக்டரிடம்
“ டாக்டர் நான் லெப்டினன்ட் ஜெனரல் கிருபாகர்…இவங்க என் அம்மா இப்போ எப்படி இருக்கிறாங்க டாக்டர்…அவங்களுக்கு ஆபத்து இல்லை தானே ஹாஸ்பிட்டல் கொண்டு போகலாமா..? என கேட்டான்.
டாக்டர் “ ஹலோ ஜெனரல் பதற தேவை இல்லை…உங்க அம்மாவுக்கு பெரிதாக ஒன்றுமில்ல…
புகையை உள்ளே இழுத்ததால் கொஞ்சம் மூச்சு விட சிரமமாக இருந்தாங்க…இப்போ ஓட்சிசன் மாஸ்க் போட்டதால் பெரிதாக எந்த ப்ராப்ளமும் இல்லை…” என்றான்.
நிம்மதி பெரு மூச்சு விட்ட கிருபாகர்…
“ தேங்கியூ டாக்டர் ஆ..டாக்டர் இவன் சி.எம் பேரன் இவனையும் கொஞ்சம் செக் பண்ணி பாருங்க…நான் என் சட்டையால் இவனை கவர் பண்ணி தான் கொண்டு வந்தேன்…இருந்தாலும் கொஞ்சம் செக் பண்ணுங்க…” என்றான்.
டாக்டர் தர்ஷனை செக் பண்ணியவர் அவன் புகையை சுவாசிக்காததால்…பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
முதலில் கண் விழித்தது ராகவன், புவனா தான்…ராகவன் ஆண் என்பதால் அவனுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை…
அவன் தன் கையை விட்டு தியாவை விடவே இல்லை…குழந்தை வேறு அவன் கூட ஓட்டி கொண்டாள்..
டாக்டர் வந்து அவளை செக் செய்தவர்…நல்ல காலம் பெரிதாக எந்த பாதிப்பு இல்லை என சொன்னார்…
புவனா கண் விழிக்க கண்டது தன் அருகே… கையில் தியாவோட இருந்த தமையனை தான்…அண்ணா என்ற அவள் அழைப்பில் ராகவன் நிமிந்தவன்.
“ பாப்பா கண் விழித்து விட்டாயா..? இப்போ எப்படி இருக்கு மூச்சு விட முடிகிறதா…? என கேட்டான்.
புவனா “ கண் தான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கு அண்ணா…மற்றும்படி ஒன்றுமில்ல அண்ணா பாப்பாவுக்கு ஒன்றுமில்ல தானே…அவளை இங்கே கொடு…” என்று… தியாவை வாங்கி அணைத்து கொள்ள அவளும் தாயை பார்த்ததும் மெல்ல சிரித்தாள்.
கண்கள் கலங்க மகளை பார்த்தவள்…
“ அண்ணா தர்ஷன் எங்கே அண்ணா..? அவனை கடத்தி விட்டதாக அந்த தீவிரவாதி சொன்னான்…என் பையன் எங்கே அண்ணா..? என்று கலங்கிய குரலில் கேட்டு கொண்டு இருக்க… அம்மா என்று தர்ஷனில் குரல் கேட்டது.
ராகவன், புவனா சட்டென நிமிர்ந்து பார்க்க…கிருபாகர் தர்ஷனை தூக்கி கொண்டு வந்தான்…தர்ஷா என புவனா எழ போக ராகவன் அவள் தோளை பிடித்து உட்கார வைத்தவன்…
“ புவனா அமைதியாக இரு கையில் பாப்பா இருக்கிறாள்…தர்ஷன் வந்து விட்டான் தானே தர்ஷா மாமா கிட்ட வா..” என அவனை தூக்க வர…கிருபாகர் கழுத்தை இறுக்க கட்டி கொண்டவன்.
“ மாமா நான் வர மாட்டேன் அப்பா கூட தான் இருப்பேன்…என்றான்… ராகவன் கிருபாகரை யாரென பார்க்க புவனா அதிர்ச்சியாகி விட்டாள்…அப்பாவா என்ன இவன் பிதற்றி கொண்டு இருக்கிறான் என யோசித்தாள்.
கிருபாகர் “ மினிஸ்டர் சார் நான் கிருபாகர் லெப்டினன்ட் ஜெனரலாக ஆர்மியில் வேலை செய்கிறேன்…நான் நாட்டிய சிகாமணி சாரதாவின் மகன்…” என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
ராகவன் “ ஓ..! சாராதா மிஸ் பையனா நீங்க…? தர்ஷனை நீங்க தானே அழைத்து வந்தீங்க இவனை கிட்நாப் செய்து விட்டதாக…அந்த தீவிரவாதி சொன்னான் பிறகு இவன் எப்படி உங்க கிட்ட…? என கேட்டான்.
“ சொல்லுகிறேன் சார் பட் எனக்கு இப்போ பேச நேரம் இல்லை…உள்ளே இன்னும் சிலர் மாட்டி இருக்கிறாங்க அவங்களை காப்பாற்ற வேணும்…பையனை உங்க கிட்ட கொடுத்து விட்டு போக தான் வந்தேன்…” என்றான்.
புவனா “ ரொம்ப நன்றி ஜெனரல் சார்…உங்களால் இன்று என் பையன் உயிரோடு இருக்கிறான்…அண்ணா அப்பா, அம்மா, அங்கிள், ஆன்ட்டி, மயூ எல்லாம் எங்கே..? என பதறி கொண்டு கேட்டாள்.
கிருபாகர் “ சி.எம் சார் அவர் வொய்ஃப், சக்ரபாணி அங்கிள், கல்யாணி ஆன்ட்டி எல்லாம் சேப்பாக தான் இருக்கிறாங்க…
மயூவை பவதீப் காப்பாற்றி விட்டான்… அவள் வேற ஒரு டென்ட்டில் இருப்பாள் என்று…நினைக்கிறேன் மிஸஸ் புவனா…” என்றவனை புவனா நிமிர்ந்து பார்த்தாள்.
என் பெயர் இவருக்கு எப்படி தெரியும் என்று யோசிக்க …ராகவன் சட்டென எழுந்தவன்.
“ நான் என் பெண்ணு மயூரியை பார்க்க வேணும்…அவளை பார்த்தால் தான் எனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கும்…என்னை அங்கே அழைத்து கொண்டு போங்க கிருபாகர்…” என்றான்.
கிருபாகர் “ மினிஸ்டர் சார் மயூ உங்க பெண்ணு மட்டுமல்ல என் தங்கச்சி கூட…பவதீப் பற்றி உங்களை விட எனக்கு நல்லா தெரியும்…அவன் ராணுவீரன் தன் உயிரை விட மக்கள் உயிர் தான் அவனுக்கு முக்கியம்.
அவன் மயூரியை காப்பாற்றி இருப்பான்…உங்க உதவி இப்போ உங்க குடும்பத்துக்கு தான் தேவை…மயூரி அனேகமாக மயக்கத்தில் இருப்பாள்…அவள் எழுந்ததும் நீங்க வந்து பாருங்க…” என்றவன்.
தர்ஷனின் முதுகை தடவி விட்டவன்…
“ தர்ஷன் குட் பாய் தானே நீ அம்மா கூட இரு…பாரு அம்மா உன்னை காணோம் என்று ரொம்ப பயந்து போய் விட்டாங்க…
தங்கச்சி பாப்பா கூட அண்ணாவை காணோம் என அழுகிறாள்…இவங்க கூட இரு அப்பா போய் உன் சித்தியை பார்த்து விட்டு வருகிறேன்…” என சொன்னவன்.
அவன் தலையில் முத்தம் வைத்து விட்டு…தர்ஷனை ராகவன் கையில் கொடுத்து விட்டு கிளம்பி போனான்.
கிருபாகர் வெளியே வந்தவன் அங்கே மக்களை காப்பாற்றி..டென்ட்க்கு அனுப்பி கொண்டு இருந்த ராகுல் அருகே வந்தவன் ராகுல் என அழைத்தான்…திரும்பி அவனை பார்த்தவன்
“ ஜெனரல் என்ன இது உங்க சட்டை எங்கே..? உங்க அம்மாவை இப்போ தான் பார்த்து விட்டு வந்தேன்…
அவங்க சேப்பாக தான் இருக்கிறாங்க வயதாவங்க என்பதால்…கொஞ்சம் வீக்காக இருக்கிறாங்க மற்றும்படி ஏதும் ப்ராப்ளம் இல்லை.
தர்ஷன் எங்கே காணோம் அவனுக்கு ஒன்றுமில்ல தானே…” என்று பதட்டமாக கேட்டான்.
கிருபாகர் “ கொஞ்சம் மூச்சு விட்டு பேசு ராகுல்…ராணுவ வீரனுக்கு இத்தனை கேள்விகள் அவசியம் இல்லை…அவன் வேலை கடமை மட்டும் தான் நானும் அம்மாவை பார்த்து விட்டு தான் வருகிறேன்.
டாக்டர் கிட்ட பேசினேன் பெரிதாக பயப்பட தேவையில்லை என்றார்…
தர்ஷனை அவங்க அம்மா கிட்ட கொடுத்து விட்டு வருகிறேன்…பையனை காணோம் என்றதும் புவனா தவிர்த்து கொண்டு இருப்பாள் என தெரியும்.
என் சட்டையை கழட்டி தான் தர்ஷனுக்கு போர்த்தி விட்டேன்…சட்டையை விட எனக்கு அவன் உயிர் தான் முக்கியம்…சரி மயூ எந்த டென்ட்டில் இருக்கிறாள் பவதீப்க்கு ஒன்றுமில்ல தானே.
அவனின் தோளில் காயம் ஏற்பட்டு இருந்தது…மருந்து போட்டு விட்டானா…? என கேட்டான்.
ராகுல் “ என்ன ஜெனரல் சொல்கிறீங்க பாஸ் சி.எம் சார் கூட இல்லையா…? நான் மயூரி மேம் அங்கே தான் ட்ரீட்மெண்ட் பார்ப்பதாக நினைத்தேன்…
மண்டபத்தில் யாருமே இல்லை அப்போ பாஸ், மயூரி மேடத்துக்கு ஏதும் ஆயிற்றோ…” என்று…சொல்லி விட்டு கோவில் மண்டபத்துக்கு ஓடி போக …கிருபாகர் அவனை தொடர்ந்து ஓடி போனான்.
மயில் ஆடி வரும்…
