அருகில் இருந்தால் அழுகை வரும்,
தொலைவில் போனால் உயிர் பிரியும்…
இருந்தும் சொல்கிறேன உன் நினைவுகள் என்னைக் கொல்லும் முன்,
காதலே என்னிடம் இருந்து விலகிப் போ…!
உன்னில் சிறையாகிறேன் – 35
மாலை நேரத்து இளவெயில் மறைந்து, நிலவின் ஆதிக்கமும் காற்றில் குளுமையும் வியாப்பித்திருக்க,
திருமண மண்டபம் மின்விளக்குகளின் ஒளியில் மெல்ல மிளிரத் தொடங்கியது, பூந்தோரனங்களின் அலங்காரங்களுடன் மண்டபத்தின் நுழைவாயில் அழகாக காட்சி கொடுக்க,
ஒரு வெள்ளை நிறக் காரிலிருந்து அருவியும் தமிழினியும், கூடவே அவர்களுடைய தேவதைகள் யாழினியும், கவியும் ஒருவரையொருவர் கையைப் பற்றிக் கொண்டு இறங்கினர்,
அவர்களைக் கண்டதும், வாசலில் நின்றிருந்த ரோஹித் உற்சாகத்துடன் ஓடி வந்தான், கோட்சூட்டில் ஆளா மாறிப்போய் அவன் முகம் வழக்கத்தை விட அதிகப் பொலிவுடன் காணப்பட்டது,
”வாங்க மேடம்… வா தமிழ், நீங்க வருவீங்களான்னு தான் காத்துட்டு இருந்தேன்,” என்று மிகவும் உற்சாகத்தோடும் வரவேற்ற ரோஹித்,
”குழந்தைங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்காங்க” என்று யாழினியின் கன்னத்தைத் தட்டி குழந்தைகளைக் கொஞ்சிய ரோஹித்,
நிமிர்ந்து அருவியைப் பார்த்தான். அவளது விழிகளில் தெரிந்த அந்தப் பாழ்வெளி அவன் மனதை தடுமாறச் செய்தது, அப்படியே நின்று விட்டான்,
“என்ன ரோஹித் கனவா, அப்படியே ஸ்டக் ஆகிட்ட” என்று தமிழினி நிதர்சனத்திற்கு இழுத்து வந்தாள்,
“அது… வந்து… ஒன்னு இல்ல தமிழ்” என்று திணறியவன்,
“மேடம்… நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம், இன்னைக்கு ஒரு நாளாவது எல்லாத்தையும் மறந்துட்டு ரிலாக்ஸா இருங்க, இங்க பாருங்க, என் ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் வந்திருக்காங்க,” என்று கூறி, அங்கிருந்த ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினான்,
”இவங்க என் சித்தப்பா… இவங்க என் பெரியப்பா பையன்…” என வரிசையாகப் பட்டியல் இட்டுக் கொண்டே போனான்,
அருவி அனைவரிடரித்திலும் சிரிப்பை உதிர்த்தவாறு இருக்க,தமிழினி மெல்லச் சிரித்துக் கொண்டே,
“என்ன ரோஹித், எல்லாத்தையும் அறிமுகப்படுத்துற, ஆனா முக்கியமான ஆட்களை அறிமுகப்படுத்தவே இல்லையே, பொண்ணு மாப்பிள்ளையை எப்பத்தான் கண்ணுல காட்டுவ, அவங்களைப் பார்க்கத் தானே நாங்க வந்திருக்கோம்,” என்று கேலியாகக் கேட்டாள் தமிழினி,
ரோஹித் சட்டென்று தன் தலையைத் தட்டிக் கொண்டான்.
“ஐயோ, அதை வேற மறந்துட்டேனே, அவசரத்துல மெயின் பாயிண்ட்டையே விட்டுட்டேன், அவங்க மேடைக்கு வந்துட்டாங்க, வாங்க, உள்ளே போகலாம்,” என்று கூறி அவர்களை மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றான்,
மண்டபத்திற்குள் மக்கள் கூட்டம் அலைமோதியது, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த பரிச்சயமில்லா முகங்களைப் பார்த்துக் கொண்டே அவர்கள் மேடை ஏறினர்,
மேடையில் மணமக்கள் வீற்றிருந்தனர், மேடை ஏறிய இரண்டடி தூரத்தில் இருந்தே அந்த மணமக்களைப் பார்த்த தமிழினியின் கால்கள் சட்டென்று அங்கேயே நின்றன, அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன,
அருவியும் ஜீவாவைக் கண்டு அதிர்ந்ததை விட, நிகிதாவைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனாள், தன்னுடன் இருந்த யாழினியை கையில் எடுத்து மார்போடு சேர்த்து இறுக்கிக் கொண்டாள்,
அவர்கள் இருவரும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் உறைந்து போனதை கவனிக்காத ரோஹித், மிகுந்த பெருமையோடு அவர்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்தினான்,
“அக்கா, மாமா இவங்க தான் அருவி மேடம், இவங்க தமிழினி, என் பெஸ்ட் ப்ரண்ஸ்”என்று ரோஹித் சொல்ல, மணமகனாக நின்றவன் இவர்கள் இருவரையும் கண்டு சிலையென சமைந்தான்,
அந்நேரம் மிதுன் ஓடி வந்து “மம்மி…” என்று தமிழினியின் இடுப்பைக் கட்டிக் கொள்ள, அத்தனை காலம் பிரிந்திருந்த தன் மகனைக் கண்டு தமிழினியின் கண்கள் குளமாயின,
அதே சமயம், தமிழினியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த கவி, மேடையில் மணமகனாக இருந்த ஜீவாவைப் பார்த்ததும் “டாடி…” என்று கதறிக்கொண்டு ஓடிப் போய் அவனைக் கட்டிக் கொண்டாள்,
கவியும் மிதுனும் மாறி மாறித் தங்கள் பெற்றோரைப் பிடித்துக் கொண்டு அழ, அந்தத் திருமண மண்டபமே ஸ்தம்பித்துப் போனது,
அத்தனை காலம் பிரிந்திருந்த தன் மகனை நேரில் கண்டதும், தமிழினியின் கண்கள் அணையைத் தாண்டிய வெள்ளமாய் மாறின, தன் இடுப்பைப் பற்றிக் கொண்டிருந்த மிதுனை சட்டென்று அள்ளி எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்,
“மிதுன்… என் செல்லம்… அம்மா வந்திருக்கேன்டா…” என்று அவனது உச்சி முகர்ந்து, அவன் முகம் எங்கும் முத்தங்களால் நிரப்பினாள், பிரிந்திருந்த காலமெல்லாம் அந்தப் பிஞ்சு உடலின் வாசனையைத் தேடித்தானே அவள் துடித்திருந்தாள்,
அதே சமயம், மணமகன் என்று தான் இருக்கும் கோலத்தையும் ஒரு நொடியில் மறந்து போனான் ஜீவா, தன் கால்களைக் கட்டிக்கொண்டு அழும் கவியை ஆசையோடு கைகளில் அள்ளினான், தன் மார்போடு அவளை இறுக அணைத்து,
“கவிம்மா… மன்னிச்சிடுடா அப்பாவை…” என்று அவளது பிஞ்சுத் தலையைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சினான்,
ரோஹித், தான் அறிமுகப்படுத்திய தன் நண்பர்கள் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, அவனது அக்கா நிகிதா, தன் வருங்கால கணவனின் கைகளில் இருக்கும் குழந்தையையும், தள்ளி நின்று அழுது கொண்டிருக்கும் தமிழினியையும் மாறி மாறிப் பார்த்து மிரண்டு போனாள்,
”ஜீவா… என்ன நடக்குது இங்க” என்று நடுங்கும் குரலில் கேட்டாள் நிகிதா,
ஜீவா, கவியைத் தன் தோளில் சாய்த்தபடி, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் நின்றான், பல மாதங்களாக பிரிந்திருந்த தன் மகளும், தன் முன்னால் காதல் மனைவியும் தன் கண்முன்னே நிற்பதை அவனால் நம்பமுடியவில்லை,
“உன்னைதான் கேட்குறேன் பதில்சொல்லு ஜீவா, இங்க என்னதான் நடக்குது, உன் வொய்ப் இல்லைன்னு தானே சொன்ன அப்போ யார் இவங்க” என்று சற்று தமிழினியைக் காட்டி கோபமாகவே கேட்டாள் நிகிதா,
“இவ தான் என் எக்ஸ்வொய்ப் தமிழினி, இது என் பொண்ணு கவி” என்று ஜீவா சொல்லவும் நிகிதாவுக்கு அடக்கமாட்டாத கோபமும், தாங்கமுடியாத ஏமாற்றமும் ஒருசேர வந்தது,
“என்ன சொல்ற ஜீவா, அப்போ உன் வொய்ப் இறந்து போயிட்டாங்கன்னு நீ சொன்னது பொய்யா” என்று தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி எரிந்தவாறு கேட்டாள்,
“நான் எப்போ அப்படி சொன்னேன், உங்கிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல நிகிதா” என்றான் ஜீவா,
“நாம முதல் தடவை மீட் பண்ணும் உன் வொய்ப் எங்கன்னு கேட்டப்போ ஷி இஸ் நோ மோர்ன்னு நீதான சொன்ன அப்போ அதுக்கு என்ன அர்த்தம்” என்று நிகிதா கேட்க,
“அதுக்கு அவ என் லைஃப்ல இல்லன்னு அர்த்தம், இப்போ எதுக்கு நீ இவ்ளோ பெரிய ட்ராமா கிரியேட் பண்ணிட்டு இருக்க” என்று ஜீவா சாதரணமாக கேட்க,
“ட்ராமா கிரியேட் பண்றேனா, இவ்வளவு சாதாரணமா கேக்குறீயே ஜீவா! ‘ஷி இஸ் நோ மோர்’ அப்படின்னா அவ இறந்துட்டான்னு தான் அர்த்தம். உன் வசதிக்கு ஏத்த மாதிரி வார்த்தைகளை மாத்திப் பேசி என்னை ஏமாத்திட்டயே!” என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
“நான் சொன்னது அவ என் வாழ்க்கையில இனி இல்லைங்கிற அர்த்தத்துல தான், நாங்க விவாகரத்து வாங்கிட்டோம், சட்டப்படி பிரிஞ்சுட்டோம், இதுல நான் உன்னை ஏமாத்த என்ன இருக்கு” என்று ஜீவா தன் தரப்பு நியாயத்தை அழுத்தமாகச் சொன்னான்,
”சட்டப்படி புருஷன் பொண்டாட்டியா பிரிஞ்சிருக்கலாம் ஜீவா, ஆனா பெத்தவங்களா இன்னும் நீங்க இரண்டுபேரும் பிரியலங்கிறது இப்போ உன் கண்ணுல வர்றே கண்ணீரே சாட்சி,
பெத்த புள்ளைங்களை இப்படி ரெண்டா பிரிச்சு வச்சுட்டு, எதையும் மறைக்காமத் தான் நான் பழகுனேன்னு எப்படி உன்னால சொல்ல முடியுது” நிகிதா தழுதழுத்த குரலில் கேட்க, ஜீவா பதில் சொல்ல முடியாமல் கவியின்மேல் முகம் புதைத்து நின்றான்,
மேடையில் நடக்கும் இந்தத் தர்க்கங்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினி, மெல்லத் தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு முன் வந்தாள், மிதுனின் கையை இறுகப் பற்றிக் கொண்டவள், நிகிதாவையும் ஜீவாவையும் ஏறிட்டாள்,
”ரோஹித் அவங்க அக்காவுக்குக் கல்யாணம்னு கூப்பிட்டதால தான் நான் இங்க வந்தேன், மத்தபடி அது உனக்குத் தான் கல்யாணம்னு எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா இங்க வந்திருக்கவே மாட்டேன்” என்று தீர்க்கமாகச் சொன்னாள் தமிழினி,
ஜீவா அவளை ஏதோ சொல்ல முற்பட, அதைத் தடுத்த தமிழினி,
“நம்ம ரிலேஷன்ஷிப் தான் என்னைக்கோ முடிஞ்சு போச்சே, இனி உன் லைஃப்ல குறுக்க வர எனக்கு எந்த உரிமையும் இல்லை, இப்போ என்னால ஏற்பட்ட இந்த குழப்பத்துக்கு சாரி,
இனிமே எப்பவும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன், ஆனா என் குழந்தைங்க இரண்டு பேரையும் எங்கிட்ட இருந்து பிரிச்சுடாத” என்று கசப்பான புன்னகையுடன் கூறிவிட்டு,
ஜீவாவிடமிருந்த கவியை பிரித்து மிதுனையும் கவியையும் அழைத்துக் கொண்டு மேடையை விட்டு விறுவிறுவென இறங்கினாள் தமிழின்,
”ஒரு நிமிஷம் நில்லுங்க” என்ற குரல், அது நிகிதாவின் குரல்.
தமிழினி ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்க, நிகிதா மேடையிலிருந்து கீழே இறங்கி அவள் முன்னால் வந்து நின்றாள்,
”உங்க வாழ்க்கை எப்படிப் பிரிஞ்சதுன்னு எனக்குத் தெரியாது, ஆனா, ஒரு தாய்கிட்ட இருந்து குழந்தையைப் பிரிச்சது எவ்வளவு பெரிய பாவம்னு எனக்கு தெரியும்,
ஒரு குழந்தையை இழந்த தாயா என்னால உங்க வலியை புரிஞ்சுக்க முடியுது, ஜீவா உங்ககிட்ட இருந்து நான் பிரிஞ்சுக்கணும்னு நினைக்கல, ஏதோ ஒரு மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் ஆகிடுச்சு” என்றாள் நிகிதா,
“உங்கமேல எந்த தப்புமே இல்ல, எல்லாமே என் தப்புதான், லைஃப்ல நான் ரொம்ப ரொம்ப அவசரப்பட்டுட்டேன், லவ்ல ஆரம்பிச்சு கல்யாணம் குழந்தைங்கன்னு எல்லாத்துலேயும் அவசரம்,
அதோட விளைவு கடைசியில விவாகரத்துல கொண்டு வந்து விட்டிருச்சு, ஆனா அதுக்காக ஜீவா மேலயே எல்லா பழியையும் போடக்கூடாது, விதி வேற என்ன சொல்ல,
எனிவே இனி எக்காரணத்தைக் கொண்டும் என்னாலயோ இல்ல என் பசங்களாலயோ உங்க இரண்டு பேரோட லைஃப்க்கு எந்த பிரச்சனையும் வராது, நீங்க தாராளமா கல்யாணம் பண்ணிக்கோங்க,
உங்க லைஃப்பாவது சந்தோஷமா அமையட்டும்” என்றவளின் கண்கள் அவளையும் மீறி கண்ணீரை பெருக்கெடுத்து ஓடச்செய்தது,
“நீங்க என்ன சொன்னாலும் இனி இந்த கல்யாணம் நடக்கப்போறது இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் நிகிதா, அனைவரும் அதிர்ந்து போய் நிகிதாவைப் பார்த்தனர்,
“அக்கா என்ன சொல்ற, அதான் ஏற்கனவே அவங்களுக்கள்ள டிவோர்ஸ் ஆகிடுச்சே, அப்புறம் என்ன பிரச்சனை” என்று கேட்ட ரோஹித்தை எரித்துவிடுவது போல் முறைத்தாள் நிகிதா,
“என்னடா பேசுற, என்னோட சுயநலத்துக்காக இரண்டு குழந்தைகளுக்கு அப்பா இல்லாம போகட்டும்னு சொல்றியா, அதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்” என்று நிகிதா சொன்ன நிகிதா வேகமாக அங்கிருந்து செல்லவும்,
தமிழினி ஜீவாவை ஒருபார்வை பார்த்துவிட்டு திரும்பியவள், தன் குழந்தைகளோடு அங்கிருந்து வெளியேறினாள்,
“என்னோட சுயநலம்” என்ற நிகிதாவின் வார்த்தையில் இதயத்தில் சூடுகண்டவள் போல் கூனிக்குறுகி நின்றாள் அருவி, அதுவரை யாழினியை இறுக்கியிருத்த கையைப்பிடியைத் தளர்த்தினாள்,
தன் அக்காவின் திருமணம் கண்ணெதிரே நின்று போனதில் மனம் கலங்கி நின்றான் ரோஹித்,
இனி என்ன நடக்கும்?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
