உயிராக வந்த உறவு அத்தியாயம் – 29

அடுத்த நாள் வீட்டில் ஒரு அமைதியான பரபரப்பு.பொதுவாக சிரிப்புகளால் நிறைந்த அந்த வீடு,இன்று ஒரு மெல்லிய சோகத்தை சுமந்தது. அதற்கு காரணமான அணு தன் தங்கையை அழைத்து காலையில் சொல்லிவிட்டான் அம்மா வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்று அது தான் அமைதியாக இருந்தது..

தாரணி தனது பொருட்களை மெதுவாக பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு துணியையும் மடிக்கும்போது அவள் மனமும் மெதுவாக நொறுங்கியது.கதவு அருகே நின்று கொண்டிருந்தாள் அனன்யா.அவள் அமைதியாக தங்கையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இது தான் சரி…” என்று அவள் மனதில் சொல்லிக் கொண்டாலும் அவள் 

கண்களில் கண்ணீர் துளிகள் மின்னின.

“அக்கா…”தாரணி மெதுவாக அழைத்தாள்.இவ்வளவு சீக்கிரமா அனுப்புறியே நீ குழந்தை பெத்துகிற வரைக்கும் உன்கூடயே இருக்கேன் என்று சொல்ல

 அட பைத்தியம் நானே அங்க தாண்டி வரப்போறேன். சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க என  அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி சொல்லிஅவள் சிரிக்க முயன்றாள்… ஆனால் அந்த சிரிப்பு முழுமையில்லை.

அனன்யா மெதுவாக தன் தங்கை கையை பிடித்து சில நாட்கள் தான் தாரணி என சொல்ல

ஹம் என்றாள் வேண்டா வெறுப்பாக..

“அங்க அம்மா வீட்டுல இருந்தா உனக்கு நல்லா இருக்கும்” என்று சொல்ல

தாரணி அவளை பார்த்தாள்.

அவள் கண்களில் ஒரு கேள்வி.

“நீங்க இல்லாம நான் எப்படி இருக்க…?”

அனன்யா உடனே அவள் கையை பிடித்தாள்.நானும் வருவேன்,கொஞ்ச நாள் கழிச்சு” என சொல்ல

அந்த வார்த்தை தாரணிக்கு ஒரு ஆறுதல்.

“உண்மையாவா…?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.

அனன்யா சிரித்தபடி,“ஆமா… நான் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா…?” என்று சொன்ன அந்த ஒரு நொடி இருவருக்கும் இடையில் இருந்த அந்த இரண்டு மாத தூரம் கரைந்துவிட்டது.

தாரணி திடீரென்று அவளை கட்டிப்பிடித்தாள்.

“அக்கா…”அவள் குரல் உடைந்து போனது.அனன்யா அவள் தலைமுடியை தடவி“எதுவும் யோசிக்காதே,அங்க போய் நிம்மதியா இரு.உன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க ஆரம்பி…” என்று சொல்ல

அந்த வார்த்தை தாரணியை ஒரு நொடி அமைதியாக்கியது.

அந்த நேரத்தில் விக்ரம் உள்ளே வந்தான். அவன் இருவரையும் பார்த்தான்.

“ரெடி ஆச்சா…?” என்று மெதுவாக கேட்டான்.

தாரணி தலையசைத்தாள்.

விக்ரம் மெதுவாக “இது உனக்கு நல்லதுக்காக தான் தாரணி,கொஞ்ச நாள் எல்லாத்தையும் விட்டு… நீயாக இரு…” என சொல்ல

தாரணி சிரிக்க முயன்றாள்.

“சரி மாமா…”அந்த வார்த்தையில் ஒரு மரியாதையும் ஒரு தூரமும் இருந்தது.

வீட்டின் முன்கார் தயாராக இருந்தது.

தாரணி வெளியே வந்தாள்.

ஒரு நொடி அந்த வீட்டை பார்த்தாள்.

அந்த வீட்டில் அவள் சந்தோஷம் அதான் அவள் அக்கா அந்த வீட்டில் இருக்க,இவள் கிளம்பினாள்.

அனன்யா அவள் அருகில் நின்றபடி,

“பாதுகாப்பா போய் ரீச் ஆகிட்டா போன் பண்ணு…” என்று சொல்ல

தாரணி தலையசைத்தாள்.

அவள் காரில் ஏற,கார் மெதுவாக நகர ஆரம்பித்தது.

ஜன்னல் வழியாகஅவள் அக்காவை பார்த்தாள்.அனன்யா கையை அசைத்தாள்.கண்ணீருடன்.

தாரணி மெதுவாக தன் கையை அசைத்தாள்.

அந்த கார் அந்த வீட்டை விட்டு தூரமாக சென்றது.அந்த பிரிவு ஒரு தள்ளிப்போடல் இல்லை,ஒரு புதிய ஆரம்பத்துக்கான இடைவெளி.

காரில் உட்கார்ந்து இருந்த தாரணி

ஜன்னல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மனதில் இன்னும் ஒரு பெயர் மட்டும்:

“தீரன்இந்த தூரம் என்னை அவனிடமிருந்து முழுக்க பிரிக்குமா…?” என்று யோசித்தபடி அவள் கண்களை மூட

அவள் வீடு வந்தது அவளை பார்த்ததும் அவள் அம்மா,” எதுக்குடி இங்க வந்த அக்காவுக்கு துணையை அங்கே இருக்கலாம் தானா” என சொல்லவும் 

அதெல்லாம் உன் மாப்பிள்ளை கிட்ட பேசிக்கோ முதல்ல வழி விடு என கோபமாக பேக்கை தூக்கி விட்டு உள்ளே செல்ல

விக்ரம் மாமியாருடன் பேசிக்கொண்டு இருந்தான்..

அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை சிறிது நேரத்தில் அவனும் அங்கே இருந்து கிளம்பி விட,

நாட்கள் மெதுவாக நகர்ந்தன,அம்மா வீட்டின் அமைதி தாரணிக்கு ஒரு புது உணர்வு கொடுத்தது.காலை நேரங்களில் தோட்டத்தில் நடந்து,மாலை நேரங்களில் அம்மாவுடன் பேசிக் கொண்டு அவள் மனம் கொஞ்சம் லேசானது.

ஆனால் அவள் நினைவுகள் மட்டும் மாறவில்லை.தீரன்.

அவன் பெயர் அவள் மனதில் இன்னும் ஓர் நிழல் போல இருந்தது.

ஒரு மாலை தாரணி தனியாக மாடியில் நின்று கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அவள் மொபைல் ஒலித்தது.திரையை பார்த்தாள்.

விக்ரம்.

அவள் உடனே அழைப்பை எடுத்தாள்.

“ஹலோ மாமா…?”

மறுபக்கம் விக்ரம் குரல் சற்று பதட்டமாக இருந்தது.

“தாரணி… எப்படி இருக்கே…?”

“நல்லா இருக்கேன் மாமா… அக்கா எப்படி இருக்கா…?”

சில நொடிகள் அமைதி.

பிறகு விக்ரம் மெதுவாக சொன்னான்.

“அது உன்னிடம் பேசணும்னு தான் கால் பண்ணேன்…” என்று சொல்ல

தாரணி உடனே பதட்டமா “என்னாச்சு…?” என கேட்க

“அனன்யாவுக்கு டாக்டர் சொன்னாங்க…

இப்போ அவளுக்கு டிராவல் பண்ணக்கூடாது, நாங்க வேற ஊர்ல போய்ட்டு ட்ரீட்மெண்ட் பண்ண போறோம் அங்கே இருந்து குழந்தை பெத்ததுதான் வருவ, இதை எப்படி உன் கிட்ட சொல்ல உங்க அக்காவுக்கு தெரியல அதனாலதான் நானே சொல்றேன்”  என்று சொல்ல

தாரணி அதிர்ச்சியடைந்தாள்.

“ஏன் மாமா… என்ன பிரச்சனை என்று கேட்க

விக்ரம் உடனே “பயப்பட வேண்டாம்,“அது precaution,கொஞ்சம்  பத்திரமா இருக்கணும்…” என்று சொல்ல

தாரணி சற்று அமைதியானாள்.

“சரி மாமா…”

அவன் தொடர்ந்து “அதுக்கப்புறம்… இன்னொரு விஷயம்…” என்று சொல்ல ஆரம்பிக்கும்போது அவன் மொபைல் திடீரென கட்டானது..

மீண்டும் அவள் அழைக்க விக்ரம் ஃபோனை எடுக்கவே இல்லை..

அந்த இரவு அறையில் மெதுவான மஞ்சள் விளக்கு மட்டும் எரிய,

அனன்யா படுக்கையில் சாய்ந்து இருந்தாள்.அவள் முகத்தில் ஒரு அமைதி இருந்தாலும் உள்ளே ஒரு குழப்பம்.

விக்ரம் மெதுவாக உள்ளே வந்தான்.

“தாரணி கிட்ட பேசிட்டேன்…” என்று அவன் சொன்னான்.

அனன்யா உடனே எழுந்து உட்கார்ந்தாள்.

“என்ன சொன்னா…?”

ஒன்னும் இல்ல  என்று அவன் சாதாரணமாக சொன்னான்.

அந்த ஒரு வரி அனன்யாவின் முகத்தை மாற்றிவிட்டது.

நீங்க தாரணியை இங்கே வர சொல்ல தானே போன் பண்ணிங்க, இல்லன்னா அவ கிட்ட உண்மையா பேசணும்னு நினைச்சீங்க இல்ல” என்று அவள் கேட்கும் போதேவிக்ரம் சற்று அமைதியாக  அவளை பார்த்தான்.

“ஆமா,அனன்யா, அவள் வந்தா நமக்கு உதவியா இருக்கும் என்று சொல்ல 

“இல்ல!” அவளுக்கு எதுவுமே தெரியக்கூடாது என்று சொல்ல

விக்ரம் அதிர்ந்து அவளை பார்த்தான்.

“ஏன்…?”

அனன்யா முகத்தை திருப்பிக் கொண்டாள்.அவள் இங்கே வரக்கூடாது… என கோபமாக சொல்ல 

“என்னடா இது…?” எனவிக்ரம் மெதுவாக கேட்டான்.

அவள் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் ஒரு பயம்.அவளுக்கு இப்போ அமைதி தேவை,அவள் அங்கேயே இருக்கட்டும்…” என்று சொல்ல

விக்ரம் அவளை கவனமாக பார்த்தான்.

“அது மட்டும் காரணமா…?”

அனன்யா பதில் சொல்லவில்லை.

அவன் மெதுவாக அவள் அருகில் உட்கார்ந்தான்.

“நீ ஏதோ மறைக்கிறே,என்ன அது…?” என்று அவன் கேட்க

அனன்யா கண்களை மூடஅவள் உள்ளே நடந்த போராட்டம் வெளியில் தெரிந்தது.

“நான்…”அவள் ஆரம்பித்தாள்… ஆனால் வார்த்தைகள் நிறுத்தம்.

நான் அவளுக்கு இப்போ இந்த விஷயத்தை சொல்ல முடியாது என்று சொல்ல

விக்ரம் சற்று குழப்பமடைந்தான்.

“எந்த விஷயம்…?”

அனன்யா அவனை நேராக பார்த்தாள்.

அந்த பார்வையில் ஒரு பயம்.

“இது… சாதாரணம் இல்ல விக்ரம்…” என்று சொல்ல

அந்த வார்த்தை அவனை உறைய வைத்தது.

“என்ன சொல்றே…?”அவள் குரல் நடுங்கியது.

அவள் இதை தெரிஞ்சா உடைந்து போயிடுவா,அவள் மீண்டும் அந்த 

முடிவை எடுத்துடுவா… என சொல்லும் போது அந்த வார்த்தை விக்ரமுக்கு புரிந்தது.

அவள் மீண்டும் வாடகைத்தாய் ஆக முயற்சிப்பா என்று  அவன் மெதுவாக சொன்னான்.

அனன்யா தலையசைத்தாள்.

“ஆமா,அதனால தான் அவளை தள்ளி வச்சிருக்கேன்…” என்று சொல்ல

அறையில் அமைதி. சில நொடிகள் கழித்துவிக்ரம் மெதுவாக எழுந்தான்.

“சரி,நீ சொல்லுறது சரி…” என்று சொல்லி அவன் ஜன்னல் அருகே சென்றான்.அவனது முகத்தில் ஒரு வேற மாதிரி சிந்தனை.

“ஆனா,அவன் மெதுவாக திரும்பிப் பார்த்தான்.அவள் இங்க வரணும்.

அனன்யா அதிர்ச்சியடைந்தாள்.

“ஏன்…?”

விக்ரம் மெதுவாக சொன்னான்:

“இந்த உண்மையைஅவளிடம் நான் சொல்லணும்…”

அந்த ஒரு வரி அனன்யாவை பதற வைத்தது.

“இல்ல விக்ரம்,அவளுக்கு சொல்லக்கூடாது…”

 என அணு கடுமையாக சொன்னான்:

நாட்கள் வேகமாக நகர ஆரம்பித்தது அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் குழந்தைக்காக தங்கி இருந்து குழந்தையை பெற்று வருவதாக வீட்டில் அனைவரிடமும் சொல்லி நம்ப வைத்து கிளம்பியது மட்டும் தான் அனைவருக்கும் தெரியும்.. அதன்பின் இவர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டாலும் மொபைல் எண் நாட் ரீச்சபிள் என்று தான் வந்தது..

சில மாதம் கழித்து, வீட்டில் ஒரு புதுமையான பரபரப்பு.அந்த வீடு முன்பு போல இல்லை.இப்போது அந்த வீட்டில் ஒரு எதிர்பார்ப்பு… ஒரு இனிய பதட்டம்.

அனன்யா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாள்.வீட்டின் வாசலில் கோலம்,மல்லிகை பூவின் மணம்…

அம்மா தீபம் ஏற்றி காத்திருந்தார்.

கார் மெதுவாக வந்து நின்றது.

விக்ரம் முதலில் இறங்கினான்.

அவன் முகத்தில் ஒரு மென்மையான சிரிப்பு…ஆனால் கண்களில் ஒரு கவனம்.அவன் கதவை திறந்தான்.

மெதுவாக இறங்கினாள் அனன்யா.

அவள் கைகளில் ஒரு சிறிய பொம்மை போல மடிந்து கிடந்தது அந்த குழந்தை.

அந்த காட்சியை பார்த்தவுடன்

வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் நிமிடமே அமைதியாகி விட்டார்கள்.

“அம்மா…” என்று மெதுவாக அழைத்தாள் அனன்யா.

அவள் அம்மா கண்ணீர் மல்க அவள் அருகில் வந்தார்.

அவளின் மாமியார் வீட்டில் தான் அனைவரும் கூடி இருந்தனர்..

“அணு…” என்று சொல்லும் போது 

அவர் குரல் நடுங்கியது.

அந்த குழந்தையை பார்த்த அந்த நொடி,அந்த வீட்டில் ஒரு புதிய உயிர் மட்டும் இல்லை.ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது.

விக்ரம் மெதுவாக சொன்னான்:

“ஜாக்கிரதையா உள்ளே போலாம்…” என்று அனன்யா மெதுவாக உள்ளே நடந்தாள்.

ஒவ்வொரு அடியும் கவனமாக.

அவள் குழந்தையை தன் மார்பில் இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த அணைப்பு ஒரு பயமும் ஒரு பாசமும்.அவள் மனதில் ஒரு நிம்மதி:

“நான் அம்மா ஆயிட்டேன்…”

அவள் மெதுவாக குழந்தையின் முகத்தை பார்த்தாள்.

அந்த சிறிய முகத்தில் அவள் வாழ்க்கை முழுவதும் இருந்தது.விக்ரம் அருகில் நின்று பார்த்தான்.அவன் கண்களில் ஒரு மென்மையான ஒளி.

“நமக்கு வந்துட்டான்…” என்று மெதுவாக சொன்னான்.

அனன்யா அவனை பார்த்து சிரித்தாள்.

அந்த சிரிப்பில்அவள் அனுபவித்த எல்லா வலியும் மறைந்திருந்தது.

அந்த நேரத்தில்அம்மா ஆரத்தி எடுத்தார்.

“இது வீட்டுக்கு வந்த முதல் பாப்பா…”

இவனால எல்லாம் நல்லதா தான் நடக்கும்…” என்று சொல்ல

அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஆனால்…அந்த மகிழ்ச்சிக்குள் ஒரு வெற்றிடம்.தாரணி.

அவள் இல்லாதது அந்த வீட்டுக்கு ஒரு குறை.

அனன்யா ஒரு நொடி சோகமடைந்தாள்.

“இவளும் இங்கே இருந்தா,எவ்வளவு சந்தோஷப்படுவா…” என்று சொல்ல

விக்ரம் அவளை பார்த்தான். உன் தங்கச்சி உனக்காக கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு இருப்பா என சொல்ல

ஹம் என அவளும் சந்தோசமாக உள்ளே வர,

அவன் மனதில் ஒரு எண்ணம்“அவளுக்கு இது தெரியணும் என்று அவன் மெதுவாக சொன்னான்

அனன்யா உடனே தலையசைத்தாள்.

“இல்லஇன்னும் கொஞ்ச நாள் கழித்து சொல்லலாம் …” என்று சொல்லி 

அவள் குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவள் மனதில் ஒரு பயம்

“இந்த மகிழ்ச்சியை நான் யாரிடமும் இப்போ பகிர முடியாது…” என்று 

அந்த இரவு அந்த வீட்டில் ஒரு புதிய சத்தம்.ஒரு குழந்தையின் அழுகை.

அந்த அழுகை…அந்த வீட்டை முழுவதும் 

நிரப்பியது.

ஆனால் அணு திடீரென்று ஏதோ உணர்ந்தாள்.அவள் மனதில் ஒரு வலி… ஒரு வெறுமை..

எல்லாம் நன்றாக போய் கொண்டு இருந்தது. ஆனால் திடீரென ஒரு நாள் ஆறு மாத குழந்தையை விட்டுவிட்டு தன் அக்கா மரணம் அடைந்தது தான் சோகம், அவள் மட்டும் அல்லாமல் அந்த குடும்பமே விபத்தில் சிக்கி உயிர் விட ரித்விக் மட்டும் இவள் கைக்கு வந்து சேர,

 அப்படி வந்த ரித்விக்கை பார்த்துக் கொள்வேன் என்று சத்தியம் பண்ணிக் கொடுத்தவள் இன்று தொலைத்துவிட்டு இருக்கிறேனே என மனதில் எண்ணி அழுதபடி தாரணி வாசலை பார்க்க,

 அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது.அது அனைத்திற்கும் பதிலாக இருக்கும் என்று அவளுக்கு அப்போது தெரியாது..

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page