அத்தியாயம் 24

மிதமான காலை நேரம் அது 

 

“அபி இந்த புடவையை இன்னைக்கு போட்டுக்கிறியா? “,  நாம வெளியே போகலாம் என்று அவளை அழைத்தான் அஸ்வந்த். 

 

காலையில் கேட்கும் வார்த்தை நிஜம் தானா!  என்று அஸ்வந்த்தின் தாடியில் கை வைத்தாள் அபிராமி. 

 

ஆஹ் என்றாள். 

 

சும்மா செக் பண்ணி பார்த்தேங்க. நிஜம் தான் போல. என் கையில  குத்திருச்சு உங்க தாடி என்றாள். 

 

அவளின் சிறு பிள்ளை தனமான விளையாட்டில் சிரித்தான் அஸ்வந்த். 

 

எங்க போறோம்?  என்று கேட்டாள். 

“சீக்கிரம் கிளம்பி வா ” என்று கூறிவிட்டு சென்றான். 

 

ஒரு மணி நேரத்தில் அவளும் கிளம்பி சுஜித்தையும் தயார் செய்து கீழே அழைத்து வந்தாள். 

 

சரோஜா பால் எடுத்து வைத்திருக்க, முதலில் சுஜித்தின் வயிற்றை நிரப்பினாள் அபிராமி. 

 

இதை கொண்டு போ அபி என்று ஒரு தோள் பையை கொண்டு வந்து அவளின் அருகில் வைத்தார் சரோஜா. 

 

பிளாஸ்க்கில் சூடான பால் இருந்தது. மற்றும் இரண்டு செட் உடைகளும் இருந்தது அந்த  பைக்குள். 

 

அபி போகலாமா? என்று கேட்டான் அஸ்வந்த். 

 

ஹான் போலாங்க. 

 

“பார்த்து போய்ட்டு வாங்க ப்பா” என்று அவர்களை வழியனுப்பி வைத்தார் பாரிஜாதம். 

 

அஸ்வந்த் டூ வீலரை முறுக்கினான். 

சுஜித்தை பத்திரமாக பிடித்து கொண்டு ஏறி அமர்ந்தாள் அபிராமி. 

 

முதல் முறை ஒரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய போகிறாள். நினைக்கவே சிலிர்ப்பாக இருந்தது அவளுக்கு. 

 

ஒரு கையில் சுஜித் மறு கையில் தன் கணவனின் தோளை பிடித்து கொண்டு  சீராக அமைந்தது அந்த பயணம். 

 

காரில் வந்திருந்தால் அரை மணி நேரத்தில் வந்திருப்பான். இரு சக்கர வாகனத்தில் வந்ததால் பொறுமையாக ஓட்டி கொண்டு வந்தான். 

 

அவனை நம்பி பின்னால் இரு உயிர்கள் வருகின்றதே என்ற எண்ணம் தான். 

 

ஒரு மணி நேரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான். 

பொறுமையா இறங்கு அபி என்றான். 

 

சரிங்க என்றவள் மெதுவாகவே இறங்கினாள். 

சாலையை கடந்து அந்த பக்கம் செல்ல வேண்டும் என்பதால் அபிராமியின் கைகளை பிடித்தான். 

 

சாலையின் இரு பக்கத்திலும் வாகனங்கள் வராத நேரம் மனைவியையும் பிள்ளையையும் பிடித்து கொண்டு சாலையை கடந்து அந்த பக்கம் வந்தான். 

 

முதல் முறை கணவனுடன் சேர்ந்து வெளி வரும் நாள் இது தான். அவனிடமிருந்து இவ்வளவு பாதுகாப்பை அபிராமி எதிர்பார்க்கவில்லை. 

 

கணவனின் கைகளை பிடித்து கொண்டு சாலையை பார்க்காமல் அவனின் முகத்தை பார்த்து கொண்டே சென்றாள். 

 

இப்படி ஒரு கணவன் கிடைத்திருக்க தான் என்ன செய்தோம் என்று நினைத்தாள். 

 

வா அபி என்ற அஸ்வந்த்தின் குரலில் நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் வந்திருந்த இடம் சார்பதிவாளர் அலுவலகம். 

 

இங்கு எதற்கு?  என்று அஸ்வந்த்தை பார்த்தாள். 

அவளின் பார்வை புரிந்தும் எதுவும் கூறாமல் அழைத்து போனான். 

 

சுஜித்தை வாங்கி தன் தோளில் போட்டு தட்டி கொடுத்தான். 

 

இவர்களை பார்த்ததும் ” எல்லாம் தயாரா இருக்கு சார் . மேடம் கையெழுத்து போட்டா போதும்” என்றார் சார்பதிவாளர். 

அபிராமியின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்தது. என்ன கையெழுத்து?  என்று அஸ்வந்த்தை பார்த்து திகைப்போடு கேட்டாள். 

 

இந்தாங்க மேடம் இதுல கையெழுத்து போடுங்க என்று சார்பதிவாளர் பத்திரத்தை எடுத்து நீட்டினார். 

 

பத்திரத்தை வாங்கி அவசரமாக அதை பிரித்து படித்தாள் அபிராமி. 

 

அவளின் பதற்றத்தை பார்த்து அஸ்வந்த் இதழ் விரித்து மெல்லிய புன்னகை வீசினான். 

 

ஏதோ ஒரு இடத்தை இவள் பெயரில் வாங்கி இருக்கிறான். அதுவும் பல இலட்சங்கள் செலவு செய்து. 

அபிராமி புரியாமல் அஸ்வந்த்தை ஏறிட்டாள். 

 

சைன் பண்ணு என்னும் விதமாக தலை அசைத்தான் அஸ்வந்த். 

 

ஒன்றும் புரியாமல் சில பல கையெழுத்துகள் போட்டாள் அபிராமி. 

 

அனைத்து டாக்குமெண்ட்ஸையும் வாங்கி கொண்டு மறுபடி பயணித்தனர். 

 

என்ன இது? இவ்வளவு நேரம் நம் சுஜித் சத்தம் இல்லாமல் உறங்கி கொண்டிருக்கிறான். தாய் தந்தையின் இனிமையான பயணத்தை அவனும் விரும்புகிறான் போல். 

 

அந்த இடத்தை பார்த்ததும் தானாக அஸ்வந்த்தின் கண்கள் கலங்கியது. 

இரு சக்கர வாகனம் போதும் எனக்கு ஓய்வு தேவை என்பது போல் அதனுடைய பயணத்தை முடித்து கொண்டது.

 

அபிராமி தனக்கு முன் தெரிந்த அந்த கட்டிடத்தை விழி மூடாமல் பார்த்தாள். 

 

மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று தான் இந்த மருத்துவமனையின் திறப்பு விழா. அதனால் வண்ண வண்ண பலூன்கள் ஓவல் வடிவத்தில் மருத்துவமனை வாயிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. 

 

சுஜித் இப்பொழுது தான் தூங்கி எழுந்தான். எழுந்ததும் அவன் கண்களில் தெரிந்தது வண்ண வண்ண பலூன்கள் தான். 

 

அவ்வ்வ்வ்… என்று அவனுக்கு தெரிந்த மொழியில் பலூன் வேண்டும் என்று அடம் பிடித்தான். 

 

அபிராமி தன் மகனின் சத்தத்தில் பலூன்களின் அருகில் சென்று அதிலிருந்து ஒன்றை நைசாக கழட்டி மகனின் கையில் கொடுத்தாள். 

 

தன் சின்னஞ்சிறு விரல்களில் பத்திரமாக பிடித்து கொண்டான் சுஜித். அவனால் பிடிக்கவே முடியவில்லை. ஆனாலும் முயற்சித்தான். 

 

இப்பொழுது தான் அந்த கட்டிடத்தின் பெயரை பார்த்தாள் அபிராமி. 

 

சுகன்யா மருத்துவமனை என்று தங்கத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 

 

அதிர்ச்சியில் அபிராமி தன் வாயை பிளந்தாள். 

 

இன்று மருத்துவமனையின் திறப்பு விழா   என்பதால் அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்த மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. 

 

அதுவும் இன்று ஒரு நாள் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.

 

வாயிலில் சிவப்பு நிற ரிப்பன் கட்டி இருக்க, அங்கு புன்னகை முகமாக வந்த இரு பெண்கள் ரிப்பன் கட்டிய கத்தரிக்கோலை அஸ்வந்த் முன் நீட்டினர். 

 

அஸ்வந்த் கத்திரிக்கோலை வாங்கி,  “அபி நீ கட் பண்ணி இந்த ஹாஸ்பிடல திறந்து வை” என்றான். 

 

ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து கட் பண்ணுவோம்ங்க என்ற அபிராமி அவன் கையை பிடிக்க, அபிராமியின் இடுப்பில் இருந்த சுஜித் தானாக அபிராமியின் கை மேல் எக்கி கொண்டு தானும் கை வைத்தான்.

 

அஸ்வந்த் அபிராமி இருவரின் முகத்திலும் தானாக புன்னகை அரும்பியது. 

 

கூடி இருந்த கூட்டம் மொத்தமும் கை தட்டியது. 

 

சுஜித் அந்த சத்தத்தில் மற்றவர்களை பார்த்து தானும் கை தட்ட முயற்சித்தான். மூன்று மாத குழந்தை மூன்று வயது குழந்தை போல் நடந்து கொள்ள ஆரம்பித்தது. 

 

அபிராமியும் அஸ்வந்தும் தன் புதல்வனை ரசித்தனர். 

 

இருவரும் கால் எடுத்து உள்ளே வைக்கும் நொடி வெல்கம் சார் என்று நாற்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட செவிலியர்கள். 

 

என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றாள் அபிராமி. 

 

அவர்களிடம் சகஜமாக உரையாடினான் அஸ்வந்த். 

 

மேம் என்று அபிராமியின் அருகில் வந்தனர் இரு பெண்கள். 

 

மேம் என்னோட பேரு பிரியா. 

என்னோட பேரு ஸ்வேதா இருவரும் அபிராமியிடம் அவர்களின் பெயர்களை கூறி அபிராமியின் கைகளில் இருந்த மகனை தூக்க, அவனும் அழாமல் இருவரிடமும் சென்றான். 

 

இருவரும் சேர்ந்து அவனை தூக்கி கொண்டு சுற்றினர். 

 

அஸ்வந்த் பேசி விட்டு அபிராமியை பார்க்க, அவள் அந்த இரு பெண்களின் மேலும் கவனத்தை வைத்திருந்தாள். 

 

என்கிட்டே வந்து சுகி எப்படி இறந்தான்னு உண்மைய சொன்ன மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ் அவங்க தான் என்றான் அஸ்வந்த்.

 

அபிராமி புரிந்தது போல் மெதுவாக தலை அசைத்தாள். 

 

ஹாஸ்பிடல சுற்றி பாரு அபி. எல்லா இடமும் சுற்றி பாரு. சுற்றி பார்த்துட்டு இந்த ரூம் வா என்றான். 

 

அபிராமி ஆர்வமாக தலை அசைத்து விட்டு கீழே இருக்கும் அனைத்து அறைகளையும் சுற்றி பார்த்தாள். 

 

ஒவ்வொரு அறையிலும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு பாத்ரூம் வசதிகளும் இருந்தது. 

 

மருந்து வாங்கும் இடம், மருந்து கட்டும் இடம் என்று ஒவ்வொரு அறையும் தனித்துவமாக இருந்தது. 

 

ஒரு சிறிய பொருளுக்கு கூட அவர்கள் இந்த மருத்துவமனையை விட்டு வெளியே செல்ல கூடாது என்பது போல் அனைத்து பொருட்களும் இருந்தது. 

 

கீழே அனைத்தையும் சுற்றி பார்த்த அபிராமிக்கு லேசாக தலை சுற்றுவது போல் இருந்தது. எண்ணற்ற அறைகள் இருக்க அதை பார்த்ததும் அவளுக்கு நிஜமாகவே தலை சுற்றியது. 

 

இது போதாதென்று மின் தூக்கியில் ஏறி அடுத்த மேல் தளத்திற்கு செல்லும் ஆர்வம் எட்டி பார்க்க, பொத்தானை அழுத்தி அதில் ஏறினாள். 

 

நிமிடத்தில் மின் தூக்கி ஏறி அதன் கதவும் திறந்து கொண்டது. 

 

எக்ஸ் – ரே மற்றும் ஸ்கேன்ஸ் அனைத்துக்கும் தனி தளமாக இந்த தளம் சிறந்து விளங்கியது. 

 

இன்னும் ஐம்பது டாக்டர்ஸ் நாளைக்கு வர்றாங்க என்ற கணவனின் குரலில் சட்டென்று திரும்பி பார்த்தாள் அபிராமி. 

 

அவன் கைகளில் சுஜித் இருந்தான். 

 

அவளின் விழிகள் கணவன் சொன்ன வார்த்தையில் மின்னியது. 

 

தன் பெயரில் இந்த மருத்துவமனை ஓங்கி நிலைத்து நிற்கும் இடம். சுகன்யாவின் பெயரில் மருத்துவமனை நினைக்கும் போதே அஸ்வந்த்தின் மேல் தனி மரியாதை வந்தது அவளுக்கு. 

 

அபிராமியிடம் சகஜமாக பேசினாலும் அவன் வாங்கி கொடுத்த ஊதா நிற பட்டு புடவையில் மிளிர்ந்த அபிராமியை அவன் கண்கள் ரசிக்க தவறவில்லை. 

 

என்னங்க எனக்கு நிஜமாவே தலை சுற்றுது. என்ன நடக்குது இங்கே? என்று கேட்டாள். 

 

அவளின் வியப்பான பார்வையில் ” அபி நீ தான் இந்த ஹாஸ்பிடல் டீன். இங்க ஒரு உயிர் கூட அனாவசியமா போக கூடாது. யார் எல்லாம் வேலையில அலட்சியமா இருக்காங்களோ அவங்கள கொஞ்சம் கூட யோசிக்காமல் நீ வேலையை விட்டு தூக்கலாம். அதுக்கு உனக்கு உரிமை இருக்குது ” என்றான். 

 

டீனா அதுவும் நானா? என்றாள் அதிர்ச்சியில். 

 

எனக்காகவும் என் பிள்ளைக்காகவும் நீ உன் அரசு வேலையை விட்டுட்டு வந்து நிக்குற. உனக்காக நான் எதையும் செய்வேன் அபி என்றான் அஸ்வந்த். 

 

அபிராமியின் கண்கள் கலங்கியது. ஆசிரியர் வேலையை அவள் வேண்டுமென்றே விடும் பொழுது அவளின் மனம் மிகவும் காயப்பட்டது. ஆனால் சுஜித்தை பார்த்து மனதை திருப்தி படுத்தி கொண்டாள்.  இப்பொழுது அதற்கு மருந்தாக அமைந்தது இந்த வேலை. இருக்கும் இடம் மறந்து தன் கணவனின் நெஞ்சில் புதைந்து கொண்டாள் அபிராமி. 

 

இந்த மருத்துவமனையில கடைசியா போனது என் சுகியோட உயிரா மட்டும் தான் இருக்கணும் அபி. இனிமேல் எந்த உயிரும் இங்கே போகக்கூடாது.  நீ தான் இனிமேல் அதுக்கு பொறுப்பு என்றான் அஸ்வந்த். 

 

உங்களுக்காக நானும் என்ன வேணாலும் செய்வேன் என்று அவனின் நெஞ்சிலிருந்து பிரிந்து கூறினாள். 

 

அபிராமியின் விழிகளில் தன் விழிகளை கலந்தான் அஸ்வந்த். 

 

அடுத்த பதிவில் காண்போம். 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page