உயிராக வந்த உறவு – இறுதி அத்தியாயம்

அர்ச்சனா போன் கால் முடிந்த அந்த நொடியில் தாரணி உடைந்து அழுதாள்.

“இது எல்லாம் என்னால தான்…”என சொல்லும் போதே அவள் குரல் முறிந்தது.


அந்த நொடியில் தீரன் அவளை திடீரென்று அவளை அணைத்து “தாரணி…” என்று அழைக்க,


ஹம் என்றாள்..


“நீ ஒன்னும் தவறு பண்ணல,நான் இருக்கேன்…” என்று அவன் சொல்லும் போது அவள் அவன் மார்பில் சாய்ந்தாள்.

அந்த அணைப்பு பல வருடங்களாக உடைந்து கிடந்த பாசத்தை மீண்டும் இணைத்தது.உனக்கு நான் இருக்கேன்,

எதுவானாலும் நான் பார்த்துக்குவேன்…” என்று சொல்ல


அந்த ஒரு வரி தாரணியின் மனதை உடைத்தாலும் அதே நேரத்தில் தைரியம் கொடுத்தது.


அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

அவள் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“இன்னும் அவனை விட்டுட்டு போகலயா நீ” என்று சொல்லி அவள் பற்களை கடித்தாள்.


“இது முடியணும் இதுக்கு முடிவு கட்டப் போறேன்…”என தன் மனதில் சொல்லி கொண்டாள்..


மறுபக்கம் ஒரு பழைய கட்டிடம்.

அதன் மேல் மாடியில் ஒரு குழந்தை

அழுது கொண்டிருந்தது.அவனுடன் நின்றாள் மாளவி.அவள் முகத்தில் ஒரு குழப்பம்.ஒரு பக்கம் பண ஆசை…

மறுபக்கம் பயம்.“நான் இதுக்காக வந்தேனா…?” என்று அவள் மனதில் ஒரு கேள்வி.


அந்த நேரத்தில் அர்ச்சனா வேகமாக மேலே வந்தாள்.

“மாளவி!” என்று அழைக்க

அவள் திரும்பினாள்.

“என்னம்மா…?”

அவள் குரலில் ஒரு பயம்.


அர்ச்சனா அவள் கையில் இருந்த குழந்தையை பார்த்தாள்.

“இது தான் நம்ம விளையாட்டோட முடிவு” என சொல்ல மாளவி பதறினாள்.


“என்ன சொல்லுறீங்க…?”


அர்ச்சனா கண்களில் ஒரு பைத்தியம்.

“அவங்க இருவரும் சேர்ந்து இருக்கக் கூடாது,அதுக்கு இந்த குழந்தை இருக்கக் கூடாது…” என சொல்லவும்


அந்த வார்த்தை மாளவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

“இல்ல… இது சரி இல்ல,நான் இதுக்கு வரல, எனக்கு நீங்க நிறைய பணம் தரேன்னு சொன்னீங்க, அதனாலதான் நீங்க சொன்னதெல்லாம் பண்ணுங்க…” என்று சொல்லி அவள் குழந்தையை இறுக்கமாக பிடித்தாள்.


அர்ச்சனா சிரித்தபடி,“நீ பணத்துக்காக வந்தவ,இப்போ நல்லவங்க மாதிரி பேசுறியா…?உனக்கு பணம் வேணாமா…?” என்று கேட்க


மாளவி கண்ணீர் மல்க“அதுக்காக ஒரு உயிரை…” என்று சொல்லும்போதே அவள் நெஞ்சு அடைத்தது அவளால் பேச முடியவில்லை.


அந்த நேரத்தில்அர்ச்சனா திடீரென்று முன்னே வந்தாள்.கொடு அந்த பையனைஎன சொல்லி

குழந்தையை கையில் பிடித்தாள்.

இது முடிஞ்சா தான்,அவங்க வாழ்க்கையும் முடியும்…” என்று சொல்லி ரித்விக்கை பார்த்தாள்


மாளவி கத்தினாள் “அர்ச்சனா… வேண்டாம்…!”


ஆனால் அவள் கேட்கவில்லை.


கீழே  தாரணி & தீரன் நின்று கொண்டு இருக்க,


அந்த நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டதும் தாரணி திடீரென்று தலை தூக்கினாள்.

“தீரன்…!”அவன் குரல்…!” என்று சொல்ல


இருவரும் மேலே பார்த்தார்கள்.

அந்த கட்டிடம் மாடியில் அர்ச்சனா கையில் குழந்தை உடன் நிற்க,

தாரணி கத்தினாள்“அர்ச்சனா… வேண்டாம்…!”


தீரன் குரல் கடுமையானது“அர்ச்சனா… ஒழுங்கா விடு!” என்று சொல்ல


அர்ச்சனா சிரித்தபடி, “இப்போ இவனுக்கு என் கையால தான் முடிவு” என சொல்லி அவள் கீழே பார்த்தாள்.


“நீங்க இருவரும் சேர்ந்து இருக்கணும்னா,இந்த குழந்தை இருக்கக் கூடாது…” என சொல்லவும்


தாரணி மண்டியிட்டு விழுந்தாள்.

“ப்ளீஸ்… அவனை கொடு,நான் எல்லாத்தையும் விடுறேன்…”. என சொல்லிஅவள் அழுதாள்.


தீரன் கத்தினான்“அர்ச்சனா… இது பைத்தியகார தனமா இருக்கு…”


அர்ச்சனா குரல் ஆக்ரோஷமாக எதிரொலித்தது.”ஆமா நான் பைத்தியம் தான்!நீங்க என்னை அப்படித்தான் ஆக்கினீங்க!” என சொல்ல


அந்த நொடியில் அவள் குழந்தையை தூக்கினாள்…மாளவி கத்தினாள்:

“வேண்டாம்!!!”தாரணி கண்களை மூட


அந்த ஒரு நொடி உயிர் நின்றது.


உடனே மாளவி,”இந்த குழந்தைக்கு நான் வாடகையா இருக்கலாம் ஆனா இந்த குழந்தை தாரணி கிட்டயே இருக்கட்டும்.அவங்க கிட்ட கொடுத்துடு.. எனக்கு பணம் முக்கியம் தான் நான் இதை பண்ணுனேன். ஆனா ஒரு உயிரை எடுக்கணும்னு நினைச்சதே இல்ல.. அனன்யாவும் விக்ரமும் என்கிட்ட இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு சொன்னாங்க.. உன்னை கெஞ்சி கேட்கிறேன் குழந்தைய அவங்க கிட்ட கொடுத்துடு”என  அவள் சொல்லும் போதே,அர்ச்சனா அவளை பார்த்து சிரித்தபடி உனக்கு காசு முக்கியமா இருக்கலாம். ஆனா எனக்கு தீரன் முக்கியம்.



இப்போது தாரணிக்கு தெளிவாக புரிந்தது. இதனால் தான் தன் அக்காவும் மாமாவும் எங்கேயோ சென்று குழந்தை பெற்றுக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்தார்கள் என்று..


உடனே அர்ச்சனா,உனக்கு ஒன்னு தெரியுமா உங்க குடும்பத்தை கார்ல போகும்போது கொலை பண்ணுனதே நான்தான்..ஆனால் இந்த தாரணி மட்டும் தப்பிச்சு தொலைஞ்சுட்ட, அவ மட்டும் போயிருந்தாலும் என் வாழ்க்கையில நான் இப்படி கொலைகாரியா அவதாரம் எடுக்க வேண்டிய நிலைமையே வந்திருக்காது என சொல்லவும்


தாரணி ஒரு நொடி அவளைப் பார்த்தாள். “என் குடும்பத்தை கொன்னது நீயா?” என அர்ச்சனாவை பார்த்து கேட்க


ஆமா உன் குடும்பத்தை வேறோட அழிக்கணும்னு நினைச்சேன்.ஏன்னா எனக்கு தீரன் வேணும் அவன் திரும்பவும் பக்கம் வந்துட கூடாதுன்னு நினைச்சேன்.ஆனா நான் நினைச்சது எல்லாமே இப்போவும் இல்ல இந்த குழந்தையை என்ன பண்ணுறேன் பாரு என்று அவள் மீண்டும் ஆக்ரோஷமாக கத்த


கீழே தாரணி மண்டியிட்டு அழ,

தீரன் பதட்டமாக கத்துகிறான்…

“அர்ச்சனா… வேண்டாம்!”

காற்றே நின்றது போல.

அந்த நேரத்தில் மாளவியின் கண்களில் ஏதோ மாறியது.அவள் பார்த்தாள்…

அந்த சிறிய முகத்தை.

அழுகை… பயம்,அந்த குழந்தையின் விரல்கள் அவள் கையை இறுக்கமாக பிடித்தது.அந்த தொடுதல்…

அவள் மனதை உடைத்தது.

“இது… என் குழந்தை…” என்று

அவள் உள்ளுக்குள் சொன்னாள்.


அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“நான் என்ன பண்ண போறேன்…?”

அந்த நொடியில்…

அவள் நினைவுக்கு வந்தது.அவள் கருவுற்ற நாள், அந்த குழந்தையின் முதல் அசைவு,அவள் அனுபவித்த வலி

“பணம்…”அது எல்லாம் எதுக்கு…?”

அவள் திடீரென்று கத்தினாள்.


“அர்ச்சனா… நிறுத்து!!!”

அந்த குரல் அர்ச்சனாவையே அதிரச்செய்தது.


அவள் திரும்பிப் பார்த்தாள்.“என்னடி…?”


மாளவி முன்னே வந்தாள்.

“நீ இதை செய்ய விட மாட்டேன்…” என்று சொல்ல அவள் குரல் நடுங்கினாலும்,

அதில் ஒரு உறுதி.


“அது உன் குழந்தை இல்ல,என்னுடையது…” என்று சொல்ல


அர்ச்சனா கோபமாக சிரித்தாள்.

“இப்போ தான் இது தெரியுமா…?”


அவள் மீண்டும் குழந்தையை தூக்கினாள்.


 அந்த நொடியில் மாளவி திடீரென்று ஓடி வந்து அர்ச்சனாவின் கையை பிடித்தாள்!

வேண்டாம்! குழந்தை அவளது கையிலிருந்து சற்றே வழுக்கியது…


தாரணி கீழே இருந்து கத்த

“அய்யோ!!!”தீரன் மேலே ஓட ஆரம்பித்தான்.


மாளவி முழு சக்தியுடன் குழந்தையை பிடித்தாள்.அவள் கையை இறுக்கமாக சுற்றி அந்த  உயிரை தன் மார்பில் அணைத்துக் கொண்டாள்.


“நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்,இவனை இனி யாரும் காயப்படுத்த மாட்டாங்க…”என சொல்லி

அவள் அழுதாள்.


அந்த நொடியில்அவள் பணத்துக்காக வந்த மாளவி இல்லை.ஒரு தாய்.


அர்ச்சனா கோபத்தில் தள்ளினாள்:

“கொடு!”


மாளவி திடீரென்று பின்னோக்கி நின்றாள்.

“இல்ல!” என்று அவள் கத்தினாள்.

“நான் தவறு பண்ணேன்,ஆனா இன்னும் செய்ய மாட்டேன்…” என்று சொல்ல


அந்த நேரத்தில்  தீரன் மாடிக்கு வந்தான்.

அவன் உடனே மாளவியின் அருகே நிற்க

மாளவி கண்ணீருடன் ரித்விக்கை பார்த்தாள்.


 காப்பாத்துங்க,ப்ளீஸ்… என்று சொல்லி

அவள் கையை நீட்டினாள்.



காற்று வேகமாக வீச,அந்த இடத்தில் இன்னும் பதட்டம் குறையவில்லை.

மாளவி குழந்தையை காப்பாற்றி

தன் கைகளில் இருந்து மெதுவாக தீரனிடம் கொடுத்தாள்.


“அவனை காப்பாத்துங்க…”அவள் குரல் குலைந்தது.தீரன் குழந்தையை அணைத்துக் கொண்டான்.

தாரணி கீழே நின்று கண்ணீர் வடித்தாள்.


அந்த நொடி அவர்கள் இருவருக்கும் உலகமே திரும்பி வந்தது.

ஆனால்… அர்ச்சனா கண்களில் இன்னும் அந்த கோபம் குறையவில்லை.



அவள் பார்வை நேராக மாளவியை நோக்கி இருக்க,“நீ தான் இதை எல்லாம் கெடுத்தே…” என்று பார்க்க

மாளவி சோர்வாக நின்றாள்.

“நான் தவறு பண்ணேன்,ஆனா இன்னும் பெரிய தவறு செய்ய விட மாட்டேன்…” என்று சொன்ன அந்த வார்த்தை…

அர்ச்சனாவின் கோபத்தை தூண்டியது.


“நீ என்னை தடுக்குறியா…?”

அவள் திடீரென்று முன்னே வந்தாள்.

“நீ இல்லனா… இது முடிஞ்சிருக்கும்…” என்று சொல்லி அவள் மாளவியை தள்ள முயன்றாள்.


“அர்ச்சனா… வேண்டாம்!”

தீரன் கத்தினான்.

ஆனால்…

அவள் கேட்கவில்லை.


 அந்த நொடியில் அர்ச்சனா மாளவியை தள்ளினாள்.மாளவி சமநிலை இழந்து

அவள் பின்னோக்கி தடுமாறினாள்…

அந்த மாடி விளிம்பு,அவள் காலடியில்.

“அய்யோ!” என்று

தாரணி கத்தினாள்.


மாளவி கீழே விழப் போகும் அந்த நொடியில் அவள் திடீரென்று அர்ச்சனாவின் கையை பிடித்தாள்!


அர்ச்சனா அதிர்ந்தாள். “விடு!” என்று

அவள் கத்த


மாளவி கண்ணீருடன் பார்த்தாள்.

“நான் மட்டும் போக மாட்டேன்…”

“நீயும் என்னோட வரணும்…”

அவள் பிடியை விடவில்லை.


அந்த நொடியில் இருவரும் சமநிலை இழந்தார்கள்.தீரன் ஓடி வந்தான்.

“மாளவி! கை விடு!”

ஆனால் அது ஒரு நொடி தாமதம்.

இருவரும் மாடி மேல் இருந்து கீழே விழ


“அய்யோ!!!” என்று தாரணி கத்தினாள்.


சில விநாடிகள் யாரும் பேசவில்லை.

தீரன் கீழே பார்த்தான்.அவனது முகம் உறைந்து போனது.தாரணி கண்ணீர் மல்க கீழே பார்த்தாள்.

அந்த இடத்தில் இரண்டு உயிர்கள்

நிலையாக கிடந்தது.

ஒரு பக்கம்…தவறான ஆசை…

மற்றொரு பக்கம்…பண ஆசை

இரண்டும்அந்த நொடி முடிந்தது.

தாரணி குழந்தையை இறுக்கமாகஅணைத்தாள்.

தீரன் அவள் அருகில் நின்றான்.

அவன் மெதுவாக “இது முடிஞ்சிடுச்சு…” என்று சொல்ல


காற்று மெதுவாக வீசியது.

அந்த இடத்தில் ஒரு போராட்டம் முடிந்தது.ஆனால்…ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பித்தது.


அந்த சம்பவத்துக்கு பிறகு

எல்லாம் ஒரு கனவுபோல இருந்தது.

போலீஸ் விசாரணை,அந்த தொழிற்சாலை… அந்த மாடி…

அனைத்தும் மெதுவாக கடந்த காலமாக மாறின.


அர்ச்சனா… மாளவி…

அவர்கள் இருவரின் முடிவும்…

ஒரு எச்சரிக்கை போல இருந்தது.

பாசம் இல்லாத ஆசை… முடிவில் அழிவை தான் தரும்.


தாரணி…

அந்த நாட்களில் பேசவே முடியவில்லை.

அவள் முழுக்க குழந்தையோடு இருந்தாள்.அவன் முகத்தை பார்த்தாலே…அவள் உள்ளம் நொந்து போனாலும் அதே நேரத்தில் ஒரு அமைதி.



அவள் மெதுவாக தன் வீட்டில் இருக்க,

வாசலில் நின்று கொண்டிருந்தான் தீரன்.அவன் அமைதியாக எல்லாம் பார்த்தான்.தாரணி திரும்பிப் பார்த்தாள்.


இருவரும் கண்கள் சந்தித்தது.

அதில் பழைய காதல்,புதிய உண்மை…

தீரன் மெதுவாக உள்ளே வந்தான்.

“இப்போ எல்லாம் கிளியர் ஆயிடுச்சா…?”

அவன் மெதுவாக கேட்டான்.


தாரணி சிரித்தாள்.

“ஆமா…”


சில நொடிகள் அமைதி.

“நான் போறேன்…”


அவள் மெதுவாக சொன்னாள்.

தீரன் உடனே:“எங்கே…?”

அவள் சிரித்தாள்.


“என் வாழ்க்கையை தேட…”

அந்த வார்த்தை…அவனை நின்ற இடத்தில் உறைய வைத்தது.


“நீங்க என்னோட வாழ்க்கை இல்ல…”

அவள் மெதுவாக சொன்னாள்.


“நீங்க என் நினைவுகள் என சொல்லி

அவள் திரும்பி நடந்தாள்.


அந்த நேரத்தில் தீரன் குரல்:

“தாரணி…”அவள் நின்றாள்.


அவன் மெதுவாக சொன்னான்:

“நான் இன்னும் உன்னை காதலிக்கிறேன்…” ரித்விக் நம்ம குழந்தை” என சொல்ல


அவள் கண்கள் நனைந்தது


அவன் தொடர்ந்தான்

“இந்த முறை,நான் உன்னை விட மாட்டேன்…” என்று சொல்ல.


அவள் மெதுவாக திரும்பினாள்.

அவன் அருகே வந்தான்.நீ ரெடி இல்லனா,நான் உனக்காக காத்திருப்பேன்”  என சொன்ன

அந்த ஒரு வரி அவள் மனதை உருக்கியது.


அவள் மெதுவாக சிரித்தாள்.


அந்த நொடி அவர்கள் இருவரும் இதுவரை பிரிந்தாலும்அவர்கள் காதல் முடிவடையவில்லை.

முடிவு இல்லை… தொடக்கம்

ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டது.

ஒரு குடும்பம் மீண்டும் இணைந்தது.

ஒரு காதல் காத்திருந்தது…

வாழ்க்கை முடிவுகளை தராது…

புதிய தொடக்கங்களை தான் தரும்.

 


நன்றி🙏🙏




 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page