நலம் தானா ஊதாப்பூவே ‘!!🪻-24

“நான் எங்கே சென்றாலும் என் மனம் உன்னையே சுற்றி வட்டமிடுகிறது “

….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….

பாகம் -24

தலைப்பாகையை அவிழ்த்ததும் வர்மாவைப் பார்த்து விழி விரித்தால் இன்னும், அவன் முகத்திற்கு மேல் அவள் முகம் அவனைப் பார்த்து குனிந்த படி இருந்தாள்.

பார்க்கில் பார்த்தவளை முத்தத்தில் திணறடித்து அவள் கண் திறக்கும் முன் மாயமாய் மறைந்து விட்டான். அவனைத் தேடி தவித்தவளுக்கு இதோ அவனே வந்து விட்டான்.

இது கனவா இல்லை நினைவா அவளின் ஒரு விரலால் மெல்ல அவன் கன்னத்தில் தொட்டால், முதலில் மெல்ல தொட்டவள் தாடி இல்லா அவன் கன்னத்தில் இன்னும் அழுத்தமாக தொட்டால் லேசான சொர சொரப்பு அவள் விரலில் உணர, அவனும் அவள் விரலின் ஸ்பரிசம் உணர்ந்தான்.

இருவருக்கும் பேரலையின் சத்தம் இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது. அவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க அவளின் இதழ்கள் துடித்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் அவளிடம் சொல்ல, அவன் மனதை அவளிடம் பெரு மழை போல் கொட்டித் தீர்த்தட தான் நினைக்கிறான்.

ஆனால் அவளைக் கண்டதும் சீண்டிப் பார்த்திடவே பெரு விருப்பம் உண்டாகி விடுகிறது. அவளின் கண்களும், இதழ்களும், கன்னங்களும், மூக்கின் நுனியும் முந்நூறு கவிதைகள் இயற்றினால் என்ன செய்வது ரயில் வண்டி போல தடம் புறளவே முனைகிறது.

சிறிது நேரம் பார்வை தீண்டல்கள். அப்போது காற்றில் மிதந்து வந்து அவர்களின் செவியை வந்தடைந்தது பாடல் வரிகள். அவளின் முகம் சோகத்தை தத்தெடுத்துக் கொள்ள, அவன் அவளை கீழே இறக்கி, அப்படியே மலர் செண்டு போல கையில் ஏந்தி அவன் ஏற்கனவே பதிவு செய்த இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தான்.

குர்ஜாண்டி, ஓ மாரே பன்வா ரீ,குர்ஜாண்டி, 
ஓ மாரே பன்வா ரீ,
கெட்டி முல்சு பன்வா
,கெட்டி முல்சு பன்வா,
குர்ஜாண்டி… 

இது கணவனைப் பிரிந்த மனைவி, ‘குர்ஜா’ (கொக்கு வகை) பறவையிடம் தனது செய்தியை அனுப்பும் உணர்வுபூர்வமான நாட்டுப்புறப் பாடல். சீமா மிஸ்ரா பாடியது பிரபலமானது. 

வர்மாவிற்கு முதலில் அர்த்தம் புரியாமல் இருந்தாலும் அந்த பாடல் வரிகளில் உள்ள ஆழமான சோகம் இசையோடு கேட்க அவனை அறியாமல் அவன் இதயம் அந்த சோகத்தில் மூழ்கிப் போனது.

ஆரண்யாவின் கண்களில் கண்ணீர். அவளை விட்டு எழுந்தவன் மொழிபெயர்ப்பு செய்யும் ஆளை பற்றி விசாரித்து அவனிடம் இந்த பாடலுக்கான் தமிழ் அர்த்தத்தை கேட்க, அசந்து விட்டான்.

கணவனை பிரிந்த மனைவி கொக்கிடம் தன் கவலையை சொல்லி தூது அனுப்புவதாக வார்த்தைகள் அமைதிருக்கிறார்கள். அவன் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் துடித்து, சிலிர்த்து, தவித்து அவனை புரட்டிப் போட்டது.

வேகமாக சென்றான். கணவனை பிரிந்த மனைவி என்ற சொற்கள் மட்டுமே அவன் மூளைக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவள் என்னை கணவனாக நினைத்து வருந்தினாளா, இது போதாதா ஆறடி ஆண்மகனையும் ஒரு பெண்ணின் இதயத்துக்கு குடிபெயர்ந்து விட,

பாடலின் ஓசை நின்றதும் மெல்லிய விசும்பலுடன் மழை பெய்த பின்னும் மெல்லிய தூரல் வந்து மெல்ல அடங்கும் அதைப் போல அவளின் அழுகையும் முடிவுக்கு வர, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள் அவன் இல்லை. மீண்டும் என்னை விட்டு போய் விட்டாரோ கண்ணை கசக்கி அவள் பக்கத்தில் பார்க்க வர்மா தெரிந்தான்.

வர்மா தன் இதயப் பகுதியை தொட்டு :அப்பாடா அவ பார்க்குறதுக்குள்ள வந்துட்டோம் ‘ மூச்சு விடுவதை கூட அவளுக்கு தெரிந்து விடக் கூடாது என்று மெல்ல இழுத்து விட்டான்.

அவள் பேச முயற்சிக்க அவர்கள் முன் உணவுகள் வந்து வைக்கப்பட்டது.

ஜோத்பூரின் மாவா கச்சோரிகள்,லால் மாஸ்,பியாஸ் கி கச்சோரி, பருப்பு நெய் சேர்த்து மசித்த உணவு என ராஜஸ்தானிய உணவுகள் அங்கு இருந்தது.

அவளுக்கு ஊட்டி விடும் ஆர்வத்தில் லால் மாஸ் காரமான மசாலா உடன் இறைச்சி சேர்த்து செய்யப்படும் குழம்பில், ரொட்டியை தோய்த்து அவளுக்கு ஊட்டி விட, மிகையான காரத்தில் துடித்து விட்டாள்.

“இது ரொம்ப காரம் ” அவளின் முகக் குறிப்பே காட்டிக் கொடுத்தது., “சாரி ஆரு,” அடுத்தும் அவன் கார உணவை கையில் எடுக்க, அவன் கையை பிடித்து ஜோத்பூரின் இனிப்பு கச்சோரியை காட்டினாள். இனிப்பு, நெய் உலர் கொட்டைகள் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு ராஜ இனிப்பு என்று இங்கே சொல்லப்படுவது.

அவளுக்கு விருப்பமானதை கேட்டு அவளுக்கு ஊட்டி முடித்தவன் அவளுக்கு கொடுத்தது போலவே காரமான உணவினை அவள் தடுத்தும் கேளாமல் உண்டவன் அதற்க்கு அடுத்தே  இனிப்பை உண்டான். அவள் உண்டதை தான் அவனும் உண்டான். அவளுக்கோ தான் சொல்லியும் கேட்காமல் அவர் விருப்பப்படி தானே சாப்பிடுகிறார் இவர் எப்போதுமே இப்படி தான் தனக்கு இவரிடம் முக்கியத்துவமே இருக்காதா என்று நினைத்தாள் உள்ளுக்குளே மருகினாள்.

சாப்பிட்டு முடித்ததும் அவளை ஒரு கூடாரத்திற்கு அழைத்து சென்றான். இவள் தயக்கத்துடன் சென்றாள். அங்கே வருணும், நிதிஷாவும் சிரித்த முகத்துடன் இவர்களை வரவேற்றனர்.

அதிர்ச்சியில் என்ன பேசுவதென்று தெரியவில்லை, இவன் ஒரு மாயக்காரன் இவனை சந்தித்ததிலிருந்து வாழ்வில் எதெல்லாம் நான் பார்த்ததோ, பேசியதோ, உணர்ந்ததோ இல்லையோ அதை எல்லாம் உணர்த்தி விட்டான்.

இவனை புரிந்து கொள்ளவே நான் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுமோ என்னவோ, அமைதியாக இருக்கும் ஆரண்யாவை நெருங்கிய நிதிஷா அவளை அணைத்துக் கொண்டாள்.

“சாரி ஆரண்யா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். உங்க காதல் எவ்வளவு உண்மையானது. உங்க காதலை புரிஞ்சிகிட்டதால தான் எங்களுக்குள்ள இருக்குற காதல் எங்களுக்கு புரிஞ்சது. வர்மாவால தான் எங்க கல்யாணம் நடந்தது. இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம். ஏதோ அவசரத்துல, வர்மாவை தோற்கடிக்கணும்னு நினச்சு அவரை கல்யாணம் பண்ணிக்க நினச்சேன்.

கல்யாண மேடைக்கு வரை வரைக்கும வர்மாவ கல்யாணம் பண்ணிக்கிற நினைப்பு தான் தாலி கட்ற நேரத்தில தான் என்னால் வர்மாவை நினைக்க முடியல, ஏதோ பயம் பிடிக்காத உணர்வு, என் முகத்தைப் பார்த்து வர்மா,
“என்ன நினைச்சத சாதிக்கப் போறோம்னு சந்தோஷமா இருந்த இப்போ என்ன ஆச்சு “

பொறுமையா தான் பேசுனாரு, அவருக்கு எப்படி என் மனசுல இருக்குறது புரிஞ்சிருக்கும் ஏனக்கு அழுகை தான் வந்துச்சி, என்மனசு வேற தேடுச்சி, அங்க இருக்குற எல்லாரையும் பார்த்தேன், வருணை பார்த்ததுக்கு அப்புறம் தான் மனசு நிம்மதியா இருந்தது.

இந்த இடத்துல வருண் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு என் கண்களைப் பார்த்து கண் மூடி திறந்து, உனக்கு நான் இருக்கேன்னு சொன்ன மாதிரி இருந்தது.

அதுக்கு மேல பார்க்க முடியாம கண்ணை மூடிக்கிட்டேன் அழுகை மட்டும் நிக்கவே இல்லை. கெட்டி மேள சத்தம் கேட்டுச்சு, பதறிப் போய் கண்ணை திறந்து பார்த்தா, என் கண்ணை என்னால நம்பவே முடியல,

வ வருண் எனக்கு தாலி கட்டிட்டு இருந்தாரு, வர்மா சிரிச்ச முகத்தோட எங்களுக்கு அர்ச்சனை தூவி வாழ்த்து சொன்னாரு, எங்களுக்கே தெரியாம இருந்த காதலை எங்களுக்கு புரிய வச்சிட்டாரு”

நிதிஷா சொல்லி முடித்ததும், வருண் அவள் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டவன் “போதும் மா அழுதது “

இவர்கள் இருவரையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தவள் வர்மா பக்கம் திரும்பவே இல்லை. அவனை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை அவளால்.

இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு, நன்றியும் சொல்ல, அவளின் நன்றிக்கான அர்த்தம் புரிந்தவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். வெளியே வந்தவள் வீட்டுக்கு செல்லலாமா என்னும் யோசனையோடு இருக்க, அங்கு வந்த பெண் ஒருவர்

வர்மா புக் செய்த கூடாரத்தை காண்பித்து அழைத்து சென்றார். “உங்களுக்கு ஏதாவது தேவைன்னா கூப்புடுங்க, சார் மீட்டிங் முடிச்சிட்டு வரேன்னு சொன்னாரு “

தலை அசைத்து விட்டு, அங்கு சென்றாள். வெளியே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு வானில் இருக்கும் நட்சத்திரங்கள் கீழே இருங்கி கூடாரத்தில் ஒட்டிக் கொண்டது போல் இருந்தது.

உள்ளே அறை முழுவதும் பல வித பூக்களால் தோரணங்கள், கட்டிலில் பூக்கள் கொண்டு இதயம் வரையப்பட்டு இருந்தது.

பூக்களின் வாசம் முழுவதும் அறையில் நிரம்பி வழிந்தது.அமர்ந்து யோசனையில் இருந்தவள் அப்படியே உறங்கி போனாள். காலையில் கண் விழித்தவள், அறையை சுற்றி பார்த்தாள். யாரும் இல்லை. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவள் பிரியாக்கு அழைக்க,

அங்கிருந்தவர்கள் நீங்கள் செல்ல வாகனம் தயாராய் இருப்பதாக சொல்ல, வர்மா தான் ஏற்பாடு தான் செய்திருப்பான் என்று புரிந்து கொண்டாள்.

வீட்டிற்கு சென்றாள். ப்ரியா, ஆரண்யா வீட்டிற்கு தகவல் சொல்லி விட்டதால் எதுவும் கேட்கவில்லை. அசதியாக இருக்கிறது என்று சொல்லியவள் படுக்க சென்று விட்டாள்.

மாலை ஆரண்யாவை எழுப்ப”அம்மா தூங்க விடு மா ப்ளீஸ் “

“இன்னைக்கு அப்பாவோட புது பிசினஸ் பார்ட்னர் வராங்க நீ கிளம்பி ரெடி ஆகு மா “

“நான் எதுக்கு மா” அவளுக்கு தூங்க வேண்டும் போலிருந்தது.

“நம்ம பேமிலி பார்க்க தான் வராஙக, நீ இல்லைனா நல்லா இருக்காது மா “

வேண்டா வெறுப்பாக குளித்து முடித்து கிளம்ப, தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட லெகங்கா வந்து கொடுத்தவர் “அப்பா கொடுக்க சொன்னாரு ஆரு, இது ரொம்ப அழகா இருக்கு, இத போட்டு ரெடி ஆகு ” சிரித்த படி சொல்லி விட்டு செல்ல,

‘அம்மாவின் பேச்சும், சிரிப்பும் சரி இல்லையே, யார் வருவது, இதுல இந்த டிரஸ் வேற ‘ சலிப்புடன் எடுத்து போட்டுக் கொண்டாள்.

வீட்டில் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. ரத்தோரின் அம்மா, தங்கை அவர்களின் குடும்பம் என வீடு எப்போதும் ஆட்கள் நிறைந்தே இருக்கும். ரத்தோரின் தங்கையும் ஆரண்யாவின் அத்தையுமான சுனிதா “ஆரு இதுல ஸ்வீட்ஸ் இருக்கு டேபிள் மேல வச்சிட்டு வா “

வரப்போகும் விருந்தினருக்கு என்பது தெரிந்து அமைதியாய் வைத்து விட்டு, மாடிக்கு சென்றாள் அவளின் அறைக்கு வெளியே பால்கணியில் சுவறோரம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கார் வரும் சத்தம் கேட்டதும் ‘யார் வருவது ‘ கீழே பார்க்க, காரில் இருந்து இறங்கினான் வர்மா, ஆரண்யாவின் அப்பா ரத்தோர் கை குலுக்கி வரவேற்று வீட்டுக்குள் அழைக்க, ஒரு நொடி மேலே பார்த்தான்.

ஆரு வேகமாக கீழே இறங்கி ஓடி வந்தவள் மூச்சு வாங்கிட  அவன் முன் நின்றாள்.

“இவ தான் என் பொண்ணு ஆரண்யா “
ரத்தோர், வர்மாவிடம் சொல்ல

“காம்மா காணி ” என்று ராஜஸ்தாணி மொழியில் சொல்லி விட்டு கண்ணடித்து சென்றவனை விழி விரித்து பார்த்தாள் வர்மாவின் ஆரண்யா.

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page