இதயம்!
துடிப்பு – 06
தந்தையை சந்தித்திட,மருத்துவமனைக்கு வந்திருந்தான்,அமிதேஷ்.
அவருக்கென,இருக்கையில் காத்திருக்கும் போது தான்,ஒன்று நினைவில் வந்தது.
பவனி,அவன் தந்தையின் நேரடி கண்காணிப்பில் கீழ்,பணி புரிந்த தாதி என்பது.
அதனாலேயே,அவளால் அத்தனை எளிதில் அணுக முடிந்தது.இதுவே,சாதாராண பிரஜையென்றால்,வெகு சிரமமாய் போயிருக்கும்.
அதே நினைப்பில் இருந்தவனின்,கையில் ஸ்டெத்துடன் வந்து நின்றாள்,அக்ஷதி.
ஆம்,
அவளும் ஒரு மருத்துவர் தான்.அரசாங்க மருத்துவ துறையில் ஒரு பொறுப்பான பதவியிலும் இருக்கின்றாள்.
வந்தவளோ,அவனிடம் நேரடியாகவே,”ஆஜு எங்க..? அவன் வர்லியா..?” என வினவிட,அமிதேஷுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
அவன் விரட்டுவதும்,இவள் அதை கண்டு கொள்ளாமல் துரத்துவதும் கூட அவனால் ஏற்க முடிந்த போதிலும்,சம்பந்தேயில்லாமல் நடுவில் புகுந்து தனதும் விஷ்வின்னதும் தலையை அவள் உருட்டுவது தான்,அவனுக்கு பெருத்த உளைச்சலாய்.
“அம்மா தாயே..அவன் என் கூட வர்ல போதுமா..அவன் அவனோட வீட்ல இருக்கான்..வேணும்னா அங்க போய் பாரு..சும்மா சும்மா இங்க வந்து என்னோட தலய உருட்டாத..” கும்பிடாத குறையாய் கெஞ்சியவனை அலட்சியமாய் பார்த்தவளோ,அரிமாவவன் தன் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் விடுவிடுவென கிளம்பி இருந்தாள்.
இருக்கையில் கண் மூடி சாய்ந்த நேற்றைய முன் தினம்,பிரதீஷுடன் நடந்த உரையாடலே மீளவும் சிந்தையை நிறைத்தது.
நேற்று முன் தினம்,
பிரதீஷ் உள் நுழைந்ததுமே,மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றிருந்தான்,அரிமாவவன்.
தலை சிறந்த விண்வெளி ஆராய்ச்சியளர் அவரின்,பிடித்தமான சிஷ்யன் தான் அவனும்.
அவர் மீது அவனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.அதே போல்,பிரதீஷுக்கும் ஆஜ்வினின் மீது அளவில்லா நம்பிக்கையும் பாசமும் உண்டு.
“வாங்க பிரதீஷ்..” என்றவரோ,சாத்வேதை விளித்து விட்டு நேரம் கடத்தாமல்,தான் கூற வந்த விடயத்தை எத்தி வைத்திடத் துவங்கினார்.
அவர் கையில் ஒரு வித,கண்ணாடிப் பளிங்குப் பெட்டியொன்று இருக்க,அதில் சிறு கற் துண்டொன்று ஒளிக் கீற்றுக்களை சிதற விட்டவாறு இருக்க,ஆஜ்வினை தவிர அனைவருக்குள்ளும் கேள்விகள்.
“இது ரீசன்டா நம்ம கிரகத்துல ஒடஞ்சி விழுந்த ஒரு வக விண் கல்லோட பீஸ் சாம்பிள்..ஷார்டா சொல்லனும்னா இந்த ஜாதி விண்கல்ல யூ வி ரேஸ் படும் போது அதனால கெமிக்கல் ரியாக்ஷன் உருவாகும்..அது ஒரு வகயான ரேடியேஷன உண்டு பண்ணும்..நார்மால இந்த ரேடியேஷன் ரொம்ப பவர்ஃபுல்..பட் நம்மளுக்கு இந்த ரேடியேஷனால எந்த விதமான ஹார்ம்ஃபுல் எஃபெக்ட் உம் கெடயாது..”
“இப்போ இந்த சின்ன பீஸாலே இந்த எடத்த தாண்டி கிட்டத்தட்ட பத்து பதினைந்து கிலோமீட்டர்கு ரேடியேஷன்கு பரவி இருக்கு..அன்னிக்கி விழுந்த விண்கல்ல நாம ஒடச்சதால நம்ம உலகத்தோட எல்லா எடத்துலயும் இந்த ரேடியேஷன் இப்போ பரவி இருக்குன்னு அனலைஸிஸ் மேப்ல பாத்துட்டு தான் வர்ரோம்..”
“நார்மலா இந்த ரேடியேஷன் வன் மன்த் கு மேல இருக்கும்..அப்றம் அது தானாவே பவர் கம்மியாகி இல்லாம போயிரும்..”
“இப்போ என்ன விஷயம்னா நாம அனலைஸிஸ் ப்ரின்ட் பாத்து கிட்டு இருக்கும் போது தான் தெரிய வந்தது,இந்த ரேடியேஷன் இல்லாம நானே சைஸ் மைன்யூட் டாட்ஸ் அனலைஸிஸ் மேப்ல இருக்குறது..அதக் கூட நாம டெக்னாலஜி யூஸ் பண்ணி தான் பாக்க வேண்டி இருந்துது..”
“அப்றம் தான் அந்த டாட்ஸ் இருக்குற ஒரு எடமா உங்க மாளிக தெரிஞ்சது சார்..நெக்ஸ்ட் எங்க ஆராய்ச்சி மையம்..ஆல்ரெடி,நா படிச்ச புக்ஸ்ல சில வகயான ரேஸ் இந்த ரேடியேஷன இல்லாம பண்ணும்னு படிச்சி இருக்கேன்..”
“அப்றமா எனக்கு டவுட்டா ஆகிச்சு..ஆஜு முன்னால இந்த கல்ல வச்சு ரேடியேஷன் என்ன மாதிரி ஆகுதுன்னு பாத்தா அவன் பாடிக்குள்ள போற ரேஸ் வெளில வராம அப்டியே அழிஞ்சு போய்ருது..ஐ மீன் அவனோட இன்டர்னல் ரேடியேஷனால இந்த ரேஸோட பவர் கம்மியாகனும் இல்லன்னா ஏதாச்சும் வேற ஒரு வக ரேஸா மாறனும்..பட் ஏதோ நடக்குதுன்னு மட்டும் கன்ஃபார்ம்..”
“ஆல்ரெடி சைன்டிஸ்ட் சொல்லி இருக்காங்க..ஆஜுவோட இன்டர்னல் பாடி ரேடியேஷன் எக்ஸ்டர்னல் என்வயர்மன்ட் கு வந்தா அழிஞ்சு போய்ரும் னு..அதே மாதிரி தான்,இந்த விண்கல்லால வர்ர ரேஸ் ஆஜுவ சுத்தி பரவி இருந்தாலும் அவனோட பாடி உள்ள அந்த ரேஸ் இல்லாம போய்டுது..”
“மொத்தமா நாலு டாட்ஸ் வந்தது மேப்ல..ஒன்னு ஆஜு..அடுத்து பிரஜின் சொன்ன பவனி பொண்ணு..அடுத்து அபிஷேக் சார்..நெக்ஸ்ட் நம்ம பக்கத்து நாடான ஜெக்ஷிவ் ல ஒரு டாட் காட்டுது..அது யாருன்னு தெரில..”
“சரி ஓகே சார்..ஆனா இதே மாதிரி,ஒருத்தர் பூமில இருக்குறதா எப்டி சொல்றீங்க..?” தாடையை நீவியவாறு வினவினான்,அமிதேஷ்.
“ஒரு டூ அன்ட் ஹாஃப் இயர்ஸ் முன்னாடி நானும் நம்ம டீமும் ஒரு ரிஸர்ச் விஷயமா பூமிக்கு போய் இருந்தோம் ரைட்!”
“ம்ம்ம்ம்..”
“அப்போ அங்கயும் இந்த விண்கல்லோட சாம்பிள் கெடச்சுது..அந்த டைமே கண்டு பிடிச்சோம் இதுல ஒரு ரேடியேஷன் வர்ரதா..அப்போ என்னோட அஸிஸ்டன்னா வர்க் பண்ண ஹன்ஷித் தான் இந்த அனலைஸிஸ் பண்ணான்..அப்போ அவன் சொன்னான் சார் ஒரு எடத்துல ரேடியேஷன் இல்லாம போகுதுன்னு..”
“அங்க ஒரு கூட்டமா ஆளுங்க இருந்ததா சொன்னான்..ஈவின் நானும் கூட நாட் பண்ணேன்..அப்போ பெரிசா மைண்ட் பண்ணிக்கல..பட் இப்போ பாக்கும் போது தான் எல்லாம் புரிது..”
“பூமில எக்ஸ்டர்னலா ஏதாச்சும் ஒரு எடத்துல இருந்து அந்த ரேடியஷன் உருவாக முடியும் தான..? அது எப்டி ஒரு மனுஷன் தான்னு சொல்றது..?”
“நம்ம என்வயர்மன்ட்ல இவங்க பாடில இருந்து வர்ர ரேடியேஷன அழிக்கிறதுக்கு இருக்குற ஃபேக்டர்ஸ விட ரொம்ப பவர்ஃபுல்லான ஃபேக்டர்ஸ் அவங்க என்வயர்மன்ட் ல இருக்கு..நம்ம உலகத்து என்வயர்மன்ட்ல அந்த ரேடியேஷன் அழியாமத் தப்பிச்சாலும் அவங்க என்வயர்மன்ட்ல வாய்ப்பே இல்லன்னு தான் சொல்லனும்..”
அவரின் பதிலில் வேறு எந்த கேள்வியையும் கேட்டிட முடியவில்லை,அமிதேஷால்.
“அதுல்லாம நம்மளால அந்த மேப் மூலமா எங்க அந்த ஆளு இருக்காங்கன்னு தான் கண்டு பிடிக்க முடியுமே தவிர எக்ஸாக்டா யாருன்னு சொல்ல முடியாது..அவரு மூவ் ஆகறதால டாட்டும் மூவ் ஆகும் அத வச்சி கண்டு பிடிக்க முடியும்னு யோசிக்கலாம்..”
“பட் நம்ம கிட்ட அட்வான்ஸ் டெக்னாலஜிய யூஸ் பண்ணினாலும் நம்மளால வன் அன்ட் ஹாஃப் அவர்கு ஒரு தடவ தான் அந்த அனலைஸிஸ் மேப் எடுக்க முடியும்..ஸோ எக்ஸாக்டக யாருன்னு கண்டு பிடிக்கிறது கஷ்டம்..”
“பூமி ஃபுல்லா பரப்பி அனலைஸிஸ் மேப் எடுக்குற அளவு நம்ம கிட்ட விண் கல்லும் இல்ல..நம்ம உலகத்துல செதறியிருக்குற விண்கல்ல சேத்து எடுக்குறதுன்னா கூட வன் மன்த் ஆகலாம்..பட் அதுக்கப்றமும் அந்த ரேடியேஷன் இருக்குமான்னும் டவுட் தான்..ஸோ “
“சரி பூமில ரேடியேஷன் இல்லன்னா எப்டி மேப்ல இருந்து எடத்த கண்டுபிடிக்க முடியும்..?” அவர் கூற வரும் முன்னே,இடை வெட்டினான் அமிதேஷ்.
“அதுக்கான அட்வான்ஸ் டெக்னாலஜி ஒன்னு இருக்கு..அத யூஸ் பண்ணி எடத்த மானிட்டர் பண்ணிட்டோம்..பட் அது அனலைஸிஸ் மேப்ப விட ஸ்லோவ்..ஐ மீன் அத யூஸ் பண்ணி டூ ஹவர்ஸ்கு ஒரு தடவ தான் எடத்த சொல்ல முடியும்..”
“பூமி ஃபுல்லா அனலைஸ் பண்ணிட்டோம்..ஒருத்தரே ஒருத்தர்கு மட்டுந்தான் நாம தேட்ற மாதிரி இதயம் இருக்கு..”
“சரி பூமிக்கு போனாலும் இவனால எப்டி எல்லாரயும் தடவி தடவி பாத்துகிட்டு இருக்க முடியும்..?” என்று வினவிட,பதிலேதும் சொல்லாத பிரதீஷின் பார்வை ஆஜ்வினைத் தழுவியது.
“அங்க போய் அதுக்கான சால்யூஷன் என்னன்னு நா சொல்றேன்!” தீர்க்கமாய் உரைத்தான்,அவன்.
“ஸோ இப்போ கைல இருக்குற ரெண்டு பேர தவிர என் பையனுக்கு வேற ஆப்ஷன் இல்ல..ரைட்..?” தவிப்புடன் கேட்ட,சாத்வேதுக்கு என்ன பதில் சொல்வார்கள் மற்றையவர்கள்..?
“கண்டிப்பா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரோட ஹார்ட் சரி கம்ப்ளீட்டா மேட்ச் ஆகும் சார்..” ஆழமான நம்பிக்கையுடன் உரைத்தார்,பிரஜின்.
ஆழமான அசைக்க முடியா,நம்பிக்கைகள் ஒரு போதும் பொய்ப்பது இல்லையே.
“சரி..எக்ஸாக்டா ஆளு யாருன்னு எப்டி கண்டு பிடிக்கிறது..?” என்று கேட்டிட,அர்த்தப் புன்னகை சிந்தினார்,பிரதீஷ்.
அவரின் பார்வை,அரிமாவவனில் நிலைத்து இருந்தது.
அருகே,கேட்ட சத்தத்தில் நினைவுகளில் இருந்து கலைந்து நிஜத்துக்கு திரும்பினான்,அமிதேஷ்.
மாலை மங்கும் நேரம் அது.
குளித்து விட்டு தயாராகி வெளியே வந்த மகளை,புருவம் சுருக்கிப் பார்த்தார்,விஹானா.
அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும்,விழிகளில் தெரிந்த துள்ளலும்,அவள் மனதை அப்படியே வெளிப்படுத்தி நின்ற போதிலும்,அவர் நேரடியாக எதையும் அவளிடம் கேட்டது இல்லை.
அவருக்கு முன்பிருந்தே தெரியும்,அரிமாவவனின் மீது அவளுக்கு இருக்கும் விருப்பம்.மகளுக்கு,பெருத்தமானவன் என்று,அவருக்கும் தோன்றியிருந்த படியால்,மறுப்பு சொல்லவில்லை.
“அம்மா நா தஷ்விய பாத்துட்டு வர்ரேன்..” என்றவளோ,சிட்டாய் கிளம்பி இருந்தாள்,மறுமொழி எதிர்பாராமல்.
அவ்னித்தின் மாளிகையின்,மதில் சுவரில் இருந்து அடுத்து இருப்பது தான்,அவ்னித்தின் வீடு.
அவ்னித்தை,அங்கு தங்க வைத்தது எல்லாம்,சாத்வேதின் ஏற்பாடே.அவ்னித்துக்கும்,சாத்வேதின் பாதுகாப்பு முக்கியம் எனப் பட்டதால்,அவரும் பெரிதாய் மறுத்திடவில்லை.
அவர்களின் வாசஸ்தளங்கள்,இருக்கும் வளாகத்தை சுற்றி ஆட்கள் பாதுகாப்புக்கென நின்று இருப்பதால்,வெளியில் நடமாடுவதில் பிரச்சினை இருந்தது கிடையாது.
வீட்டுக்கதவு,தட்டப்பட யாராய் இருக்கும் யோசனையுடன் திறந்த யஷ்மித்துக்கு,முன்னிருந்தவளைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது.
தன்னைக் கேளாமலே,அவனின் பார்வை மூடியிருந்த அண்ணனின் கதவை தொட்டு மீள,அக்ஷிதியும் எட்டி அதைத் தான் பார்த்து இருந்தாள்.
“என்ன உங்க அண்ணன் உள்ள தான இருக்கான்..?” இரகசியமாய் கேட்டவளை,கொலை வெறியுடன் முறைத்தான்,அவன்.
“உன்ன ஃப்ரெண்டா வச்சிகிட்டதுக்கு..” அவன் பற்களை நறநறத்திட,அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல்,”தஷ்வி” என அழைத்தவாறு வீட்டினுள் வந்திருக்க,அவள் குரலைக் கேட்டதும் மகன் ஆடப் போகும் தாண்டவத்தை நினைத்து,அவருக்குள் பய மேகங்கள்.
“வாம்மா..” வீட்டுக்கு வந்தவளை,அழைக்காது இருந்திட இயலாதே.
“என்னம்மா ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்க..? எங்கள எல்லாம் மறந்துட்டியா என்ன..?” இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டவருக்கும்,மகனை நினைக்கையில் பயம்.
ஒன்று அமைதியாய் இருந்து,பயத்தை தந்திடுவான்.இல்லையென்றால்,வாள் வீச்சாய் வார்த்தைகள வீசி,கீறிடுவானே.
“முடிலடா..” தாயின் முகத்தில் வந்து போன,உணர்வுகளை படித்த யஷ்மித்தின் எண்ணமும் அது தான்.
சத்தம் கேட்டு வந்த தஷ்வியும்,பயத்துடன் தான் நின்று இருந்தது.
“ஆன்டி ஒரு டவுட் கேக்கனும்..ஆஜு இருக்காரா..?” அவள் நேரிடையாக கேட்டிட,தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது,மற்றைய மூவருக்கும்.
பதில் சொல்லாவிடின் இவளிடம் இருந்து தப்பிக்க முடியாது.பதில் சொல்லி விட்டு,அவனின் வசவு வார்த்தைகளை கேட்கவும் முடியாது.
அவர்கள் மூவரும் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கும் போதே,அரிமாவவனின் அறைக்கவு திறக்கும் சத்தம்.
அவள் முகத்தில் மகிழ்வாய் மின்னல் என்றால்,மற்றையவர்களின் விழிகளில் தப்பித்த பாவம்.
கறுப்பு நிற ஷர்ட்டும் டெனிமும் அணிந்திருந்தவனோ,கேசத்தை கோதிக் கொண்டே வெளியே வர,அக்ஷதியின் விழிகள் அவனை விட்டு நகரவேயில்லை.
அவளைக் கண்டதும்,அவன் முகத்தில் மெல்லிய எரிச்சல் ரேகைகள் பரவிட,நெடு மூச்செறிந்தவனின் பார்வை நெருப்பை அள்ளி வீச,தம்பியவனோ பம்மிக் கொண்டு அவ்விடத்தில் இருந்து மெதுவாய் நழுவினான்.
தஷ்வியும் என்ன செய்வதென்று தெரியாது விழித்திருக்க,யாத்ரிக்கு பேசியாக வேண்டிய கட்டாயம்.
“அக்ஷதிக்கு ஏதோ முக்கியமான டவுட்டாம் ஆஜு..அதான் உன்னத் தேடி வந்து இருக்கு..” இழுத்துப் பிடித்த தைரியத்துடன்,அவன் கூறிய,இடக்கரம் கொண்டு அடர் கேசம் கோதியவனோ,”என்ன..?” என்று கேட்டான்,அறைக்கதவை பூட்டியவனாய்.
அவளோ, விண்வெளி சம்பந்தமாக கேள்வியொன்றை அவிழ்த்து விட,அவனுக்கு அதை புறந்தள்ளவும் முடியவில்லை.
வேண்டுமென்று,அவள் செய்வது தெரிந்தும்,அவன் ஹாலில் அமர்ந்து விளக்கம் கூறிட,யாத்ரியும் தஷ்வியும் சமயலறை பக்கம் நகர்ந்து இருந்தனர்,நாசூக்காக.
தஷ்விக்கு இதில் அவ்னித் வந்து விட்டாமல் என்னவாகிடும் என்கின்ற பயம் வேறு.
அவர் மூத்தவனை கண்டிக்கவும் செய்தது உண்டே.
“இந்த விளக்கம் போதுமா மேடம்..?எனக்கு வேல இருக்கு..” எழுந்து கொள்ளப் பார்த்தவனுக்கு,தன் அருகில் நிற்காத தங்கையின் மீது கோபமாகவும் வந்தது.
“நா இன்னும் ஒரு டவுட்ட கேக்க தான் வந்தேன்..அது தான் என்னோட முக்கியமான டவுட் ஆஜு” அவள் மெதுவாய் கூற,”ஆஜ்வின்” என திருத்தியவனோ,சலிப்பாய் தலையை குலுக்கினான்.
“நீங்க லவ் பண்ணல தான ஆஜு..?” அவள் வினவிட,அவன் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லை.
“தட்ஸ் நான் ஆஃப் யுவர் பிஸ்னஸ்..”
“சொல்லுங்க ஆஜு..” அவள் சிணுங்க,சீற முயன்ற மனதை அடக்கினான்.
“இருக்கலாம்..இந்த கிங்கோட மனசுல ஒரு க்வீன் இருக்கலாம்..நா என்ன ஃபீலிங்க்ஸ் இல்லாத கல் நெஞ்சக்காரனா..?” தோள் குலுக்கலுடன்,அவளிடம் கேள்வியைத் திருப்பி விட்டு,அவன் அகன்று இருக்க,அவன் முதுகை வெறித்தது,அவள் பார்வை.
●●●●●●●●
திருமணத்துக்கு நான்கு நாட்கள் என்ற நிலையில்,கணேஷ்வரியின் வீடு சொந்த பந்தங்களால் நிரம்பி இருந்தது.
சடங்கு சம்பிரதாயம் பற்றி ஆளுக்கொருவர் வந்து கூறிச் செல்ல,தன்னை நொந்து கொண்டாள்,பாவையவள்.
“இந்த கெழவிங்க வாய்ல வசம்ப வச்சி தேக்க..” முணுமுணுத்தவளுக்கு துணையாக ராகவி இருந்தது,தான் அதிசயத்திலும் அதிசயம்.
பார்வதி தான்,கணேஷ்வரியிடம் கெஞ்சி,பாவையவள் ஆசைப்படுவதாக கூறி,திருமணம் வரை ராகவியை அவளுடம் தங்க அனுமதி வாங்கி இருந்தார்.
அவருக்கு,அப்பொழுதும் நம்பிக்கை இல்லை.ஆயினும்,அவர்களின் கட்டுக்காவலை மீறி,எதுவும் நடந்திடாது என்கின்ற அசைக்காத உறுதி இருக்கவே,சம்மதம் சொல்லியிருந்தார்,அரை மனதுடன்.
நேரம் பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருக்க,அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர்.
பாவையவளோ,உறக்கம் வராமல் போக,தனது பழைய பொருட்களை எடுத்து ஆராய,அந்த சத்தத்தில் விழித்து விட்டிருந்தாள்,ராகவியும்.
“என்ன பண்ற டி..?”
“தூக்கம் வர்ல..பழய ஃபோட்டோஸ் பாக்கனும் போல தோணுச்சு..” என்றவளோ,சற்றே மங்கியிருந்த அவளின் தாயின் கறுப்பு வெள்ளை நிற புகைப்படத்தை பார்வையிட,இதழ்களிற் தன்னை மீறிய விரக்தி முறுவலொன்று.
அப்படியே,அவள் தாயின் ஜாடை.யார் பார்த்தாலும்,ஒரு நொடியில் கண்டு பிடித்து விட முடியும்.
“இது தான் எங்க அம்மா..? நீ பாத்தது இல்ல தான..என்ன மாதிரியே இருக்காங்க..” என்றவளின் குரல் தழுதழுத்தது.
ஏனோ,அதை வாங்கிப் பார்த்த ராகவிக்கும் மனம் பாரமானது.அவளுக்கு,பெற்றவர்கள் யார் என்றே தெரியாது.இவளுக்கோ,தெரிந்தும் எந்த வித பயனும் இல்லை.
“எனக்கு இவங்க லவ் பண்ணது கூட ப்ரச்சன இல்லடி..அது எப்டிடி ஒருத்தர் மேல கண் மூடித்தனமான நம்பிக்க வரும்..? அதுவும் செல நாள் பழக்கத்த வச்சி மொத்தமா வீட்டாளுங்கள ஒதறிட்டு போற அளவு எப்டிடி நம்பிக்க வரும்..?” ஆதங்கமாய் கேட்டவளைப் பார்த்து,விதி கைகொட்டி சிரித்தது.
அவளுக்கும் ஒருவன் மீது,இப்படி கண் மூடித்தனமானதோர் நம்பிக்கை இருக்க,அதை அவள் இன்னும் உணரவில்லை.
உணரும் தருணம்,அவள் மனமோ,புத்தியின் குறுக்கீடுகளை கண்டு கொள்ளப் போவதுமில்லை.
“தோ இது தானாம் என்ன பெத்த மகான்..மொகர கட்ட தெளிவா தெரில..” என்ற படி,ஒரு புகைப்படத்தை காட்ட,அதில் உற்றுப் பார்த்தால் கூட கவனிக்க கடினமாக இருந்தது,அந்த உருவம்.
பென்சிலை வைத்து,அந்த புகைப்படத்தின் மீது கிறுக்கியிருக்க,அது கோப மிகுதியில் சாந்தி செய்த வேலை தான் என்ற அவளின் ஊகம் ஒன்றும் பொய்யல்ல.
“ஆனா எங்கம்மாவ பாரேன்..அது மூஞ்ச கூட என்ன பாக்க விடக்கூடாதுன்னு கிறுக்கியிருக்கு..எப்டி தான் இந்த மனுஷன நல்லவன்னு நம்பி லவ் பண்ணுச்சோ..” என்க,ராகவியிடம் பதில் இல்லை.
“லவ் ஈஸ் ப்ளைட்ன்ல..” ஆற்றாமையுடன் உரைத்தவளின் வலிகள்,தோழிக்கும் புரிவதாய்.
“யார தப்பு சொல்றதுன்னு புரில கவி..லவ் பண்ண அவங்களுக்கு எந்த ப்ரச்சனயும் இல்ல..ஆனா,அதுக்கு சாட்சியா பொறந்தேன் பாரு நா..நா தான் ரொம்ப கஷ்டப்பட்றேன்..”
“யார குத்தம் சொல்றது தமிழ்..? உன் அப்பா பண்ணது தப்பு தான்..உன் அம்மா மேலயும் தப்பு இருக்கு தான்..ஆனா,இப்போ அத நீ யோசிச்சு என்ன ஆகப் போகுது..கண் மூடித்தனமா அவங்க வச்ச நம்பிக்க,அவங்க வாழ்க்கயவே பொரட்டிப் போடும்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லல..நம்பிக்கங்குறது எதனால வரும்னு நமக்கு தெரியாது தமிழ்..ஈவின் நாம கூட செல பேர கண் மூடித் தனமா நம்பறதில்லயா..? ஆனா என்ன நாம புத்தியோட நடந்துக்கனும்..”
“ஆமாடி யாரயும் கண் மூடித்தனமா..” என இழுத்தவளின் மனக்கண்ணில் அவன் விம்பம்.”வேதாஜி” என சன்னமான இதழசைவு.
“கண் மூடித்தனமா நம்பற எல்லாரும் கெட்டவங்க இல்ல தான கவி..” சட்டென,அவளின் கைகளை பற்றி, விழிகளில் துளிர்த்த ஈரத்துடன் கேட்டவளை,தோழியின் பார்வை ஆழம் பார்த்தது.
அந்த பார்வையில் இல்லையென்று சொல்லிவிடேன் என்கின்ற இறைஞ்சல்.
விரல்களில் அப்படி இல்லை எனும் படியான அழுத்தம்.
தோழியின் தலை தன்னாலே,அவளுக்கு ஏற்புடைய பதிலைக் கூறியிருக்க,சடுதியாய் வேகமெடுத்த இதயம்,அவள் பதில் கூறிய பின்னும்,அடங்க மறுத்து இயல்பின்றி துடித்தது.
துடிக்கும்.
2026.03.17
