இரவு நேரம்..
பால்கனியில ரெண்டு பேரும் ஒரு சின்ன பெட்ஷீட்ட விரிச்சு கீழ உக்காந்துகிட்டு ஒருவரோடு ஒருவர் விரலை கோர்த்தபடி பேசிக் கொண்டிருக்க,
நிலா…. உன்கிட்ட ஒன்னு கேட்கவா?.. திடீர்னு ஏன் மேல உனக்கு காதல் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?..
இதோட மூணு நாள் ஆகுது நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்து…
நீ என்கிட்ட எப்போதும் கேட்கிற கேள்வி தான் நான் இப்போ உன்கிட்ட கேட்கிறேன். நீ சொல்லு,
எப்படி என் மேல உனக்கு இப்படி ஒரு காதல் வந்துச்சுன்னு?..
அவள் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தாள்.
சிரிச்சிட்டே இருந்தா எனக்கு எப்படி புரியும் சீக்கிரம் சொல்லு?… எவ்வளவு நேரம் தான் அமைதியாகவே கேட்டுட்டு இருக்கிறது என்று அவளோட விரலை பிடித்து சொடக்கு போட்டுக்கிட்டே கேட்கும்போது,
உண்மைய சொல்லவா?… நீங்க என்ன தப்பா எடுத்துக்க கூடாது.
இதுக்கு அப்புறம் இனிமேல் எனக்கு தப்பா எடுக்க போறேன். நீ என்ன செஞ்சாலும் மகாராணி உத்தரவு போட்டபடி தான் இங்க நடக்கும்.
தப்பா எதுவும் நான் நினைக்க போறது கிடையாது. அப்படியே தப்பா தான் நினைச்சா என்ன?.. இப்படி பேசிக்கிட்டே மெதுவாக அவள் காதை பிடித்து மெல்லமாக திருகும் போது,
விடு விக்ரம்..
சொல்றேன் சொல்றேன்.
உண்மையிலேயே நான் உன்னை பிளாட்டில இருக்கும்போது நாலஞ்சு தடவை சைட் அடிச்சிருக்கேன்.
அது மட்டும் இல்ல உன்னோட பர்ஃப்யூம் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு ஒன்னு நேரடியா பேஸ் பண்றதுக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு இதெல்லாம் ஒரு மூஞ்சியான்னு நீ என்னை நினைத்துவிடுவியோ என்று?..
என்ன சொல்ற உண்மையாவா?..
சரியான கேடி தான் போல பர்ஃபியூம் வரைக்கும் ஞாபகம் வச்சு இருக்க,
இப்படி எல்லாம் சொல்லக்கூடாது பின்ன நான் சொல்ல மாட்டேன்.
சரி தாயே சொல்லு நீ இந்த அளவுக்கு பேசுவது பெரிய விஷயமா இப்படி சொல்லிக்கிட்டு அவளுடைய மாடியில் படுத்தபடியே அவள் முகத்தை பார்த்துக் கொண்டே கேட்க,
இப்படி பாத்துட்டே இருந்தா எப்படி சொல்ல முடியும்?..
அந்த பக்கம் திரும்பு விக்ரம்…
அம்மாடி, எனக்கு உன் முகத்தை பார்த்து தான் பேசணும் உனக்கு வெக்கமா இருந்தா நீ வெளி பக்கமா பாத்துக்க அதான் அத்தனை வண்டி போகுது கார் போகுது, அத பாத்துட்டு பேசு.
நீ எதுக்கு என்னோட முகத்தை பார்த்து பேசுற?.. இப்படி சொல்லிக்கிட்டு அவளுடைய வயிற்றுக்குள் அவனுடைய முகத்தை புதைக்க,
என்ன விக்ரம்?…
பப்ளிக் கா அந்த மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க?..
தள்ளுங்க…
இப்படி சொல்லிக்கிட்டு அவனை விலக்கி விட,
அப்போ வா வீட்டுக்குள்ள போலாம். இங்க இருந்தா நீ சொல்ல மாட்ட போல ஓவரா பண்ற எழுந்திரு எழுந்திரு என்று அவள் கையை பிடித்து அவன் வேகமா எழுந்த அவளையும் தூக்கிவிட,
இப்ப எதுக்கு இவ்வளவு ஸ்பீடு?…
பொறுமை பொறுமை,
அதெல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது நீ வா இப்படி சொல்லிக்கிட்டு அவளை மெத்தையில் உட்கார வைக்க,
அவனும் படுத்துகிட்டு சரி சொல்லு.
இப்ப யாரும் பார்க்க மாட்டாங்க. நீ சொல்றத இப்ப நான் கேட்க போறேன் அதுவும் முகத்தை பார்த்துக் கொண்டே,
உனக்கு பார்க்க விருப்பம் இல்லன்னா வேற பக்கம் திரும்பிக்கோ, இப்ப வாச்சும் நான் மடியில் படுத்துக்கலாமா?..
என்று கேட்டுக்கொண்டே அவளுடைய பர்மிஷன் வருவதற்கு முன்னாடியே மடியில் படுத்துக்கொள்ள,
உங்களோட…. இப்படி பேசிகிட்டு அவள் சொல்ல ஆரம்பித்தால் ஆமா நான் அடிக்கடி உங்களை பார்ப்பேன். நாலஞ்சு தடவை எல்லாம் இல்லை நீங்க வந்ததிலிருந்து நான் அரைகுறையா பார்த்து சைட் அடிச்சிட்டேன்.
ஆனா அதுக்கு பேரு சைட்ன்னு எனக்கு தெரியாது. அப்புறம் உங்க பிரண்டு சினேகா , அந்த பொண்ண கூட்டிட்டு வர்றதுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டீங்களே …
அன்னைக்கு உங்களை ரொம்ப க்ளோசா பார்த்தேன் . உண்மைய சொன்னா வயித்துக்குள்ள பயங்கரமா பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சது . ஆனால் அன்னைக்கு இன்னொரு விஷயம் நடந்தது எனக்கு ஆச்சரியம் தான் .
அப்புறம்.. கம்பெனியில நான் மயக்கம் போட்ட போ, அன்னைக்கு என்ன நடந்துச்சு ஞாபகம் இருக்கா?…
நீங்க உங்க கைக்குள் என்னை இறுக்கமா புடிச்சிருந்தீங்க…
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை,
தூரத்தில் பார்த்து ரசிச்சா ஒரு ஆள் என் பக்கத்துல, அதுவும் என்ன அரவணைத்தபடி…
சத்தியமா நெனச்சு பார்க்கவே இல்லை எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு நான் மயக்கம் போட்டது கூட எனக்கு பெருசா தெரியல,
ஆனா ஒரு விஷயம் எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு நான் கொஞ்சம் அரைகுறையாக இருந்த மாதிரி இருந்தது கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு.
ஐயோ என்ன இப்படி அப்படிங்கற மாதிரி நானே தலையில அடிச்சுக்கிட்டேன்.
இப்படி சொல்லிக்கொண்டே சிரிச்சா அதை கேட்டதுமே அவனுக்கு அதுக்கு மேல வெட்கம் வந்தது.
அடுத்து சொல்லு என்ற ஆர்வமாக கேட்கும் போது அடுத்து என்ன சொல்றது அவ்வளவுதான் அப்படித்தான் வந்துச்சு.
சொல்லுடி… ப்ளீஸ் என்று உரிமையை எடுத்து அவளை கெஞ்சும் போது,
அவளுக்கு சிரிப்பா வந்துச்சு. என்ன விக்ரம் தெரியாத மாதிரி கேக்குற?..
நானே உன் கிட்ட சரண்டர் ஆனேனே அதுக்கப்புறம் என்ன?… என்ன ஒரு ஒரு விஷயத்தையும் ரசித்து பார்த்தேன் அது உனக்கு தெரியாது.
இப்படி சொன்னதுமே அவன் சிரித்துக் கொண்டு அவள் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்.
நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.
எனக்கா?.. என்னன்னு சொல்லு விக்ரம்?..
ஏதாச்சும் எனக்கு புடிச்ச மாதிரி வாங்கி வச்சிருக்கியா என்ன?…
அதான் சர்ப்ரைஸ் என்று சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு பறக்குற,
ஒரு சூப்பரான சர்ப்ரைஸ் இருக்கு நீ எதிர்பாக்காத சர்ப்ரைஸ் இருக்கு.
நாளைக்கு நம்ம ஒரு இடத்துக்கு போறோம்.
ஆனா நான் சொல்ற மாதிரி தான் நீ வரணும் அழகா பட்டு புடவை கட்டிக்கிட்டு என்கூட ஜம்முன்னு வரணும் ஓகேவா,
எனக்கு உன்னை அந்த மாதிரி பாக்கணும்னு ரொம்ப ஆசை.
நாளைக்கு நான் வேட்டி சட்டை கட்டிப்பேன் நீ போடவா கட்டிக்கணும் ஓகேவா,
அதெல்லாம் சரிதான்.. ஆனால் என்கிட்ட இல்லையே,
உன்கிட்ட இல்லன்னு எனக்கு தெரியாதா?….
அதான் வாங்கி வச்சிருக்கேன் நாளைக்கு காட்டுறேன். ஹெல்ப் பண்ணா நான் தான் பண்ணுவேன் சரியா இப்படி கண்ணை அடிச்சுக்கிட்டே சொல்ல,
இந்த உத்து உத்து பார்க்கிறது, கண்ணடிகிறது இதெல்லாம் பண்ணாலும் எனக்கு ஒரு மாதிரி இருக்குன்னு சொல்ல,
அப்படியா?… அப்ப நான் எப்படி இருக்கணும் நீங்களே சொல்லுங்க மேடம்,
உங்களுக்கு பிடிக்காத நான் செய்ய மாட்டேன் மேடம் நான் வேணும்னா குப்புற படுத்துக்கட்டுமா?… என்று சொல்லிக்கொண்டே அவன் அவள் மடியில் குப்புற படுக்க,
அப்படி எல்லாம் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது, நான் அப்படி எல்லாம் சொன்னா கொஞ்சம் கெஞ்சனும்னு அர்த்தம்..
அதுதான் தெரியுமே, கெஞ்சாமல் நான் எப்படி உன்னை விட்டு இன்னைக்கு தூங்குவேன் என்று நினைக்கிறேன் இப்படி சொல்லிக்கிட்டு அவளை இறுக்கமாக கட்டி அணைக்க,
காலையில அவனுடைய மார்பில் அமைதியான ஒரு பூனை குட்டி மாதிரி தூங்கிட்டு இருந்த நிலாவை மெல்லமாக எழுப்பினான்.
கொஞ்ச நேரம் ப்ளீஸ் விக்ரம் இப்படி சொல்லிக்கிட்டு அவள் போர்வை இழுத்துப் பார்த்த,
உனக்கு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன் மறந்துட்டியா எழுந்திரு எழுந்திரு.. இப்படி சொல்லிக்கிட்டு அவளை பாத்ரூமுக்குள்ள அனுப்ப,
அதுக்குள்ளேயே அவன் எல்லா டிரஸையும் எடுத்து ரெடி பண்ணி வச்சிட்டான்.
நிலா குளிச்சிட்டு வெளியே வந்ததுமே,
அங்க டிரஸ் வச்சிருக்கேன் எடுத்து போட்டுக்கோ… பைவ் மினிட்ஸ் வந்துருவேன் என்று சொல்லிட்டு அவன் வேகமாக அவள் வெளியில் வருவதற்கு முன்னாடியே உள்ளே நுழைய,
பொறுமை பொறுமை…
என்ன விக்ரம் இவ்வளவு அவசரம்னு அவள் தலையில் டவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு வெளியில வரும்போது அவன் வேக வேகமாக குளிக்க ஆரம்பிச்சான். இந்த சத்தத்தை கேட்டதும் என்ன ஆச்சு இந்த பையனுக்கு..
சர்ப்ரைஸ் எனக்கா இல்ல சார்க்கா என்று தெரியவில்லை என்று சிரிச்சுகிட்டே அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் பக்கத்துல வைத்திருந்த சேரி பிளவுஸ் எல்லாத்தையுமே பார்த்ததுமே,
எப்படி…
அளவு கூட தெரியாம இந்த பிளவுஸ் எடுத்துட்டு வந்தாரு?… கஸ்டமைஸ் பண்ண மாதிரி இருக்கு இப்படி யோசிச்சுகிட்டே அவள் பால்கனி பக்கமாக இருக்கிற கதவை லாக் பண்ணிட்டு ஏதோ ஒரு சந்தோஷத்தோட அதை போட்டுக் கொண்டிருக்க,
எங்க போறோம் என்று தெரியவில்லை,
ஆனா இந்த கலர் எனக்கு ரொம்ப அழகா இருக்கு… விக்ரம் ஓட டிரஸ் எங்க இருக்குன்னு தெரியலையே வேட்டி சட்டை வேற கட்ட போறேன்னு சொன்னாரு,
இப்படி ஆராய்ந்து கொண்டே அவள் பிளவுஸ மாட்டிக் கொண்டிருக்க,
வேகமாக குளிச்சிட்டு துண்டோடு வெளியில் ஓடி வந்தான்.
இன்னும் சரியா ஈரத்தை தொடைக்கல, அவன் வேகமாக வெளியில் வந்ததுமே, அவள் பிளவுஸ் போட்டுக்கொண்டு அதை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருக்க,
அதை பார்த்து ரசித்தவன் சிரிச்சுக்கிட்டே அவள் பக்கத்துல அவளுக்கு தெரியாம பின்னாடி பக்கமா வந்து அவன் உடம்புல இருக்குற ஒரு சொட்டு நீரை அவள் காதுக்கு பக்கத்துல தெளிச்சு விட,
கூசி போய் அவள் அவள் ஒரு பக்கம் திரும்ப அவன் வேறு பக்கமாக அவன் முகத்தை அவள் தோள்பட்டையில் புதைத்தான் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான். அவன் உடம்பில் இருந்து ஈரமும் அவளை கூச்சத்துக்கு உள்ளாக,
பதறி கொண்டு திரும்ப, என்ன விக்ரம்?…
எங்கே போறோம் என்று சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?…. என்று அவள் சினுங்கி கொண்டே கேட்க,
நான் என்னோட காதலிய அழகா என் கைக்குள்ள இருக்கமா கட்டிப்புடிச்சு வச்சிருக்கேன் இப்ப என்ன உனக்கு?… என்று அவன் சிரிக்க அதற்கு இது என்ன புதுசா?…
ரெண்டு நாள் தான் நடக்குது.. அப்புறம் என்ன புதுசா பண்ற மாதிரி?… இப்படி அவள் கேள்வியா கேட்கும் போது,
காரணம் இருக்கு.
என் காதலி கிட்ட இன்னைக்கு மட்டும் தான் இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்க முடியும்.
நாளைக்கு…. இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு, அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிடும்னு அவன் சொன்னதுமே,
அவளுக்கு முகமே மாறி போச்சு என்ன சொல்றீங்க?.. என்ன ஆச்சு?…
ஏதும் பிரச்சனையா?…
அதெல்லாம் இல்ல, கேள்வியா கேட்டுட்டு இருக்காத, என்று அவளை இதழை இறுக்கமாக பற்றி கொண்டான்.
ரொம்ப அழகா இருக்க, மேக்கப் ஒன்னும் போட ஸ்டார்ட் பண்ணல ஆனா ஏன் இனி இன்னைக்கு இவ்வளவு அழகாய் இருக்க?…
? எல்லாம் வேண்டுதல் தான்.
வெளியில் போகும் போது எதற்கு தேவையில்லாத வேலை எல்லாம் கிளம்புங்க சீக்கிரம் என்று சொல்லிக்கிட்டே அவள் அந்த சேரியை எடுத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து நடக்க,
அவன் சிரிச்சுகிட்டே, நிறைய விஷயம் தோணுது எதையும் பண்ண முடியல நாம வெளியில போறதுனால..
இப்படி பேசிக்கிட்டே அவன் வேகமாக கிளம்ப அவளுக்கும் என்ன உதவி வேணுமோ ஒண்ணு ஒண்ணா செஞ்சுகிட்டு அவள் கைய புடிச்சுகிட்டு ரெண்டு பேரும் சந்தோஷமாக போட்டோ எடுத்தாங்க..
கிளம்பலாமா?…
இப்படி கேட்க அவளும் பசிக்குது சாப்பிட்டு போலாமா?..
அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் முதல் சர்ப்ரைஸ் முடிச்சிட்டு அதுக்கப்புறம் பேசிக்கலாம்னு சொல்லிட்டு அவள் கைகளை கொஞ்சம் கூட விடாமல் இருக்க பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
காரை எடுத்துக்கொண்டு எதுவுமே பேசல அவன் முகம் கொஞ்சம் ஒரு மாதிரியாகவே இருந்துச்சு என்ன ஆச்சு இன்னைக்கு விக்ரமுக்கு?..
அவளால யோசிச்சு கூட பாக்க முடியல அவன் என்ன யோசிக்கிறான் என்று ஆனா ரொம்ப சீரியஸா இருக்கானே மட்டும் அவளுக்கு புரிந்தது.
மனசுக்குள்ள ஒரு விதமான பயமும் வந்துச்சு.
அவன் இப்போ நேரம் ஒரு கோவிலுக்கு கூட்டிட்டு போக,
அங்க போனதுமே விக்ரம் உடைய அம்மா அங்க இருந்தாங்க,
அவங்கள பார்த்து அவளுக்கு பயங்கர ஷாக் ஊரை விட்டு போறதா எங்கேயோ சொல்லிட்டு போனாங்க தினேஷ் கிட்ட தேட சொல்லி இருந்தோம் அதுக்குள்ளயே எப்படி?…
இப்படி யோசிச்சுகிட்டு அவங்க பக்கத்துல வர அவங்களும் சாரிமா…
ஏதோ தெரியாம பேசிட்டேன்.
இல்லமா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் எதையும் பெருசா எடுத்துக்கல, எனக்கு எல்லாமே புரியுதுன்னு சொன்னதுமே இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லி அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க , நிலாக்கு கொஞ்சம் கூட புரியல எப்படி இவங்க மாறினார்கள் என்று..
அவள் திரு திரு என்று முழிச்சுக்கிட்டே விக்ரம் எங்க அவர் பார்த்த கோபப்படுவாரா என்ன அப்படின்னு கொஞ்சம் சந்தேகத்தோட சுத்தி சுத்தி பார்க்கும்போது,
இன்னொரு பக்கத்தில் இருந்து அவளுடைய தங்கச்சி வேகமாக ஓடிவந்து அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்.
நிலவுக்கு ஒண்ணுமே புரியல இங்கே என்ன நடக்குது என்று…
கீதா நீ எப்படி இங்கே?.. இப்படி கேள்வி கேட்கும் போது,
மாமா தான் எங்களை இங்கே கூட்டிட்டு வந்தாரு. நேத்து அப்பாவும் மாமாவும் பேசுனாங்க… இப்படி அவள் சொல்லும்போது அவளுக்கு புரியவே இல்லை அவன் என்னை விட்டு போகவே இல்ல எப்ப பேசினார்?..
என்ன பேசினாங்க?… இப்படி அவள் அதிர்ச்சியாக கேட்கும் போது, நடந்த எல்லா விஷயத்தையும் அப்பாவுக்கு மாமா புரிய வச்சாரு.
அப்பாவுக்கு உன் மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு.
மாமா வந்து பேசுறதுக்கு முன்னாடியே ஏன்னா நான் செஞ்ச எல்லா விஷயத்தையும் அப்பா கிட்ட ஒத்துக்கிட்டேன்.
அதுக்கு அடுத்ததா மாமாவ அவர் பார்த்திருக்கிறார் போல..
நீ இங்க இருந்து கிளம்பி போன இல்ல அதுக்கு அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் இந்த விஷயத்தை பேசினேன்.
அப்பா அப்புறம் ஏதோ கடைக்கு போறேன்னு யோசிச்சுக்கிட்டே அங்கிருந்து கிளம்பிட்டாரு.
அப்புறம் தான் வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னாரு என்ன நடந்துச்சுன்னு மாமா ஒரு ஹோட்டலில் வைத்து சொல்லி இருக்காரு இப்படி சொன்னதுக்கு அப்புறம் தான் அவளுக்கு புரிந்தது ஆமா சாப்பாடு வாங்க அவர் கிளம்பினார் வெளியில..
ஆனா இப்ப விக்ரம் எங்க?… இப்படி அவள் ஆழ்ந்து யோசிச்சுக்கிட்டே அங்கும் இங்குமாக தன்னோட தங்கச்சி பேசிக்கிட்டே இருக்கா ஆனா அதையும் தாண்டி அவளுக்கு விக்ரம இப்ப பாக்கணும் போல தோணுது இங்கே என்னென்னமோ நடக்குது
ஆனா என்னனு அவளுக்கே ஒன்னும் புரியல,
அக்கா நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்து இருக்காங்கன்னு அவள் சொன்னதுமே என்ன சொல்ற?…
அப்பாவுமா?… ஆமாக்கா அது தான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்க என்ன கவனிச்ச,
அப்பாவும் தான் இங்க வந்திருக்காரு. உன்னைய பத்தி தப்பு தப்பா சொன்னது அந்த வாட்ச்மேன் அது கூட அந்த பைப் சரி பண்ற பிளம்பிங் மேன் இரண்டு பேரும் சேர்ந்து தான் உன் மேல தப்பு தப்பா போட்டு இருக்காங்க அப்பா மேல இருக்கிற கோபத்தை மனசுல வச்சிக்கிட்டு,
அதையும் கண்டுபிடிச்சாச்சு, இப்படி சொல்லும் போது அவளுக்கு ஒன்னும் புரியல தலை எல்லாம் சுத்துற மாதிரி ஆயிடுச்சு தூரத்தில் பார்த்தால் உண்மையிலேயே அவங்க அப்பா அம்மா வந்துட்டு இருக்காங்க கோயிலுக்குள்ள இருந்து,
இந்த பக்கம் மாமியாருக்கு அவள சுத்தமா புடிக்கல ஆனா இப்போ அவங்களே இங்கே வந்திருக்கிறதை பார்த்ததுமே அவளுக்கு அதைவிட ஷாக் , அது மட்டும் இல்ல விக்ரமுக்கு அவங்கள சுத்தமா பிடிக்கலன்னு இவ்வளவு நாள் சொல்லிட்டு இருந்தா எப்படி அவங்கள கண்டுபிடித்தான்?…
இப்படி யோசித்துக்கொண்டே அவளுக்கு தலை எல்லாம் சுத்த ஆரம்பிச்சதுமே, மயக்கம் வர மாதிரி கீழ சரிய,
என்ன மேடம் எதுக்கே தல சுத்துதா என்று விக்ரம் அவளை இறுக்கமாக பிடித்தபடி தூக்கி நிப்பாட்டினான்.
யாரு சாமி நீ?..
நீங்க என்ன நடக்குது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று சொல்லி அவனை கேள்விக்கு மேல கேள்வியா கேட்டுட்டு இருந்தா..
அப்படி என்னதான் நடந்துச்சு.
அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.
