விரகதாபம் தீருமோ விதுரா? 31

விதுரனின் மூச்சுக்காற்று பெண்ணவளின் மேல் பட பெண்மைக்குரிய  அச்சத்தில் பிரதிக்ஷாவின் கால்கள் விதுரனிடமிருந்து ஓரடி பின்னோக்கிச் செல்ல  அவளை இழுத்து இடைவெளி இன்றி தன்னோடு இறுக்கி அணைத்தான் விதுரன்.

விதுரன் செய்த காரியத்தில் பிரதிக்ஷாவின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிந்தது.

இருவரும் அந்த மௌன நிலையில் தன்னை அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். “இங்க பாரு, இரண்டும் நடு ரோட்டில் எப்படி நிக்குதுனுங்க “என  அங்கு வழியில் பைக்கில் வந்த ஒருவர் தன் மனைவியிடம் சொல்ல, ” எல்லாம் கலிகாலம், இதையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு, இதுங்க எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்து இருக்கவா போகுது? கேடுகெட்ட ஜென்மங்கள்! அவனாவது  பையன், இந்த பொண்ணுக்கு  எங்க போச்சு புத்தி, இவள் எல்லாம்… ” என்று சலித்துக் கொண்டே சொல்ல இருவரும் தன்னிலை அடைந்தனர். அவர்கள் இருவரும் பேசியதை  நினைத்து வருந்திய பிரதிக்ஷாவிற்கு இதற்கெல்லாம் காரணம் விதுரன் தான் என்று தோன்றியது.

“இப்ப எதுக்கு என்னை புடிச்சி இழுத்தீங்க உங்களால தான்  அந்த அம்மா கண்டபடி திட்டிட்டு போகுது!” என்று பிரதிக்ஷா  கோபமாக சொல்ல, அவளை முறைத்தான் விதுரன். 

“என்ன பண்றதும் பண்ணிட்டு முறைக்கிறீங்க? உங்களால தான் இந்த ஏச்சு பேச்சை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு!”  என்று பிரதிக்ஷா கோவமாக கூறினாள்.

“வாய்க்கு வந்தபடி பேசாம முதல்ல கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு!” என்று விதுரன் செல்ல பிரதிக்ஷா பின்னால் திரும்பி பார்க்க, அங்கு பாதாள சாக்கடை கிடங்கு ஒன்று  பாதி திறந்த நிலையில் இருந்தது.

விதுரன் இழுத்து தன்னோடு அணைக்கவில்லை என்றால் அதில் விழுந்து இருப்பாள் பிரதிக்ஷா. அதனால்தான் ஆடவன் அவளை இறுக்கி அணைத்தது, அது எதையும் அறியாது  பிரதிக்ஷா  கோபத்தில் பேச  விதுரனின் கோபம் அதிகமானது.

“உன்னைய புடிச்சி இறுக்கி அணைக்கனும்னு  எந்த அவசியமும் எனக்கு இல்லை, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான்  இந்த உலகத்துல யாரும் இல்லாம  நீயும் நானும் மட்டும் இருந்தா கூட  உன்ன திரும்பி கூட பாக்க மாட்டேன்.  இதே இடத்தில நீ இல்லாம வேற யாராவது இருந்திருந்தாலும் அதைத்தான் செஞ்சி இருப்பேன்! அது தெரியாம   தேர்டு ரேட் பொறுக்கி மாதிரி  பேசுற, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பைக்ல சொல்லிட்டு போனாங்களே அவங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் என்ன இருக்குன்னு   உனக்கு தெரியும் தானே?” என்று கோபமாக பேசினான் விதுரன்.

“சாரி,  விது   அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு போன கோவத்துல பேசிட்டேன்.  என்னை மன்னிச்சிடுங்க!”என்று பிரதிக்ஷா மன்னிப்பு கேட்க, முறைத்துக் கொண்டே பைக்கை நோக்கி நடந்தான் விதுரன்.

பிரதிக்ஷாவும் அவன் பின்னாடியே செல்ல விதுரன் எதுவும் சொல்லாமல் கோபத்தோடு தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து, ஆக்சிலரேட்டரை கோபத்தில் திருகிக் கொண்டிருந்தான்.

“என்னங்க…” என்று பிரதிக்ஷா ஏதோ சொல்ல வர, அதைக் கேட்க விருப்பம் இல்லாது மீண்டும் ஆக்ஸிலரேட்டரை கோபத்தில் திருகினான்.

இதற்கு மேல் எது சொன்னாலும் விதுரன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்தவள், அவன் பைக்கில் ஏற மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டினான். அவன் வேகமே அவன் கோபம் எவ்வளவு இருக்கிறது என்பதை காட்டியது.

கோபத்தில்   வேகமாக விதுரன்  போக நிலை குலைந்து பிரதிக்ஷா அவனின் தோள்பட்டையை பிடிக்க சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

“இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது!”  என்று விதுரன் கோபமாக சொல்ல,” நீங்க வேகமா பைக் ஓட்டுனனாலதான்  பேலன்ஸ் தவறி உங்க சோல்டரை புடிச்சேன்!” என்று  பிரதிக்ஷா சொல்ல,

“உன்னோட விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லை! பின்னாடி கம்பிய புடி அவ்வளவுதான் சொல்லுவேன்!”என்று சொல்லிவிட்டு பைக்கை மீண்டும் வேகமாக ஸ்டார்ட் செய்தான்!.

விழுந்து விடுவோம் என்ற பயத்தில் பிரதிக்ஷா தன் பின்னால் இருந்தால் கம்பிகளை உறுதியாக பிடித்துக் கொண்டாள்.

சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் விதுரனின் முன்னால் இருந்த கண்ணாடியில் பிரதிக்ஷா  பார்க்க விதுரனின் கண்கள் சிவப்பாக இருந்தது. அவன் கண்களின் சிவந்த நிறமே அவன் கோபத்தின் அளவை எடுத்துக்காட்ட என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழித்தாள் பிரதிக்ஷா.

சில நொடிகள் பிரயாணத்திற்கு பிறகு இருவரும் வீட்டிற்கு வந்து சென்றிருந்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் விதுரன்  அங்கிருந்த பூச்சாடியை எட்டி உதைக்க உடைந்து போனது. அந்த சத்தம் கேட்டு அறையில் படுத்து இருந்த அம்பிகா வந்து பார்க்க விதுரன் கோபத்தில் மாடியேறி போகும் காட்சியும்  அவன் பின்னால் பிரதிக்ஷா மாடியேறி செல்லும் காட்சியும் இருந்தது.

பிரதிக்ஷா விதுரனிடம் ஏதோ  பேச விதுரன் எந்த பதிலும் சொல்லாமல்   செல்லும் காட்சி அம்பிகாவின் கண்ணில் பட்டது.

அவர்கள் இருவரும் கோபத்தில் செல்லுவதை பார்க்கவும் அம்பிகாவின் மனம் கனத்தது. வெளியே சென்று வரும் இருவரும் சந்தோஷமான மன நிலைமையோடு ஒன்றாக வருவார்கள் என்று நினைத்திருக்க இருவரும் எலியும் பூனையுமாக வர  உடைந்து விட்டார். இதில் மனிஷா சொல்லிய வார்த்தைகள் வேறு அவர் மனதை வதைக்க தொடங்கியது.

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவர்   ஏதோ ஒரு முடிவெடுத்தவராக  அவருடைய அறைக்கு சென்றார்.

இங்கு மனிஷா,

பதட்டத்தில் அமர்ந்திருந்தாள்  மனிஷா. பத்து லட்ச ரூபாய்க்கு இப்ப நான் என்ன பண்றது என்று அவள் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

‘விதுரன் கிட்ட கேட்டு பார்ப்போமா?’என்று அவளின் ஒரு மனம் சொல்ல, விதுரன் ஏன் எதுக்குனு கேக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு, பேசாம ரஞ்சித் கிட்ட கேட்டால் என்ன?’ என்று அவளுக்கு தோன்ற ரஞ்சித்தின் அலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டாள்.

அவளுடைய அழைப்பை ஏற்ற ரஞ்சித்தோ, ” எடுத்த எடுப்பிலேயே என்ன விஷயமா போன் பண்ணி இருக்க?’ என்று கோபமாக  கேட்டான்.

காலையில் அவனுடைய தந்தை பிசினஸை பார்த்து கொள்வதை பற்றி பேசி இருக்க அந்தக் கோபத்தில் அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

“ரஞ்சித் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது?” என்று மெதுவாக மனிஷா  சொல்ல, ” இரு அக்கவுண்ட்ல போட்டு விடுறேன்! ” என்று கூறினான் ரஞ்சித்.

“ரஞ்சித் அது வந்து பத்து..”என மனிஷா சொல்ல,”பத்தாயிரம் ரூபா தான லைன்லயே இரு, அக்கவுண்ட்ல போட்டு விடுறேன்!” என்று கூறினாள் ரஞ்சித்.

“பத்தாயிரம் இல்ல பத்து லட்சம்” என்று மனிஷா சொல்ல, ” மனிஷா நான் இருக்கிற டென்ஷன் தெரியாம விளையாண்டுக்கிட்டு இருக்காத, நான் இப்ப விளையாடுற மூடுல இல்ல!” என்று கூறிவிட்டு அழைப்பை அணைத்தான் ரஞ்சித். விளையாடுறேனா? என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் மனிஷா.

‘இப்ப யாரு கிட்ட கேட்கிறது பேசாம விதுரன் கிட்டயே கேட்டுப் பார்ப்போமா?’ என்று நினைத்துக் கொண்டு விதுரனின் அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டாள்.

அவனும் இன்று  நடந்த விஷயத்தில் கோபத்தில் இருக்க,  அவளுடைய அழைப்பை ஏற்கவில்லை.

நாளைக்கு காலைக்குள்ள எப்படி பணத்தை ஏற்பாடு பண்ண முடியும் என்று நினைத்துக் கொண்டு யோசிக்க தொடங்கி விட்டாள் மனிஷா. அவளுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டுப் பார்க்க அனைவரிடமும் இல்லை என்ற பதிலே வந்தது.

இப்ப என்ன செய்றது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய நகைகளை அடகு வைத்து எவ்வளவு பணம் தேறுகிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு  அவசர அவசரமாக அந்த இரவில் நகைக்கடை நோக்கி புறப்பட்டாள் மனிஷா.

மனிஷா இரவில் செல்வதை பார்த்துவிட்டு, ரேணு சிரித்துக்கொண்டே அம்பிகாவின் அறைக்குள் வந்தாள் 

அம்பிகா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க,” அம்மா அந்த ரேணு அவசர அவசரமா போறா? எனக்கு தெரிஞ்சு பணத்தை ரெடி பண்றதுக்கு தான் போறாணு நினைக்கிறேன்” என்று கூறினாள் ரேணு.

ரேணு  கூறியதை அம்பிகா கண்டுகொள்ளாமல் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருக்க “அம்மா, என்னாச்சு நான் பேசிக்கிட்டே இருக்கேன் அமைதியாகவே இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“ஆமா பிரச்சனை தான்  ரேணு!”என்று சொல்லிவிட்டு அம்பிகா  மன வருத்தத்திற்கான காரணத்தை கூற ஆரம்பித்தார்.

“அம்மா விடுங்க இதுக்கா இவ்வளவு யோசிச்சுகிட்டு இருக்கீங்க, பெரியம்மா அன்னைக்கே சொன்னாங்களே? அவங்க ரெண்டு பேரும் சண்டை போடலைனா தான் ஆச்சரியம்னு, அப்புறம் எதுக்கு இவ்வளவு பீல் பண்றீங்க?” என்று ரேணு கேட்க, காலையில் மனிஷா கூறியதை சொல்லி முடித்தார் அம்பிகா.

“அம்மா அவ கெடக்கா அவ சொன்னதை எல்லாம் பெருசா எடுத்து நீங்க ஏன் இவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, டைவஸ்க்கு அப்ளை பண்ணி டைவர்ஸ் வேண்டாம்னு சேர்ந்து வாழ்ந்தவங்க எத்தனையோ பேரை நம்ம பார்த்து இருக்கோம், எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டு இருக்குற அண்ணாவும் அண்ணியும் கூடிய சீக்கிரத்துல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சந்தோசமா கணவன் மனைவியா வாழ ஆரம்பிப்பாங்க! நீங்க எதையும் யோசிக்காதீங்க” என்று சொல்ல,

“அதுக்கு தான் அம்மா ஒரு முடிவு பண்ணி இருக்கேன். அவங்க ரெண்டு பேரையும் வாழ விடாமல் தடுக்கிற ரெண்டு பேரு ரஞ்சித்தும் மனிஷாவும்!

 ரஞ்சித் அண்ணா இன்னும் ஆறு மாசத்துக்கு இந்த பக்கம் வராத அளவுக்கு பெரியப்பா அவரை பிசினஸ பாத்துக்குற சொல்லிட்டாங்கன்னு நீங்கதானே சொன்னீங்க. மனிஷாவும் நம்ம குடுக்குற பிரஷர்ல  கண்டிப்பா இன்னைக்கு வீட்டை விட்டு ஓடிவிடுவாள் அப்புறம் எதுக்கு கவலைப்படுறீங்க வேற என்ன பிரச்சனை இருக்கு? எந்த பிரச்சனையும் இல்லாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ தொடங்கிடுவாங்க! எதுக்காக நீங்க பயப்படுறீங்க?” என்று  ரேணு கேட்க,

“நம்ம ரெண்டு பேர நினைச்சு தான் பயப்படுறேன்!” என்று அம்பிகா கூற “நம்ம ரெண்டு பேருமா? ” என்று அதிர்ந்து கேட்டாள் ரேணு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page