நலம் தானா ஊதாப்பூவே!!🪻- 28

“அழ வைத்து துடிக்க வைத்து தனித்து விட்டாய் என்னை, அப்போதும் உன்னை விட்டு நீங்கும் எண்ணம் எனக்கில்லை “
 

 

…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… 
 

 

பாகம் -28
 

 

தன் முன்னே தனக்காக அழும் தன்னவளைப் பார்த்தான். அவளின் அழுகை அவனுக்கு வலி, வேதனை மட்டுமில்ல, தான் இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்வு, தொழில், அவன் உழைப்பு, அவனுக்கென இருந்த அடையாளம் என அவனின் ஒட்டு மொத்தமும் அவனை விட்டு விலகியது போன்று எதுவும் இல்லாமல் இருப்பது போன்று அவனுக்கு தோன்றியது.
 

 

தன்னை இவள் இவ்வளவு தான் புரிந்து வைத்திருக்கிறாளா, நான் அவளை என் உயிரை விடவும், என் குடும்பத்தை விடவும் நேசிக்கிறேன். எவ்வளவு வேலைகள், பொறுப்புகள் அனைத்தையும் விட்டு இவளுக்காக தானே வந்தேன். 
 

 

என்னைப் பார்த்ததும் கட்டி அணைப்பாள், என் சட்டையை கொத்தாகப் பற்றி என்னை கேள்விகள் கேட்பாள், அடித்தாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் தானே வந்தேன். ஆனால் இவளோ இவள் மேலே பழியை சுமத்திக் கொண்டு அழுது என்னையும் அழ வைக்கிறாள்.
 

 

‘இந்த முட்டாளுக்கு எப்படி புரிய வைப்பேன், இவள் எனக்காவள் என்பதை ‘ மனதில் நினைத்து அவளின் முன் வந்து நின்றான். அழுது கொண்டிருந்தவள் அவன் அருகில் வந்ததும் தனது அழுகையை நிறுத்தி விட்டுப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்தான்.
 

 

‘தொட்டு தூக்கி விடலாமா ‘ அவன் மனதில் தோன்றியது 
 

 

அவளுக்கோ ‘என்னை தூக்கி விடலாமே, தொடாதீங்கனு நான் சொல்லவே இல்லையே, என் மேல லவ் இருந்திருந்தா, கண்டிப்பா தூக்கி இருப்பாரு ‘ 
 

 

இருவருமே ஒருவரை ஒருவர் நெருங்கிட, ஆறுதல் தேட தான் நினைக்கின்றனர். வர்மா இவள் முடிவாக என்ன கூறுகிறாள் என்று தெரிந்து கொள்ள நினைத்தான். பைத்தியக்காரி கல்யாண விஷயத்தில் ஏதாவது பேசி விட்டாள். நீண்ட வருடங்களுக்கு பிறகு சேர்ந்த உறவுகள், இவளின் அறியாதனத்தால் பிரச்சனை வந்து விடக் கூடாது. 
 

 

இவள் முதலில் என்னவளாக, இந்த மாறவர்மனின் திருமதியாக மாறட்டும், அதன் பிறகு என் காதலை, எங்கள் காதலை புரிந்து கொள்ளட்டும். கிறுக்கி எதையாவது சொல்லி கல்யாணத்தில் பிரச்சனை செய்ய விடாமல் இவள் வாயை அடக்க வேண்டும். முத்தமிட்டு வாயை திறக்க விடாமல் செய்து விடலாமா, எப்படி கல்யாணம் நடக்குற வரைக்குமா, அவன் மனம் அவளை நினைத்தாலே தடுமாறும் இப்பொழுது அருகில் இருந்தால் எப்படி, என்னென்னவோ ஆசைகளோடு தான் வந்தான். இவள் தான் இவளாக கற்பனையை வளர்த்து வைத்துக் கொண்டு தன்னையே வருத்திக் கொண்டு நிற்கிறாளே 
 

 

” ஆ.. ஆரண்யா “ஆருவை தனக்குள் முழுங்கிக் கொண்டு தான் அழைத்தான்.
 

 

அடிபட்ட பார்வையுடன் அவனை பார்த்தவாறே எழுந்தாள். கையினை நீட்டிட அவன் கை பர பரத்தது, அடக்கிக் கொண்டான்.
 

 

அவள் வாயை திறக்க மாட்டாள் என்பது அவளின் அமைதியான பார்வை உணர்த்தியது. அவளை பேச வைத்து தான் அடக்க வேண்டும். 
 

 

“நீ இப்போ என்ன முடிவு பண்ணிருக்க “கையை கட்டிக் கொண்டு பழைய வர்மாவாக நின்றான்.
 

 

இனி வாயை திறக்காமல் இருக்க முடியாது என்று புரிந்தவள் “எ…எதைப்பத்தி கேட்கறீங்க” தெரியும் ஆனால் அவனாக சொல்லட்டும் என்ற எண்ணத்தில் கேட்டாள்.
 

 

அவளின் வார்த்தையில் அவன் புருவம் உயர்த்தினான், வலது புருவம் கீழிருந்து மேல் நோக்கி சென்று மீண்டும் கீழிறங்க, அலுவலகத்தில் தன்னை மறந்து எத்தனை முறை அவனுக்கு தெரியாமல் ரசித்திருப்பாள். இன்று இருவரின் முகமும் நேருக்கு நேர் இருக்கையில் அவனின் புருவ அசைவை ரசித்துப் பார்க்க, அழுது அழுது மருதாணி போல் சிவந்திருந்த அவளின் கன்னங்கள் அவனுக்கு போதையூட்டியது, அவனின் இமைகள் திறந்து மூடி அவளை அருகே அழைக்க, ஒரு கணம் தடுமாறிப் போனாள்.
 

 

சுதாரித்தவள், இவன் கண்களால் வித்தை காட்டி மயக்கிட நினைக்கின்றான். வேண்டாம் அவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி இரு என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு, “நீங்க எதைப்பத்தி கேட்கறீங்கன்னு எனக்கு புரியல, தெளிவா சொன்னீங்கன்னா என்னால பதில் சொல்ல முடியும் “
 

 

வித்தைக்காரி தான் மனதில் வியந்தவன் “நம்ம கல்யாணம் பத்தி கேட்குறேன்”
 

 

“உங்க மனசுல நான் இல்லையே ” வேண்டுமென்றே அவனை காயப்படுத்தினாள்.
 

 

“உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா ” 
 

 

“நீங்க நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே ” அவனிடம் மட்டும் அவள் குழந்தைத்தனம் வெளிப்படுகிறது.
 

 

“நீ முதல்ல கேட்டதுக்கு பதில் சொன்னா தான் நான் கேட்டதுக்கு பதில் கிடைக்குமா “

 

தலை அசைத்தாள்.  “இல்லை இல்லை “
 

 

“அப்புறம் “

 

“அது அது சம்மதம். ஆனா “அவளின் சம்மதம் கேட்டதும் சமாதானம் ஆகவில்லை அவன்.ஆனா என்று இழுத்தில் அவள் எதோ சொல்ல போகிறாள் என்று புரிந்தது. 
 

 

“சம்மதம் அது மட்டும் தான் சொல்லணும் வேற எதையும் சொல்ல கூடாது புரியுதா “
 

 

“அப்போ நான் “
 

 

கூலர்சை எடுத்து மாட்டியவன், கிளம்பலாம் என்பது போல் காரினை நோக்கி செல்ல, இவளுக்கு கோவம் தான் வந்தது. இங்கு வந்ததிலிருந்து எவ்வளவு கேள்விகள் கேட்டோம் ஆனால் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை,
 

 

நான் சொல்ல வருவதை கேட்க கூட தயாராக இல்லை. திமிர் பிடித்தவன், இப்போ கூட இந்த கல்யாணம் வேணான்னு சொல்ல முடியல, அவன் வேணும்னு தான் மனசு துடிக்குது.கல்யாணதிற்கு மட்டும் சம்மதம் சொல்லனுமா , இன்னும் என்னலாம் அதிகாரம் பண்ண போறானோ தெரியல. 
 

 

வார்த்தைகள் வெளியே வராமல் திட்டிக் கொண்டமுறுக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். இவள் பின்னாடி வருகிறாளா என்று அவன் பார்க்கவே இல்லை. காரில் அமர்ந்தவன் காரினை திருப்பி அவள் நின்ற இடத்திற்கு வந்து நிறுத்தி கார் கதவினைத் திறந்து விட,
 

 

திருந்திட்டார்ன்னு நினச்சேன் இவர் திருந்தவே மாட்டாரு, எப்பவும் பண்ற அதிகாரம் தான். இனி இதுதான் என் தலை விதியா, காரில் ஏறி அமர்ந்தாள். இருவரும் அதன் பிறகு பேசிகொள்வதே இல்லை. யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டார்கள். 
 

 

நடந்ததை விஜயிடம் சொல்லியவன் மேசையில் முகம் வைத்து கொண்டு “இப்போ சொல்லு மச்சான் நான் பண்றது “

“பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இப்போ வந்து என்ன பண்றதுன்னு கேட்குற “

“பண்ணிட்டேன் இப்போ அவ கிட்ட எப்டி புரிய வைக்குறது தெரியல, அவ கஷ்டபட்றா எனக்கு நல்லாவே தெரியுது உண்மையை அவ கிட்ட சொல்ல முடியல என் காதலை சொல்ல முடியலை, அவ நம்பலைனா என்ன பண்றது, கெஞ்ச தெரியல டா ஆனா அவ வேணும், அவ சந்தோஷமா சிரிச்சுட்டு இருக்கணும் அதுக்கு என்ன வழி “

“ஐ லவ் யூ சொல்றதுல உனக்கு என்ன டா கஷ்டம் “

“அது மட்டும் சொன்னா போதுமாடா ” அறியா பிள்ளை போல் கேட்ட நண்பனை முறைத்த விஜய்,

“அவளுக்கு பிடிச்ச மாதிரி கிப்ட் வாங்கிக்கோ, அவளை வெளிய கூட்டிட்டு போ, அங்க வச்சு லவ் சொல்லிடு, அப்புறம் பாரு என்ன ஆகுதுன்னு “

“நிஜமாவா மச்சான் “

“ஆமா டா, ஏன் டா கல்யாணம் பண்ணிட்டு இன்னைக்கு என்ன நாள் உங்களுக்கு வீட்ல என்ன ஏற்பாடு நடந்துட்டு இருக்கு, நீ என்னடான்னா இப்போ தான் லவ் சொல்ல ஐடியா கேட்டுட்டு இருக்க “

“ஓ அத சொல்றியா டா, எல்லாம் தெரியும், ஏற்கனவே அவ என் மேல கோவத்துல இருக்கா, நான் வேற அவ கூட இருக்கும் போது கண்ட்ரோல் மிஸ் ஆகி ஏதாவது பண்ணிட்டா அப்புறம் மொத்தமா வெறுத்துடுவா அதுக்கு தான் டா வெளிய வந்துட்டேன்”

“ம்ம் புரியுது டா, போதும் டா இதுக்கு மேல குடிக்காத, வா வீட்டுக்கு போலாம். நாளைக்கு தங்கச்சிய வெளிய கூட்டிட்டு போய் மனசுல இருக்குறத சொல்லிடு மச்சான். உங்க லைப் ஹாப்பி ஆகிடும் “

விஜய், வர்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.  தொழில் விஷயமாக முக்கிய நபரை பார்த்து விட்டு வர இரவு தாமதமாகும் என்று போனில் வீட்டுக்கு தகவல் சொல்லி விட்டதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் அனைவரும் தூங்க சென்று விட்டார்கள்.

விஜய், வர்மாவை அவன் அறையின் முன் நிற்க வைத்து விட்டு அறிவுரை சொல்லி விட்டு சென்றான்.

கதவினை தட்ட, அது தாழிடப்பாடாமல் இருந்ததால் இவன் தொட்டதும் திறந்து கொண்டது. உள்ளே சென்றவன் பார்த்தது அழுதபடியே கட்டிலில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் உயிறானவளைத் தான்.

கதவை தாழிட்டவன், மெல்ல அவள் அருகில் வந்தான். அவளின் தூக்கம் கலைத்திடாமல் படுக்க வைத்து அவள் அணிந்திருந்த அணிகலன்களை கழட்டினான். போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டு அவள் தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூ வாசத்தினை மட்டும் தன் சுவாசத்தில் நிரப்பிக் கொண்டவன் அவள் பக்கத்தில் அவளை தீண்டாமல் அவளின் வாசம் தந்த மயக்கத்தில் நாளை அனைத்தும் சரி ஆகி விடும் என்ற நம்பிக்கையில் உறங்கிப் போனான்.

காலையில் கண் விழித்தவள்  அருகில் பார்க்க, வர்மா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இரவு தன்னை தனியாக விட்டு சென்றது நினைவுக்கு வந்தது. கோவத்துடன் அவனை எழுப்பி சண்டையிடலாம் என்று தாலி ஏறிய தைரியத்தில் வழக்கமான மனைவியாக மாறியவள் கையை அவன் அருகே கொண்டு சென்றாள்.

தூங்கிக் கொண்டிருக்கும் அவன் அழகு முகம் அவளுக்குள் இருக்கும் காதலை அவளுக்கு நினைவூட்டிட கோவம் மறைந்து ரசிக்கத் தொடங்கினாள். ஆயிரம் சண்டைகள் நடந்தாலும் கோவங்கள் இருந்தாலும் இப்பொழுது இவன் என்னவன் அதுவே அவள் மனதிற்கு நிம்மதியை தந்தது. அவன் முகம் நோக்கி குனிந்து முக வடிவை விரல் தொடாமல் அளந்து முத்த சைகை செய்தவள் முகத்தில் நாணம் வந்து அழகு சேர்க்க அதை தாளமுடியாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் சென்றதும் கண் திறந்தவனுக்கு வெட்கத்தோடு புன்னகையும் மலர, என் மனதில் இருப்பது போல தானே அவளும், அருகே இருக்கும் போது ரசிக்கத் தான் தோன்றுகிறது. காதல் மீண்டும் மீண்டும் மலர்கிறது. இது கூட இன்பமாக தான் இருக்கிறது. இன்று வெளியே அழைத்து சென்று காதலை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தவன் வேறு அறைக்கு சென்று கிளம்பி வெளியே கிளம்பினான்.

பார்க்கில் வர்மாவைத் தேடி ஆரண்யா சென்று பார்க்க, முட்டி வரை போடப்பட்டிருந்த கவுண் அணிந்திருந்த ஒரு பெண் வர்மாவை அணைக்க செல்ல அவளைத் தடுத்து விலகி நடந்து வந்து கொண்டிருந்தான் வர்மா, காரில் வந்து கொண்டிருந்தவர்களின் மனதில் இது என்ன வாழ்க்கையோ என்ற உணர்வில் தான் இருந்தனர்.

என்ன நடந்திருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page