ஆடவர்கள் இருவரும் ஹாலில் காத்திருக்க, அரை மணிநேரம் கழித்து பெண்ணவளின் காயத்திற்கான மருத்துவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தாள் இஷா.
அவள் வந்ததுமே அமர்திருந்த இரு ஆடவர்களும் அவளை சூழ்ந்து கொள்ள, அக்னியை பார்த்த இஷா “அண்ணா அந்த பொண்ணுக்கு எப்படி அடிப்பட்டுச்சு.. யாரு அவங்க” என்று கேள்வியை எழுப்ப,
அதற்கு பதிலளித்த அக்னி “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது பேபி.. அந்த பொண்ண யாரோ துரத்திட்டு வந்தாங்க.. நான் அந்த வழியா போனதால சத்தம் கேட்டு காப்பாத்துனேன்.. அதுக்கு முன்ன என்ன நடந்துச்சுன்னு அவ சொன்னா தெரியும்”
என்றவன் இஷாவை அழுத்தமாக பார்க்க,
அதன் அர்த்தம் புரிந்த பாவையும் “அவங்க கை கால் வயித்துலாம் கண்ணாடி துண்டுகள் ஆழாமாவே காயத்த ஏற்படுத்தியிருக்கு.. அதோட அவங்க உடம்புல யாரோ அடிச்சி காயப்படுத்தினதுனால உண்டான காயங்கள் தழும்புகள் இருக்கு.. சோ இதுலயே அவங்க ஆபத்தான இடத்துலயிருந்து தான் உயிர பணயம் வச்சி வந்திருக்காங்கன்னு தெரியுது” என்றதை கேட்டு அக்னி தாடையை தடவி ஏதோ சிந்திக்க, சத்தியனோ “ஷீ ஸ் ஆல்ரைட் நவ்?”
“எஸ்ன்னு சொல்ல முடியாது.. பிசிகல்லி ரொம்ப வீக்கா இருக்காங்க காயப்பட்ட இடத்துல கொஞ்சம் ஓவர் ரத்த போக்கு வெளியேறியிருக்கு இன்னும் மயக்கத்துல தான் இருக்காங்க தேவையான ட்ரீட்மென்ட் கொடுத்து டிரிப்ஸ் போட்டுருக்கேன்.. அட் தி சேம் டைம் கண்டிப்பா அவங்க மெண்டல்லி ரொம்ப டிஸ்டர்ப்பாகி இருக்க வாய்ப்பு இருக்கலாம்.. அவங்களுக்கு கான்ஸ்கியஸ் வந்தா தான் உறுதியா சொல்ல முடியும்” என்று பெண்ணவள் தோளை குலுக்க,
அதனை கேட்டுவிட்டு அக்னியோ அமைதியாக பெண்ணவளை காண தன்னுடய அறைக்குள் நுழைந்து கொண்டான்.
சில நொடி மொளனமாக நின்ற இஷாவோ பெருமூச்சு ஒன்றை விட்டு “சக்தி.. நான் கிளம்புறேன் அண்ணாக்கிட்ட சொல்லிடுங்க.. அண்ட் எப்படியும் அவங்களுக்கு கான்ஸ்கியஸ் நாளைக்கு தான் வரும்.. சோ நாளைக்கு வந்து பாக்குறேன்” என்று தரையை பார்த்து கூறி முடித்தவள், அங்கிருந்து செல்ல முயல, பாவம் பெண்ணவளால் தான் போக முடியவில்லை.
பின்ன அவளின் கரத்தை தான் ஆடவன் பற்றி போக விடாமல் தடுத்திருந்தான் அல்லவா.
அவனிடமிருந்த தன் கையை உறுவ முயன்று தோற்ற இஷாவோ “என்ன சக்தி” என்று கேட்டவள் மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
அது அவனுக்கு வலியே தந்திருக்க வேண்டும், அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் “இப்போலாம் என் மூஞ்ச பாத்து பேச கூட உனக்கு அருவெறுப்பா இருக்குல்ல” என்றதை கேட்டு பட்டென்று நிமிர்ந்தவள் “பைத்தியம் போல பேசாதீங்க சக்தி.. எனக்கு என்ன உங்ககிட்ட பேச கூடாதுன்னு ஆசையா சொல்லுங்க.. ஆனா கொஞ்சம் முகம் கொடுத்து பேசினாலே காதல் அது இதுன்னு பினாத்துறீங்களே..”
“பாக்கலாம்டி.. இன்னும் எத்தன நாளைக்கு இந்த கண்ணாமூச்சி தொடருதுன்னு.. ஆனா என்னைக்காவது நீ நினைக்கிறது தப்புன்னு புரிஞ்சிக்கிட்டு என்கிட்ட கண்டிப்பா வருவ.. அதுவரை வெயிட் பண்ணுவேன்” என்றான்.
அதனை கேட்டு கேலியாக இதழ் வளைத்த இஷாவோ “பலன் தராத காத்திருப்புக்கு உங்க எதிர்பார்ப்பு வேஸ்ட்ன்னு நினைக்கிறேன்.. அத புரிஞ்சிக்கிட்டு அடுத்து அடுத்து வாழ்க்கைய மூவ் பண்ணி என்ஜாய் பண்ணுங்க” என்று தன்னுடைய கையை அவனிடமிருந்து பறித்து செல்ல போனவளை,
இம்முறை பிடித்து இழுத்து தன் மார்போடு மோதவிட்டு பெண்ணவளின் இடுப்பை நகர முடியாதாப்படி அணைப்போட்டவன் “யூ ரைட் இஷா.. பலன் தராத காத்திருப்பு வேஸ்ட் தான்.. சோ எதுக்கு வெயிட் பண்ணி ப்ரூஃப் பண்ணனும்.. என்னோட காதல அடுத்த ஸ்டேஜ் மூவ் பண்ண முடிவு பண்ணிட்டேன்.. லெட்ஸ் சீ” என்று குறும்பாக முடித்தவன், அவள் உணரும் முன்னே பெண்ணவளின் இதழை தன் வசமாக்கியிருந்தான்.
அவனின் திடீர் மோதல் மற்றும் நெருக்கத்தில் பெண்ணவள் மூச்சு விட கூட முடியாமல் தன் சுயத்தை தொலைத்து நிற்க, அவளை ஆசுவாசப்படுத்த கூட இடைவெளி கொடுக்காத சத்தியன் தன் காதலுக்கான அடுத்த அத்தியாயத்தை அந்நிமிடமே தொடங்கி வைத்தான்.
அவன் தன் இதழில் எழுதிய காதலில் உலகத்தையே மறந்து நின்ற மங்கையவளுக்கு பிறகு தான் நிதர்சனம் உரைக்க, அதில் தன் மொத்த பலத்தையும் திரட்டி ஆடவனை சோஃபாவில் தள்ளிவிட்ட இஷா “ஐ ஹேட் யூ சக்தி.. ஹேட் யூ.. இனி என் வாழ்க்கைலயே வெறுக்குற முதல் நபர் நீ மட்டும் தான்.. உன்ன பாக்க கூட பிடிக்கல ச்சீ” என்றவளுக்கு கண்களும் கலங்கி விட, கண்ணீரை துடைத்தப்படியே அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் தள்ளிவிட்டு திட்டி சென்றதை கூட உரைக்காமல் தன் இதழிலிருந்த பெண்ணவளின் இதழ் ஈரத்தை நாவால் வருடியவன், அதில் ஏறிய போதையிலே லயிக்க தொடங்கி சோஃபாவில் கண்ணகள் மூடி சாய்ந்தான்.
****
பெண்ணவள் படுக்கையில் இருந்ததால் சோஃபாவில் உறங்கிய அக்னி, வழக்கத்தை விட விரைவாகவே எழுந்து கொண்டான்.
பின் பெண்ணவள் இன்னும் மயக்கத்திலிருந்து விழிக்கவில்லை என்பதை உறுதி செய்தவன், குளியல் அறைக்குள் சென்று முகத்தை அடித்து கழுவி ட்ராக் பேன்டுடன் அறையை விட்டு வெளியேறினான்.
பின் ஹாலுக்கு வந்து சோஃபாவில் உறங்கி கொண்டிருந்த நண்பன் சக்தியனை கண்டு ‘இவன் வீட்டுக்கு போகல போல’ என்று தனக்குள் சொல்லி கொண்டவனின் இதழ்களோ சற்று கேலியாக வளைந்து ‘இன்னைக்கு நீ செத்தடி மகனே’ என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்த அக்னி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அடுப்பில் வைத்தவன் மிதமான சூடு வரவும் இறக்கி வைத்தான்.
குறைவான சூடு என்றாலும் பாத்திரம் சற்று அதிக சூடாக இருந்ததால் கையில் உரை அணிந்து கொண்டு அதனை தூக்கி கொண்டு ஹாலுக்கு வந்த அக்னி அவனின் மூஞ்சிலே மொத்தத்தையும் அபிஷேகம் செய்தான்.
நன்றாக உறகத்திலிருந்த சத்தியனோ நண்பனின் விளையாட்டாள் பதறி எழுந்தவன் முகத்தில் சற்று எரிச்சலாக இருந்ததில் “அய்யய்யோ யாரோ என் முகத்ததுல ஆசிட் அடிச்சாட்டாங்க.. மச்சி எங்கடா இருக்க” என்று ஒப்பாரி வைத்தவன், அப்போது தான் நன்றாக உறக்கம் கலைந்து கண்களை திறந்து எதிரே நின்றவனை காண,
அவனோ ஹாயாக “குட் மார்னிங் மச்சி” என்றான்.
அதில் மூக்கு விடைக்க முறைத்த சத்தியன் “அடேய் சண்டாளா.. என்ன கொல்ல எத்தன நாள் பிளான்டா இது”
“இப்படி தான நீ பண்ணும் போது எனக்கும் கடுப்பாகும்.. உனக்கு வரும் போது மட்டும் ரத்தமா” என்றதை கேட்டு பாவமாக முகத்தை வைத்த சத்தியன்
*நான் பண்ணினதும் நீ பண்ணினதும் ஒன்னாடா கோபால்..” என்க,
அவனின் பாவனைகளில் எழும் புன்னகையை அடக்கியவன் “இல்ல தான்.. ஆனா எனக்கு யாரையும் காப்பி அடிக்குற பழக்கம் இல்ல சோ சேஞ்சுகாக கொஞ்சமா ஹீட் வாட்டர் ஊத்தினேன்..”
“அடிங்.. கொஞ்சம் விட்ருந்தா என் மூஞ்சயே புண்ணாக்கி இருப்பியேடா இதுல கொஞ்சம் ஊத்தினதுக்கு ஃபீலிங் வேறயா உனக்கு” என்றப்படி நண்பனை பிடிக்க ஓட, அவனின் பிடியில் சிக்காமல் அங்குகிங்கும் தாவி குரலி வித்தை காட்டி கொண்டிருந்தான் அக்னி.
நண்பன் தன்னிடம் காட்டும் ஆட்டத்தில் மேலும் கடியான சத்தியனோ, அங்கு டீபாயிலிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அவனின் முகத்திலே சலப்பென்று அடிக்க, இம்முறை நண்பனை துரத்துவது அக்னி முறையாகினால் அவனின் பிடியில் சிக்காமல் ஓடுவது சத்தியன் முறையாயிற்று.
ஆனாலும் அவனின் ஆட்டமெல்லாம் சில நிமிடம் தான், அதற்குள் அவனை பாய்ந்து பிடித்த அக்னி நண்பனின் கழுத்தை இறுக்கமாக அழுத்தி கொலை முயற்சியில் ஈடுப்பட, அந்நேரம் சரியாக இவர்கள் செய்யும் அலம்பை வாசலிலே பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்த இஷாவோ “என்ன பண்ணிட்டு..” என்று முடிப்பதற்குள் அங்கு சிந்தி கிடந்த தண்ணீரை கவனிக்காமல் வழுக்கி விட,
அதனை கவனித்த அக்னியோ தன் பேபியை காக்கும் பொருட்டு தன்னால் சிறைப்பட்டிருந்த நண்பனை அவன் உணரும் முன்னே தள்ளி விட்டான்.
அதில் பெண்ணவள் மேல் மோதிய சத்தியன் நிலை தடுமாறி, அவளை தாங்கியப்படியே சோஃபாவில் சரிந்திருந்தான்.
பெண்ணவள் விழுந்ததில் அவன் உடலில் தீண்டிய அவளின் மென்மையில் கிறங்கியவன் பிடித்திருந்த அவளின் இடைக்கு அழுத்தத்தை கொடுத்து இதழை நோக்கி குனிய, ஆடவன் வெளியிட்ட மூச்சு காற்று தீண்டியதில் உடல்கள் சிலிர்த்து மூச்சு வாங்க,
பின் அவன் இதழை நெருங்குவதில் மெல்லமாக கண்களை மூடிக் கொண்ட பாவையோ “க்கும்..” என்று குரலை செருமிய அக்னியின் சத்தத்தில தான் பதறியடித்து எழுந்து அவனை பார்க்க திராணியில்லாமல் தலை குனிந்து நின்றுகொண்டாள்.
மோன நிலையிலிருந்து விடுப்பட்ட சத்தியனோ எதிரே நின்றவனை முறைத்து ‘கரடி.. அவரே ரொமான்ஸ் சீன் கொடுப்பாராம் அத பாதிலயே அவரே கலச்சி விடுவாராம்.. எந்த ஊரு நியாயம்டா இது’ என்று நண்பனை உள்ளுக்குள் அர்ச்சித்து கொண்டே எழும்பியவன் முடியாமல் “அம்மா” என்று அலறியப்படி இடுப்பை பிடித்து கொண்டு சோஃபாவிலே சரிந்தான்.
பாவம் சற்றும் எதிர்பாராமல் நடந்த தக்குதலில் ஆடவன் சுதாகரிக்கமல் விழுந்ததால் இடுப்பு பிடித்த அவஸ்தையில் போராடியவன் “அடப்பாவிங்களா அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து.. என் இடுப்பு உடைச்சீட்டீங்களே.. அய்யோ அம்மா வலில உயிர் போகுதே* என்று கத்தி கூப்பாடு போட,
அவனின் கதறல் எல்லாம் தன் காதில் வந்தடையவில்லை என்பது போல் கல்லாகிய அக்னி அங்கிருந்து உடற்பயிற்சி அறைக்குள் சென்று விட, பெண்ணவள் தான் அவனை விட்டு செல்ல மனமின்றி அவனின் அருகில் சென்று ஆடவன் போட்டிருந்த டீ ஷர்ட்டை உயர்த்த, அதனை இழுத்துவிட்ட சத்தியனோ “என்ன பண்ற” என்றப்படி விழித்தான்.
அவனை உறுத்து விழித்த இஷா ‘நேத்து இழுத்து வச்சி உதட்ட கடிச்சி வச்சிட்டு.. இப்போ ஏதோ நான் அவன ரேப் பண்ற போல நடிப்ப விடுறான்’ என்று முணுமுணுத்தப்படி மறுபடியும் அவனின் ஆடையை உயர்த்த,
நெளிந்தவனோ “ஏய் வெட்ட வெளிச்சமா இருக்குடி.. ரூமுக்குள்ள போய் வச்சிக்கலாமே” என்று கண்ணடிக்க, பட்டென்று அவனுக்கு அடிப்பட்ட இடத்திலே குத்தியவள்
அவன் கதறியதை கூட பொருட்ப்படுத்தாமல் “உனக்கு பட்டும் புத்தி வராதுல.. மரியாதையா வாய மூடிட்டு இருந்துரு இல்லன்னா நானே இடுப்பு எலும்ப மொத்தமா உடைச்சி படுக்கையாக்கிடுவேன்” என்று மூச்சிரைக்க கத்தியவள் ஆடவனின் கையை தன் தோலோடு போட்டு அவனை மெல்ல தாங்கி பிடித்தப்படியே ஒரு அறைக்குள் அழைத்து சென்றாள்.
பின் தன்னிடமிருந்த மருந்தை அவனின் இடுப்பில் தடவி நீவி விட்டவள் வலி தெரியாமலிருக்க ஊசியும் போட்டுவிட்டே வெளியே வந்தாள்.
****
சத்தியனால் சமைக்க முடியாததால் தானே சமைத்த இஷா, அக்னி வரவும் அவனுக்கு பரிமாற, சாப்பிட தொடங்கும் முன் பெண்ணவளை அழுத்த பார்வை பார்த்தான்.
அதன் அர்த்தம் உணர்ந்து அவனருகே தனக்கும் உணவு வைத்து பெண்ணவள் சாப்பிட தொடங்க, அதன் பிறகு தான் அக்னியே சாப்பாட்டை வாய்க்குள் தள்ளினான்.
தன்னவள் செய்த வைத்தியத்தில் சத்தியனுக்கு வலி சிறிது மட்டுப்பட்டிருக்க, சில நேரங்களில் அக்னி வீட்டியிலே ஆடவன் தங்கியிருந்ததால் அவனின் ஆடை அதே அறையிலே இருக்க அதனை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
பின் குளியலை முடித்துவிட்டு தயாராகி கீழே வந்தவன், சாப்பிடும் நண்பனை முறைத்தப்படியே இஷாவின் அருகிலிருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து, தனக்கான உணவை எடுத்து வைத்து உண்ண, அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு அக்னி உணவில் கவனத்தை செலுத்த, இஷாவோ “ஆர் யூ ஓகே” என்று வினவினாள்.
“பெட்டர்” என்று கண் சிமிட்டியவன் தன்னவள் செய்த உணவை ரசித்து ஒரு புடி புடித்தான்.
அதன் பின் மூவரும் மயக்கத்திலிருந்த பெண்ணவள் இருந்த அக்னியின் அறைக்குள் நுழைய, இஷாவோ அவளின் காயத்திலிருந்த கட்டை அவிழ்த்து துடைத்து மருந்திட்டு புதிதாக கட்டியிட்டாள்.
அப்போது சத்தியனின் திறன்பேசி அலறியது.
தாய் என்பதை அறிந்து அழைப்பை ஏற்றவன் “சொல்லுமா”
“ஏன்டா பகல்லாம் அவனுக்கு பிஏவா இருந்து அடிமை வேலை பாக்குறது பத்தாதுன்னு ராத்திரியும் அவன் வீட்டுக்கும் போய் பிஏ வேலை பாக்குறியா” என்றதில் கடுப்பானவன் “இப்போ எதுக்கு கால் பண்ணின அத முத சொல்லு”
“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் நேத்தே சீக்கிரமா உன்ன வீட்டுக்கு வர சொன்னேன்.. ஆனா நான் சொன்னத மறந்துட்டு உன்ன அடிமை வச்சிருக்குறவன் பின்னாடியே வால் பிடிச்சிட்டு சுத்துற”
“இப்போ என்னத்துக்கு கால் பண்ணியோ அத மட்டும் பேசு தேவையில்லாம பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு மார்னிங்கே மூட் அவுட் பண்ணாத சொல்லிட்டேன்”
“தப்பு தான் அவன நானும் எதுவுமே சொல்லல.. முதல நீ வீட்டுக்கு கிளம்பி வா உன்கிட்ட பேசணும்”
“சரி ஈவ்னிங் போல வொர்க் முடிச்சிட்டு சீக்கிரம் வரேன்” என்றதில் பற்களை கடித்த அவனின் அன்னை “டேய் உன்ன இப்போ வர சொன்னேன்” என்றதை கூட கேட்காமல் ஆடவன் அழைப்பை துண்டித்து விட, அவனின் எரிச்சலடைந்த முகத்தை கண்ட அக்னி பார்வையாலே என்னவென்று வினவ
“அம்மா ஏதோ பேசணும் வர சொல்லுறாங்க”
“எதாவது முக்கியமா இருக்க போகுது போயிட்டு வா” என்றதை கேட்டு “இல்ல..” என்று மறுக்க வந்தவன், நண்பனின் பார்வையில் “சரி” என்று தலையசைக்க,
அதே நேரம் மயக்கத்திலிருந்த பெண்ணவள் தன் விழிகளை திறந்தாள்.
சுவாசம் தொடரும்…
